Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

1600 மில்லியன் ஜப்பானிய யென் உதவித் தொகையைப் பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கி, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த பொதுத்துறைக்கு அதிகாரம் அளித்து ஜப்பான் அரசாங்கம் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு

இதன்படி, ஜப்பான் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 1600 மில்லியன் (3.3 பில்லியன் ரூபா) வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை | 1600 Million Yen Aid From Japan

இந்தப் பணம் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கான தாய் மற்றும் குழந்தை சிகிச்சை உபகரணங்களைப் பெறுவதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடி உபகரணங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

அதிபர் ரணில் முன்வைத்த யோசனை

மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கத்துடன் பரிமாற்ற பத்திரங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை | 1600 Million Yen Aid From Japan

https://ibctamil.com/article/1600-million-yen-aid-from-japan-1710228079

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் தாய் மற்றும் குழந்தை சிகிச்சை உபகரணங்களைப் பெறுவதற்கு நிதி வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

பழைய கடன் காசு கொடுத்தாச்சா ?😀

படத்தில் அவரின் கையசைவில் தெரியவில்லையா  ..இன்னும் கொடுக்கவில்லையென்று

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கி

நமோ நமோ மாதா பாடினதை விட ....செல்வந்த நாடுகளில் பிச்சை பாத்திரம் ஏந்தி  "மாத்தையா ,நொனா சல்லி தென்ட" .....எனறு பாடினது அதிகம் போல் தெரிகிறது

9 minutes ago, alvayan said:

படத்தில் அவரின் கையசைவில் தெரியவில்லையா  ..இன்னும் கொடுக்கவில்லையென்று

கொர்ட் சூட் போட்டு கை ஏந்துறார் என சொல்லுறீயல்....அவர் நரியர் ,சாணக்கியர் அது இது என பட்டம் கொடுத்து வைச்சிருக்கிறோம் நாங்கள் .தன்னுடைய கட்சியை காப்பற்ற தெரியவில்லை,தன்னுடைய நாட்டை செல்வ செழிப்புடன் நடத்த தெரியவில்லை இவ்ர் எல்லாம் சாணக்கியன்>>>.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

பழைய கடன் காசு கொடுத்தாச்சா ?😀

எவ்வளவு?? யாருக்கு கொடுக்க வேண்டும்?? கொடுத்தவர்களே மறந்து விட்டார்கள்,.😂🤣ரணிலுக்கு  ஞாபகம் இருக்குமா?? நீங்கள் ஏன். ஞாபகப்படுத்துகிறீர்கள்? 🤣,..இந்த பணம் உண்மையில்  மேலே கூறப்பட்டது போல் தான் பயன்படுத்தப்படுமா?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

https://ibctamil.com/article/1600-million-yen-aid-from-japan-1710228079

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் தாய் மற்றும் குழந்தை சிகிச்சை உபகரணங்களைப் பெறுவதற்கு நிதி வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஜப்பான் பல வருடங்களாக வடக்கு கிழக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வுக்கு பெருமளவு நிதி வழங்கி வருகிறது. JICA திட்டங்கள் பலவும் வடக்கின் மருத்துவ மனைகளில் புதிய கட்டிடங்கள் கட்டவும், வாகனங்கள் வாங்கவும் பயன்பட்டிருக்கிறதென நினைக்கிறேன்.

இது ஜப்பான் பொருளாதார அபிவிருத்தி என்ற இன்னொரு திட்டத்தின் மூலம் வருவதாகத் தெரிகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

ஜப்பான் பல வருடங்களாக வடக்கு கிழக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வுக்கு பெருமளவு நிதி வழங்கி வருகிறது. JICA திட்டங்கள் பலவும் வடக்கின் மருத்துவ மனைகளில் புதிய கட்டிடங்கள் கட்டவும், வாகனங்கள் வாங்கவும் பயன்பட்டிருக்கிறதென நினைக்கிறேன்.

இது ஜப்பான் பொருளாதார அபிவிருத்தி என்ற இன்னொரு திட்டத்தின் மூலம் வருவதாகத் தெரிகிறது.

ஜப்பான் வடகிழக்கு அபிவிருத்தி என்று பணம் வாங்கி விட்டு தென்பகுதி சிங்களவரே அனுபவிக்கிறார்கள் என்று உங்களை போல் நானும் நினைக்கிறேன் கணக்கு சரியா ?

சிங்களத்துக்கு எவ்வளவு நாளைக்கு முட்டு கொடுப்பதாய் உத்தேசம் ?

இந்த கருத்துக்கு பிறகு சிங்கன் எப்படி கருத்து எழுத்வார் என்று தெரியும் 😀லண்டன் நேரம் 12 ஆகிறது  அனைவருக்கும் இனிய இரவு .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Justin said:

ஜப்பான் பல வருடங்களாக வடக்கு கிழக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வுக்கு பெருமளவு நிதி வழங்கி வருகிறது. JICA திட்டங்கள் பலவும் வடக்கின் மருத்துவ மனைகளில் புதிய கட்டிடங்கள் கட்டவும், வாகனங்கள் வாங்கவும் பயன்பட்டிருக்கிறதென நினைக்கிறேன்.

இது ஜப்பான் பொருளாதார அபிவிருத்தி என்ற இன்னொரு திட்டத்தின் மூலம் வருவதாகத் தெரிகிறது.

ஜப்பான் கடந்த வருடம் இரண்டு நோயாளர் காவு வண்டிகள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு வழங்கியிருந்தது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.