Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…

ulaa.jpeg?resize=700%2C1024&ssl=1

வீட்டின் பின்புறத்தில் மூங்கில் தடிகளை வெட்டி வீட்டுத்தோட்டத்திற்கு வேலி போட்டபடி இருந்தேன். மகள் என்னுடன் நிற்பதற்கு விரும்பினாள். அப்படி நிற்பதென்றால் நான் செய்யும் வேலையை நிறுத்தவேண்டும். வீட்டில் உள்ள சேவல் தன்னை கொத்திவிடும் என்று கத்துவாள்.

ஒரு சேவலுக்கு ஆறு பேடுகள் அவசியம் என்று எமக்கு கோழிகளை விற்ற பிரெஞ்சுப்பெண் சொன்னாள். இளம்பருவ சேவல் வளர்ந்து வர்ணங்களை வளர விட்டதோடு சண்டித்தனத்தை எங்களிடமும் காட்ட ஆரம்பித்திருந்தது. 

மகளைக்கண்டால் திரத்த ஆரம்பித்துவிடும். மகள் பெரிய தடியை வைத்திருந்தாலும் அதை தாக்கப் பயன்படுத்த மாட்டாள் என்பதை சேவல் எப்படியோ அறிந்து விட்டது. மகளுக்கு எப்போதும் ‘நீ பயம் கொள்வதை அறிந்துதான் அது உன்னை கொத்த வருகிறது. எதிர்த்து நில் ஓடிவிடும்’ என்பேன். அவள் கண்களை விரித்து கேட்பாள். ஆனால் ஒருபோதும் அதை எதிர்க்க மாட்டாள். நான் வேலையை விட்டுவிட்டு அருகே இருந்த கற்குந்தில் இருந்து அவளிடம் பேச ஆரம்பித்தேன்.

‘இதோ உன்னை தாக்க வந்தால் நீ அடிக்கலாம். எதற்காக அஞ்சுகிறாய் ?’ என்றேன்.

‘அப்பா, சேவலை நான் தொடர்ந்தும் எதிரியாக்க விரும்பவில்லை. நண்பனாக்க விரும்புகிறேன்’ என்று பிரெஞ்சு மொழியில் கூறினாள்.

என் சரீரம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. சூரியன் எங்களருகே விழுந்துகொண்டிருந்தது. பிளே வயல்களின் வருடல் காற்று வந்துகொண்டிருந்தது. என் மடியில் தடியோடு மகள் இருந்தாள். என் மூளை காற்றால் பிளக்கப்பட்டு பறப்பது போல இருந்தது.

***

தமிழின் நவீன இலக்கியத்தில் போர் பற்றிய பதிவுகள் பலவும் இருக்கின்றன. எண்ணமுடியா நட்சத்திரம் போல் கவிதைகள் மற்றும் கட்டுரைகள்.

போரியல் நாவல் என்றால் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கப்பால்’ அதன் சிறிய பகுதியை ஆரம்பித்து வைத்தது. ஹெமிங்வே யின் படைப்புகளில் விருப்பும் பாதிப்பும் உடைய ப.சிங்காரம் தொடர்ந்து எழுதாமல் விட்டது நமக்கு இழப்பு.

அவரைத் தொடர்ந்து ஈழம் 35 ஆண்டுகள் யுத்தத்தில் நனைந்தது. இருந்தும் அங்கிருந்து போரியல் நாவல்கள் மிகக்குறைவாகவே வெளியாகி உள்ளன. அசல் போரை பதிவு செய்யும் நாவல்களாக 1985 வெளியான ‘விடியலுக்கு முந்திய மரணங்கள்’ , 1992 இல் எழுதப்பட்ட ‘போருலா’. , தூயவனின் ‘போரும் மருத்துவமும்’ , குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’ , ‘அப்பால் ஒரு நிலம்’ மற்றும் முதலாம் உலக யுத்தம் பற்றிய ச.பாலமுருகனின் ‘டைகிறிஸ்’ .

சுகாஸ் என்ற த. பாலகணேசனால் கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் பற்றிய விடிவுக்கு முந்திய மரணங்கள் முதலாவது போர்பற்றிய பதிவு. இதை எழுதும்போது பாலகணேசனுக்கு வயது 21.

21/11/1992 இல் பலாலி இராணுவமுகாம் தாக்குதலில் 57 பேர் சாவடைந்தனர். அதில் ‘லியோ’ என்ற வீரனும் சாவடைகிறான். அப்போது அவனுக்கு இருபது வயது. அவனது நெஞ்சுப் பையில் ஒரு கையெழுத்துப்பிரதி இருக்கிறது. அதை எடுத்தவர்கள் வாசித்ததும் நெருப்பில் விழுந்த ஈயத்துண்டுபோல் ஆகிவிடுகிறார்கள்.

மாங்குளத்தில் இருந்த இராணுவ முகாம் தாக்குதல் பற்றி தன் அனுபவங்களை ஒரு நாவலாக எழுதி பையில் வைத்திருந்தான் லியோ. அந்த நாவலின் முடிவில்
‘மாங்குள இராணுவ முகாம் தகர்ப்பு நினைவுகள் இத்தோடு முடிவுறுகிற போதும் அடுத்து சிலாவத்துறை நினைவுகள் என் நெஞ்சில் பாயத்தொடங்குகின்றன..’ என்று முடிக்கின்றான். அவன் சிலாவத்துறை பற்றி எழுத முதல் மரணமடைந்து விட்டான்.
லியோ எழுத்து உலகுக்கு அவன் தனது பெயரை ‘மலரவன்’ என்று பதிந்திருந்தான்.
அவனது தந்தை ஒரு மருத்துவர். அத்தோடு மூத்த அண்ணன் வைத்திய கலாநிதி. போரில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அண்ணனுக்கு தம்பியின் உடல் சென்றடைகிறது. அதுதான் அண்ணனின் கண்ணீரும் தம்பியின் இரத்தமும் கலந்த இடம்.

மலரவனின் அழகியலான மொழி, சமூகப்பார்வை, மரங்களுக்காக வடிக்கும் கண்ணீர், காடுகளில் விழி தூங்காதிருந்து வானத்தையும் , நட்சத்திரங்களையும் கண்ணிமைக்குள் அடைத்துப்பார்க்கும் கவிதைப் பார்வை போருலாவை இன்றும் படிக்கும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அவன் இறந்தாலும் அவனது படைப்பு மனம் ‘போர் உலாவில்’ பேசிக்கொண்டே இருக்கிறது. இந்த சிறிய வயதில் எப்படி இத்தனை அவதாரம் கொள்ள முடிந்தது என்று ஏங்குகிறது மனம். அவனை பார்க்க முடியாது. அவன் எழுதிவிட்டு செத்துப்போனவன். தான் எழுதியது நூலாகும் என்றுகூட அறியாத போராளி.

1990 கார்த்திகை 9ம் திகதி மாங்குளம் இராணுவ முகாமை தாக்குவதற்கு உழவு இயந்திரத்தில் மணலாற்றில் இருந்து புறப்படுகிறார்கள். களமுனையை சென்றடைய காடுகளூடாக நீண்ட பயணம். காடுகளுக்குள் மரங்களை வெட்டி குற்றிகளைப்போட்டு அதன் இடைவெளிகளில் மண்ணை நிரப்பி தேவையான இடங்களில் பாதை அமைத்து பயணிக்கிறார்கள்.

‘பால்போல தெறித்த வெண்ணிலவை முகில்கள் வெட்டியோடின. விரைவில் அவற்றை கலைத்துவிட்டு நிலவு வெளியே வந்து சிரித்தது’ என்ற வரி மலரவனின் அழகியலுடைய குறியீட்டு மொழியின் வெளிச்சம்.

‘எவ்வளவு நல்ல காடு, தாய் மாதிரி இவ்வளவு காலமும் எங்களை காத்தது இதுதானே, இனி எப்ப வரப்போறம் ? ஆவலை அடக்க முடியாமல் கைகளை உயர்த்தி ‘டாட்டா’ காட்டினேன்.’

இரவு வேளையில் போராளிகள் நகர்வை அறிந்து உலங்குவானூர்தி தாக்கத்தொடங்குகிறது. களமுனையை அடைய முதலே போர் வந்து சிவப்புப் பழங்களை அனுப்பி உயிர் கேட்கிறது. அத்தடையை நீக்கிக் கடந்தால் அலம்பில் ஊர் எங்கும் தென்னந்தோப்புகள்.

‘பெரிய குடை போன்ற தென்னைகள் சுமக்க முடியாமல் தேங்காய்களைச் சுமந்த வண்ணம் காற்றில் தலைவிரிகோலமாக தள்ளாடுவது பார்க்க பயமாக இருந்தது’
இரவுப் பயணத்தில் தடுமாறிய உழவு இயந்திரம் பிரண்ட போது பெட்டிக்குள் நசிந்து போன வசந்தனின் ஒரு கையும் காலும் மோசமாக பாதிக்கப்படுகிறது. அருகே இருந்த கிராமத்து வீட்டில் அவசர வைத்தியம் நடகக்கிறது அங்கிருந்த இளம் பெண்ணைப் பார்த்து ‘ அக்கா நீங்கள் சரியா எங்கட மூத்தக்கா வித்தி மாரி’ என்கிறான். 

களப்படுக்கையில் குருதியில் தோய்ந்திருக்கும் தோழனைப்பார்த்து ‘தேங்காய்‌ நெய்விளக்கு உருகி உருகி அழுதது.’ என்ற எழுத்தின் நுண்மை மனதின் அறையெங்கும் புகுந்துவிடக் கூடியது.

முள்ளியவளை கடந்து முறிப்பு குளக்கட்டில் ஓய்வெடுக்கும் போது அவர்களை சூழ்ந்துகொண்ட மாணவர்கள்,

‘நீங்கள் எத்தனை ஆமியை சுட்டனிங்கள் ?’

‘ஏன் சுடவேணும் அவங்கள் பாவமல்லோ?’

‘அப்ப.. எங்கட மாமாவை பெரியப்பாவை ஏன் சுட்டவங்கள் ?’

களமுனையில் பசியோடும் , தூக்கம் இன்றிய கண்களோடும் இருக்கும் போராளிகளை கண்ட தாய்மார் தங்கள் வீடுகளில் இருந்து உணவுடன் படையெடுத்த போது ‘அருவி பாய்கிறதா ? அன்பு பாய்கிறதா ? தெரியவில்லை’ என்று நெகிழ்ந்த சொல்லில் மலரவன் மொழியை மலர வைக்கிறான்.

மாங்குளம் இராணுவ முகாமை மறைந்திருந்து பார்வையிடுவதும் , அதன் இராணுவத்திட்டமிடல்களும் எந்த நேரத்திலும் இராணுவச் சூட்டுக்கு ஆளாகும் நிலையில் நடைபெறுகிறது.

மயில் ஒன்று தூரத்தே அகவியது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னத்தொடங்கின. மாரி கால மழையில் உப்பிக்கிடந்த வெள்ளைச்சுவர்களில் சிறிது சிறிதாய் பொத்தான்கள் இடப்பட்டிருந்தன. கூரையூடாக வானத்தின் நிர்வாணம் தெளிவாய்த்தெரிந்தது.’

முப்பத்தி நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் மாங்குளத்தின் படத்தை மலரவனின் எழுத்து மனதில் வரைகிறது.

அவர்கள் தாக்குதலுக்கு நேரடி உறுதிப்படுத்தல்களை மேற்கொள்ள 40 மீற்றரை கடக்க 40 மைல் சுற்றிவரவேண்டிஇருந்தது. தோழர்களின் இழப்போடும் கரும்புலி வீரன் போர்க்கின் சக்ககைவண்டித்தாக்குதலோடும் மாங்குளம் போராளிகளிடம் வீழ்கிறது.
விமானங்கள் சகடை, புக்காரா, பைற்ரர் போராளிகளை குண்டுகளால் சல்லடை போட்டபோதும் மனதில் இருந்த அவர்களின் பலம் இயந்திரங்களை வென்று நிலத்தை மீட்கிறது.

‘மனிதன் உணவுக்காக மனிதனை கொல்லவில்லை. ஆக்கிரமிப்புக்காக கொல்கிறான்’ என்ற மலரவனின் ஏக்கம் மனித மூளையின் இருட்டான முரண்பாட்டுச்சிக்கலை கேள்வி கேட்கிறது.

நாவலைப் படிக்கிறபோது சக போராளிகளின் அனுபவங்களும், அவர்களை ஆயுதமேந்தத்தூண்டிய கதைகளும், வேறுபட்ட மன உணர்வுகளோடு ஒன்றுசேர்ந்து ஓர்மமாகி நிற்கும் இளைஞர்களும் சுதந்திரத்திற்காக தாம் புன்னகையோடு தோளில் சுமந்தபாரத்தை இனிய மொழியில் பதிவு செய்கிறது.

வாசகனை தாக்குதல் நடைபெறும் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது. போர் எத்தனை கொடியது ? எத்தனை மானுட வலி நிறைந்தது ? மனிதனை மனிதன் கொல்லும் அபந்தத்தின் சந்தியில் நிறுத்தி சிந்திக்கத் செய்கிறது.

ஓர் போராளி இறந்த செய்தியை அவன்வீட்டுக்குச் சென்று தாயிடம் மரணச் செய்தியை சொல்லும் போராளிகளின் மனதையும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் அடிக்கடி மனம் போர்க் காலங்களில் சிந்திப்பதுண்டு. மலரவனின் வீட்டுக்கு அச்சத்தோடு சென்ற போராளிக்கு வேறு விதமான அனுபவம் கிட்டுகிறது. அழுது கொண்டிருந்த தாய் போராளிகளை கண்டாலும் அழுகையை நிறுத்திவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்துவந்து கொடுக்கிறார். அது வங்கிக்கணக்கு. மலரவன் பிறந்தபோது தந்தை அவன் பெயரில் இட்ட பணம் லச்சங்களாக பெருகி அதில் இருந்தது‌ என்று பின்னுரையில் சு.ப தமிழ்ச்செல்வன் பதிவு செய்கிறார்.

என்‌ மனம் மலரவனை‌ இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய பாரத்தை புன்னகையோடு சுமந்திருக்கிறான் ? அத்தனை மலர்களின் வாழ்வும் அர்த்தமற்றதா ? என்று அங்கலாய்த்தபடி‌இருந்தது.

***

மகள்‌ ‘சேவல் வருகிறது’ என்று என்மீது தொங்கி ஏறினாள். அவள்‌ என்னிடம்‌ ‘சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை’ என்ற சொல் கல் வீழ்ந்த குளமாக வட்டங்களை உருவாக்கியது.

‘மகளே, உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்‌ இதை நீ எங்கே‌ கற்றுக்கொண்டாய் என்றேன்?’

தமிழிலும் பிரெஞ்சிலுமாக அவள் இப்படிச்சொன்னாள், ‘அப்பா, என் பள்ளியில் என்னை செயிம் , மக்சிம் , மரியா ஆகியோர் விளையாட்டுக்கு சேர்ப்பதில்லை. நான் போனால் விரும்பமாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் நான்‌ இருந்தால் எழுந்து சென்றுவிடுவார்கள். ‘

‘ஓ..என் செல்லமே நீ ஏன் மடம் லுனாவிடம் சொல்லவில்லை ?’

‘இல்லை அப்பா. அப்படி சொன்னால் மடம் லுனா அவர்களை புனி செய்தால் அவர்கள் மேலும் எனக்கு எதிரி ஆகிவிடுவார்கள்’

‘அப்படி என்றால் உன்னோடு‌ யாரும் விளையாடமாரட்டார்களா ?’

‘இல்லை. மற்றவர்கள் அவர்களோடு விளையாடுவதால் என்னை சேர்க்க மாட்டார்கள். ஆனால் நான் இப்போது தனியே ‌விளையாடுவேன். ஒருநாள் அவர்கள் எனக்கு அமி ஆவார்கள். அப்போது நான் சேர்ந்து விளையாடுவேன்.

‘உனக்கு வருத்தமாக இல்லையா ?’

‘இல்லை. நான்தானே தனியே விளையாடப்பழகிவிட்டேன். அதனால்தான் சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை அப்பா. எனக்கு நண்பர்கள் வேண்டும்’ என்றாள்.

௦௦௦

அகரன் 

பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.

https://akazhonline.com/?p=7333

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. நான்தானே தனியே விளையாடப்பழகிவிட்டேன். அதனால்தான் சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை அப்பா. எனக்கு நண்பர்கள் வேண்டும்’ என்றாள்.

அருமை அருமை........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இதை முந்தாநாள் அகழில் வாசித்து விட்டு அப்படியே மனம் கலங்கி இருந்தேன். இரண்டு கதைகளுமே குத்தி தைத்திருந்தன மனதை.......... 

சில பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள்.

பிளே வயல்களின் = கோதுமை வயல்களின்

அவர்களை புனி செய்தால் = அவர்களைத் தண்டித்தால்

எனக்கு அமி ஆவார்கள் = எனக்கு நண்பர் ஆவார்கள்

கதை எழுதியுள்ள விதம் மொழிபெயர்ப்பு இல்லாமலே புரியக்கூடியதாக உள்ளது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

சில பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள்.

பிளே வயல்களின் = கோதுமை வயல்களின்

அவர்களை புனி செய்தால் = அவர்களைத் தண்டித்தால்

எனக்கு அமி ஆவார்கள் = எனக்கு நண்பர் ஆவார்கள்

கதை எழுதியுள்ள விதம் மொழிபெயர்ப்பு இல்லாமலே புரியக்கூடியதாக உள்ளது என்று நினைக்கிறேன்.

👍....

எனக்கு இந்தச் சொற்கள் முற்றிலும் புதியவை, ஆனால் வாசிப்பின் போது இந்த சொற்களின் இதே அர்த்தங்கள் புரிந்தது போலவே இருந்தது.

கதையின் ஒவ்வொரு வரிகளிலும் ஒரு நிதானம் இருந்தது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“போர் உலா” இதுவரை படிக்காதவர்களுக்கு:

https://noolaham.net/project/729/72885/72885.pdf

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரவனின் 'போர் உலா'வை முன்னிட்டு சில நினைவுகள்..
**********

1.
மலரவன் எழுதிய 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இதை எனது பதின்மத்தின் தொடக்கத்தில் தமிழில் வந்தபோது வாசித்திருக்கின்றேன். அப்போது யாழ்ப்பாணம் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 'போர் உலா'வை சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கருகில் இருந்த புத்தகசாலையில் வாங்கி  வாசித்திருக்கின்றேன். 13/14 வயதுகளில் கையில் காசு புழங்குவதே அரிதென்பதால், புதுப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதென்பது பெரும் சாதனை போல அன்று இருக்கும். அப்படி காசு கொடுத்து  புதிதாய் வாங்கிய இன்னொரு புத்தகம் புதுவை இரத்தினதுரையின் ' பூவரம் வேலியும், புலுனிக் குஞ்சுகளும்' என்ற கவிதைகளின் பெருந்தொகுப்பு.

இப்போது 'எழுநா'வில் எழுதுவதற்காக ஆங்கிலத்தில் வந்த 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கின்றேன், இந்த நூலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாலதியை நான் வன்னியில் நேரில் சந்தித்திருக்கின்றேன். முப்பது வருடங்களுக்கு மேல் நியூசிலாந்தில் வசித்துவிட்டு மீண்டும் தாய்நிலம் அவர் அப்போது திரும்பியிருந்தார். மனிதவுரிமைகள் சம்பந்தமாக செஞ்சோலைக்கு  வந்து  அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார். 

மாலதி, செஞ்சோலைக்குப் பொறுப்பான ஜனனி அக்காவிடம், 'இப்படி அநாதரவராக இருக்கும் பெண்பிள்ளைகளை, இயக்கப் போராளிகளான நீங்கள் வளர்ப்பதால் அவர்களும் இயக்கத்தில் இயல்பாக சேர்ந்து விடுவார்களே, இது சரியில்லை அல்லவா?' எனக் கேட்டபோது நானும் சாட்சியாக இருந்திருக்கின்றேன். 

அதனால்தான் அவர்களை இப்போது உள்ளே வைத்து படிப்பிக்காமல், மற்றவர்களும் போகும் சாதாரண பாடசாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என்று பல உதாரணங்களை ஜனனி அக்கா சொல்லிக் கொண்டிருந்தார். நானும், பின்னர் அங்கிருந்த செஞ்சோலைக்குப் பொறுப்பான பெண் போராளிகளிடம், இங்கே வளரும் பிள்ளைகள் இயக்கத்தில் போய்ச் சேர்வதில்லையா எனக் கேட்டேன். அவர்கள் அப்படிச் சேர நாங்கள் இயக்கத்தில் விடுவதில்லை. என்றாலும் சில பேர் அப்படி இங்கிருந்து தப்பியோடி வேறு பெயரில் இயக்கத்தில் இணைந்திருக்கின்றார்கள் என்றும், அவர்களை மீண்டும் இங்கே மீட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம் என்றும் சொன்னார்கள். அப்படி ஓடிப்போய் இயக்கத்தில் சேர்ந்து திரும்பி வந்த சிலரை செஞ்சோலைக்குள் சந்தித்திருக்கின்றேன். 

இவற்றையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் இயக்கத்தை விளங்கிக் கொள்வதென்பது மிகச் சிக்கலான விடயம். அதுவும் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய, தம்மை மீறி எவரையும் இயங்க விடாத ஒரு இயக்கத்தை ஒற்றைப்படையாக வைத்து எதையும் எளிதில் விளங்கிவிடவும் முடியாது.  எனவேதான் இப்போது புலிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ மிகைப்படுத்தி வரும் படைப்புக்களை மெல்லிய புன்முறுவலோடு விமர்சிக்கக்கூட விருப்பில்லாது கடந்து போய்விட முடிகின்றது. 

மனிதவுரிமைகள் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்த இதே மாலதி வன்னிக்குள் இறுதியுத்தம் முடியும்வரை புலிகளின் சமாதானக் காரியாலயத்தில் இயங்கியிருக்கின்றார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். யுத்தம் மிக மோசமாக நடந்த காலங்களிலே, வேறு எதுவும் செய்வதற்கு வழியற்றபோது, மாலதி இந்தநூலை வன்னிக்குள் இருந்தபடி தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றார் என்ற குறிப்பு இந்த ஆங்கில நூலில் இருக்கின்றது.

இறுதி யுத்தம் அவரை அதிஷ்டவசமாக  உயிர் தப்ப விட்டிருக்கின்றது. அதனால்  மலரவனின் 'போர் உலா'வை நாங்கள் ஆங்கிலத்திலும் இப்போது வாசிக்க முடிகின்றது. ஆங்கிலப் பதிப்பை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது.

2.

ஈழப் போராட்ட வரலாற்றிலே 'போர் உலா' மிக முக்கியமான பிரதி. மாங்குளம் இலங்கை இராணுவம் முகாமை அழிக்க, மணலாற்றில் இருந்து (இப்போது சிங்களக்குடியேற்றம் நிகழ்ந்து வெலிஓயா என அழைக்கப்படுகிறது), மாங்குளம் செல்லும் பயணத்தையும், அம்முகாம் மீட்கப்பட்டதையும் மலரவன் இதில் லியோ என்கின்ற கதாபாத்திரத்தினூடாக எழுதுகின்றார். 

மணலாற்று காட்டிலிருந்து தொடங்கும் பயணம் இறுதியில் மாங்குளம் இராணுவ தகர்ப்புடன் முடிவடைகின்றது. ஆனால் அந்தப் பயணத்தில் லியோ என்கின்ற பாத்திரம் சந்திக்கும் மக்கள், வறுமை/சாதியப் பெருமிதங்கள், இராணுவத்தால் கொல்லப்பட்ட மனிதர்களின் உறவுகள் என்று பலவற்றை அவர் தொட்டுச் செல்கின்றார். ஒருவகையில் இது அந்தக்காலத்தைய வன்னி மக்களின் வாழ்க்கையை சொல்லும் ஓர் முக்கிய ஆவணமாகவும் ஆகின்றது. மேலும் அவர் மக்களை/போராட்டத்தை/யுத்தத்தை மட்டுமில்லாது மிக நிதானமாக இயற்கையை விவரித்துச் செல்வது அவ்வளவு அருமையாக இருக்கின்றது.

இதைவிட வியப்பாக இருப்பது, மலரவன் போர் உலா'வை எழுதும்போது அவருக்கு 18 வயதேதான். இத்தகைய ஓர் நடந்த சம்பவங்களை புனைவிற்குரிய மொழியில் ஒருவர் தனது பதின்மத்திலேயே எழுதிவிட்டார் என்கின்றபோது ஒரு வியப்பு வருகின்றது. மலரவன் பின்னர் அவரது 20 வயதில் பலாலியில் நடந்த முக்கிய தாக்குதலில் இதன் பிறகு இரண்டு வருடங்களில் இறந்துவிடுகின்றார். 

அந்தப் பலாலி தாக்குதல் என் நினைவில் நன்கு  இருக்கின்றது. ஏனெனில் எங்கள் கிராமங்களை அச்சுறுத்தும் முக்கிய இராணுவ/விமானத் தளமாக பலாலி கூட்டுப்படைத்தளம் அன்று இருந்தது. அந்தத் தாக்குதலில் இயக்கத்தின் முக்கியமானவராக செல்வராஜா மாஸ்டர் என்பவர் உள்ளிட்ட 50இற்கும் மேற்பட்ட போராளிகள் இறந்திருந்தனர். எனினும் 'போர் உலா' எழுதிய மலரவனும் இறந்தார் என்பதை அப்போது அறிந்தேனில்லை.

இந்தப் பிரதி மலரவன் இறந்தபின்னே  அவரது உடமைகளோடு கண்டுபிடிக்கப்பட்டு இயக்கத்தால் வெளியிடப்படுகின்றது. 
 
இருபது வயதுக்குள் உக்கிரமான சமர்க்களத்தில்  களமாடியபடி மலரவன் தனியே 'போர் உலா' மட்டும் எழுதவில்லை. 'புயல் பறவை' என்ற நாவலையும், வேறு பல கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கின்றார். அவரின் ஒன்றிரண்டு  புனைவு நூல்கள் கிடைக்காமலே அழிந்து போயிருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது. 'போர் உலா' முடியும்போது அவர் அடுத்து பங்குபற்றிய சிலாவத்துறை  இராணுவ முகாம் தாக்குதல் பற்றியும் எழுத இருப்பதான குறிப்பையும் பார்க்கின்றோம். அதை எழுத முன்னர் மலரவன் காலமாகிவிட்டார் என்பது துயரமானது. அந்தச்  சிலாவத்துறை சமரிலே மலரவன் படுகாயமுற்று தனது சிறுநீரகம் ஒன்றையும் இழக்கின்றார்.

 'புயல் பறவை'  நூல், பின்னர் மலரவனின் தாயால்  வெளியிடப்பட்டிருக்கின்றது. 'புயல் பறவை' யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயக்கத்தில் போகின்றவர்களையும், இயக்கத்தில் பெண்களைச் சேர்ப்பது குறித்த உரையாடல்களும் இருக்கின்றன என அறிகின்றேன். (இந்நூல்களைத் தேடுபவர்க்கு, 'போர் உலா', 'புயல் பறவை' இரண்டையும் 'விடியல்' பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கின்றது).

மலரவன் சிலாவத்துறை சமரில் (சிறுநீரகம் ஒன்றை இழந்து) காயங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரின் தாயாரோடு இந்தப் பிரதிகளைப் பற்றிப் பேசியும், திருத்தங்களையும் செய்திருக்கின்றார் என்று அவரது தாயான எழுத்தாளரான மலரன்னை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் -2000 பீரங்கிப்படையில் முன்னணிப் படைவீரராக இருந்தவர். இது இயக்கத்தின் உள்ளூர்த் தயாரிப்பு மோட்டார்களைக் கொண்டிருந்தது. யாழ் கோட்டையை அன்று இயக்கம் கைப்பற்றியதில் இந்தப் படையணியின் பங்கும் அளப்பரியது என்பதை அன்றையகாலத்தில் யாழில் இருந்தவர்க்கு தெரியும். பசீலன் என்பவர் வன்னி மாவட்டத் தளபதியாக இருந்து இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டவர். அவர் நினைவாக இந்தப் படையணி தொடங்கப்பட்டது.

போர் உலாவிலும் மலரவன் இந்தப் படையணியின் ஒருவராகவே தாக்குதலுக்கு வருகின்றார். மணலாற்றில் இருந்து பீரங்கிகளையும் நகர்த்த வேண்டும். அதேசமயம் இலங்கை இராணுவத்தின் விமானங்களின் கண்களுக்கும் தெரியக் கூடாது. இதை நகர்த்தும்போது சாதாரண மக்களும் காணக்கூடாது. இல்லாவிட்டால் ஒரு தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற செய்தி பரவி, முழுத்தாக்குதலுமே தோல்வியில் முடியும் ஆபத்தும் இருக்கின்றது. 

3.

மலரவன், மாங்குளம் முகாம் உள்ளிட்ட சில தாக்குதல்களின் பங்குபற்றியபின், அவருக்கு இருந்த எழுத்துத் திறமையால் புலிகள் அவரை ஒவ்வொரு சண்டையின்போதும் நடப்பவற்றையும், அதை ஆராய்ந்து எழுதுவதற்குமென நியமித்திருக்கின்றனர் (பசீலன் -2000 அணியையும் பின்னர் இயக்கம் கலைத்து விட்டிருந்தது). மலரவன் எழுதிய முக்கிய இன்னொரு சண்டை அனுபவம், அவரின் பொறுப்பாளரான  அப்போது இருந்த தமிழ்ச்செல்வனால் பாராட்டப்பட்டபோதும், நிறைய இராணுவ இரகசியங்கள் அதில் இருந்ததால் அது பிரசுரிக்காமலே போய்விட்டது. அதுவும் வெளிவந்திருந்தால் இன்னொரு 'போர் உலா' போல  முக்கியமான படைப்பாக ஆகியிருக்கும்.

மாங்குள முகாம் தகர்ப்பு பெரும் செய்தியாக எங்களின் காலத்தில் பேசப்பட்டது. அதில்தான் புலிகளின் முக்கியமான ஒருவராக இருந்த லெப்.கேணல் போர்க் தற்கொலைப்போராளியாக சென்று முகாம் தகர்ப்பைத் தொடக்கி வைத்தவர். எங்கள் காலத்தில் ஒருவருக்கு லெப்.கேணல் என்ற பதவி கொடுக்கப்பட்டால், பின்னரான காலத்தில் கேணல்/பிரிகேடியர் போன்ற பெரும் தளபதிகளுக்கு நிகர்த்தது அது. புலிகளின் மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்த தளபதிகளான ராதா, விக்டர் போன்ற மிகச் சிலருக்கே இந்த லெப்.கேணல் பதவி அப்போது கொடுக்கப்பட்டிருந்தது ( எங்களின் காலத்தில் முதலாவது கேணல் பட்டம் பின்னர் கிட்டுவோடு தொடங்கியிருக்க வேண்டும்). போர்க்கின் புகைபடத்தோடு வந்த மாங்குளம் முகாம் தகர்ப்பை அவ்வளவு பதைபதைப்புடன் அன்று வாசித்ததும் நினைவில் இருக்கின்றது.

இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. அதுபோல இன்னொரு சுவாரசியமான (அப்படிச் சொல்லலாமோ தெரியாது) விடயமும் நினைவுக்கு வருகின்றது. வன்னியில் இருந்த சமயம், எனக்கு பால்ராஜோடு பேசும் ஒரு சந்தர்ப்பம் நண்பர்களோடு வாய்த்தது. அப்போது பிரிகேடியர் தரத்தில் இருந்த பால்ராஜ், தற்செயலாக மாங்குளம் முகாம் தகர்ப்புப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மலரவன் எழுதிய போர் உலாவில் வந்த தாக்குதலை  முன்னின்று நடத்திய அன்றைய வன்னித் தளபதியாக பால்ராஜே இருந்தவர்.
 
பால்ராஜ் அங்கே நடந்த தாக்குதலையோ, அவருக்கு நெருக்கமாக இருந்த போர்க் தற்கொலைப்போராளியாகப் போனது பற்றியோ எதுவும் பேசவில்லை. அவர் எங்களுக்கு அந்த சமரில் களமாடிய வீரமிக்க இலங்கை இராணுவ மேஜர் ஒருவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் 

அந்த மேஜர்தான் அந்த இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவர். புலிகள் கிட்டத்தட்ட முகாமைத் தகர்த்து வெல்லும் நிலை வந்துவிட்டது. அந்த  இராணுவ மேஜர் உயிரோடு இருந்த மற்றவர்களையெல்லாம் தப்பிப் போகச் சொல்லிவிட்டு, அந்த முகாமைவிட்டு வெளியேறாமல் இறுதிவரை சண்டையிட்டு உயிர் நீத்தவர் என்று சொல்லிக் கொஞ்சம் இடைவெளி விட்டு, 'அவன் ஒரு மரியாதைக்குரிய வீரன்' என்றார். அப்போது நான்  அவரில் பார்த்தது எதிர்த்தரப்பின் வீரத்தை மதிக்கும் ஓர் உயரிய தளபதியின் ஆளுமையை.

4.

மலரவனின் படைப்பும், வீரமும் நின்று இயங்கிய ஓர்மத்தை, தமிழ்ச்செல்வன் இந்த நூலின் பிற்பகுதியில் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிடுகின்றார். சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதலில், பசீலன் -2000 அணி கடும் இழப்பைச் சந்திக்கின்றது. இந்த அணியில் மலரவனோடு பல சண்டைகளில் சேர்ந்து நின்ற அவரது நண்பன் (மேஜர்) லம்பா இறந்துவிடுகின்றார். அவ்வளவு வேதனையோடும், கோபத்தோடும் இருக்கும் மலரவனை விட்டால் அவனும் உணர்ச்சி நிமித்தம் இராணுவ எல்லைக்குள் புகுந்து இறந்துவிடுவான் என்று தமிழ்ச்செல்வன் அஞ்சுகின்றார். அந்தக் கோபத்தை, அந்த உக்கிர சண்டையின் நடுவிலும் எங்கோ ஒரு மூலையில் ரோர்ச் லைட்டின் உதவியுடன்,  லம்பா பற்றிய நினைவுக்குறிப்பை எழுதிவிட்டு அதை பத்திரிகைக்கு அனுப்பிவிடுங்கள் என்று மலரவன் கொன்டு வந்து தந்தான் என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகின்றார். அதேபோன்று சிலாவத்துறை தாக்குதலில் இறுதிநாள்களில் பீரங்கியை இராணுவத்துக்கு அருகில் நகர்த்தி  அவ்வளவு உக்கிரமானமாக சண்டை செய்தான் என்றும், இவன் இனி தப்பியே வரமாட்டான் என்று நம்பியவளவுக்கு அவனது மூர்க்கம் அப்படி இருந்தது என்றும் தமிழ்ச்செல்வன் பதிவு செய்கின்றார். இச்சமரிலே மலரவன் காயமடைந்து அவரது சிறுநீரகமொன்றையும் இழந்திருக்கின்றார்.

மலரவன் போல அன்றைய காலங்களில் பல போராளிகள், படைப்பாளிகளாகவும் பரிணமித்தார்கள். மேஜர் பாரதி, கப்டன் கஸ்தூரி, 2ம். லெப்.வானதி, பின்னர் மலைமகள் என பெண்களிடையேயும் வீரியமிக்க பல படைப்பாளிகள் தோன்றினார்கள். அவர்களின் பெரும்பாலான படைப்புக்கள் அன்றைய காலங்களில் தொகுப்புக்களாகியபோதும் இப்போதைய தலைமுறைக்குக் கிடைப்பதில்லை. இந்தப் பெண்களின் சிலர் இயக்கம் படுமோசமாக முதலில் தோற்ற ஆனையிறவு முகாம் ('ஆகாய கடல் வெளி சமர்') தகர்ப்பில் இறந்துபோனவர்கள். 

இன்று சிலர், தாம் ஒன்றிரண்டு வருடங்கள் இயக்கங்களில் இருந்து தம்மைத் தொடர்ந்து  முன்னாள் போராளிகளாக முன்வைக்கும்போது, மேலே குறிப்பிட்டப்பட்டவர்கள் போராளிகளாகவும் படைப்பாளிகளாகவும் இருந்து மரணித்தவர்கள் என்பதை நாம் நினைவில் இருத்தவேண்டும். அவர்களே மிகுதி அனைவரையும் விட போராளிப் படைப்பாளிகளாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவர்கள்.  

ஒருவர் தன்னை கடந்தகாலத்தில் போராளியாகவோ அல்லது ஆதரவாளராகவோ முன்வைத்து பொதுவெளியில் பேசினால், அவர்கள் எந்தக்காலத்தில், எப்போது அப்படி இருந்தார்கள் என்பதை தமது நூல்களில் தம்மைப் பற்றிய அறிமுகத்தில் முன்வைக்க வேண்டியது குறைந்தபட்ச அறமாகும். ஏனெனில் அதுவே தமது முழு வாழ்க்கையையே களத்தில் காவுகொடுத்த மலரவன், பாரதி, கஸ்தூரி, வானதி, மலைமகள் என்கின்ற எண்ணற்ற போராளிப் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.

*****************
இளங்கோ டிசே - முகநூலில்

  • கருத்துக்கள உறவுகள்

மனது..கனக்கிறது....நேரில் இருப்பது போன்று.....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.