Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு

கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு.

83 கலவரத்தின் அத்திவாரம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..??
கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

july-83.jpg?resize=600,305

 

ஈழத் தமிழர் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி என்பது பாரிய திருப்பத்தை எற்படுத்திய நாள்.
தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்ட நாள் என்றே கூறவேண்டும்.

நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை, அரசாங்கம் உருவாகியுள்ளதா என்பதே தற்போதைய காலகட்டத்தில் முதலாவது கேள்வியாக எமது கண்முன்னே எழுந்து நிற்கின்றது.

1983ஆம் ஆண்டு 23ஆம் திகதியை கறுப்பு ஜூலை என பிரகடனப்படுத்தியுள்ள, இந்த பௌத்த மேலாதிக்க அதிகாரவர்க்த்தினர் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியுள்ளார்களா என்ற கேள்வியும் எழுப்படுகின்றது.

நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த ஒருசில அரசியல்வாதிகள், மற்றும் அரச தலைவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்து கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதன்முறையாக வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.

black-july.jpg?resize=600,411

இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேட்சத்தனமான முறையில் இனகலவரம் அரங்கேற்றப்பட்டது.
இந்த இனகலவரம் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை வலுவாக தோற்றுவித்தது.

1983 ஜூலை 23 ஆம் திகதியன்று அதிகாலை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவச் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த 13 இராணுவத்தினரின் சடலங்களும் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் அதிகமான ஒன்றுகூடியிருந்தனர்.

அதனால் கொழும்பில் 41 வருடங்களுக்கு முன்னர் இதே ஒரு நாளில் பதற்றமும் நிலவியது.
இதன் பின்னரே தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமானது.

Diwi0TLVAAAiJHp.jpg?w=481

கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, வீடுகள், மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள் பெரும்பான்மை இனத்தவர்களினால் எரிக்கப்பட்டன.

 

நிலைமை மோசமடைந்ததை போதும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜேஆர்.ஜயவர்தனவினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பது இன்றளவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த கிளர்ச்சிச் சூழலை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜே.வி.பி உட்பட மூன்று கட்சிகளுக்கு அப்போதைய அரசாங்கம் தடை விதித்திருந்தது.

கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என வர்னிக்கப்படுகின்ற இந்த கலவரத்தை இன்றும் உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1393294

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41 ஆவது நினைவேந்தல்

23 JUL, 2024 | 03:32 PM
image

(எம்.நியூட்டன்)

கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனை அறிவகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன்,  வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

கட்சியின்  உறுப்பினர்கள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந் நினைவேந்தலின் போது, அண்மையில் மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவரும், ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவருமான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொட மகேஸ்வரன்) அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240723-WA0063.jpg

IMG-20240723-WA0067.jpg

IMG-20240723-WA0076.jpg

IMG-20240723-WA0074.jpg

IMG-20240723-WA0071.jpg

IMG-20240723-WA0078.jpg

https://www.virakesari.lk/article/189184

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் நினைவுகூரல் ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல்

Published By: VISHNU

23 JUL, 2024 | 07:30 PM
image
 

(நா.தனுஜா)

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை கலவரங்கள் அரங்கேறி 41 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை எனவும், தமிழ்மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழமுடியாத அச்சுறுத்தல் நிலை தற்போதும் தொடர்கிறது எனவும் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி நேற்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும், தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ உறுதிசெய்யப்படவில்லை.

 இந்நிலையில் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி வடக்கு - தெற்கு சகோதரத்துவம் எனும் அமைப்பினால் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு, பொரளை கனத்தை பொதுமயானத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் 'மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்' எனும் தொனிப்பொருளில் நினைவுகூரல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வடக்கு - தெற்கு சகோதரத்துவம் அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் 'தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை மறவோம்', 'இனப்படுகொலைக்கு நீதி வழங்கு' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

 இங்கு கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீநாத் பெரேரா, வடக்கில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையை அடுத்து, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகக்கொடூரமான வன்முறைகளை நினைவுகூர்ந்தார். அத்தோடு இந்நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜுலை கலவரங்கள் ஏற்படக்கூடாது என்பதை முன்னிறுத்தியே இந்த நினைவுகூரல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போதும் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடரும் நிலையில், அவற்றைக் களைந்து அவர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

 அதேபோன்று கறுப்பு ஜுலை கலவரங்கள் ஆரம்பமான தினத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் பெரும் எண்ணிக்கையான தமிழ் கைதிகள் கொல்லப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார். 

அதேவேளை அங்கு கருத்துரைத்த அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல், யாழ் நூலக எரிப்பு, கறுப்பு ஜுலை கலவரங்கள் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், இன்னமும் இந்நாட்டில் தமிழ்மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழல் உறுதிசெய்யப்படவில்லை என விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி ஞானசார தேரருக்கும், ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் பிணை வழங்கமுடியுமெனில், பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கமுடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

அதனைத்தொடர்ந்து நினைவுகூரலில் கலந்துகொண்டவர்கள் அச்சுற்றுவட்டத்தில் உள்ள நினைவுக்கல்லில் மெழுகுதிரிகள் மற்றும் விளக்குகளை ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், பின்னர் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர்.  

கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் நினைவுகூரல் ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

452704299_889167039914936_18985545359812

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

452505810_888789616619345_42351343549655

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.