Jump to content

உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு

1273352.jpg  
 

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 107 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.

சிக்கந்தராராவின் முகல்கடி எனும் கிராமம், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது. இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா எனும் துறவியின் மடம் அமைந்துள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை அனைத்து மதத்தினரின் மனிதநேய மங்கள சந்திப்பு எனும் பெயரில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஹாத்தரஸை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமவாசிகள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் ஏற்பட்டது. தள்ளு முள்ளு காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழத் துவங்கியுள்ளனர். இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு வெளியேறும் வழி தெரியாமல் பலரும் மயங்கி விழுந்துள்ளனர்.

மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 27 பேரின் உடல்கள் அருகிலுள்ள ஏட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் படுகாயம் அடைந்த பலரும் அருகிலுள்ள ஹாத்தரஸ், அலிகர் மற்றும் ஏட்டா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு மருத்துவமனைகளின் பிணவறைகள் நிறைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பலர் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் பலர் உயிரிழந்தனர். இது குறித்து ஆக்ரா மண்டல காவல் துறை ஏடிஜியின் மக்கள்தொடர்பு அலுவலகம் சார்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 107 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஹாத்தரஸ் நிர்வாகம் மற்றும் காவல் துறையினருடன் அருகிலுள்ள ஏட்டா மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார்சிங் மற்றும் ஏட்டா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான உமேஷ் சந்திர திரிபாதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடம் போர்க்களம் போல் எங்கு பார்த்தாலும் பலியானவர்கள் உடல்களும், காயப்பட்டவர்களும் மயங்கி கிடந்தனர். இவர்கள் உள்ளூர் கிராமவாசிகள் உதவியுடன் கிடைத்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பரிதாபமான இந்த நெரிசல் பலி சம்பவத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 27 பேரின் உடல்கள் அருகிலுள்ள ஏட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் படுகாயம் அடைந்த பலரும் அருகிலுள்ள ஹாத்தரஸ், அலிகர் மற்றும் ஏட்டா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு மருத்துவமனைகளின் பிணவறைகள் நிறைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பலர் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் பலர் உயிரிழந்தனர். இது குறித்து ஆக்ரா மண்டல காவல் துறை ஏடிஜியின் மக்கள்தொடர்பு அலுவலகம் சார்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 107 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஹாத்தரஸ் நிர்வாகம் மற்றும் காவல் துறையினருடன் அருகிலுள்ள ஏட்டா மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார்சிங் மற்றும் ஏட்டா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான உமேஷ் சந்திர திரிபாதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடம் போர்க்களம் போல் எங்கு பார்த்தாலும் பலியானவர்கள் உடல்களும், காயப்பட்டவர்களும் மயங்கி கிடந்தனர். இவர்கள் உள்ளூர் கிராமவாசிகள் உதவியுடன் கிடைத்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பரிதாபமான இந்த நெரிசல் பலி சம்பவத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

17199273473057.jpg

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் சோகமானது; இதயத்தைத் துன்புறுத்துகிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் லக்‌ஷமி நாராயண் சவுத்ரி மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டதாகவும், அதேபோல், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநரும் அங்கு விரைய உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு | At least 100 killed in stampede at religious event in Uttar Pradesh’s Hathras - hindutamil.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மத நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் பலி 100 ஆக உயர்வு - சமீபத்திய தகவல்கள்

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 60 பக்தர்கள் உயிரிழப்பு

பட மூலாதாரம்,DHARMENDRA CHAUDHARY

2 ஜூலை 2024, 13:26 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது.

உத்தரபிரதேசக் காவல்துறையின் ஆக்ரா மண்டல ஏ.டி.ஜி அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது.

முன்னதாக இச்சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் பிபிசி நிருபர் தில்னாவாஸ் பாஷாவிடம், விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் கூறியிருந்தார்.

அப்போது, எட்டா மாவட்ட எஸ்எஸ்பி ராஜேஷ் குமார் சிங் கூறுகையில் , "ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஹி கிராமத்தில் போலே பாபாவின் (Bole Baba) நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் எட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன," என்றார்.

 

முன்னதாக, எட்டா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி உமேஷ் குமார் திரிபாதி கூறுகையில், "இதுவரை 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் 25-க்கும் மேற்பட்டோர் பெண்கள். 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும்," என்றார்.

மத நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மக்களவையில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோதி

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் நரேந்திர மோதி ஹத்ராஸ் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்தார்.

“இந்த விவாதத்திற்கு இடையே எனக்கு ஒரு சோகமான செய்தி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. இறந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 60 பக்தர்கள் உயிரிழப்பு

பட மூலாதாரம்,DHARMENDRA CHAUDHARY

முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதல்வர், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்து, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆக்ரா ஏடிஜி மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் சம்பவத்திற்கான காரணத்தை விசாரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.”

உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மத நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் பலி 100 ஆக உயர்வு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம்,DHARMENDRA CHAUDHARY

மக்களின் கோபம்

காயமடைந்தவர்கள் சிக்கந்த்ராவ் அவசர சிகிச்சை மையத்துக்கு (Sikandrarao Trauma Centre) கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிபிசி பத்திரிக்கையாளர் தர்மேந்திர சவுத்ரி அந்த சிகிச்சை மையத்திலிருந்து சில வீடியோக்களை அனுப்பியுள்ளார், அதில் பாதிக்கப்ப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை தெளிவாகக் காண முடிகிறது.

சிகிச்சை மையத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், "இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது, ஆனால் ஒரு மூத்த அதிகாரி கூட இங்கு இல்லை. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை இங்கு நடத்த போலே பாபாவுக்கு அனுமதி வழங்கியது யார். அரசு நிர்வாகம் எங்கே போனது?" என்கிறார்.

காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சை மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

வீடியோவில், சிகிச்சை மையத்திற்கு வெளியே தரையில் பெண்களின் சடலங்கள் கிடப்பதைக் காணலாம்.

சிகிச்சை மையத்திற்கு வெளியே பதற்றமான சூழல் நிலவுகிறது, மேலும் மக்கள் தங்கள் குடும்பத்தினரைத் தேடி கூச்சல் எழுப்பி வருகிறார்கள்.

 
உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 60 பக்தர்கள் உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என்ன சொன்னார்?

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் எக்ஸ் தளத்தில், "ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மனவேதனையை கொடுக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீட்புப் பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்தது யார்?

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 60 பக்தர்கள் உயிரிழப்பு

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார்

இந்தச் சம்பவம் பற்றி ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறுகையில், "மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்கள் இன்னும் மீட்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 50-60 பேர் வரை உயிரிழந்ததாக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர்,” என்றார்.

"இந்நிகழ்ச்சிக்கு அனுமதி சப்-கலெக்டரால் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி. இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதே நிர்வாகத்தின் முதன்மை நோக்கம். காயமடைந்தவர்களுக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் முடிந்த உதவிகள் செய்து வருகிறோம்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cd1d6el8d3eo

Link to comment
Share on other sites

ஒரு பக்கம் மதுவால் இறக்கின்றனர், இன்னொரு பக்கம் மதத்தால் இறக்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

ஒரு பக்கம் மதுவால் இறக்கின்றனர், இன்னொரு பக்கம் மதத்தால் இறக்கின்றனர். 

இறந்தவர்களுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை அறிவிக்கப் படவில்லை.
உத்தரப் பிரதேசம் என்ற படியால்… சில ஆயிரங்களுடன் முடித்து விடுவார்கள்.
அத்துடன் அந்தச் சம்பவத்தை மக்களும் மறந்து விடுவார்கள்.
காத்திரமான நடவடிக்கை எடுக்காத வரை இந்தச் சம்பவங்கள் சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் போல் தொடர்கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'சாமியாரின் காலடி மண்ணை எடுக்க போட்டி போட்ட மக்கள்' - ஹாத்ரஸ் நெரிசல் நடந்தது எப்படி?

ஹத்ராஸ் நகரில் மத வழிபாட்டு நிகழ்ச்சி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,சுமார் 80,000 பேர் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் அரசு நிர்வாகத்திடம் கூறியிருந்தனர். ஆனால் அங்கு சென்றடைந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
  • பதவி, பிபிசி நிருபர், ஹாத்ரஸில் இருந்து
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆம்புலன்ஸ் வரிசையாக நிற்க, மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைவாகப் பேருந்திலிருந்து இறங்குகின்றனர். மக்கள் விட்டுச் சென்ற காலணிகள் குவிந்து கிடக்கின்றன. தொலைக்காட்சி செய்தியாளர்கள், இந்த சம்பவம் குறித்து நேரலையில் செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் தங்களது அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் முழு விவரத்தையும் சொல்ல இது போதாது.

ஜூலை 2 ஆம் தேதி மாலை உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் மனோஜ் குமார், கூட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 116 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

இந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பல நாட்களாக நடந்து வந்தது. எட்டு நாட்களில் இதற்கான கூடாரம் கட்டி முடிக்கப்பட்டது.

 
ஹத்ராஸ் விபத்து

பட மூலாதாரம்,FB/ GOVERNMENT VISHWAHARI

படக்குறிப்பு,'போலே பாபா' என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி

அனுமதி கோரும் போது, சுமார் 80,000 பேர் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் அரசு நிர்வாகத்திடம் கூறியிருந்தனர். ஆனால் அங்கு சென்றடைந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம்.

நிகழ்ச்சி முடிந்தபிறகு, ’போலே பாபா’ என அழைக்கப்படும் மத குருவின் கால் பாத மண்ணை சேகரிக்க மக்களிடையே ஏற்பட்ட போட்டியே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்களும், பக்தர்களும் கூறுகின்றனர்.

அலிகார் மற்றும் எட்டாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 34-இல், சிக்கந்தராவ் நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்த மத வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது.

இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விபத்து நடந்தபிறகு அவை அவசர அவசரமாக அகற்றப்பட்டன.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களால் எழுந்திருக்க முடியவில்லை என்றும், பகலில் பெய்த மழையால் மண் ஈரமாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருந்ததால் நிலைமை மேலும் கடினமாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

'போலே பாபா' என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி கடந்து செல்ல தனிப் பாதை அமைக்கப்பட்டது. அவரை தரிசனம் செய்வதற்காகப் பல பெண்கள் அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தனர்.

வழிபாடு, சொற்பொழிவு முடிந்தபிறகு, நிகழ்ச்சி நடந்த இடத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. 'போலே பாபா' தனது வாகனத்தை நோக்கிச் சென்றபோது, அதிக கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் அங்கு நிற்காமல் சென்றுள்ளனர்.

ஹத்ராஸ் மத நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் பலி

பட மூலாதாரம்,EPA

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரிடம் இருந்தோ அல்லது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்தோ எந்த அறிக்கையும் வரவில்லை.

பஹ்ரைச் மாவட்டத்திலிருந்து வழிபாட்டுக்கு வந்திருந்த கோமதி தேவி, கழுத்தில் நாராயண் சாகர் படம் பொறிக்கப்பட்ட டாலரை அணிந்துள்ளார்.

பேருந்தில் அவருடன் இந்த வழிபாட்டு நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு பயணிகளைக் காணவில்லை. இந்த விபத்துக்குப் பிறகும் கோமதிக்கு நாராயணன் மீதுள்ள நம்பிக்கை குறையவில்லை.

சில மணி நேரம் தேடியும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், மீதி பக்தர்களுடன் பஹ்ரைச்சுக்கு இந்த பேருந்து திரும்பியது.

 
ஹத்ராஸ் நகரில் மத வழிபாட்டு நிகழ்ச்சி

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'போலே பாபா'வின் பக்தராக மாறிய கோமதி தேவி, தனது கழுத்தில் தொங்கும் நாராயண் சாகரின் பட டாலரைக் காண்பித்து, "அதைக் கழுத்தில் அணிவதால் நன்மைகள் கிடைக்கும், அமைதி கிடைக்கும், நோய்கள் தீரும், குடும்ப பிரச்சனைகள் தீரும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்’’ என்கிறார்.

பஹ்ரைச்சில் இருந்து வந்த தினேஷ் யாதவ் கூறும்போது, “எங்கள் கிராம மக்கள் பாபாவின் படத்தை வைத்து வழிபடுவார்கள். நாங்களும் வழிபட ஆரம்பித்தோம். ஒரு வருடமாக இந்த சபையில் இருக்கிறோம். எங்களுக்கு இதுவரை எந்த அனுபவமும் இல்லை, ஆனால் நாங்கள் கடவுள் (பாபா) மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் ஆசைகள் நிறைவேறும் நம்பிக்கை உள்ளது’’

இந்த விபத்துக்கு நாராயண் சாகர் பொறுப்பு இல்லை என தினேஷ் கூறுகிறார்.

கூட்ட நெரிசல் விபத்துக்குப் பிறகு என்ன நடக்குறது?

மதியம் 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்குச் சென்ற ஊடகவியலாளர்கள், அவசர சிகிச்சை மையத்தின் முற்றத்தில் சடலங்கள் குவியல் குவியலாக இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஹாத்ரஸில் பத்திரிகையாளராக இருக்கும் பி.என் சர்மா, "நான் நான்கு மணிக்கு இங்கு வந்தேன். எங்கும் சடலங்கள் இருந்தன. ஒரு பெண் சுவாசித்துக்கொண்டிருந்தார். ஆனால் சிகிச்சை கிடைக்காததால் என் கண்முன்னே இறந்துவிட்டார்.’’ என்றார்.

சிக்கந்தராவ் நகரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை இது என்றாலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் கையாளும் திறன் இங்கு இல்லை.

இந்த விபத்தில் 10-15 பேர் காயமடைந்துள்ளதாக முதலில் தகவல் வெளியானது. அரசு அதிகாரிகளும் நான்கு மணியளவில் மருத்துவமனைக்கு வந்தனர். மாலை 6 மணியளவில் பிபிசியிடம் பேசிய ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால், 60 பேர் இறந்ததை உறுதிப்படுத்தினார்.

ஆனால் ஒவ்வொரு மணி நேரமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. இறந்தவர்களின் உடல்களை அருகிலுள்ள எட்டா, காஸ்கஞ்ச், ஆக்ரா மற்றும் அலிகார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அரசு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். காணாமல் போனவர்களை குடும்பத்தினர் தேடுவதில் இது ஒரு சிக்கலை உருவாக்கியது.

மக்கள் விட்டுச் சென்ற காலணிகள் சாலையில்  கிடக்கின்றன

குடும்பத்தினரைத் தேடும் மக்கள்

குரு கிராமில் பிளம்பராக பணிபுரியும் மதுராவை சேர்ந்த விபுல், சில நண்பர்களுடன் சேர்ந்து தனது தாயைத் தேடுவதற்காக இரவு 11 மணியளவில் சிக்கந்தராவுக்கு செல்ல ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்தார்.

அவர் உதவி எண்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு போன் செய்தும் தனது தாயைப் பற்றிய எந்த தகவலையும் பெற முடியவில்லை.

சுமார் 30 உடல்கள் கொண்டு வரப்பட்ட ஹாத்ரஸில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு விபுல் சென்றடைந்தார். ஆனால் அவரால் தனது அம்மாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர் இரவு சுமார் 2 மணியளவில் அலிகார் ஜேஎன் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று, தனது தாயை தேடினார்.

"கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகப் பாபாவின் பக்தராக அம்மா உள்ளார். பாபா மீது அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அம்மா காணாமல் போய்விட்டதாக அவருடன் வந்த பெண்கள் என்னிடம் சொன்னார்கள், அதனால் நான் உடனடியாக குரு கிராமில் இருந்து இங்கு வந்தேன்." என்கிறார் விபுல்.

ஹத்ராஸ் மத நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் பலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் தங்களது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க கடுமையாக முயன்றதைக் காண முடிந்தது.

காஸ்கஞ்சிலிருந்து வந்த சிவம் குமாரின் தாயாரையும் காணவில்லை. அவர் சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்தை அடைந்தபோது, அனைத்து உடல்களும் மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன. தாயின் ஆதார் அட்டையுடன் அவர் அலைந்து கொண்டிருந்தார்.

அலிகாரில் இருந்து வந்த பண்ட்டி, சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்தின் முற்றத்தில் தனது தாயாரின் உடல் இருப்பதை ஊடகங்களில் ஒளிபரப்பான வீடியோவில் பார்த்து அவரை தேடி வந்துள்ளார்.

தன் வயதான தாய் இப்போது இவ்வுலகில் இல்லை என்பது பண்ட்டிக்கு தெரியும். அவர் தனது தாயின் உடலை விரைவில் கண்டுபிடிக்க விரும்புகிறார்.

"நான் நேராக இங்கு வந்துள்ளேன். நான் காஸ்கஞ்ச், எட்டா, அலிகார் அல்லது ஹத்ராஸ் செல்ல வேண்டுமா என்பது தெரியவில்லை. கட்டுப்பாட்டு மையத்தின் பல எண்களை அழைத்தேன். ஆனால் எங்கிருந்தும் எந்த உறுதியான தகவலையும் பெறவில்லை. உதவி எண்ணில் பேசிய ஒருவர் அனைத்து மருத்துவமனைகளுக்கும் செல்லுமாறு அறிவுறுத்தினார்." என்கிறார் பண்ட்டி.

 
ஹத்ராஸ் மத நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் பலி

கண்டுபிடிப்பது எப்படி?

இச்சம்பவத்தில் உயிரிழந்த பலரை இரவு 12 மணி வரை கூட அடையாளம் காண முடியவில்லை. அடையாளம் காணப்பட்டவர்களின் பட்டியலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நாராயண் சாகரின் மத வழிபாட்டு நிகழ்ச்சிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆவர்.

நாராயண் சாகர் கடந்த சில ஆண்டுகளில் ஹாத்ரஸில் பல முறை மத வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும், ஒவ்வொரு முறையும் மக்கள் கூட்டம் அதிகரிப்பதைப் பார்க்கும்போது இதில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் குறிக்கிறது என்றும் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

"பாபாவின் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஊடகங்கள் நுழைய அனுமதி இல்லை, வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. பாபா ஊடகங்களிலும் அதிகம் விளம்பரம் செய்வதில்லை" என்கிறார் பத்திரிக்கையாளர் பி.என்.சர்மா.

பி.என்.சர்மா பாபாவின் மத வழிபாட்டு நிகழ்ச்சியை 'வெளியிலிருந்து' பலமுறை பார்த்திருக்கிறார்.

’பாபாவின் ஆதரவாளர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். வழிபாட்டு அரங்கை அவர்களே சுத்தம் செய்து மற்ற பொறுப்புகளை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். கூட்ட மேலாண்மை முதல் போக்குவரத்து மேலாண்மை வரை அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்’’ என்கிறார் பி.என்.சர்மா

நாராயண் சாகரின் பாதுகாப்பிற்காகவே, ஒரு பெரிய குழு உள்ளது. இதன் காரணமாக நாராயண் சாகாரை நெருங்குவது கடினம். மத வழிபாட்டு நிகழ்வின் போது, போலே பாபாவின் பாதங்கள் மற்றும் உடலைக் கழுவும் நீரை, எடுத்துக்கொள்வதில் பக்தர்களிடையே போட்டி நிலவுகிறது.

"பாபாவின் கால் பாத மண்ணை பக்தர்கள் ஆசீர்வாதமாகக் கருதி, பாபா செல்லும் இடமெல்லாம் மண்ணை எடுக்கின்றனர். செவ்வாய்க் கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது, ஏராளமான பெண்கள் இந்த மண்ணை எடுக்கக் கீழே குனிந்தனர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டது. பலருக்கு எழுந்திருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை." என பிஎன் ஷர்மா கூறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாத்ரஸ் சாமியார்: பாலியல் புகாருக்கு உள்ளான போலீஸ் காவலர், 'போலே பாபா'வாக உருவானது எப்படி?

ஹாத்ரஸ்

பட மூலாதாரம்,FB/ GOVERNMENT VISHWAHAR

படக்குறிப்பு,சாமியாரின் இயற்பெயர் சூரஜ்பால் ஜாதவ். காவல்துறையில் காவலராக பணியாற்றிய அவர் பின்னர் ஆன்மீக பாதையை தேர்வு செய்தார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், தினேஷ் ஷக்யா
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சி யாரால் ஒருங்கிணைக்கப்பட்டது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது?

நாராயண் சாகர் ஹரி என்ற சாமியாரால் நடத்தப்பட்ட சொற்பொழிவுக் கூட்டம் இது. இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பு குறித்து ஹாத்ராஸின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

மக்கள் இந்த சாமியாரை போலே பாபா என்றும் விஷ்வ ஹரி என்றும் அழைக்கின்றார்கள்.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

செவ்வாய் அன்று நடைபெற்ற இந்த ’மானவ் மங்கள் மிலான்’ என்ற வழிபாட்டு நிகழ்ச்சியை ’மானவ் மங்கள் மிலான் சத்பவன சம்மேளன சமிதி’ ஒருங்கிணைத்தது.

இது ஆறு நபர்கள் அடங்கிய குழுவாகும். ஆனால் தற்போது அவர்களின் மொபைல் போன்கள் அனைத்தும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினரால் அவர்களை அணுக இயலவில்லை.

ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் நாராயண் சாகர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அலிகார் ஐ.ஜி ஷலாப் மாதூர் தெரிவித்தார்.

"அவர்களை தேடி வருகின்றோம். மொபைல் போன்கள் அனைத்தும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை," என அவர் குறிப்பிட்டார்

திரைப்படக் கதையை போன்ற வாழ்க்கை

நாராயண் சாகரின் ஆன்மீக வாழ்க்கை ஒரு திரைப்படக் கதையை போன்றது.

இந்த சாமியாரின் இயற்பெயர் சூரஜ்பால் ஜாதவ். உத்தரப்பிரதேச காவல்துறையில் காவலராக பணியாற்றிய அவர் பின்னர் ஆன்மீக பாதையை தேர்வு செய்தார். மிக குறுகிய காலத்தில் அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் பின்தொடர துவங்கினர்.

 
ஹாத்ரஸ்

பட மூலாதாரம்,X/AKHILESHYADAV

படக்குறிப்பு,மிக குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இவரை பின்தொடர துவங்கினர்.

ஈட்டா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட காஸ்கஞ் மாவட்டம் பதியாலியில் உள்ள பஹதூர்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்தான் இந்த சாமியார்.

உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் கீழ் செயல்பட்டு வந்த உள்ளூர் உளவுத்துறை பிரிவில் பணியாற்றி வந்த அவர், 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற அவர் பணி நீக்கமும் செய்யப்பட்டார்.

ஆனால், அதற்கு முன்பு சூரஜ்பால் ஜாதவ் 18 காவல் நிலையங்களிலும், உள்ளூர் உளவுத்துறை பிரிவிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சூரஜ்பால் நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அவர் மக்கள் முன்னிலையில் தன்னை ஒரு மத தலைவராக முன்னிறுத்திக் கொண்டார் என்று குறிப்பிடுகிறார் ஈட்டாவின் முன்னாள் மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார்.

 

காவல்துறையில் இருந்து வெளியேறும் முடிவு

பணி நீக்கம் செய்யப்பட்ட சூரஜ்பால் நீதிமன்றத்தை நாடி காவல்துறையில் மீண்டும் இணைந்தார்.

ஆனால் 2002ம் ஆண்டு ஆக்ராவில் பணியாற்றிக் கொண்டிருந்த சூரஜ்பால் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்று அவருடைய கிராமமான பஹதூர்பூரில் தங்கியிருந்த சூரஜ்பால், சில நாட்கள் கழித்துதான் கடவுளிடம் பேச ஆரம்பித்ததாக கூறினார். பின்பு அவர் போலே பாபாவாக தன்னை மாற்றிக் கொண்டார்.

சில ஆண்டுகளில் அவரை பின் தொடர்ந்த பக்தர்கள் அவரை பல்வேறு பெயர்களில் அழைத்தனர்.

பெரிய அளவில் மத சொற்பொழிவு நிகழ்ச்சிகளை அவர் நடத்த அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க ஆரம்பித்தனர்.

75 வயதான சூரஜ்பாலுக்கு மூன்று சகோதரர்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார் மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார்.

சூரஜ்பால்

பட மூலாதாரம்,FB/ GOVERNMENT VISHWAHARI

படக்குறிப்பு,அரசுப் பணியில் இருந்து தன்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்தது யார் என தெரியவில்லை என்று சூரஜ்பால் அடிக்கடி கூறியுள்ளார்

மூத்தவர் சூரஜ்பால். இரண்டாவது பகவான் தாஸ். அவர் தற்போது உயிருடன் இல்லை.

மூன்றாவதாக பிறந்த ராகேஷ் குமார், ஒரு கிராம தலைவராக பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்ததாக சஞ்சய் குமார் தெரிவிக்கிறார்.

சூரஜ்பால் முன்பு போல் அடிக்கடி அவரின் கிராமத்திற்கு செல்வதில்லை என்றாலும், அவரின் சேவை நடவடிக்கைகள் அந்த கிராமத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அரசுப் பணியில் இருந்து தன்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்தது யார் என தெரியவில்லை என்று அடிக்கடி தன்னுடைய மத சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் சூரஜ்பால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்கொடைகள் இல்லாமல் இயங்கும் ஆசிரமங்கள்

சூரஜ்பால் தன்னுடைய பக்தர்கள் உட்பட யாரிடமும் நன்கொடைகள் வாங்குவதில்லை. இருப்பினும் அவர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்தி வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு சொந்தமான நிலத்தில் ஆசிரமங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவருடைய மதசொற்பொழிவை காண வரும் பக்தர்களுக்கு அவர் பல்வேறு தருணங்களில் சேவை செய்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற இவர் வேண்டுமென்றே இதனை செய்திருக்கலாம்.

வெள்ளை நிற உடைகளையே அதிகமாக அணியும் அவர் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு குர்தா, சட்டை மற்றும் மேற்கத்திய ஆடைகளை அணிந்து வருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அத்தனை பிரபலமான நபராக இவர் இருக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது. சமூக வலைதளங்களில் அவரை பின் தொடரும் நபர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.

 
ஹாத்ரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருப்பினும் நிஜ வாழ்க்கையில் அவரை லட்சக்கணக்கான நபர்கள் பின்பற்றி வருகிறனர். ஒவ்வொரு சொற்பொழிவு நிகழ்ச்சியையும் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர்.

இது போன்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாமாக முன்வந்து சேவை செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த பக்தர்கள் குழுவும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் போதுமான உணவு, நீர் கிடைப்பதை உறுதி செய்வதோடு, போக்குவரத்து நெரிசலையும் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்.

உ.பி. காவல்துறையில் சர்கிள் ஆபிசராக இருந்து ஓய்வு பெற்ற ராம்நாத் சிங் யாதவ், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஈட்டாவின் கண்காட்சி மைதானத்தில் ஒரு மாதம் முழுவதும் இவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கே சலசலப்பு ஏற்பட்டது. அந்த மைதானத்திற்கு அருகே வசித்து வந்த மக்கள் மாவட்ட நிர்வாகிகளிடம், இனிமேல் சூரஜ்பாலின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்," என்று கூறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமம்: பாலியல் வன்கொடுமை வழக்கு - போலே பாபா பற்றிய விவரங்கள் அம்பலம்

05 JUL, 2024 | 10:23 AM
image
 

உத்தரபிரதேசத்தில் சில நாட்களிற்கு முன்னர் சனநெரிசலில் பெருமளவு மக்கள் உயிரிழப்பதற்கு காரணமானவர் என குற்றச்சாட்டப்பட்டும் போலே பாபா என்ற சாமியாருக்கு சொகுசுஆசிரமமும் பல கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

1274793.jpg

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விஸ்வ ஹரி நாராயண் (எ) போலே பாபா என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது நெரிசலில் 121 பேர் இறந்தது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலே பாபா பெயர் அதில் இடம்பெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது.தற்போது அவர் நிறைய சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம். 13 ஏக்கரில் அவர் 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமத்தை கட்டியுள்ளார். அந்த ஆசிரமம் அமைந்துள்ள இடம் மட்டும் ரூ.4 கோடி மதிப்புள்ளது.

bole_babaaa.jpg

ஆசிரமத்தில் பல அறைகள் உள்ளன. விலை உயர்ந்த பொருட்கள் மூலம் அறைகள் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. அறைகளில் எல்லாவசதிகளும் உள்ளன. போலே பாபாவின் உண்மையான பெயர்சூரஜ் பால். இதற்கு முன் காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றியுள்ளார். அவரது ஆசிரமத்தில் 12 அறைகள் உள்ளன. அவற்றில் 6 அறைகளை போலே பாபா பயன்படுத்தி வந்துள்ளார். மற்ற 6 அறைகளில் தன்னார்வலர்கள்இ கமிட்டி உறுப்பினர்கள்இ விவிஐபி.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரமத்துக்கு தனி சாலை வசதியும் உள்ளது. அத்துடன் கலை நுணுக்கங்களுடன் ஆசிரமம்கட்டப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலத்தை தனக்கு பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கினர் என்று போலே பாபாகூறியுள்ளார். ஆனால்இ ஆவணங்களை ஆய்வு செய்த போது அவருக்கு மேலும் பல சொத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவை கோடிக்கான ரூபாய் மதிப்புள்ளவை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலே பாபா மீது ஆக்ரா எடாவா காஸ்கஞ்ச பரூக்காபாத் மற்றும் ராஜஸ்தானில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/187724

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த பெண்ணை உயிர்த்தெழ செய்ததாக மோசடி: போலே பாபா மீது தொடரும் சர்ச்சைகள்

05 JUL, 2024 | 12:05 PM
image
 

லக்னோ: உபி.யின் காஸ்கன்ச் மாவட்டம் பட்டியாலில் கிராமத்தை சேர்ந்த போலே பாபாவின் இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். உ.பி. காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருந்தவர் கடைசியாக உளவுப் பிரிவில் பணியாற்றியுள்ளார். அப்போது, 1997-ல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தகுந்த ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கை காரணமாக சூரஜ் பால் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறி வருகிறார். விடுதலைக்கு பிறகு தனது பெயரை சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா என மாற்றிக் கொண்டார். தொடர்ந்து காஸ்கன்ச்சில் ஆசிரமம் தொடங்கி பிரசங்க கூட்டங்கள் நடத்தத் தொடங்கினார். தற்போது இவருக்கு வட இந்தியாவில் பல லட்சம்பக்தர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

பாபாவான பிறகு ஆக்ராவில் 2000-ம் ஆண்டில் ஒரு கூட்டம் நடத்தினார். இதில் உடல்நலம் குன்றி இறந்ததாக தனது வளர்ப்புப் பெண்ணை வைத்து கூட்டத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். தன்மகிமையால் அப்பெண் உயிர்ந்தெழுந்ததாக பொதுமக்களை நம்பவைத்துள்ளார். பிறகு இந்தப் பெண்ணை ஆக்ராவில் ஒரு சுடுகாட்டில் எரிக்க முயன்றபோது பிடிபட்டுள்ளார். பாபாவுடன் சேர்த்து 7 பேரை ஆக்ரா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு இந்த வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என பாபா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் சில வருடங்கள் ஆக்ரா பகுதியில் இவர் கூட்டங்களை நடத்தவில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் பலர் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக பாபா கூறுவதுண்டு. இவரது பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கடந்த வருடம் ஜனவரி 3-ல் வந்துள்ளார். இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்த அகிலேஷ், “போலே பாபா சர்வதேச சமூகத்தாலும் பாராட்டத் தகுதியானவர்” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உ.பி. முதல்வராக இருந்தபோதும் பாபாவின் செல்வாக்கு ஓங்கி வளர்ந்துள்ளது. அவரது ஆட்சிக்காலங்களில் பாபா சிவப்பு விளக்கு வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வலம்வந்துள்ளார். பாபாவும் மாயாவதியின் ஜாதவ் சமூகத்தை சேர்ந்தவர் என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/187734

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானியாவின் தொழிற்கட்சி பற்றி செயல்பாடுகள் பற்றி விபரம் தெரிந்த பிரித்தானிய உறவுகள் யாராவது விபரமாக விளக்க முடியுமா?
    • யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம். தமிரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன்(Rajavarothiam Sampanthan) கடந்த 30ஆம் திகதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.  அதனையடுத்து கொழும்பில் தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  சம்பந்தனின் இறுதி கிரியைகளிலும் அரசியல் அதன் பின்னர், இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில், இடைப்பட்ட இந்த ஓரிரு நாட்களில்  சம்பந்தனின் மறைவு  தொடர்பிலும் அதனையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன.  குறிப்பாக, சம்பந்தனின் இறுதி நிகழ்வை வைத்து ஒரு சிலர் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஈழத்தமிழ் விவகாரங்களிற்கான தொடர்பாளராகவும் செயற்பட்ட மூத்த சட்டத்தரணி இராதாகிருஸ்னன், சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் இறுதி சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட நிலை தொடர்பிலும் தனது முகநூல் தளத்தில்  விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், “யாழில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப் பட்டது. ஒரு வகையில் சம்பந்தனை வயது முதிர்ச்சியில், அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்திய சுமந்திரன் உயிரற்ற சம்பந்தனின் உடலையும் நூறு வீதம் அசிங்கப்படுத்தி, தமிழர் வரலாற்றில் கருணாவிற்கு இணையாக சம்பந்தனை மக்கள் நினைக்கும் படி செய்து வழியனுப்பிய செயல் மிகவும் அருவருக்கத்தக்கது. உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உடல் தரை மார்க்கமாக எடுத்துச் சென்றால் தன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், சம்பந்தனை போன்று சுமந்திரன் கூறும் அத்தனைக்கும் தலையாட்டும் சம்பந்தன் வாரிசுகளை ஏமாற்றி சுமந்திரன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார். விமானத்தில் எடுத்து சென்றது ஒரு வகையில் காலச் சூழல் என்றாலும், தூக்குவதற்கு கட்சி தொண்டர்களை பயன்படுத்தாது இலங்கை படையினரை பயன் படுத்தியது மிக...மிக கவலையான செயல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. சம்பந்தனை தூக்குவதற்கும் ஆட்கள் இல்லாத அவலம்.. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.      யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் அனாதைப் பூதவுடல் போல அங்கே வைக்கப்பட்டது. தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை. பின்னர் பலத்த சிரமத்தின் மத்தியில் அங்கு வருகை தந்தவர்களை வைத்து காலையில் கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது. சுமந்திரனின் பிடிவாதம் எப்படி எல்லாம் உயிரற்ற உடலையும் அசிங்கப்படுத்துகிறது என நினைத்துப் பாருங்கள். திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அசிங்கப்படுத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரனே உலகம் என இருந்த சம்பந்தன் நிலையை பாருங்கள், தந்தை செல்வநாயகத்தின் வயது முதிர்ச்சியிலும், அமிர்தலிங்கம் தந்தையை பராமரித்த விதம் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. எப்படி மாண்புடன் கடந்த காலங்களில் வளர்ந்த கட்சி இன்று கேள்விக் குறியாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.      மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் https://tamilwin.com/article/sampanthan-s-funeral-1720186250    
    • இறந்த பெண்ணை உயிர்த்தெழ செய்ததாக மோசடி: போலே பாபா மீது தொடரும் சர்ச்சைகள் 05 JUL, 2024 | 12:05 PM   லக்னோ: உபி.யின் காஸ்கன்ச் மாவட்டம் பட்டியாலில் கிராமத்தை சேர்ந்த போலே பாபாவின் இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். உ.பி. காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருந்தவர் கடைசியாக உளவுப் பிரிவில் பணியாற்றியுள்ளார். அப்போது, 1997-ல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தகுந்த ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். கைது நடவடிக்கை காரணமாக சூரஜ் பால் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறி வருகிறார். விடுதலைக்கு பிறகு தனது பெயரை சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா என மாற்றிக் கொண்டார். தொடர்ந்து காஸ்கன்ச்சில் ஆசிரமம் தொடங்கி பிரசங்க கூட்டங்கள் நடத்தத் தொடங்கினார். தற்போது இவருக்கு வட இந்தியாவில் பல லட்சம்பக்தர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. பாபாவான பிறகு ஆக்ராவில் 2000-ம் ஆண்டில் ஒரு கூட்டம் நடத்தினார். இதில் உடல்நலம் குன்றி இறந்ததாக தனது வளர்ப்புப் பெண்ணை வைத்து கூட்டத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். தன்மகிமையால் அப்பெண் உயிர்ந்தெழுந்ததாக பொதுமக்களை நம்பவைத்துள்ளார். பிறகு இந்தப் பெண்ணை ஆக்ராவில் ஒரு சுடுகாட்டில் எரிக்க முயன்றபோது பிடிபட்டுள்ளார். பாபாவுடன் சேர்த்து 7 பேரை ஆக்ரா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு இந்த வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என பாபா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் சில வருடங்கள் ஆக்ரா பகுதியில் இவர் கூட்டங்களை நடத்தவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் பலர் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக பாபா கூறுவதுண்டு. இவரது பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கடந்த வருடம் ஜனவரி 3-ல் வந்துள்ளார். இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்த அகிலேஷ், “போலே பாபா சர்வதேச சமூகத்தாலும் பாராட்டத் தகுதியானவர்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உ.பி. முதல்வராக இருந்தபோதும் பாபாவின் செல்வாக்கு ஓங்கி வளர்ந்துள்ளது. அவரது ஆட்சிக்காலங்களில் பாபா சிவப்பு விளக்கு வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வலம்வந்துள்ளார். பாபாவும் மாயாவதியின் ஜாதவ் சமூகத்தை சேர்ந்தவர் என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/187734
    • தாயகத்தில் இருந்து ஒரு அஞ்சலி:  கருமங்கள் முடியாமல் கைவிட்டு சென்றாரே என கடை நிலை தொண்டன் எவனாச்சும் கதறி அழுதானா?  தெருவெங்கும் சனம் திரண்டு பெரும் தரு ஒன்று சரிந்ததென்று மலர் துாவி மனமுடைந்து நின்றாரா?  ஐயகோ என்செய்வேன் இனியெம்மை யார் காப்பார் எனச்சொல்லி எவரேனும் அழுது வடிந்தாரா? இவையெல்லாம் இல்லாமல் ஒருதலைவன் சுடுகாடு சென்றால் அவன்தலைவன் ஆவானோ ? இனியாச்சும் அறம் வழி நின்று அரசியல் செய்யுங்கள்!  தனியாக நில்லாமல் மக்களுடன் நில்லுங்கள் அத்தனையும் வசமாகும்! #அஞ்சலிப்பா   https://www.facebook.com/share/p/jEVuCZg8JCZJSChU/    
    • வரலாற்றில் முதல்முறையாக கனடா இராணுவ தளபதியாக பெண் நியமனம் கனடாவின் இராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய இராணுவ தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் இராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார். தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக இராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார். 2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் கனடா படைகளை வழிநடத்திய ஜென்னி கரிக்னன், 2019 முதல் 2020-ம் ஆண்டு வரை, ‘நேட்டோ மிஷன் ஈராக்’கை வழிநடத்தினார். https://thinakkural.lk/article/305289
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.