Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சுமந்திரனின்  சுயபரிசோதனை

சுமந்திரனின்  சுயபரிசோதனை 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

    மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தனது தோல்விக்கு  முக்கியமான காரணத்தை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் யூரியூப் தமிழ் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கிக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

  தலைவர் தேர்தலுக்கு பின்னரான தனது நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கூறிய அவர், நேர்காணலின் இறுதிப்பகுதியில்  தேர்தல் முடிவு தொடர்பில் செய்த சுயபரிசோதனை அல்லது உள்முகச் சிந்தனை பற்றி மனந்திறந்து பேசினார்.

  கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபாட்டுன் உழைத்த உங்களுக்கு எதிராக கட்சிக்குள் ஏன் இந்தளவு  எதிர்ப்பு  என்று நேர்காணலைக் கண்ட பத்திரிகை ஆசிரியர் சுமந்திரனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு ; 

  ” நீங்கள் கேட்கின்ற விடயம் குறித்து நான் நிறையவே யோசித்தேன். ஒரு கருத்து எனது மனதில் இப்போது பதிகிறது. நான் கட்சிக்கு என்ன செய்தேன், எவ்வாறு செயற்பட்டேன் என்பதைப் பற்றிச் சொன்னால் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், நான் எவ்வளவுதான் செய்தாலும் கூட, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை என்னுடைய அணுகுமுறை எமது மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகின்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவில்லை. 

 ” இது ஏனென்று சொன்னால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச மட்டத்தில்  சந்திப்புக்களையும்  நடத்துகின்ற நான் சில விடயங்களை, சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது. அதற்கேற்ற வண்ணமாக நான் சில நகர்வுகளைச் செய்யவேண்டும். நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாகப் பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு  முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது.

  ” பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு வழி வந்திருந்தால், மக்களுடைய நிலைப்பாடு வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் பிரச்சினை தீராமல் இருக்கும்போது, நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது குறைந்தது தங்களது உணர்ச்சிகளையாவது வெளியில் சொல்லவேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம்.  ஆனால், நான் அவ்வாறு சொல்கிறவன் அல்ல என்கிற ஒரு ஆதங்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கலாம்.

  “இந்த நேரத்தில் எங்களுடைய உணர்வை தென்னிலங்கைக்கு வெளிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக எமது மக்கள் உணருகின்றார்கள் என்று நான் நினைக்கிறேன்.

  “திருகோணமலையில் தலைவர் தேர்தல் முடிந்து  கொழும்பு திரும்பியபோது பல கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. வியப்பாக இருக்கிறதே என்று என்னிடம் கூறினார்கள். எங்களுடைய பிரச்சினை கள் தீர்க்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். தோல்வியடைந்த ஒருவனாகவே என்னை எமது மக்கள் நோக்குகிறார்கள். உங்களுடன் பேசி எந்தப்  பிரயோசனமும் இல்லை. அதுவே உண்மையான நிலைமை. நீங்கள் பிரச்சினையை தீர்க்காமல் இருக்கும் வரை எமது மக்கள்,  பிரச்சினைதான் தீராமல் விட்டாலும் சரி, தங்களுடைய உணர்ச்சிகளையாவது  வெளிப்படுத்துகின்ற ஒருவர் தேவை என்று இந்த  தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

  “நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல. அவ்வாறு இனிமேலும் செய்யப்போகிறவனும்  இல்லை. அது என்னுடைய சுபாவமும் இல்லை. அரசியலுக்காக, கட்சித் தலைமையைப் பெறவேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்படப்போகிறவனும்  அல்ல. ஆனால், சிறிதரன் அடைய நினைக்கின்ற அதே இலக்கை அடைவதற்காகவே நானும் இவ்வளவு காலமும் பாடுபட்டிருக்கிறேன். அதை அவரும் இணங்கிக்கொள்வார். அதை  நாங்கள் தொடர்ந்து செய்வோம். 

  “ஆனால், எமது மக்களுக்கு இப்போது முக்கியமாக தேவைப்படுவது தங்களுடைய உணர்வுகளை வெளியுலகத்துக்கு  குறிப்பாக தென்னிலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே. அதனால் அவர்கள் சிறிதரனை தெரிவு செய்திருக்கிறார்கள். நல்லது. அதற்குப் பின்னால் நான் முழு மூச்சையும் கொடுத்து ஒத்துழைப்பேன்.”

  இறுதியாக கட்சியின்  பொதுச்செயலாளர் உட்பட நிருவாகிகள் தெரிவு குறித்து கிளம்பிய சர்ச்சை தொடர்பாக பேசியபோது பதவி விலகும் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் யாப்பின் பிரகாரம் சகல விடயங்களையும் கையாளமுடியாது என்று கூறியதை நேர்காணலில் ஒரு கட்டத்தில் சுட்டிக்காட்டிய சுமந்திரன் அந்த யாப்பை தானே நீதிமன்றத்தில் காப்பாற்றிக் கொடுத்தாகவும் இப்போது அவர்கள் அதற்கு அப்பால் செயற்பட முனைவதாகவும் குறிப்பிட்டார்.

   தமிழரசு கட்சி சமஷ்டி முறையிலான அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதன் மூலமாக நாட்டுப் பிரிவினையை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்று கூறி களனிப்பகுதியைச் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர்  உயர்நீதிமன்றத்தில் 2014 மார்ச்சில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2017 ஆகஸட் 4 வழங்கப்பட்டது. அதில் தமிழரசு  கட்சிக்காக சுமந்திரனே வாதாடினார்.

  அன்றைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் நீதியரசர்கள் உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகவோ நாட்டுப் பிரிவினையைக் கோருவதாகவோ அமையாது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் தமிழரசு கட்சியின் யாப்பை நியாயப்படுத்தி சுமந்திரன் செய்த வாதம்  தமிழ்த் தேசிய அரசியலுக்கு  அவர் வழங்கிய முக்கியமான  பங்களிப்பாக பரவலாக நோக்கப்படுகிறது.

  அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியலமைப்பு வழிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண முயற்சிகளை முன்னெடுத்த சகல தமிழ்த் தலைவர்களுக்கும் இறுதியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையே தனது குறுகிய கால அரசியல் வாழ்வில் சுமந்திரனும் சந்திக்கவேண்டியேற்பட்டது. அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சமுதாயம் காலங்காலமாக கடைப்பிடித்த ஏமாற்றுத்தனமான அணுகுமுறைகள் தமிழ் மிதவாத தலைவர்களை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்திய வரலாறு ஒன்று இருக்கிறது. 

   அரசாங்கங்களுடன் தாங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தி தங்களது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக இடைக்காலத்தில் குறைந்தபட்ச பயன்களையாவது  காண்பிப்பதற்கு தமிழ் தலைவர்களினால் முடியுமாக இருந்ததில்லை. அந்த நிலைவரத்துக்கு காரணமான அரசாங்கங்களின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளுமே தமிழ் மக்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனை கொண்ட சக்திகள் செல்வாக்கு பெறுவதற்கு வழிவகுத்து வந்திருக்கிறது.

  இந்த பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் சிறிதரனின் வெற்றியையும் சுமந்திரனின் தோல்வியையும் நோக்கவேண்டும்.

  தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும்  சுமந்திரன் புதிய தலைவருடன் முழுமையாக ஒத்துழைப்பதாக கடந்த மூன்று வாரங்களிலும் பல தடவைகள் உறுதியளித்தார்.

  ஆனால், தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தினம் முதலாக சிறிதரன்  வெளிப்படுத்திவரும் கருத்துக்களும் அணுகுமுறைகளும் சுமந்திரனைப் போன்றவர்களைப்  பொறுத்தவரை அவருடன் ஒத்துழைத்து அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக உணர்த்துகின்றன. 

  கட்சியின் நிருவாகப் பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்ட சர்ச்சையை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் சிறிதரனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாகத் தெரியவில்லை.

  இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்கு பிறகு சிறிதரன் வெளிப்படுத்திருக்கும் கொள்கை நிலைப்பாடுகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

  திருகோணமலையில் ஜனவரி 28 நடைபெறவிருந்த கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை ஏற்றுக்கொண்டு சிறிதரன் தனது கொள்கை நிலைப்பாடுகளையும் எதிர்கால அணுகுமுறைகளையும்  விளக்கிக்கூறுவார்  என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமாகாமல் போய்விட்டது.

  அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறிதரன் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

  ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யப்போவதில்லை  என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார்.

  தமிழர்களின் நிலம், மொழி மற்றும்  கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதுவும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார்.

  மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று தமிழ் கார்டியனுக்கு கூறிய அவர், தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை  ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

  எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களது பயணம் ஈழத்தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை குறிப்பாக அவர்கள் மத்தியில் இருக்கும் தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட  கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களை  உற்சாகப்படுத்தும் நோக்கிலேயே அவர் அந்த கருத்துக்களை வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை. தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடனடியாகவே கூட அவர் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது வெற்றிக்கு செய்த பங்களி்ப்புக்காக நன்றி தெரிவித்தார்.

 நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தல் மாத்திரமே. தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து பரந்துபட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

  உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தலையாய  பொறுப்பு இருக்கிறது.

  தமிழர்களின் மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவது என்பது வேறு. கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களைக் கட்டி வைத்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்.

  கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவரும் சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை (அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல்) அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கு வழிகாட்டுவதாக அமையவேண்டும்.

  வெறுமனே உணர்ச்சிவசமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக் கொண்டிருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். 

  ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல்  கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மை புரிந்து கொள்ளப்படவேண்டும்.

  மண்ணில் நிலவும் உண்மையைப் பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாதச் சிந்தனையுடன்  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் (இத்தகைய குழுக்களில் ஒன்றுதான் துவாரகா வீடியோ  நாடகத்தையும் தயாரித்து ஒளிபரப்பியது)  நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய  சூழ்நிலைகளை வடக்கு, கிழக்கில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட  வேண்டும். 

  ஏற்கெனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்கு திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது.
 
https://arangamnews.com/?p=10465

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல

IMG-5836.jpg

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டுரையாளர் சுமத்திரனின் சொம்பு என்பதை பார்த்து பல்லுப்படாமல் எழுதியதில் இருந்து தெரிகிறது.

  • Like 1
  • Thanks 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2024 at 08:03, கிருபன் said:

ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல்  கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மை புரிந்து கொள்ளப்படவேண்டும்.

இதைதான் எத்தனைமுறை சொல்லிவிட்டார் கடவுளே அங்குள்ள தமிழ் மக்களை இவரிடம் இருந்து காப்பாற்று .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பெருமாள் said:

கடவுளே அங்குள்ள தமிழ் மக்களை இவரிடம் இருந்து காப்பாற்று .

இல்லாத அவர் பாவம் எப்படி வருவார்

ஆனால் புதிய தலைவர் கவிஞர் வாலி ஸ்ரைலான உடையில் தமிழ் மக்களை காப்பாற்ற வந்திருக்கின்றாரே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2024 at 16:03, கிருபன் said:

இவர் சுமாவின் சொம்பு என்பது வெளிப்படை . போராளிகளின் இலக்கு எதுவோ அதுதான் மக்களின் இறுதி தீர்ப்பாக இருக்கவேண்டும் . எழுத்தாளர் பட்டர் பூசும் வேலைகள் எப்பவுமே எடுபடாது . இறுதி தீர்வு என்ன என்பதை உறுதியா சொல்லாமல் வேறென்ன செய்ய வேண்டும் . சாமும் சுமாவும் என்னத்த கிழித்தார்கள் .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, தமிழன்பன் said:

 . போராளிகளின் இலக்கு எதுவோ அதுதான் மக்களின் இறுதி தீர்ப்பாக இருக்கவேண்டும் .

மக்கலின் இலக்கு எதுவோ அதுதான் போராளிகளின் இலக்காக இருக்க வேண்டும். 

இல்லாவிட்டால் அவர்கள் போராளிகள் அல்ல. சர்வாதிகாரிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

, """பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச மட்டத்தில்  சந்திப்புக்களையும்  நடத்துகின்ற நான் சில விடயங்களை, சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது. அதற்கேற்ற வண்ணமாக நான் சில நகர்வுகளைச்செய்யவேண்டும். நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாகப் பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு  முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது.

நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல. அவ்வாறு இனிமேலும் செய்யப்போகிறவனும்  ல்லை."""

உது பலருக்கு கசக்கத்தான் செய்யும். 

சுமந்திரனும் ஒரு புலிக்கொடியை தூக்கியிருப்பாரானால் எங்கள் புலம்பெயர்ஸ் சும்மை தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கும். 

🤣 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழன்பன் said:

சாமும் சுமாவும் என்னத்த கிழித்தார்கள் .

இந்த கேள்வியில் ஒரு நியாயம் உண்டு  அதைவிட்டு தந்தை தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு பாதை அமைத்தார் தமிழ் மக்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற தத்துவத்தை உதிர்த்தார் என்பதெல்லாம்...

10 hours ago, Kapithan said:

உது பலருக்கு கசக்கத்தான் செய்யும். 

சுமந்திரனும் ஒரு புலிக்கொடியை தூக்கியிருப்பாரானால் எங்கள் புலம்பெயர்ஸ் சும்மை தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கும். 

நூறுவீதம் உண்மை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/2/2024 at 15:23, தமிழன்பன் said:

 போராளிகளின் இலக்கு எதுவோ அதுதான் மக்களின் இறுதி தீர்ப்பாக இருக்கவேண்டும் .  தீர்வு என்ன என்பதை உறுதியா சொல்லாமல் வேறென்ன செய்ய வேண்டும் . 

நீங்கள் இங்கிருந்து கொண்டு இதை சொன்னால் ஏற்று கொள்ளலாம். இன்னும் ஆயுத  கனவுடன், ஆயுத தீர்வுடன் இருக்கிறீர்கள் போல இருக்குது. அதெல்லாம்கடந்து போய் வெகு காலமாகி விட்டுது. இருக்கவே இருக்குது மாவடட சபை, கிராம சபை தீர்வுகள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் ஆயுதம் ஏந்த சொல்லவில்லை. சுமாவின் போலித்தனம் தெரிந்த பின்னருமா ? இனியும் காதில பூ வைத்திட்டு கண்ணை மூடி இவரை எப்படி நம்புவது. 2010 இன் பின்னர் இவர் செய்தது போதாதா ?

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பிபிசி தமிழில் போட்டிருக்கு அண்ணை. பிறந்து வளர்ந்தது சென்னையாம்.
    • 13 DEC, 2024 | 05:09 PM வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அதேபோல வடக்கிலும் அவ்வாறான குழுவொன்று செயற்பட்டு வந்தது. அந்த குழுவால் வவுனியா நகரப் பகுதியிலிருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்திவிட்டு, இந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த முச்சக்கரவண்டிக்கு நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு, விற்பனை செய்திருந்தமை தெரிய வந்ததையடுத்து இந்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டது. அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது. வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவரது ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரு நபர்களிடமிருந்தும் முச்சக்கரவண்டி மற்றும் 4 அரை பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன.  இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/201167
    • பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின் போதே கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313651
    • வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை! மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று (13) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே,வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்திய போதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கனவுகளுடன் தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே போகும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ளபோதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=197241
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.