Jump to content

ஒரு ஈழ அகதியின் பெயரால்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முடி திருத்தகம் ஒன்றில்
இன்று நான்
அவளைச் சந்தித்தேன்
 
அவள் அமெரிக்க நாட்டின்
ஆப்கான் அகதி
 
பல்கலை ஒன்றில்
பட்டம் பயிலும் அவள்
பகுதி நேரம்
அங்கே பணி புரிகிறாளாம்
 
இப் புனித மாதத்தில்
தன் ஊரில் இல்லாமை பற்றி
அதிவருத்தம் கொண்டாள்
 
முன்னொரு நாளின்
ரமலான் நோன்பில்
தன் சுற்றம் கூடி உண்டது பற்றி
அதிகம் அளவளாவினாள்
 
அரை மணி நேரம் தான்
முடி வெட்டி மீள்கையில்
கூலிக்கும் மேல் ஒரு
சிறு தொகை கொடுத்தேன்
 
ஆம்…
ஒரு ஈழ அகதியின் பெயரால்
அவளின்
இன்றைய நோன்பு துறக்கப்படட்டும்
 
May be an image of eclipse
 
 
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, theeya said:
முடி திருத்தகம் ஒன்றில்
இன்று நான்
அவளைச் சந்தித்தேன்
 
அவள் அமெரிக்க நாட்டின்
ஆப்கான் அகதி
 
பல்கலை ஒன்றில்
பட்டம் பயிலும் அவள்
பகுதி நேரம்
அங்கே பணி புரிகிறாளாம்
 
இப் புனித மாதத்தில்
தன் ஊரில் இல்லாமை பற்றி
அதிவருத்தம் கொண்டாள்
 
முன்னொரு நாளின்
ரமலான் நோன்பில்
தன் சுற்றம் கூடி உண்டது பற்றி
அதிகம் அளவளாவினாள்
 
அரை மணி நேரம் தான்
முடி வெட்டி மீள்கையில்
கூலிக்கும் மேல் ஒரு
சிறு தொகை கொடுத்தேன்
 
ஆம்…
ஒரு ஈழ அகதியின் பெயரால்
அவளின்
இன்றைய நோன்பு துறக்கப்படட்டும்
 
May be an image of eclipse
 
 

உங்களின் இந்தக் கவிதையும், நீங்கள் பதிந்துள்ள மற்ற கவிதையும் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கின்றது. இரண்டுமே அருமையானவை.......👍👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரசோதரன் said:

உங்களின் இந்தக் கவிதையும், நீங்கள் பதிந்துள்ள மற்ற கவிதையும் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கின்றது. இரண்டுமே அருமையானவை.......👍👍

மகிழ்ச்சி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அகதிக்கு இன்னொரு அகதியின் தகை சார்ந்த  அன்பு இக் கவிதையில் பரிமளிக்கிறது ........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

அகதி கவிதைக்கு நன்றி. 2009 ல் எமது மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் போது வேறு நாட்டில் அகதிகளாக வந்தவர்களும் பங்கெடுத்ததை பார்க்க கூடியதாக இருந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

அகதி கவிதைக்கு நன்றி. 2009 ல் எமது மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் போது வேறு நாட்டில் அகதிகளாக வந்தவர்களும் பங்கெடுத்ததை பார்க்க கூடியதாக இருந்தது.

 

2009 இல் தொடர்ந்து 250 நாட்கள் வரை அமெரிக்க வெள்ளைமாளிகை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் செய்தோம்.

இதில் சில கனடிய உறவுகள் இங்கு தங்கியிருந்து தொடர் கவனயீர்ப்பில் கலந்து கொண்டார்கள்.

இத்தனை நாட்களாக தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டம் செய்தவர்கள் என்றால் அது தமிழர்களாகவே இருப்பார்கள்.

இந்திய உறவுகளும் பலரும் ஆதரவு வழங்கியிருந்தார்கள்.

கவிதைக்கு பாராட்டுக்கள் தியா.

12 hours ago, theeya said:

ஒரு ஈழ அகதியின் பெயரால்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

ஒரு அகதிக்கு இன்னொரு அகதியின் தகை சார்ந்த  அன்பு இக் கவிதையில் பரிமளிக்கிறது ........!  👍

 

12 hours ago, nunavilan said:

அகதி கவிதைக்கு நன்றி. 2009 ல் எமது மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் போது வேறு நாட்டில் அகதிகளாக வந்தவர்களும் பங்கெடுத்ததை பார்க்க கூடியதாக இருந்தது.

 

9 hours ago, ஈழப்பிரியன் said:

 

2009 இல் தொடர்ந்து 250 நாட்கள் வரை அமெரிக்க வெள்ளைமாளிகை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் செய்தோம்.

இதில் சில கனடிய உறவுகள் இங்கு தங்கியிருந்து தொடர் கவனயீர்ப்பில் கலந்து கொண்டார்கள்.

இத்தனை நாட்களாக தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டம் செய்தவர்கள் என்றால் அது தமிழர்களாகவே இருப்பார்கள்.

இந்திய உறவுகளும் பலரும் ஆதரவு வழங்கியிருந்தார்கள்.

கவிதைக்கு பாராட்டுக்கள் தியா.

 

மிக்க நன்றி - ஆம் பட்டவனுக்குத்தான் நோவு தெரியும் 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.