Jump to content

சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   29 APR, 2024 | 08:44 PM

image

(நா.தனுஜா)

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் 4 - 5 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு உத்தேசித்துள்ள அவர், இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா தலைமையிலான குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உதவிகள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பானின் ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/182266

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை வந்தடைந்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

Published By: DIGITAL DESK 3

04 MAY, 2024 | 10:50 AM
image
 

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (4) இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.

இன்றும் (04) , நாளையும் (05) நாட்டில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார்.

அத்தோடு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா தலைமையிலான குழுவினருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன. 

https://www.virakesari.lk/article/182641

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருடனான இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மையான முறையில் அடையப்படுவது அவசியம் - ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் 

04 MAY, 2024 | 05:18 PM
image

(நா.தனுஜா)

'நண்பன் என்ற ரீதியில் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை ஜப்பான் தொடர்ந்து வழங்கும்' என்ற செய்தியைக் கூறுவதற்காகவே தான் இலங்கைக்கு வருகைதந்திருப்பதாக தெரிவித்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பினும் அந்த இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடைந்துகொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. 

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் யொகோ கமிகவா மேலும் கூறியதாவது:

எனது பிறப்பிடமான ஷிஸுவோகா 'க்ரீன் டீ'க்கு பெயர்போன இடமாகும். எனவே, 'க்ரீன் டீ' விளையும் மண்ணில் இருந்து முதன்முறையாக 'சிலோன் டீ' விளையும் மண்ணுக்கு வருகைதருவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஊக்கமும், சமாதானத்தைக் கட்டியெழுப்பல், புனர்வாழ்வளித்தல் மற்றும் மீள்கட்டியெழுப்பல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இலங்கையின் முயற்சிகளுக்கு யஸுஷி அகாஷி தலைமையில் ஜப்பானால் வழங்கப்பட்ட ஆதரவும் இரு நாட்டு மக்களினதும் நினைவலைகளில் இருக்குமென நம்புகிறேன்.

கடந்த ஜனவரி மாதம் ஜப்பானின் நோட்டோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட வேளையில், இலங்கை எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கியது. 

அதேவேளை இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், இலங்கை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஜப்பான் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கியது. 

அதுமாத்திரமன்றி உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு இணைத்தலைமை வகிக்கும் ஜப்பான், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமைதாங்குகிறது.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன மீளுறுதிப்படுத்தப்படுவது ஒட்டுமொத்த இந்து - பசுபிக் பிராந்தியத்தினதும் உறுதிப்பாடு மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இன்றியமையாததாகும்.

'நண்பன் என்ற ரீதியில் ஜப்பான் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும்' என்ற செய்தியை கூறுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். அதற்கமைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை செயற்திறன் மிக்க வகையில் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தோம்.

அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கடன் நெருக்கடி மற்றும் மறுசீரமைப்பு செயன்முறையை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை இலங்கை உரியவாறு கையாள்கிறது. 

அந்த வகையில், இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென நாம் எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் அனைத்துக் கடன்வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடானது வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடையப்படவேண்டும்.

மேலும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும். 

இலங்கையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பலதரப்பட்ட மறுசீரமைப்புக்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கு இன்றியமையாதவையாகும் என்று வலியுறுத்தினார். 

https://www.virakesari.lk/article/182677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009க்கு பிறகு  ஒரே  வெளிநாட்டு அமைச்சர்கள்/அதிகாரிகள் கூட்டங்களாயே சிறிலங்கா திக்கு முக்காடுது.....ஆனால் சிங்களவன் பஞ்ச பிரச்சனை தீர்ந்த மாதிரியும் தெரியேல்லை......ஈழத்தமிழன் அடிப்படை பிரச்சனைகள் தீரவுமில்லை. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடுவானா🤣.

16 hours ago, ஏராளன் said:

இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பினும் அந்த இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடைந்துகொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆகா தொடங்கிட்டாங்க ............................
    • டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை! 3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பணிப்பெண்ணாக கொடுத்ததாக கூறப்படும் முதலாம் சந்தேகநபரான பொன்னையா பண்டாரம், இரண்டாவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீனின் மாமனார் என கூறப்படும் அலி இப்ராஹிம் கிதார் மொஹமட் மற்றும் மூன்றாவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீனின் மனைவியான கிதார் மொஹமட் ஷிஹாப்தீன் ஆயிஷா அவர்கள் மீது இவ்வாறான வழக்கை தாக்கல் செய்திருந்திருந்தனர். அதன்படி சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டதுடன், நான்காவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர் பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகியோர் விடுதலை செய்தார் இந்த மூவருக்கும் எதிராக கொடுரமான வேலையாட்களை பணியமர்த்துதல், மனித கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமி, பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்திருந்த நிலையில், உடலில் தீப்பற்றியதால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு மரணம் நிகழ்ந்துள்ளது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது சிறுமிக்கு 15 வயது என்பதுடன் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். மேலும் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அவரது உடலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1382881
    • யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் , பழுதடைந்த இறைச்சி கொத்தினை புகைப்படம் எடுத்தும் , , கொத்து ரொட்டிக்கான விற்பனை சீட்டையும் பெற்றுக்கொண்டவர் , அது தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் குழு குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , பழுதடைந்த இறைச்சிகள் மீட்கப்பட்டதுடன் , சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் காணப்பட்டதுடன் , இறைச்சியை கொள்வனவு செய்தமைக்கான பற்று சீட்டுக்கள் இல்லாதமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , நீதிமன்ற விசாரணைகளில் உரிமையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. அதேவேளை உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் , பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தலுக்கு அமைய உணவகத்தில் திருத்த வேலைகள் செய்த பின்னர் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிக்கை கிடைக்கப்பெற்று மன்று திருப்தி படும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1382900
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வர்த்தக நிலையங்கள் பூட்டு. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை எமது பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1382941
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.