Jump to content

பப்புவா நியூகினி நாட்டில் 670 பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக ஐநா அதிகாரி தகவல் - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பப்புவா நியூ கினி நிலச்சரிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 நிமிடங்களுக்கு முன்னர்

ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார்.

"இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

"நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார்.

பப்புவா நியூ கினி நிலச்சரிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பப்புவா நியூ கினி நிலச்சரிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர்.

ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்த தமிழர்களும் இருக்கிறார்கள்..பெற்றோர் மட்டும் தமிழ் பேசுபவர்களாகவும் அநன் பின் வந்தவர்களுக்கு தமிழ் பற்றி மற்றும் நம் நாடு பற்றி அதிகம் தெரியாத பல் வேறு பட்ட மக்களோடு கலந்தவர்களாக இருக்கிறார்கள்.

  • Thanks 1
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் 2000 பேர் உயிரோடு புதைந்துள்ளனர் - வெளியான அதிர்ச்சி தகவல்

Papua_New_Guinea_Landslide_84150.jpg

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் உறங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர்.

இதனால் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், 650-க்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

https://thinakkural.lk/article/302547

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

03-7.jpg?resize=750,375&ssl=1

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு – புதையுண்ட 6 கிராமங்கள்.

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக, அந்நாடு பேரிடர் மேலாண்மைதுறை ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில், அவுஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் பப்புவா நியூ கினியாவில், கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாரிய நிலச்சரவு ஒன்று ஏற்பட்டிருந்தது.

இந்த நிலச்சரிவில் குறைந்தது 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளானதாக குறிப்பிடப்படுகினது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வந்த நிலையில், சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவுக்குள் புதையுண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

முன்னதாக இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 670க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த்தாக ஐ.நா. தெரிவித்தது.

இந்நிலையில், பப்புவா நியூ கினியவில் பதிவான இந்த நிலச்சரிவில் சிக்குண்டு 2000 க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக தற்போது அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மண்சரிவில் கட்டிடங்கள், விவசாய நிலங்கள் அழிந்ததுடன், வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில்,; மண்ணுக்குள் புதையுண்ட வீடுகள் 8 மீற்றர் ஆழத்தில் புதைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், மேலும்;, கூடுதலாக மீட்பு படையினர் தேவைப்படுவதாகவும் மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1384390

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.