Jump to content

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 19 ஜூன் 2024
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 72 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்ததாக மருத்துவமனைகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைதூர மற்றும் உள்புற கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்த நிலையில், மாவட்ட தலைநகரிலேயே இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டது எப்படி? என்ன நடந்தது?

கள்ளச்சாராயம் அருந்தியதால் அடுத்தடுத்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் நேற்று உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதாக உறவினர்கள் கூறினர்.

ஆனாலும், நேற்று (19/06/2024) நண்பகல் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன.

அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் மூன்று பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த உயிரிழப்புகளால், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு

கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன் தினம் முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன்(29), சுரேஷ்(46), மற்றொரு சுரேஷ்(45), சேகர்(61) ஆகியோர் உயிரிழந்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி(60) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மணி(58), கிருஷ்ணமூர்த்தி(62), இந்திரா(48) ஆகிய 3 பேர் இறந்தனர்.

மேலும் 47 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக மேலும் பலரும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு

சாராய வியாபாரி கைது

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆட்சியர் பணியிட மாற்றம், எஸ்.பி. சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
படக்குறிப்பு,பணியிடை மாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார்

10 அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஆட்சியர், எஸ்.பி. மட்டுமின்றி மேலும் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

  • மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா,
  • திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி
  • கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன்
  • காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ்
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
படக்குறிப்பு,சஸ்பெண்ட் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ் பி சமய்சிங் மீனா

"காவல்துறையின் கவனக்குறைவே காரணம்"

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் அடுத்தடுத்து நேரிடும் உயிரிழப்புகளால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்கள். தொடர்ந்து உயர் தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரம் பகுதியில் பாக்கெட் சாராயம் குடித்ததால் 72 பேர் உடல் உபாதை காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மெத்தனால் என்னும் திரவத்தை அருந்தியிருப்பது கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், "மெத்தனால் கொண்டு வந்த விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிசி எஸ்.பி. உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது." என்று கூறப்பட்டுள்ளது. a

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு

சிபிசிஐடி போலீசார் விசாரணை

விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவின் பெயரில் விழுப்புரம் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் இந்த விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்க உள்ளனர்.

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசார் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் மேற்கொள்ளும் விசாரணையில் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி?

இந்த உயிரிழப்புகளுக்கு, கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் முன்வைத்தோம்.

"கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம்.

அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.

அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்." என்று அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்த மருத்துவர் ஜெயராமன், மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு," என்று விவரித்தார்.

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

1628742-chennai-10.webp?resize=750,375&s

கள்ளச்சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு : விஜய் கண்டனம்.

தமிழகம் – கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய கோவிந்தராஜ், அவரது மனைவி 42 வயதுடைய விஜயா 40 வயதுடைய தாமோதரன் ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இவர்களிடம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை காலை பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதொடு , 100ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.

கள்ளச்சாராயம் அருந்திய 42 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதேபோன்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கள்ளச்சாராயம் அருந்திய 109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 35 பேர் உயிரிழ்ந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை நிவைடைந்த 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று விஜய் பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1388853

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448625668_1113072466424710_4518370815343

கள்ளச் சாராயம் குடித்து கணவன் மனைவி உயிரிழப்பு.

Link to comment
Share on other sites

சாராயம் மூலம் அதிக வருமானம் பெறும் திமுக அரசு கள்ள மெளனம் சாதிப்பது ஏன்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

சாராயம் மூலம் அதிக வருமானம் பெறும் திமுக அரசு கள்ள மெளனம் சாதிப்பது ஏன்?

இந்த நேரம் வாயை திறந்தால்… பிச்சு உதறி விடுவார்கள் என்ற பயம்.

  • Like 1
Link to comment
Share on other sites

22 minutes ago, nunavilan said:

சாராயம் மூலம் அதிக வருமானம் பெறும் திமுக அரசு கள்ள மெளனம் சாதிப்பது ஏன்?

இது தமிழக அரசு தானே மது விற்கும் TASMAC கடையில் வாங்கி மது குடித்தவர்கள் அல்லவே இவர்கள். சந்திக்கு சந்தி TASMAC கடைகள் இருந்தும், கள்ளச் சாராயம் விற்கும் இடத்தில் வாங்கிக் குடித்தவர்கள் இவர்கள். 
அனேகமாக பொலிசுக்கு மாமூல் கொடுத்து இந்த் வியாபாரத்தை தொடர்ந்து நடாத்தி இருப்பார்கள்.

எம் ஊர்களில் இதுக்குப் பெயர் கசிப்பு, அங்கு கள்ளச்சாராயம்.

Link to comment
Share on other sites

17 minutes ago, நிழலி said:

இது தமிழக அரசு தானே மது விற்கும் TASMAC கடையில் வாங்கி மது குடித்தவர்கள் அல்லவே இவர்கள். சந்திக்கு சந்தி TASMAC கடைகள் இருந்தும், கள்ளச் சாராயம் விற்கும் இடத்தில் வாங்கிக் குடித்தவர்கள் இவர்கள். 
அனேகமாக பொலிசுக்கு மாமூல் கொடுத்து இந்த் வியாபாரத்தை தொடர்ந்து நடாத்தி இருப்பார்கள்.

எம் ஊர்களில் இதுக்குப் பெயர் கசிப்பு, அங்கு கள்ளச்சாராயம்.

இதற்கு அரசு பொறுப்பில்லையா?
அப்போ கள்ள சாராயம் எங்கும் காச்சி விற்கலாமா( பொலிசுக்கு மாமூல் கொடுத்தும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்; ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா?' - பிரேமலதா கேள்வி

``கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவிக்கிறார்." - பிரேமலதா விஜயகாந்த்

Published:Today at 8 AMUpdated:Today at 8 AM
 
பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

24Comments
Share
 
 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். தி.மு.க அமைச்சர்கள், அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க தலைவர்கள் என பலரும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து இரங்கலும் ஆறுதலும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

 
 
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்
 

மறுபக்கம், ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் எனப் பலரை மாற்றியிருக்கும் தி.மு.க அரசு, உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய முதல்வரே ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறாரா என கேள்வியெழுப்பியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ``சிகிச்சையில் இருப்பவர்களிடம் எதற்காக இதைக் குடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, விலை மலிவாகக் கிடைத்ததால் குடித்தோம் என்றார்கள். முதல்வர் ஆட்சிக்கு வந்த புதிதில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் லட்சியம் என்று கூறியிருந்தார். ஏற்கெனவே, மரக்காணம் போன்ற இடங்களில் இதேபோன்று கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது, கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று ஸ்டாலின் கூறினார்.

 
பிரேமலதா விஜயகாந்த்
 
பிரேமலதா விஜயகாந்த்
 

ஆனால், இன்று இத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் இந்த அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது. அனைத்தும் கண்துடைப்பு நாடகம். முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை. இதுபோன்ற சம்பவங்களில் பலிகடா ஆவது அதிகாரிகள் மட்டும்தான். கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவிக்கிறார். அப்படியென்றால் கள்ளச்சாராயத்தை முதல்வர் ஊக்குவிக்கிறாரா... இது தவறான முன்னுதாரணம்.

`கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்; ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா?' - பிரேமலதா கேள்வி | why Rs 10 lakh to people who died by illicit liquor, DMDK chief Premalatha asks CM Stalin - Vikatan

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் - திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2024 | 03:01 PM
image
 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தைந்தாக உயர்ந்திருக்கிறது. கள்ளச்சாராயம் அருந்தி மக்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் கள்ளச்சாராய வணிகர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு  நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது.

கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி,  கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த  நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு  கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது.  மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது.

கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை  தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான். இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே இவ்விவகாரம் குறித்து சட்டபேரவையில் எதிர்கட்சிகள் நாளை கேள்வி எழுப்பக்கூடும என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதில் தர ஆளும் திமுகவும் தயாராகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/186568

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

இதற்கு அரசு பொறுப்பில்லையா?
அப்போ கள்ள சாராயம் எங்கும் காச்சி விற்கலாமா( பொலிசுக்கு மாமூல் கொடுத்தும்)

ஒரு அரசுக்கு இருக்கும் பொறுப்பு, தன் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில், குற்றங்களை குறைப்பது. தமிழக அரசு இந்த விடயத்தில் பொதுவாகவே மெத்தனமாகவே நடந்து கொள்கின்றது. கள்ளச்சாராய விடயத்தில் மட்டுமல்ல, ரவுடிகளால் பெருகும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை விட மெத்தனமாகவே உள்ளது.

கள்ளச்சாராயம் விடயத்தில், மக்களுக்கும் அறிவும் வேண்டும். கண்ணுக்கு முன் எத்தனை பேர் இவ்வாறு அ நியாயமாக கொத்து கொத்தாக இறந்தாலும் சிலர் திருந்துவதில்லை.

இந்த விடயத்தில் பிரேமலதா சொல்வது மிகவும் நியாயமானது. இப்படி இறப்பவர்களுக்கு இழப்பீடு என்று காசைக் கொடுத்தால், அது ஊக்குவிப்பாகவே அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

 கள்ளச்சாராய விடயத்தில் மட்டுமல்ல, ரவுடிகளால் பெருகும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை விட மெத்தனமாகவே உள்ளது.

அதிமுக ஆட்சியில் பதுங்கி இருக்கும் ரவுடிகளும், சமூக விரோதிகளும் திமுக ஆட்சியில் வெளியில் வந்து அராஜகம் செய்வது காலம் காலமாகவே தொடருவது. ஸ்டாலின் இந்த விசயத்தில் உசாராக இருந்து ஒரு மாற்றத்தை ஏறபடுத்துவார் என்று பார்த்தால், அவரும் அதே பழைய குதிரையில் ஏறி சறுக்கி விழுந்து கொண்டிருக்கின்றார்.

எல்லோர் மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த விஷச் சாராய மரணங்களாவது, அரசினதும், அரச நிர்வாகத்தினதும் மற்றும் முழுச் சமூகத்தினதும் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வேண்டும்........😔.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

448625668_1113072466424710_4518370815343

கள்ளச் சாராயம் குடித்து கணவன் மனைவி உயிரிழப்பு.

இந்தக் குடும்பத்துக்கு… சுளையாக இருபது லட்சம் ரூபாய் கிடைக்கப் போகுது.  அதை… யார் அனுபவிக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

இந்தக் குடும்பத்துக்கு… சுளையாக இருபது லட்சம் ரூபாய் கிடைக்கப் போகுது.  அதை… யார் அனுபவிக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

இறந்த ஒரு தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாக ஒரு செய்தியில் இருந்தது. அவர்கள் இவர்களின் பிள்ளைகளோ தெரியவில்லை......... ஏதாவது நிரந்தரமாக பிள்ளைகளுக்கு வருவது போன்று செய்தார்கள் என்றால் மிக்க நல்லது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

இறந்த ஒரு தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாக ஒரு செய்தியில் இருந்தது. அவர்கள் இவர்களின் பிள்ளைகளோ தெரியவில்லை......... ஏதாவது நிரந்தரமாக பிள்ளைகளுக்கு வருவது போன்று செய்தார்கள் என்றால் மிக்க நல்லது.  

ஓம்... இல்லாவிட்டால், வேறு யாராவது பணத்தை ஆட்டையை போட்டுவிட்டு பிள்ளைகளை தவிக்க விட்டு விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்... இல்லாவிட்டால், வேறு யாராவது பணத்தை ஆட்டையை போட்டுவிட்டு பிள்ளைகளை தவிக்க விட்டு விடுவார்கள்.

அந்தப் பிள்ளைகளின் கல்விச் செலவை 10 ஆண்டுகளிற்கு, மாதம் 5000 ரூபாய்கள், அதிமுக ஏற்றுக் கொள்ளும் என்று எடப்பாடியார் இப்பொழுது அறிவித்திருக்கின்றார்.

திரை மற்றும் இன்ன பிற பிரபலங்களை இன்னும் அங்கே காணவில்லை.......... விஜய் தவிர. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:

திரை மற்றும் இன்ன பிற பிரபலங்களை இன்னும் அங்கே காணவில்லை.......... விஜய் தவிர. 

நீங்கள், ரசனியை ஏதிர்பார்க்கின்றீர்கள் போலுள்ளது. 😂
ரசனி... தனது கார் ரைவருக்கே சம்பள பாக்கி கொடுக்கவில்லை என்றும்,
அவரின் மனைவி லதா நடத்தும் பாடசாலைக்கும் பல ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என்று செய்திகள் உலாவுது.
இப்படியான கஸ்ரமான நேரத்தில்... அவர்களிடம் பணம் எதிர்பார்ப்பது சரியல்ல. 🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

ரஜனிக்கும் ஏழை எளிய மக்கள் உதவி அவரது கஸ்டத்தையும் மக்கள் போக்க வேண்டும்.😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள், ரசனியை ஏதிர்பார்க்கின்றீர்கள் போலுள்ளது. 😂
ரசனி... தனது கார் ரைவருக்கே சம்பள பாக்கி கொடுக்கவில்லை என்றும்,
அவரின் மனைவி லதா நடத்தும் பாடசாலைக்கும் பல ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என்று செய்திகள் உலாவுது.
இப்படியான கஸ்ரமான நேரத்தில்... அவர்களிடம் பணம் எதிர்பார்ப்பது சரியல்ல. 🤣

அவர் மட்டும் என்றில்லை, அண்ணை......... முக்கியமாக இன்னும் பலரையும் காணவில்லை. திமுக அரசு என்றவுடன் ஒரு அறிக்கை கூட விடாமல் மௌனமாகவே இருக்கின்றார்களே......உதயநிதிக்கும், அவரின் ரெட் ஜயண்ட்ஸ்ஸிக்கும் அவ்வளவு பயம்.........ஜி வி பிரகாஷ் பரவாயில்லை போல, இது அரசின் தவறு என்று ஒரு அறிக்கையாவது விட்டுள்ளாரே.....

ரஜனி எல்லாம்.........செருப்பால் என்னை நானே அடிச்சாலும் மனம் ஆறாது. ஏழு பேர்கள் விடுதலை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, யார் அந்த ஏழு பேர்கள் என்று கேட்டவர் தானே. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் போராடியவர்கள் சமூக விரோதிகள் என்றும் சொன்னவர். இப்ப, அம்பானி வீட்டு கல்யாண வீட்டில், அம்பானி கைலாசத்தையும், வைகுண்டத்தையும் ஒன்றாக பூமிக்கு கொண்டு வந்து விட்டார் என்றவர்....... இந்த மனிதனைப் பற்றி எழுதுவதை விட, குப்புறப் படுத்துக் கிடக்கலாம்...........

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..

21 JUN, 2024 | 10:40 AM
image
 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன.  

கள்ளக்குறிச்சி மாவட்டம்  கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.  

இதில் சிகிச்சை பலனின்றி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.

 

இந்நிலையில்  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் 21 பேரின் உடல்கள் கோமுகி ஆற்றங்கரையோரம் ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வத்திப்பெட்டி போல் கட்டைகளை வைத்து வரிசையாக தகனம் செய்ய இடம் அமைக்கப்பட்டது. இறுதி ஊர்வலம் தொடங்கிய போது மழை பெய்ததால், உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

 

இறுதிச்சடங்குக்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள் நனைந்துவிட்டன. இதனால் மீண்டும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொருவரின் உடல்களாக தகனம் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி முழுவதுமே சோகத்துடன் காட்சி அளிக்கிறது.

https://www.virakesari.lk/article/186621

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

இந்த விடயத்தில் பிரேமலதா சொல்வது மிகவும் நியாயமானது. இப்படி இறப்பவர்களுக்கு இழப்பீடு என்று காசைக் கொடுத்தால், அது ஊக்குவிப்பாகவே அமையும்.

large.IMG_6788.jpeg.c153b3b3ac45dab3fe62

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரித்த கள்ளச்சாராய பலி எண்ணிக்கை, அழுகுரலில் மிதக்கும் கள்ளக்குறிச்சி - கள நிலவரம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 20 ஜூன் 2024
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்திய 47 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி முழுவதும் மக்கள் வேதனையில் இருக்கிறார்கள்.

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதும் மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் கள்ளக்குறிச்சிக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்த 27 நபர்களின் பிரேதங்கள் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு வியாழக்கிழமை அதிகாலை முதல் வரத் துவங்கின.

பிபிசி அங்கு நேரில் சென்றதன் பதிவு, இக்கட்டுரை.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,கருணாபுரம் பகுதி

முக்கிய அலுவலகங்களுக்கு அருகிலேயே இருக்கும் பகுதி

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது கருணாபுரம் பகுதி. கள்ளக்குறிச்சி நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி காவல் நிலையம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய முக்கிய அலுவலகங்கள் இப்பகுதிக்கு 100 மீட்டர் அருகில் தான் உள்ளன. இந்தப் பிரதான அலுவலங்களைத் தாண்டித்தான் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

வியாழன் (ஜூன் 20) காலை 7:00 மணிக்கு கருணாபுரம் பகுதிக்குள் சென்றோம்.

நம்மை வரவேற்றவை: தெருவெங்கும் அழுகுரல்கள், அருகருகே போடப்பட்டிருந்த பந்தல்கள், வாசலிலேயே பிரேதபெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இறந்த உடல்கள். அவற்றைச் சுற்றி நின்று அழும் உறவினர்கள் ஒருபுறமும், துக்கம் விசாரிக்க வருபவர்கள் ஒருபுறமும்.சிலர் எந்த வீட்டிற்குச் செல்வது, எத்தனை மாலைகள் வாங்கிச் செல்வது என்று பேசுவது நமது காதில் விழுந்தது. ஒரே தெருவிலேயே பத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,இறந்துபோன கந்தனின் தாயார் முலவி

இறந்து போன தாய்-தந்தையர்

கருணாபுறம் நடுத்தெருப் பகுதிக்குள் நுழைந்தபோது இரண்டு பள்ளி மாணவர்கள் அழுது கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது தாய் வடிவுக்கரசி, தந்தை மாற்றுத்திறனாளியான சுரேஷ் ஆகிய இருவருமே கள்ளச்சாராயம் குடித்ததில் இறந்துவிட்டனர் என்று அழுது கொண்டே கூறினார்.

“எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு ஒரு அக்காவும் உள்ளார். அவர் 11-ஆம் வகுப்பு படிக்கின்றார்,” என்று கூறினார். “சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் எனக்கு தெரியவில்லை,” என்று கூறிக் கண்கலங்கினார் அவர்.

அருகே உள்ள வீட்டிலும் கந்தன் என்பவர் கள்ளச்சாராயம் குடித்து இருந்து விட்டிருந்தார். வயதான அவரது அம்மா முலவி கண்ணீருடன் பேசினார். “என் மகனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. நான் என்ன செய்வது? அவ்வப்பொழுது கூலி வேலைக்குச் சென்று தான் கந்தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். நான் இந்த வயதில் என்ன செய்வது?” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதேபோல் லட்சுமி, மணிகண்டன், சுரேஷ், என இறந்து போனவர்கள் அனைவர் வீட்டின் முன்பும் பந்தல் போடப்பட்டு ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. கருணாபுரம் முழுவதும் அழுகுரல் சத்தம் தான் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

சில வீடுகளில் இறந்த உடலை வைக்கும் ஃப்ரீசர் பாக்ஸ் கிடைக்காததால் கட்டிலிலேயே சடலத்தைப் போட்டு வைத்து சடங்கு செய்ய தொடங்கியிருந்தனர். மேளச் சத்தங்களை விட அழுகுரல் சத்தம் அதிகமாக கேட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை  
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,அமைச்சர் உதயநிதி நேரில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட நபர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்

மருத்துவமனைக்கு வந்த அரசியல் தலைவர்கள்

வியாழன் மதியம் 3.50 மணிக்கு அமைச்சர் உதயநிதி நேரில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட நபர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்று இறந்தவர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வீதம் காசோலைகள் வழங்கினார். அப்பொழுது அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் உடன் இருந்தனர்.

முன்னதாக செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,எடப்பாடி கே. பழனிச்சாமி இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்

எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து பேசினார்.

“கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. நீதிமன்றம் உள்ளது,” என்றார்.

“அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவில்லை. இதற்குப் பின்னால் மிகப்பெரிய கும்பல் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன," எனக் குற்றம்சாட்டினார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேமுதிக கட்சித் தலைவர் பிரேமலதா கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது, என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் வந்து ஆறுதல் கூறினார்.

 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,108 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொன்னது என்ன?

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் ஆறுதல் கூறினார். தி.மு.க அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்ட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பா.ஜ.க சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், என்றார். “குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். இந்த விஷச் சாராய உயிரிழப்பு கிராமப் பகுதியில் நடக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது,” என்றார்..

“விஷச் சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. விஷச் சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசைப் பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது. விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்,” என்றார் அவர். இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,வியாழன் மதியம் 3.50 மணிக்கு அமைச்சர் உதயநிதி நேரில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட நபர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்

அதிகாரிகள் மீது நடவடிக்கை

இச்சம்பவம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சியில் கலப்படச் சாராயம் குடித்து மக்கள் பலியாகிய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாயத்தை சீரழிக்கும் இதுபோன்ற குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு குற்றப்பிரிவு - குற்றப் புலனாய்வுத் துறை (சிபி-சிஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாடாவத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் உள்பட 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டார். மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் கள்ளச்சாராயம் விற்பனை செய்த கருணாபுரத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்கின்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா சகோதரன் தாமோதரன் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்ததாக, சின்னதுரை என்பவரையும் தற்பொழுது கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரி ஏ.டி.எஸ்.பி கோமதி விசாரணை நடத்தி வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சேலம் மருத்துவமனைகளிலும் 108 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2785228-admk01.webp?resize=750,375&ssl=1

சட்டசபையில் இருந்து வலுக்கட்டாயமாக உறுப்பினர்கள் வெளியேற்றம்.

தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு இன்று கூடியது.

கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க நாடாளுமன்று உறுப்பினர்கள் கடும் குழப்பநிலையில் ஈடுபட்டிருந்தனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய கடிதங்களை  காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார்.

இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

முன்னதாக, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நாடாளுமன்ற உறப்பினர்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1388998

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1071984-mkstalin.webp?resize=750,375&ssl

கள்ளக்குறிச்சி விவகாரம் : பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் – மு.க.ஸ்டாலின்.

விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டிலிருந்து 57 வைத்தியர்கள கள்ளக்குறிச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மெத்தனால் கலந்து சாராயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லீற்றர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

பெற்றோரில் ஒருவரை இழந்திருந்தால் 3 இலட்சம் ரூபா வைப்பு நிதி அளிக்கப்படும்.

அவர்களின் வங்கிக்கணக்கில் 5 இலட்சம் ரூபா வைப்பு நிதி அளிக்கப்படும். 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் தொகை அளிக்கப்படும்.

விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளேன்” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1389033

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க... கள்ளச்சாராயம் எங்களை அநாதையாக்கிடுச்சு!’ - கதறும் குழந்தைகள்!

Published:Today at 7 AMUpdated:Today at 8 AM
 
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததால், ஆண், பெண் என இதுவரை 52 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர் கருணாபுரம் மக்கள். உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. தன்னுடைய கோரப் பற்களால் இத்தனை உயிர்களை கொன்று குவித்த கள்ளச்சாராயம், அவர்களின் குடும்பங்களை சிதைத்துப் போட்டிருக்கிறது. அவர்களின் குடும்ப உறுப்பினர்களை, குழந்தைகளை, அம்மாக்களை, அப்பாக்களை ஆதரவற்று நிற்க வைத்திருக்கிறது.
 
 
 
உயிரிழந்த தம்பதி
 
உயிரிழந்த தம்பதி
 

ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவரும், அவரின் மனைவியும் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகளும், 14, 13 வயதில் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு சென்றபோது, `இனிமேல் எங்களுக்கு யார் இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை கண்களில் ஏந்தியபடி, அசைவற்று படுத்திருந்த அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தார், அவர்களின் மகள். அவரிடம் பேசினோம். `அப்பாவுக்கு வலது கை இல்லை. அவர் பெயிண்ட் அடிக்கற வேலை செஞ்சாரு. அம்மா விவசாய கூலி வேலைக்குப் போவாங்க. ஒரு கையாலதான் அப்பா வேலை செய்வார். பில்டிங் அவுட்டர்ல அவர்தான் கயிறு கட்டி இறங்கி பெயிண்ட் அடிப்பாரு. அதனால எப்பவுமே அவர் கைல வலி இருக்கும். அந்த வலிக்காக அப்பா சாராயம் குடிக்க ஆரம்பிச்சாரு.

 
 

போகப் போக அதிகமா குடிக்க ஆரம்பிச்சிட்டாரு. எங்க அம்மாவும் சாராயம் குடிப்பாங்கனு எல்லாரும் சொல்றாங்க. ஆனால் எங்க அம்மாவுக்கு அந்தப் பழக்கமே இல்லை. ஆனால் எல்லாருமே கூட இருந்த பார்த்த மாதிரி, அவங்க சாராயம் குடிச்சி செத்துட்டாங்கனு சொல்றாங்க. அவங்க வீட்ல யார் மேலயாவது இப்படி பழி போட்டா ஏத்துப்பாங்களா? 18-ம் தேதி ராத்திரி அப்பா சாராயம் வாங்கிட்டு வந்து குடிச்சாரு.

 
கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம்
 
கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம்
 

ஒவ்வொரு நாள் வேலைக்குப் போறப்பவும், அவ்ளோ உயரத்துல கயிறு கட்டி வேலை செய்யும்போது கீழே விழுந்துடுவோமோனு அவருக்கு பயம் இருக்கும். அந்த பயத்தை போக்கறதுக்காக தினமும் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி சாராயம் குடிப்பாரு. அப்பாவுக்கு ரொம்ப கம்மியான சம்பளம்தான். அதனால் வீட்டுக்குப் பக்கத்துலயே பாக்கெட் சாராயம் 60 ரூபாய்க்கு கிடைக்கறப்போ, ஏன் 250 ரூபாய் செலவு பண்ணனும்னு நினைப்பாரு. அப்படித்தான் மறுநாள் 19-ம் தேதி காலைல, டம்ளர்ல சாராயம் குடிச்சிட்டு பாத்ரூம் போனாரு.

 
பெற்றோரை இழந்த சிறுமி
 
பெற்றோரை இழந்த சிறுமி
 

அம்மாவுக்கு ரொம்ப வருஷமா பைல்ஸ், வயித்து வலி பிரச்னை இருந்துச்சி. அதுக்காக அடிக்கடி ஓம வாட்டர் குடிப்பாங்க. அன்னைக்கும் அப்படித்தான் வயித்து வலியால எழுந்திருச்ச அவங்க, அப்பா குடிச்சிட்டு கொஞ்சமா வச்சிட்டுப் போயிருந்த சாராயத்தை எடுத்து ஓம வாட்டர்னு குடிச்சிட்டாங்க. அன்னைக்கு அதுதான் நடந்துச்சி. அதனாலதான் அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க. சாப்பாட்டுக்கே கஷ்டப்படற குடும்பம் நாங்க. அப்பாவும், அம்மாவும் தினமும் வேலைக்குப் போய்தான் எங்களை பாத்துக்கிட்டாங்க. இனிமேல் எங்களுக்கு யார் இருக்கா ? இப்படி ஒரு பாவத்தை, கள்ளச்சாராயம் வித்து இத்தனை பேர் சாவுக்கு காரணமானவங்கள சும்மா விடக்கூடாது. கள்ளச்சாராயம்தான் எங்களை அநாதையாக்கிடுச்சு. அதனாலதான் நானும், என் ரெண்டு தம்பிகளும் தனியா நிக்கறோம். கருணாபுரத்தில் இன்னைக்கு எங்களைப் போல நிறைய பேர் அப்பாவையும், அம்மாவையும் இழந்துட்டு நிக்கறதுக்கு இந்த கள்ளச்சாராயம்தான் காரணம்” என்று உடைந்து அழுகிறார்.

`அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க... கள்ளச்சாராயம் எங்களை அநாதையாக்கிடுச்சு!’ - கதறும் குழந்தைகள்! | Many people lost their relatives in Karunapuram of kallakurichi because of illicit liquor - Vikatan

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி வாழ்த்து Published By: VISHNU   27 SEP, 2024 | 11:15 PM வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வடமாகாணத்தின் ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/194955
    • தகவலுக்கு நன்றி  என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது.  Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும்.   
    • வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.   https://akkinikkunchu.com/?p=293162
    • தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.