Jump to content

பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

p0hzkk6r.jpg

p0hzkn8j.jpg

பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். 

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோருக்கு உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததற்காக அவர் பாராட்டுகிறார்: “என் குடும்பத்தில் சமையல் நிச்சயமாக இயங்குகிறது. இந்த அற்புதமான காரமான சமையல் பின்னணியை என் பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர்கள் சிறந்த சமையல்காரர்கள் மற்றும் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் இலங்கை சுவைகளை உபசரிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி. என்கிறார் பிரின் பிரதாபன்.

https://www.bbc.co.uk/mediacentre/2024/masterchef-series-20-champion-crowned?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR1Xp0TigbKLvKC69u3TisPLlR1ZFAtLbUQjw4aQVM57xQHJuk8xB0rrBVI_aem_ZmFrZWR1bW15MTZieXRlcw

பிரின் பிரதாபனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பின்னணியே புதிய சுவையான உணவுகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தை தந்தது – தமிழ் கலாச்சாரத்திலிருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டேன் - பிரிட்டனின் மாஸ்டர் செவ் சம்பியன் பிரின் பிரதாபன்

Published By: RAJEEBAN   24 MAY, 2024 | 11:58 AM

image
 

பிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியான மாஸ்டர் செவ் 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்றிபெற்றுள்ளார்.

தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் தனது தமிழ் பின்னணியிலிருந்து  தைரியமான ஆக்கபூர்வமான சுவைகளின் சேர்க்கைகளை உருவாக்கப்பெற்ற உத்வேகத்தின் காரணமாகவே மாஸ்டர் செவ்வில் வெற்றிபெற முடிந்தது என தெரிவித்துள்ளார்.

Brin_MasterChef1.jpg

தனது பெற்றோர்களே தனக்கு உணவு மற்றும் சுவையின் மீதான ஆர்வத்தை தூண்டினார்கள் என அவர் தெரிவித்துள்ளார் 

பிரின் பிரதாபனின் தந்தை கோபால் ஒரு பொறியியலாளர் தாயார் டார்க்கே வங்கியில் பணிபுரிகின்றார்.

2405_Brin_MasterChef7.jpg

எனது சமையலில் தமிழ் கலாச்சாரம் முக்கிய பங்கு வகித்தது இந்த விடயத்தில் நான் அதிஸ்டசாலி என அவர் தெரிவித்துள்ளார்.

எனது பெற்றோர் மிகச்சிறந்த சமையல்திறன் மிக்கவர்கள் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் சுவையால் வழிநடத்தப்படும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது என அவர் தெரிவித்துள்ளார்

Brin_MasterChef8.jpg

தமிழ் பின்னணியை பொறுத்தவரை ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது சிலர் பொருட்களை சேர்க்க முடியாது சில பொருட்களை சேர்க்க முடியும் சுவைகள் சிலவேளை ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது தமிழ் கலாச்சாரத்திலிருந்து பாடங்களை கற்று நான் தயாரிக்கும் பல உணவு வகைகளில் அவற்றை சேர்த்துள்ளேன் ஐரோப்பிய உணவு வகைகளிலும் சேர்த்துள்ளேன் எனவும் அவர் தமிழ்கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்

Brin_MasterChef9.jpg

https://www.virakesari.lk/article/184368

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலை பாண் சுட்டவர் இலங்கை போய் ரணிலின் செல்லப்பிள்ளையாய் இருந்திட்டௌ வந்தவர்..

கில்மிசா கண்டால் வரச்சொல்லி  மாமனைத்தேடிவிட்டு...கடைசியில் ரணில் அங்கிளிடம் சரணடைந்தார்.

இப்ப இவர்..எப்ப லங்கா போவாரோ...ரணிலுக்கே ரசம் வைத்துக் கொடுப்பாரோ.. வாழ்க நம்மினம்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

பிரான்சிலை பாண் சுட்டவர் இலங்கை போய் ரணிலின் செல்லப்பிள்ளையாய் இருந்திட்டௌ வந்தவர்..

கில்மிசா கண்டால் வரச்சொல்லி  மாமனைத்தேடிவிட்டு...கடைசியில் ரணில் அங்கிளிடம் சரணடைந்தார்.

இப்ப இவர்..எப்ப லங்கா போவாரோ...ரணிலுக்கே ரசம் வைத்துக் கொடுப்பாரோ.. வாழ்க நம்மினம்

இவர்கள் யாவரும் தங்களது தொழில்களில் வளர்ந்து வருபவர்கள்....... அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் யாரையும் பகைக்க முடியாதுதானே .......!

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மறைமுகமாக அமெரிக்காவின் Rule based world order  ஐ ஜெய்சங்கர் சுட்டிக்காட்டுகிறார்.😁
    • சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -3 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -1 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -2
    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.