Jump to content

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2dc4afd0-d307-11ed-be2e-754a65c11505.jpg

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ‘கிளாடியா டென்னி‘ என்பவரே  ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அவரால் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுக்காகவே பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1367898

  • Haha 1
Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

ட்ரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அவரால் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுக்காகவே பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பைடன் கோவிக்க மாட்டாரா?🙂

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

பைடன் கோவிக்க மாட்டாரா?🙂

spacer.png

பைடனுக்கும் நோபல் பரிசுக்கும்... ஏணி  வைத்தாலும் எட்டாது. 😂 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

பைடன் கோவிக்க மாட்டாரா?🙂

நிச்சயமாக கோவிக்க மாடடார் . வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானத்தை ஏட்படுத்தினார். ஈரானை கட்டுக்குள் கொண்டு வந்தார். அரபு இஸ்ரேல் சமாதான உடன் படிக்கைகளை ஏட்படுத்தினார். சீனா அமெரிக்கா தொழில் நுட்பத்தை திருடுவதை நிறுத்தினார். இப்படியாக உலக சமாதானத்திட்காக பாடு படட ஒருவருக்கு தகுதி இல்லையா? 

Link to comment
Share on other sites

8 hours ago, Cruso said:

வடகொரியாவின் பரீட்சாத்தங்களை தினசரி செய்திகளில் குறிப்பாக உண்மையை கூறும் சிங்கள ஊடகங்களில் பார்ப்பதில்லை போல.
 
கூதிகளே பைடனை இப்போ கையாள்கிறார்கள். ஈரானை 80 களில் அடித்தது போல் இப்போது அடிக்க முடியாது என்பதை அமெரிக்காவும் உலகமும் நன் கு அறியும்.

இஸ்ரேலால் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்கள் 27 ஆயிரம். இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தம் $15 பில்லியன் இந்த வருடம் மட்டும். ஒரு வேளை பைடன் வெள்ளையாக இருப்பதால் நோபல் பரிசு கிடைக்கும் என நினக்கிறீர்களோ தெரியாது.
 
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

ட்ரம்பிற்கு நோபல் பரிசு 2018 இலேயே பரிந்துரைக்கப்பட்டது.

பின்னர் 2021 இல் நோபல் பரிசுக்காக நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் Christian Tybring-Gjedde என்பவர் ட்ரம்பினைப் பரிந்துரைத்தார். பின்னர் Capitole தாக்குதல் மற்றும் ட்ரம்பின் குளறுபடியான நடத்தையைப் பார்த்தபின் தான் இப் பரிந்துரை செய்ததற்காக வெட்கப் படுவதாகக் கூறினார்.

இதுபோன்று கிளாடியா டென்னியும் பின்நாளில் வெட்கப்படாமல் இருந்தால் சரி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

வடகொரியாவின் பரீட்சாத்தங்களை தினசரி செய்திகளில் குறிப்பாக உண்மையை கூறும் சிங்கள ஊடகங்களில் பார்ப்பதில்லை போல.
 
கூதிகளே பைடனை இப்போ கையாள்கிறார்கள். ஈரானை 80 களில் அடித்தது போல் இப்போது அடிக்க முடியாது என்பதை அமெரிக்காவும் உலகமும் நன் கு அறியும்.

இஸ்ரேலால் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்கள் 27 ஆயிரம். இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தம் $15 பில்லியன் இந்த வருடம் மட்டும். ஒரு வேளை பைடன் வெள்ளையாக இருப்பதால் நோபல் பரிசு கிடைக்கும் என நினக்கிறீர்களோ தெரியாது.
 
மன்னிக்கவும். நீங்கள் பைடனை பற்றி கதைக்கிறீர்கள். நான் ட்ரம்பை பற்றி எழுதினேன். மீம்ண்டும் ஒரு தடவை வாசிக்கவும். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.