Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                   பண்ணா யாழிசையா ?  

                                                                                                                - சுப.சோமசுந்தரம்

            தோழர் பேரா..கிருஷ்ணன் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது வழக்கம்போல் அவர் பக்தி இலக்கியத்துள், குறிப்பாக சைவ இலக்கியத்துள் இட்டுச் சென்றார். பக்தி இலக்கியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் வேட்கையை என்னுள் ஏற்படுத்தியவர் பேரா.தொ.பரமசிவன் என்றால், சைவ இலக்கியத் தேனை நான் மாந்த அள்ளித் தருபவர் பேரா..கிருஷ்ணன். அன்றைக்கு உரையாடலுக்கு இடையில் பெரிய புராணத்தில் நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டுக் கடந்து சென்றார். அவர் கூறிய சிலவற்றைப் பின்னர் அசை போடுகையில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த ஒன்று அவர் சொன்ன பெரிய புராண நிகழ்வுடன் இடறியது. அப்புறமென்ன, அது சார்ந்த அந்த நிகழ்வினைப் பெரிய புராணத்தில் என்னைத் தேட வைத்து அள்ளித் தந்தது.

            தமிழ்த் திரையுலகில் பாடலில் முதன்மை பெறுவது 'மொழியா, இசையா ?' எனும் விவாதம் தோன்றி வலைத்தளங்கள் மூலமாகத் தமிழ் சமூகத்தில் பரவியது யாவரும் அறிந்ததே. அது வைரமுத்து - இளையராஜா எனும் ஆளுமைகளின் மீது தனிநபர் விமர்சனங்களாக மாறி, அத்துணை ஆரோக்கியமான விவாதமாக அமையவில்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்நிகழ்வு பக்தி இலக்கியத்தில் பெரிய புராணத்தில் நம்மைக் கொண்டு நிறுத்துவது குறித்து நோக்கத்தக்கது. இந்நிகழ்வு அந்நிகழ்வை நினைவு படுத்தினாலும் திருத்தருமபுர நிகழ்வு மிக ஆரோக்கியமான ஒன்றாகவே எவ்வித ஐயமுமின்றி பார்க்கப்படுகிறது. திருஞானந்த சம்பந்தர் செல்லும் சிவத்தலங்களுக்கெல்லாம் யாழிசையில் விற்பன்னரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் தமது துணைவியாருடன் சென்று, சம்பந்தர் இறைவன் மீது பண்ணொடு இயற்றியருளும் பாடல்களுக்கு யாழ் இசைத்துப் பணி செய்யலானார். திருஞானசம்பந்தருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் இடையே திருநீலகண்டரின் சுற்றத்தினரால் தோற்றுவிக்கப்பட்ட 'பண்ணா, யாழ் இசையா ?' எனும் விவாதம் வாதம் ஏதுமின்றி ஒருவர் மற்றவரின் பெருமையுணர்ந்து தமிழியலுக்கும் தமிழிசைக்கும் செழுமை சேர்ப்பதாய் அமைகிறது.

               தற்கால மொழியில் சொல்வதானால், சுற்றத்தினர் திருநீலகண்டருக்கு எவ்வாறு கொம்பு சீவி விடுகின்றனர் என்பதும், அதனால் திருநீலகண்டர் எக்கச்சக்கமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் என்பதும் பின்வரும் பெரிய புராணம் பாடலில் தெளிவு :

"கிளைஞரும் மற்று அதுகேட்டுக் கெழுவுதிருப்

           பதிகத்தில் கிளர்ந்த ஓசை

அளவுபெறக் கருவியில்நீர் அமைத்து இயற்றும்

             அதனாலே அகிலம் எல்லாம் 

வளரஇசை நிகழ்வது என விளம்புதலும்

        வளம்புகலி மன்னர் பாதம்

உளம்நடுங்கிப் பணிந்து திருநீலகண்டப்

         பெரும்பாணர் உணர்த்து கின்றார்"

           (பெரிய புராணம் பாடல் 2343; திருஞானசம்பந்த நாயனார் புராணம்)

பொருள் :

கிளைஞரும் - (திருநீலகண்டரின்) சுற்றத்தாரும்

மற்று அது கேட்டுதருமபுரத்தில் எழுந்தருளிய ஞானசம்பந்தர் திருப்பதிகங்களைப் பாட திருநீலகண்டர் அதற்கேற்ப யாழினை இசைக்க, அது கேட்டு

கெழுவு - பொருந்துமாறு;

திருப்பதிகத்தில் கிளர்ந்த ஓசை - திருப்பதிகத்தில் அமைக்கப்பட்ட பண்ணுடன்; அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து இயற்றும் - சரியான அளவுடன் யாழில் நீர் (திருநீலகண்டர்) அமைத்து இசைக்கிறீர்

அதனாலே அகிலம் எல்லாம் - அதனால் உலகெல்லாம்;

வளர இசை நிகழ்வது என விளம்புதலும் - (அப்பதிகங்கள்) பல்கிப் புகழ் பெறுகின்றன என (அச்சுற்றத்தார்) கூறவும்;

வளம் புகலி மன்னர் - வளம் பொருந்திய 'புகலி'யின் தலைவர் (சீர்காழியின் ஒரு பகுதி புகலி; ஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்த இடம்); 

உளம் நடுங்கி - (உள்ளவாறே பொருள் கொள்க); 

பாதம் பணிந்து - ஞானசம்பந்தரின் பாதம் பணிந்து

திருநீலகண்டப் பெரும்பாணர் உணர்த்துகின்றார் - (திருஞானசம்பந்தரிடம்) திருநீலகண்டர் உணர்ந்து சொல்வாரானார்.

              தம்மைச் சார்ந்தோர் ஞானசம்பந்தப் பெருமானின் பெருமை அறியாமல் தம்மைப் புகழ்வதோடு மட்டுமல்லாமல் தம் யாழிசையினால்தான் ஞானசம்பந்தரின் பாடல் (மொழியும் பண்ணும்) பெருமை பெறுவது எனப் பிதற்றுகிறாரே எனக் கூனிக் குறுகினார் திருநீலகண்ட யாழ்ப்பாணர். சம்பந்தரின் பாதம் பணிந்து தமது யாழின் எல்லைக்கு உட்படாத பதிகம் ஒன்றைப் பண்ணோடு தந்து அவர்களுக்குப் பாடலின் பெருமை உணர்த்துமாறு இறைஞ்சுகிறார் :

"அலகுஇல் திருப்பதிக இசை அளவுபடா

          வகை இவர்கள் அன்றியேயும்

உலகில் உளோரும் தெரிந்தங்கு உண்மையினை

             அறிந்து உய்யவுணர்த்தும் பண்பால்

பார்புகழும் திருப்பதிகம் பாடி அருளப்

              பெற்றால் பண்பு நீடி

இலங்கும் இசை யாழின்கண் அடங்காமை

               யான்காட்டப் பெறுவன் என்றார்"

           (பெரிய புராணம் பாடல் 2344)

பொருள் :

அலகுஇல் திருப்பதிக - அளவுக்கு உட்படாத திருப்பதிகம் ஒன்றை

இசை அளவு படா வகை - யாழ் இசையின் எல்லைக்கு உட்படாத வகையில்

இவர்கள் அன்றியேயும் - இவர்கள் (திருநீலகண்டரைச் சார்ந்தோர்) மட்டுமல்லாமல்;

உலகில் உளோரும் தெரிந்து - (பொருள் உள்ளவாறே கொள்க); 

அங்கு உண்மையினை அறிந்து உய்ய - தங்களது பாடற் சிறப்பினை அறிந்து உய்யுமாறு

உணர்த்தும் பண்பால் - உணர்த்தும் தன்மையால்;

பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் - (பொருள் உள்ளவாறே கொள்க); 

பண்பு நீடி இலங்கும் இசை - பண்பினால் நீண்டு விளங்கும் திருப்பதிகப் பண்;

யாழின் கண் அடங்காமை - யாழின் எல்லைக்குள் அடங்காத நிலையை

யான் காட்டப் பெறுவன் என்றார் - அவர்களுக்கு நான் உணர்த்தும் பேறு பெறுவேன் என்றார் (திருநீலகண்டர்).

              அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவ்வாறே பாடல்களை அமைத்து 'திருத்தருமபுரம்' பதிகம் பாடுகிறார் திருவிஞானசம்பந்தப் பெருமானார். தருமபுரம் பதியின் சிறப்பினைச் சொல்லும் பதிகம் அது. யாழிசையில் அடங்காத பண்ணில் அமைந்தமையின், அப்பண் 'யாழ்மூரிப் பண்' எனப் பெயர் பெற்றது. அவர் பாடிய தருமபுரத்து இறைவன் 'யாழ்மூரி நாதர்' எனவும் பெயர் பெற்றார். ஒரு சோறு பதமாக இனி அப்பதிகத்தின் முதற் பாடல் :

"மாதர் மடப்பிடியும் மட வன்னமும் அன்னதோர்

நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்

பூதவினப்படை நின்றிசை பாடவும் ஆடுவர்

அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்

வேதமொடேழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்டிரை

இரைந் நுரை கரை பொருது விம்மி நின்றயலே

தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை

எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே"

           (சம்பந்தர் தேவாரம்; திருத்தருமபுரம் பதிகம்; பாடல் 1)

பொருள் :

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் - அழகிய இளம் பெண் யானையும் இளம் அன்னமும்

அன்னதோர் நடையுடை மலைமகள் - போன்ற நடையினை உடைய மலைமகளுடன் மகிழ்ந்து இருக்கிறார் (தருமபுரத்து இறைவன்); 

பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர் - பூதப்படைகள் நின்று இசைத்துப் பாடி ஆடுகின்றனர் (அத்தருமபுரத்துப் பதியில்);

அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் -  (அவ்விறைவன்) படர்ந்த சடையுடன் நீளமான முடியில் (கங்கையாகிய) புனலைக் கொண்டவர்

வேதமொடு ஏழிசை பாடுவர் - (அப்பதியில்) வேதங்களோடு ஏழு வகையான சுரங்களைக் கொண்ட இசையினைப் பாடுவார்கள்

ஆழ்கடல் வெண்திரை இரைநுரை - ஆழ்கடலில் தோன்றும் வெண்மையான அலையானது இரைக்கும் நுரை

கரை பொழுது நின்று விம்மி - கரையினில் மோதி விம்மி நிற்கும் (அப்பதியில்); 

அயலே - அதற்கு அப்பால்;

தாது அவிழ் - மகரந்தம் அவிழ்கின்ற

புன்னை தயங்கு மலர்ச்சிறை - புன்னையில் அசைகின்ற மலராகிய சிறையில்

வண்டு அறை எழில் பொழில் - வண்டுகள் ரீங்காரமிடும் அழகிய சோலைகளில்

குயில் பயில் தருமபுரம் பதியே - குயில்கள் இசை பயிலும் (கூவும்) தருமபுரம் பதியே.

                 திருத்தருமபுரம் பதிகத்திற்கு யாழ் இசைக்க இயலாது என்பதைத் திருநீலகண்டர் தாம் உணர்ந்தபோதும், தமது கிளைஞருக்கும் அதனை நிறுவ வேண்டி அனைவர் முன்னிலையிலும் அதனை இசைக்க முயன்று தோற்கிறார். இந்த யாழினால்தானே இவை அனைத்தும் நிகழ்ந்தன என நொந்து யாழினை முறித்திட முயல்கிறார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் :

"வீக்கு நரம்புடை யாழினால்

விளைந்தது இதுவென்று அங்கு 

அதனைப் போக்க ஒக்குதலும்

தடுத்தருளி ஐயரே உற்றஇசை அளவினால்நீர்

ஆக்கியவிக் கருவியினைத் தாரும் என

வாங்கிக் கொண்டு அவனி செய்த

பாக்கியத்தின் மெய் வடிவாம் பாலறா

வாயர் பணித்து அருளுகின்றார்"

            (பெரிய புராணம் பாடல் 2348)

பொருள் :

வீக்கு நரம்புடை யாழினால் - தொய்வின்றி முறுக்குடன் கட்டிய நரம்பினையுடைய யாழினால்

விளைந்தது இது என்று - இவ்வளவும் நிகழ்ந்தன என்று

அங்கு அதனைப் போக்க ஒக்குதலும் - அங்கு அந்த யாழை (திருநீலகண்டர்) அழிக்க முனையவும்;

தடுத்தருளி - (ஞானசம்பந்தர்) அதனைத் தடுத்து அருளி;

ஐயரே - மதிப்பிற்குரியவரே;

உற்ற இசை அளவினால் - பொருந்தி வரும் இசை முறையில்;

நீர் ஆக்கிய கருவியினை - நீர் இயக்கிய இந்த யாழினை;

தாரும் என வாங்கிக்கொண்டு - (பொருள் உள்ளவாறே கொள்க); 

அவனி செய்த பாக்கியத்தின் மெய் வடிவாம் - உலகோருக்கான பெரும்பேற்றின் மெய்யான வடிவமாகிய

பாலறா வாயர் - திருஞானசம்பந்தர் (குழந்தையாய் இறைவியிடம் ஞானப்பால் அருந்திய வாயினை உடையவர்);

பணித்து அருளுகின்றார் - (திருநீலகண்ட யாழ்ப்பாணரிடம் அன்பினால் மேலும்) ஆணையிட்டு அருளுகின்றார்.

                திருஞானசம்பந்தர் அப்படி என்ன பணித்தார் அல்லது ஆணையிட்டார் எனக் காண்போமா ?

"சிந்தை யால் அளவுபடா இசைப்பெருமை 

       செயல் அளவில் எய்துமோநீர்

இந்த யாழினைக் கொண்டே இறைவர்திருப்

          பதிகஇசை இதனில் எய்த

வந்த வாறே பாடி வாசிப்பீர்

           எனக்கொடுப்ப புகலி மன்னர்

தந்த யாழினைத் தொழுது கைக்கொண்டு 

         பெரும்பாணர் தலைமேற் கொண்டார்

               (பெரிய புராணம் பாடல் 2350)

பொருள் :

"உள்ளத்தில் அளவுபடுத்த முடியாத இசைப் பெருமை, (யாழில் இசைப்பது போன்ற) ஒரு செயல்முறையினால் தெளிவுபடுமோ ? இந்த யாழினைக் கொண்டே இறைவர் மீது யாம் பாடும் திருப்பதிகங்களுக்கான இசையை இதில் வருவதற்கு ஏற்பப் பாடி வாசிப்பீர்" என அந்த யாழைத் திருநீலகண்டரின் கையில் 'புகலியின் மன்னர்' எனப் புகழப்படும் ஞானசம்பந்தர் எடுத்துத் தர, அவரைத் தொழுது யாழினை வாங்கிய திருநீலகண்ட நாயனார் அதனைத் தம் தலை மீது வைத்து ஏற்றுக் கொண்டார்.

        இருவருமே சான்றோராய் அமைந்தமையின் ஒருவர் பெருமையை மற்றவர் உணர்ந்தனர். ஒருவர் கலையை மற்றவர் போற்றினர். கற்றாரைக் கற்றாரே காமுற்றனர். தமிழ்ச் சமூகம் பண்பாட்டில் நிவந்து நின்றது. இனியும் நிற்கும் - அவ்வப்போது உணவிடைச் சிறுகல் பல்லிடை இடறிய போதும்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா தங்களது புலமையும் தேடுதலும் அவற்றை இங்கு யாழில் பதிவிட்டு எம்மை மகிழ்விப்பதுவும் அளவிடற்கரியது........!   🙏

நன்றி ஐயா ......!  

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது புலமையை விளங்கிக் கொள்ள கஸ்டமாக உள்ளது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2024 at 05:16, சுப.சோமசுந்தரம் said:

🙏.........

நல்ல ஒரு தெளிவைக் கொடுத்தது. மிக்க நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.