Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

18 JUN, 2024 | 01:23 PM
image
 

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள  ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில்  வழிபாடுகள் தொடராக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர்  இன்றையதினம் காலை 10 மணியளவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த வழிபாட்டில்  முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

தொல்லியல் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய சேதம் ஏற்படுத்தாத வண்ணம்  வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20240618_12253908.jpeg

IMG_20240618_12270370.jpeg

IMG_20240618_12294921.jpeg

IMG_20240618_12254699.jpeg

IMG_20240618_12260295.jpeg

IMG_20240618_12272221.jpeg

IMG_20240618_12300175.jpeg

IMG_20240618_12290292.jpeg

https://www.virakesari.lk/article/186363

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் உள்ளதன்படி குருந்தூர்மலையில் தாதுகோபுரம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. 

அது உண்மையென்றால் உண்மையான பிரச்சனை என்ன? பிரச்சனை எங்கே ஆரம்பமாகிறது? 

சைவர்களும் பெளத்தர்களும் ஒருங்கே  அங்கே அழிபட முடியாதா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முடியாது ? வழிபடலாம் பிரச்சனை என்னவென்றால் அந்த நிலத்துக்கு சொந்தகாரன் யார் என்பது தான்....பெளத்தர்கள் எல்லாம் சிங்களவர்களாகவும்,சைவர்கள் எல்லாம் தமிழர்களாகவும் இருப்பது அடுத்த பிரச்சனை....
மதம் என்ற வகையில் பிரச்சனை தீர்க்கப்படலாம் ஆனால் இனம் என்ற வகையில் இதை அணுகுவதால் பிரச்சனை எழுகின்றது...
15ஆம் நூற்றாண்டுகளுக்கு பின்பு அறிமுகமான மதங்களை மக்கள் விரும்பி பின்பற்றுகின்றனர்....அதற்கு முன் வந்த மதங்களை ஏன் பின்பற்ற மாட்டார்கள்..

கொட்டகேனா கிறிஸ்தவ தேவாலயத்தில் திறுநீற்று குறியுடன் செல்பர்களை காணலாம்..

வற்றாப்பளை ,நல்லூர் கோவில்களில் பெளத்தர்கள் வழிபடுவதையும் காணலாம்..
ஒரு மத நிறுவனம் தனது ஆளுமையை அந்த நிலத்தில் நிலைநாட்டிய பின்பு ஏனைய மதங்களை அரவணைப்பது சரித்திரம்... 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

படத்தில் உள்ளதன்படி குருந்தூர்மலையில் தாதுகோபுரம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. 

அது உண்மையென்றால் உண்மையான பிரச்சனை என்ன? பிரச்சனை எங்கே ஆரம்பமாகிறது? 

சைவர்களும் பெளத்தர்களும் ஒருங்கே  அங்கே அழிபட முடியாதா? 

கப்பிதன், 
தாது கோபுரத்தின் அடித்தளம் மட்டுமே இருந்தது. கடந்தநான்கு  வருடங்களில் இராணுவத்தாலும் பிக்குகளாலும்நீதிமன்றக் கட்டளையையும் மீறி முழு தாதுகோபுரமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த செய்திகள் யாழ் களத்திலேயே உள்ளது. தெரிந்தநீங்களே கேட்கும் போது வெளி ஆட்கள் எப்பிடிக் கேட்பினம். இது தான் சிங்களத்தின் திட்டமே.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வாதவூரான் said:

கப்பிதன், 
தாது கோபுரத்தின் அடித்தளம் மட்டுமே இருந்தது. கடந்தநான்கு  வருடங்களில் இராணுவத்தாலும் பிக்குகளாலும்நீதிமன்றக் கட்டளையையும் மீறி முழு தாதுகோபுரமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த செய்திகள் யாழ் களத்திலேயே உள்ளது. தெரிந்தநீங்களே கேட்கும் போது வெளி ஆட்கள் எப்பிடிக் கேட்பினம். இது தான் சிங்களத்தின் திட்டமே.

வணக்கம்  வாதவூரான. 

நீங்கள் கூறியபடி இந்த விடயங்கள் ஏற்கனவே எல்லோரும்க்கும்  தெரிந்தவைதான். ஆனால் எனது கேள்வி அது அல்ல. தமிழர் நிலத்தில் ஒரு தாதுகோபுரம் இருந்திருக்கிறது என்றால் அங்கே தமிழ்ப் பெளத்தர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் அங்கே சிங்களம் வாழ்ந்ததாக ஆகிவிடும். 

எனவே  தற்போதைய சூழலில் இரு மதத்தவர்களும் அருகருகாக தங்கள் மதச் சடங்குகளை நடாத்த முடியாதா?  செய்ய முடியாது என்றால் அதற்குக் காரணம் என்ன? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.