Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொதுவேட்பாளரால் சமஷ்டிக்குப் பாதிப்பில்லை! - விக்னேஸ்வரன் விளக்கம்

664103425.jfif

 

(ஆதவன்)

பொதுவேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டிக் கோரிக்கை அடிபட்டுப்போகும் என்ற எண்ணம் சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப் பிராந்தி - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது மாதாந்த கேள்வி பதில் அறிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதன் அவசியம் பற்றியும் அதை எதிர்ப்பவர்கள் பற்றியும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர்களை எதிர்ப்பவர்கள் தொடர்பில் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சம்பந்தன் கூறும் 'ஒஸ்லோ உடன்பாடு' பற்றிப் பார்ப்போம். ஒஸ்லோ உடன்பாடு என்று எதுவுமே உண்மையில் இல்லை. அது இருதரப்பார் அறிவிப்பு அல்லது அறிக்கையாகும். இருதரப்பாராலும் இவ்வாறாகக் கூறப்பட்டது என்று பதிவுக்காக எழுத்தில் இடப்பட்ட ஓர் ஆவணமே அன்றி தரப்பாரிடையிலான உடன்பாடு அல்ல. அது தற்போது வழக்கொழிந்து போய்விட்டது. அதன் அடிப்படையில் அரசாங்கத்தை 'அப்படிச் செய்' 'இப்படிச் செய்' என்று நிர்ப்பந்திக்க முடியாது. சம்பந்தன் இந்தத் தள்ளாத காலத்திலும் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்துவதை எதிர்க்கின்றார் என்றால் அதற்கான காரணங்கள் தமிழர்தம் அரசியல் காரணங்களாக இருக்க முடியாது. தமிழ் மக்கள் அதற்கான காரணங்களை ஊகித்து அறியவேண்டும்.

அடுத்து சுமந்திரனின் அங்கலாய்ப்பு. பொது வேட்பாளரை நிறுத்துவது ஒரு விஷப் பரீட்சை என்பதே அவரின் கருத்து. காரணம் ஏற்கனவே சமஷ்டி வேண்டும் என்று கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன. பொது வேட்பாளருக்குப் போதிய ஆதரவு கிட்டாவிடில் எமது சமஷ்டித் தீர்வுக்கான அத்தியாவசியமும் பலமும் அடிபட்டுப் போய்விடும் என்பது அவரின் கருத்து. இது ஓர் அத்திபாரமில்லாத அங்கலாய்ப்பு. தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கை அன்றும் இருந்தது. இன்றும் இருக்கின்றது.

எமக்கு பிரிவினையோ சமஷ்டியோ கிடைக்கும் வரையில் அல்லது எமது பிரதேசங்கள் பிறிதொரு நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வரும் வரையில் என்றும் இருக்கும். அப்படி வந்தாலும் நாம் அங்கும் சமஷ்டியையே கேட்போம். பொது வேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டிக் கோரிக்கை அடிபட்டுப் போகும் என்பது சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப்பிராந்தி. உண்மையில் எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்லவல்லதே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை.

வடக்கு கிழக்கு மக்களின் தீர்ப்பைப் பெற பன்னாட்டு நாடுகள் முன்வரவேண்டும் என்று கோருவது எவ்வாறு சமஷ்டிக் கோரிக்கையை வலுவற்றதாக்கும்? நாம் சமஷ்டியைக் கோரி தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தவில்லையே! நாம் எமது குறைகளை, நிலைகளை, நிர்ப்பந்தங்களை உலகுக்கும் எடுத்துரைக்க உள்ளோம். 'சமஷ்டியைத்தா' என்று தமிழ்ப் பொதுவேட்பாளர் கேட்கப் போவதாக யார் சுமந்திரனுக்குக் கூறினார்களோ நான் அறியேன். அடுத்து அவர் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளே இதனை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம் என்றுள்ளார்.

ஒரு சமூகத்தின் சமூக சேவையாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்கள் அரசியல் வாதிகளுக்கு வாக்குகள் வழங்கும் மக்களிடையே இருந்து வருகின்றவர்கள். அவர்கள் அந்நியர்கள் அல்ல. சுமந்திரன் மனதிலே ஒரு தப்பபிப்பிராயம் குடிகொண்டுள்ளது. ஒருவர் எப்பாடுபட்டா நாடாளுமன்ற உறுப்பினராக வந் தால் அதன்பின் மக்களுக்குப் பேச இட மில்லை என்று நினைக்கின்றார். மக்க ளின் மனம் அறியாமல் அவர்களின் நல உரித்துகளுக்கு எதிராக ஒரு நாடா மன்ற உறுப்பினர் நடந்து கொண் டால் அடுத்த தேர்தல் வரையில் மக்கள் அது பற்றி எதுவும் பேசமுடியாது என்ற வகையில் அவரின் கருத்தை முன்வைத் துள்ளார். நாம் யாவரும் பணி செய்வது எமது தமிழ் மக்களின் இன்றைய மற்றும் வருங்கால நலன் கருதியே.

சுமந்திரனின் கருத்துப்படி ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் தேர்தலில் வென்று விட்டால் அவர் அடுத்த ஐந்து வருடங்க ளுக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளலாம் என்பதே. இவ்வாறு நினைத் தவர்கள்தான் தமது மக்களிடம் கேட்கா மல் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்து டன் கதைத்துப் பேசிப் பல சுய நன்மை களைப் பெற்று வந்துள்ளார்கள்.

இன்று மக்களும் தமிழ் அரசியல் தலை வர்களும் சேர்ந்தே தமிழ்ப்பொதுவேட்பா ளரை முன்நிறுத்த முன் வந்துள்ளார் கள். அதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசில் பதவி வகிக்கும் ஒருவ ருக்கு ஜால்ரா அடிக்க எண்ணி தமது மக்களைப்புறக்கணிக்க முன்வருவோரை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது. மக்கள் சார்பில் இந்தச் செயற்பாட்டில் ஈடுபடுவ தாக இருந்தால் சுமந்திரன் எம்முடன் சேர்ந்து பயணிக்கட்டும். இல்லையேல் ஒதுங்கியிருக்கட்டும். சிங்கள வேட்பாளர்கள் நலன்கருதி தமிழ் மக்களின் நலன்களை விற்காது இருக்குமாறு அன்புடன் அவரைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது. (ச)
 

https://newuthayan.com/article/தமிழ்ப்_பொதுவேட்பாளரால்_சமஷ்டிக்குப்_பாதிப்பில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

நாம் எமது குறைகளை, நிலைகளை, நிர்ப்பந்தங்களை உலகுக்கும் எடுத்துரைக்க உள்ளோம்.

large.IMG_6566.jpeg.f5253e2f6465f8913a5e

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

//அவர் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளே இதனை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம் என்றுள்ளார்//.

இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காக நடந்திருந்தால் இன்று ஏன் இந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது வேட்பாளர் என்ற ஒன்றை செய்ய நினைக்கிறார்கள். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்ன "மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் ஆணை வழங்கினர், சிவில் சமூக அமைப்புகளுக்கு அல்ல", என்பது சரியான கருத்தென நினைக்கிறேன். இதை விக்கி ஐயா கொஞ்சம் தீவிரமாக்கி, ஊதிப் பெருப்பித்து கீழே இருக்கும் கருத்தாக மாற்றியிருக்கிறார்:

"...சுமந்திரனின் கருத்துப்படி ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் தேர்தலில் வென்று விட்டால் அவர் அடுத்த ஐந்து வருடங்க ளுக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளலாம் என்பதே"

உண்மையில், அப்படி நடக்கும் பிரதிநிதிகளை மக்கள் தேர்தலில் தோற்கடித்து, இன்னொருவரைத் தெரிவு செய்யலாம். ஆனால், சிவில் சமூக அமைப்புகளில் சில நேரங்களில் உள்ளக ஜனநாயகமே இல்லாத நிலை இருக்கிறது.

ஒரு கட்டுரையில் கருணாகரன் சுட்டிக் காட்டியிருப்பது போல, சில சிவில் அமைப்புகள் மக்களைப் பிரதிபலிக்கும் அமைப்புகள் அல்ல, தமக்கென ஒரு agenda வை வைத்துக் கொண்டு அதை அரசியலில் அழுத்தமாகப் பிரயோகிக்கும் அமைப்புகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன் பொதுவேட்பாளராக தான் களமிறங்கத் தயார் என்று அறிவித்திருக்கின்றார்!

பொது வேட்பாளருக்கே பத்துபேர் குடுமிபிடி சண்டை பிடிப்பார்கள் போலிருக்கு!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

பொது வேட்பாளருக்கே பத்துபேர் குடுமிபிடி சண்டை பிடிப்பார்கள் போலிருக்கு!

சட்டாம்பியின் உந்த  அறைகூவல் வேறு எதற்காகவாம்? உப்பிடி ஆர்ப்பாட்டம் பண்ணினால் தன்னை அடக்குவதற்கு அழைப்பு விடுப்பார்கள் என எதிர்பார்ப்பு. உந்த அரசியல் தலைவர்கள் மக்களுக்காக உழைக்கப்போவதுமில்லை, வழி நடத்துவதுமில்லை,  தங்களுக்குள் ஒன்றுசேரப்போவதுமில்லை. அதனால் மக்கள் உவர்களுக்காக தங்கள் சக்தியை வீணாக்கப்போவதுமில்லை. தங்கள் பாதையில் அவர்கள் செல்ல தொடங்கி விட்டார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவுமில்லை. இன்னும் மக்கள் மக்கள் என்று கர்ச்சிக்கிறார்கள் தங்களை, மக்களை யார், அவர்கள் வேணவா என்பதை அறியாமலேயே.          

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி நோக்கி பயணிக்கவே பொதுவேட்பாளர்; தமிழர்களின் நலன்களை விற்கவேண்டாமென சுமந்திரனிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை!

15 JUN, 2024 | 10:33 AM
image

நமது நிருபர் 

எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதில் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரிடத்தில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூறிவருவது ஏன்? அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை? ஏன் அதைச் சிலர் எதிர்க்கின்றார்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அவ்வினாவிற்கு அவர் அளித்துள்ள பதிலில், 

தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த வேண்டும் என்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 2011 அளவில் இருந்து கூறி வந்தவர் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள். அக்கோரிக்கை அப்பொழுது தமிழ் மக்களால் ஆழமாகச் சிந்திக்கப்படவில்லை. நண்பர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நின்றிருந்தாலும் தமிழ் மக்களின் ஒரு பிரதிநிதியாக தமிழ் மக்களால் அரங்கேற்றப்படவில்லை.

ஆனால் 2009இன் பின்னரான வடகிழக்கு அரசியற் களம், மத்திய அரசாங்கம் வடகிழக்கு தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொண்டுவந்த விதம், நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்ட விதம், முதலமைச்சராக நான் பெற்றுக்கொண்ட அனுபவம், இவையாவும் என்னைச் சிந்திக்க வைத்தன. 

உதாரணத்திற்கு 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் அவரின் அழைப்பின் பேரில் சுமந்திரன் அவர்களும் முதலமைச்சராக அப்போதிருந்த நானும் சந்தித்தோம். எமது மாகாணசபை சார்பான நடைமுறைக் கோரிக்கைகள் யாவை என்று அவர் கேட்டிருந்தார். நாம் அவற்றை எழுத்தில் இட்டு அவரிடம் கையளித்தோம். 

சுமார் பத்து பன்னிரண்டு விடயங்களைக் கோரியிருந்தோம். எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்த்து எமக்கு அவற்றை நாம் கோரியவாறு நல்குவதாக அவரும் அவரின் செயலாளரான லலித்வீரதுங்கவிடம் பொறுப்பெடுத்தனர். நாமும் மகிழ்வுடன் விடைபெற்றுக் கொண்டோம். ஆனால் நாம் கோரிய எதுவும் வழங்கப்படவில்லை. உதாரணத்திற்கு அப்போதிருந்த சிங்கள இராணுவ ஆளுநரை மாற்றி ஒரு தமிழ்ப் பேசும் சிவில் சமூக பிரமுகரை அந்த இடத்திற்கு நியமிக்கும்படி கோரியிருந்தோம். 

அப்போதிருந்தவரின் காலம் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும் அதன் பின்னர் எமது கோரிக்கை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார். நாம் ஜூலை வரை காத்திருந்தோம். திரும்பவும் அதே இராணுவ அலுவலரை ஜனாதிபதி மஹிந்த ஆளுநராக நியமித்தார். இவ்வாறு எமது கோரிக்கைகளுக்கு நேர்மாறாகவே மத்திய அரசாங்கம் நடந்து வந்து கொண்டிருப்பதை அவதானித்தேன். 

இந்நாட்டில் ஒரு இனவழியாட்சி நடைபெற்று வருவதை நான் அவதானித்தேன். 

இந்நிலையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தும், மற்றும் வெளிக் கொண்டுவரும் ஒரு களமாக தமிழ் பொது வேட்பாளர் நிலையை நாம் மாற்றலாம். முக்கியமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது மக்கள் தீர்ப்பை சர்வதேச வழி நடத்தல் ஊடாகப்பெற எத்தனிக்கின்றார்கள் என்ற கருத்தை ஊரறிய நாடறிய உலகறிய பறை சாற்ற தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார். வடகிழக்கு தமிழ் மக்களின் மனோநிலை என்ன என்பதை வெளிக் கொண்டு வர மக்கள் தீர்ப்பானது உதவும். அதனை சர்வதேசம் நடத்த வேண்டும் என்ற கருத்தை வெளிக் கொண்டுவர தமிழ் பொது வேட்பாளர் உதவுவார். 

அவருக்குத் தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலை எம்சார்பில் திசை மாற்றலாம். சிங்கள வேட்பாளர்கள் எவ்வெந்தக் கருத்துக்களை மக்கள் முன்வைத்தாலும் தமிழ் மக்களின் கருத்துக்கள், அபிலாசைகள், குறிக்கோள்கள், எதிர்பார்ப்புக்கள் இவை தான் என்ற கொள்கை விளக்க அறிவிப்பை உலகறியச் செய்யலாம். எமது கொள்கை விளக்க உரைகள் தமிழ் மக்கள் பரந்து வாழும் நாடுகளில் எல்லாம் ஒளி, ஒலி மூலமாக எதிரொலிக்கும். வடகிழக்கினுள் சிறைபட்டிருக்கும் எமது சிந்தனைகள் உலகெங்கிலும் சிதறடித்துப் பறக்க தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார்.

தமிழ் பொது வேட்பாளர் தேர்தலில் வெல்ல போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை. போட்டி முடிவு அவருக்கு முக்கியமல்ல. போட்டியில் கலந்து கொண்டு மக்களை ஒன்றிணைப்பதே அவரின் கடமையாகும். இன்னாரை ஒரு பொது வேட்பாளராகத் தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற உண்மையே சிங்கள வேட்பாளர்கள் தமிழர்களுக்கு எது எதனைத் தருவார்கள் என்ற அவர்களின் உள்ளக் கிடக்கைகளை வெளிக் கொண்டு வர உதவும். அவற்றை வைத்துப் பேரம்பேச நாம் முனையக்கூடாது. 

அவர்களின் இரட்டை வேடம் வெளிக்கொண்டுவரப்படலாம். ஆனால் பொதுவேட்பாளரின் பங்கு யாவர்க்கும் எமது நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்புக்களையும் இந்தத் தேர்தலைத் தளமாக வைத்துத் தெரியப்படுத்துதலேயாகும். 

எமக்கு பிரிவினையோ சமஷ்டி கிடைக்கும் வரையில் அல்லது எமது பிரதேசங்கள் பிறிதொரு நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வரும் வரையில் என்றும் இருக்கும். அப்படி வந்தாலும் நாம் அங்கும் சமஷ்டியையே கேட்போம். பொது வேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டி கோரிக்கை அடிபட்டுப் போகும் என்பது சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப்பிராந்தி. 

உண்மையில் எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை. வட கிழக்கு மக்களின் மக்கள் தீர்ப்பைப் பெற சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என்று கோருவது எவ்வாறு சமஷ்டியை கோரிக்கையை வலுவற்றதாக்கும்? 

நாம் சமஷ்டியைக் கோரி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவில்லையே! நாம் எமது குறைகளை, நிலைகளை, நிர்ப்பந்தங்களை அகில உலகிற்கும் எடுத்துரைக்க உள்ளோம். “சமஷ்டியை தா” என்று தமிழ் பொது வேட்பாளர் கேட்கப் போவதாக யார் சுமந்திரனுக்குக் கூறினார்களோ நான் அறியேன். 

அடுத்து அவர் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளே இதனை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம் என்றுள்ளார்.

ஒரு சமூகத்தின் சமூக சேவையாளர்கள் , செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகளுக்கு வாக்குகள் வழங்கும் மக்களிடையே இருந்து வருகின்றவர்கள். அவர்கள் அன்னியர்கள் அல்ல. சுமந்திரன் மனதிலே ஒரு தப்பபிப்பிராயம் குடிகொண்டுள்ளது. ஒருவர் எப்பாடுபட்டாவது  பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் அதன் பின் மக்களுக்குப் பேச இடமில்லை என்று நினைக்கின்றார். 

சுமந்திர அக்கருத்துப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றுவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் தோன்றித்தனமாய் நடந்து கொள்ளலாம் என்பதேயாகும்.

இன்று மக்களும் தமிழ் அரசியல்த் தலைவர்களும் சேர்ந்தே பொது தமிழ் வேட்பாளரை முன்நிறுத்த முன் வந்துள்ளார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசில் பதவி வகிக்கும் ஒருவருக்கு ஒத்திசைக்க எண்ணி தமது மக்களைப் புறக்கணிக்க முன்வருவோரை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது. மக்கள் சார்பில் இந்த செயற்பாட்டில் ஈடுபடுவதாக இருந்தால் சுமந்திரன் எம்முடன் சேர்ந்து பயணிக்கட்டும். இல்லையேல் ஒதுங்கியிருக்கட்டும். சிங்கள வேட்பாளர்கள் நலன் கருதி தமிழ் மக்களின் நலன்களை விற்காது இருக்குமாறு அன்புடன் அவரைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/186108

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.