Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

453218480_892952749536365_73530839196558

 

453654162_893668696131437_40792624579525

 

453225459_893642069467433_71086244109260

 

452847831_893384329493207_42622298939014

 

May be a black-and-white image

 

 

453742667_893544859477154_78734367043189

 

453756395_893560086142298_48032522489392

 

453487049_893556559475984_50309098659560

  • Replies 185
  • Views 9.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • நிச்சயமாக இல்லை ஏராளன். கிடைக்காத பதவி என்பதால் வெற்று கோசங்களை வைத்து ஒற்றுமையை காட்டுவதாக நடிக்கிறார்கள். அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக தகுதியான வேட்பாளர்களை ஒற்றுமையுடன் நிறுத்தி தற்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி யார்?; வெளியாகியுள்ள இன்னுமொரு கருத்துக் கணிப்பு முடிவுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டிஜிட்டல் தளம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ty.jpg

ஜூலை மாதம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவு அறிக்கை இன்று (01) வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 79 வீத ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 14 வீத மக்கள் ஆதரவையும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஐந்து வீத மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் 50,087 ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். அவர்களில் 87 வீதம் பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுளு்ளது.

ஓகஸ்ட் மாதத்திற்கான இந்த கருத்துக்கணிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதுடன், https://hela.page.link/vimasuma என்ற இணைப்பின் மூலம் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/307242

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு : ஐரோப்பிய ஒன்றியம் - தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

Published By: DIGITAL DESK 3   01 AUG, 2024 | 11:20 AM

image
 

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிர்வாக செயன்முறை குறித்த உடன்படிக்கையொன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

452273904_479922154642521_30899120330571

https://www.virakesari.lk/article/189977

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்றிரவு 7 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1394416

 

#################    ###############   ##################

 

ஜனாதிபதி தேர்தல் – 12 வேட்பாளர்கள் பெயர் விபரம்

ஜனாதிபதித் தேர்தல்: 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறிவிப்பு.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு இதுவரையில் 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில்  எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்ஸா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மேலும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்தி ரத்ன, மற்றும் கே.கே.பியதாஸ ஆகியோரும்  கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1394423

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

######################     #################  ###################

 

453416823_894218329409807_81333299787709

 

453297640_894027116095595_86899025411181

 

453630722_894177329413907_70525367679580

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

 

######################     #################  ###################

 

453416823_894218329409807_81333299787709

இந்த கேலிச்சித்திரம் சமகால நிகழ்வுகளை சிறப்பாக பிரதிபலிக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலி கடவுச்சீட்டுகள் மூலம் புலம்பெயர் இலங்கையர்களின் வாக்குகளை சூறையாடத் திட்டமா? - தேர்தல் ஆணையாளர் நாயகம் மறுப்பு

Published By: VISHNU   03 AUG, 2024 | 02:38 AM

image

ஜனாதிபதித்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்களைப் போலியாக அச்சடித்து, அவர்களின் வாக்குகளை சூறையாடும் மோசடித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மோசடி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என இதுவரை இல்லாத சட்டம் திடீரென கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், யாரேனும் ஒருவர் வேறொரு பிரதேசத்தில் வாக்களிக்கும்போது அவரை அடையாளங்காணமுடியாவிடின், அவரது கடவுச்சீட்டை சரிபார்த்து அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் வினவியபோது, நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக வாக்காளர்களுக்கு வேறொரு இடத்திலிருந்து வாக்களிக்க வாய்ப்பு இருந்ததாகவும், அது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 'அச்சட்டத்தின்படி உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சமுடைய எந்தவொரு வாக்காளரும் தனது வாக்களிப்பு நிலையத்தை தவிர வேறு இடத்தில் வாக்களிக்கக் கோரலாம். அவர்கள் கோரும் வாக்களிப்பு நிலையத்தை வழங்கவேண்டும் என்ற விதி எதுவும் இல்லை. இருப்பினும் பாதுகாப்பான வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பாகும்' எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல்கள் திணைக்களம்  இவ்வாறான அறிவிப்பை வெளியிடுவது வழக்கம் எனவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

அத்தோடு வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான வாக்களிப்பு முறைமை இதுவரையில் தயாரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 'இந்த நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிறைச்சாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மூட முடியாது. அந்த அதிகாரிகளுக்கு ஒரே நாளில் வாக்களிக்க வாய்ப்பளிக்க முடியாது. தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களினால் தபால்மூல வாக்குகளை செலுத்த முடியும் என்பதனால், முந்திய வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலம் செலவுகளை குறைக்கும் சாத்தியம் காணப்படுகிறது' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிடம்  வினவியபோது அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார். 

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வருவோரிடம் தரகர்களைப் பயன்படுத்தி இலஞ்சம் வாங்க முனைவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதனைத் தடுத்து கடவுச்சீட்டு வழங்கல் செயன்முறையை வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தும் நோக்கில் 'இலத்திரனியல் கடவுச்சீட்டு' பெறும் முறையை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், இதனூடாக 3 நாட்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/190137

  • கருத்துக்கள உறவுகள்

453883268_895093375988969_46341561769595

 

453902580_895508832614090_12701660463008

 

453967796_894994919332148_51407143232218

 

453723351_895104352654538_34891061480461

 

453843657_895510075947299_62186935771079

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் போலியானவை - தேர்தல் ஆணைக்குழு

05 AUG, 2024 | 10:31 AM
image

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது  வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்தும் வாக்களிக்க முடியும் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் போலியானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்வதன் மூலமும், தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர் தங்களது மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் முன்னிலையில் வாக்களிப்பதன் மூலமும் தேர்தல் சட்டத்தின்படி வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் முகவரிக்கு (வாக்காளரின் பெயர், வாக்கெடுப்பு நிலையம், தேர்தல் நடைபெறும் திகதி, நேரம்) என்பன அடங்கிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் விநியோகிக்கப்படும். 

எனவே, தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வெளியீடு இன்றி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் போலியானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-08-04_at_21.08.15.jp

https://www.virakesari.lk/article/190290

  • கருத்துக்கள உறவுகள்

Presidential-Election-DailyCeylon.jpg?re

ஜனாதிபதித் தோ்தல் – புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கையில் வெளியான தகவல்!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெறப்போகும் வேட்பாளர் தொடர்பான புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை அண்மையில் வெளியாகியிருந்தது.

இவ்விடயம் தொடா்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், 4 இடச்சத்திற்கும் இற்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

வேட்பாளர்களின் புகழ், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் வைத்திருக்கும் வேலைத்திட்டம், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் போன்ற அனைத்து உண்மைகளையும் ஆய்வு செய்த பின்னரே, வேட்பாளரை தேர்வு செய்வதற்கு சில குழுவினர் தயாராகி வருவதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக பத்து இலட்சத்திற்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கையர்களின் எழுச்சி காரணமாக தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் புதிய அறிக்கை ஒன்றை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளின் ஆதரவும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி வாய்ப்பினை உறுதி செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே செப்டம்பர் மாதம் 21ம் திகதி தேசிய மக்கள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஓய்வுபெற்ற முப்படையினர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1394836

@Kapithan 😂 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Presidential-Election-DailyCeylon.jpg?re

ஜனாதிபதித் தோ்தல் – புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கையில் வெளியான தகவல்!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெறப்போகும் வேட்பாளர் தொடர்பான புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை அண்மையில் வெளியாகியிருந்தது.

இவ்விடயம் தொடா்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், 4 இடச்சத்திற்கும் இற்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

வேட்பாளர்களின் புகழ், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் வைத்திருக்கும் வேலைத்திட்டம், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் போன்ற அனைத்து உண்மைகளையும் ஆய்வு செய்த பின்னரே, வேட்பாளரை தேர்வு செய்வதற்கு சில குழுவினர் தயாராகி வருவதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக பத்து இலட்சத்திற்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கையர்களின் எழுச்சி காரணமாக தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் புதிய அறிக்கை ஒன்றை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளின் ஆதரவும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி வாய்ப்பினை உறுதி செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே செப்டம்பர் மாதம் 21ம் திகதி தேசிய மக்கள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஓய்வுபெற்ற முப்படையினர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1394836

@Kapithan 😂 

அனுர குமார யாழ்.கொம் மின் உறுப்பினராக இருப்பாரோ ??? எனக்கு @பாலபத்ர ஓணாண்டி மீதுதான் சந்தேகம் 🤣

@விசுகு அவர்கள் விளக்குமாறைத் தூக்கிக்கொண்டு ஓடிவரப் போகிறார். 

🤣

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி

செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

https://thinakkural.lk/article/307383

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப்பணம் செலுத்தினார் அனுர

தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தனது கட்சியின் சட்டத்தரணிகளுடன் வந்து கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

https://thinakkural.lk/article/307389

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளாராக நாமல் ராஜபக்சாவே களமிறங்குகின்றார் என்று பிந்தைய தகவல் ஒன்று வந்துள்ளது.....................🙃

https://www.dailymirror.lk/top-story/Namal-Rajapaksa-to-be-named-SLPPs-presidential-candidate/155-288899

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளாராக நாமல் ராஜபக்சாவே களமிறங்குகின்றார் என்று பிந்தைய தகவல் ஒன்று வந்துள்ளது.....................🙃

https://www.dailymirror.lk/top-story/Namal-Rajapaksa-to-be-named-SLPPs-presidential-candidate/155-288899

 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ : வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

07 AUG, 2024 | 09:26 AM
image
 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். 

நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம்  இதனை உத்தியோகபூர்வமாக  அறிவித்தார்.  

https://www.virakesari.lk/article/190460

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 22பேர் கட்டுப்பணம் செலுத்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: VISHNU   08 AUG, 2024 | 01:39 AM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (புதன்கிழமை) 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட  11 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சையாக போட்டியிட 10  வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி  புதன்கிழமை  வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணிவரையான காலப்பகுதியில்  வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நாளையுடன் ( வெள்ளிக்கிழமை)  முடிவடையவுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில்  ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்  சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில்  எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், புதிய  சீஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திரவும், ஜனசேனா முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும், அருனலு மக்கள் முன்னணியின் சார்பில் கே.ஆர்.கிறிஷானும், தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கவும், சோசலிச சமத்துவ கட்சி சார்பில் பானி விஜேசிறிவர்தன ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்சா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மேலும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க,சரத் கீர்த்தி ரத்ன,கே.கே.பியதாஸ, ஆனந்த குலரத்ன, அக்மீமன தயாரத்ன தேரர், சிறிபால அமரசிங்க, சரத் பொன்சேகா, அன்டனி விக்டர் பெரேரா, ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், மானகே பேமசிறி ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/190543

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்தானது

Published By: DIGITAL DESK 3   08 AUG, 2024 | 12:04 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்றது.  கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்காளி கட்சிகளுடன் ஒப்பந்தநம் கைச்சாத்திடப்பட்டது. 

அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்ரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர தரப்பு உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. 

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இதற்கு முந்தைய தேர்தல்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்தே செயற்பட்டது. எனினும் இம்முறை அக்கட்சி அவ்வாறானதொரு தீர்மானத்தை அறிவிக்கவில்லை. அடுத்த வாரமே தாம் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/190556

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே பொருட்களை விநியோகிக்கலாம்; சகல மாவட்ட செயலகங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு உத்தரவு!

11 AUG, 2024 | 04:39 PM
image

மாவட்ட செயலகங்களில் இருந்து பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்படுவதாகவும், அதன் மூலம் குறித்த  ஒரு கட்சியானது வாக்காளர்களை   ஊக்குவிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இவ்வாறான பொருட்களை தற்போது விநியோகிக்க வேண்டாம் என ஆணைக்குழு நுவரெலியா மாவட்ட செயலகம் உட்பட  சகல மாவட்ட செயலகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலகம் ஊடாக பல தோட்டப்பிரதேசங்களில் செயற்படும்  அமைப்புகளுக்கு ஒலிபெருக்கிகள், பாத்திரங்கள், கூடாரங்கள் போன்றவற்றை விநியோகிக்கும் வண்ணம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததாக நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு கடந்த  வெள்ளிக்கிழமை முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.  

தாம் சொல்லும் வரை குறித்த பொருட்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் தாம் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு தோட்டங்களுக்கு வரும் போது அவற்றை விநியோகிக்க வேண்டும் என்றும் தோட்டத் தலைவர்களுக்கு ஒரு அரசியல் கட்சி உத்தரவிட்டிருந்ததாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து தேர்தல் ஆணைக்குழுவானது பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு 09/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் மேற்படி செயற்பாடுகளை நிறுத்தும்படி கடிதம் அனுப்பியுள்ளது. 

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக குறித்த பொருட்களை விநியோகிக்குமாறு தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால்   ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இவ்வாறான பொருட்களை விநியோகிப்பது பொருத்தமானதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து. இது சில வேட்பாளர்களை ஊக்குவிக்கலாம், மற்றவர்களுக்கு பாதகமாக இருக்கலாம். எனவே ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்தப் பொருட்களை விநியோகிக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்க விரும்புகின்றேன் என அக்கடிதத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

a565da4b-a490-44df-bf85-966bd9fbeb48__1_

https://www.virakesari.lk/article/190826

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல்; வேட்புமனுவில் கையொப்பமிட்டார் அநுர

Published By: DIGITAL DESK 3   12 AUG, 2024 | 11:22 AM

image
 

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று திங்கட்கிழமை (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

454029431_7897594066961260_5807729263874

454050523_3839751749570660_7873674616082

449505784_1584152955648076_2951945004340

454215384_888630529838666_17019627312769

https://www.virakesari.lk/article/190871

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தல்; நாளையுடன் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: VISHNU   12 AUG, 2024 | 07:41 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (12ஆம் திகதி திங்கட்கிழமை) 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 16  வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்தல் நாளை புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறும். அத்துடன் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், எம் திலகராஜா, பா.அரியநேத்திரன் ஆகியோர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ளதுடன், ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மொஹமட் இன்பாஸ் போட்டியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. இதற்கமைய கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுக்களை பொறுப்பேற்றல் நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களாக  புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில்  ஏ.எஸ்.பி.லியககேவும்,   ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்  சஜித் பிரேமதாசவும்,  தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில்  எஸ்.கே.பண்டாரநாயக்கவும்,   தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும்,  ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், புதிய  சீஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திரவும், மற்றும்   ஜனசேனா முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும், அருனலு மக்கள் முன்னணியின் சார்பில் கே.ஆர்.கிறிஷானும்,  தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கவும், சோசலிச சமத்துவ கட்சி சார்பில் பானி விஜேசிறிவர்தன, நவ சமசமாஜக் கட்சி சார்பில் பிரியந்த புஸ்பகுமாரவும், எங்கள் மக்கள் சக்தி சார்பில் ஜே.டீ.கே.விக்கிரமரத்ன, இலங்கை சமசமாஜக் கட்சியின் சார்பில் மஹிந்த தேவகே, ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் அப்துல் மொஹமட் இன்பாஸ், ஜனநாயக  ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அனோஜ  டி சில்வா ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்சா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதேவேளை  சுயேட்சை வேட்பாளர்களாக  ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்தி ரத்ன, கே.கே.பியதாஸ, ஆனந்த குலரத்னஈ அக்மீமன தயாரத்ன தேரர், சிறிபால அமரசிங்க, சரத் பொன்சேகா,  அன்டனி விக்டர் பெரேரா, ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ்,  மானகே பேமசிறி, அனுர சிட்னி ஜயவர்தன, டீ.எம்.பண்டாரநாயக்க, எம்.திலகராஜா, ரொஷான் ரணசிங்க, பா.அரியநேத்திரன்  ஆகியோர்  கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/190941

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வாக்களிப்பது எப்படி? : தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்துக்கள் பொதுமக்களின் குழப்பத்தை அதிகப்படுத்துகின்றன - அம்பிகா சற்குணநாதன்

Published By: VISHNU   13 AUG, 2024 | 03:31 AM

image

(நா.தனுஜா)

தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பொதுமக்களின் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

 'எமது வாக்காளர்கள் புள்ளடி இடுவதற்குப் பழகியிருக்கிறார்கள். எனவே வாக்குச்சீட்டில் எவரேனும் புள்ளடி இட்டால், அதனை நாம் '1' எனக் கருதுவோம். அதேபோன்று இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்கு தொடர்பில் மக்கள் மத்தியில் போதியளவு தெளிவில்லை' என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியிருப்பதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியுடன் வெளியிடப்பட்டிருக்கும் வரைபடத்தில் விருப்பு வாக்கு அளிப்பதெனில் 1,2,3 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தலாம் எனவும், இல்லாவிடின் முதலாவதாக வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கு நேராகப் புள்ளடி இட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்கை 2,3 என இலக்கமிட்டு அடையாளப்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இச்செய்தியை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன், 'எமது வாக்கு செல்லுபடியாகவேண்டுமெனில், நாம் சரியாக வாக்களிக்கவேண்டும்.

இருப்பினும் எவ்வாறு வாக்களிக்கவேண்டும் என்பது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தவறான தகவல்கள் பகிரப்படுவதானது, இதுகுறித்த குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஆங்கில நாளிதழொன்றில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் மேற்கோளுடன் வெளியாகியிருக்கும் வரைபடத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த தவறான வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 'ஜனாதிபதித்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் விருப்பு வாக்கு இடுவதெனின் 'புள்ளடி' குறியீட்டைப் பயன்படுத்தக்கூடாது. மாறாக 1,2,3 என்ற இலக்கங்களே பயன்படுத்தப்படவேண்டும் என அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வரைபடத்திலும் புள்ளடி மற்றும் இலக்கங்கள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வாக்களித்தால், அது செல்லுபடியற்ற வாக்காகக் கருதப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது' என்றும் அம்பிகா சற்குணநாதன் அவரது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/190951

  • கருத்துக்கள உறவுகள்

election-6.jpg?resize=650,375

ஜனாதிபதித் தேர்தல்: வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இதன்படி நேற்றைய தினம் 5 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

அத்துடன் வேட்பு மனுக் கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் அடங்கலாக 1,500 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1395505

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்,தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிக திகதியாக செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/307875

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேட்புமனுக்களை கையளிக்க ரணில், சஜித் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை!

Published By: DIGITAL DESK 3

15 AUG, 2024 | 10:10 AM
image
 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பதற்காக இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/191126

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைகொடுத்தார் ரணில்: கும்பிட்டார் சஜித்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் 2024 தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி வியாழக்கிழமை (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பகல் 11 மணியுடன் நிறைவடைந்தது.

வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்க, காலை 11  மணி முதல் 11.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தமாக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். எனினும், வேட்பு மனுக்களை 39 பேர் மட்டுமே தாக்கல் செய்தனர்.

அதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் அமர்ந்திருந்த  ஆசனத்தில் இருந்து எழும்பி பின்னால் சென்றார்.  அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்துவதற்கு கையை நீட்டினார்.

எனினும், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்திலேயே அமர்ந்திருந்த சஜித் பிரேமதாச கையை கொடுக்காது, கைக்கூப்பி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வணக்கம் செலுத்தினார்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ககடததர-ரணல-கமபடடர-சஜத/150-342216

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.