Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

438260417_459187366485700_75223251224214

முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் 
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
செய்யப்  போறீங்களா, 
••••••••••••••••••••••••••••••
ஒரு நிமிடம் இதை படியுங்கள்.

ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். 
எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்தச்  சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். 

மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டு வந்த  பாத்திரங்களை திரும்பவும்  ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார். 
அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி. 
ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள். 

அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில விஷயங்களை சொன்னார்.
பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்க்கு ஆட்களும் உண்டு. முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம்.

நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கும் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதானமளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.)
குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்

குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. 
ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான்.  இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்ல குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.) 

ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்... சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள். 

ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நாங்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.)
ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு... 

கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய  சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது...
ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது. 
ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு.

ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்ட பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி திருத்துவோர் சம்பளம்... என்று பல வகைப்படும்.

ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு  வெளியெற முடியாமல்  அவஸ்தை படுவதுதான்...ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள்.
நம்பிக்கை தான் வாழ்க்கை.

 

நாம் செய்யும் உதவி மற்றவருக்கு பயனுள்ளதாக அமையட்டும்
கோபாலகிருஷ்ணன்.

Mantras and Miracles 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தானே.வயது போன காலத்தில் அவர்கள் விருப்ப பட்டு சில உணவுகளைச் சாப்பிட்டாலும் செரிமானமில்லாது எவ்வளவு அவஸ்த்தைப்படுவார்கள் என்பதை அவ்விடத்தில் நேரிலிருந்து பார்ததால் தான் தெரியும்..மற்றப்படி சொல்லப் பேனால் வயோதிபர்களையோ அல்லது தாய் .தந்தையற்ற பிள்ளைகளையோ இந்த அன்னதானம் தந்தவர்களுக்காக நீங்களும் கும்பிடுங்கோ பிரார்த்தை செய்யுங்கோ என்று சொல்லி படம் எடுத்து பப்ளிக்கில் போட்டு சோ காட்டுவது எல்லாம் ஒரு வேண்டாத வேலை.உங்களுக்கு என்ன தேவைகள் இருக்கிறது என்று கேட்டு அவற்றுக்கு எம்மால் முடிந்த உதவியை செய்து விட்டு போவதில் என்ன தவறு இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி சிறியண்ண..

May be an image of 3 people and text that says 'ShareChat @Bala பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்... பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்...'
 
 
 
 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, யாயினி said:

உண்மை தானே.வயது போன காலத்தில் அவர்கள் விருப்ப பட்டு சில உணவுகளைச் சாப்பிட்டாலும் செரிமானமில்லாது எவ்வளவு அவஸ்த்தைப்படுவார்கள் என்பதை அவ்விடத்தில் நேரிலிருந்து பார்ததால் தான் தெரியும்..

இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கின்றது ☹️
அது தான்  பிற்காலத்தில்  விரும்பியதை எல்லாம் சாப்பிட முடியாது இப்பவே எல்லாவற்றயும் இரண்டு மூன்று மடங்காக சாப்பிட்டுவிடுவோம் என்று பலர் நினைக்கின்றார்களோ

  • கருத்துக்கள உறவுகள்

நாம் உதவி செய்கிறோம் எனும் பெயருக்காகவும் பாராட்டுக்காகவும் எங்களுக்காகவும் செய்யாமல், அவர்களுக்கு நாம் செய்யும் உதவி அவர்களுக்கு வேண்டியதா அதனால் அவர்கள் பயனடைவார்களா என்று அவர்களுடன் கலந்தாலோசித்து செய்வதே உண்மையான உதவி. உதவியென்கிற பெயரில் அவர்களுக்கு உடல் உபாதைகளை வருவிக்க கூடாது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.