Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 7   28 APR, 2024 | 08:59 PM

image

(எம்.மனோசித்ரா)

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 12ஆவது சர்வதேச கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன பங்குபற்றியுள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான  12ஆவது சர்வதேச கூட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

தற்போது நாடுகள் எதிர்கொள்ளும்  பாதுகாப்பு சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்கும் உலகளாவிய தலைவர்களுக்கு இந்ந கூட்டம் ஒரு தளமாக விளங்குகிறது.

இக்கூட்டத்தொடரின் ஓர்  அங்கமாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றமை விஷேட அம்சமாகும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்த  இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்திருந்தது.

பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதன் போது கலந்துரையாடகள் நடைபெற்றன.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளின் 12ஆவது சர்வதேசக் கூட்டம், உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கூட்டு முயச்சிகளை உருவாக்கவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்குமுகமாக அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/182163

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரசியாவும் ஈரானும் வட்டியில்லாக்கடன் கொடுக்கினமோ ...அல்லது வராக்கடன் கொடுக்கினமோ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுத்த குற்றவாளி ரசியாவில்.

இது தான் ரசிய முகம். எம்மவர் இந்த சிறீலங்கா அமெரிக்கா முறுகலை பாவிக்க வேண்டும். 

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, விசுகு said:

எம்மவர் இந்த சிறீலங்கா அமெரிக்கா முறுகலை பாவிக்க வேண்டும். 

எமக்கு இந்திய சீன முறுகலையே பாவிக்கத்தெரியாமல் *** திரிகிறோம் 
இந்த லெவலில் அமெரிக்காவின் முறுகலை வேற பாவிக்கப்போறமோ ...?

Edited by இணையவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, விசுகு said:

யுத்த குற்றவாளி ரசியாவில்.

இது தான் ரசிய முகம். 

இது ஒரு சர்வதேச ஒன்றுகூடல் ஐயா!

🤦🏼‍♂️
 
The bilateral meeting occurred on the sidelines of the 12th International Meeting of High-Ranking Officials Responsible for Security Matters in St. Petersburg, Russia, held from April 22 to April 25.

This significant gathering provided a platform for global leaders to exchange insights, discuss pressing security challenges, and formulate partnerships aimed at addressing shared security concerns on a global scale.

https://lankanewsweb.net/archives/55026/sls-defence-secretary-holds-bilateral-talks-with-russian-security-council-secretary/

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்ஸியாவில் பணம்பார்க்கச் சென்று தற்போது மாட்டுப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்குக் கூட்டிவரவும் இதனைப் பயன்படுத்தியிருக்கலாம். 

2 hours ago, Kapithan said:

The bilateral meeting occurred on the sidelines of the 12th International Meeting of High-Ranking Officials Responsible for Security Matters in St. Petersburg, Russia, held from April 22 to April 25.

சர்வதேச நாடுகளின் பாதுகாப்புத் துறைசார் தலைவர்களின் மாநாடு நடைபெற்று முடிந்ததன் பின்னர் நடைபெற்றிருக்கும் இருதரப்பு மாநாடு என்றுதான் கூறப்பட்டிருக்கு. இதுவே சர்வதேச மாநாடு அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவில் பணம்பார்க்கச் சென்று தற்போது மாட்டுப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்குக் கூட்டிவரவும் இதனைப் பயன்படுத்தியிருக்கலாம். 

சர்வதேச நாடுகளின் பாதுகாப்புத் துறைசார் தலைவர்களின் மாநாடு நடைபெற்று முடிந்ததன் பின்னர் நடைபெற்றிருக்கும் இருதரப்பு மாநாடு என்றுதான் கூறப்பட்டிருக்கு. இதுவே சர்வதேச மாநாடு அல்ல. 

அதாவது சர்வதேச மாநாடு ஒன்றிற்குச் சென்று அதன் பின்னர் அவர்களிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 

ஆக இது ஒரு சர்வதேச மாநாடு. தனியே இலங்கை - இரஸ்ய மாநாடு அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

அதாவது சர்வதேச மாநாடு ஒன்றிற்குச் சென்று அதன் பின்னர் அவர்களிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 

ஆக இது ஒரு சர்வதேச மாநாடு. தனியே இலங்கை - இரஸ்ய மாநாடு அல்ல. 

அதாவது உங்கள் கூற்றுப்படி குடும்ப நிகழ்வுக்கு போய் விட்டு சின்ன வீட்டை ரகசியமாக போய் வந்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

அதாவது உங்கள் கூற்றுப்படி குடும்ப நிகழ்வுக்கு போய் விட்டு சின்ன வீட்டை ரகசியமாக போய் வந்திருக்கிறார். 

Nope…..

ஊர் அல்லது பாடசாலை ஒன்றுகூடலுக்குப் போன இடத்தில் நீண்ட நாட்களாக சந்திக்காத ஆட்களைக் கண்டால் அவர்களுடன் சிறிது நேரம் தனியே அளவுலாவுதல் போன்றதுதான் இந்தச் சந்திப்பு. 

😁

1 hour ago, விசுகு said:
Edited by Kapithan

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.