Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

March 15, 2024
 
அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் உள்ளனர்.

இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறஉரிமையில்லை என உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

https://www.ilakku.org/அகதி-முகாமில்-பிறந்தோருக/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வாழ் இலங்கைத் தமிழருக்கும் பெப்பே இலங்கை வாழ் இந்தியத் தமிழருக்கும் பெப்பே,.....

@MEERA மற்றும் பல இந்திய  ஆதரவாளர்களுக்கு,...

👇

இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019

இந்தியாவிற்கு புலம்பெயர்பவர்கள் தொடர்பான சட்டம்
 
2019 இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம்(Citizenship (Amendment) Act 2019), பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் இருந்து திசம்பர் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய மதச்சிறுபான்மையோரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்த மசோதா, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் 09 திசம்பர் 2019 அன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.[2][3][4] மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறிய இசுலாமியர்களுக்கு இத்தகுதி இச்சட்டத்தில் தரப்படவில்லை.[5][6][7] இந்தியச் சட்டத்தின்படிகுடியுரிமை பெறுவதற்குத் தேவையான ஒரு காரணியாக சமயம் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டது முதன்முறையாக இச்சட்டத்திருத்தத்தில்தான்.[7][a][b][c]

இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019
இயற்றியது மக்களவை & மாநிலங்களவை
இயற்றப்பட்ட தேதி 9 & 10 டிசம்பர் 2019
சம்மதிக்கப்பட்ட தேதி 12 டிசம்பர் 2019
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவு குடியுரிமை சட்டத் (திருத்த) மசோதா[1]
அறிமுகப்படுத்தியது அமித் சா

மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.[8][9] மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 10 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.[10][11][12]இச்சட்டத்திருத்த மசோதாவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் 12 டிசம்பர் 2019 அன்று ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது.[13][14][15]

பின்னணிதொகு

1955-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது கொண்டு வரப்படும் குடியுரிமைத் திருத்த சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இக்குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முதன்முதலாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில்நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. எனவே தற்போது மீண்டும் இந்த மசோதாவை மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புகள்தொகு

இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்த முன்வடிவம் சமயத்தின் அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்தும் என இந்திய தேசிய காங்கிரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டின. மேலும் இச்சட்டத் திருத்தம்  இந்திய அரசியலமைப்புச் சட்டம், உறுப்பு 14க்கு எதிரானது என்றும், ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் சில விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்திருத்திற்கு எதிராக கிளா்ச்சிகள் எழுந்திருக்கிறது. [21][22]வங்காளதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த வங்காள மொழி பேசும் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதை வடகிழக்கு மாநில மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தங்களது மாநிலத்தில் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதுதான் அவா்களின் அச்சம். அவா்கள் வங்காளிகளை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று பாா்க்காமல் வங்காளிகள் என்று கருதுகிறாா்கள்.

மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்பொதுச்செயலாளரும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான  து. இரவிக்குமார்

 கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரினார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், 'இந்தியக் குடியுரிமை' என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009-இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவு 5-இன் படி பதிவு செய்துகொண்ட புலம்பெயர்ந்த எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன்படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாக இந்தியாவில் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது என்று தெரிவித்தார்.[23]மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இச்சட்டத்திருத்தற்கு எதிராக பேசினார்.[24]

https://ta.m.wikipedia.org/wiki/இந்தியக்_குடியுரிமை_(திருத்தச்)_சட்டம்_2019#:~:text=குடியுரிமை சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்,-பாகிஸ்தான்%2C வங்காளதேசம்%2C ஆப்கானித்தான்&text=தற்போது தொடர்ந்து 5 ஆண்டுகள் இடையீடுயின்றி,இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

What is CAA : சிஏஏ சட்டத்தின் புதிய விதிகள் என்ன? யார் யார் விண்ணப்பிக்கலாம்?

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆறு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தாலே குடியுரிமை வழங்க ஏதுவாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது பாஜக அரசு. குறிப்பாக, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டவர்களுக்கே குடியுரிமை என மசோதா வகுக்கப்பட்டது.

அதிலும், இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும் அவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்கள் என வரையறுக்கப்பட்டது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் இஸ்லாமியர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது.

இதே போன்று, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க இச்சட்டத்தில் இடமில்லை.

2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மக்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது

குடியுரிமை மசோதா: இலங்கை மலையக தமிழர்கள் ஏமாற்றம்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
13 டிசம்பர் 2019
இலங்கை மலையக தமிழர்கள் ஏமாற்றம்

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பு கவலைக்குரிய விடயம் என இலங்கை தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோப்பி, தேயிலை, இறப்பர் போன்ற பயிர் செய்கைகளுக்காக 1844ஆம் ஆண்டு காலப் பகுதியில் அழைத்து வரப்பட்டவர்களே இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள். 

அந்த காலப் பகுதிக்கு முன்னரும் இந்தியாவிலிருந்து பெரும்பாலான தமிழர்கள் இலங்கை நோக்கி வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், கூலித் தொழிலாளர்களாக இந்த காலப் பகுதியிலேயே தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். 

இவ்வாறு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் மலையகப் பகுதிகளில் லயின் குடியிருப்புக்களில் தங்க வைக்கப்பட்டனர்............

https://www.bbc.com/tamil/sri-lanka-50772671.amp

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

March 15, 2024
 
அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் உள்ளனர்.

இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறஉரிமையில்லை என உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

https://www.ilakku.org/அகதி-முகாமில்-பிறந்தோருக/

பிறழ்வான, திசைதிருப்பும் தலையங்கம். 

அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

  • கருத்துக்கள உறவுகள்

@Kapithan BJP இற்கு ஆதரவா? உங்களுடைய அரிப்பிற்கு என்னிடம் இடம் தேடாதீர்கள்…

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத்துவ ஆதரவாளர்கள்….?

இங்கு சிலர் “ அவர் கிறீஸ்தவர் நானும் கிறீஸ்தவன் ஆதாலால் அவரை ஆதரிக்கிறேன் “ எழுதியது போல் வேறு எவரும் தமது சமயத்தை முன்னிறுத்தி எழுதியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

இந்துத்துவ ஆதரவாளர்கள்….?

இங்கு சிலர் “ அவர் கிறீஸ்தவர் நானும் கிறீஸ்தவன் ஆதாலால் அவரை ஆதரிக்கிறேன் “ எழுதியது போல் வேறு எவரும் தமது சமயத்தை முன்னிறுத்தி எழுதியதில்லை.

மாற்றம் செய்தாயிற்று.  👍

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சத்தத்தையே காணோம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

குடியுரிமை மசோதா: இலங்கை மலையக தமிழர்கள் ஏமாற்றம்

இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பு கவலைக்குரிய விடயம் என இலங்கை தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இது தான் விளங்கவில்லை. இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இந்திய குடியுரிமை பெற்று இந்தியா செல்ல விரும்பினார்களா? முஸ்லிம் நாடுகளில் இருந்து துன்புறத்தபட்டு வருகின்றவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்குவதற்கு இவர்கள் ஏன் ஏமாற்றம் அடைகின்றனர், கவலை தெரிவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

தாங்கள் இலங்கையரும் இல்லை இந்தியரும் இல்லை எனும்போது அவர்களுக்கு கவலை வரத்தானே செய்யும்? 

ஆனால் இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவளிக்கும் எங்கள் ஈழத்து + புலம்பெயர்ஸ், இந்தியாவில்  35 வருடங்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் ஈழத்  தமிழ் ஏதிலிகளுக்கு இந்தச் சட்டத்தில் எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படாமை கண்டு மூச்சும் வெளிவிடவில்லை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 ஈழத்து + புலம்பெயர்ஸ்,

அப்ப நீங்கள் ஈழத்து புலம் பெய்ர் தமிழன் இல்லையென்றால்  ஏன் யாழில் வந்து எல்லாவற்றிலும் மூக்கு நுழைக்கிறியள்.... அறியலாமா...பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாதல்லவா.

சரி விடுவம் ..நம்ம சுமா உங்கடை தோஸ்துதானே...இந்த பிரச்சினைக்கு சுமாமூலம் தீர்வுகாண ஏன் முயற்சிக்கக் கூடாது...😄

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

@Kapithan

எம்மவர்கள் இந்தியாவிற்கு ஏதிலிகளாக செல்லும் போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் (இந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி.பி.சிங் - சந்திர சேகர் - பி.வி.நரசிம்மராவ்) .

1998 இல் அடல் பிகாரி வாஜ்பாய் (BJP)

பின்னர் 2004 இல் இருந்து 2014 வரை மன்மோகன் சிங்.

2014 இல் இருந்து இன்றுவரை BJP.

மேலும் இங்கு யாழில் இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு யாருமே ஆதரவளிப்பதாக கூறவில்லை. ஆனால் சிறீலங்காவில் கிறீஸ்தவனாக கிறீஸ்தவனுக்கே ஆதரவு என்றே கூறப்பட்டுள்ளது.

சரி நீங்க இந்த சட்டத்திற்கு எதிராக விட்ட மூச்சு எங்கே? 

பிகு: சிறீலங்காவிற்கு வெளியே நடந்த பிறப்பு / இறப்புகளை அந்தந்த நாடுகளிலுள்ள சிறீலங்க தூதரகங்களூடாக பதிவு செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

சரி விடுவம் ..நம்ம சுமா உங்கடை தோஸ்துதானே...இந்த பிரச்சினைக்கு சுமா மூலம் தீர்வுகாண ஏன் முயற்சிக்கக் கூடாது...😄

🤦🏼‍♂️

21 minutes ago, MEERA said:

மேலும் இங்கு யாழில் இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு யாருமே ஆதரவளிப்பதாக கூறவில்லை. 

ஆனால் சிறீலங்காவில் கிறீஸ்தவனாக கிறீஸ்தவனுக்கே ஆதரவு என்றே கூறப்பட்டுள்ளது.

1) இந்திய ஆதரவாளர்களும் இந்துத்துவ ஆதரவாளர்க வேறு வேறா? இல்லையே? 

2) கிறீஸ்தவன் கிறீஸ்தவனுக்கே ஆதரவு  என்று தாங்கள் கூறுவது தவறு.

கிறீஸ்தவனாக இருக்கின்ற ஒரே  காரணத்தால்  ஓரங்கட்டும்/ எதிர்க்கப்படும் செய்கைக்கே எதிர்ப்பு வெளியிடப்படுகிறது. 

3) இந்தியாவை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்கள்தான். ஆதலினால் இந்துத்துவாவிற்கு ஆதரவளிப்பவர்கள்தான் இந்தியாவின் இந்தத் திட்டமிடப்பட்ட ஈழத்தமிழர் வெறுப்பிற்கு காரணம் என்னவென்று கூற வேண்டும். அத்துடன் இந்துத்துவாவொற்கு ஆதரவளிப்பதற்கு காரணம் கூற வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

1&3 போதுமான விளக்கம் ஏற்றகனவே தரப்பட்டுள்ளது.

2. அவர் கிறீஸ்தவன் நானும் கிறீஸ்தவன் ஆகவே எனது ஆதரவு அவருக்கே என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் இலங்கையரும் இல்லை இந்தியரும் இல்லை எனும்போது அவர்களுக்கு கவலை வரத்தானே செய்யும்?  ]

அப்படியானால் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பில் முஸ்லிம் நாடுகளில் இருந்து துன்பபட்டு வருகின்ற பிற மதத்து மக்களை போன்று  எங்களையும் அந்த மசோதாவில் சேர்த்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம் என இலங்கை இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் கவலை தெரிவித்திருக்க வேண்டும்.
ஆனால் முன்பு இருந்தே அவர்கள் தலைவர்களினாலோ அவர்களினலோ இப்படி ஒரு வேண்டுகோள் வைக்கபட்டது இல்லையே.

அவர்களுக்கு இலங்கை குடியுரிமை உள்ளது . அவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவது அரசு, அவர்கள் தலைவர்கள் செய்ய வேண்டியது அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

1&3 போதுமான விளக்கம் ஏற்றகனவே தரப்பட்டுள்ளது.

2. அவர் கிறீஸ்தவன் நானும் கிறீஸ்தவன் ஆகவே எனது ஆதரவு அவருக்கே என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி வணக்கம்.

1) விளக்கம் கொடுக்கப்படவில்லை. அப்படி விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரம் எங்கே? 

2) அவர் கிறீஸ்தவன் நானும் கிறீஸ்தவன் ஆகவே எனது ஆதரவு அவருக்கே என்று யார்  கூறியது? 

அப்படி கூறப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

3) CAA யில் இலங்கை ஏதிலிகள் புறக்கணிப்பு தொடர்பாக ஒருவரும் மூச் - இதுதான் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர்களுக்கு இலங்கை குடியுரிமை உள்ளது . அவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவது அரசு, அவர்கள் தலைவர்கள் செய்ய வேண்டியது அவசியமானது.

மலையகத் தமிழர் எல்லோருக்கும் குடியுரிமை உள்ளதா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

மலையகத் தமிழர் எல்லோருக்கும் குடியுரிமை உள்ளதா? 

இலங்கையில் எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டு  அவர்கள்  எல்லோருக்கும்  குடியுரிமை கொடுக்கபட்டுவிட்டதாக  2005,  2010 க்கு பின்பு  வந்தவர்கள்  சொன்னார்கள்.  யாழ்கள இலங்கை உறவு குருஸ்சோ மற்றும் சிறி அண்ணா அதை உறுதிபடுத்தினார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர் ஒருவவரின் கேள்விக்கு  அனதாபத்தை பெறுவதற்காக இலங்கை குடியுரிமை இல்லை என்று ஒருவர் பொய் சொன்ன தகவலும் படித்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.