Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01
 
 
சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார்.
 
அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும்.
 
[1] வாழ்க்கை துன்பமயமானது,
[2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது,
[3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், எனவே உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்கிறார்.
[4] நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நல்தொழில் வகித்தல், நன்முயற்சி, நன்மனக் கவனம், நன்மன ஒருமைப்பாடு ஆகிய, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை அல்லது அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளன என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார்.
 
எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்து போவனவற்றை, எம் அறிவிற்குள் எட்டியவாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனதோடு வரவேற்கிறோம்.
 
உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது நாற்பது பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம்.
 
இலங்கையில் வாழும் பெரும்பாலோரான சிங்கள புத்த மக்கள், குறிப்பாக பாளி மொழியில், 5 / 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தை மற்றும் அதற்கு நூறு அல்லது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளி மொழியில் எழுதப்பட்ட எழுதப்பட்ட தீபவம்சம் மற்றும் இவைகளுக்கு பின் 13 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட சூளவம்சம், முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு இராசாவலிய முதலியவற்றை ஆதாரமாக வைத்து தமது வரலாற்றை கற்கிறார்கள். அது மட்டும் அல்ல, தாம் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அரசியல் பேசுகிறார்கள். இந்த நிலையில், இவை நான்கு புத்தகங்களிலும் மிக முக்கியமாக கருதப் படும் மகாவம்சத்தை எடுத்துக்காட்டாக எடுத்து நுணுகி ஆய்வதே எமது நோக்கம்.
 
முதல் முதல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் முக்கியமான கதாபாத்திரம் தேவநம்பிய தீசன் என்ற கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த ஒரு சிவனை வழிபட்ட அரசனாவான். அவன் காலத்திலேயே, பௌத்த சமயத்தை இலங்கையில் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றது மகிந்தன் அல்லது மகிந்தர் என்ற இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு. அத்துடன் ஒப்பற்ற மன்னர் எல்லாளன் என்று அது கூறுகிறது. ஆனால் அதன் பின் தீபவம்சத்தை ஆதாரமாக எழுதப்பட்ட மகாவம்சத்தில், முக்கிய கதாபாத்திரமாக துட்ட கைமுனு கையாளப்படுகிறது. என்றாலும் எல்லாளனை சிறந்த வகையில் குறிப்பிடுகிறது. இவ்வற்றுக்கு முரணாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட இராசாவலிய எல்லாளன் பொல்லாத ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. எப்படி வரலாறு, புத்த பிக்குகளால் மாற்றி மாற்றி எழுதப் படத்திற்கு இது ஒரு துளி உதாரணமே!
 
 
அன்புடன் உங்கள்,
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
அறிமுகம் 02 தொடரும்
No photo description available. May be an image of outdoors 
 
 
  • Like 4
  • Thanks 2
  • Replies 53
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 02
 
 
புத்தர் நிர்வாணம் அடைந்து ஒன்பது மாதத்தின் பின் காற்றினூடாக பறந்து இலங்கைக்கு வந்ததாகவும், அவரின் முக்கிய நோக்கம் அங்கு வாழும் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட மனிதர்களை [sub human] அகற்றி, இலங்கையை மனிதர்கள் வாழும் இடமாக மாற்றுவது என்கிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள், இலங்கையில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்கிறது. உதாரணமாக, 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையிற் நவீன மனித இனத்தினன்னாக [modern human] பலாங்கொடை மனிதன் இருக்கிறான். அவனுடைய எலும்புக்கூடு 1950 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் அல்ல, 2900 ஆண்டுகள் அளவில், இரும்பு கால பண்பாடு, உதாரணமாக, குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதை R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake] உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயி [‘First Farmers in Global Perspective’] என்ற ஆய்வு குறிப்பில் பதிந்துள்ளார். அவ்வாறே பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] விஜயனுக்கு முன் இலங்கையில் விவசாயம் இருந்ததை உறுதி படுத்துகிறார். மேலும் ஹோமோசேபியன் [Homo sapiens] தென் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு, அவை பிரிக்கப் படும் முன் நடந்தே வந்திருப்பார்கள் என்கிறார். இவை இரண்டு பக்கமும் காணப்பட்ட தொல்பொருள் சான்றுகளில் இருந்து உறுதியாக நிறுவப்பட்டும் உள்ளது. அது மட்டும் அல்ல, R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, தமது ஆய்வு மூலம் சிங்களவர்கள் தென் இந்திய தமிழர் மற்றும் கேரளத்தவர்களுடன் [‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’]. ஒத்து போகிறார்கள் என்கிறார்.
 
மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம், பாடல் 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். எனவே, ராணியையும் மற்றவர்களுக்கு மனைவிமார்களையும் பெற, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதை என இன்று சிங்களவர்களால் கருதப்படும் விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கும், மற்றும் விஜயனுடன் சேர்ந்த சிங்கள இனத்தின் முதல் மூதாதையர்களான அவனது எழுநூறு கூட்டாளிகளும் தமிழ் மதுரை பெண்களையே மணந்து, அவர்களினூடாகவே, அதாவது தமிழ் பெண்களுடாகவே, சிங்கள வம்சத்தை விருத்திசெய்தனர் என கூறிய மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நாம் நன்றி செலுத்த வேண்டும்.
 
உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக கருதப்படும் விஜயன் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, வட இலங்கையை நாகர் மன்னர்கள் ஆட்சி செய்கிறார்கள், குவேனி என்ற இலங்கை பெண் ஒருத்தி நூல் நூற்றுக்கொண்டு அவனை வரவேற்கிறாள். அதாவது, மகாவம்சம் மூலமே, விஜயன் வருவதற்கு முன்பே, சிங்கள இனம் என்ற ஒன்று உலகில் தோன்ற முன்பே, இலங்கை ஒரு மன்னன் ஆட்சி என்ற கட்டமைப்புக்குள் நாகரிகம் அடைந்து விட்டது என்பது உறுதியாகிறது. அப்படி என்றால் அந்த நாகரிகத்தின் சூத்திரக்காரர்கள் யார் என்ற கேள்வி தானாகவே எழுகிறது ?
 
இன்னும் ஒன்றையும் நான் இந்த அறிமுகத்தில் தெளிவு படுத்தவேண்டும். புத்தரின் முதல் இரண்டு இலங்கை வருகையிலும் அவர், தன்னுடைய கருணை, இரக்கம், அன்பு என்ற மனித தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு பயங்கரவாதி போல், இலங்கையின் பூர்வீக குடிகளின் மேல் தாக்கம் செய்ததை காண்கிறோம். அதிலும் முதலாவது வருகையில், பூர்வீக குடிகளை பயமுறுத்தி, அங்கிருந்து திரும்பி வராதபடி அகற்றி, விஜயனும் அவனது கூட்டாளிகளும் இலங்கையில் இலகுவாக குடியேற வழிவகுத்தார் என்கிறது. புத்தர் பிறந்து வளர்ந்த இந்தியாவில் புத்தரின் எந்த வரலாற்றிலும் இப்படியான குறிப்பு இல்லை என்பதுடன், அவரின் மேலான குணநலனும் முரணாக உள்ளது. இப்படியான கதையின் விளைவுகள் தான் இன்று இலங்கையில் தமிழர் படும் பல நெருக்கடிகளுக்கும் காரணமாகும்.
 
ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்புத் தேவைப்படு கின்றன. இதை மனதில் பதித்து, மிக விரைவில் 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' என்ற எனது இந்த தொடர் கட்டுரையை உங்களுடன் பகிரலாம் என்று எண்ணுகிறேன். இது இலங்கை வரலாற்றின் ஆழமான பகுப்பாய்வு அல்ல. அதை கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். எனவே இது அதில் புதைந்துள்ள உண்மைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு கண்ணோட்டம் மட்டுமே ஆகும்.
 
அன்புடன் உங்கள்,
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
அறிமுகம் முற்றுப்பெற்றது , இனி 
 
பகுதி: 01 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available.
 
 
 
 
 
 
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள்🙏.

புத்தரின் நான்கு பேருண்மைகளை நான் மிக இலகுவாக, எளிமையாக:

1. துக்கம் உள்ளது

2. துக்கத்தின் வேர் ஆசை

3. ஆசையை துறந்தால் துக்கத்கில் இருந்து விடுபடலாம்

4. 3ஐ அடுத்த கட்டமாகிய கொல்லாமை, காரூண்யம், அன்பு என்பனவற்றுக்கு நகர்தினால் - பிறவி கடலின் சுழற்சியில் இருந்து விடுபட்டு நிர்வாண நிலையை அடையலாம்.

இந்த புரிதல் சரிதானா?

—————-

எஸ் போவின் மொழிபெயர்ப்பை கையாள்கிறீர்களா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எஸ் போவின் மொழிபெயர்ப்பை கையாள்கிறீர்களா?

இல்லை. 

மற்றது நான் மகாவம்சத்தின் மற்றும் தீபவம்சத்தின் முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்புகளை நேரடியாக வாசித்து, அது எங்கே உண்மை அல்லது பொய் என்பதற்கான சான்றுகளை வரலாற்று பதிவுகள், தொல்பொருள் ஆய்வுகள், பண்டைய இலக்கியங்கள் மற்றும் பயணக் குறிப்புகளில் தேடி எடுத்து அலசுகிறேன். 

இது நான் ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் என் முகநூலிலும் என் வலைத்தளத்திலும் பதிவிட்டவையே. ஆங்கிலத்தில் இறுதியாக பதிவிடத்தால், அது உண்மையில் ஒரு ஒழுங்கில், வரிசையில் உள்ளது 


கீழே அதன் லிங்க் தருகிறேன் . தமிழில் பதிவிட தொடங்கியதால் அதன் லிங்க் தரவில்லை 

நன்றி 

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 01 

https://www.facebook.com/groups/978753388866632/posts/9564108346997717/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 02  

https://www.facebook.com/groups/978753388866632/posts/9600878159987402/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 03  

https://www.facebook.com/groups/978753388866632/posts/9638876056187612/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 04  

https://www.facebook.com/groups/978753388866632/posts/9679551822120035/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 05 

https://www.facebook.com/groups/978753388866632/posts/9719732041435346/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 06 

https://www.facebook.com/groups/978753388866632/posts/9756879647720585/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 07

https://www.facebook.com/groups/978753388866632/posts/9797984360276780/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 08

https://www.facebook.com/groups/978753388866632/posts/9840268999381649/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 09

https://www.facebook.com/groups/978753388866632/posts/9867390243336191/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 10

https://www.facebook.com/groups/978753388866632/posts/9902567736485108/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 11

https://www.facebook.com/groups/978753388866632/posts/9939135942828287/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 12

https://www.facebook.com/groups/978753388866632/posts/9959688194106395/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 13

https://www.facebook.com/groups/978753388866632/posts/10007944625947418/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 14

https://www.facebook.com/groups/978753388866632/posts/10047737095301504/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 15

https://www.facebook.com/groups/978753388866632/posts/23864680959847217/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 16

https://www.facebook.com/groups/978753388866632/posts/23884767157838597/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 17

https://www.facebook.com/groups/978753388866632/posts/23986856534296325/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 18

https://www.facebook.com/groups/978753388866632/posts/24027010520280926/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 19

https://www.facebook.com/groups/978753388866632/posts/24102926682689309/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 20

https://www.facebook.com/groups/978753388866632/posts/24148156724832971/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 21

https://www.facebook.com/groups/978753388866632/posts/24198246736490636/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 22

https://www.facebook.com/groups/978753388866632/posts/24241916592123650/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 23

https://www.facebook.com/groups/978753388866632/posts/24293753150273327/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 24

https://www.facebook.com/groups/978753388866632/posts/24340890602226248/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 25

https://www.facebook.com/groups/978753388866632/posts/24388637950784846/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 26
https://www.facebook.com/groups/978753388866632/posts/24433965519585422/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 27
https://www.facebook.com/groups/978753388866632/posts/24479740805007893/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 28

https://www.facebook.com/groups/978753388866632/posts/24521816720800301/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 29

https://www.facebook.com/groups/978753388866632/posts/24566341346347838/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 30

https://www.facebook.com/groups/978753388866632/posts/24610044775310828/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 31
https://www.facebook.com/groups/978753388866632/posts/24657589823889656/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 32
https://www.facebook.com/groups/978753388866632/posts/24708333482148623/?

  • Like 1
  • நியானி changed the title to 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, kandiah Thillaivinayagalingam said:

எஸ் போவின் மொழிபெயர்ப்பை கையாள்கிறீர்களா?

இல்லை. 

மற்றது நான் மகாவம்சத்தின் மற்றும் தீபவம்சத்தின் முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்புகளை நேரடியாக வாசித்து, அது எங்கே உண்மை அல்லது பொய் என்பதற்கான சான்றுகளை வரலாற்று பதிவுகள், தொல்பொருள் ஆய்வுகள், பண்டைய இலக்கியங்கள் மற்றும் பயணக் குறிப்புகளில் தேடி எடுத்து அலசுகிறேன். 

இது நான் ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் என் முகநூலிலும் என் வலைத்தளத்திலும் பதிவிட்டவையே. ஆங்கிலத்தில் இறுதியாக பதிவிடத்தால், அது உண்மையில் ஒரு ஒழுங்கில், வரிசையில் உள்ளது 


கீழே அதன் லிங்க் தருகிறேன் . தமிழில் பதிவிட தொடங்கியதால் அதன் லிங்க் தரவில்லை 

நன்றி 

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 01 

https://www.facebook.com/groups/978753388866632/posts/9564108346997717/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 02  

https://www.facebook.com/groups/978753388866632/posts/9600878159987402/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 03  

https://www.facebook.com/groups/978753388866632/posts/9638876056187612/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 04  

https://www.facebook.com/groups/978753388866632/posts/9679551822120035/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 05 

https://www.facebook.com/groups/978753388866632/posts/9719732041435346/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 06 

https://www.facebook.com/groups/978753388866632/posts/9756879647720585/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 07

https://www.facebook.com/groups/978753388866632/posts/9797984360276780/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 08

https://www.facebook.com/groups/978753388866632/posts/9840268999381649/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 09

https://www.facebook.com/groups/978753388866632/posts/9867390243336191/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 10

https://www.facebook.com/groups/978753388866632/posts/9902567736485108/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 11

https://www.facebook.com/groups/978753388866632/posts/9939135942828287/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 12

https://www.facebook.com/groups/978753388866632/posts/9959688194106395/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 13

https://www.facebook.com/groups/978753388866632/posts/10007944625947418/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 14

https://www.facebook.com/groups/978753388866632/posts/10047737095301504/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 15

https://www.facebook.com/groups/978753388866632/posts/23864680959847217/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 16

https://www.facebook.com/groups/978753388866632/posts/23884767157838597/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 17

https://www.facebook.com/groups/978753388866632/posts/23986856534296325/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 18

https://www.facebook.com/groups/978753388866632/posts/24027010520280926/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 19

https://www.facebook.com/groups/978753388866632/posts/24102926682689309/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 20

https://www.facebook.com/groups/978753388866632/posts/24148156724832971/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 21

https://www.facebook.com/groups/978753388866632/posts/24198246736490636/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 22

https://www.facebook.com/groups/978753388866632/posts/24241916592123650/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 23

https://www.facebook.com/groups/978753388866632/posts/24293753150273327/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 24

https://www.facebook.com/groups/978753388866632/posts/24340890602226248/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 25

https://www.facebook.com/groups/978753388866632/posts/24388637950784846/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 26
https://www.facebook.com/groups/978753388866632/posts/24433965519585422/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 27
https://www.facebook.com/groups/978753388866632/posts/24479740805007893/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 28

https://www.facebook.com/groups/978753388866632/posts/24521816720800301/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 29

https://www.facebook.com/groups/978753388866632/posts/24566341346347838/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 30

https://www.facebook.com/groups/978753388866632/posts/24610044775310828/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 31
https://www.facebook.com/groups/978753388866632/posts/24657589823889656/?

["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 32
https://www.facebook.com/groups/978753388866632/posts/24708333482148623/?

பதிலுக்கு நன்றி. தொடரவும் ஆவலாக இருக்கிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எம்மீது மட்டுமல்ல சிங்களவர் மீதும் திணிக்கப்பட்ட ஒன்றாகும். தொடருங்கள். கவனமாக இருங்கள். நன்றி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 01
 
 
 
இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை.
 
அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவ்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists from different tribes / ethnic groups into one race] இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை.
 
இந்த கால பகுதியில் இந்தியாவில் புத்த மதத்தின் செல்வாக்கு சரிந்து வருவதையும் வட இந்தியாவில் வைதீக மதமும், தென் இந்தியாவில் சிவனை முழு முதற் கடவுளாக வழிபாடும் சைவ மதமும் மீண்டும் வலுப்பெற்று வருவதையும் கேள்விப் பட்ட புத்த மத துறவிகள், புத்த மதத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, அதற்கு காவலனாக சிங்கள இனத்தை உருவாக்கினார்கள் என்பதே உண்மை. எனவே விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளாக தோணியில் நாடு கடத்தப் பட்டு, இலங்கையில் கரை ஒதுங்கிய மொத்தம் 701 பேரின் ஆரிய ரத்தமும் மற்றும் அவர்கள் அனைவரினதும் தமிழ் மனைவிமாரினதும், அவர்களுடன் அவர்களுக்கு பணி புரிய வந்த தமிழ் கூட்டாளிகள், வேலையாட்களினதும், மற்றும் அவர்கள் வரும் பொழுது ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஆதி குடிகளின் [நாகர், இயக்கர்] இரத்தமும் சேர்ந்து, சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக பின் உருவாக்கப்பட்டது என்பது மிக மிக தெளிவு.
 
நாகர்கள் தமிழ் பேசிய சாதியார் அல்லது தொல் திராவிடர் என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது ஆரியர்கள், திராவிடர்கள் [தமிழர்கள்], என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உருவாகினார்கள். என்றாலும் சிங்கள இனமாக உருவாக்கப்பட்ட, புத்த மதத்தை பின்பற்றுபவர்களை தவிர, அங்கு இன்னும் சிவனை வழிபடுபவர்களும், வைதீகத்தை பின்பற்று பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் புது மொழியான சிங்களத்தை ஏற்காது, தமது பண்டைய மொழியையே, அநேகமாக தமிழையே பேசினார்கள். இலங்கையில் தமிழர் என்ற வார்த்தையை குறிக்கும் கல்வெட்டுகள், பிராகிருதம் அல்லது பாளி மொழியில், கி மு 6ம் அல்லது கி மு 5ம் நூற்றாண்டில் இருந்து 'Damela, Dameda, Dhamila and Damila' என பல அடையாளம் இன்று காணப் பட்டுள்ளது [Epigraphic evidence of an ethnicity termed as such is found in ancient Sri Lanka where a number of inscriptions have come to light datable from the 6th to the 5th century BCE mentioning Damela or Dameda persons] அதாவது சிங்களம் என்ற ஒரு இனம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளிற்கு முன் தமிழர் என்ற வார்த்தை இலங்கை கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனவே மூத்த சிவாவும் அவன் குடி மக்களும் பேசிய மொழி கட்டாயம் சிங்களம் அல்ல. அது தமிழாகவோ அல்லது ஒரு தமிழ் கலந்த மொழியாகவோ இருக்கலாம் என்பது தெளிவு, அது மட்டும் அல்ல அவன் பெயரிலேயே தமிழ் சொல் 'மூத்த' ['elder'] இருப்பது கவனிக்கத் தக்கது.
 
எட்டாம் அத்தியாயம், பண்டு வாச தேவன் பட்டாபிஷேகத்தில், சிங்கபுரத்தில் [Sihapura or sinhapura] சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் இளையகுமாரன் பண்டு வாச தேவன், வியனுக்கு பின் ஒரு ஆண்டு கழித்து ஆட்சி பொறுப்பை ஏற்றான் என்கிறது மகாவம்சம். எனவே பண்டு வாச தேவனின் தாய் ஒரு தமிழிச்சி என தெரியவருகிறது. அவனின் மகள் வழிப் பேரனான, பண்டுகாபயனின் [பண்டு அபயனின்] மகன் மூத்தசிவா [Mutasiva meaning: Elder siva] ஆகும். மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள். மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜய சிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் 'பண்டு' என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டு வாசதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படு கின்றன.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 02 தொடரும்
 
[ Picture 01:தேவநம்ரியதீசன் மகிந்த தேரர் உள்ளிட்ட குளுவினரை மரியாதையுடன் வரவேற்றல், Picture 02: குவேனி, Picture 03: விஜயன் பாண்டிய இளவரசியை மணத்தல்]
293651482_10221330250668539_5449071793536624166_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=A63EHq9L5qYAb7DH2pp&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCemRWB0Tpjdk_QDUTcTMBpqpfsVngePDK4yBwcPksVLg&oe=662B17D4 293704052_10221330250988547_6291047645219355217_n.jpg?stp=dst-jpg_p370x247&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=26ciG1KX2ukAb5CC5qc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCd6x7H2a-tvx45s5-4HT612Bzb1zPv46jUZLCp10rdvg&oe=662B299A 293605410_10221330251308555_2583211356157065492_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vXKbeYWb9T4Ab75iD9C&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBotlztauKt4rK37SAQ_zkArFTfr5h-RBVpPxRR5NxsHg&oe=662B2595
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 02
 
 
 
கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில் இந்திய உப கண்டத்துடன் இணைந்து இருந்தது. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கி மு 5000, அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் கடைசியாக ஒரே பகுதியாக இருந்துள்ளது. எனவே இலங்கையின் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி ஆராய்வது இயலாத விடயம் ஆகும். இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்ததனால், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட இரு நாடுகளிலும் ஒரே விதமாக இருந்ததாகவும் கருதப் படுகிறது.
 
தென்னிந்தியா பூர்வீக கலாசாரம் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவி இருந்தது. புராதான வரலாற்றுக்களிலும் கிராமிய கதைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டு காலமாக உறவுகள் இருந்து வந்தமை தெரிவிக்கப் பட்டுள்ளது. புராதான இலங்கையில் இராவணனும் இராட்சதர்களும் வசித்த வரலாறும் இயக்கர்கள், நாகர்கள் சீவித்த சரித்திரங்களும் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தின் வழித்தோன்றல்கள் என்பதை நிரூபிக்கின்றன. எனவே, இரு பகுதியிலும் 7000 ஆண்டுகளுக்கு முன் ஒரேவித இனக்குழு மக்களே வாழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை.
 
தமிழ் நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற தென்பகுதியிலிருந்து ஆதி இரும்புக்காலப் பண்பாடு இலங்கையின் வடமேற்குக் கரையில் இருந்த பொம்பரிப்புப் பகுதிக்குப் பரவி அதன் பின்னர் அப் பண்பாடு அநுராதபுரம் போன்ற உள்நாட்டுப் பகுதிக்குப் பரவியது எனலாம். உதாரணமாக பொம்பரிப்புப் பகுதி இரும்புப் பண்பாடு அநுராதபுரத்திற்கு காலத்தால் முந்தியது என இலங்கை தொல்லியலாளர் செனவிரத்ன போன்றவர்கள் கருதுவது இதனை உறுதி செய்கிறது. தீபவம்சம் இரண்டாம் பாடத்தில், [Dīpavaṁsa II. The Conquering of the Nāgas] இருபதாவது பாடலில், இரண்டாவது முறையாக மீண்டும் புத்தர் இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வந்தார் என்கிறது [The highest of men went to the place where the Nāgas fought their battle; the merciful Teacher (there) stood in the middle of both noble Nāgas], இதுவும், விஜயன் வந்தேறு குடியாக இலங்கைக்கு வருமுன், கி மு 5 ஆம் / 6ஆம் நூறாண்டில் இலங்கையில் நாகர் வாழ்ந்ததையும், அவர்களுக்கு என ஒன்றுக்கு மேற்பட்ட அரசு இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது.
 
பொதுவாக நாக நாடு என்பதை நாகப்பட்டினமும் அதை சுற்றியுள்ள பகுதியாகவும், இலங்கை தீவின் வடக்கு முனையாகவும் வகைப்படுத்தப் படுகிறது [nagapattinam and the surrounding areas and also the northern tip of island]. நாகர்கள் கி மு 3ஆம் நூறாண்டில் தமிழ் பண்பாட்டுடனும் மொழியுடனும் ஓரினமானார்கள் என க. இந்திரபாலா கூறுகிறார் [Scholars like K. Indrapala]. பல அறிஞர்களின் கருத்தின் படி இவர்கள் திராவிட இனத்தவர்கள் ஆவார்கள். உதாரணமாக பல சங்க கால புலவர்களை நாக இனத்தவர்களில் காணலாம், உதாரணமாக முரஞ்சியூர் முடிநாகராயரை கூறலாம்.
 
பண்டைய தமிழ் காவியமான சிலப்பதிகாரமும் மணி மேகலையும் கூட யாழ் குடா நாட்டை நாக நாடு என குறிப்பிடுகிறது. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், எடுத்துக் காட்டாக நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன.
 
மேலும் கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சு மொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் இலங்கையில் கண்டு பிடிக்கப் பட்ட பிராமிச் சாசனங்கள் [Tamil inscription] அமைகின்றன என பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இலங்கை திசமகாராமையில் கண்டு பிடிக்கப்பட்ட, 'திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம்' என கூறப்படும், கறுப்பு, சிவப்பு மட்பாண்ட தட்டையான தட்டங்களை சொல்லலாம். இதில் தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது சுமார் கி.மு 200 ஆண்டு காலத்திற்கு உரியது என அகழ்வினை மேற்கொண்ட ஜேர்மன் அறிவியலாளர் [German scholars] குறிப்பிடுகின்றார். அதே போல பூநகரி, யாழ்ப்பாணத்திலும் [Poonagari, Jaffna,] கி மு 2ஆம் நூறாண்டு தமிழ் கல்வெட்டு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த. இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க புலவர், ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் கிருஸ்துக்கு முன், தமிழ் மொழி பேசப்பட்டது மட்டும் அல்ல, இலக்கிய மொழியாக அன்றே வளர்ச்சி அடைந்து இருந்ததையும் இது எடுத்து காட்டுகிறது. அவரின் ஒரு பாடலை எடுத்து காட்டாக அடுத்த பகுதியில் விளக்கத்துடன் தருகிறேன், இது தமிழின் சொல்வளம் எவ்வளவுக்கு அன்று வளர்ச்சி அடைந்து இருந்தது என்பதை உறுதிப் படுத்தும் என்று நம்புகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 03 தொடரும்
294729073_10221359852848575_4835686208635735143_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=NkIUookpI3UAb4uwbnV&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCkmoXf8TssYvkeGXjihCvCQx_V9CjZ-6DORDMJLOpOAw&oe=662B1455 No photo description available. No photo description available. No photo description available. 
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 03
 
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க புலவர், ஈழத்துப் பூதன் தேவனாரின் நற்றிணை 366 ஆம் பாடலை ஒரு உதாரணமாக கீழே தருகிறேன்.
 
"அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து இழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும்
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!"
[நற்றிணை 366]
 
அவள் தன் அல்குல் பகுதியில் திருந்திய மணி கோத்த ஆடை அணிந்திருப்பாள். அது பாம்பு உரித்த தோல் போல் மென்மையான ஆடை. அதன் ஊடே அவள் அல்குல் கண் இமைப்பது போல் அவ்வப்போது தெரியும். அவள் அகன்ற மார்பகத் தோள் கொண்ட சின்னப் பெண் (குறுமகள்). தூசு இல்லாமல் நூய்மையாகக் கழுவி, கருநீல மணி போல் அழகொழுகத் தோன்றும் கூந்தலை உடையவள். குளிர் காலத்தில் பூக்கும் குறுகிய காம்பை உடைய முல்லை மலரை அந்தக் கூந்தலில் சூடிக்கொண்டிருப்பாள். அதில் வண்டுகள் மொய்க்கும். அந்தக் கூந்தல் மெத்தையில் உறங்குவதை விட்டுவிட்டு, வாடைக் காலத்திலும் பொருள் தேடிக்கொண்டிருப்போர் உண்மையில் மடவர் (மடையர்) என்கிறது அந்தப் பாடல். பேசுவதற்கு முதலில் சைகை தோன்றி, பின் குரல் மூலம் ஒலி எழுப்பி, பின் அது மற்றவர்களால் கேட்டு உணரக் கூடிய, அடையாளப் படுத்த கூடிய, குரல் அல்லது ஒலி மொழியாக மாறி, அதற்கு, ஒரு முதல் கட்டமைப்பாக எழுத்து தோன்றி, பின் அதற்கு ஒரு கட்டுப்பாடாக இலக்கணம் வரையறுத்து, அதன் பின் தான் இலக்கியம் மலர்கிறது.
 
சிங்களம் என்ற இனம், மற்றும் சிங்கள மொழி தோன்ற முன், இந்த ஈழத்து புலவர் எப்படி அழகாக, ஆழமாக, கவர்ச்சியாக ஆனால் மறை முகமாக தன் மனக்கிளர்ச்சியை உங்களுடன் பகிர்கிறார் என்று பாருங்கள் !!
 
தீபவம்சம், பாடம் 19 இல் [Dīpavaṁsa [The Chronicle of the Island] XIX.], 17 ஆவது பாடல், இந்த அரசனை கொன்று, தட்டிகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கடைசி ஐந்து ஆட்சிகள் தமிழரினதாக [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன்] மொத்தம் 14 ஆண்டுகள் 7 மாதம், கிமு 103 ஆண்டில் இருந்து ஆட்சி செய்தனர் என்கிறது [Having killed this king, a person Dāṭhiya by name reigned two years. These five sovereigns belonging to the Damila tribe governed fourteen years and seven months in the interval between the two parts of Vaṭṭagāmani’s reign] இலங்கை வரலாற்றில் பதிவான முதலாவது தமிழ் ஆட்சி. 22 வருடங்கள் நிலவியது எனவும், சேனன் குத்திகன் (கி.மு 237-கி.மு 215) என்ற இரு தமிழர் ஆட்சி செய்தனர் எனவும் அது மேலும் கூறுகிறது. இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும், தமிழர் என்ற சொற்பதம் பல இடங்களில் மொழியையும் இனத்தையும் குறிக்க இங்கு பிரயோகிக்கப் பட்டுள்ளது, ஆனால் முதலில் கி பி 4 ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட பாளி நூல் தீபவம்சதில் ஒரே ஒரு முறை தான் சிஹல [‘Sihala' / lion in Pali] என்ற சொல் பாவிக்கப் பட்டுள்ளது. அதுவும் சிங்கத்திற்குப் பிறகு, தீவு சிஹல என் அறியப்படும் என்று மாத்திரமே குறிக்கப் பட்டுள்ளது [“The island of Laṅkā was called Sīhala after the Lion (sīha); listen ye to the narration of the origin of the island which I am going to tell.” Dipavamsa IX, Vijaya’s Story].
 
" குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே" என்றும்;
"கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே " என்றும்;
"குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே" என்றும்; ...
 
திருஞான சம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாடியுள்ளார். எனவே பாடும் அளவிற்கு பெருமை அடைவதாயின், இந்த சிவ ஆலயம் கட்டாயம் இதற்கு முன்னதாகவே, மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்திருக்கும். மகாவம்சம் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில் [40,41], மன்னர் மணிஹிரா - விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார் என்றும் அவை: கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது.
 
இங்கு கொடுக்கப்பட்ட துணை - விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககைத் தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது 'சிவலிங்கம் மற்றும் அது போல்' என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது.
 
எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira - vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, and a third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna - vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth ']
 
ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம்.
 
அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது.
 
இதை இன்றும் கண்கூடாக சில சந்தர்ப்பங்களில் ஓரளவு காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக குறுந்தூர் மலை நிகழ்வைக் கூறலாம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 04 தொடரும்
295873491_10221382838383199_2010285953031491479_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=tvVCfVEdkg0Ab5ONDps&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDLn0bx29R9WOmVlzXabaXUFnFwx-IYdDORj9x2zhd8Pw&oe=662C6A14 No photo description available. 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 04
 
 
ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before].
 
அது மட்டும் அல்ல, மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது.
 
எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வ தென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கைத் தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்பு தான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாகத் தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,].
 
இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது தென் இந்தியா தமிழருக்கும், இலங்கை மக்களுக்கும் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் நேரடி தொடர்பு நன்றாக இருந்து உள்ளது என்பதும், மற்றும் வட இந்தியாவுடன் பெரிதாக நேரடி தொடர்பு இல்லை என்பதும் ஆகும். அப்படி இருந்து இருந்தால், கட்டாயம் விஜயன் தனது நாட்டில் இருந்து தான் மணம் முடிப்பதற்கான பெண்களை எடுத்து இருப்பான்?
 
பிராமண குருக்கள் இலங்கையில் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் இருந்தது என்பது உண்மையே, உதாரணமாக, ஒரு வரலாற்று கதையில், ரிஷிகள் என்று அழைக்கப்பட்ட, இரு கல்விமான்கள் வட இந்தியாவில் இருந்து, தென் திசை நோக்கி புறப்பட்டு இலங்கையை வந்து அடைந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அகஸ்தியர் [அகத்தியர்], புலஸ்தியர் ஆகும். புலஸ்தியர் அகத்தியரின் மாணவராகும். இதில் அகத்தியரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என்றும் கருதப்படுகிறது. முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவை எல்லாம் புராணத்திலும் இதிகாசத்திலும் மட்டுமே கூறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
 
இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்லவேண்டும், முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரிசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேணியும் [குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது. மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்த முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.
 
மேலும் துரத்தப் பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப் பட்டதாகவும் அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்கிறது. இதேபோல, முறையற்ற சகோதரர்களுக்கு இடையான திருமணம் மூலம் தான் விஜயன் பிறந்ததும் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வியாஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ?
 
விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளம் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது தனக்கு பிறந்த பிள்ளை ஒன்றை கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது?
 
[Picture 04: மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 05 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available.
 
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறக்காமல் சிங்களத்திலும் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சியுங்கள். அது, காலத்தின் கட்டாயம். வரலாறு என்றும்  உங்களை நினைவு கூரும்.... நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விஜயன் கடத்தப்பட்ட கதை ஒரிசாவில் / வங்கத்தில்  இல்லை.

அனால், எதோ ஒரு குடிவரவும்,  கலப்பும், வந்தவர்கள், இருந்தவர்களை மடக்கி மேலாண்மை செய்ததும்  நடந்து இருக்கிறது. 

ஏனெனில், தமிழரில், வங்க சாயல் மரபணு 28% ஐ சராசரியாக தொடுகிறது.

குவேனி, மனிதர், ஏனெனில், நூல்நூற்றுக் கொண்டு இருந்தது, ஒரு நவீன  மனித நவீன திறமை  (நூல் நூற்பது இப்பொது கூட எல்லோராலும் செய்ய முடியாது, வேண்டு என்றால் செய்து பாருங்கள், எவராகிலும், சிக்கிவிடும்).

நூல் நூற்பது என்றால் - ஒன்றில், நூல் இழையோடும் (இது கடினம்) திறமை இருக்க வேண்டும் (அல்லது இறக்குமதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்), அதே போல நூல் உற்பத்தி, அல்லது இறக்குமதி.

(சீன பட்டு நூல் உற்பத்தி திருடப்பது கிட்டத்தட்ட கி.பி 5-6ம் நூற்றாண்டில் - சொல்வதன் காரணம் குவேனி கால நாகரிகத்தின் நிலையை காட்டுவதற்கு.)  

எப்படி பார்த்தாலும், அந்த நேரத்தில் இருந்தது மிகவும் நவீன மனித நவீனமான நாகரிகம்.    

(எந்த சாதியாக இருந்தாலும், கீழே விளக்கம் இருக்கிறது. சாதி நான் அறிந்ததை சொல்வதற்கு)

(ஆனால், ஒரு கேள்வி இருக்கிறது, குவேனியின் கதை, அப்படி உண்மையில் நடந்ததா என்றும்). 

மகாவம்சம், பௌத்தத்தை ஆதரிக்காதோரை அப்படியே இருட்டடிப்பு செய்து விட்டது.

அந்த இருட்டடிப்பில் ஒன்று தான் குவேனியை, நவீனம் அடையாத (மனிதர் அல்லாத) பெண்ணாக காட்டுவது.  குவேனிக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதையும் (மிக நவீனமான இப்பொது நடப்பதை வைத்து பார்த்தால் கூட, குவேனியும், பிள்ளைகளும் 'நீக்கப்பட்டு' இருக்க வேண்டும், அதாவது கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும்.)  

குவேனி, உண்மையில் பெயர் குவேனியா என்பதும் கேள்வி. ஏனெனில், வேனி தமிழ் பெயர், மகாவம்சம் அந்த பெயரை சூட்டியதா (குவேனிக்கு, குவேனி) என்று.

அனால், குவேனி, எனது முதியவர்கள் சொல்லி சிறு வயதில் நான் கேட்டது, குவேனியும் (அப்போது இருந்தவர்களும்), செங்குந்தர் (கைக்கோளர்) சாதி என்று.  

அவர்களின் காரணம், இவர்கள் மட்டும் தான், தமிழரில், (முருகனின் ஆணையால்) நூல் செய்து, நூற்று, நெசவு செய்தவர்கள். மற்ற சாதிகள் அவ்வப்போது (பின்பு) நெசவில் மட்டுமே ஈடுபட்டன.
 
(இது கதை என்றாலும், உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகள், கதிர்காமகத்துக்கும் , இவர்களுக்கும் உள்ள தொடர்பு வேடர் முருக வழிபாட்டுக்கு வந்தது).

,இன்னோமொன்றையும் சொல்கிறேன், சிறுவயதில் (படிக்காத) முதியவர்கள் சொல்லி கேட்டது, வெள்ளாளர் என்ற சாதியின் தோற்றம் வெளியில் இருந்து என்று (அந்த நேரத்தில் அது  ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை எனக்கு).

அனால்,  பின் (துறை சார்) சிறீனிவாச ஐயங்காரும் சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்த போது அதிர்ச்சி அடைந்தேன் - இவர்களுக்கு எப்படி தெரியும் என்று (எனது முதியவர்களுக்கு, அறியும் போது சொல்லிய எல்லோரும் இறைவனடி சேர்த்து விட்டார்கள் ).  (ஐயங்கார் சொல்லியது உண்மை என்றால்).

ஐயங்கார் சொல்லியது, வெள்ளாளர் என்ற சாதியின் தோற்றம் திராவிட வருகையின் கடைசி அலையில் இருந்து, மற்ற சாதிகள் ஏற்கனவே இருந்தன என்று. 

எங்கு வந்த (கடைசி) அலை என்பதை சொல்லவில்லை. அனால், வந்ததில் இருந்து அவ்வளவு மாறவில்லை என்று, எனவே ஐயங்கார் நேரத்தில் ஆய்வு செய்த இடங்களுக்குவந்த கடைசி அலை என்றே எடுக்க வேண்டும். 

இதை Anthropometry ஐயும் அடிப்படையாக வைத்து தான் ஐயங்கார் சொல்லி இருந்தார்.

(ஆனால், இப்பொது வரும் DNA ஆய்வுகள், ஐயங்கார் அவ்வளவு வில்லத்தவில்லை என்பதை சுட்டுகின்றன.)

மற்றது, கி.மு 500 இல், எந்த வந்தான் வரத்தும் இறங்கி போகும் தீவில் மனிதர் இல்லை என்பது அப்பட்டமான பொய், உலகின் மற்ற பாகங்களில் நடந்ததை வைத்து பார்த்தால்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆம். இதை மறந்து விட்டேன், என்னது முதியவர்களை கேட்டு இருக்க கூடிய வாய்ப்பு இருந்து, எவ்வாறு தெரியும் என்று கேட்டு இருந்தால், அவர்கள் சொல்லி இருக்க கூடிய பதில் என்று நான் எதிர்பார்ப்பது,

அவர்களின் (எனது சிறுவயது நேரடி முதியவர்கள்) முதியவர்கள் சொன்னது என்பது தான் அநேகமாக பதிலாக இருந்து இருக்கும்.

ஆனல், குவேனியை விட, (உறுத்தி) அவர்கள் சொன்னது கதிர்காமதில், வேடுவர் முருக வழிபாட்டுக்கு வந்தது செங்குந்தரால், கைக்கோளரால்). 

அந்த கதை சுருக்கமாக,, வள்ளியை முருகன் மணந்தது கதிர்காமத்தில், அதன் தூது விளையலட்டை  செய்து வள்ளியை முருகனுக்கு விழுத்தியது வீரவாகுவும், அவரின் சகோதரர்களும்.

அந்த வழிதான். வேடுவர் முருக வழிபாட்டுக்கு வந்தனர்.

அப்படியே, இங்கே செங்குந்தர் (கைக்கோளர்) என்ற சாதி வேர் விட்டது.  

வாய்வழி கதை தான்.

(நான் நம்புவது, முருகன் எனும் அந்த நேர நவீனத்துவம், தீவுக்குள் வந்து, வேடரை மடக்கி இருக்க வேண்டும்; அவர்கள் சொல்லுவது உண்மை என்றால்)  
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நான் ஆங்கிலத்தில் எழுதி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் 32 பகுதிகளாக. அதன் எல்லாப் பகுதிகளினதும் லிங்க் இங்கு ஏற்கனவே கொடுத்துள்ளேன். சிங்களம் எனக்கு அறவே வராது . மிக மிக கொஞ்சம் தான் விளங்கும்  

 R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, says in the abstract ‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’. See the Reference "The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtn School of Medical Research, Canberra ACT 2601, Australia (This paper must have been published in the mid or late 1970s as all the studies referenced in it are pre 1980s" in this regard. Some historians are toying with the concept that the legendary arrival of Vijaya is perhaps from Gujarat or Punjab.

Prof T. W. Wikramanayake’s article gives data too to confirm the existence of people prior to the alleged arrival of Vijaya. See the Reference "Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake" in this regard. 

Also,   Prof T. W. Wikramanayake says in his article ‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’ Quote “Pre-historic settlements existed in Sri Lanka 300,000 to 40,000 years ago.  Homo sapiens would have walked to the southern-most tip of the peninsula that later separated to become Sri Lanka. Even after the final separation, land bridges created whenever the sea level dropped, and crossing the Palk Straight by sea craft during the past 50,000 years would have led to an unimpeded gene flow and complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka. There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka. In both coasts, there were fishing for pearls and other marine products. The pearls and chanks collected in Sri Lanka were larger, and this would have brought the people of South India to Sri Lanka”.
   

Edited by kandiah Thillaivinayagalingam
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 05
 
 
இலங்கைக்கு மூன்றாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் வந்து சேர்ந்த பௌத்த மதகுருமாரினாலேயே எழுத்துக்கள் அறிமுகம் செய்யப் பட்டன என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்த போதிலும், இதற்கு முன்னரே எழுத்துக்கள் இங்கு உபயோகத்தில் இருந்தன என்பதற்கு இலக்கிய ரீதியிலும் மற்றும் கல் வெட்டுக்களின் அடிப்படையிலும் போதிய அளவு சான்றுகள் உள்ளன. உதாரணமாக, அனுராதபுரத்தில் “சிற்றாடல்” எனக் குறிப்பிடப்பட்ட அகழ்வாராச்சிப் பகுதியில் சல்-கஹ-வத்த என்ற இடத்தில் சமீபத்தில் கண்டு எடுக்கப்பட்ட "எழுத்துக்கள் வெட்டப்பட்ட மட்பாண்டங்கள்", கி. மு. ஆறாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டு காலப்பகுதியை சேர்ந்ததாக கருதப் படுகிறது. [இருபத்துமூன்று நூற்றாண்டு கால சிங்கள பெளத்த கலாசாரம் / ஆசிரியர்: குருகே, ஆனந்த W.P. வெளியீட்டாளர்: கல்வி, கலாசார விவகார அமைச்சு, வெளியீட்டாண்டு 1994 / சிங்கள எழுத்துக்களின் தோற்றமும் அபிவிருத்தியும் - பீ.ஈ.ஏ.பெர்னான்டோ / பக்கம் 141 - 148]]
 
[excavations at the Salgahawatta area in Anuradhapura have uncovered evidence that could challenge the existing view. It is the oldest surviving source of letters in Sri Lanka, dating to between 500 and 600 BC. According to the results of this research, it is the oldest known case of spelling not only in Sri Lanka but also in South Asia. This discovery initially caused controversy among foreign archaeologists, but the use of scientific dating methods led to the refutation of those facts.
 
In the year 1988, the Department of Archaeology under the direction of Dr. Siran Deraniyagala commenced excavations in the vicinity of Anuradhapura. The research, which also carried out carbon 14 dating methods, identified the earliest settlements in Anuradhapura as around 900 BC. The most notable find of this research, led by Dr. Deraniyagala, is the pottery with the Brahmi script.  Five potsherds with Brahmi inscriptions in the context of excavations near the Mahapali Danasala in Anuradhapura in the year 1988 and two pottery vessels containing Brahmi inscriptions in the context of the 88th excavations at Salgahawatta, the inner city of Anuradhapura. A total of 7 pieces of potteries were found. These have been identified as the earliest Brahmi script.]
 
அதாவது அசோக சக்கரவர்த்தி காலத்து பிராமி எழுத்திலும் நூறு அல்லது இருநூறு ஆண்டு காலம் முந்தி இருக்கலாம் என்பது பொதுவான அபிப்பிராயமாகும். அதில், அசோகச் சக்கரவர்த்தி காலத்தின் எந்தவொரு கல்வெட்டிலும் காணப்படாத இரண்டு எழுத்துக்களை காண முடியும். இவை "ஐ", "மா" என்ற எழுத்துக்கள் ஆகும். இந்த "ஐ", "மா" எழுத்துக்கள் வட இந்திய கல் வெட்டுக்களில் காணப்படா விட்டாலும், தென் இந்தியாவை சேந்த, திருப்பரங்குன்றம், கருங்கலக்குடி, கோங்கர், புளியங்குளம் போன்ற பாண்டி நாட்டுப் பகுதியிலும் அரிக்கமேட்டில் கண்டு எடுக்கப்பட்ட மடபண்டங்களிலும் இவை காணப்படுகின்றன. எனவே கட்டாயம் மஹிந்த தேரர் இங்கு வருவதற்கு முன்னாலேயே பிரம்மி எழுத்துக்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கலாம். இவை அனைத்தும் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள நெடு நாள் தொடர்பையும், ஆகவே தமிழ் மொழியின் தொடர்பை தேவநம்பியதீச மன்னன் காலத்தில் அல்லது அதற்கு முன்னமே இங்கு இருந்ததை எடுத்து காட்டுகின்றன.
 
பிரம்மி எழுத்துக்களை பொதுவாக இடமிருந்து வலமாக வாசிக்க வேண்டும் என்றாலும், வலமிருந்து இடமாக வாசிக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் இருந்தன. உதாரணமாக, கேகாலை மாவட்டத்தில் அம்பலாங்கந்த என்ற இடத்தில் உள்ள குருகல்லேன என்ற குகையில் வலதுபுறத்தில் இருந்து இடது பக்கம் நோக்கி எழுதப் பட்ட கல்வெட்டை காணலாம். எழுத்துக்களும் தலை கீழாக காணப்படுகின்றன. தென் இந்தியா பாண்டி நாட்டிலும் தலை கீழான எழுத்துக்களை கொண்ட கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன, இதுவும் பாண்டி நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பண்டைய நெருங்கிய தொடர்பை எடுத்து காட்டுகின்றன. ஆகவே இவை எல்லாம் அன்று, சிங்களம் என்ற ஒரு மொழி தோன்ற முன், இரண்டு இடங்களிலும் ஒரே வித மொழி பேசப்பட்டதை, எழுதப் பட்டதை எடுத்து காட்டுகின்றன.
 
 
அசோகா கல்வெட்டுக்கள் கிரேக்கம், அரமேயம், கரோஷ்டி மற்றும் பிராமி [Greek, Aramaic , Kharosthi and Brahmi ] எழுத்துக்களில் காண்கிறோம். இதில் பிராமியே அசோகனால் பொதுவாக பாவிக்கப்பட்டன. இது வரை கண்டு பிடிக்கப் பட்ட தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் அநேகமாக அசோக பிராமியை ஒத்த எழுத்துக்கள் போல இருப்பதாகவும், இதனால் அவ்வற்றை தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இன்றைய தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் இதில் இருந்தே படிவளர்ச்சியுற்றதாக கருதுகிறார்கள். எப்படியாயினும், இன்று, சிரோண்மனி மற்றும் ஐராவதம் மகாதேவன் போன்ற தொல்லியல் அறிஞர்கள், தமிழ் பிராமியிலிருந்தே அசோகன் பிராமி தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். அத்துடன் கிரேக்கப் பயணியும், புவியியலாளருமான மெகஸ்தெனஸ் (Megasthenes) (கிமு 350 - கிமு 290), மௌரியனின் அரசவைக்கு கி மு 300 ஆண்டளவில் சென்ற பொழுது, அங்கு எந்த எழுதப் பட்ட நூலையும் காணவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
 
மகாவம்சம் இலங்கை அரசன் விஜயனைப் பற்றி கூறுகையில், பாண்டிய அரசன், தனது மகளை விஜயனுக்கு மனைவியாகவும், அவனது 700 நண்பர்களுக்கு மனைவியராக தமிழ்ப்பெண்களையும், அத்துடன் அவர்களுக்கு உதவியாக வேலையாட்கள், கட்டிடக்கலை வல்லுனர்கள், நாட்டியக்காரர்கள், பூசாரிகள் உட்பட பலரை அனுப்பிய பொழுது, ஒரு கடிதத்தையும் விஜயனுக்கு கொடுத்து அனுப்பினான் என்று கூறுகிறது. இது கிருஸ்துக்கு பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே, அசோகனிற்கும் முன்பே தமிழ் நாட்டில் எழுத்து இருந்தமையை எடுத்து காட்டுகிறது. ஆகவே "ஐ", "மா" என்ற எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு அதிகமாக தமிழ்ப் பிராமி அல்லது தமிழி யாக இருக்கலாம் ?
 
புத்தர் ஒரு முழு மதி நாளில் மே மாதம் இறந்ததாக நம்பப் படுகிறது. வடகிழக்கு பருவமழை [The Northeast monsoon] நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி காலங்களில் பொதுவாக செயலில் இருக்கும். ஆனால், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இலங்கையை நோக்கி பயணிக்க துணையாக எந்த பருவக்காற்றும் [Monsoonal wind] இருக்காது. எனவே கப்பல் காற்று துணை இல்லாமல், சும்மா கடலில் மிதக்கத் தான் விடமுடியும் [as the ship was left to drift], அப்படி என்றால், நீரிழப்பு மற்றும் பட்டினியால் [de-hydration and starvation] அவர்கள் இறக்கவேண்டிய சூழ்நிலைதான் இருந்து இருக்கும். திரும்பியும் இந்தியாவின் மேற்கு கடற்கரையை உடனடியாக அணுகவும் முடியாது. காரணம் அவர்கள் தென்மேற்கு பருவக்காற்றுக்கு [South-West Monsoonal wind] காத்திருக்க வேண்டும். பருவக் காற்று ஒரு ஆண்டு நிகழ்வாகும். [Monsoonal wind changes are annual events] தென்மேற்கு பருவக்காற்று அவர்களை மீண்டும், ஆரம்பித்த இடத்துக்கே [இந்தியா] கொண்டு போகும். எனவே, விஜயன் புத்தர் பரிநிர்வாணம் (பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும் / parinirvana) அடைந்த மே மாத பௌர்ணமி தினத்தில் கட்டாயம் இலங்கையை அடைந்து இருக்க முடியாது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படுகிறது.
 
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நம்பிக்கை வேறு, அறிவியல் வேறு. எவரின் நம்பிக்கையையும் நான் திறனாய்வு செய்யவில்லை, ஆனால் அறிவியல் ரீதியாக அதற்கான உண்மையான வாய்ப்பு உண்டா இல்லையா என்று மட்டும் அலசி ஆராய்ந்தேன்! தீபவம்சத்தின் 17 ஆவது பாடத்தின் தொடக்கத்தில், இலங்கை ஒரு நீல் சதுர வடிவானது [rectangular shape] என்று குறிப்பிடுகிறது. எனவே தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்தின் வடக்கு பக்கத்தைப் பற்றி தெரியாது அல்லது அதைப் பற்றி அறிவு இல்லை என்று கருதலாம். இணைக்கப்பட்ட இலங்கை படத்தில், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையின் வடக்கு பக்கம் குறுகிப்போவதை காண்க. அதை அங்கு தடித்த கோட்டில் குறித்து காட்டப்பட்டுள்ளது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 06 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 06
 
 
 
மகாவம்சம் என்பது இலங்கையில், தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலமான, கி.மு 247-207 இல், பௌத்தம் அறிமுகமாகி, அதன் பின் அது நிலைபெற்ற பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில், பௌத்தத்துடன் வருகை தந்த வட இந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில், கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனன் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளை காலவரிசையுடனும் மற்றும் பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வட இந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும், எழுதப்பட்ட நூலாகும்.
 
அன்று மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி கதைகளையும், மற்றும் 4ஆம் நூறாண்டில் எழுதப்பட்ட தீபவம்சத்தையும் அடியாகக் கொண்டும் 5ம், 6ம் நூற்றாண்டில், மகாநாம தேரோ எனும் பௌத்தப் பிக்குவால் இது எழுதப்பட்டது.
 
பொதுவாக வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி ஆகும்.
 
அதாவது இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் அல்லது வெறிக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து உண்மை வரலாற்றை பிரித்துப் பார் என்பது அதன் பொருள் எனலாம்.
 
எனவே மகாவம்சத்தை வாசிக்கும் பொழுது இதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுடன், அது எழுதப் பட்ட சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.
 
மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை [‘Theravatha Buddhism’] முற்றும் முழுதாக ஆதரிக்கும் ஒரு நூல். எனவே அது கட்டாயம் மகாயான பௌத்தத்தில் [‘Mahayana Buddhism’] இருந்து வேறுபட்டது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி முதல், பல்லவர் ஆட்சி ஏற்பட்ட காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரையிலான காலகட்டத்தில், சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கால் தமிழகத்தின் நிலைமை மெல்ல மெல்ல மாறுபட்டு, அங்கு மகாயான பௌத்தம் தலை தூக்க தொடங்கியது. என்றாலும் இந்து சமயமும் [சைவ சமயமும்] அங்கு இன்னும் வழமையில் இருந்து, இச் சமயங்களுடன் முட்டி மோதிக் கொண்டு இருந்த காலம் அது.
 
எனவே 6ஆம் நூறாண்டில் [தேரவாத] மகாவம்சம் எழுதும் பொழுது தமிழர்கள் அவருக்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளார்கள் [In that period even tamils following Mahayana Buddism and Hindusiam which was big challenging Theravatha]. இதுவும் தமிழர்களை ஒரு அந்நியராக கருத நூல் ஆசிரியருக்கு ஒரு காரணமாக அன்று அமைந்து இருக்கலாம்?
 
புத்தர் மரணித்து ஆயிரம் ஆண்டுகளின் பின் மகாவிகாரை துறவி, மகாநாம தேரர், தன்னை புத்தரின் தூதுவராக முன்னிலைப்படுத்தி, மகாவம்ச காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு
 
"பௌத்தர்களது [பௌத்த பக்தர்களது] மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்டது" [“serene joy of the pious”],
 
என்ற அறைகூவலை திருப்ப திருப்ப பதித்து எழுதுகிறார்.
 
எது எப்படி இருப்பினும், இன்று கல்வெட்டுக்கள் உண்மையை எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கிருஸ்துக்கு முற்பட்ட கல்வெட்டுகளில், 50 மேற்படட இடத்தில் முக்கிய இடத்தை வகுத்த சொல் 'பருமக' [parumaka] ஆகும். இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக, ராசநாயகம், சி. பத்மநாதன், ப. புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள்.
 
இதற்கு ராசநாயகம் , தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார்.
 
ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் [Vellaveli Brahmi Inscription / The initial finding says that it is dated to approximately 2200 years] கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
 
இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' [Parumaka Naavika Shamathaya Leno] என்பதாகும்.
 
இதை 'பருமக' [பெருமகன்] என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது.
 
எனவே இந்த இடத்தில் கிருஸ்த்துக்கு முன், தமிழ் மொழியையும் அல்லது வேறு மொழியையும் [பரணவிதான கூறியது போல் இந்தோ ஆரியன்] பேசியோர் வாழ்ந்து உள்ளனர் என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. எனவே விஜயன் வரும் பொழுது அவனுக்கும் அவன் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூர்வீக குடிமக்களில் இவர்களும் ஒருவராகும், எனவே இவர்களை நீங்கள் ஒதுக்க முடியாது, இவர்களும் இம் மண்ணின் மைந்தர்களே !!
 

படம்: 03 வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள் / Vellaveli Brahmi Inscription எனப்படுபவை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள உள்ள தளவாய் எனும் பகுதியிலுள்ள குன்றில் காணப்படும் பிராமி எழுத்துக்கள் ஆகும். மட்டக்களப்பு நகரிலிருந்து களுவாஞ்சிக்குடி (ஏ-4 நெடுஞ்சாலை) ஊடாக இப்பிரதேசத்தை அடைய கிட்டத்தட்ட 50 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். குன்றுகளும் பாறைகளும் நிறைந்த இடத்தில் பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் கிட்டத்தட்ட நான்கு சாசனங்களில் மூன்றில் உள்ள எழுத்துக்கள் சிதைவடைந்து காணப்பட ஒன்றில் தெளிவாகவுள்ளது.

இங்குள்ள குன்றுகள் மனித செயற்பாடுகளினால் செதுக்கப்பட்டு அல்லது வடிவமைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இச்சாசனங்களின் காலம் 2200 வருடங்கள் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) பழமையானவை என்ற கருத்து நிலவுகின்றது.[1] இவை பிராமி-பிராகிருத கலப்பு என்ற கருத்தும் நிலவுகின்றது.

 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 07 தொடரும்
May be an image of text that says 'Buddha's Four Noble Truths: 1 Life has nevetible suffering 2. There 5 0 cOuSE 1D Dur suffering 3. There IS dn nd to suffering T The end ο suffering IS contained in the eight fold path' May be an image of 3 people, outdoors and text that says '"மகாவம்சம்" எழுதப்பட்ட வரலாறு!' No photo description available. 
 
 
No photo description available.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 07
 
 
இரண்டு நாக இளவரசர்களும் இடையில் [மாமா மருமகனுக்கு இடையில்] அரியணைக்காக நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர, புத்தரின் இரண்டாவது இலங்கை வருகை நடைபெற்றதாக மகாவம்சம் கூறுகிறது. அப்பொழுது அவரே அந்த அரியணையை பெற்றார் என்கிறது. இது அவரது குணாதிசயத்தின் மீதான அவமதிப்பு போல் தெரிகிறது [It is sacrilege on his character], ஏனென்றால், அவர் தனது உரிமையான அரியணையையே துறந்தவர், அது மட்டும் அல்ல, பிம்பிசாரன் [a contemporary king, Bimbisara] அரியணை கொடுத்த பொழுதும் ஏற்காதவர் என்பதால். இரு தரம் அரியணையை துறந்தவர், எப்படி இதற்கு உரிமைகோருவார்?.
 
இதே நிகழ்வு, மகாவம்சத்துக்கு முந்திய பண்டைய தமிழ் காப்பியம் மணிமேகலையிலும் வருகிறது. ஆனால் அது அரியணைக்கு அல்ல, புத்தர் போதிக்கும் பொழுது வழமையாக அமரும் இருக்கைக்கே [not for a throne but for a seat on which the Buddha used to sit and preach] என்பது குறிப்பிடத் தக்கது.
 
மற்றும் ஒன்றையும் நான் குறிப்பிடவேண்டும். புத்தர் இலங்கைக்கு 500 பிக்குகளுடன், நாக அரசனின் [Naga (Serpent) king at Kalyani] அழைப்பை ஏற்று, தனது மூன்றாவது வருகையில், காற்றில் பறந்து வந்தார் என்று கூறுகிறது. எப்படி ஒரு நாக அரசன், 2500 ஆண்டுகளுக்கு முன்பு, 1500 மைலுக்கும் அப்பால் இருக்கும் புத்தருக்கு அழைப்பு விட்டார் என்பது, யாருக்காவது தெரியுமாயின் எனக்கும் சொல்லவும்?
 
மேலும் இந்த பெரும் தூரத்தை 501 பேர், புத்தரையும் சேர்த்து, காற்றில் பறந்து இருந்தால், கட்டாயம் அது ஒரு கண்கவர் கட்சியாக இந்தியாவில் இருக்கும் பலருக்கு இருந்து இருக்கும். ஆனால், எந்த வரலாற்று குறிப்புகளிலோ, அது இந்தியர்களால் பதியப்படவில்லை.
 
சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாக சொல்கிறார்:
 
'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்'
 
என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் என்ன நடக்கிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்ததில் பெரும் பங்கு மகாவம்சத்திற்கு உண்டு என்பது அதன் வடிவமைப்பிலும் கதை ஓட்டத்தில் இருந்தும் வெளிப்படும் உண்மையாகும்.
 
[1] வாழ்க்கை துன்பமயமானது,
 
[2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது,
 
[3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப் பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திர மாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து எனவே நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்றும்.
 
[4] நற் கருத்து, நல் நோக்கம், நற் பேச்சு, நன்னடத்தை, நல் தொழில் வகித்தல், நன் முயற்சி, நன் மனக் கவனம், நன் மன ஒருமைப்பாடு ஆகியன, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை ஆகும் என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற் கருத்து, நல் நோக்கம், நற் பேச்சு, நன்னடத்தை, நன் முயற்சிகள் எப்படி மகாவம்சத்தில் அடங்கி இருக்கின்றன என மேலும் விரிவாக, எம் அறிவிற்குள் எட்டிய வாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனத்தோடு வரவேற்கிறோம்.
 
உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. இதையே திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் தொடர்கிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 08 தொடரும்
No photo description available.  No photo description available. No photo description available.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 08
 
 
மேலும் சிகரம் வைத்தால் போல, துட்டகாமணி பற்றி எழுதும் பொழுது, இருபத்தி இரண்டாவது அத்தியாயம் காமனி ஜனனம் என்ற பகுதியில், [CHAPTEE XXII / THE BIRTH OF PRINCE GAMANI] 'துட்டகாமணியின் தாய், எல்லாளனுடைய வீரர்களில், முதல் வீரனுடைய கழுத்தை வெட்டிய கத்தியைக் கழுவ உதவிய நீரைக் குடிக்க வேண்டும் என்றும், அதுவும் வெட்டுண்ட தலையை மிதித்துக் கொண்டே, அதைக் குடிக்க வேண்டும் என்று விரும்பினாள் என்றும்' [and then she longed to drink the water that had served to cleanse the sword with which the head of the first warrior among king Elara's warriors had been struck off, and she longed to drink it standing on this very head] 'ராணியின் மகன் தமிழர்களை அழித்து ஒன்று பட்ட அரசாட்சி அமைத்ததும் தர்மம் செழிக்கச் செய்வான்' என்று குறி சொல்வோர் கூறினர் என்றும் [the king asked the soothsayers. When the soothsayers heard it they said : 'The queen's son, when he has vanquished the Damilas and built up a united kingdom, will make the doctrine to shine forth brightly'] பெருமையுடன் கூறுகிறார்?
 
பின் சில காலங்களின் பின், தன் மகன் இருவரையும் ஒரு முறை சோதித்து பார்க்க விரும்பி, தாய் “நாங்கள் தமிழர்களோடு எக்காலத்திலும் போரிட மாட்டோம் என்ற எண்ணத்தோடு இந்த உணவைச் சாப்பிடுங்கள்” எனக் கூறி சாப்பாட்டை வழங்கிய பொழுது, தீசன் உணவைத் தன் கையினால் தட்டி விட்டான். காமனி அதை எடுத்துத் தூர எறிந்தான். பிறகு காமனி படுக்கையிற் சென்று உடலை முடக்கிக் கொண்டு படுத்தான். ராணி அங்கு வந்து காமனியைத் தேற்றினாள். 'மகனே! கைகால்களை நன்றாக விரித்துக் கொண்டு தாராளமாகப் படுப்பதற்கென்ன?' என்று அவள் கேட்டாள். அதற்கு ‘கங்கைக்கு [மகாவலிக்கு] அப்பால் தமிழர்கள் இருக்கிறார்கள், இந்தப் பக்கம் கோத [பொல்லாத அல்லது சினம் கொண்ட அல்லது கட்டுக்கடங்காத] சமுத்திரம் இருக்கிறது. எப்படி கைகால்களை நான் நீட்டி உறங்கமுடியும்?' என்றான் துட்டகாமணி [But when it was said to them : Never will we fight with the Damilas ; with such thoughts eat ye this portion here, Tissa dashed the food away with his hand, but Gamani who had (in like manner) flung away the morsel of rice, went to his bed, and drawing in his hands and feet he lay upon his bed. The queen came, and caressing Gamani spoke thus: ' Why dost thou not lie easily upon thy bed with limbs stretched out, my son?' 'Over there beyond the Ganga are the Damilas, here on this side is the Gotha-ocean, how can I lie with out- stretched limbs ?' he answered].
 
இவைகள் புத்த சமயத்தை முன்னிலைப் படுத்தும் மகாவம்சத்தில் எழுதிய வசனம். நல்ல காலம் புத்தர் இதை படிக்கவில்லை? மேலும் மகாவலிக்கு வடக்கே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை மெய்ப்பிப்பது போல, பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர் வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV), “இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடிய காலம் வந்துள்ளது என்கிறார்.
 
மகாவம்சமே மேலும் இருபத்தைந்தாவது அத்தியாயம் துட்டகாமனியின் வெற்றி [CHAPTER XXV / THE VICTORY OF DUTTHAGAMANI] என்ற பகுதியில் 'வணக்கத்துக்கு உரியவர்களே ! என்னால் அல்லவோ இலட்சக்கணக்கானவர்கள் மடியும்படி நேரிட்டது' என காமினி கேட்க, 'ஒன்றரை மனிதர்கள் மட்டுமே உன்னால் இங்கு கொல்லப்பட்டார்கள், மற்றவர்கள் எல்லாம் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள். [எனவே] தீய வாழ்வை மேற்கொண்டவர்கள்- [ஆகவே] மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள். ஆனால் நீயோ புத்தருடைய போதனைகளுக்குப் பலவிதத்திலும் பெருமை தேடப் போகிறவன், எனவே உன் மனதிலிருந்து கவலையை அகற்று அரசனே !' என்று போதிசத்துவர்கள் [அருகதர்கள்] ஆறுதல் கூறினர் என்கிறது. [king said again to them : since by me was caused the slaughter of a great host numbering millions ? Only one and a half human beings have been slain here by thee, Unbelievers and men of evil life were the rest, not more to be esteemed than beasts. said Arhat. But as for thee, thou wilt bring glory to the doctrine of the Buddha in manifold ways']
 
என்றாலும் அதே நேரத்தில், தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இவன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை. இதுவே, இந்த சமய வெறியே, இவனையும் இவனின் தமிழ் சைவ போர் வீரர்களையும் கொல்ல தூண்டியது எனலாம் ?. அசோகனின் கொலை வெறியை தணித்த புத்தர் எங்கே? மதத்தின் பெயரில் கொலை வெறியை தூண்டிய மகாநாம தேரர் எங்கே ?
 
துட்ட கைமுனுவின் தாய் களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவி என்பது குறிப்பிடத்தக்கது. இவனின் தந்தை மகாநாகனின் பூட்டனாகும். எனவே உண்மையில் மகாவம்சத்தின் கதைநாயகனான துட்ட கைமுனு (கிமு 101-77) தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான் என்பதும் குறிப்பிடத் தக்கது. எனவே சுருக்கமாக சொன்னால், எல்லாளனும் இவனும் திராவிட அல்லது தமிழ் அல்லது இவை கலந்த ஒரு மொழியே பேசியுள்ளார்கள். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்ட கைமுனு பௌத்த சமயத்தவன், இது ஒன்றே உண்மையில் அடிப்படை வேறுபாடு.
 
உதாரணமாக போதிசத்துவர்கள் ['போதிநிலையில் வாழ்பவர்' அல்லது 'போதி நிலைபெற ஆயத்தமானவர்'] கூட, எல்லாளனும் அவனது படையினரும் புத்த மார்க்கத்தை நம்பாதவர்கள், எனவே கொலை செய்யலாம் என்கிறார்களே ஒழிய, அவர்கள் தமிழர்கள் எனவே கொலை செய்யலாம் என்று என்றும் கூறவில்லை.
 
அது மட்டும் அல்ல, இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு 'இராச்சியங்களைப் பிடிக்க அல்ல, நான் போர் தொடுத்தது, புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே' என்கிறான் என்பது இதை மெய்ப்பிக்கிறது.
 
கைமுனு எல்லாளன் மீது போர்தொடுக்கப் போவதாகக் கூறிய பொழுது அவனது தந்தையான காகவர்ணதீசன் [அல்லது காவன் தீசன்] "மகா கங்கைக்கு அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் [சைவர்கள்] ஆளட்டும். மகா கங்கைக்கு இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதும்" என்கிறான் என்பதும் கவனிக்கத்தக்கது.
 
சுருக்கமாக, துட்ட கைமுனு காலத்தில் சிங்களவர் என்ற இனம் இருக்கவில்லை. சிங்களம் என்ற மொழியும் இருக்கவில்லை. துட்ட கைமுனு சிங்களவனும் அல்ல என்பது கவனிக்கத் தக்கது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 09 தொடரும்
May be an illustration  May be an image of map May be an illustration of elephant
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 09
 
 
தேவநம்பிய தீசன் [Devanampiyatissa] அரசராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து, பேரரசன் அசோகன் அவருக்கு பரிசுகள் அனுப்பியதுடன், இரண்டாவது முடிசூட்டு விழா நடத்தும் படியும் வேண்டுகிறார். எனவே தேவநம்பிய தீசன் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது முடிசூட்டு விழாவை முதலாவது நடந்து ஆறு மாதத்தால் நிறைவேற்றினார். இங்கு தான் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது.
 
அந்த காலத்தில் கடல் மார்க்கமான தூர இடத்து நாட்டுக்கு நாடு [அல்லது போக்குவரத்து] வியாபாரம் மிக குறைவு. மேலும் தாம்ரலிப்தா [port Tamralipti] துறை முகத்தில் இருந்து எதாவது ஒரு கப்பல் புறப்படுவதை காண்பதும் இன்னும் ஒரு பிரச்சனை. இது தற்காலத்தைய மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தம்லக் எனுமிடத்தில் இருந்ததாக நம்பப் படுகிறது. அது மட்டும் அல்ல, அன்றைய காலத்தில் காற்றின் துணையுடன் தான் கப்பல்கள் நகர்ந்தன. எனவே போவதற்கு தென்மேற்கு பருவக்காற்றும், திரும்பி வருதலுக்கு வடகிழக்கு பருவக்காற்றும் தேவை. அது மட்டும் அல்ல, அவர்கள் ஏறத்தாழ 300 மைல்கள், மகத இராச்சியத்தின் தலைநகரம் பாடலிபுத்திரம் [Pataliputra] போக நடக்கவும் வேண்டும். இது ஒரு பக்க தூரமே. எனவே, எல்லா காலநிலையும் சரியாக இருந்தால், ஒரு சுற்று பயணத்தை முடிக்க ஒரு ஆண்டு ஆவது கழியும்.
 
அது மட்டும் அல்ல, தேவநம்பிய தீசன் அனுப்பிய பரிசு பொருட்களுடன் வந்த தூதுவர்கள், அங்கே, பாடலிபுத்திரத்தில் ஐந்து மாதம் நின்றதாகவும் குறிக்கப்பட்டுள்ளது. எனவே முதலாவது முடிசூட்டு விழாவின் பின் இலங்கையை விட்டு வந்தவர்கள், ஐந்து மாதம் தங்கிய பின், அசோகனின் செய்தியுடன் எப்படி ஆறு மாதத்துக்குள் திரும்பி போனார்கள் என்பது நம்பமுடியாத கற்பனையே!
 
பெயர் 'திஸ்ஸ ' [Tissa] ஒரு பொதுவான புத்த நாடுகளில் உள்ள ஒரு சொல்லாகும். ஆனால் அதே பெயர் கொஞ்சம் நீளமாக, உதாரணமாக திசைநாயகம் / திஸ்ஸநாயகம் , திசைவீரசிங்கம் / திஸ்ஸவீரசிங்கம், [Tissanayagam, Tissaveerasingam, and Tissam etc ] போன்ற பெயர்கள் தமிழ் மக்களிடமும் உண்டு. அது மட்டும் அல்ல, இதை ஒப்புவிப்பது போல, 2014 / 2015 ஆண்டு, கீழடி தொல்பொருள் ஆய்வில், பெயர் 'திஸ்ஸ' கண்டுபிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
 
இந்த தொல்பொருளின் காலம் ஏறத்தாழ கி மு 300 இல் இருந்து கி மு 400 என கணிக்கப்பட்டும் உள்ளது. தேவநம்பிய தீசனின் காலமும் கி மு 247 இல் இருந்து கி மு 207 என்பதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன், புத்த மதத்திற்கு மாறமுன், அவன் சிவனை வழிபடுபவனும் ஆவான். மேலும் கீழடி பானை ஓடுகளில் காணப்பட்ட பெயர்கள்: உத்திரன், ஆதன், சாத்தன், திஸ்ஸன், சுரமா [Uthiran, Aathan, Saathan, Tissan, Surama etc] போன்றவை ஆகும். இங்கு கடைசியில் உள்ள 'ன்' ['N'] எடுக்கப்பட்டு திஸ்ஸ ஆக மாறி உள்ளது எனலாம். ஒரு காலத்தில் தமிழரும் புத்த மதத்தை தழுவி இருந்ததும் குறிப்பிடத் தக்கது.
 
இன்னும் ஒரு ஒப்பீட்டையும் நான் சொல்லவேண்டும். தேவநம்பிய தீசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன். அதேபோல அசோகனும்
பிந்துசாரரின் (Bindusara) இரண்டாவது மகனாவார். தேவநம்பிய தீசன் 40 ஆண்டுகள் ஆண்டார் என இலங்கை நாளாகமம் [Ceylon chronicles] கூறுகிறது. இலங்கை நாளாகமத்தின் படி, அரியானை எறியபின் அசோகன் 37 ஆண்டுகள் ஆண்டதாக கூறினாலும், இந்தியா செய்திகளின் படி இது 36 ஆண்டுகளாக காணப்படுகிறது. அசோகன் முறையான முடிசூட்டு விழாவிற்கு நாலு ஆண்டுகள் முன்பே ஆள தொடங்கிவிட்டான். எனவே அவனும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகிறது. மேலும் இவ்விருவருக்கும் தேவநம்பிய என்றே அதே அடைமொழி [same epithet ‘Devanampiya’] காணப்படுகிறது.
 
அப்படி என்றால் அசோகனுக்கு ஒத்ததாக இலங்கையில் ஒரு தேவநம்பிய தீசன் உண்டாக்கப் பட்டானா என்ற கேள்வியும் எழுகிறது [Is the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet?]? இதனால் போலும் தொல்பொருள் அல்லது கல்வெட்டு சான்று ஒன்றும் தேவநம்பிய தீசனுக்கு இலங்கையில் இல்லை போலும்.
 
ஆனால் அசோகனுக்கு கல்வெட்டு சான்று தாராளமாக உண்டு. புத்தரின் சமகால மன்னர் பிம்பிசாரன் மற்றும் அசோகனின் தந்தை பிந்துசாரர், இருவரும் வெவ்வேறு ஆட்களாகும். [Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka].
 
மகாவம்சம் என்றால் "பெருங்குடியினர்" என்பது பொருளாகும். இது விஜயனின் வருகையோடு தான் இலங்கையின் வரலாறு தொடங்குகிறது என்பதில் பிடிவாதமாக உள்ளது. அதனை மெய்ப்பிக்க தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிர்வாணம் அடையும் முன்னர், தேவர்களது அரசன் இந்திரனை அழைத்து விஜயன் கூட்டாளிகளோடு லங்காவில் [இலங்கையில்] கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக எனக் கட்டளை இட்டார் என்கிறது.
 
என்றாலும் வெவேறு கப்பல்களில் ஏற்றப்பட்ட அவர்களின் மனைவிமார்கள், பிள்ளைகளைப் பற்றி புத்தரும் அக்கறை எடுக்கவில்லை, மற்றும் விஜயனும் அவனது கூட்டாளிகளும் அக்கறை எடுக்கவில்லை ? அது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது ? ஏனென்றால் அவர்கள் நாடு கடத்தப்பட்டது, விஜயனும் கூட்டாளிகளும் செய்த பாவங்களாலேயே, மற்றும் படி அவர்கள் அப்பாவிகள், அப்படி என்றால் யாரை முதலில் அக்கறை செலுத்தவேண்டும். நீங்களே சொல்லுங்கள்?
 
மேலும் இலங்கைத் தீவுக்கு, புத்த பெருமான் மும்முறை வந்ததாக மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. தங்களுக்குள் மோதிக்கொண்ட இரண்டு இயக்கர் அரசர்களிடையே சமாதானத்தை நிலை நாட்டவும், வட இலங்கையில், நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்கும் மூன்றாவதாக, கல்யாணி (களனி) என்ற நாட்டின் நாக மன்னனின் வேண்டுதலை ஏற்றும் வருகை தந்ததாக கூறுகிறது.
 
எனவே இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர்களும் நாகர்களும் என்பது தெளிவாகிறது. இலங்கையை இயக்கர்குல மன்னனும், சிவ பக்தனுமான இராவணன் ஆண்டான் என, கி மு 5ஆம் நூறாண்டில் எழுதிய ராமாயணம் என்ற இதிகாச கதையும் கூறுகிறது. இது ஏறத்தாழ மகாவம்சத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்டது.
 
அதேவேளை வரலாற்று ரீதியாக புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் போனார் என்பதற்கு ஒரு சான்றும் இல்லை.
 
மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பௌத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பௌத்த மத தேரர்கள் எப்படி காமினிக்கு புத்த மார்க்கத்தை நம்பாதவர்களை கொல்லலாம் என போதித்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது? இன்றும் இப்படியான மனப்போக்கை நாம் இன்னும் காண்கிறோம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 10 தொடரும்
May be an image of outdoors May be an image of text that says 'Vijayan Dynasty Devanampiya Tissa (307-267BC)' No photo description available. May be an image of 1 person and text that says 'I will change. I will no longer be known as the evil Ashoka, but as Ashoka the angel.'
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 10
 
 
கி பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியளவில், பெருமளவு பிரம்மி எழுத்துக்கள் அபிவிருத்தி செய்யப் பட்டன. இந்த எழுத்துக்களை ஒரு வேளை புரொட்டோ [தொல்] - சிங்கள எழுத்துக்கள் எனக் கூறலாம்?. மேலும் அனுராதபுர காலம் [கிமு 377–கிபி 1017] முடிவடையும் சமயத்தில் - பாளி மற்றும் சமஸ்கிருத சொற்களுக்குச் சமமாக சிங்கள மொழியிலும் அதிக உயிர் மெய் எழுத்துக்கள் தோன்றின. என்றாலும் இவற்றின் பழைய பிரதிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை, தற்போது பாதுகாக்கப்படும் புராதன சிங்கள கையெழுத்துப் பிரதி 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
 
பொலன்னறுவைக் காலத்தில் [கிபி 1017 - கிபி 1236] ந, ம, வ, ல, க, ஐ, ட, ம, ர போன்ற எழுத்துக்கள் தோன்றவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அதன் பின்பே அவை தோன்றின. 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான், அதாவது, கோட்டை தலைநகரமாக இருந்த காலத்தில் தான், சிங்கள மொழி ஒரு ஸ்திர நிலை ஒன்றை அடைந்தது எனலாம்.
 
அத்துடன் சிங்களமொழி பெரும்பாலும் தமிழ் மொழியுடன் ஒத்து இருக்கிறது. இந்த ஒப்புமையை இரண்டு மொழிகளிலும் வழங்கப்படுகின்ற பெயர்ப்பகுதிகள் - வினைப்பகுதிகள் - இடைநிலைகள் - உரிச்சொற்கள் முதலிய பிரதான மொழிக்கூறுகளிலும் வசனங்கள் அமைந்து உள்ள முறையிலும் ஆய்ந்து அறியலாம்.
 
மேலும் இந்த இரண்டு மொழிகளுக்கும் இடையிலான உறவு என்பது நீண்டு படர்ந்து இருப்பதை காணலாம். இதில் தமிழ் மொழி, விஜயன் இலங்கைக்கு வரும் முன்பே சிறப்புற்று விளங்கியது குறிப்பிடத் தக்கது. இன்று மதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் போன்ற அகழாய்வுகள் தமிழின் சிறப்பை இன்னும் பின்னோக்கி நகர்த்துகிறது, அது மட்டும் அல்ல, சிந்துவெளி நாகரிகத்துடன் இதன் தொடர்பையும் எடுத்து காட்டுகிறது. ஆகவே கட்டாயம் சிங்களம், தமிழ் மொழியில் இருந்து மேலே கூறிய பலவற்றை பெற்றது உறுதியாகிறது. அத்துடன் சிங்களம் அவ்வற்றை பெற்று வளர்ச்சி பெற்று இருக்கும் என்றால் தமிழின் தாக்கம் இலங்கையில் பண்டைய காலத்தில் எவ்வளவு தூரம் இருந்து இருக்கும் என்பதும் நாம் சொல்லத்தேவை இலை. அதை சிங்கள மொழியே சொல்லும்!
 
வரலாற்று அறிஞர்களின் கூற்றின் படி, சேர [கேரள] மற்றும் பாண்டிய [மதுரை] மன்னர்களின் சத்திவாய்ந்த செல்வாக்கு இலங்கை மேல், கிருஸ்துக்கு முன்பே இருந்து கி பி 300 ஆண்டு வரை இருந்துள்ளது. அந்த கால பகுதியில் கேரள மக்கள் பேசிய மொழி தமிழாகும். பின்பு காலப்போக்கில் சேர நாட்டுத் தமிழ் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாகி, தமிழுடன் சமஸ்கிருதத்தைக் கலந்து, மலையாளம் என்ற தனி மொழி பிறந்தது.
 
இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் உள்ள தூரம் ஆக 30 கிலோமீட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஒபேயசேகர [Dr Obeysekere ] இலங்கைக்கும் கேரளத்திற்கும் உள்ள தொடர்பை பத்தினி தெய்வ வழிபாடு [கண்ணகி வழிபாடு] மற்றும் தாய் வழி அமைப்பு [matrilineal system] மூலம் அலசுகிறார். மேலும் அவர் தாய் வழி அமைப்பு தெற்கு சிங்களவர்களிடமும் முன்பு இருந்து, ஆனால் பின்பு தந்தை வழி அமைப்பால் மாற்றம் செய்யப் பட்டது என்கிறார். [According to Dr Obeysekere, the matrilineal system existed in the Sinhala-speaking South also, but was supplanted by the patrilineal system].
 
மேலும் அவர், பத்தினி தெய்வ வழிபாட்டை கேரளத்து தமிழ் மொழி பேசும் புத்த சமய வர்த்தகர்களாலும் மற்றும் மற்றவர்களாலும், குறிப்பாக வஞ்சி [Tamil-speaking Kerala Buddhist traders and other immigrants from the Vanchi area] பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார். குறிப்பாக இரண்டு கேரளா வர்த்தக குடும்பம், மெஹனாவரா மற்றும் அழகக்கோனார் அல்லது அழகக்கோன் குடும்பங்கள் இதில் ஈடுபட்டதாக கூறுகிறார். இதில் இன்று சிங்களவர்களில் காணப்படும் அழகக்கோன் குடும்பங்கள் இவர்களின் வாரிசு என்கிறார் [two trader families of Kerala origin, namely, the Mehenavara and the Alagakonara (the Alagakones of today are probably their descendents)], மேலும் பத்தினி தெய்வம் பற்றிய சிங்கள பாடலின் மூலம் தமிழ் என்கிறார் [Dr Obeysekere says that the Sinhala songs related to the Pattini cult were originally in Tamil].
 
மகாவம்சம் / முதல் அத்தியாயம் / புத்தர் வருகை [THE MAHAVAMSA / CHAPTER I / THE VISIT OF THE TATHAGATA] இல், "தர்மத்தைப் போதிப்பதற்காகத் தாமே அங்குப் புறப்பட்டார். தமது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழப் போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்போதே தெரிந்திருந்தது. அப்போது இலங்கையில் இயக்கர்கள் நிரம்பியிருந்தனர். அவர்களை அங்கிருந்து முதலில் விரட்ட வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்.....
 
அப்போது தீவிலுள்ள எல்லா இயக்கர்களும் அந்த இடத்தில் கூடியிருந்தனர். இந்த இயக்கர்களின் பேரவைக் கூட்டத்துக்கு பகவன் புத்தர் சென்றார். அங்கு கூட்டத்தின் நடுவில், அவர்களுடைய தலைக்கு மேலாக, பிற்காலத்தில் மஹியங்கனை தூபம் அமைந்த இடத்தில், அவர் வானத்திலே நின்றார்.
 
வான வெளியில் இருந்து மழையையும், புயலையும் இருளையும் உண்டாக்கி அவர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்கினர். பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட இயக்கர்கள் தங்களுடைய பயத்தைப் போக்குமாறு வேண்டினர். மிரண்டு போன இயக்கர்களைப் பார்த்து பகவன் புத்தர், 'இயக்கர்களே ! உங்களுடைய இந்த பயத்தையும் துயரத்தையும் போக்குகிறேன். இங்கே நான் உட்காருவதற்கு ஒர் இடம் கொடுங்கள் ' என்று கூறினர்"
 
[at the full moon of Phussa, himself set forth for the isle of Lanka, to win Lanka for the faith. For Lanka was known to the Conqueror as a place where his doctrine should (thereafter) shine in glory; and (he knew that) from Lanka, filled with the yakkhas, the yakkhas must (first) be driven forth.... there was a great gathering of (all) the yakkhas dwelling in the island. To this great gathering of that yakkhas went the Blessed One, and there, in the midst of that assembly, hovering in the air over their heads, at the place of the (future) Mahiyangana-thupa, he struck terror to their hearts by rain, storm, darkness and so forth. The yakkhas, overwhelmed by fear, besought the fearless Vanquisher to release them from terrors, and the Vanquisher, destroyer of fear, spoke thus to the terrified yakkhas: 'I will banish this your fear and your distress, O yakkhas, give ye here to me with one accord a place where may sit down].
 
பகவன் புத்தர், தான் அமர, தன் கொள்கையைப் பரப்ப, இலங்கையில் வாழ்ந்த இயக்கர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெருட்டி, பயமுறுத்தி கலைத்தார் என்று இங்கு பெருமையாக வர்ணிக்கப்படுகிறது?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 11 தொடரும்
No photo description available. No photo description available.
No photo description available. 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 11
 
 
புத்தர் தன்னை கடவுள் என்று என்றும் உரிமை கூறவில்லை, அவர் ஒரு மனிதர், தனது அனுபவம் மூலம், நிர்வாணம் அடைவது எப்படி என்பதை போதித்தவர். உண்மையான புத்த மதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது. அது மட்டும் அல்ல அது கிறிஸ்துவர், முஸ்லீம், இந்து அல்லது பெளத்தர் போன்ற அடையாளங்களுடன் [லேபிள்களுடன்] அக்கறை இல்லை. மற்றும் புனிதமான நான்கு பேருண்மைகளுடன், அநி­யா­ய­மாக எந்த உயி­ரையும் கொல்­லாதே. அனைத்து படைப்­பி­னங்­க­ளு­டனும் அன்­பாக நடந்­துகொள், தானமாக [இலவசமாக] கொடுக்கப்படாத எதையும் எடுக்கக்கூடாது, தவறான பாலியல் நடத்­தை­களில் ஈடு­ப­டாதே, பொய் சொல்­லாதே நேர்­மை­யா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் நடந்து கொள், மது மற்றும் ஏனைய போதைப் பொருள்­களை பயன்­ப­டுத்­தாதே, என்ற ஐந்து கட்டளைகளையும் கொண்டுள்ளது. அப்படியாக தன்னையும் நிலைப்படுத்தி, மற்றவர்களையும் அப்படியே மாற்ற போதித்த புத்தர், இயக்கர்களை மாயாஜாலம் காட்டி பயமுறுத்தி, வெருட்டி துரத்தி, தனக்கு என ஒரு இடத்தை கைப்பற்றுவாரா? கொஞ்சம் நடு நிலையாக சிந்தியுங்கள் !
 
தீபவம்சத்தில் கூட, அத்தியாயம் 2 / நாகர்களை வென்றது என்ற பகுதியில் :
 
"இரண்டு நாக படைகளின் தலைக்கு மேலாக காற்றில் மிதந்து, உலகின் தலைவரும் எல்லாம் அறிந்தவருமான அவர், ஒரு ஆழ்ந்த திகிலூட்டும் இருளை உண்டாக்கினார். திகிலுற்று பயந்த நாகர்களால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை .... நாகர்கள் பயந்ததை உணர்ந்த அவர், நாகர்கள் மேல் இரக்கப்பட்டு, அருள் புரிந்தார்
 
[Dipavamsa / II. The Conquering of the Nāgas : [Dipavamsa / II. The Conquering of the Nāgas ] Going through the air over the heads of both Nāgas, the Sambuddha, the chief of the world, produced a deep, terrifying darkness. The frightened, terrified Nāgas did not see each other, ... .when he saw that the Nāgas were terrified, he sent forth his thoughts of kindness towards them, and emitted a warm ray of light.].
 
இங்கு அவர்களை கலைக்கவில்லை, வெருட்டியதோடு நின்று விட்டது மட்டும் அல்ல, அருளும் புரிகிறார் [ஞான ஒளியும் பாச்சுகிறார்]. எனவே மகாவம்சம், அதற்கு முந்திய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போல், புராணங்கள், புனைவுகள், இயற்கைக்கு மாறான [அமானுஷ்ய] நம்பிக்கைகள், மற்றும் பிரபலமான பாரம்பரியங்களாலும் நிறைந்து உள்ளது தெரிகிறது.
 
உதாரணமாக, பதின்மூன்றாவது அத்தியாயம் மகிந்த வருகையில் [CHAPTEE XIII / THE COMING OF MAHINDA ]:
 
"இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் என்றான் .... நான்கு தேரர்களுடனும சுமணனுடனும், பாமர சீடனுமான பந்தூகனுடனும், மனிதர்களுக்கு அவர்களைப் பற்றித் தெரிய வேண்டுமென்பதற்காக வானில் எழுந்தவர்களாக அந்த விகாரையிலிருந்து கிளம்பினர்
 
[The great Indra sought out the excellent thera Mahinda and said to him: ' Set forth to convert Lanka ; by the Sambuddha also hast thou been foretold (for this) and we will be those who aid thee there .... with the four theras and Sumana, and the lay-disciple Bhanduka also, to the end that they might be known for human beings, rose up in the air (and departed) from that vihara]
 
என்கிறது. ஆகவே நாம் இங்கு தேவ லோகத்தையும், இந்திரன், விஷ்ணு போன்ற இந்து மத கடவுள்களையும், தேவர்களையும், காற்றினூடாக பறந்து செல்வதையும், இன்னும் அது போன்ற பல மந்திர மாய வித்தைகளையும், உதாரணமாக தன்னை பின்பற்றுபவர்களை மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாதவாறு மாற்றுதல் போன்றவற்றையும் காண்கிறோம். இது கட்டாயம் இந்து புராணங்களையும், அங்கு இந்திரன், விஷ்ணுவின் விளையாடல்களையும் மற்றும் பல சம்பவங்களையும் நினைவூட்டுகிறது, உதாரணமாக, ராமாயணத்தில் அனுமான் இதே இலங்கைக்கு காற்றினூடாக பறந்து வந்ததையும், நெருப்பூட்டி பயமுறுத்தியதையும் காண்கிறோம்.
 
ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும்.
 
அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்பு தேவைப்படுகின்றன என்பது மட்டும் நிச்சயம். அதனால் தான் மகாவம்சத்தை முழுக்க முழுக்க அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றின் பிடியில் அகப்பட்டு, இன்று அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களை, மீட்டு எடுப்பது மிக கடினமான ஒன்றாக மாறி வருவதை காண்கிறோம்.
 
வரலாற்றை வரலாற்றுக்காகவும் அறிவிற்காகவும் ஆய்வு செய்ய வேண்டும், அதைவிட்டு, தனக்கு சார்ப்பாக ஒரு தார்மீக அறிவுறுத்தலை மையமாகக் கொண்ட ஒரு வெளிப்புற நோக்கத்திற்காகவோ, அல்லது அதை திரித்தோ, பொய்யுரைகளை வலுக்கட்டாயமாக சேர்த்தோ, தனது அரசியலின் நோக்கத்திற்காக உருவாக்கக் கூடாது
 
["The study of history must be for history and knowledge sake. History should never be didactic, nor should it be falsified and made into tools of politics."]
 
என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மகாவம்சத்தை எவரும் அணுகவேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.
 
"புத்தம் சரணம் கச்சாமி,
தம்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 12 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 12
 
 
ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]
 
"மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக் கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது .... அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali].
 
[the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ... love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ... took her upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]
 
என்றும் அதன் பின் தன் தந்தையான சிங்கத்தை, சிங்கபாகு கொன்று, தன் உடன்பிறந்த சகோதரியான சிங்கசீவலியை மணந்து, ராணியாக்கி, நாளடைவில் சிங்கசீவலி பதிறுை முறை இரட்டைக் குழந்தைகளாகப் பெற்றாள். மூத்தவன் விஜயன் இரண்டாவது சுமித்த ஆகும். எல்லோருமாக முப்பத்திரண்டு மகன்மார்கள் .....
 
[ As time passed on his consort bore twin sons sixteen times, the eldest was named Vijaya, the second Sumitta; together there were thirty-two sons ..... ]
 
என்றும் மற்றும் ஏழாம் அத்தியாயம் விஜயனின் பட்டாபிஷேகத்தில் [CHAPTER VII / THE CONSECRATING OF VIJAYA ],
 
தேவர்களுடைய பெரும் சபையில், மாமுனிவரும், பேச்சாற்றல் உடையவர்களிலேயே மிகச் சிறந்தவருமான புத்தபெருமான், அவருடைய நிர்வாணத்துக்கான படுக்கையிலே படுத்திருந்துகொண்டு, தம் அருகில் நின்ற சக்கனிடம் (இந்திரன்)
 
"சிங்கபாகு" வின் மகன் விஜயன் லால நாட்டிலிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வருகிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவதற்காக, அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்று கூறினர். ததாககர் [புத்தபெருமான்] கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீல தாமரை மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த *தேவனிடம் [நீல வண்ணமுடைய - விஷ்ணு] ஒப்படைத்தான்.
 
[(Tathagata) was lying on the bed of his nibbana, in the midst of the great assembly of gods, he, the great sage, the greatest of those who have speech, spoke to Sakka (Indra, king of the gods) who stood there near him: ' Vijaya, son of king Sihabahu, is come to Lanka from the country of Lala, together with seven hundred followers. In Lanka, O lord of gods, will my religion be established, therefore carefully protect him with his followers and Lanka. When the lord of gods heard the words of the Tathagata he from respect handed over the guardianship of Lanka to the god who is in colour like the lotus (Visnu)]
 
என்கிறது. ஆகவே நாம் இங்கு சிங்கம் [மிருகம்] மனிதனுடன் குடும்ப வாழ்வு நடத்துவதையும், மீண்டும் தேவ லோகத்தையும், இந்திரன், விஷ்ணு போன்ற இந்து மத கடவுள்களையும் காண்கிறோம்.
 
ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்து மதம், சமண மதம் சூழலில் பிறந்து வாழ்ந்து, அவைகளின் நடவடிக்கைகள், போதனைகளில் திருப்தி அற்றவராகி, அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், அதேபோல மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும் உணர்ந்து, எனவே அவை இரண்டையும் தவிர்த்து, ஒரு மத்திம மார்க்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் மற்றும் நான்கு உயரிய சத்தியங்களைப் புரிந்துகொண்டு அவற்றையும் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் போதித்தவர் சித்தார்த்தர். அது மட்டும் அல்ல, தானே ஞானோதயம் [அறிவொளி] பெற்று, நிர்வாண நிலையை, அதாவது ஆசாபாசங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட்டு பூரண அமைதியையும் ஞானோதயத்தையும் அடைந்து மக்களுக்கு வழியும் காட்டினார்.
 
மேலும் இவர், மரணப் படுக்கையில் தன் சீடர்களுக்கு
 
“எவருடைய உதவியையும் நாடாமல் சத்தியத்திலே தன்னந் தனியாக நின்று முக்தியை நாடித் தேடுங்கள்.”
 
என்று கூறியதாக ஒரு தகவலும் உண்டு. ஞானோதயம் தெய்வத்திடமிருந்து வருவது இல்லை, ஆனால் நல்ல சிந்தனை, நல்ல செயல்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள ஒருவர் எடுக்கும் சொந்த முயற்சியிலிருந்து தான் வருகிறது என்பது புத்தரின் கருத்தாகும். கடவுளைப் பற்றி அவர் அதிகமாக எதுவும் சொல்லவில்லை. புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.
 
"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள் ஆகும். அதேபோல "ததாகதர்" என்பதற்கு உண்மையை அறிந்தவர் என்று பொருள். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகுவதையே "விடுதலை" அல்லது "நிர்வாண நிலை" என்றுரைப்பர். இந்த உண்மை நிலையில் நின்று நாம் மேலே கூறியவற்றை அலசும் பொழுது, கட்டாயம் இவை புத்தரின் போதனைக்கும் நம்பிக்கைக்கும் புறம்பாகவே, ஏற்கமுடியாததாகவே காட்சி அளிக்கிறது.
 
எனவே இதற்கு ஏதாவது உள்நோக்கம் மகாநாம தேரருக்கு இருந்து இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதன் விளைவு தான் இன்று இலங்கையில் பர்மாவில் நடப்பவையாகவும் இருக்கலாம்? என்றாலும் அது நியாயமான இலங்கையை ஆண்ட மன்னர்களின் விபரங்களை, சரி பிழைகள் இருந்தாலும் ஓரளவு வரிசைக் கிரமமாக தருகிறது. அது மட்டும் அல்ல, மிகவும் நாகரிக இலங்கை பழங்குடி மக்களான நாகர்கள், இயக்கர்களைப் பற்றிய தகவல்களை தரும் சில அரிய நூல்களில் இதுவும் ஒன்று ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 13 தொடரும்
May be an image of 1 person, big cat and outdoors  309566633_10221628511124864_1572347925736925057_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZSvH6VqxES8Ab79ll6R&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDNguopOeazZWnN0Ye1W64hHJlhHnThlRpbHqUYhAgaAw&oe=6631807BMay be an illustration
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 13
 
 
மகாவம்சத்தின் படி, இலங்கைக்கு வந்த விஜயனும் அவனது கூட்டாளிகளும், தமிழ் மன்னனான பாண்டியன் மகளையும் பாண்டிய மகளீர்களையும் மணந்து தங்கள் வம்சத்தைத் தொடக்கி வைக்கிறார்கள். அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர் என்று கதை கூறுகிறது. இதன் இரண்டாவது பாகம் சூழவம்சம் ஆகும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பௌத்த தேரரால் எழுதப்பட்டது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்ட[ன்] கைமுனு (கி.மு. 101-77) என்றால், சூழவம்சத்தின் கதைநாயகன், தாதுசேனன் (கி.பி. 1137-1186) ஆவான என்பது குறிப்பிடத்தக்கது.
 
மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம் ஒரு சில பாடல்களில் எழுதிய துட்ட கைமுனுவின் கதையை, மகாவம்சம் 12 அத்தியாயங்களாக, இருபத்தி யொன்றாவது அத்தியாயம் 'ஐந்து அரசர்கள் (Mahavamsa / CHAPTER XXI / THE FIVE KINGS )' என்பதில் இருந்து தொடங்கி, இருபத்தி இரண்டாவது அத்தியாயம் 'காமனி ஜனனம் (Mahavamsa / CHAPTER XXII / THE BIRTH OF PRINCE GAMINI)' ஊடாக, முப்பத்திரெண்டாவது அத்தியாயம் 'தூசித சுவர்க்கத்தை அடைதல் (CHAPTER XXXII / THE ENTRANCE INTO THE TUSITA-HEAVEN )' வரை, மகாவம்சத்தில் கிட்டத் தட்ட 1/3 பகுதியாக துட்ட கைமுனுவை ஒரு விடுதலை வீரனாக வர்ணிக்கிறது.
 
தீபவம்சத்தில், அத்தியாயம் 09 / விஜயனின் கதையில் [Dipavamsa / IX. / Vijaya’s Story] 13 ,14 ,15 பாடலில், குழந்தைகள் எல்லோரும் புறம்பாக ஒரு கப்பலில் நக்க தீபகம் [Naggadīpa, Naggadīpa (नग्गदीप) is the name of a locality situated in Aparāntaka (western district) of ancient India or It was probably an Island in the Arabian Sea] அடைந்தது என்றும், மனைவிமார்கள் எல்லோரும் புறம்பாக வேறு ஒரு கப்பலில் மஹிள தீபகம் [Mahilāraṭṭha] அடைந்தது என்றும், ஆண்கள் [கணவர்கள்] எல்லோரும் புறம்பாக வேறு ஒரு கப்பலில், முதலில் சுப்பராகா [port of Suppāra / சூர் பாரகம்] என்ற துறைமுகம் அடைந்தது என்றும், அதன் பின், அவர்களை அங்கிருந்து, அவர்களின் தீய நடவடிக்கைகளால் துரத்த, அவர்கள் இலங்கைத் தீபம் அடைந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது அதீத கற்பனை போல் தெரிகிறது.
 
ஏனென்றால், குறிப்பாக ஆயிரத்திற்கு மேலான [ஆண்கள் 1 + 700 என்பதால்] குழந்தைகளை ஒன்றாக, ஆனால் புறம்பாக வேறு ஒரு தனிக் கப்பலில் எந்த ஒரு மடையனும் அனுப்பமாட்டான், மற்றது குழந்தைகளின் வயது கட்டாயம் தாய் பால் குடிக்கும் மழலையில் இருந்து படிப் படியாக மேலே போய் இருக்கும். குறைந்தது தாய் மார்களுடனாவது, அதாவது பெண்களுடனாவது அனுப்பி இருக்க வேண்டும். எனவே அது நம்பக் கூடியதாக இல்லை.
 
மற்றது கி மு 6ஆம் நூறாண்டில் ஒரே கப்பலில் ஏறக்குறைய ஆயிரம் பேர்களை, அல்லது குறைந்தது எழுநூறு பேரையாவது காவிச் செல்லக் கூடிய கப்பல் ஒன்றும் கட்டாயம் இல்லை. கிழக்கு இந்தியாவின் வங்காளதேசப் பகுதியில் லாலா எனும் நாட்டில் இருந்து விஜயனும் அவனின் கூட்டாளிகளும் அவர்களின் மோசமான கெட்ட நடத்தைகளினால், அவனின் தந்தையினால் துரத்தி விடப்படுகிறான், பின் சுப்பராகா எனும் இடத்தில் கரையொதுங்கினார்கள் எனினும், அங்கேயும் அவனதும் அவனது நண்பர்களதும் தொல்லைகள் அதிகரிக்கவே அங்கிருந்தும் கடத்தப்படுகின்றனர். அப்படி என்றால் என் மனதில் எழும் கேள்வி,
 
புத்தர் தன் தர்மத்தை, கொள்கையை போதிக்க, நிலை நாட்ட, வேறு எவரும் அவருக்கு கிடைக்காமல், இவர்களை உண்மையில் தேர்ந்து எடுத்து இருப்பாரா? என்பதே ஆகும்.
 
பண்டைய கால உலக சரித்திரத்தை ஒரு முறை உற்று நோக்கினால், ஒருவர் தன் போதனைகளை தான் பிறந்து வளர்ந்த நாட்டில் தான் முதல் நிலை நாட்ட முற்படுவர். அதன் பின் அது மற்ற நாடுகளுக்கு பரவலாம், பரவாது விடலாம்? ஏன் என்றால் அவர்களுக்கு குறிப்பாக தம் நாடு, தம் மொழி, தம் சூழல் மற்றும் பண்பாடு தான் முக்கியமாக தெரியும். மற்றும் போக்குவரத்தும், குறிப்பாக வெளி நாடுகளுக்கு கடினமான காலம் அது.
 
இரண்டாவது, விஜயன் வருவதற்கு முன்பே மூன்று முறை இலங்கைக்கு புத்தர் வந்ததாகவும், அங்கு முதல் வருகையில், தேவர்கள் வந்து கூடினர். தேவர்கள் கூட்டத்தில் பகவான் தமது தர்மத்தைப் போதித்தார். கோடிக் கணக்கான ஜீவன்கள் [உயிரினம்] மதம் மாறினர் என்றும் [the devas assembled, and in their assembly the Master preached them the doctrine. The conversion of many kotis of living beings took place],
 
அதே போல, இரண்டாவது வருகையிலும் சமுத்திரத்திலும் நிலத்திலும் வசித்த எண்பது கோடி நாகர்களுக்கு உபதேசம் செய்து திரி சரணமளித்து தமது பஞ்சசீலத்தில் ஈடு படுத்தினர் என்றும் [he, the Lord, established in the (three) refuges and in the moral precepts eighty kotis of snake-spirits, dwellers in the ocean and on the mainland],
 
மேலும் மூன்றாவது வருகையிலும் இரக்கமே உருவான பகவான் அங்கு உபதேசம் செய்த பின்பு எழுந்து அங்கிருந்து புறப்பட்டார், சுமணகூட பர்வதத்தில் [இலங்கையில் உள்ள ஒரு மலை உச்சி, பர்வதம் - மலை ] கண்ணுக்குப் புலனுகுமாறு தமது பாதச் சுவடுகளைப் பதித்துச் சென்றார் என்றும் [had preached the doctrine there, he rose, the Master, and left the traces of his footsteps plain to sight on Sumanakuta / A mountain peak in Ceylon] கூறுகிறது.
 
அப்படி என்றால் விஜயன் வரும் பொழுதே அங்கு புத்தரின் போதனை இருந்து இருக்க வேண்டும், ஆனால் அங்கு சிவ வழிபாடும் நாக வழிபாடும் தான் தேவநம்பிய தீஸன் காலம் வரை இருந்து உள்ளது.
 
உதாரணமாக, பதின் மூன்றாவது அத்தியாயத்தில், இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மதம் மாற்றி விமோசனம் அளிக்க புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான் [The great Indra sought out the excellent thera Mahinda and said to him: `Set forth to convert Lanka; by the Sam buddha also hast thou been foretold (for this)].
 
பதினான்காவது அத்தியாயத்தில், தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் இலங்கை முழுவதும் கேட்கும் படியாக அவன் தர்மப் பிரசார நேரத்தை அறிவித்தான் என்றும் [he announced the time of (preaching the) dhamma, making it to be heard, by his miraculous power, over the whole of Lanka] இந்த அழைப்பின் காரணமாக ஏராளமான தேவர்கள் வந்து கூடினர் என்றும், தேரர் அந்தக் கூட்டத்துக்கு சமசித்த சுத்தத்தை [மனஅமைதி சூத்திரம்] உபதேசம் செய்தார் என்றும், எண்ணற்ற தேவர்கள் அவரின் கொள்கைக்கு மாற்றப்பட்டனர் என்றும், பல நாகர்களும், சுபானர்களும் திரிசரணத்தை [புத்தர் தர்மம் சங்கம் என்னும் மும்மணிகள்] மேற்கொண்டனர் என்றும் [Because of the summons there came together a great assembly of devas; and the thera preached before this gathering the Samacitta-sutta. Devas without number were converted to the doctrine and many nägas and supanas came unto the (three) refuges.] கூறுகிறது.
 
இதில் எனக்கு இன்னும் புரியாதது,
 
புத்தரின் இலங்கை வருகையில் நாகர்கள், தேவர்கள் உட்பட கோடிக் கணக்கான ஜீவன்கள் மதம் மாறினார்கள் என்றால், அவர்களுக்கு என்ன நடந்தது?,
 
எதற்காக திருப்பவும் மதம் மாற்ற மஹிந்த தேரர் [Mahinda] அனுப்பப்பட்டார் ?
 
அல்லது புத்தர் வந்து போனபின் அந்த ஜீவன்கள் எல்லோரும், அவர் கொள்கைகளை கைவிட்டு திரும்பவும் முன்னைய கொள்கைக்கு, வழிபாட்டுக்கு போய்விட்டார்களா?
 
அல்லது புத்தர் சரியாக போதிக்கவில்லையா ?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 14 தொடரும்
310665608_10221668273878908_1266603337789331272_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-T_5-cCHjJAQ7kNvgHj34ki&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDH4D4rH2MoJO1Du94Abxso0DT8LeNfCBIWiyIyPJuMVA&oe=6632E8BD No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 14
 
 
விஜயன் இலங்கைக்கு வரும் பொழுது, அங்கு ஏற்கனவே நான்கு முக்கிய இனம் அல்லது குலம் [clan] வாழ்ந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் இயக்கர், நாகர், தேவர் மற்றும் அரக்கர் [Yaksha (Yakku), Naga, Deva, and Raksha (Rakus)] ஆகும். இது அவர்களின் தொழிலை குறித்து காட்ட ஒரு உருவகமாகக் [metaphorically] கூறப்படுகிறது எனலாம்?
 
உதாரணமாக, இயக்கர்கள் இரும்பை உருக்கி வார்பவர்களாகவும் [mould iron], நாகர்கள் வர்த்தகர்களாகவும் [traders], தேவ[ர்] மக்கள் ஆட்சியாளர்களாகவும் [rulers], அரக்கர்கள் விவசாயிகளாகவும் [farmers] நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
 
மகாவம்சத்தில் கூறப்படும் இயக்கர் [Yakkhas] தான் இன்றைய வேடர்களின் [Veddas] மூதாதையர்கள் ஆவார்கள். ஆகவே, ஒரு நாகரிக சமுதாயத்திற்கு வேண்டிய அமைப்பை காண்கிறோம். இயக்கர்கள் தொழிற்சாலைகளை இயக்குவதையும், அங்கு உற்பத்தி செய்யப்படும் கருவிகள் அரக்கர்களின் விவசாயத்திற்கு ஊக்கமளித்து உதவுவதையும், இரண்டிலும் உற்பத்தியாகும் பொருட்களை நாகர்கள் வர்த்தகம் செய்வதையும், இவை எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு படுத்தி, ஒரு கட்டுப்பாட்டுடன் தேவர்கள் ஆட்சி செய்வதையும், விஜயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை மண்ணில் காண்கிறோம்.
 
மேலும் Veddas என்ற ஆங்கில, சிங்கள சொல்லின் மூலம் தமிழ் 'வேடர்' ஆகும். ஆரியர்களுக்கு முற்பட்ட ‘hunters’ ஐ குறிப்பிட இங்கு தமிழ் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, கட்டாயம் இது ஒரு வரலாற்றை மறைமுகமாக எடுத்து கூறுகிறது என்றே எண்ணுகிறேன். இயக்கர்கள் உண்மையில் ஒரு மனித இனமே, ஏன் என்றால், விஜயன் குவேனியின் தலைமுடியை பிடித்து இழுத்து, அவளைக் கொலை செய்வதாக அச்சுறுத்தி, வாளை உயர்த்தியபோது, அவள் பயந்துபோய் தன் உயிருக்காக கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பயம் என்பது, மனிதரல்லாத, இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்கள் கொண்டதாக கருதப்படும் இயக்கர்களின் பண்பு அல்ல என்பது அனைவரும் அறிந்ததே.
 
அது மட்டும் அல்ல, குவேனியை யக்கினி [Yakkhini] என்று அழைக்கப்படுவது உண்மையெனில், அதாவது அவள் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவி என்றால், அவள் விஜயனின் பிடியில் இருந்து இலகுவாக வெளியேறியிருக்க முடியும்?, ஆனால் அவளால் முடியவில்லை, பயந்து கெஞ்சுகிறாள், இது ஒன்றே இயக்கர்களும் மனிதர்கள் தான் என்பதை மெய்ப்பிக்கிறது. அது மட்டும் அல்ல விஜயனின் தாத்தாவே ஒரு மிருகம் [சிங்கம்] எனவும் அவனின் தாயும் தந்தையும் உடன் பிறந்த சகோதரர்கள் எனவும் மகாவம்சம் கூறுகிறது.
 
வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட, 3 1/2 அங்குலம் நீளமுள்ளதும் ஓர் அங்குலம் அகலமுள்ளதுமான சிறிய தங்கத் தகட்டில் நாலு வரிகளைக் கொண்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், கி. பி. 126 - 170 ஆம் ஆண்டுவரை அனுராதபுரத்தில் ஆட்சி புரிந்த வசப மாமன்னனுடைய அமைச்சரொருவர் நகதிவத்தை (நாகதீபத்தை) ஆட்சி செய்யும் பொழுது [யாழ்ப்பாணக் குடாநாட்டினை] அக்குடாநாட்டின் வட கோடியில் அமைந்த பதகர அதனவில் (இன்றைய வல்லிபுரம் என்ற ஊரில்) பியங்குகதிஸ்ஸ என்பவரால் இந்த விகாரை கட்டப்பட்டது என குறிக்கப்பட்டுள்ளது.
 
"பதகரஅதன" அல்லது "பத்தகர-ஆயதன" என்பதின் நேரடி பொருள், "வருமானம் கிடைக்க வாய்ப்பான இடம்" ஆகும் [An inscription on gold plate found at Vallipuram, near Point Pedro, is dated in the reign of Vasabha (67-111) and records that Piyaguka Tisa built a vihara at Badakara (presumably, present Vallipuram), while the Minister, Isigiraya, was governor of Nakadiva (Nagadipa). Piyaguka, which is identical with Piyahgudipa or Puvangudiva. The gold plate inscription is written in Brahmi script and it was discovered in 1936]
 
இது பிராமி எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. “லலிதவிஸ்தர" என்னும் வடமொழி நூலில் "பிராமி" என்பதன் பொருள் "எழுத்து" எனக் கூறப்பட்டுள்ளது. வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் கண்டு பிடிக்கப்பட்டதற்குப் பின்னர் சில சரித்திர உண்மைகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணக் குடாநாடு நாகதீபம் என்றழைக்கப்பட்டதும் "பியகுகதிஸ்ஸ" என்னும் சொற்றொடரிலுள்ள "பியகுக" என்னும் இடம் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பியங்குதீபமாக இருக்கலாம் என்பதும் ஆகும். அது மட்டும் அல்ல, ‘Journal of the CEYLON BRANCH OF THE ROYAL ASIATIC SOCIETY HISTORICAL TOPOGRAPHY OF ANCIENT AND MEDIEVAL CEYLON’ by C. W. NICHOLAS என்ற நூலில், CHAPTER X , THE JAFFNA DISTRICT என்ற பகுதியில், பியங்குதீபத்தை இன்றைய புங்குடுதீவு? என கருதலாம் என்கிறது [Piyahgudipa where 12,000 monks are said to have resided, is modern Pungudutivu?]
 
வரலாற்றுப் பேராசிரியரான சிவசுப்பிரமணியம் பத்மநாதன் [Prof. Pathmanathan, who was also the Chancellor of Jaffna University] அவர்கள் சிங்கள மொழி, பிராகிருத மொழியில் இருந்து தோன்றியது எனவும், கி பி 300 க்கும் கி பி 700 க்கும் இடையில் இந்த மாற்றம் படிப்படியாக நடைபெற்று, ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதன் பின்னர் சிங்கள மொழியின் பண்புகள் நன்கு நிறுவப்பட்டன என்கிறார். [In the 7th century the process of transition was completed and thereafter characteristics of the Sinhala language were well-established].
 
மேலும் இலங்கையில் ஏறத்தாழ 2000 இற்கு மேலான பிராமியசாசனங்கள் கிடைத்துள்ளன என்றும், அவற்றில் பிராகிருதச் சொற்கள், மற்றும், உதாரணமாக, ஆனைக்கோட்டை முத்திரை, திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம், திசமகாராமை தமிழ் பிராமி நாணயம் மற்றும் இவை போன்றவற்றில் தமிழ் மொழிச் சொற்கள் காணப்படுகின்றன என்றும், கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சுமொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் பிராமிச் சாசனங்கள் அமைகின்றன எனவும் பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப் பட்டிருப்பதாக தெரிவித்த பத்மநாதன், தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் விளக்கினார்.
 
இலங்கையின் பூர்வீகக் குடியினரான நாகர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துருக்கள், நாகர்களும் தமிழரும் ஒன்றே என்கிற தமது கருதுகோளுக்கான மற்றும் ஒரு வலுவான ஆதாரமாக அமைந்திருப்பதாகவும் செப்டெம்பர் 2015 இல் தெரிவித்தார் பத்மநாதன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 15 தொடரும்
 
படம் 01 - வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம்
படம் 04 - “மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 15
 
 
துட்ட கைமுனு, எல்லாளன் கதைக்கு வந்தால், தீபவம்சத்தில், எல்லாளன், சோழ அரசன் என்றோ, அல்லது வெளியில் இருந்து வந்தவன் என்றோ ஒரு குறிப்பும் இல்லை, உதாரணமாக, தீபவம்சம் / அத்தியாயம் 18 / பிக்குணி வம்சத்தில் [Dipavamsa / XVIII. / The Bhikkhuni Lineage], 49 ,50 ,54 ஆம் பாடல்களில், எல்லார [எல்லாளன்] என்ற பெயருடைய இளவரசன், மூத்தசிவனின் மகன்களுள் இளையவனான அசேல [அசேலன்] என்ற மன்னனை கொன்று, 44 ஆண்டுகள் நீதியாக அரசாட்சி செய்தான் என்கிறது [A prince, Eḷāra by name, having killed Asela, reigned righteously forty-four years].
 
நாலு தீய பாதைகளான காமம், வெறுப்பு, பயம், அறியாமை போன்றவற்றை தவிர்த்து, இந்த ஒப்பிடமுடியாத அரசர் நீதியாக ஆட்சி செய்தார் என்றும் [Avoiding the four evil paths of lust, hatred, fear, and ignorance, this incomparable monarch reigned righteously], அபயன் அல்லது அபய [துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி] என்ற பெயரை கொண்ட, இளவரசன், முப்பத்தி இரண்டு [தமிழ்] அரசர்களை ஒன்றின் பின் ஒன்றாக கொன்று இருபத்தி நாலு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்றும் [put thirty-two kings to death and alone continued the royal succession. This prince reigned twenty-four years] மேலும் கூறுகிறது.
 
அதே போல, மகாவம்சம் / இருபத்தி யொன்றாவது அத்தியாயம் 'ஐந்து அரசர்கள்' பகுதியில், சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் (Ellai = border; Aalan = ruler), அசேலனத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான். அவன் எதிரிகள், நண்பர்கள் என்ற பேதா பேதம் இன்றி, நீதியின் முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான். அவனின் படுக்கை அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்ட கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனிடம் நீதி கோரி வருபவர்கள் யாராயினும் அந்த மணியை அடிக்கலாம்.
 
அரசனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் மட்டுமே இருந்தனர். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் அறியாமல் தேர்ச் சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்து விட்டது. துக்கம் தாளாது பசு அரண் மனைக்கு வந்து மணியை அடித்தது. தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன், தலையைத் துண்டிக்கச் செய்தான்.
 
பனை மரத்தில் அமர்ந்திருந்த பறவைக் குஞ்சு ஒன்றைப் பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. தாய்ப் பறவை ஓடி வந்து மணியை அடித்தது. அரசன் அந்தப் பாம்பைத் தன் முன்பு கொண்டு வரச்செய்தான். அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியே எடுத்த பின்பு, அதை மரத்தின் மீது தொங்க விட்டான்.
 
ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப் போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்ட போது, அவன் வருணனிடம் வாரத்திற் கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.
 
இந்த அரசன் தவறான நம்பிக்கைகளை [சிவ வழிபாடு] கைவிடாத போதிலும், தீய வழியில் நடக்கும் குற்றத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக இருந்ததால் தான் இத்தகைய அற்புத சக்திகளை பெற முடிந்தது. ஒரு முறை புத்த சங்கத்தினரை அழைப்பதற்காக எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அறியாமல், தேரின் அச்சு தாதுகோபமொன்றில் [அல்லது தூபி ஒன்றில்] பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவி விடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான் என்கிறது..
 
அதே போல மகாவம்சத்தில், 'துஷ்ட காமனியின் வெற்றி' என்ற அத்தியாயத்தில் அவனின் தமிழர்களுக்கு எதிரான போர்களைப் பற்றி பல விபரங்களுடன் மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, "பிறகு நதியைக் கடந்து வந்த அரசன் துட்டகாமினி, ஒரே நாளில் ஏழு தமிழர்களை [அரசர்களை] வெற்றி கொண்டு அமைதியை நிலை நாட்டினான். போரில் கொள்ளையடித்த பொருள்களைத் தனது படை வீரர்களுக்குக் கொடுத்தான் ...
 
மேலும் அவன் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக இச் சிரமத்தை தான் மேற் கொள்ளவில்லை என்றும், சம்புத்தருடைய [Sambuddha] மார்க்கத்தைப் பரப்பவே அப்படி செய்தேன் என்றும் .. தான் எப்போதும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினான்.
 
தமிழரின் மற்றும் ஒரு நகரமான, விஜித நகரத்தில் [Vijitanagara], மூன்று அகழ்களும், உயரமான கோட்டைச் சுவரும் இருந்தன என்றும், எதிரிகளால் அழிக்கமுடியாத விதத்தில் பலமான இரும்புக் கதவுகள் வாசல்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன என்றும் ... கோட்டை மதிலின் மீது நின்று கொண்டிருந்த தமிழர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் எறிந்தனர் என்றும் ,.. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குண்டுகளையும், உருக்கிய உலோகக் குழம்புகளையும் எறிந்தனர் என்றும் .... அரசன் நான்கு மாத காலத்தில் விஜித நகரத்தை அழித்து அங்கிருந்து கிரிலகக்துக்குச் [Girilaka] சென்று கிரியன் என்ற தமிழனைக் [Damila Giriya] கொன்றான் என்றும் .... இறுதியில் எல்லாளனையும் நேருக்கு நேர் சண்டையில் கொன்றான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.
 
போர் முடிந்ததும், நகரில் முரசறைந்து ஒரு ஜோசனை சுற்றளவுக்குள் இருந்த மக்கள் எல்லோரையும் ஒன்று திரட்டி, அரசன் துஷ்ட காமனி, எல்லாளனின் இறுதிச் சடங்குகளை நடத்தினான். அவன் போரிட்டு விழுந்த இடத்திலேயே அவனுடைய உடலை எரித்து, அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பி அதற்கு வழிபாடுகள் நடத்தச் செய்தான். இன்றும் கூட [5ஆம் 6ஆம் நூறாண்டில்] இலங்கையின் அரசர்கள் அந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, இசையை நிறுத்தி விட்டு மெளனமாக வணங்கி விட்டுப் போவார்கள். இவ்வாறு முப்பத்திரண்டு தமிழ் மன்னர்களை வெற்றிகொண்டு துஷ்ட காமனி இலங்கையை ஒராட்சியின் கீழ் ஒன்று படுத்தினான் என்கிறது
 
[In the city he caused the drum to be beaten, and when he had summoned the people from a yojana around he celebrated the funeral rites for king Elara. On the spot where his body had fallen he burned it with the catafalque, and there did he build a monument and ordain worship. And even to this day the princes of Lanka, when they draw near to this place, are wont to silence their music because of this worship. When he had thus overpowered thirty-two Damila kings DUTTHA GAMANI ruled over Lanka in single sovereignty].
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 16 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்குள்ளை என்னுடையநண்பன் ஒருவரும் உள்ளார். அத்தான் இங்கைதான் வெலை செய்யிறார் என்னவென்று கேட்டுப்பாப்பம்
    • 👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.  
    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.