Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   23 FEB, 2024 | 09:56 PM

image

(நெவில் அன்தனி)

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் பிறீமியர் லீக்கின் (WPL 2024) இரண்டாவது அத்தியாயம் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகிறது.

th.jpg

ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன.

th__1_.jpg

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்திவரும் வீராங்கனைகள் பலர் இவ் வருட மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றனர்.

wpl_opening_ceremony_2.png

இன்றைய போட்டிக்கு முன்பதாக சினிமா நட்சத்திரங்களின் பங்கேற்புடன் பிரமாண்டமான ஆரம்ப விழா வைபவம் பெங்களூருவில் நடைபெற்றது.

wpl_opening_ceremony_1.png

இம்முறை டெல்ஹி கெப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இண்டியன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், யூபி வொரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இரண்டு சுற்றுகளில் விளையாடுகின்றன.

WPL-2024-Bollywood-stars-will-perform-in

இந்த அணிகளின் தலைவிகளாக  முறையே மெக் லெனிங், பெத் மூனி, ஹாமன்ப்ரீத் கோர், ஸ்ம்ரிதி மந்தானா, அலிசா ஹீலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

wpl_opening_ceremony_3.png

போட்டிகள் பெங்களூருவிலும் டெல்ஹியிலும் நடைபெறும்.

https://www.virakesari.lk/article/177158

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்த WPL ஆரம்பப் போட்டியில் கடைசிப் பந்தில் வென்றது மும்பை

24 FEB, 2024 | 01:19 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பும்  பரபரப்பும் கலந்த 2024 மகளிர் பிறீமியர் லீக் (WPL) கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் கடைசிப் பந்தில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

கணிசமான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட இந்தப் போட்டியில் தனது முதல் பந்தையும் போட்டியில் கடைசிப் பந்தையும் எதிர்கொண்ட அறிமுக வீராங்கனை சஜீவன் சஜானா வெற்றிக்கு தேவைப்பட்ட 5 ஓட்டங்களை சிக்ஸ் மூலம் பெற்று மும்பை இண்டியன்ஸின் வெற்றியை உறுதி செய்தார்.

இரண்டு அணிகளினதும் விளையாட்டு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்தது. அந்த அணிகளின் ஆரம்பங்கள் சிறப்பாக அமையாததுடன் தலா 3 வீராங்கனைகளின் சிறப்பான துடுப்பாட்டங்களே மொத்த எண்ணிக்கைகளுக்கு வலு சேர்த்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீராங்கனை ஷபாலி வர்மா ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார்.

ஆனால், அணித் தலைவி மெக் லெனிங்குடன் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸுடன் 3ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் அலிஸ் கெப்சி பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தார்.

கெப்சி 53 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸ் 24 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களையும் லெனிங் 31 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்களைவிட மாரிஸ்ஆன் கெப் 16 ஓட்டங்களைப் பெற்றார்.

மும்பை பந்துவீச்சில் நெட் சிவர் ப்றன்ட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமேலியா கேர் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

172 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹெய்லி மெத்யூஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததால் மும்பையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

எனினும் நெட் சிவர் ப்றன்ட், யஸ்டிக்கா பாட்டியா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

நேட் சிவர் ப்றன்ட் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோருடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 56 ஓட்டங்களை பாட்டியா பகிர்ந்தார்.

பாட்டியா 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களை விளாசினார்.

தொடர்ந்து ஹாமன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கேர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கர் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (160 - 5 விக்.)

ஆனால், மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹாமன்ப்ரீத் கோர் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கடைசிப் பந்துக்கு முந்திய பந்தில் 55 ஓட்டங்களுடன்    ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் கடைசிப் பந்தை எதிர்கொண்ட சஜீவன் சஜானா எல்லா சக்தியையும் பிரயோகித்து கெப்சியின் பந்தை சுழற்றி அடித்து சிக்ஸாக்கி மும்பைக்கு அபார வெற்றியை ஈட்டடிக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அலிஸ் கெப்சி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2402_jemeema_rodrigues_dc_vs_mi.png

2402_harmanpreet_kaur_mi_vs_dc.png

2402_mag_lanning_and_harmanpreet_kaur_th

https://www.virakesari.lk/article/177189

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை இண்டியன்ஸுக்கு இரண்டாவது வெற்றி

26 FEB, 2024 | 12:02 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2ஆவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது வெற்றியை ஈட்டியது.

குஜராத் ஜயன்ட்ஸுக்கு எதிராக பெங்களூர் எம்.சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் போட்டியில் 11 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற்றது.

இந்த வருட ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை கடைசிப் பந்தில் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 127 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அமேலியா கேரின் சகலதுறை ஆட்டம், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோரின் சிறப்பான துடுப்பாட்டம் என்பன மும்பையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

முதலிரண்டு விக்கெட்களை 21 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்ட மும்பை இண்டியன்ஸ் அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி வெற்றியை தனதாக்கியது.

நெட் சிவர் ப்றன்ட் 22 ஓட்டங்க்ளைப் பெற்று ஆட்டம் இழந்தார். (49 - 3 விக்.)

அதனைத் தொடர்ந்து ஹாமன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

அமேலியா கேர் 31 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கர் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (118 - 5 விக்.)

எனினும் ஹாமன்ப்ரீத் கோர் ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் தனுஜா கன்வார் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப்  பெற்றது.

துடுப்பாட்டத்தில் நான்கு வீராங்கனைகள் மாத்திரமே 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பின்வரிசை வீராங்கனை தனுஜா கன்வார் அதிகப்பட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட ஆரம்ப வீராங்கனை அணித் தலைவி பெத் மூனி 24 ஓட்டங்களையும் கெத்ரின் ப்றய்ஸ் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அமேலியா கேர் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷப்னிம்  இஸ்மாய்ல் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2502_harmanpreet_kaur_mi_vs_gg.png

https://www.virakesari.lk/article/177316

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்க, டெல்ஹி இலகுவாக வென்றது

27 FEB, 2024 | 05:50 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டின் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸிடம் கடைசிப் பந்தில் தோல்வி அடைந்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ், தனது இரண்டாவது போட்டியில் யூபி வொரியர்ஸ் அணியை 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது.

மாரிஸ்ஆன் கெப், ராதா யாதவ் ஆகியோரின் மிகத் துல்லியமான பந்துவீச்சுகள், அணித் தலைவி மெக் லெனிங், ஷஃபாலி வர்மா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை இலகுவாக வெற்றி பெறச் செய்தன.

radha.gif

meg-le.gif

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யூபி வொரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஷ்வீட்டா சேராவத் மாத்திரமே திறமையை வெளிப்படுத்தி 45 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் நான்கு வீராங்கனைகள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களால் 20 ஓட்டங்களை எட்ட முடியாமல் போனது.

பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்கள் பந்துவீசி 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ராதா யாதவ் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

marizanne.gif

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 14.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

மெக் லெனிங் 43 பந்துகளில் 6 பவுண்டறிகளுடன் 53 ஓட்டங்களையும் ஷஃபாலி வர்மா 43 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் விளாசினர்.

shafali.gif

அவர்கள் இருவரும் 76 பந்துகளில் 119 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.

https://www.virakesari.lk/article/177448

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

28 FEB, 2024 | 01:57 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (27) இரவு நடைபெற்ற இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தின் 5ஆவது போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 8 விக்கெட்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் இலகுவாக வெற்றிகொண்டது.

கடந்த வருடப் போட்டியின் ஆரம்பத்தில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், இந்த வருடம் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி தனது முயற்சியை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

றோயல் செலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப்போட்டியில் துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்த வருடப் போட்டிளில் இதுவரை அணி ஒன்று பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

குஜராத் ஜயன்ட்ஸ் அணி சார்பாக மூவர் மாத்திரமே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் மத்திய வரிசை வீராங்கனை தயாளன் ஹேமலதா திறமையை வெளிப்படுத்தி 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவரை விட ஆரம்ப வீராங்கனை ஹாலீன் டியோல் 22 ஓட்டங்களையும் பின்வரிசையில் ஸ்நேஹ் ராணா 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சொபி மொலினெஸ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரேனுகா சிங் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 12.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா 43 ஓட்டங்க ளையும் சபினெனி மேகனா ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் எலிஸ் பெரி ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்று தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

2706_smriti_mandhana_rcb_vs_gg.png

2706_megana_rcb_vs_gg.png

2706_renuka_singh_rcb_vs_gg.png

https://www.virakesari.lk/article/177486

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி பிரகாசிப்பு; மந்தனாவின் அரைச் சதம் வீண்

01 MAR, 2024 | 03:05 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) இரவு நடைபெற்ற மகளிர் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 25 ஓட்டங்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ்  அணி  வெற்றிகொண்டது.

மாரிஸ்ஆன் கெப், ஜெஸ் ஜொனாசன் ஆகியோரின் சகலதுறை ஆட்டங்கள், ஷஃபாலி வர்மாவின் அதிரடி துடுப்பாட்டம் என்பன டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது.

ஷஃபாலி முதாலவது ஓவரில் கொடுத்த இலகுவான பிடியை ஷ்ரியன்கா மேகனா தவறவிட்டது றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை சாதகமாக்கிக்கொண்டு அதிரடியில் இறங்கிய ஷஃபாலி வர்மா 31 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 3 பவண்டறிகளுடன் 50 ஓட்டங்களைக் குவித்ததுடன் அலிஸ் கெப்சியுடன் 2ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

அலிஸ் கெப்சி 33 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட மத்திய வரிசையில் மாரிஸ் ஆன்  கெப் 16 பந்துகளில் 32 ஓட்டங்களையும் ஜெஸ் ஜொனாசென் 16 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சொஃபி டிவைன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நாடின் டி க்ளார்க் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  அணி   20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா தனது வழமையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைக் குவித்தார்.

மந்தனாவும் சொஃபி டிவைனும் முதலாவது விக்கெட்டில் 51 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சொஃபி டிவைன் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

ஏனைய துடுப்பாட்ட வீராங்னைகளில் சபினேனி மேகான (36), ரிச்சா கோஷ் (16) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜெஸ் ஜொனாசன் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

0103_jess_jonnasen_dc_vs_rcb.png

0103_shafali_verma_dc_vs_rcb.png

https://www.virakesari.lk/article/177669

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ம‌க‌ளிர் கிரிக்கேட்டில்

அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் தான் அதிக‌ம் வெளி நாட்டு ம‌க‌ளிர்க‌ளில்............

2தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர்

3இங்லாந் ம‌க‌ளி

2நியுசிலாந்

1இல‌ங்கை

1வெஸ்சீண்டிஸ் ம‌க‌ளிர்

 

கூட‌ அவுஸ்ரேலியா ம‌க‌ளிர்😜............

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின் தோல்வி தொடர்கிறது

02 MAR, 2024 | 02:30 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு, எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் முதல் சுற்றில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 6 விக்கெட்களால் யூபி வொரியர்ஸ் இலகுவாக வெற்றிகொண்டது.

இதன் மூலம் இதுவரை தான் விளையாடிய 3 போட்டிகளிலும் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜயன்ட்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.

வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற இந்த வருடத்துக்கான 8ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

லோரா வுல்வாட் (28), பெத் மூனி (16) ஆகிய இருவரும் 32 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பெத் மூனி ஆட்டம் இழந்த பின்னர் மொத்த எண்ணிக்கை 61 ஓட்டங்களாக இருந்தபோது லோரா வுல்வாட் ஆட்டம் இழந்தார்.

மேலும் 22 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ஹாலீன் டியோல் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந் நிலையில் ஃபோப் லிச்பீல்ட், ஏஷ்லி காட்னர் ஆகிய இருவரும்  4ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர்.

லிச்பீல்ட் 35 ஓட்டங்களையும் காட்னர் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடும் ஒரே ஒரு இலங்கையரான சமரி அத்தபத்து ஆரம்ப பந்துவீச்சாளராக பயன்படுத்தப்பட்டார்.

அவர் 4 ஓவர்களை சிக்கனமாக வீசி 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார்.

சொஃபி எக்லஸ்டோன் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யூபி வொரியர்ஸ் 15.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி அலிசா ஹீலி (33), கிரான் நவ்கிரே (12) ஆகிய இருவரும் 27 பந்துகளில் அதிரடியாக 42 ஓட்டங்களைக் குவித்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து சமரி அத்தபத்து 17 ஓட்டங்களைப் பெற்றார்.

ஷ்வேட்டா சேராவத் (2) ஆட்டமிழந்போது யூபி வொரியர்ஸின் மொத்த எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் க்றேஸ் ஹெரிஸ், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

க்றேஸ் ஹெரிஸ் 33 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 60 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தீப்தி ஷர்மா ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

0103_sophie_ecclestone_upw_vs_gg.png

0103_grace_harris_upw_vs_gg.png

https://www.virakesari.lk/article/177743

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய டெல்ஹி

04 MAR, 2024 | 04:13 PM
image

(நெவில் அன்தனி)

குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு, எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 25 ஓட்டங்களால் வெற்றியீட்டிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி புள்ளிகள் நிலையில் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அணித் தலைவி மெக் லெனிங் குவித்த அரைச் சதம், ஜெஸ் ஜோனாசன், ராதா யாதவ் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சகள் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

மெக் லெனிங் 55 ஓட்டங்ளையும் அலிஸ் கெப்சி 27 ஓட்டங்களையும் அனாபெல் சதலண்ட் 20 ஓட்டங்களையும் ஷிக்கா பாண்டி ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மெக்னா சிங் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஏஷ்லி காட்னர் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களைப் பெற்றார்.

குஜராத் ஜயன்ட்ஸின் மொத்த எண்ணிக்கையில் 17 உதிரிகள் இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிககையாக இருந்தது.

பந்துவீச்சில் ராதா யாதவ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெஸ் ஜோனாசன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஜெஸ் ஜோனாசன் 

0303_radha_yadav_dc_vs_gg.png

0303_megna_singh_gg_vs_dc.png

0303_jess_jonassen_dc_vs_gg.png

https://www.virakesari.lk/article/177870

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்தது நோயல் செலஞ்சர்ஸ்

05 MAR, 2024 | 03:22 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு, எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற யூபி வொரியர்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையிலான மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியுடன் இரண்டு அணிகளும் தங்களது முதலாம் கட்டப் போட்டிகளை நிறைவுசெய்துள்ளதுடன் பெங்களூருவில் நடைபெற்றுவந்து போட்டிகளும் முடிவுக்கு வந்தன.

இன்று முதல் டெல்ஹியில் எஞ்சிய மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.

யூபி வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா, எலிஸ் பெரி ஆகிய இருவரும் குவித்த அதிரடி அரைச் சதங்கள் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு அடிகோலின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 198 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப விக்கெட்டில் சபினெனி மேகனாவுடன் 50 ஓட்டங்களைப்   பகிர்ந்த ஸ்ம்ரித்தி மந்தனா, 2ஆவது விக்கெட்டில் எலிஸ் பெரியுடன் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

ஸ்ம்ரித்தி மந்தனா 50 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 37 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களையும் குவித்தனர்.

அவர்களை விட மேகனா 28 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யூபி வொரியர்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவி அலிசா ஹீலி 55 ஓட்டங்களையும் தீப்தி ஷர்மா 33 ஓட்டங்களையும் பூணம் கெம்னார் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

சமரி அத்தபத்து உட்பட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

பந்துவீச்சில் சொஃபி டிவைன், சொஃபி மொலிநொக்ஸ், ஜோர்ஜியா வெயாஹாம், ஆஷா சோபனா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியின்போது அலிஸா ஹீலியின் துடுப்பிலிருந்து சிக்ஸாக பறந்த பந்து அனுசரணையாளர்களின் காரின் பின் கதவுக் கண்ணாடியை செதப்படுத்தியது.  

0403_ayssa_healey_upw_vs_rcb.png

0403_smriti_mandana_rcb_vs_upw__1_.png

https://www.virakesari.lk/article/177964

  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ போட்டிக‌ளில் டெல்லி ம‌க‌ளிர் அணி ந‌ல்லா விளையாடிகின‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி ம‌க‌ளிர் அணி பின‌லுக்கு போய் விட்டின‌ம்
இந்த‌ முறை கோப்பை தூக்க‌ கூடும் பாப்போம்😁................

  • கருத்துக்கள உறவுகள்

ம‌க‌ளிர் வ‌ங்க‌ளூர் அணி...........

டெல்லி ம‌க‌ளிர் அணியுட‌ன் ஞாயிற்று கிழ‌மை பின‌லில்......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த விளையாட்டு எண்டாலும்  ஆம்பிளையள் விளையாடேக்க இருக்கிற கிக் கேள்ஸ் விளையாடேக்க இருக்கிறேல்லை. பெரிய மீடியாக்களும் முக்கியத்துவம் குடுக்கிறேல்ல.🤣

இல்லையோ ஓமோ? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய சம்பியன் யார்? டெல்ஹி - பெங்களூர் இறுதிப் போட்டி இன்று

17 MAR, 2024 | 01:29 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவரும் இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் புதிய சம்பியனைத் தீர்மானிக்கவுள்ள டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி டெல்ஹி, அருண் ஜய்ட்லி கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

ஐந்து அணிகள் பங்குபற்றிய மகளிர் பிறீமியர் லீக் இரண்டாவது அத்தியாயத்தில் 8 போட்டிகளில் 6 வெற்றிகள், 2 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை அடைந்ததன் மூலம் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இரண்டாம் இடத்தைப் பெற்ற நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸுக்கும் மூன்றாம் இடத்தைப் பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் இடையில் நடைபெற்ற நீக்கல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

nnh.gif

டெல்ஹி கெப்பிட்டல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் இன்றைய இறுதிப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

மேலும் இந்தப் போட்டியைக் கண்டுகளிக்க பெருந்திரளான இரசிகர்கள் அரங்கில் நிரம்பி வழிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இண்டியன்ஸிடம் கடந்த வருடம் தோல்வி அடைந்து சம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இரண்டாவது நேரடித் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

மறுபக்கத்தில் ஆரம்ப போட்டிகள் இரண்டில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அதன் பின்னர் இடையில் தோல்விகளைத் தழுவி தடுமாற்றம் அடைந்தது. எனினும் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸை இரண்டு தடவைகள் வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்துகொண்டது.

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் கடந்த வருடம் அங்குரார்ப்பணம் செய்யப்படுவதற்கு முன்னர் 2008இலிருந்து 3 அணிகளுக்கு இடையிலான விமென்ஸ் ரி20 செலஞ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவந்தது.

45.gif

ஆனால், மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி பெண்களுக்கான முதன்மையான தொழில்சார் கிரிக்கெட் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டு அணிகளினதும் உரிமையாளர்கள் அதிசிறந்த வீராங்கனைகளை உள்வாங்குவதற்காக பெருந்தொகை நிதியை முதலீடு செய்துள்ளதுடன்  இம்முறை என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கவுள்ளனர்.

டெல்ஹி அணியில் தலைவி மெக் லெனிங் (4 அரைச் சதங்களுடன் 308 ஓட்டங்கள்), ஷபாலி வர்மா (3 அரைச் சதங்களுடன் 265), ஜெமிமா ரொட்றிக்ஸ் (2 அரைச் சதங்களுடன் 235), அலிஸ் கெப்சி (ஒரு அரைச் சதத்துடன் 230) ஆகியோர் துடுப்பாட்டத்தில் வெகுவாக பிரகாசித்துள்ளனர்.

இந்த நால்வரும் தம்மிடையே 124 பவுண்டறிகளையும் 35 சிக்ஸ்களையும் விளாசியுள்ளதன் மூலம் தங்களது அதிரடி ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் (11 விக்கெட்கள்), ஜெசிக்கா ஜோனாசன் (11), ராதா யாதவ் (10), அருந்ததி ரெட்டி (8), ஷிக்கா சுபாஸ் பாண்டி (8) ஆகியோர் சிறப்பாக செயற்பட்டனர்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் சிறந்த பல வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர்.

எலிஸ் பெரி (2 அரைச் சதங்களுடன் 312 ஓட்டங்கள்), அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா (2 அரைச் சதங்களுடன் 269), ரிச்சா கோஷ் (2 அரைச் சதங்களுடன் 240), சப்பினெனி மேகனா (ஒரு அரைச் சதத்துடன் 168) ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆஷா ஷோபனா (10 விக்கெட்கள்), ஸ்ரீயன்கா ராஜேஷ் பட்டில் (9), சொஃபி மொலிநொக்ஸ் (9), எலிஸ் பெரி (7), ஜோர்ஜியா வெயாஹம் (7) ஆகியோர் சிறப்பாக பந்துவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

அணிகள்

டெல்ஹி கெப்பிட்டல்ஸ்: மெக் லெனிங் (தலைவி), ஷஃபாலி வர்மா, அலிஸ் கெப்சி, ஜெமிமா ரொட்றிக்ஸ், ஜெஸ் ஜொனாசன், மாரிஸ்ஆன் கெப், மின்னு மானி, தானியா பாட்டியா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிக்கா பாண்டி.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: ஸ்ம்ரித்தி மந்தனா (தலைவி), சொஃபி டிவைன், எலிஸ் பெரி, சப்பினெனி மேகனா அல்லது டிஷா கசாத், ரிச்சா கோஷ், சொஃபி மொலினொக்ஸ், ஜோர்ஜியா வெயாஹம், ஸ்ரீயன்கா பட்டில், ரேனுகா சிங், ஆஷா சோபனா, ஷ்ரத்தா பொக்கர்கார் அல்லது எக்டா பிஷ்ட்.

https://www.virakesari.lk/article/178940

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலியால் முடியாததை ஸ்மிரிதி மந்தனா சாதிக்க உதவிய 8-ஆவது ஓவரில் என்ன நடந்தது?

ஸ்மிருதி மந்தனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எட்டாவது ஓவரில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிப் போனது

18 மார்ச் 2024, 03:02 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகளாக ஆர்.சி.பி. ஆடவர் அணி கோப்பை வெல்ல முடியாமல் தவிக்கும் நிலையில், மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே அந்த அணி பட்டம் வென்று அசத்தியுள்ளது. அதுவும், நடப்புத் தொடரில் மிகவும் வலுவான அணிகளாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி ஆர்.சி.பி. மகளிர் அணி மகுடம் சூடியுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அச்சுறுத்தும் தொடக்க ஜோடியாக வலம் வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மெக் லேன்னிங் - ஷாஃபாலி வர்மா இணையின் அதிரடி சரவெடியுடன் ஆட்டத்தை தொடங்கினாலும் எட்டாவது ஓவரில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிப் போனது. அந்த ஓவரில் என்ன நிகழ்ந்தது?

அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கிய ஆர்.சி.பி. - டெல்லி கேப்பிட்டல்ஸ் இறுதிப் போட்டி

மகளிர் பிரீமியர் லீக் இரண்டாவது சீசனின் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்து வலுவான அணியாக கம்பீரமாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஆர்.சி.பி. அணி எதிர்கொண்டது.

இறுதிப்போட்டியில் பங்கேற்ற இரு அணிகளுமே முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பின என்பது அந்த அணி கேப்டன்களின் பேட்டியில் வெளிப்பட்டது. நடப்புத் தொடரில் 7 முறை முதலில் பேட் செய்தே வெற்றி பெற்ற டெல்லி அணி டாஸில் வென்றதும் தயக்கமே இல்லாமல் அந்த பாணியை தொடர தீர்மானித்தது. டெல்லி கேப்டன் மெக் லேன்னிங் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

ஆர்.சி.பி. கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும் தனது அணி முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பியதாக கூறினார். எனினும், சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று அவர் கூறினார்.

 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெக் லேன்னிங் - ஷாஃபாலி வர்மா அதிரடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வழக்கம் போல் மென் லேன்னிங் - ஷாஃபாலி வர்மா ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. குறிப்பாக, ஷாஃபாலி வர்மாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது. இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது.

இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்.சி.பி. பவுலர்கள் திணறித்தான் போனார்கள். ஏழே ஓவர்களில் டெல்லி அணி 64 ரன்களைக் குவித்து ஆர்.சி.பி. மகளிர் அணியை திகைக்க வைத்தது.

திருப்புமுனையாக அமைந்த எட்டாவது ஓவர்

மெக் லேன்னிங் - ஷாஃபாலி இணையின் அதிரடியால் விழி பிதுங்கிப் போயிருந்த ஆர்.சி.பி. அணிக்கு சோஃபி மெலினெக்ஸ் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி வீராங்கனை ஷாஃபாலி வர்மாவை வீழ்த்தி ஆர்.சி.பி. அணிக்கு நிம்மதி தந்தார் சோஃபி.

ஷாஃபாலி 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 44 ரன்களை குவித்திருந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்சே ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி தந்தார். இருவரையும் கிளீன் போல்டாக்கி அசத்தினார் சோஃபி.

இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து அதிரடி வீராங்கனை ஷாபாஃலி உள்ளிட்ட 3 பேரை அவுட்டாக்கி ஆர்.சி.பி. அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் சோஃபி.

 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மெக் லேன்னிங் - ஷாஃபாலி இணையின் அதிரடியால் விழி பிதுங்கிப் போயிருந்த ஆர்.சி.பி. அணிக்கு சோஃபி மெலினெக்ஸ் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சில் அடங்கிப் போன டெல்லி

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணியை தூக்கி நிறுத்த கேப்டன் மெக் லேன்னிங் கடுமையாக போராடினார். ஆனால், அவரை 23 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஸ்ரேயங்கா பாட்டில் அவுட்டாக்கினார்.

அதன் பின்னர் டெல்லி அணியை தலைநிமிர ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சாளர்கள் விடவே இல்லை. டெல்லி அணி வீராங்கனைகள் களமிறங்குவதும் அவுட்டாகி வெளியேறுவதுமாக இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 113 ரன்களுக்கு அடங்கிப் போனது.

ஆர்.சி.பி. அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சோபி மெலினெக்ஸ் மொத்தம் 20 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். சுழற்பந்துவீச்சாளர் ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்.சி.பி. சிறப்பான தொடக்கம்

நடப்புச் சாம்பியனாக திகழ்ந்த வலுவான மும்பை இந்தியன்சை எலிமினேட்டர் சுற்றில் வீழ்த்திய ஆர்.சி.பி. அணி, டெல்லி கேப்பிட்டல்சை குறைந்த ரன்களில் சுருட்டிவிட்டதால் நம்பிக்கையுடன் இலக்கைத் துரத்த களமிறங்கியது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும், சோஃபி டிவைனும் ஆட்டத்தை தொடங்கினர்.

இருவருமே அவசரப்படாமல், அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை அடித்தாடி வெற்றிக்குத் தேவையான ரன்களை சேகரித்த வண்ணம் இருந்தனர். இதனால், ஆர்.சி.பி. அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. இருவருமே இறுதிப்போட்டி தந்த அழுத்தத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சையும் திறம்பட சமாளித்தனர்.

முதல் விக்கெட்டிற்கு 49 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சோஃபி டிவைன் 27 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட எலிஸி பெர்ரியும் கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.

 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மந்தனா அவுட்டானதும் சற்று நெருக்கடி

கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்திட போராடினார். ஆனால், அது நடக்கவில்லை. ஆர்.சி.பி. அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்த போது மந்தனா 31 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அப்போது, ஆர்.சி.பி. அணி வெற்றி பெற 36 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டன.

மந்தனா அவுட்டானதும் சற்றே நம்பிக்கை பெற்ற டெல்லி மகளிர் அணியினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர். அவர்களது துல்லியமான பந்துவீச்சால் ஆர்.சி.பி. அணியின் ரன் வேகம் மந்தமானது.

ஆர்.சி.பி. எளிதான வெற்றி

டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டி, கடைசி ஓவர் வரை நீடித்தது. எனினும், 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் ஆர்.சி.பி. அணியினர் முகத்தில் பெரிய அளவில் நெருக்கடி தென்படவில்லை.

கடைசி ஓவரின் முதலிரு பந்துகளிலும் தலா ஒரு ரன் வர, மூன்றாவது பந்தில் ரிச்சா கோஷ் பவுண்டரி அடித்து ஆர்.சி.பி. அணியை எளிதாக வெற்றிபெறச் செய்தார்.

இந்த வெற்றியின் மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஆர்.சி.பி. வீராங்கனை சோஃபி மெலினெக்ஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்திட போராடினார். ஆனால், அது நடக்கவில்லை.

ஆர்.சி.பி. அணிக்கு வெற்றி தேடித்தந்த வியூகம்

இறுதிப்போட்டியில் டெல்லி அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடைசிப் போட்டியில் ஆடிய அதே வீராங்கனைகளே இறுதிப்போட்டியிலும் இடம் பெற்றனர்.

டெல்லியின் சொந்த மைதானமான இந்த மைதானத்தில் ஆடிய இரு போட்டிகளிலுமே அந்த அணி வெற்றி பெற்றிருந்தது. அத்துடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக அதுவரை ஆடியிருந்த 4 போட்டிகளிலுமே டெல்லி அணியே வெற்றி பெற்றிருந்தது.

இறுதிப்போட்டியில் டாசும் சாதகமாக அமைய, நடப்புத் தொடரில் மிகவும் வலுவான அணியாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியே கோப்பையை வெல்லும் என்று நிபுணர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆட்டத்தில் தொடக்கத்தில் டெல்லி அணியின் கேப்டன் மெக் லேன்னிங்கும் ஷாஃபாலி வர்மாவும் ஆடிய அதிரடி ஆட்டம் அதனை நிரூபிப்பது போன்றே அமைந்தது.

ஆனால், சோஃபி மெக்னேக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்த, அதன் பிறகு ஆட்டத்தை ஆர்.சி.பி. அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இதனால், 64/0 என்றிருந்த டெல்லி அணியின் ஸ்கோர் 113 ரன்களுக்கு ஆல்அவுட் என்றாகிப் போனது.

சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டில் வைத்த பொறியில் சிக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் மெக் லேன்னிங் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் டெல்லி அணியின் பின்வரிசை விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ஷோபனா சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெல்லி அணி குறைந்த ரன்களில் சுருண்டதில் ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சாளர்களே பெரும் பங்கு வகித்தனர்.

3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆர்.சி.பி. அதற்கான பலனையும் பெற்றது. அதேநேரத்தில், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் கண்ட டெல்லி அணிக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. வெற்றி இலக்கும் எளிதானது என்பதால் ஆர்.சி.பி. அணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சாளர்களால் பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆர்.சி.பி. அணியின் கோப்பை தாகம் மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே தணிந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆர்.சி.பி.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்.சி.பி. மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுமே பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிய அளவில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். காரணம், ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகளாக கோலி, டிவில்லியர்ஸ், கெயில் போன்ற முன்னணி வீரர்களுடன் வலுவான அணியாக ஆர்.சி.பி. திகழ்ந்தாலும் அந்த அணியால் இன்றுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆர்.சி.பி. அணியின் கோப்பை தாகம் மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே தணிந்துள்ளது. அந்த அணியின் வீராங்கனைகள் கோப்பையை வென்று அதன் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர்.

ஆர்.சி.பி. மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றிருப்பதை குறிப்பிட்டு, கோலி புகைப்படத்துடன் அந்த அணி ரசிகர்கள் பலரும் எதிர்வரும் ஐ.பி.எல்.லில் கோப்பை வெல்ல வேண்டி தங்களது எதிர்பார்ப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cn3m2xxz14eo

  • கருத்துக்கள உறவுகள்

கோலி வெங்க‌ளூர் ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌னுக்கு வாழ்த்து சொன்னார் 

 

கோலிக்கு பெரிய‌ மன‌சு

 

16வ‌ருட‌ம் ஜ‌பிஎல் ஆண்க‌ள் அணி கோப்பை தூக்காத‌து ராசி இல்லை என்று சொல்லுவ‌தா அல்ல‌து வீர‌ர்க‌ளை குறை சொல்வ‌தா..........இந்த‌ முறை வ‌ங்க‌ளூர் கோப்பை தூக்கினா RCB ர‌சிக‌ர்க‌ள் ஆத்தில் அடை ம‌ழை தான்................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.