Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிந்திப்போம் செயல்படுவோம்

களியாட்டத்தில் கலாட்டாவா

அனைவருக்கும் வணக்கம்.
அண்மையில் யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வின் பொழுது நடந்த ஒர் அசம்பாவிதத்தை பற்றி பல வாத பிரதிவாதங்கள் இடம் பெறுவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அசம்பாவிதத்தை ஊதி பெருப்பித்த பெறுமை நெட்டிசன் மாரை சேரும் .அதாவது சமுக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்யும் நபர்கள்..அநேகமான நபர்கள் தங்களுக்கு அதிக பார்வையாளர்கள்,மற்றும் லைக் வேணும் என்ற காரணத்தால் கவர்ச்சிகரமான தலையங்கங்களை எழுதி தங்களது கற்பனைக்கு எட்டியவற்றை கூறினார்கள் ..அவர்களில் அனேகமானவ்ர்கள் போட்ட படம், அதாவது சனம் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு முன்னுக்கு செல்லும் காட்சி...இந்த ஒரு காட்சியை ஏதோ ஒரு மூலத்தில் கொப்பி பண்ணி அதை தாங்கள் எடுத்த காட்சி போல  பிரசுரித்து கருத்துக்களை அள்ளி வாரி இறைத்தனர். யாழ்ப்பாணத்தவன் உலகத்திலயே சிறந்த பிறவியாக இருக்க வேணும் என்ற கருத்து பட சிலர் எழுதினர்.இன்னும் சிலர் இந்த அசம்பாவிதத்தினால் யாழ்ப்பாணத்தானின் மானம் கப்பல் ஏறிவிட்டது என முதலை கண்ணீர் விட்டனர்..
இந்த யூ டியுப் விண்னர்கள் முழுக்க முழுக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொழிலதிபர் இந்திரன்,மற்றும் நடன தயாரிப்பாளர் கலா மாஸ்டர் மற்றும் தமன்னா மீது குற்றங்களை சாட்டுகிறார்கள் அல்லது அவர்களை வசை பாடுகிறார்கள்.
அவர்களின் ஒழுங்கமைப்பில் தவறுகள் இருக்கின்றது அதை சுட்டி காட்டுங்கள் இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகள் வராமல்  செயல் பட உதவியாக இருக்கும்...இவர்களுக்கு மட்டுமல்ல எந்த ஒழுங்கமைப்பாளர்களுக்கும் அது உதவியாக இருக்கும் அதாவது பொது மனபான்மை ...
தொழிலதிபர் தனது கல்வி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நிகழ்ச்சியை நடத்தியதாக குற்றம் சாட்டுகிறீர்கள் அதில என்ன தப்பு இருக்கின்றது? 
தாயகத்தில் இன்று புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தொழிலதிபர்கள் பலர் தொழில் முதலீடு செய்ய முன் வருகின்றனர் ,ஈடுபடுகின்றனர்.அவர்கள் புலம் பெயர்ந்த மண்ணிலயோ, இந்தியா,அல்லது ஏனைய ஆசிய நாடுகளில் தங்கள்  முதலீடுகளை   இலகுவாக செய்யலாம் இருந்தும் தாயகத்தில் இருக்கும்  தங்களது பற்று காரணமாக அங்கு முதலீடு செய்ய முன்வருகின்றனர்.
அவர்களை ஊக்கபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தாயக மக்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் .சில யூ டியுப் நபர்கள் இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர் .அவர்கள் உண்மையிலயே பாராட்ட பட வேண்டியவர்கள்
தொழிலதிபர் இந்திரனின் அரவணைப்பால் தாயக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அதிமாக இருக்கும்..இந்த இசை நிகழ்ச்சியின் பொழுது நடை பெற்ற அசம்பாவிதத்தினால் பாதிப்பு பொருட்களுக்கு மட்டுமே...எனவே எந்த தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வந்தாலும் அரவணைத்து ஊக்க படுத்த வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே..
யாழ் மாநகர சபையினர்,மற்றும் பொலிசார்,அரசு போன்ற துறையினரும் இந்த அசம்பாவித் நிகழ்வுக்கு பொறுப்பாளிகள் ..இவர்களை கேள்வி கேட்க வேண்டிய மண்னின் யூ டியுப் விண்ணர்கள்,சமுக வலைத்தள ஜாம்பவாங்கள் எல்லாம் பணத்தை முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
காவாலி கூட்டங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு இவர்களை திறுத்த முடியாது  .ஆனால் கட்டுப்படுத்த  முடியும் அதை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொலிசார் செய்ய வேண்டும் . மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போதைப்பொருள் பாவிப்பவர்கள் நடமாடுவதை பொலிசார் தடை செய்திருக்க வேணும் .மாநகர சபை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி கொடுக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேணும் ..
ஒர் அரசியல்கட்சியின் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு மக்களை விட கலகம் அடக்கும் பொலிசார் அதிகமாக நிற்பார்கள் இங்கு அப்படியான எதுவும் ஒழுங்கு செய்ய படவில்லை.. பாதுகாப்பு செய்ய வேண்டியவர்கள் இங்கு தவறு செய்து விட்டார்கள் .. 
ஏற்கனவே மக்கள் கொந்தளிப்பு நிலையில் இருக்கும் பொழுது மக்களை அமைதி படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரி சிங்கள மொழியில் அமைதி காக்கும் மாறு கோருகின்றார் இது இன்னும் மக்களின் மனவேதனையை தூண்டும் செயல் ...அடுத்து தமிழில் பேசிய அதிகாரி கூறியவை எதுவும் மக்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை..
இன்று தொழிலதிபர் இந்திரன் தனது சார்பில் அறிக்கை விடுத்துள்ளார் அதைப்பற்றி எவரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை...அதை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையும் இந்த யூ டியுப் விண்ணர்களுக்கு உண்டு...
இளைய வயதில் பிரபல தொழிலதிபராக வந்து தாயக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக வடமாகாண மக்களுக்கு ஒர் கல்வி நிறுவனத்தை தொடங்குவது என்பது உண்மையிலயே பாராட்டபட வேண்டிய ஒன்று ..கல்வி அறிவே எவராலும் அழிக்க முடியாத சொத்து...எம் மக்கள் இதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.
 இப்படி எழுதிய காரணத்தால் நானும் இந்திரனிடம் பணம் வாங்கி எழுதுகிறேன் பதிவுகளை போட சிலர் நினைக்கலாம் எனக்கு அவர் யார் என தெரியாது என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்..

எல்லோரையும் குற்றம் சாட்டி, எம் மண்ணின் மைந்தர்கள் தொழில் செய்ய விடாமல் தடுக்க பல முயற்சிகள் திரைமறைவில் நடை பெறுவது கசப்பான உண்மை...

நலன் விரும்பி

  • Like 10
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிஜமாகவே சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ....... யாழ்ப்பாணத்தில் மக்களைவிடவும் கூடுதலாக முப்படைகளும் இருக்கு ......சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஏனைய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்........இதைவிட வேறு என்னத்தை சொல்வதற்கு இருக்கு.......!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Putthan,

உங்களின் இந்த ஆதங்கம் என்னிடத்திலும் இருக்கிறது.

பேனை பெரிதாக்கி பெருச்சாளியாக்கி பேயாகவும் காட்டியிருக்கிறார்கள்.

“நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது கவலை அளிக்கிறது.  ஆனலும் நிலமையைச் சீராக்கி, நிகழ்ச்சி தொடர்ந்தது” என்று தென்னிந்திய கலைஞர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், சில தென்னிந்திய ஊடகங்களும் அறியத்தந்திருக்கிறார்கள். இதற்குள் எம்மவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து இழிந்த அரசியலும் செய்திருக்கிறார்கள்.

பொலிஸ் அதிகாரி சிங்களத்தில் வேண்டுகோள் விடுத்த போது, “தமிழில் கதை” என்று கத்தினார்கள். அவர் தமிழில் வேண்டுகோள் விடுத்த போதும் எம்மவர்களுக்குப் புரியவில்லை என்பது வேதனை.

புலம் பெயர்ந்தவர்கள், தாயகத்தில் வந்து முதலீடு செய்துதான் பணம் பார்க்க வேண்டிய நிலையில் இல்லை. அவர்கள் பொது நலன் கருதியோ, தங்கள் புகழ் விரும்பியோ தாயகத்துக்கு உதவ முன் வரலாம். அதை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் திறன் அங்கு இல்லை என்பதைத்தான் நடந்த சம்பவம் காட்டியிருக்கிறது.

வீழ்ந்திருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் வீரம் பேசப் போகிறோம்?

  • Like 6
Posted

யாழில் நிகழ்ந்த நிகழ்வின் மறுபக்கத்தை அலசியுள்ளீர்கள் நல்ல விடயம்.

பந்திகளை சரியான முறையில் பிரித்து (இடைவெளி இல்லை) இருந்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அத்துடன் எழுத்துப்பிழைகளையும் கவனித்திருக்கலாம்  😄

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, putthan said:

இந்த யூ டியுப் விண்னர்கள் முழுக்க முழுக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொழிலதிபர் இந்திரன்,மற்றும் நடன தயாரிப்பாளர் கலா மாஸ்டர் மற்றும் தமன்னா மீது குற்றங்களை சாட்டுகிறார்கள் அல்லது அவர்களை வசை பாடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல புதிய யுடியுப் ஆட்கள் யாழ்பாணத்தில் தோன்றி இருக்கிறார்கள். இதில் எங்களக்கு தெரிந்தவர்கள் செய்கின்ற அநீதி என்றால் தாங்களே பார்க்காத இந்த குப்பை விடியோக்களை எங்களுக்கு வட்சப்பில் அனுப்பி தள்ளி விடுகின்றார்கள். தமன்னாவினால்  தடம்புரண்ட யாழ்பாணம் ,    யாழில் அரங்கேற்றப்பட்ட காம களியாட்டம்  இப்படி பல தலைப்புக்கள். ஒரு அரசியல்வாதி போன்று தோற்றம் அளித்த ஒரு அக்கா பேசுகின்ற வீடியோ நண்பர் சொல்லி பார்த்தேன். யாழ்பாணத்து மக்களுக்காக பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. யாழ்பாணத்து மக்கள் காட்டமிராண்டிகள் இல்லை வந்தோரை வரவேற்கும் வந்தோரை வாழவைக்கும் மண்ணாகவே எமது மண் உள்ளது என்றார்  
இது தமிழ்நாட்டை தானே இப்படி சொல்வார்கள்

5 hours ago, Kavi arunasalam said:

புலம் பெயர்ந்தவர்கள், தாயகத்தில் வந்து முதலீடு செய்துதான் பணம் பார்க்க வேண்டிய நிலையில் இல்லை. அவர்கள் பொது நலன் கருதியோ, தங்கள் புகழ் விரும்பியோ தாயகத்துக்கு உதவ முன் வரலாம். அதை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் திறன் அங்கு இல்லை என்பதைத்தான் நடந்த சம்பவம் காட்டியிருக்கிறது.

வீழ்ந்திருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் வீரம் பேசப் போகிறோம்?

மிகச்சிறந்த சித்திக்க வேண்டிய கருத்தை தெரிவித்துள்ளீர்கள் 👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, putthan said:

இன்று தொழிலதிபர் இந்திரன் தனது சார்பில் அறிக்கை விடுத்துள்ளார் அதைப்பற்றி எவரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை...அதை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையும் இந்த யூ டியுப் விண்ணர்களுக்கு உண்டு...

இந்த தொழிலதிபர் செய்த தவறு இலவசமாக நிகழ்ச்சியை நடாத்தியதே.

அடுத்து மாநகரசபை பொலிசார் மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக எதற்கேற்ப முன்னேற்பாடுகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை.

வெறும் 100 பேர் செய்யும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிசார் வந்து படம் காட்டும் போது 

இந்த நிகழ்ச்சியை மட்டும் ஏன் கவனத்தில் எடுக்கவில்லை.

உலகத்தில் இசைநிகழ்ச்சிகள் குழப்பப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பாவில் எத்தனை விளையாட்டுப் போட்டிகள் குழப்பத்தில் முடிந்து பார்வையாளர்கள் எத்தனையோ பேர் மரணித்தும் இருக்கிறார்கள்.

அப்படி பார்க்கும் போது இதைக் கடந்து போக வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, suvy said:

நிஜமாகவே சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ....... யாழ்ப்பாணத்தில் மக்களைவிடவும் கூடுதலாக முப்படைகளும் இருக்கு ......சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஏனைய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்........இதைவிட வேறு என்னத்தை சொல்வதற்கு இருக்கு.......!

"ஜவ்னா" என்ற சொல்லை தமிழக கலைஞர்கள்  தங்களை அறியாமல் சொல்கின்றனர் ...

காலப்போக்கில் ஒர் சமுகம் உரிமை கோரலாம்,கட்டுரை எழுதலாம் "ஜவ்னா" வை ஆட்சி செய்தது ஜவார் சுல்தான் என்று..

நான் சவுதியில் இருக்கும் பொழுது ஒரு நண்பர் சொன்னார் சாவகச்சேரியை ஆண்டது மலே மன்னன் "ஷா" அதனால் தான்  ஷாவகச்சேரீ என்ற பெயர் வந்தது என...

மண்ணின் மைந்தர்கள்,யூ டியுப் விண்ணனர்கள் ஆக்க பூர்வமான வீடியோக்களை வெளியிட பயில வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Kavi arunasalam said:

புலம் பெயர்ந்தவர்கள், தாயகத்தில் வந்து முதலீடு செய்துதான் பணம் பார்க்க வேண்டிய நிலையில் இல்லை. அவர்கள் பொது நலன் கருதியோ, தங்கள் புகழ் விரும்பியோ தாயகத்துக்கு உதவ முன் வரலாம். அதை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் திறன் அங்கு இல்லை என்பதைத்தான் நடந்த சம்பவம் காட்டியிருக்கிறது.

வீழ்ந்திருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் வீரம் பேசப் போகிறோம்?

நாங்கள் இன்னும் கிடுகுவேலி கலாச்சாரத்தில் இருக்கின்றோம் என சில யூ டியுப் தம்பிகள் கற்பனையில் இருக்கின்றனர். கிடுகு வேலி கலாச்சாரத்தை உடைத்தெரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
கொழும்பில் வாழும் பொழுது சில கதியால்,மற்றும் கிடுகளை புடுங்கி எறிந்தோம் ,புலம் பெயர்ந்த பிறகு முற்றாக கிடுகுவேலியை மறந்து விட்டோம்...

தாயகத்தில் கொழும்பில் இருந்த வேறு சமுகங்கள்,மற்றும் புலம்பெயர்ந்த சமுகங்கள் மிஞ்சி இருந்த கதியாலையும்,கிடுகளையும் பிடுங்கி  எறிந்து விட்டனர்...

இன்று தாயமக்கள் தங்கள் தனித்துவத்தை காப்பாற்றி கொள்ள புத்திசாலி தனத்துடன் செயல்பட வேண்டும் ...

கல்வி,மனித நேயம் ,பொது நலன் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும்...

வீரம் பேசட்டும்..... புத்திசாலி தனத்துடன் பேசவும்  ...செயல்படவும் வேண்டும்

12 hours ago, மோகன் said:

யாழில் நிகழ்ந்த நிகழ்வின் மறுபக்கத்தை அலசியுள்ளீர்கள் நல்ல விடயம்.

பந்திகளை சரியான முறையில் பிரித்து (இடைவெளி இல்லை) இருந்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அத்துடன் எழுத்துப்பிழைகளையும் கவனித்திருக்கலாம்  😄

நன்றி மோகன் ,நீங்கள் கூறிய விடயங்களை கவனத்தில் எடுக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல புதிய யுடியுப் ஆட்கள் யாழ்பாணத்தில் தோன்றி இருக்கிறார்கள். இதில் எங்களக்கு தெரிந்தவர்கள் செய்கின்ற அநீதி என்றால் தாங்களே பார்க்காத இந்த குப்பை விடியோக்களை எங்களுக்கு வட்சப்பில் அனுப்பி தள்ளி விடுகின்றார்கள். தமன்னாவினால்  தடம்புரண்ட யாழ்பாணம் ,    யாழில் அரங்கேற்றப்பட்ட காம களியாட்டம்  இப்படி பல தலைப்புக்கள். ஒரு அரசியல்வாதி போன்று தோற்றம் அளித்த ஒரு அக்கா பேசுகின்ற வீடியோ நண்பர் சொல்லி பார்த்தேன். யாழ்பாணத்து மக்களுக்காக பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. யாழ்பாணத்து மக்கள் காட்டமிராண்டிகள் இல்லை வந்தோரை வரவேற்கும் வந்தோரை வாழவைக்கும் மண்ணாகவே எமது மண் உள்ளது என்றார்  
இது தமிழ்நாட்டை தானே இப்படி சொல்வார்கள்

மிகச்சிறந்த சித்திக்க வேண்டிய கருத்தை தெரிவித்துள்ளீர்கள் 👌

வட்சப் குறூப்பில் இருந்து போஸ்ட்களை தள்ளி விடும் நண்பர்கள் அந்த போஸ்ட்டை அவர்களே பார்ப்பதில்லை .என்பது அதை விட கொடுமை..

யாழ்ப்பாண மக்களுக்காக பேசுவதை விட செயல் பட்டால் சிறப்பாக இருக்கும்...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் நடந்த களியாட்டக் குழப்பங்களினால் புதிய டிக்டொக்டர்கள் உருவாகியது நல்லவிடயம்! நல்ல கிரியேட்டிவிட்டியுடன், யாழ்ப்பாண மண்ணில் இருந்தே பலர் வீடியோக்கள் போட்டிருந்தனர்!

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.