Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

454202377_915836523889734_81409712733499

 

454041316_915706333902753_51123905449458

  • Replies 58
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இந்திய அணி இலங்கை அணியினை பயிற்சி ஆட்டத்தில் துவைத்து எடுத்ததாக கூறுகிரார்கள், நல்ல வேளை இலங்கை அணி பந்து வீச்சாளர் நுவான் திசாரா காயமடைந்து வெளியேறியமை, வங்க தேச அணிக்கெதிராக 5 வெக்கெட்டுக்களை எடுத்த

  • வங்கதேசத்திற்கெதிராக நுவான் துசாராவின் 5 விக்கெட்டுகள் டில்சான் மதுசங்கவின் பந்துவீச்சு.

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அப்படி என்னதான் உளவள ஆலோசனை? எதிரே விளையாடுவது தமிழர்கள் தான் என்று நினைத்து விளையாடினால் நரம்புகள் புடைத்து ஒரு வெறிவரும் அப்போது நன்றாக விளையாடலாம் என்று சொல்வார்களோ? இந்த வழிகாட்டல்க

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா படைத்த சாதனைகள்

ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை அடித்த இந்திய துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி ரோகித் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி பிரேமதசா மைதானத்தில் நேற்று நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடித்து ஆடிய ரோகித் சர்மா 64 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். ஆனாலும் ரோகித் சர்மா இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

முதலாவதாக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை டித்த இந்திய வீரர்கள் பட்டியலில், டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி ரோகித் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலித்தில், சச்சின் 18426 (452 இன்னிங்ஸ்) ஓட்டங்கள் எடுத்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி 13872* (281 இன்னிங்ஸ்) ஓட்டங்களுடனும், கங்குலி 11221 (297 இன்னிங்ஸ்) ஓட்டங்களுடனும், ரோகித் 10831* (256 இன்னிங்ஸ்) ஓட்டங்களுடனும், டிராவிட் 10768 (314 இன்னிங்ஸ்) ஓட்டங்களுடனும், தோனி 10599 (294 இன்னிங்ஸ்) ஓட்டங்களுடனும் உள்ளனர்.

இந்த போட்டிக்கு முன்பு ரோகித் 10767 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், நேற்று எடுத்த 64 ஓட்டங்களுடன் மொத்தமாக 10831 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதன்மூலம், ரோகித்சர்மா இந்திய வீரர்களை அதிக ஓட்டங்களை எடுத்தவர்களது பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போதுவரை, முதல் 10 ஓவர்களுக்குள் 50 சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 4 சிக்சர்களை அடித்ததன் மூலம், 2023 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பின் தற்போதுவரை, முதல் பத்து ஓவர்களுக்குள் 53 சிக்சர்களை விளாசியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மா தொடக்க வீரராக 43 சதங்களையும், 78 அரைசதங்களையும் அடித்துள்ளார். மொத்தமாக 121 முறை 50+ ரன்களை தொடக்க வீரராக எடுத்துள்ளார். இதன் மூலம் தொடக்க வீரராக 120 முறை 50+ ரன்கள் எடுத்த சச்சினின் சாதனையை கடந்தார்.

https://thinakkural.lk/article/307348

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் நல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ மிடில் வீர‌ர்க‌ளின் உப்பு ச‌ப்பில்லா விளையாட்டில் 250 ர‌ன்ஸ்ச‌ தாண்ட‌ வாய்ப்பில்லை..................

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு சிரிலங்காவுக்கு பொது விடுமுறையாகலாம்...இந்தியாவின் அனுசரணையில்😎

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 வருடங்களின் பின்னர் கைப்பற்றி வரலாறு படைத்தது இலங்கை

Published By: VISHNU

07 AUG, 2024 | 08:34 PM
image
 

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 27 வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்தது இலங்கை.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (07) நடைபெற்ற 3ஆவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 110 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.

இதன் மூலம் தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

அப் போட்டியில் இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.

அவிஷ்க பெர்னாண்டோ 96 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 26.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ரோஹித் ஷர்மா (35), விராத் கோஹ்லி (20), ரியான் பராக் (15), வொஷிங்டன் சுந்தர் (30) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்ட நாயகன்: அவிஷ்க பெர்னாண்டோ

தொடர் நாயகன்: துனித் வெல்லாலகே

https://www.virakesari.lk/article/190538

  • கருத்துக்கள உறவுகள்

27 ஆண்டு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி - இந்தியாவின் பலத்தையே பலவீனமாக மாற்றிய இலங்கை

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 50 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச அரங்கில் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்துள்ளது. கொழும்பு பிரமதேசா அரங்கில் இன்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை இலங்கை அணி பெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களில் சுருண்டு 110 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி 27 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்கு எதிராக வென்றுள்ளது. கடைசியாக 2005ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அணியிடம் இலங்கை அணி ஒருநாள் தொடரை பறிகொடுத்து வந்தநிலையில் அதற்கு 2024ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இலங்கை அணி சிறப்பான தொடக்கம்

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி சிறப்பான தொடக்கம் கண்டது. டாப் ஆர்டர் பேட்டர்கள் நிசாங்கா(45), பெர்னான்டோ(96), குஷால் மென்டிஸ்(59) ஆகியோரே கணிசமாக ரன் குவித்தனர். மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.

171 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 28 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. 171 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இலங்கை அணி 199 ரன்கள் சேர்த்தபோது 6வது விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இலங்கை அணி ஸ்கோர் ஒரு கட்டத்தில் 180 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 250 ரன்களுக்குள் மட்டுமே சேர்த்தது.

இலங்கை அணி இந்த ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்க ஆட்டக்காரர் பெர்னான்டோ 96 ரன்கள் சேர்த்ததுதான் முக்கியக் காரணம். இது தவிர 49வது ஓவர் வரை களத்தில் இருந்த குஷால் மென்டிஸ் 59 ரன்கள் சேர்த்ததும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருந்தது.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிராஜ் மோசமான பந்துவீச்சு

இந்திய அணியின் பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் சிறப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜை மட்டுமே நம்பி களமிறங்கிய இந்திய அணி கையைச் சுட்டுக்கொண்டது. டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே ஃபார்மில் இல்லாமல் இருந்த சிராஜை ஒருநாள் தொடரில் திணறவே செய்தார். இந்த ஆட்டத்தில் 9 ஓவர்கள் வீசிய சிராஜ் 78 ரன்களை வாரி வழங்கினார். இதில் 3 சிக்ஸர்கள், 9பவுண்டரிகளை அடிக்கவிட்டு ஓவருக்கு 9 ரன்களை வாரிக் கொடுத்தார்.

இலங்கை அணியிலும் பெர்னான்டோ எனும் வேகப்பந்துவீச்சாளரை மட்டும் வைத்து அந்த அணி களமிறங்கியது. அவர் ஓரளவு கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். இலங்கை அணி சேர்த்த ஸ்கோரில் சிராஜ் மட்டும் 33 சதவீத ரன்களை வாரிக் கொடுத்துள்ளார். இதில் பெர்னான்டோ மட்டும் 38 ரன்களை சிராஜ் ஓவரில் விளாசினார்.

மற்ற வகையில் சுழற்பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஓவருக்கு 3 ரன்ரேட்வீதம் வழங்கினர். முதல் போட்டியில் அறிமுகமாகிய ரியான் பராக் 9 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அக்ஸர் படேலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே வழங்கினார்.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிவு

சவாலான இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா (35), விராட் கோலி (20), ரியான் பராக்(15), வாஷிங்டன் சுந்தர்(30) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். இதில் கடைசி நேரத்தில் வாஷிங்டன் இன்னிங்ஸ் மட்டும் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு சற்று அழுத்தத்தை கொடுத்தது, அவரை ஆட்டமிழக்கச் செய்ய மட்டுமே சிறிது சிரமப்பட்டனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய பேட்டர்கள் 9 பேரும் சுழற்பந்துவீச்சுக்கு இரையாகினர்.

சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மோசமான ஃபார்மில் உள்ளனர். அதிலும் சுப்மான் கில் டி20 தொடரிலும் சிறப்பாக ஆடவில்லை, ஒருநாள் தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பினார். நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கிய ரிஷப் பந்த் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்வதேச போட்டியில் அறிமுகமான ரியான் பராக்(15) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

 
இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நட்சத்திர பேட்டர் விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் சுழற்பந்துவீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் போட்டியிலிருந்து மோசமாக விளையாடி பைனலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இந்த ஒருநாள் தொடர் முழுவதும் கோலியின் இயல்பான பேட்டிங் வெளிப்படவில்லை.

இந்திய அணி 52 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. ஆனால், அடுத்த 49 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. வெலாகலே பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் இழந்தனர்.

அதிலும் வெலாகலே வீசிய 13வது ஓவரில் மட்டும் ஸ்ரேயாஸ், அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை பறிகொடுத்ததால் அணி தோல்வியை நோக்கி பயணித்தது.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியை சிதைத்த பெருமை இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் வெலாகலே, வேன்டர்சே, தீக்சனா ஆகியோரையே சாரும். இதில் வெலாகலே மட்டும் 5.1 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீக்சனா, வேன்டர்சே தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட் செய்தார். இரு அரைசதங்களை முதல் இரு போட்டிகளில் பதிவு செய்த ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 35 ரன்கள் சேர்த்து தனது நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். ஆனால், இந்தத் தொடர் முழுவதும் ரோஹித் சர்மாவுக்கு ஒத்துழைத்து சுப்மான் கில், விராட்கோலி, உள்ளிட்ட எந்த பேட்டரும் ஆடவில்லை,

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் பலத்தையே பலவீனமாக்கிய இலங்கை

இந்திய பேட்டர்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சில் ரன் குவிக்கக் கூடியவர்கள். சர்வதேச அளவில் சாதித்த சுழற்பந்து வீச்சாளர்கள் கூட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச திணறவே செய்துள்ளனர். ஆனால், அந்த பலத்தையே இலங்கை அணி இன்று இந்தியாவின் பலவீனமாக மாற்றியுள்ளது.

இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய பேட்டர்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளனர். மூன்று ஆட்டங்களிலும் தலா 9 விக்கெட் வீதம் மொத்தம் 27 விக்கெட்டுகளை இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர். ரோஹித், கோலி உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு இரையாயினர்.

இரண்டாவது ஆட்டத்தில், வேன்டர்சே பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் பறிகொடுத்தனர், இந்த ஆட்டத்தில் வெலாகலே பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் இழந்தனர்.

1997ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி இருந்தது. அந்த சமயத்தில் சுழற்பந்துவீச்சாளர் வெலாகலே பிறக்கவே இல்லை. ஆனால், இப்போது அவரின் தரமான சுழற்பந்துவீச்சால் 27 ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் தொடரை இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி வென்றுள்ளது.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா தோல்விக்கு என்ன காரணம்?

இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங், அனுபவமில்லாத வீரர்கள், வெளிநாட்டு மைதானங்களில் தரமான சுழற்பந்துவீச்சை விளையாட போதிய பயிற்சியில்லாதது ஆகியவைதான் காரணம். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்ற முதல் தொடர் இதுவாகும். இதில் டி20 தொடரை வென்றபோதிலும் ஒருநாள் தொடரை மோசமாக இந்திய அணி இழந்துள்ளது.

 
இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெயசூர்யா அன்றும், இன்றும்

கடைசியாக கடந்த 1997 ஜூலை மாதம் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை இலங்கை வென்றிருந்து. அதன்பின் இப்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி தங்களின் தாகத்தை தீர்த்துக்கொண்டது.

1997ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இதில் முதல் ஆட்டத்தில் 2 ரன்களில் வெற்றியை இந்திய அணி கோட்டைவிட்டது. 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை இலங்கை அணி தோற்கடித்தது.

3வது ஒருநாள் ஆட்டம் மழையால் நடக்காமல் போகவே மறுநாள் நடந்தது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி 9 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த 3 போட்டிகளிலும் பேட்டிங்கில் 210 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜெயசூர்யா தொடர் நாயகன் விருது வென்று இலங்கை அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இலங்கை அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜெயசூர்யா கால் நூற்றாண்டுக்குப்பின் ஒருநாள் தொடரை பெற்றுக்கொடுத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

27 வருசமாகத் தோலிவியடைந்தவர்களை பாவம் பார்த்து வெல்லவிட்டால் ..அவையின் கதை...அதையும் சொல்லியிட்டினம் பிச் தங்களுக்கு ஏற்றவாறுதான் போட்டவையாம்..இந்தக் கதை க்தைத்துவிட்டு..ஐ.பிஎல் போட்டிகு போய் பல்லிளிப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய இந்திய வீரர் - ஜெயசூர்யா வகுத்த உத்திகள் என்னென்ன?

ஜெயசூர்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இலங்கை அணியைத் தயார்படுத்துவதற்கு இந்திய வீரரின் உதவியை நாடியுள்ளார் ஜெயசூர்யா கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சர்வதேச அரங்கில் 27 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் செய்துவந்த ஆதிக்கத்தை அந்த அணி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றநிலையில் இந்திய அணியை ஒருநாள் தொடரில் 2-0 என்று மண்ணைக் கவ்வவைத்து, 27 ஆண்டுகளுக்குப்பின் தொடரை இலங்கை கைப்பற்றி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டது.

இலங்கை அணியில் ஆடிவரும் பல வீரர்கள் கடைசியாக இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றபோது பிறந்திருக்கவே மாட்டார்கள், அல்லது சிறிய குழந்தைகளாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்களை வைத்துக்கொண்டு இந்திய அணியின் ஆதிக்கத்தை இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தபின், ஒருநாள் தொடரில் வெகுண்டு எழுந்துள்ளதற்கு பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் இலங்கை அணிக்கு தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா.

 

முன்னாள் வீரர் ஜெயசூர்யா குறித்து பெரிதாக அறிமுகம் தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரர் அதிரடியாக ஆடக்கூடிய பாணியை பிரபலப்படுத்தியவரே ஜெயசூர்யாதான். 1996ம் ஆண்டு உலகக் கோப்பை இலங்கை அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஜெயசூர்யாவின் அதிரடியான பேட்டிங்தான். ஜெயசூர்யாவின் இந்த அதிரடி ஆட்டம் வெற்றி பெறவே அதே பாணியை நீண்டகாலத்துக்கு தொடர்ந்தார், பல அணிகளும் இதே பாணியை கையாண்டன.

இன்றைய சூழலில் பல அணிகள் கையாளும் பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை கையாள்வது, பிஞ்ச் ஹிட்டர்களாக மாறுவது போன்ற உத்திகளை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயசூர்யா பரிசோதித்துவிட்டார். ஜெயசூர்யா போன்ற அனுபவசாலியை இலங்கை அணி பயிற்சியாளராக நியமித்தபோதே இந்திய அணிக்கு இந்தத் தொடர் சவாலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்றாற்போல் ஜெயசூர்யா பயிற்சியில் இலங்கை அணி டி20, மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டது. டி20 தொடரை இழந்தாலும், அதில் செய்த தவறுகள் அனைத்தையும் ஒருநாள் தொடரில் திருத்திக்கொண்டு தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் வென்றுள்ளது.

 
இலங்கை அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து தொடக்கத்திலேயே இலங்கை அணி வெளியேறிய உடனேயே, இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகத் தொடங்கியது. இந்திய அணிக்கு எதிரான தொடரை மனதில் வைத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே ஜெயசூர்யாவை இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகவும் இலங்கை கிரி்க்கெட் வாரியம் கொண்டு வந்தது.

இந்திய டி20 அணியில் இருந்து ஜாம்பவான் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றநிலையில் இந்திய அணியை வீழ்த்த இதுதான் சரியான நேரமாக இருக்கும் என நினைத்து உத்திகளை வகுத்தார்.

“பாம்பின் தடம் பாம்பறியும்” என்பதைப் போல இந்திய அணியை வீழ்த்த முன்னாள் இந்திய வீரர் ஒருவரின் உதவியையும், உத்திகளையும் ஜெயசூர்யா நாடினார். அந்த முன்னாள் வீரர் இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்களை பட்டைதீட்டி புதிய பரிமாணத்துக்கு கொண்டுவந்தவர், ஐபிஎல் தொடரிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியதாக இருப்பதால் அவரின் உதவியோடு ஜெயசூர்யா இந்தியத் தொடரை எதிர்கொண்டார்.

ஜெயசூர்யா வகுத்த திட்டங்கள்

இந்திய அணி பேட்டர்கள் பொதுவாகவே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக திணறக்கூடியவர்கள், பெரிதாக ரன்சேர்க்க முடியாதவர்கள். இந்திய அணியில் இருக்கும் ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ், கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், உள்ளிட்ட பேட்டர்கள் சர்வதேச அளவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பெரிதாக ஜொலித்ததில்லை.

அதிலும் கொழும்பு பிரேமதேசா மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் இந்திய அணியின் பேட்டர்களை எளிதாக வீழ்த்த முடியும் என்பதை ஜெயசூர்யா புரிந்து கொண்டார். டி20 தொடர் நடந்த பல்லேகலே மைதானமும் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த மைதானத்தில் இலங்கை அணியினர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பேட்டிங்கில் சொதப்பினர்.

டாப்ஆர்டர் பேட்டர்கள் தவிர மற்ற எந்த பேட்டர்களும் 3 போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படாததால் தொடரை இழக்க நேர்ந்தது. ஒருவேளை நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் ஓரளவுக்கு பேட் செய்திருந்தாலே, டி20 தொடரில் இந்திய அணிக்கு வலுவான போட்டியை இலங்கை அளித்திருக்கும்.

டி20 தொடரில் செய்த தவறுகளை ஒருநாள் தொடரில் திருத்திக்கொள்ள ஜெயசூர்யா முடிவு செய்து அதற்கான திட்டங்களை வகுத்தார். அதில் குறிப்பானது நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்துவது. இதற்காக ஆல்ரவுண்டர் வெனித் வெலாகலேவை அணிக்குள் கொண்டு வந்தார், ஹசரங்காவுக்கு காயம் ஏற்படவே அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளரான வேன்டர்சேவையும் அணிக்குள் சேர்த்தார். இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கு முக்கியத் துருப்புச் சீட்டாக அமைந்தனர்.

அதிலும் வெனித் வெலாகலே நடுவரிசை பேட்டிங்கை ஸ்திரப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். டி20 தொடரில் நடுவரிசை பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தநிலையில், ஒருநாள் தொடரில் வெலாகலே பொறுப்புடன் பேட் செய்து இலங்கை அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுத் தந்தார். அது மட்டுமல்லாமல் கடைசி ஓவர்கள்வரை வெலாகலே களத்தில் இருந்ததால், ஸ்கோர் உயர்வதிலும் இலங்கைக்கு சிக்கல் இல்லாமல் இருந்தது.

 
இலங்கை அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அணியில் வெலாகலேவை கீழ்நடுவரிசையில் களமிறக்கியபின் இலங்கை அணியின் பேட்டிங் ஸ்திரமடைந்தது தெளிவாகத் தெரிந்தது. அடுத்ததாக ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது என்பதால், அணியில் இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதற்குப் பதிலாக பெர்னான்டோவை மட்டும் வைத்து ப்ளேயிங் லெவனை உருவாக்கி, சுழற்பந்துவீச்சாளர்களை அதிகமாக வைத்து களமிறக்க வைத்தார். பெர்னான்டோ ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முழுநேர வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புத் தரப்படவில்லை.

தொடக்கத்திலிருந்தே விதவிதமான சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்குதலை தொடுத்து இந்திய பேட்டர்களை நிலைகுலைய வைப்பதுதான் ஜெயசூர்யாவின் திட்டமாக இருந்தது. வேகப்பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் எளிதாக விளையாடிவிடுவார்கள் ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சு, ஆஃப்ஸ்பின், லெக் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் போன்ற பல்வேறு வகையான பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் எதிர்கொண்டு விளையாடுவதில் சிக்கலைச் சந்திப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு இந்த திட்டத்தை ஜெயசூர்யா செயல்படுத்தினார்.

ஜெயசூர்யாவின் திட்டத்துக்கு கைமேல் பலன் கிடைத்து. இந்தத் தொடரில் இந்திய அணி 27 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சில் மட்டுமே இழந்தது. ஒட்டுமொத்தத்தில் இந்தத் தொடரில் 43 விக்கெட்டுகளை இரு அணிகளும் சுழற்பந்துவீச்சில் மட்டுமே இழந்தன. அந்த அளவு சுழற்பந்துவீச்சாளர்கள் கொழும்பு ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இந்திய அணியில் தற்போது இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் ஆகியோர் இலங்கை கொழும்பு மைதானத்தில் அதிகமாக விளையாடி அனுபவம் இல்லாதவர்கள். அந்த மைதானத்தின் தன்மை, விக்கெட்டின் தன்மை, எப்படி விக்கெட் செயல்படும், எந்த ஓவர்களுக்குப்பின் விக்கெட்டின் தன்மை எப்படி மாறும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினாலும் கொழும்பு ஆடுகளத்தின் தன்மையை இலங்கை பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே அறிந்திருந்தனர். இவை அனைத்தும் இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்தது.

இலங்கை அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் காரணிகளை பயன்படுத்திக்கொண்டு இந்திய அணி பலத்தையே, அந்த அணிக்கு எதிராக பலவீனமாக ஜெயசூர்யா மாற்றினார். சர்வதேச அரங்கில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பெரிதாக மதிக்கக்கூடியதாக, அச்சுறுத்தக்கூடியதாக இருந்து வருகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதே சுழற்பந்துவீச்சை பயன்படுத்தி, இந்திய பேட்டர்களை திணறவைத்து, ஜெயசூர்யாவின் உத்திகள் ஒருநாள் தொடரை வென்றுள்ளன.

இதில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், செட்டில் ஆனபின்புதான் எந்த பந்துவீச்சையும் வெளுக்கும் தன்மைஉடையவர்கள். மற்றவகையில் இருவருமே சுழற்பந்துவீச்சுக்கு பலமுறை விக்கெட்டை இழந்துள்ளனர், அதிலும் விராட் கோலி, லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஏராளமானமுறை விக்கெட்டை இழந்துள்ளார்.

இந்த விஷயத்தையும் ஜெயசூர்யா கணக்கில் வைத்து, ரோஹித், கோலிக்கு எதிராக சுழற்பந்துவீச்சு ஆயுதத்தை பயன்படுத்தினார். கோலிக்கு எதிராக சுழற்பந்துவீச்சு உத்தி நன்கு பலன் கொடுத்தது. இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை, 3 ஆட்டங்களிலும் கோலி காலை நகர்த்தால் ஆடி விக்கெட்டை இழந்தார். ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தைக் கையாண்டாலும் அவரின் பலவீனத்தை அறிந்து அவரையும் சுழற்பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர்.

சீனியர் வீரர்களுக்கு எதிரான உத்திகள் வெற்றியானதால், அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு எதிராக உத்திகளை வகுப்பது ஜெயசூர்யாவுக்கு எளிதாக இருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர், சாம்ஸன், ராகுல் ஆகியோர் உள்நாட்டு மைதானங்களில் சுழற்பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு விளையாடியுள்ளார்கள். ஆனால், வெளிநாடுகளில்நடந்த டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இவர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை.

இந்த தவலை வைத்து நடுவரிசை பேட்டிங் வரிசையை சிதைக்க திட்டம் வகுக்கப்பட்டது. குறிப்பாக வெலாகலே, வேண்டர்சே ஆகியோரின் சுழற்பந்துவீச்சை இதுவரை இந்திய பேட்டர்கள் எதிர்கொண்டது இல்லை. இந்திய பேட்டர்களுக்கு எதிராக புதிய சுழற்பந்துவீச்சாளர்களைப் பந்துவீசச் செய்து திணறவைத்து, விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியது இலங்கை அணி. 2வது ஒருநாள் ஆட்டத்தில் வேண்டர்சே 6 விக்கெட்டுகளையும், 3வதுஆட்டத்தில் வெலாகலே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது கவனிக்கத்தக்கது.

யார் அந்த இந்திய வீரர்

அது மட்டுமல்லாமல் இந்திய அணியை வீழ்த்துவதற்காக இந்திய முன்னாள் வீரர் ஒருவரின் உதவியையும் ஜெயசூர்யா கேட்டுப் பெற்றுள்ளார். அந்த வீரரும் ஜெயசூர்யாவுக்கு தேவையான ஆலோசனைகளையும், உத்திகளையும் வகுத்துக் கொடுத்துள்ளார்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரியான் பராக், ஜூரெல், சாம்ஸன், கெய்க்வாட், சுப்மான் கில் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் அவரின் பயிற்சிப் பட்டறையில் இருந்து பட்டைத் தீட்டப்பட்டு வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஜூபின் மினோ பருச்சா என்ற முன்னாள் வீரர்தான் ஜெயசூர்யாவுக்கு உதவியுள்ளார்.

இலங்கை அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மகாராஷ்டிரா அணிக்காக முதல்தரப் போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பையிலும் ஆடியுள்ள பரூச்சா, இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால், அதிகமான கிரிக்கெட் அனுபவத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்திறன் இயக்குநராக 2008 முதல் 2015வரை செயல்பட்டார். அதன்பின் 2018ம் ஆண்டிலிருந்து மீண்டும் அந்த அணியின் இயக்குநராக பருச்சா இருந்து வருகிறார்.

நாக்பூரில் இருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலேகான் நகரில்தான் பரூச்சா, வேர்ல்ட் கிரிக்கெட் அகாடெமியை நிறுவி ஏராளமான இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். இந்த அகாடெமியில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மைதானங்களின் மாதிரிகளும் அமைக்கப்பட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதாவது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பவுன்ஸர் விக்கெட், சென்னையில் இருக்கும் செம்மண் ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என ஏராளமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு எந்தெந்த வீரர்களுக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த அகாடெமியில் இருந்துதான் ஜெய்ஸ்வால், சாம்ஸன், துருவ் ஜூரெல், ரியான் பராக், சுப்மான் கில் உள்ளிட்ட ஏராளமான இளம் வீரர்கள் தங்களின் பேட்டிங் திறனை மெருகேற்றிக் கொண்டுள்ளனர். இந்த அகாடெமியை நடத்தும் பரூச்சாதான் இலங்கை பயிற்சியாளர் ஜெயசூர்யாவுக்கு தேவைாயான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் புதியதொழில்நுட்பங்கள், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

 
இலங்கை அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது குறித்து ஜெயசூர்யா சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இலங்கை டி20 லீக் முடிந்தவுடனேயே நாங்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டோம். இந்திய அணியில் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகிய 3 பெரிய வீரர்கள் ஓய்வு அறிவித்தநிலையில், இந்திய அணியை ஆதிக்கம் செய்து வெல்ல இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்திறன் இயக்குநர் ஜூபின் பருச்சா உதவியை நாடினேன் அவரின் ஆலோசனைகளை கேட்டேன். இலங்கை வீரர்களுக்கு ஏறக்குறைய 6 நாட்கள் பருச்சா பயிற்சிஅளித்து, தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார், நவீன காலத்தில் பேட்டிங், பந்துவீச்சில் இருக்கும் மாற்றங்கள், உத்திகளையும் வழங்கினார்."

"இதை வைத்துக்கொண்டு டி20 தொடர் தொடங்க 2 நாட்கள் முன்புவரை கண்டி நகரில் பயிற்சியில் இருந்தோம். பரூச்சாவுடன் நாங்கள் செலவிட்ட 6 நாட்களும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது, வீரர்களும் ஏராளமான அம்சங்களை, நுணுக்கங்களை பரூச்சாவிடம் இருந்து கற்றனர்” எனத் தெரிவித்தார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நேற்று ப‌டு தோல்வி

த‌மிழக‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் க‌ட‌சி க‌ட்ட‌த்தில் அடிச்சு ஆடினார் அவ‌ரும் சீக்கிர‌ம் அவுட் ஆகி இருக்க‌னும் இல‌ங்கை பெரிய‌ ர‌ன் ரேட்டில் வென்று இருக்கும்..............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.