Jump to content

சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இங்குள்ள கருத்துகளை நான் படிக்கவில்லை படிக்கவும் தேவையில்லை என்று நினைக்கிறன் லண்டன் வந்தது முதல் மரக்கறி தான் ஆனால் நாளை நடக்கும் வோசிங்கம் மாதா கோயிலுக்கும் செல்வேன் அதே நேரம் நாளை நடக்கும் நாகபூசணி அம்மன் தேருக்கு பின்னான நிகழ்வுக்கும் செல்வேன் .

ஆனால் இதே கருத்தை மற்றைய மதத்துவர்  சொல்ல முடியமா ?

முடியாது 

அதுதான் இந்து மதம் .

உங்கள் கருத்டிற்கு நன்றி,

இந்த கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் அதனால் சில தெளிவுகளை நாங்கள் அனைவரும் வருவதற்கு இந்த கருத்தாடல் அவசியாமாகிறது என கருதுகிறேன்.

 நீங்கள் நினைப்பது போல இந்து சமயமோ எந்த மதமோ மக்களை பிரிக்கவோ அல்லது அவர்களை அடிமைப்படுத்தவோ நிச்சயமாக விரும்பாது, ஆனால் பிராமணர்கள் தமது சுய இலாபத்திற்காக உருவாக்கிய ஒரு முறைமையினை 2 நூற்றாண்டிற்கு முன் நாங்கள் இறக்குமதி செய்து பிராமணர்களால் சூத்திரர்கள் என விழிக்கப்படும் நாங்கள் அதனை எமக்கு சாதகமாக அதே வர்ணாச்சிரம தர்மத்தினை(?) பயன்படுத்தி எம்மவர்களுக்குள்ளேயே பல பிரிவுகளை ஏற்படுத்தி ஒரு பிரிவு நிலச்சுவாந்தர்களாக உருவாக மற்றவர்கள் அடிப்படை கல்வியினை பெறமுடியாதநிலைக்கும் அடிப்படை பொருளாதார வசதிகளும் பெற முடியாதநிலையினை ஏற்பட்டுத்தியுள்ளார்கள், சாதியம் பற்றிய தவறான புரிதலால் அது இந்து சமயத்தின் ஒரு பகுதி எனும் விம்பத்தினை உருவாக்கிவிட்டுள்ளார்கள், இதனை பற்றி பேசுவது இந்து மதத்திற்கு எதிரான கருத்தாக உணர வைக்க முயற்சிக்கிறார்கள்.

இந்து மதம் இந்த சுயநலமிகளை புறந்தள்ளி வர்ணாச்சிரம தர்மத்தினை தடை செய்யவேண்டும்.

எமது சமூகம் தற்போது போரினால் பொருளாதார ரீதியாக மிக பின்னடைவினை சந்திதுள்ளது, விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான

1. கல்வி
2. தாரளமயப்படுத்தப்பட்ட பொருளாதர முறைமை
3. அடிபடை கட்டுமானம் (Investment Led - Growth model)
4. வெளிநாட்டு முதலீடு

இந்த 4 அடிப்படை காரணிகளினை இந்த சாதிய முறைமை கடுமையான பாதிபினை ஏற்படுத்துகிறது இதனை உடனடியாக கருதிற்கொள்ளாவிட்டால் நிலமை மிக மோசமாகிவிடும்.

 

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு! தழிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என்றும், ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவா் தொிவித்தாா். https://athavannews.com/2024/1397827 @Kapithan 
    • மட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை: நீண்ட வரிசையில் பொதுமக்கள்! கடவுச்சீட்டுவழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெறுவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் கடந்த பல நாட்களாக மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர் குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது இதனையடுத்து கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக இணையவழி ஊடாக முன்கூட்டிபதிவு செய்யும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்திருந்தார். இதனையடுத்து நாளாந்தம் 750 கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக மக்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக காத்திருந்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது அந்த வகையில் இன்றைய தினமும் மக்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்ததனை அவதானிக்க முடிந்தது. https://athavannews.com/2024/1397866
    • கொடுத்த கடனுக்கு வட்டியும் முதலும் எடுக்காமல் விடமாட்டானுக.  😀
    • தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் சுமந்திரன்? சுமந்திரன் எப்படி TNA இற்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் தொிவித்தாா். கிளிநொச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழரசுக் கட்சியின் தலைவர் புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது. 2010ம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் எப்படி TNA க்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார்” என அவா் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1397836
    • தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.