Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
hirunika.jpg

2015ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்ப்பு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமால் ரணராஜாவினால் அறிவிக்கப்பட்டது.

https://thinakkural.lk/article/304713

ஹிருணிகாவின் ரசிகர் எப்படி இதை தாங்கிக்கொள்ளப் போகிறார்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, ஏராளன் said:
ஹிருணிகாவின் ரசிகர் எப்படி இதை தாங்கிக்கொள்ளப் போகிறார்!!

@Maruthankerny யை  உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, தமிழ் சிறி said:

@Maruthankerny யை  உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂

அண்ணை மருதர் காஜலிசத்தில் மூழ்கிவிட்டார் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

அண்ணை மருதர் காஜலிசத்தில் மூழ்கிவிட்டார் என நினைக்கிறேன்!

அவர்… காஜலிசத்தில் மூழ்கி இருக்க,
அவற்றை செல்லத்துக்கு… மூன்று வருட கடூழிய சிறை கொடுத்து விட்டார்கள் பாவிகள். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, தமிழ் சிறி said:

அவர்… காஜலிசத்தில் மூழ்கி இருக்க,
அவற்றை செல்லத்துக்கு… மூன்று வருட கடூழிய சிறை கொடுத்து விட்டார்கள் பாவிகள். 😂

இவ்வளவு தூரத்தில் இருவரும் இருந்ததால் வந்த வினை தான் இது? 

இவர் பக்கத்தில் இருந்தால் அவா ஏன் வேறு ஒரு இளைஞனை கடத்தப்போறா?🤣

இப்பவும் ஒன்றும் தாமதமில்லை. இவர் ஊருக்கு போனால் இவரையும் தூக்கி அவாவுடன் போட்டு விடுவார்கள். எல்லாம் சுபம் 😍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விசுகு said:

இவ்வளவு தூரத்தில் இருவரும் இருந்ததால் வந்த வினை தான் இது? 

இவர் பக்கத்தில் இருந்தால் அவா ஏன் வேறு ஒரு இளைஞனை கடத்தப்போறா?🤣

இப்பவும் ஒன்றும் தாமதமில்லை. இவர் ஊருக்கு போனால் இவரையும் தூக்கி அவாவுடன் போட்டு விடுவார்கள். எல்லாம் சுபம் 😍

மருதர்... எப்படியும் அமெரிக்க வக்கீலை கொண்டு  அப்பீல் பண்ணி, 
ஹிருணிகாவை  வெளியே எடுத்து விடுவார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

அவர்… காஜலிசத்தில் மூழ்கி இருக்க,
அவற்றை செல்லத்துக்கு… மூன்று வருட கடூழிய சிறை கொடுத்து விட்டார்கள் பாவிகள். 😂

இலங்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமன்    

25 minutes ago, தமிழ் சிறி said:

மருதர்... எப்படியும் அமெரிக்க வக்கீலை கொண்டு  அப்பீல் பண்ணி, 
ஹிருணிகாவை  வெளியே எடுத்து விடுவார். 😂

அமெரிக்கா சட்டம் இலங்கையில் செல்லுபடியாகாது   இலங்கை இறையாண்மை உள்ள நாடு    மூன்று ஆண்டுகள் அமைதியாக இருக்கவும் 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, Kandiah57 said:

இலங்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமன்    

அமெரிக்கா சட்டம் இலங்கையில் செல்லுபடியாகாது   இலங்கை இறையாண்மை உள்ள நாடு    மூன்று ஆண்டுகள் அமைதியாக இருக்கவும் 😂😂

 இலங்கையில்... சிங்களவருக்கு ஒரு சட்டம், தமிழருக்கு ஒரு சட்டம் நடைமுறைறையில் உள்ளது என்பதே உண்மை. முழுப்  பூசணிக்காயை  சோத்துக்குக்குள் மறைக்காதீர்கள். 😂🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, தமிழ் சிறி said:

 இலங்கையில்... சிங்களவருக்கு ஒரு சட்டம், தமிழருக்கு ஒரு சட்டம் நடைமுறைறையில் உள்ளது என்பதே உண்மை. முழுப்  பூசணிக்காயை  சோத்துக்குக்குள் மறைக்காதீர்கள். 😂🤣

பிறகு என்ன  தமிழ் ஈழம்  கிடைத்த மாதிரி தான் 🤣🤣😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிருணிக்காவின் பிணை மனு மீதான விசாரணை 4 ஆம் திகதி

01 JUL, 2024 | 03:56 PM
image
 

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட கால கடூழியச் சிறைத்தண்டனையை நீக்கி தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், சிறைத்தண்டனையை நீக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு ஹிருணிக்கா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பிணை மனு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/187401

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிணையில் விடுதலையாம்! காரணம் மருதராம்!! {@Maruthankerny }

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Maruthankerny இனியும்... ஹிருணிகாவை ஊரில் விட்டு வைத்திருப்பது ஆபத்து.

ஸ்பொன்சர் பண்ணி, அமெரிக்காவுக்கு கூப்பிட்டு... ஒரு "சின்னவீடு" எடுத்து குடுத்து விடுங்கோ. animiertes-gefuehl-smilies-bild-0234.gif



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.