Jump to content

யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DSC_3333-750x375.jpg

யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளில் நடைபெற்றது.
இன்று காலை 9.25 மணி தொடக்கம் முற்பகல் 10.33 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெற்றது.

காலை 6.00 மணி முதல் 7.10 மணிவரை இராஜகோபுர கும்பாபிஷேகமும் காலை 9.25 மணி முதல் 10.33 மணிவரை மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கடந்த 20 ஆம் திகதி காலை கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமானனதுடன் நேற்று மாலை 2.00 மணி வரை அடியார்களுக்கு  எண்ணெய்க்காப்பு சாத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_3348-1-600x400.jpg

https://athavannews.com/2024/1374782

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளாச்சிக்கு அரோகரா.......!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என் கடன் பணி செய்து கிடப்பதே'' - சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மிகவும் தந்திரமான முறையில் வெளியேற்றப்பட்டிருக்கும் வைத்தியர் அர்ச்சுனா.அடுத்து வரும் நியமனக் கடித்தை வாங்குவாரா...விடுவாரா ..........?  வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.......🖐️🖐️
    • 08 JUL, 2024 | 05:57 PM   உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC) 2ஆவது சர்வதேச தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாட்டை கடந்த ஜூன் 28ஆம், 29ஆம் திகதிகளில் சென்னையில் வெற்றிகரமாக நடத்தியது.  தமிழ்மொழியின் தகவல் தொழில்நுட்பத்துறையில் (IT) முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திசைகளை ஆராய்வதற்காக முன்னணி அகாடமியன்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இம்மாநாடு ஒருங்கிணைத்தது. இம்மாநாடு உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவரான J. செல்வகுமாரின் உபசரிப்பு உரையுடன் தொடங்கியது. அவர், தமிழ் கலாசாரத்தை தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒருங்கிணைக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) மற்றும் ஐ.இ.டி-சென்னை செயலாளர் டாக்டர். ஆர். ராஜ்குமார் தொழில்நுட்பத்தின் மாற்றத்தை முன்னிறுத்திய சிறப்புரையை வழங்கினார். மாநாட்டின் முக்கிய விருந்தினர்களாக Dr. G. விஸ்வநாதன், நிறுவனர் VIT பல்கலைக்கழகம், Dr.R. வேல்ராஜ், துணைவேந்தர் - அண்ணா பல்கலைக்கழகம், சஞ்சய் குமார் IPS, ADGP-சைபர் குற்றப்பிரிவு, தமிழ்நாடு, மைக் முரளிதரன் தலைமை இயக்குநர், பஹ்வான் சைபர்டெக், க. சரவணகுமார், கொன்சுல் ஜெனரல் – மலேசியா கொன்சுலேட் ஜெனரல், செர்கி வி. ஆசாரோவ், ரஷ்ய கூட்டாட்சி கோன்சுல் ஜெனரல், டேவிட் எக்ல்ஸ்டன், தென்னிந்திய துணை கொன்சுல் ஜெனரல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிறைவு விழா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர். ஜி.வி. செல்வத்தின் முன்னிலையில் நடைபெற்றது.  இந்த மாபெரும் விழாவில் பல முக்கிய தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் ஆர்வமூட்டும் பேச்சுக்களை வழங்கினர். • தொழில்நுட்பம் மனித குலத்திற்கு – AIயுடன் சவால்கள் மற்றும் நன்மைகள் : இந்த அமர்வு, களத்திலும் சமூகத்திலும் உள்ள செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை ஆராய்ந்தது. • LLM மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்பாடு : கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மெஷின் லெர்னிங் மொடல்களின் எதிர்காலம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். • இன்றைய தலைமுறையின் தொழில்நுட்ப துறையில் பெண்கள் முன்னணி : தொழில்நுட்பத்துறையில் பெண்களின் முக்கிய பங்களிப்புகளை சுட்டிக்காட்டியது. • சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்கும் முறை மற்றும் பாதுகாப்பு : VJ விக்னேஷ்காந்த் மற்றும் ஸ்ரீ ராம் ஆகியோர் பங்கேற்று, சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதின் நன்மைகள் மற்றும் ஆபத்துகளை ஆராய்ந்தனர். இந்நிகழ்வு சர்வதேச தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் நவீனம், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கூட்டாக பணியாற்றுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றின்  உறுதியை நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவான உலகத் தமிழ் வர்த்தக சங்கம் வலியுறுத்தியது. https://www.virakesari.lk/article/187979
    • 🫣.......... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் ஆதவனை சரியாக 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி நேரடியாகத் தாக்குவதற்கு 50 வீதம் சாத்தியம் இருக்கின்றது............... இந்த விண்கல் பற்றிய நாசாவின் குறிப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது. 2068இல், அது கூடமிகக் குறைந்த சாத்தியமே, பூமிக்கு அருகே வருவதால் ஒரு தாக்கம் இருக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.  அந்த விண்கல்லை ஈலான் மஸ்க்கே தனியாளாக சமாளித்து விடுவார்........ ஆனால் இந்த ஆதவனை எவராலும் சமாளிக்க முடியவே முடியாது............🤣. https://science.nasa.gov/solar-system/asteroids/apophis/    
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இதுவரை நடந்தது என்ன?- 8 முக்கியத் தகவல்கள் பட மூலாதாரம்,X- NAAMTAMILARORG/UDHAYSTALIN படக்குறிப்பு,பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 4 மணி நேரங்களுக்கு முன்னர் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 10) நடைபெற உள்ளது. இதற்காகத் தீவிரமாக நடைபெற்று வரும் பிரசாரம் இன்று (ஜூலை 😎 மாலையுடன் முடிகிறது. அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு, அக்கட்சியின் வாக்குகளைப் பெறப் பா.ம.க - நாம் தமிழர் கட்சி இடையே நிலவும் போட்டி, தேர்தல் சமயத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகப் பிரசாரம் செய்யாதது, அ.தி.மு.க இல்லாமல் மும்முனைப் போட்டி என பல விஷயங்கள் நடந்துள்ளன. எத்தனை வாக்காளர்கள்? கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின் படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007-ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறு சீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இரண்டு எம்.எல்.ஏ-க்களை இழந்த விக்கிரவாண்டி கடந்த 2011 தேர்தலே இத்தொகுதிக்கு முதல் தேர்தலாகும். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி (51.71% வாக்குகள்) அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க-வின் ராதாமணியை (41.93% வாக்குகள்) 14,897 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராதாமணி 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வம், தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை விட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதன் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டார். இம்முறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வனை விட 9,573 வாக்குகள் அதிகம் பெற்று திமுகவைச் சேர்ந்த புகழேந்தி வெற்றி பெற்றார்.   பட மூலாதாரம்,UDHAYSTALIN இடைத்தேர்தல் ஏன் நடைபெறுகிறது? விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் வேட்பாளர்கள் யார்? பட மூலாதாரம்,X/NAAMTAMILARORG இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியும் ஓமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியுள்ளது. அ.தி.மு.க இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது ஏன்? தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு, [...] மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்தார். இந்த தேர்தல் தி.மு.க-வுக்கு ஏன் முக்கியம்? தி.மு.க-பா.ம.க-நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது விக்கிரவாண்டி தேர்தல் களம். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வி.சி.கவின் வேட்பாளர் து. ரவிக்குமார் அதிகபட்சமாக 72,188 வாக்குகளைப் பெற்றார். இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளைப் பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. 32,198 வாக்குகளைப் பெற்றது. அதிமுக வாக்குகளை பாமகவால் ஈர்க்க முடிந்தால் அது நிச்சயம் திமுகவுக்கு சவாலாக மாறும். ஆளும் தி.மு.க அரசின் நலத்திடங்களுக்கு மக்கள் என்ன மதிப்பெண் வழக்குவார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வலுவான அஸ்திரமாக எதிர்க்கட்சிகளுக்கு மாறியுள்ளது. "கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும். ஆனால் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் அமையாது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS அ.தி.மு.க வாக்குகள் யாருக்கு? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வாக்குகளை ஈர்க்க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான திமுக கூட முயற்சிகளை மேற்கொண்டது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க-வில் இருக்கும் அன்பு உறவுகளே, நம் பொது எதிரி தி.மு.க தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்," என்று பேசினார். விக்கிரவாண்டியில் நடந்த பா.ம.க-வின் தேர்தல் பிரசார கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மோதியுடன் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றிருந்ததும் சர்சையைக் கிளப்பியது. அதேபோல விக்கிரவாண்டியின் சாணிமேடு கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார். விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "அ.தி.மு.க-வின் நிறுவனரான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவில் பொருளாளராக பதவி வகித்தவர். திமுக சார்பாக நின்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாங்கள் பாமக போல சாதியவாத, மதவாத கட்சி அல்ல. எனவே திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றும் அ.தி.மு.க தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகள் எங்களுக்குத் தான் கிடைக்கும்," எனக் கூறினார். இவ்வாறு தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று முதன்மை கட்சிகளும் அ.தி.மு.க-வின் வாக்குகளைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளன. பட மூலாதாரம்,EDAPPADI PALANISWAMI/FACEBOOK பிரசாரத்தில் பங்கேற்காத பிரதான கட்சி தலைவர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாததால் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்யவில்லை. அதேபோல தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் நேரடியாக எவ்வித பிரசாரமும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வீடியோ வெளியிட்டு மட்டுமே ஆதரவு திரட்டினார். தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரு திராவிட கட்சிகளின் தலைவர்களுமே நேரடியாக பிரசாரம் செய்யாத தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/cx7261047e9o
    • அரச ஊழியர்களின் வேதனத்தை உயர்த்தினால் வரி அதிகரிக்கும்! தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் வேதன உயர்வை வழங்கினால், தற்போதுள்ள வற் வரியை உயர்த்த நேரிடும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். தற்போதுள்ள 18% வற் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும், பொதுமக்களை நசுக்கி அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305527
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.