Jump to content

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் - மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப்பின் கனவுப்பயணம் ஆரம்பம்

Published By: RAJEEBAN   18 JAN, 2024 | 02:32 PM

image

சிலருக்கு முதல்போட்டி என்பது கனவு போல அமைவதுண்டு. மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் சம்மெர் ஜோசப்பின் முதல் போட்டியும் ஒரு கனவே!

முதலில்  அவரின் ஆரம்பம் - கயானாவின் 350 பேரை கொண்ட பராகரா என்ற ஊரிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் வீரர் இவர்.

shmar_jose22.jpg

அதன் பின்னர் அவர் தனது முதல் டெஸ்டில் மேற்கிந்திய அணியின் அதிக ஓட்டங்களை பெற்ற 11 வீரர் என்ற சாதனையை முறியடித்தார், 36 ஓட்டங்களை அவர்பெற்றார் அதில் ஜோஸ் ஹசெல்வூட்டின் பந்தில் பெறப்பட்ட சிக்சரும் அடங்கும்.

அதன் பின்னர் தனது பந்து வீச்சை ஆரம்பித்தவேளை டெஸ்ட்போட்டிகளில் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்திய 23 வீரர்  - மேற்கிந்திய அணியின் இரண்டாவது வீரர் என்ற சாதனைபட்டியலில் அவர் தனது பெயரை பதிவு செய்துகொண்டார்.

முதல் பந்தில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஸ்டீவ் ஸ்மித்தினை முதலாவது பந்தில் ஆட்டமிழக்க செய்ததை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என சாமர் ஜோசப் முதல்நாள் நிறைவின் பின்னர் தெரிவித்தார்.

நான் அதனை படமெடுத்து எனது வீட்டில் ஒட்டிவைப்பேன் என்றார் அவர்.

தனது முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்துவேன் என அவர் தனது அணியினரிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் அது ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் என நான் எதிர்பார்க்கவில்லை, அது எனக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்தது நான் மிகவும் சாதகமான மனோநிலையுடன் விளையாடினேன் உலகின் தலைசிறந்த அணியுடன் விளையாடும்போது சாதகமான மனோநிலை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் இனிங்சில் மேற்கிந்திய அணி 188 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து  அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

அவுஸ்திரேலிய அணி 25 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஜோசப் பந்து வீச ஆரம்பித்தார் - அவ்வேளை ஸமித் இரண்டு பவுண்டரிகளுடன்  நிதானமாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார். கெமரோச், அல்சாரி ஜோசப் போன்றவர்களின் பந்து வீச்சு சவாலாகயிருக்கவில்லை.

முதல் பந்தை வீசுவதற்காக ஓடிவந்த ஜோசப் ஆனால் அவரது ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு மீண்டும்  பந்து வீச ஆரம்பித்தார்.

shamar111.jpg

ஒவ்ஸ்டம்பிற்கு வெளியே 137 கிலோமீற்றர் வேகம் ஸ்மித் தடுமாறினார் துடுப்பை உரசிக்கொண்டு சென்ற பந்து ஸ்லிப்பை நோக்கி சென்றது மூன்றாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஜஸ்டின் கிரீவ்ஸ் இவரும் முதல் டெஸ்டில் விளையாடுகின்றார் அந்த கட்ச்சினை பிடித்தார்.

நான் முதல் பந்திற்காக ஓடியவேளை பதட்டமாக உணர்ந்தேன் அதன் காரணமாகவே இடையில் நின்று மீண்டும் திரும்பி வந்து பந்துவீசினேன் மீண்டும் முதல்பந்திற்காக எனது மனதை உறுதியாக்கி கொண்டு வந்து பந்துவீசினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் ஸடீவ் ஸ்மித்  துடுப்பெடுத்தாடுவதை வீடியோக்கள் மூலம் அவதானித்துள்ளேன். அவர் ஓவ் ஸ்டம்பிற்கு வெளியே பலவீனமானவர் என்பதை உணர்ந்தேன் அவர் அங்கும் இங்கும் திரும்பும் ஒருவர் என்பதால் ஒவ்ஸ்டம்பிற்கு மேலே பந்தை வீச தீர்மானித்தேன் அதேபோ பந்து வீசினேன்; பந்து சிறியளவு ஸ்விங் ஆனது துடுப்பின் நுனியில் பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

shamer_jos1.jpg

வெற்றிக்களிப்பில் அவர் மைதானத்தின் கிழக்கு பகுதியை நோக்கி ஓடினார், இன்னமும் அதிக தூரம் ஓடமுடியுமென்றால் நான் ஒடியிருப்பேன் அவ்வளவு மகிழ்ச்சியாகயிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/174240

சமர் ஜோசப்பின் 5 விக்கெட் வீழ்த்தும் காணொளி இணைப்பு கீழே

www.cricket.com.au/videos/3860616/shamar-joseph-five-wicket-haul-debut-australia-west-indies-adelaide-oval-smith-labuschagne-green-bow

Australia v West Indies 2023-24 | First Test | Day 1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுப‌வ‌ம் இல்லா வீர‌ர்க‌ளை அவுஸ்ரேலியாக்கு எதிரா விளையாட‌ விட்டால் வெஸ்சின்டீஸ் ப‌டு தோல்விய‌ ச‌ந்திக்கும் நாளையுட‌ன் ஜ‌ந்து நாள் விளையாட்டு மூன்று நாளில் முடியும்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் டெஸ்டில் 3 தினங்களில் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா

20 JAN, 2024 | 10:14 AM
image
 

(நெவில் அன்தனி)

அடிலெய்ட் விளையாட்டரங்கில் துடுப்பாட்ட வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டதும் 3 தினங்களுக்குள் நிறைவடைந்ததுமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 10 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றிக்கான 12 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளை அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்டது.

ட்ரவிஸ் ஹெட் குவித்த சதம் (119 ஓட்டங்கள்), ஜொஷ் ஹேஸ்ல்வூடின் 9 விக்கெட் குவியல், பெட் கமின்ஸின் சிறப்பான பந்துவீச்சு என்பன அவுஸ்திரேலியாவுக்கு இலகுவாக வெற்றிபெற உதவின.

அப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 79 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை வீழ்த்திய ஜொஷ் ஹேஸ்ல்வூட் டேஸ்ட் போட்டி ஒன்றில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அறிமுக வீரர் ஷமர் ஜோசப் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பாராட்டைப் பெற்றார்.

ஷமர் ஜோசப் தனது முதல் பந்திலேயே அவுஸ்திரேலியாவின் புதிய ஆரம்ப வீரரும் சிரேஷ்ட வீரருமான ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.

துடுப்பாட்டத்திலும் ஷமர் ஜோசப் திறமையை வெளிப்படுத்தினார். கடைசி விக்கெட்டில் கெமர் ரோச்சும் ஷமர் ஜோசப்பும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி 3ஆம் நாள் காலை முதலாவது  ஆட்ட நேர பகுதியில் நிறைவுக்கு வந்தது.

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 283 ஒட்டங்களே இந்த டெஸ்ட் போட்டியில் பெறப்பட்ட அதிகப்பட்ச இன்னிங்ஸ் எண்ணிக்கையாக இருந்தது.

2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்த வெற்றியுடன் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ள அவுஸ்திரேலியா, சேர் ப்ரான்க் வொரல் கிண்ணத்தையும் தக்க வைத்துக்கொண்டது.

 

எண்ணிக்கை சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (கேர்க் மெக்கென்ஸி 50, 11ஆம் இலக்க வீரர் ஷமர் ஜோசப் 36, 10ஆம் இலக்க வீரர் கெமர் ரோச் 17 ஆ.இ., பெட் கமன்ஸ் 41 - 4 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 44 - 4 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சலலரும் ஆட்டம் இழந்து 283 (ட்ரவிஸ் ஹெட் 119, உஸ்மான் கவாஜா 49, நேதன் லயன் 24, ஷமர் ஜோசப் 94 - 5 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 36 - 2 விக்., கெமர் ரோச் 48 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 120 (கேர்க் மெக்கென்ஸி 26, ஜஸ்டின் க்றீவ்ஸ் 24, யொசுவா டா சில்வா 18, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 35 - 5 விக்., நேதன் லயன் 4 - 2 விக்., மிச்செல் ஸ்டாக் 46 - 2 விக்.)

அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 26 ஓட்டங்கள்) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்கள் (ஸ்டீவன் ஸ்மித் 11 ஆ.இ., உஸ்மான் கவாஜா 9 - உபாதையால் ஓய்வு)

ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட்

1901_travis_head.png

1901_shamar_joseph.jpg

1901_steve_smith_and_shamar_joseph.jpg

https://www.virakesari.lk/article/174368

Australia v West Indies 2023-24 | First Test | Day 2

 

 

Australia v West Indies 2023-24 | First Test | Day 3

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரலாகும் வெஸ்ட் இண்டீஸ் வீரரின் வெற்றிக் கொண்டாட்டம் (வீடியோ)

Capture-19.jpg

அவுஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பெட்டிங் செய்து 311 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் டிக்ளேர் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் கவாஜா சிறப்பாக விளையாடி 75 ரன்கள் சேர்த்து 8 ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் அலேக்ஸ் கேரியுடன் இணைந்து 6 ஆவது விக்கெட்கட்கு 96 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

கவாஜா சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் பந்தில் ஆட்டமிழந்தார். சின்க்ளேர் பந்தை தூக்கி அடிக்க முயற்சித்த போது ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட நேரம் களத்தில் நின்ற கவாஜாவின் விக்கெட்டை அறிமுக போட்டியில் வீழ்த்தியதும் உற்சாகத்துடன் சின்க்ளேர் ஜிம்னாஸ்டிக் வீரர்களை போன்று டைவ் அடித்து (Cartwheel Celebration) சந்தோசத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

https://thinakkural.lk/article/289590

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டை வைத்து விளையாட சொன்னா நீ எத வைச்சு விளையாடுற- வைரலாகும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வீடியோ

Capture-2-11.jpg

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவது நடந்து டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி 25 ஆம் திகதி தொடங்கியது. இதில் டொஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பெட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய அவுஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

22 ரன்கள் முன்னிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. தற்போது வரை 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 123 ரன்களில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் நாதன் லயன் பந்து வீச்சை சமாளிக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர் கவேம் ஹாட்ஜ் புதிய யுக்தியை பயன்படுத்தி உள்ளார். அதன்படி அவர் பெட்டிங் செய்த போது வித்தியாசமான முறையில் ஒரு ஷாட் விளையாடி இருக்கிறார். பெட்டை வைத்து விளையாடாமல் உடலை வைத்து விளையாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்டை வைத்து விளையாட சொன்னா நீ எத வைச்சு விளையாடுற என நெட்டிசன்கள் கிண்டலான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

https://thinakkural.lk/article/289604

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவை 8 ஓட்டங்களால் தோற்கடித்தது மேற்கிந்திய அணி - இளம் வேகப்பந்து வீச்சாளர் 7 விக்கெட்

Published By: RAJEEBAN   28 JAN, 2024 | 01:17 PM

image

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி 8 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

வெற்றிபெறுவதற்கு 215 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் தனது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 207 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

shamar_joseph.jpg

மேற்கிந்திய அணியின் சார்பில் தனது இரண்டாவது டெஸ்ட்போட்டியை விளையாடிய இளம்வேகப்பந்து வீச்சாளர் சமார் ஜோசப் ஏழு விக்கெட்களை வீழ்த்தினார்.

https://www.virakesari.lk/article/174982

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷமர் ஜோசப்பின் பந்துவீச்சில் அவுஸ்திரேலியாவை அதிரவைத்தது மேற்கிந்தியத் தீவுகள்

28 JAN, 2024 | 02:33 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நிறைவுபெற்ற மிகவும் பரபரப்பான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல் இரவு) நடப்பு உலக டெஸ்ட் சம்பயின் அவுஸ்திரேலியாவை 8 ஓட்டங்களால் இளம் வீரர்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றிகொண்டது.

தனது 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷமர் ஜோசப் மிகத் துல்லியமாக அவுஸ்திரேலியாவின் 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

ஷமர் ஜோசப் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை  1 - 1 என மேற்கிந்தியத் தீவுகள் சமப்படுத்திக்கொண்டது. 

அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவஸ்திரேலியா 10 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலியாவின் வெற்றிக்காக ஸ்டீவன் ஸ்மித் கடுமையாக முயற்சித்த போதிலும் ஏனையவர்களிடம் இருந்து போதுமான பங்களிப்பு கிடைக்கவில்லை.

போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா 3ஆவது விக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித், கெமரன் க்றீன் ஆகியோர் பகிர்ந்த 71 ஓட்டங்களின் உதவியுடன் மொத்த எண்ணிக்கையை 113 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது.

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் வீரர்கள் ஆட்டம் இழக்க கடைசி 7 விக்கெட்கள் 94 ஓட்டங்களுக்கு சரிந்தன.

ஷம்ரன் ஜோசப் 68 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியுடன் அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்களையும் ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வியாழக்கிழமை (25) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் பெற்ற 311 ஓட்டங்களையே அதிகப்பட்ச மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

எணிக்கை சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 311 (ஜொஷுவா டா சில்வா 79, கவெம் ஹொஜ் 71, கெவின் சின்க்ளயா 50, அல்ஸாரி ஜோசப் 32, மிச்செல் 82 க்கு 4 விக்,, ஜொஷ் ஹேஸல்வூட் 38 - 2 விக்., நெதன் லயன் 81 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 289 - 9 விக். டிக்ளயார்ட் (உஸ்மான் கவாஜா 75, பெட் கமின்ஸ் 64, அலெக்ஸ் கேரி 65, அல்ஸாரி 84 - 4 விக்., கெமர் ரோச் 47 - 3 விக்.,)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 193 (கேர்க் மேக்கென்ஸி 41, அலிக் அத்தானேஸ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 33)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 216) சகலரும் ஆட்டம் இழந்து 207 (ஸ்டீவன் ஸ்மித் 91 ஆ.இ., கெமரன் க்றீன் 42, மிச்செல் ஸ்டார்க் 21, ஷமர் ஜோசப் 68 - 7 விக், அல்ஸாரி ஜோசப் 62 - 2 விக்.)

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: ஷமர் ஜோசப் 

download.png

download__1_.png

https://www.virakesari.lk/article/174987

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ விளையாட்டு தொட‌ங்க‌ முத‌ல் மேற்கிந்தியத் தீவு அணி இந்த‌ ம‌ச்சை வெல்வார்க‌ள் என்று நினைக்க‌ல‌............ஆனால் மேற்கிந்தியத் தீவு  அணி வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் நான்காவ‌து இனிங்சில்  ந‌ல்ல‌ போட்டார்க‌ள் அத‌னால் தான் விளையாட்டை 1-1 என‌ ச‌ம‌ நிலையில் முடித்தார்க‌ள்.............

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷமர் ஜோசப்(Shamar Joseph): அன்று பாதுகாப்பு ஊழியர் வேலை; இன்று ஆஸ்திரேலியாவை ‘சுருட்டிய’ மேற்கிந்திய நட்சத்திரம்...

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

ஷமர் ஜோசப்(Shamar Joseph): அன்று பாதுகாப்பு ஊழியர் வேலை; இன்று ஆஸ்திரேலியாவை ‘சுருட்டிய’ மேற்கிந்திய நட்சத்திரம்...

 

 

இந்த இள‌ம் வீர‌ர் ம‌ட்டையாலும் ப‌ந்தை ந‌ல்லா அடிப்பார் அண்ணா..............சிற‌ந்த‌ வீர‌ர்
வாழ்த்துக்க‌ள்🥰🙏...................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

இந்த இள‌ம் வீர‌ர் ம‌ட்டையாலும் ப‌ந்தை ந‌ல்லா அடிப்பார் அண்ணா..............சிற‌ந்த‌ வீர‌ர்
வாழ்த்துக்க‌ள்🥰🙏...................

ஐபிஎல்லில் எடுத்து காயங்கள் வர வைக்கிறாங்களோ தெரியாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்ட் இண்டீசில் இருந்து அடுத்த வேகப்புயல் - அறிமுக தொடரிலேயே ஆஸ்திரேலியாவை சாய்த்தது எப்படி?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
எழுமிச்சை பழம், கொய்யாப் பழம் என பழங்களைக் கொண்டு ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர், இன்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 27 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைக்க காரணமாகியிருக்கிறார். பெருவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது வெஸ்ட் இண்டீசை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கிறார் ஷமர் ஜோசஃப். யார் அவர்? என்ன நடந்தது?.

காபா மைதானத்தில் ஒருவித நிசப்தம். ஆஸ்திரேலிய கைவசம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தது. 2வது டெஸ்டை வெல்ல 9 ரன்கள் மட்டுமே தேவை. 91 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித் தனி ஆளாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அதுவரை ஸ்மித் எதிர்கொண்டிருந்த அந்த ஓவரின் 5வது பந்தை ஹேசில்வுட் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. துல்லியமாக பந்தை வீசினார் ஷமர் ஜோசஃப். பந்து பேட்டை கடந்து ஸ்டம்புகளை சிதறடித்தது.

27 ஆண்டுகள்... ஆஸ்திரேலியாவை அதன் கோட்டையிலேயே வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு 27 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. போட்டியை வென்ற உற்சாகத்தில் ஷமர் ஜோசஃப் உணர்ச்சிப்பெருக்கில் காபா மைதானத்தை சுற்றி ஓட, வீரர்களையும் அவரை ஆரத்தழுவி வெற்றியை கொண்டாடினர்..

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கள் குளமாகிப்போனதையும் காண முடிந்தது. கார்ல் ஹூப்பர் அழுதேவிட்டார். ஆதம் கில்கிறிஸ்ட் வர்ணணை அரங்கில் இருந்தவாறு வெஸ்ட் இண்டீசை மனதார பாராட்டினார்.

24 மணி நேரத்திற்கு முன்பு பெருவிரலில் அடிபட்டு வெளியேறிய அதே ஷமர் ஜோசஃப் வெஸ்ட் இண்டீசுக்கு வரலாற்று வெற்றியை தேடித் தந்திருக்கிறார். முதல் டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கி தான் வீசிய முதல் பந்திலேயே தலைசிறந்த டெஸ்ட் ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றி பலரையும் பிரமிக்க வைத்த ஷமர் இந்த முறை 11.5 ஓவர்கள் மட்டுமே வீசி ஒன்றல்ல இரண்டல்ல 7 விக்கெட்களை சாய்த்து ஆட்டநாயகன், தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றிருக்கிறார்.

2b714bb0-bdf0-11ee-8f88-d511767ec8f1.png

காயத்தில் பாதிக்கப்பட்ட போதும் தனது அணியை வெற்றிபெற வைத்துள்ளார் ஷமர்

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
காபா டெஸ்ட் ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை படைத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. 2வது டெஸ்ட் ஆட்டம் காபாவில் ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 289 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது.

2வது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. பேட்டிங்கின்போது ஸ்டார்க் வீசிய அதி வேக யார்க்கர் பந்து ஷமர் ஜோசஃப் பெருவிரலை பதம் பார்க்க, வலியில் துடித்த ஷமர், விளையாட முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார். அவர் விளையாடுவது சந்தேகம் என்றே முதலில் பேசப்பட்டது.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. வலியை பொருட்படுத்தாது பந்துவீச்சுக்கு தயாரானார் ஷமர் ஜோசஃப். 11.5 ஓவர்களை வீசி அடுத்தடுத்து 7 விக்கெட்களை அவர் சாய்க்க, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ்.

இதுகுறித்து பேசிய ஷமர் ஜோசஃப், உண்மையை சொல்ல வேண்டும் எனில், காலையில் இருந்தே நான் இந்த மைதானத்தின் பக்கம் வரவே இல்லை. என் மருத்துவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். என் விரலை அவர் ஏதோ செய்தார். நிச்சயமாக அவர் என்ன செய்தார் எனத் தெரியாது. நான் களத்திற்குச் சென்றேன். என் அணியை வெற்றிபெற வைத்தேன் என போட்டிக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் என் கண்கள் குளமாகின. ஆனால் நான் ஏற்கனவே முதல் டெஸ்டில் அழுதுவிட்டேன் என ஷமர் ஜோசஃப் கூறினார். முதல் டெஸ்டிலும் ஷமர் ஜோசஃப் 5 விக்கெட்களை சாய்த்திருந்தார்.

117edb20-bde9-11ee-ace0-c35c1b4f6d82.png

ஷமர் ஜோசஃப் இணைய வசதி, தொலைதொடர்பு வசதி உள்ளிட்ட பெரிய வசதிகள் ஏதுமின்றி வளர்ந்தவர்.

ஷமர் ஜோசஃப் பின்னணி என்ன?
முன்னணி கிரிக்கெட் ஊடகமான கிரிக்பஸ் இணையதளத்தின் படி, ஷமர் ஜோசஃப் 1999ம் ஆண்டு பிறந்தவர்.

கயானாவில் பரகாரா எனும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஷமர் ஜோசஃப் இணைய வசதி, தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட பெரிய வசதிகள் ஏதுமின்றி வளர்ந்தவர். தந்தையுடன் மர வேலைக்குச் செல்வதும், கட்டட தொழில், காவலாளி என கிடைத்த வேலைகளைச் செய்துள்ளார் ஷமர் ஜோசப்.

"எங்கள் கிராமத்தில் வசதிகள் குறைவு. தரமான கிரிக்கெட் பந்துகள் கிடைக்காது. நாங்கள் பழங்களையும் சில சமையம் பிளாஸ்டிக் பாட்டில்களை உருக்கி அதை பந்து வடிவத்திற்கு கொண்டு வந்து கிரிக்கெட் விளையாடுவோம்" என்கிறார் ஷமர் ஜோசஃப்பின் உறவினரான ஓர்லாண்டோ டான்னர்(Orlando Tanner).

ஷமர் ஜோசஃப் உள்பட பரகாராவில் உள்ள எந்த குழந்தைகளுக்கும் பெரியளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கான வசதிகள் இருந்ததில்லை என்றும் ஓர்லாண்டோ டான்னரை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

"2018 வரை இண்டெர்நெட் என்றால் என்ன வென்றே தெரியாது. நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். ஸ்மார்ட் ஃபோன்களைக் கண்டு என்ன இது என ஆச்சரியப்பட்டேன். சிறிது பணத்தை சேகரித்து ஸ்மார்ட் ஃபோன் வாங்கி அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருந்தது" என ஷமர் ஜோசஃப் கிரிக்பஸ் இணையளத்திற்கு தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துளார்.

2f6bfd20-bde9-11ee-ace0-c35c1b4f6d82.png

பிரசன்னா எனக்கு ஒரு தாயும் தந்தையும் போல என கூறியுள்ளார் ஷமர்

கிரிக்கெட் வாய்ப்பு
2023-ல் கயானா அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஜோசஃப் ஷமருக்கு கிடைத்தது. அதுதான் அவரது முதல் தர கிரிக்கெட் போட்டி முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட்களை கைப்பற்றி பலரது கவனத்தையும் ஈர்த்தார். 2023 கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் நெட் பவுலராகும் வாய்ப்பு ஷமருக்கு கிடைத்தது.

அப்போது அவருக்கு பயிற்சியாளரும் கிரிக்கெட் வல்லுநருமான இந்தியாவைச் சேர்ந்த பிரசன்னா உடன் தொடர்பு ஏற்பட்டது.

பிரசன்னா எனக்கு ஒரு தாயும் தந்தையும் போல. சிபிஎல்லில் நெட் பவுலராக இருக்கும்போது அவரை சந்தித்தேன். நான் இரண்டு பந்துகள் தான் வீசியிருப்பேன். பிரசன்னா என்னிடம் வந்து நீ ஏன் கயானா அணியில் இல்லை என கேட்டார். நான் திகைத்துப்போனேன். எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. சிபிஎல் தொடரிலும் டெஸ்ட் ஆட்டத்திலும் நீ விரைவில் விளையாடுவாய் என பிரசன்னா கூறியதை கிரிக்பஸ் உடனான நேர்காணலில் பகிர்ந்தார் ஜோசஃப் ஷமர்.

இதே விஷயத்தை பிரசன்னாவும் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். நெட் பவுலராக வந்த ஷமரை அணியில் எடுக்கும்படி கூறினேன். என் மீது நம்பிக்கை வைத்து அணியில் சேர்த்தார்கள். மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக வருவார் என இரண்டே பந்துகளில் கணித்தேன் என பிரசன்னா கூறினார்.

ஒரு மாதத்திற்கு முன்பு, ரவிச்சந்திரன் அஷ்வினுடனான கலந்துரையாடலிலும் ஷமர் ஜோசஃப்பின் திறமைகள் குறித்து பிரசன்னா பேசினார்.

"ஷமர் ஜோசஃப் அடுத்த ஒரு வருடத்தில் எங்கிருப்பார் என்பதை பாருங்கள். ஒரு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஐபிஎல் ஏலத்தின்போது என்னிடம் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சாளரை பரிந்துரைக்கச் சொன்னார். நான் ஷமர் ஜோசஃபை பரிந்துரைத்தேன்." என்றார் அவர்.

மிக குறுகிய காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்த ஷமர் ஜோசஃப் இன்று தனக்கான வரலாறையும் ஆஸ்திரேலியாவில் படைத்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cldqe5kdkvgo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Australia v West Indies 2023-24 | Second Test | Day 4

ஷமர் ஜோசஃப்பின் பந்து வீச்சை கண்டு இரசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஐபிஎல்லில் எடுத்து காயங்கள் வர வைக்கிறாங்களோ தெரியாது.

உண்மை அண்ணா...........

2008ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு ப‌ல‌ தேசிய‌ அணிக‌ள் கீழ் ம‌ட்ட‌த்துக்கு போய் விட்ட‌ன‌.............ஜ‌பிஎல் வ‌ருகைக்கு முத‌ல் 1ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் 5நாள் விளையாட்டு.............வீர‌ர்க‌ள் 5வ‌ருட‌ம் தேசிய‌ அணியில் விளையாடி வேண்டும் ச‌ம்ப‌ள‌த்தை ஒரு சீச‌ன் ஜ‌பிஎல்ல‌ விளையாடி எடுக்கின‌ம்.............முந்தி எல்லாம் தென் ஆபிரிக்கா அணிய‌ ஜ‌ந்து நாள் விளையாட்டில் வெல்வ‌து மிக‌ சிர‌ம‌ம்...........திற‌மையான‌ வீர‌ர்க‌ள் தென் ஆபிரிக்கா அணிக்கு விளையாடாம‌ சீக்கிர‌மே ஓய்வை அறிவிக்கின‌ம் ஜ‌ந்து நாள் விளையாட்டில் .................இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ளுக்கு தேசிய‌ அணிய‌ விட‌ ஜ‌பிஎல் தான் முக்கிய‌ம்.............இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் மேற்கிந்தியத் தீவு வீர‌ர் 7விக்கேட் எடுத்து திற‌மையை வெளிக்காட்டினார்............இவ‌ரும் ஜ‌பிஎல்ல‌ சீக்கிர‌ம் விளையாடுவார்.............பொய் என்றால் பாருங்கோ அண்ணா  இவ‌ரும் ஜ‌ந்து நாள் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார்..........இப்ப‌டி தான் ஜ‌பிஎல் ப‌ல‌ நாட்டு அணிக‌ளை ப‌ண‌ம் மூல‌ம் அழித்தார்க‌ள்............தென் ஆபிரிக்காவில் நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் சிறு வ‌ய‌திலே ஓய்வை அறிவித்த‌வ‌ர்க‌ள் கார‌ண‌ம் ஜ‌பிஎல் ப‌ண‌ம் ...............நியுசிலாந் ரெஸ் தொட‌ருக்கு அறிவிக்க‌ப் ப‌ட்ட‌ வீர‌ர்க‌ளை பாருங்கோ ஒரு வீர‌ர‌ தவிற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாம் அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ர்க‌ள்..................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

27 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி: கண்ணீர் சிந்திய லாரா - வைரலாகும் வீடியோ

Capture-1-11.jpg

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

2 ஆவது போட்டியில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அவுஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 1997 ஆம் ஆண்டில் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா அருகில் இருந்த அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.

கண் கலங்கியபடி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு லாரா வாழ்த்துகள் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

https://thinakkural.lk/article/289746

கில்லி முகத்திலும் புன்னகை!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

27 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி: கண்ணீர் சிந்திய லாரா - வைரலாகும் வீடியோ

Capture-1-11.jpg

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

2 ஆவது போட்டியில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அவுஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 1997 ஆம் ஆண்டில் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா அருகில் இருந்த அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.

கண் கலங்கியபடி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு லாரா வாழ்த்துகள் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

https://thinakkural.lk/article/289746

கில்லி முகத்திலும் புன்னகை!!

ஆம் இந்த‌ காணொளிய‌ நேற்று பார்த்தேன் எல்லாரும் வெற்றி ஆன‌ந்த‌த்தில் க‌ண்ணீரும் விட்டார்க‌ள்..............வெஸ் இண்டீஸ் அணி 2வ‌து ரெஸ் ம‌ச்சை வெல்லுவின‌ம் என்று யாரும் எதிர் பார்த்து இருந்து இருக்க‌ மாட்டின‌ம்................

வெஸ் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துக்க‌ள்.............

ப‌ழைய‌ வெஸ் இண்டீஸ் சீனிய‌ வீர‌ர்க‌ள் பெரிய‌ ம‌லைக‌ள் நிலைத்து நின்று ஆடுவின‌ம்............இப்ப‌த்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் அவேன்ட‌ இட‌த்தை ஒரு போதும் பிடிக்க‌ மாட்டின‌ம்...............

 

இனி ஒரு நாள் தொட‌ர்...........பாப்போம் விளையாட்டு எப்ப‌டி போகுது என்னு

அவுஸ் முன்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு ஓய்வு கொடுத்து இருக்கு..............சிமித் த‌ல‌மையிலான‌ அவுஸ் அணியும் ந‌ல்ல‌ அணி.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2024 at 19:03, ஏராளன் said:

ஐபிஎல்லில் எடுத்து காயங்கள் வர வைக்கிறாங்களோ தெரியாது.

இந்த‌ வீர‌ர் சென்னைக்கு விளையாட‌ போவ‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது அண்ணா..........இவ‌ர் சென்னைக்கு வ‌ந்தா இல‌ங்கை வீர‌ர் குட்டி ம‌லிங்கா கூப்பில‌ தான் உக்கார‌னும்..............இவ‌ர் திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர் அதோட‌ ம‌ட்டையால் ப‌ந்தை சிக்ஸ்சுக்கு அடிப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர்..........இர‌ண்டு ம‌ச்சில் சாதிச்சு காட்டினால் டோனி க‌ண்டிப்பாய் இவ‌ருக்கு சென்னை அணியில் நிர‌ந்த‌ர‌ இட‌ம் கொடுப்பார்....................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

இந்த‌ வீர‌ர் சென்னைக்கு விளையாட‌ போவ‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது அண்ணா..........இவ‌ர் சென்னைக்கு வ‌ந்தா இல‌ங்கை வீர‌ர் குட்டி ம‌லிங்கா கூப்பில‌ தான் உக்கார‌னும்..............இவ‌ர் திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர் அதோட‌ ம‌ட்டையால் ப‌ந்தை சிக்ஸ்சுக்கு அடிப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர்..........இர‌ண்டு ம‌ச்சில் சாதிச்சு காட்டினால் டோனி க‌ண்டிப்பாய் இவ‌ருக்கு சென்னை அணியில் நிர‌ந்த‌ர‌ இட‌ம் கொடுப்பார்....................

இன்னொரு வகையில் சிந்தித்தால் ஐ.பி.எல் லில் விளையாடுவதன் ஊடாக அவரின் பொருளாதார நிலை உயர்வடையும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இன்னொரு வகையில் சிந்தித்தால் ஐ.பி.எல் லில் விளையாடுவதன் ஊடாக அவரின் பொருளாதார நிலை உயர்வடையும்.

இவ‌ர்க‌ள் எவ‌ள‌வு ப‌ண‌மும் ச‌ம்பாதிக்க‌ட்டும் ஜ‌பிஎல்ல‌ 

 

முத‌ல் தேசிய‌ அணிக்கு தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌னும் இவ‌ரும் ஜ‌பிஎல் ப‌ண‌ ஆசையில் ஜ‌ந்து நாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தால் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

இவ‌ர்க‌ள் எவ‌ள‌வு ப‌ண‌மும் ச‌ம்பாதிக்க‌ட்டும் ஜ‌பிஎல்ல‌ 

 

முத‌ல் தேசிய‌ அணிக்கு தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌னும் இவ‌ரும் ஜ‌பிஎல் ப‌ண‌ ஆசையில் ஜ‌ந்து நாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தால் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை.............................

"I will always be here to play Test cricket for the West Indies," he said. "I am not afraid to say this live. There will be times when T20 might come around and Test cricket will be there … but I will always be available to play for the West Indies no matter how much money comes towards me."

https://www.espncricinfo.com/story/shamar-joseph-ruled-out-of-ilt20-with-toe-injury-1418934

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

"I will always be here to play Test cricket for the West Indies," he said. "I am not afraid to say this live. There will be times when T20 might come around and Test cricket will be there … but I will always be available to play for the West Indies no matter how much money comes towards me."

https://www.espncricinfo.com/story/shamar-joseph-ruled-out-of-ilt20-with-toe-injury-1418934

Good 🥰🙏.............

இவ‌ர் தான் உண்மையான‌ விளையாட்டு வீர‌ர்...............தேசிய‌ அணிக்கு இப்ப‌ இருக்கும் வெஸ் இண்டீஸ் வீர‌ர்க‌ள் முக்கிய‌ம் கொடுப்ப‌தில்லை.........இவ‌ர் முற்றிலும் மாரு ப‌ட்ட‌வ‌ர் போல் தெரிகிற‌து வாழ்த்துக்க‌ள்....................

  • Like 1
Link to comment
Share on other sites

Caribbean Cricket League போட்டி நடக்கிறது.. மறு நாள் மேட்ச் க்காக Guyana அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்..... நாளின் கடைசியில் ஒல்லியான உருவம்...காலில் ஒழுங்கான ஷூ கூட இல்லை...ஒரு நெட் பவுலர் ஓடி வந்து பால் போட தொடங்குகிறார்... பால் விர்ரென்று போகிறது.... அடுத்தடுதத்து பால் போடுகிறார் அணியின் முக்கிய பேட்ஸ்மென் திணறுகிறார்......இதை பார்த்த கயானா அணியின் கிரிக்கெட் அட்வைஸர் (நம்மூர் பிரசன்னா அகோரம் ) யார்டா நீ என்ன ஏது என கேட்க...
"சார் நான் Mallல செக்யூரிட்டியா வேலை பார்க்குறேன்.... இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்... இல்லைன்னா இன்னைக்கு பேட்டா கிடைக்காது... எனக்கு பவுலிங் போட பிடிக்கும் அதனால் கேட்டு உள்ளே வந்தேன் " என்கிறார்
உடனே கயானா அணியின் கேப்டனை அழைக்கிறார் பிரசன்னா... இவர் நாளைய மேட்ச்சில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்... மளமளவென வேலைகள் நடக்கிறது... கண்ணீர் மல்க அந்த contractல் கையெழுத்து போடுகிறார் அந்த இளம் பவுலர்...
"நாளைக்கு எவ்வளவு ஸ்பீட் போடுவ? " என கேட்கிறார் பிரசன்னா
"எவ்வளவு ஸ்பீட் போடணும்? " என்று பதில் வருகிறது....
பதில் தந்தவர் தான் இன்றைக்கு 27 வருடங்களுக்கு பிறகு ஆஸி மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் க்கு வெற்றி தேடி தந்த 23 வயது Shemar Joseph!!
நான்காவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார்
பாரகுரா என்று கயானா நாட்டின் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த ஷெமார்
அந்த கிராமத்தில் ஒரு ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது அதனால் சரியான படிப்பு கூட இல்லை... பிறகு தந்தையுடன் மரம் வெட்டும் வேலை... கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் எங்கு சென்றாலும் அதை விளையாட மோகம்.... கயானா கிளப்களில் கிடைக்கும் ஆட்டங்களில் விளையாடி வந்தார்....பிறகு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தார்....இடை இடையே first class ஆட்டங்கள் விளையாடினார்...வறுமை விட்டபாடில்லை.... இறுதியாக செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்தார் ... காலம் அவரை இன்று வேறொரு தளத்தில் நிறுத்தியுள்ளது
கால் விரலில் காயத்துடன் இன்று களமிறங்கியவரிடம் ஆட்டம் முடிந்தபின் வலி தெரியலையா என கேட்க.... அதெல்லாம் தெரியவில்லை அணி ஜெயிக்க வேண்டும் என பெரும் சிரிப்புடன் முழங்கினார்.... அந்த சிரிப்பை பார்த்து இன்று இன்னொரு மேற்கிந்தியத் தீவுகள் கிராமத்தில் இன்னொரு சிறுவனுக்கு புது நம்பிக்கை பிறந்து இருக்கும்!!
2018 வரை internet வசதியே இல்லாத ஊரில் குடியிருந்த ஷெமார் ஜோசப் இன்று talk of the internet
கற்பனைகளில் மட்டுமே சாத்தியமாகும் ஆனாலும் மனதை வருடி புது உத்வேகம் தரும் கதைகளை Fairy Tale என சொல்வார்கள்... எப்போதாவது அது நிஜத்தில் நடக்கும்...அப்படி ஒரு Fairy Tale இன்று நடந்தேறியது
May be an image of 1 person
 
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் தொட‌ரில் வெஸ் இண்டீஸ் அணியின் விளையாட்டு சுத்த‌மாய் பிடிக்க‌ல‌..............அதிக‌ இள‌ம் வீர‌ர்க‌ள் ஆனால் அவ‌ர்க‌ளால் அவுஸ்ரேலியா அணியின் வேக‌ ப‌ந்துக்கு விக்கேட்டை ப‌றி கொடுக்கின‌ம்..........இர‌ண்டு ம‌ச்சும் தோல்வி.................

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.