Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

திராவிடப் பேரரசும், திளைத்து வாழும் சிற்றரசர்களும்!

-சுப. உதயகுமாரன்

 

589577.jpg

திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -1

அன்றைய வரலாற்றின் தேவையாக உருவான இந்த இயக்கம் காலப் போக்கில் பெயர் மாறி, உருமாறி, திசைமாறி..பயணித்துக் கொண்டிருக்கிறது..! இதன் ஆரம்ப காலம் தொடங்கி இன்று வரை சமூக, அரசியல் தளங்களில் இது ஏற்படுத்திய தாக்கங்களையும், இன்றைய சரிவுகளையும் சமரசமின்றி அலசுகிறார் சுப.உதயகுமாரன்;

சமூக-பொருளாதார-அரசியல் தளங்களில் பார்ப்பனரல்லாத தென்னக மக்கள் அதிகமான வாய்ப்புக்களைப் பெறவும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவுமாக சர். பிட்டி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் போன்றோரால் 1916-ஆம் ஆண்டு தென் இந்திய நல உரிமைச்சங்கம் எனும் அமைப்புத் தொடங்கப்பட்டது. இவர்கள் நடத்திய “ஜஸ்டிஸ்” (நீதி) எனும் ஆங்கில இதழின் பெயர்க் காரணத்தால், இந்த அமைப்பு நீதிக் கட்சி (Justice Party) என்றழைக்கப்பட்டது. மேற்கண்ட பெயர்களில் உள்ள “நலம்,” “உரிமை,” “நீதி” போன்றவை ஆழமான அரசியல் அர்த்தம் கொண்ட வார்த்தைகள்.

474665.jpg நடேசன், சர்.பிட்டி.தியாராஜர், டி.எம். நாயர்

பார்ப்பனர்களின், வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தென்னிந்திய மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, ஜஸ்டிஸ் கட்சியை  1944-ஆம் ஆண்டு ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றி நடத்திய பெரியார், இந்தியாவின் விடுதலை நாளை கருப்பு நாளாக அறிவித்தார். அதனை எதிர்த்த அண்ணாவோ, இந்திய விடுதலை வெறும் ஆரிய வட இந்தியர்களால் மட்டும் பெறப்பட்டதல்ல, அனைத்து இந்தியர்களின் உழைப்பும் அதிலே அடங்கியிருக்கிறது’’ என்று வாதாடினார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய, தான் நினைக்கும் சமூகச் சீர்திருத்தங்களை, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று உறுதியாக நம்பினார் பெரியார். ஆனால், தேர்தலில் பங்கு பெறாமல் திராவிடர் கழகம் விலகி நிற்பது அண்ணாவுக்கும் அவர் தோழர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல், முன்னவர் தன்னைவிட ஏறத்தாழ 40 வயது இளையவரான மணியம்மையாரை மணம்புரிய முடிவு செய்தபோது, உடைப்பாக உருவெடுத்தது. அண்ணாவும் அவர் தோழர்களும் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினர்.

mNMBQ3tl-7-36.jpg

குடந்தை கே. கே. நீலமேகம், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராஜன், பெரியாரின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்ட அவரது அண்ணன் மகன் ஈ.வி.கே. சம்பத் எனும் “ஐம்பெரும் தலைவர்கள்” புடைசூழ, அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கனமழைக்கிடையே புதிய கட்சி தொடங்கப்பட்ட போது, குடந்தை கே. கே. நீலமேகம் அவர்கள் தான் கட்சியின் பெயரை அறிவித்ததாகக் கேள்விப்படுகிறோம்.

பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி (தீண்டாமை) ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளோடு பெரியாரின் திராவிடர் கழகம் இயங்கிக் கொண்டிருக்க, “முன்னேற்றம்” எனும் கருத்தை ஏற்றெடுத்து “திராவிட முன்னேற்றக் கழகம்” என்று தம் கட்சிக்கு பெயர் வைத்தார் அண்ணா. திராவிட இனமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்கவும், தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்தவுமாக, ஏறக்குறைய திராவிடர் கழகத்தின் கொள்கைகளை ஒத்தே தி.மு.க. சிந்தித்தது. தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தால் தான் மாநிலத்தை சீரமைக்க முடியும் என்று உறுதியாக தி.மு.க. நம்பியது.

main-qimg-6fb98b2578a31144b84ca0f59f9878 அண்ணாவும், ஐம்பெரும் தலைவர்களும்!

கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ‘Dravidian Progressive Federation’ என்று கொள்ளப் பட்டதாகவும், “முன்னேற்றம்” என்பது முற்போக்கு என்ற அர்த்தத்திலேயே அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் மற்றும் அரசியல் பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர் என்கிற முறையில் “முன்னேற்றம்,” “வளர்ச்சி” பற்றியெல்லாம் உறுதியாக சிந்தித்திருப்பார்.

தி.மு.க. படிப்படியாக முன்னேறி ஆட்சியைப் பிடித்தபோது, அண்ணா முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த போதும், சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றினார். சீர்திருத்தத்  திருமணங்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்தார். தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்தி மொழியை அறவே நீக்கினார். சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டத்தை சோதனை முறையில் அமுல்படுத்தினார். ஏழைகளுக்கு எரியாத வீடுகள் அளித்தார். பேருந்துகளை நாட்டுடமை ஆக்கினார். ஆனால், ஆட்சி அதிகாரத்தின் உதவியுடன் தன் குடும்பத்தையோ, உறவினர்களையோ “முன்னேற்றிக்” கொள்ளவில்லை அவர். அறிஞர் அண்ணா பிப்ரவரி 3, 1969  அன்று இயற்கை எய்தியது தமிழ்நாட்டுக்கு பேரிழப்பாக அமைந்தது.

ஒரு பெரும் அதிகாரப் போட்டி நிகழ்ந்து, கலைஞர் மு. கருணாநிதி அடுத்த முதல்வராகப் பதவியேற்றார். “ஆதிக்கமற்றச் சமுதாயம் அமைத்தேத் தீருவோம்,” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றெல்லாம் மேம்போக்கான முழக்கங்களை முன்வைத்த தி.மு.க., “முன்னேற்றம்” குறித்த ஆழமான தத்துவார்த்தப் பார்வையோ, அரசியல் பொருளாதாரப் புரிதலோ, சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ கொண்டிருக்கவில்லை.

கலைஞரின் அரசு நலிவுற்ற, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்களை  நிறைவேற்றியது. குடிசை மாற்று வாரியம், பிச்சைக்காரர் மற்றும் தொழுநோயாளர் மறுவாழ்வு இல்லங்கள், கருணை இல்லங்கள், கண்ணொளி வழங்கும் திட்டம், பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி மற்றும் ஆடைகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கை ரிக்சாக்களை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கியது, ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம், ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம், ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள், மாநில திட்டக்குழு அமைப்பு என பல நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.

சமூகநீதி, இட ஒதுக்கீடு போன்ற விடயங்களிலும் பெரும் பங்களிப்பினைச் செய்தார் கலைஞர்.

karunanidhi.jpg

தமிழினத்தின் பழைய சிறப்புக்களை நினைவுகூறும் வகையிலும், தமிழ் மொழிக்காக பாடுபட்ட பெரியோர்களின் சேவைகளை நிலைநிறுத்தும் விதத்திலும் பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம், கட்டபொம்மன் கோட்டை, நினைவில்லங்கள் போன்றவற்றை உருவாக்கினார். இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தது, தமிழர்களை `முட்டாள்கள்’ என்று நிந்தித்த நேருவைக் கண்டித்தது, டால்மியாபுரம் தொடர் வண்டி நிலையத்தின் பெயரை ‘கல்லக்குடி’ என்று மாற்றியது போன்ற உணர்ச்சி அரசியலும் மேலோங்கி நின்றது.

மக்களின் உணர்வுகளைத் தூண்டி வழிநடத்தும் குறியீட்டு அரசியலும், கல்வி, வேலை வாய்ப்புக்களில் சலுகைகளைப் பெற்றுத் தருவதும் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோல முடியாது. அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் சமூக நிலையை உயர்த்திக் கொள்வதற்கும், பொருளாதார மேம்பாட்டினை அடைவதற்கும், அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் தத்துவார்த்த அடிப்படையும், நீண்டகால அரசியல் செயல் திட்டங்களும், தெளிவானப் பொருளாதார நடவடிக்கைகளும் வேண்டும்.

கட்சிக்காரர்கள் தம்மையும், தம்மைச் சார்ந்தோரையும் “முன்னேற்றிக் கொள்ள” அனுமதிப்பதன் மூலம் தான், அவர்களின் தொடர்ந்த ஆதரவைப் பெற முடியும் என்ற அடிப்படையில் லஞ்சமும், ஊழலும், ஊதாரித்தனமும் முன்னேற்றத்தின் அங்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர். “முன்னேற்றம்” குறித்த மேம்போக்கானப் பார்வை கொண்டவராகவே இருந்தார். ‘அண்ணாயிசம்’ எனும் யாருமறியா தத்துவத்தின் வழியாகவும், சினிமாப் பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாகவுமே முன்னேற்றம் மட்டுமல்ல, நல்வாழ்க்கையும்கூட அறியப்பட்டது.

155.jpg

வறுமையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் குழந்தைகளை மீட்டு, பள்ளிக்குச் செல்ல வைக்க பெருந் தலைவர் காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆர். அதனை சத்துணவுத் திட்டம் என்று பெயர் மாற்றி, முட்டையும் சேர்த்துக் கொடுத்தார். கூடவே மக்களுக்கு இலவசக் காலணியும், பல்பொடியும் கொடுத்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் இலவச கலர் டி.வி. கொடுத்தார். அடுத்து வந்த முதல்வர் ஜெயலலிதா பொங்கல் கொண்டாடுவதற்கு இலவச அரிசியும், பருப்பும், சர்க்கரையும் கொடுத்தார்.

ஆடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மிதிவண்டி, மடிக்கணினி என தமிழகத்தில் “முன்னேற்றம்’ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளுக்கு காலையுணவையும் சேர்த்து வழங்குகிறார். ஐம்பதாண்டு காலம் கடந்த “திராவிட முன்னேற்றக்” கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைமையை அவர்களால் உருவாக்க முடியவில்லை.

1108628.jpg

விவசாய மேம்பாடோ, தொழில் வளர்ச்சியோ, உற்பத்திப் பெருக்கமோ, வேலை வாய்ப்புக்களோ, வருமான உயர்வோ, மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்போ எதுவும் பெருமளவில் நடக்கவில்லை. மாறாக, இலவசங்கள் வழங்குவது, கமிஷன் பெறுவது, இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொழுப்பது, மக்களின் வாக்குக்களை விலைக்கு வாங்குவது என “திராவிட முன்னேற்றத்தின்” நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டிருக்கிறது.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், மீத்தேன் எரிவாயுத் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை பெரிய “திராவிட  முன்னேற்றக்” கட்சிகள் அப்படியே ஏற்றுக் கொண்டன. வைகோ அவர்கள் வழிநடத்தும் ம.தி.மு.க. மட்டுமே இவற்றை எதிர்த்தது. காவிரி டெல்டா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்புச் சோதனைகள் தான் அண்மை அவலத்துக்கு அடித்தளமாக அமைந்தன. இந்த கால கட்டத்தில் இரண்டு “முன்னேற்றக்” கழகங்களும் தான் மாறி, மாறி ஆட்சியில் இருந்தன என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

கடந்த ஐம்பதாண்டுகளாக இரண்டு பெரிய திராவிட முன்னேற்றக் கழகங்களின் முன்னேற்றம், வளர்ச்சி, நல்வாழ்வு பற்றிய புரிதலை அவதானித்தால் இந்த சொலவடை தான் நினைவுக்கு வருகிறது. “குங்குமம் என்பதை நானறிவேன், அது மஞ்சள் போல வெண்மையாய் இருக்கும்!”. அதாவது, புரியாத ஒன்றை புரிந்தது போல பாவனை செய்வது!

எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சியாக இயங்கும் போது அதற்கு நேரெதிர் நிலைப்பாடும் என்பதே திராவிட முன்னேற்ற கழகத்தின் வழிமுறையாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் ஓர் அண்மைய எடுத்துக்காட்டு.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் கைக்கொள்ளும் ‘முன்னேற்றம்’ குறித்த நிலைப்பாடு ஊன்றி கவனிக்கத்தக்கது. உள்ளூர் எதிர்ப்புகளால் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, ஸ்டெர்லைட் போன்ற பல்வேறுத் திட்டங்களை அவர் எதிர்த்தாலும், பரந்தூர் விமான நிலையம், மேல்மா சிப்காட் விரிவாக்கம் போன்ற பல திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளை நசுக்கி, கடுமையாக நின்று அமல்படுத்த முயற்சிக்கிறார்.

வெளிநாட்டு மூலதனத்தைக் கவரும் முயற்சிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டியம் கூறி வரவேற்கும் செயல்பாடுகளும், ‘ஸ்டாலினின் முன்னேற்றம் புதிய கோணத்தில் அணுகப்படவில்லை’ என்பதைத் தெளிவாக்குகின்றன. நாடெங்கும் கனிம வளக் கொள்ளை பரவலாக நடந்து கொண்டிருக்கிறது.

ஐம்பது-அறுபது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, இன்றைய தமிழ்நாட்டின் பரந்துபட்ட நிலைமையை ஒரு தேர்ந்த தலைப்போடு விவரிக்க வேண்டுமென்றால், இப்படிச் சொல்வது தான் சரியாக இருக்கும்: “திராவிடப் பேரரசும், திளைத்து வாழும் சிற்றரசர்களும்!”

suba.udhayakumar.jpg

(கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன்

அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர்.)
 

https://aramonline.in/18518/analysis-of-dravidian-parties/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திராவிட அரசியலும், திரைத்துறை ஆதிக்கமும்!

-சுப. உதயகுமாரன்

 

187789.jpg

திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் – 2

அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்த திராவிடத்தின் ‘திரையில் இருந்து தொடங்கிய அரசியல் பயணம்’ கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா..என வளர்ந்து, விஜயகாந்தை தொட்டுப் படர்ந்து துவண்டு, பிறகு சீமான், உதயநிதி, விஜய்..என மையம் கொண்டு களமாடுவதை அரசியல், சமூகப் பார்வையோடு விவரிக்கிறார் சுப.உதயகுமாரன்;

தமிழகம் ஒரு மாபெரும் சமூக-பொருளாதார-அரசியல் திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. சாதி வெறி, மத வெறி, குடி நோய், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கைகள் என ஏராளமான சமூகப் பிரச்சினைகள் நம்மை பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன. ‘முன்னேற்றம்,’ ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் ஏராளமான அழிவுத் திட்டங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன.

கால நிலைச் சிதைப்பு, வளக் கொள்ளை, மாசுபாடு, வாழ்வாதார அழிப்பு, நிலத்தடிநீர் இழப்பு என்று உழன்று கொண்டிருக்கிறோம். அரசியல் அரங்கில் சர்வ தேசியம், இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் என நம் மண்சாரா, மக்கள்சாரா, மரபுசாரா விழுமியங்கள் சதிராட்டம் போடுகின்றன.

பெருந் தலைவர்கள் யாருமற்ற அரசியல் வெற்றிடத்தை திரைத் துறையினர் சிலர் ஆக்கிரமிக்க கடிதில் முனைகின்றனர். தமிழக அரசியலில் திரைத் துறையின் ஆதிக்கம் உற்று நோக்கப்பட வேண்டியது.

காங்கிரசுத் தலைவர் சத்தியமூர்த்தி சினிமாவை ஒரு பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தலாம் என்றெண்ணினாலும், தி.மு.கழகம்தான் சினிமாவை முழுவீச்சில் கைக்கொண்டு களமிறங்கியது. புதினங்களும், நாடகங்களும் எழுதிய அறிஞர் அண்ணா வேலைக்காரி, நல்லதம்பி, ஓரிரவு, சொர்க்க வாசல் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார்.

1000_F_118089025_LNIMFanWkuCDpZhZKNY1GhQ

தாய் ஐந்தடி பாய்ந்தால் குட்டி பத்தடி பாயும் என்பது போல, கலைஞர் கருணாநிதி அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். நாளடைவில் தமிழ் மக்களின் கவனம் அறிவார்ந்த மூளையிலிருந்து அரிதாரம் பூசிய முகத்துக்குத் தாவியது.

திமுக நட்சத்திரம் எம்.ஜி.ஆர். மொத்தம் 138 திரைப்படங்களில் நடித்தார். ஜெயலலிதா 140 படங்களில் நடித்தார். இருவரும் இணைந்து 1965–1973 கால கட்டத்தில் 28 வெற்றிப் படங்களை வழங்கினர். இளமையும், இனிமையும், ஆடலும், பாடலும், கிறுகிறுப்பும், விறுவிறுப்பும் ததும்பும் அந்த திரைப்படங்கள் இன்றளவும் பேசப்படுபவை. தன்னுடைய திரைப்படங்களில் அபலைப் பெண்களின் ஆபத்பாந்தவனாக, மது அருந்தாத, புகைப்பிடிக்காத ஒழுக்க சீலனாக, ஓர் உன்னத பிம்பத்தைக் கட்டமைத்து வளர்ந்தார் எம்.ஜி.ஆர். கட்சியில் களப்பணி ஆற்றியிருந்த அனுபவத்தையும் வைத்துக் கொண்டு, காற்றுள்ள போதேத் தூற்றிக் கொண்டார் அவர்.

MGR-Jayalalitha-movie.jpg

கலைஞர்–எம்.ஜி.ஆர். உறவு கெடுவதற்கான காரணங்கள் பின்னவர் அரசில் பதவி கேட்டதும், கட்சியில் கணக்குக் கேட்டதும் மட்டுமல்ல, கலைஞர் தன்னுடைய மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக திரையுலகில் களமிறக்கியதும் தான். இம் மோதலின் விளைவாக 1972–ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கினார். பின்னர், அவரது கட்சியின் இல்லாத கொள்கையை அறியாத ஜெயலலிதா ஏகாந்தத்தில் பரப்புவதற்கு ஏதுவாக, அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் (கொ.ப.செ.) பதவியை வழங்கினார். புரட்சி நடிகராக இருந்தவர் ‘பட்ட உயர்வு’ பெற்று “புரட்சித் தலைவர்’ ஆனார். அவரை அடியொற்றி, ஜெயலலிதா ‘புரட்சித் தலைவி’ ஆனார்.

hq720.jpg

முன்னவர் காலமானதும், பின்னவர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். எம்.ஜி.ஆரின் துணைவியார் வி. என். ஜானகியும் சினிமா நடிகை தான் என்றாலும், தமிழ் மக்கள் “சின்னவளை, முகம் சிவந்தவளை”த் தான் தலைவியாக விரும்பி ஏற்றார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமா ‘புரட்சி’ களமாகவும். ‘புரட்சி’ சினிமாத் தனம் கொண்டதாகவும் இருக்கின்றன. அதிமுகவிலிருந்து புரட்சியையும், திமுகவிலிருந்து கலைஞரையும் தேர்ந்தெடுத்து, தேசியம், திராவிடம், முற்போக்கு என்றொரு வினோத அவியலைச் சமைத்து விளம்பினார் ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த். அரசியல் மாற்றம் விரும்பிய தமிழ் இளைஞர்கள் அவரையும் வரவேற்றனர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அவர் மட்டும் வென்றார். இரண்டாவது தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரானார். அரசின் கொள்கைகளை விவாதித்து, திட்டங்களை ஆய்வுசெய்து, மக்கள் பிரச்சினைகளைப் பேசி, திறம்பட இயங்கியிருந்தால் நிலைத்து நின்றிருக்கலாம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

Vijayakanth-1.jpg

அடுத்து தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் இருவரும் தமிழ்நாட்டு அரசியலைக் கொஞ்சம் உருட்டினார்கள். முன்னவரிடம் கொள்கை என்று சொன்னால், அவருக்கு தலைச் சுற்றியது; பின்னவர் தன் கொள்கையைச் சொல்ல வந்தால் நமக்கு தலைச் சுற்றியது. முன்னவர் ஒதுங்கினார், பின்னவர் ஒதுக்கப்பட்டார்.

பெயரும், புகழும், பணமும், படையும், சக்தி வாய்ந்தோர் ஆதரவும், அனுசரணையும் மட்டுமே பொது வாழ்வுக்குப் போதாதென்று அண்மைய ரஜினி-கமல் காட்சிகள் தெளிவாக நிறுவுகின்றன. இது ஒரு நல்ல, மிக முக்கியமான, வரவேற்கப்படவேண்டிய விடயம்.

‘புரட்சித் திலகம்’ சரத்குமார், டி.ராஜேந்தர், கார்த்திக், பாக்கியராஜ், குஷ்பு, விந்தியா, நமீதா, சீமான், உதயநிதி, விஜய் என ஏராளமான திரையுலகினர் பொது வாழ்க்கைக்கு வரிசை கட்டி வருகின்றனர். தங்களின் சினிமாப் புகழை பயன்படுத்தி அரசியல் அதிகாரம் பெற அவர்கள் முனைகிறார்கள்.

சனநாயகத்தன்மையைப் போற்றுவதாகப் பீற்றிக் கொள்ளும், தி.மு.க.வும், அதன் தலைமையும் தங்களின் அடுத்த தலைமுறைத் தலைவராக உதயநிதியை உருவாக்கிக் கொள்வதற்கு திரைத் துறையையே நாடினர். அவரைத் திட்டமிட்டு வலிந்து சினிமாவுக்குள் புகுத்தி, அவர் முகத்தை தமிழகமெங்கும் பிரபலமாக்கி, கடந்தத் தேர்தலில் பிரச்சார பீரங்கியாகக் களமிறக்கி, கழக உடன் பிறப்புக்களையும், தமிழர்களையும் மனதளவில் தயாரித்து, இப்போது கொல்லைப் புறம் வழியாக ‘மினி பட்டாபிஷேகம்’ ஒன்றையே அரங்கேற்றி வைத்திருக்கிறார்கள்.

Udhayanidhi-Stalin.jpg

உதயநிதியைவிட தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் வேறு யாருமே தி.மு.க.வில் இல்லையா? எல்லாப் பொறுப்புக்களுக்கும் தேர்தல் நடத்தும் தி.மு.க. ஏன் அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ். போல, ஆட்களை நியமனம் செய்கிறது? “நாங்கள் அடிப்படையில் சனநாயகவாதிகள், ஆனால், அவ்வப்போது சர்வாதிகாரிகள்” எனும் புதுவித அரசியலா இது? அறிஞர் அண்ணா தனது மூத்த மகன் டாக்டர் பரிமளத்தை கட்சியின் பொதுச் செயலாளராகவோ, தமிழகத்தின் முதல்வராகவோ நியமித்திருந்தால், திருக்குவளைக் குடும்பம் திசை தெரியாமல் போயிருக்குமே?

சினிமா நடிகர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம், வரட்டும். ஆனால், மக்களைச் சந்திக்காமல், அவர்களின் பிரச்சினைகளை அறியாமல், அரசியல் அறிவு ஏதுமில்லாமல், சினிமாப் புகழை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு முதல்வராக முயற்சிப்பது தான் பிரச்சினை. ஒரு நல்ல ஆசிரியராவதற்கு கல்வியியல் பாடம் படிக்கச் சொல்கிறோம். ஒரு நல்ல மருத்துவராவதற்கு ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் பாடங்களை கற்கச் சொல்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் முதல்வராவதற்கு மூன்று சினிமாவில் நடித்தால் போதும் என்றால், அந்த நாடு எப்படி உருப்படும்?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவில் தொடங்கிய திராவிட அரசியல், கலைஞர் கருணாநிதியில் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, உதயநிதி என்று சினிமாக்காரர்களிடம் சிக்கி தொடர்வது காலத்தின் கோலம். குடும்ப அரசியல், வாரிசு அரசியல், தனிநபர் துதி, அடிமை மனோபாவம் என்றியங்கும் தி.மு.க. என்கிற கட்சியை வழிநடத்த உதயநிதி சரியானவராக இருக்கலாம், ஆனால், எட்டுக் கோடி தமிழக மக்களை வழிநடத்த அவர் தகுதியானவர்தானா..? என்கிற கேள்வி எழுகிறது.

அந்த தகுதிகளை பெறுவதற்காகத் தான் இப்போது கட்சியிலும், அரசிலும் பதவிகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்று வாதிட்டால், அந்த முடிவின் அநியாயத்தை, அந்த செயல்பாட்டின் சனநாயகமற்றத் தன்மையை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. கோபாலபுரம் குடும்பத்துக்குள் தான் ஆட்சி அதிகாரம் தக்க வைக்கப்பட வேண்டுமென்றால்கூட, உதயநிதியை விட அறிவும், ஆற்றலும், அனுபவமும் மிக்க கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோரில் ஒருவரைத் தேர்வு செய்திருக்கலாமே?

சினிமாவை கலையாக, தொழிலாக, வணிகமாக மட்டும் பார்க்காமல், தலைவர்களை உருவாக்கும் தளமாகவும் பார்த்தால், தமிழினம் எந்தக் காலத்திலும் உருப்பட முடியாது. கேரளத்தின் புகழ்பெற்ற நடிகர் பிரேம் நசீர் (1950–1980) 520 படங்களில் கதாநாயகனாக நடித்தார். நடிகை ஷீலாவோடு மட்டும் 130 படங்களில் நடித்தார். அனைத்தும் வெற்றிப் படங்கள். ஆனால் இருவரும் ஒரு வார்டு கவுன்சிலராகக்கூடத் தேர்வாக முடியவில்லை.

நவீன உலகில் நடிப்பும், அரசியலும் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. திரையுலகில் நடைபெறும் ஆதிக்கம், அணிசேர்ப்பு, ஏகபோகம் உள்ளிட்ட அரசியல், அரசியல்வாதிகள் அன்றாடம் கைக்கொள்ளும் கதை சொல்லல், வசனம், நடிப்பு போன்றவற்றை நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

3277159-seeman1.jpg

“துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி” என்கிறது குறள். துன்பத்தில் ஒருவரின் நெஞ்சமே துணையாவது போல, தலைவர் எனப்படுபவர் மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும். கோட்பாடுகள், நிலைப்பாடுகள், களப்பணி எதுவுமேயின்றி ‘கோடம்பாக்கத்திலிருந்து நேராக கோட்டைக்குச் செல்வேன்’ என்பதை ஏற்க இயலாது. ‘முற்போக்கு திராவிடம்’ பேசி விஜயகாந்த் நிரப்ப முயன்று தோற்ற அரசியல் வெளியில் கொஞ்சத்தை பிற்போக்கு தமிழ்த் தேசியம் பேசி சீமான் பிடித்தார். சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாட்டின் மீது கோபமுற்ற இளையோர், கட்டமைப்புக்களை மாற்ற விழைவோர், ஈழ இனப் படுகொலை கண்டு துடித்தோர் என பலரும் சீமானின் சினிமாத் தனப் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்தனர். அன்பு, அறிவு, கருணை, சிந்தனையை விட, வெறுப்பு, வன்மம், கோபம், மூடத்தனம் வேகமாகவே விலை போகும்.

kalkionline_2024-07_218c9d2a-d8fc-45a8-8

தான் பிடித்து வைத்திருக்கும் இடத்தை ‘தம்பி’ ஆக்கிரமித்து விடும் அபாயத்தைக் கண்டஞ்சும் ‘அண்ணன்’ கூட்டணிக்காகத் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார். திரைப் புகழின் உச்சத்தி்ல் இருக்கும் விஜய் ஏராளமான அப்பாவி இளைஞர்களின் அன்பைப் பெற்றிருக்கிறார். “வள்ளுவன் தன்னை உலகினுக்கேத் தந்து வான்புகழ் கொண்ட” தமிழ் நாடாயிற்றே! விஜயை தலைவராக்காமல் விட்டு விடுமா? எந்த சினிமாச் சட்டியிலும் சீர்திருத்தச் சரக்குக் கிடையாதென்றுணர இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும்.

உதயநிதி, விஜய், சீமான் என்று உருப் பெற்றுக் (உருப்பட்டு அல்ல!) கொண்டிருக்கிறது தமிழ் நாட்டின் அரசியல் களம். தமிழகம் திறமைமிகு, தகைமைசால் அப்பனுக்காக, ஓர் அம்மைக்காக, ஏங்கிக் கிடக்கிறது. ஆனால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல, கேட்பது ஒன்றும், கிடைப்பது வேறொன்றுமாக இருக்கிறது.

ஸ்டாலினும் திரைப்படங்களில் நடித்துப் பார்த்தார், நடக்கவில்லை. கலைஞரின் பேச்சுத் திறன், எழுத்துத் திறன், கவிதைத் திறன், சினிமாத் திறன் ஏதுமற்ற நிலையில் கட்சியை, ஆட்சியைப் பிடித்து நிலைநிறுத்த ஒரு கொழுகொம்பு அவருக்குத் தேவைப்படுகிறது. பல்வேறு முனைகளிலிருந்தும் போட்டிகளும், நெருக்கடிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவின் தொடர்ச்சி, இந்துத்துவாக் கூட்டத்தின் வளர்ச்சி, நடிகர்களின் அரசியல் முயற்சி, தமிழ்த் தேசிய உணர்வின் எழுச்சி என்று களம் கடினமானதாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ கதையாடலைக் கையிலெடுக்கிறார்.

கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன்

https://aramonline.in/18542/diravidam-cinema-politics/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாட்டின் சாபக்கேடு சினிமா அரசியல். 
திராவிட அரசியல் என்றால் சாமி கும்பிடாமல் தவிர்ப்பதுதான். மற்றும்படி எல்லா அஜாரகங்களையும் தன்னகத்தே வைத்திருப்பார்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொன்னது நீதானா? சொல்,சொல் முதல்வரே..!

-சுப. உதயகுமாரன்

 

344877.jpg

திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -3

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஸ்டாலின் என்னென்ன பேசினார்..! அந்தப் பேச்சுக்களை தற்போது மீளவும் பார்க்கையில் உண்மையிலேயே சிலிர்க்கிறது..! ‘நம்மை ஆட்சி செய்வது ஒரு தேவ தூதனோ.! இவர் நம்மை பொற்காலத்திற்கு கொண்டு செல்ல உள்ளாரோ’ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது; சில உதாரணங்கள்;

கடந்த 2021-ஆம் ஆண்டு யூலை 9 அன்று தமிழக பொருளாதார வளர்ச்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் நாட்டில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி தான் ‘திராவிட மாடல்’ என்று விவரித்தார். “அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை” என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. குழு உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் டிரெஸ், எஸ். நாராயணன், அப்போதைய தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அப்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, அப்போதைய நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது குறித்து அந்தக் குழு விவாதித்தது.

962194.jpg

“இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித் தன்மை வாய்ந்தவர்கள்” என்று புகழ்ந்த முதல்வர், “சமூக நலன் சார்ந்த வளர்ச்சி தான் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறது என்பதை இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். மேற்படிக் குழு உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கங்களாக சிலவற்றை முதல்வர் குறிப்பிட்டார்:

* பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழி காட்டுதல்களை வழங்க வேண்டும்.

* சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் தர வேண்டும்.

* பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்குச் சமமான வாய்ப்புரிமை வழங்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

* மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

* மாநிலத்தின் மொத்தமான நிதிநிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் தர வேண்டும்.

* மக்களுக்குச் சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும்.

* புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக்கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாக நீங்கள் திகழ வேண்டும்.

* எவ்வித பிரச்னைக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூக, பொருளாதாரத் தீர்வுகளை வழங்க வேண்டும்.

images-2.jpg
 

தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்டக் கனவுகளைப் பட்டியலிட்ட முதல்வர், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும் அந்தக் “கனவுகள் சாதாரணமாக நிறைவேறி விடாது என்று எனக்கும் தெரியும்” என்று நேர்மையுடன் ஒத்துக் கொள்ளவும் செய்தார்.

திரு. எஸ். நாராயணன் எழுதிய “Dravidian Years” நூலை மேற்கோள் காட்டிப் பேசிய முதல்வர், “அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஒரு உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது” என்று கோடிட்டுக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழ்நாடு அரசு  5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் இருக்கின்றன. நிதி ஆதாரம் என்பது விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில துறைகளின் மூலமாக மட்டும் தான் வருகிறது. வரி வசூலிலிருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜி.எ.ஸ்டி மூலமாகப் பறித்து விட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது. நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக்கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளைத் தமிழ்நாட்டு அரசுக்குக் காட்டுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.

“சமூக நீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப் பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக” என்று பெருமைப்பட்டுக் கொண்ட முதல்வர், “நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அது தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!” என்று தெரிவித்தார்.

பின்னர் பிப்ருவரி 28, 2022 அன்று தன்னுடைய தன்வரலாற்று நூலை வெளியிட்டுப் பேசிய முதல்வர் “திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதை தனது பணியாக மேற் கொள்ளவிருப்பதாகத்” தெரிவித்தார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை குறிக்கும் வகையில் பேசிய முதல்வர், “ஆளும் திமுக கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எங்களது ஒன்பது மாத கால ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

16629119723x2.jpg
 

“எனது தத்துவம் என்பதற்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர்” என்றறிவித்த முதல்வர், அது பற்றி மேலும் விவரித்தார்: “’மாடல்’ என்பது ஆங்கிலச் சொல் தான். அதைத் தமிழில் சொல்வதாக இருந்தால், ‘திராவிடவியல் ஆட்சிமுறை தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை. கல்வியில் – வேலை வாய்ப்பில் — தொழில் வளர்ச்சியில் — சமூக மேம்பாட்டில் — இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். பால் பேதமற்ற — ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு” என்றார்.

மேலும், விவரித்த முதல்வர், “அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பது தான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அனைத்து மாநிலங்களும் சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இப்படியாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய திராவிட மாடலை இந்தியப் பெருவெளிக்கு எடுத்துச் சென்றார்: “ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று “India is a union of states” என்றும்; “BJP can never ever rule over the people of Tamil Nadu” என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக உள் வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தியத் தலைவர்கள் அடைய வேண்டும் என்று தான் அண்ணாவும் கருணாநிதியும் விரும்பினார்கள். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் – அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதைத் தான் ராகுல் காந்தி அவர்களும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார். அதே போல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் – சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது” என்று சொல்லி தன்னுடைய உரையை முடித்தார் முதல்வர்.

 

அண்மையில் (யூலை 2024) நடந்து முடிந்திருக்கும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர், “கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை தொடரும் சமூகநீதித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள் –- இவற்றுக்கு நற்சான்றிதழ் அளித்து திமுகவிற்கு மகத்தான வெற்றியை [மக்கள்] வழங்கி” இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். விக்கிரவாண்டி வாக்காளர்களை “திமுக நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை” எடுத்துச் சொன்னதாக பெருமிதம் கொண்டார் முதல்வர். ஆனால், இந்த வெற்றிக்காக திமுக கொடுத்த விலை அதிகம். ஆக, தன்னுடைய ஆட்சிக் காலத்தைத் தான் முதல்வர் திராவிட மாடல் அரசு என்று குறிக்கிறார்.

 

download-1-1.jpg

முதல்வரைத் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் ‘திராவிட மாடல்’ பற்றிப் பேசுகிறார்கள். ஏப்ரல் 10, 2022 அன்று ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர் எ. வ. வேலு, “மக்களுக்கு என்ன தேவையோ அதனை பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். மகளிருக்கு இலவச பஸ், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்டத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மேலும் கோவில்களில் கடகால் போடுவது முதல் கருவறை வரை வேலை பார்த்தவர்களை வெளியேப் போ என்பதை திராவிட மாடல் ஆட்சி எதிர்க்கிறது. இதனால் தான் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தோம்” என்றார் அவர்.

முதல்வரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் பரந்து பட்ட திராவிட அரசியலின் கூறுகளை கோடிட்டுக் காட்ட முயன்றாலும், பிறர் பேசும் கருத்துக்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்தையே நினைவூட்டுகின்றன. திராவிட மாடலின் தத்துவார்த்தப் பின்புலம், சமூக-பொருளாதார-அரசியல் வெளிப்பாடுகள், அன்றாடச் சேவை நடைமுறைகள் பற்றியெல்லாம் ஏராளமானக் கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. முதல்வர் ஸ்டாலின் பேசியவற்றுக்கும், தற்போதைய ஆட்சி நிர்வாகம் செல்லும் பாதைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்;

[கட்டுரையிலுள்ள மேற்கோள்கள் அனைத்தும் திமுகவினர் நடத்தும் தினகரன் நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டவை.]

 

கட்டுரையாளர் ; சுப. உதயகுமாரன்

அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர்.
 

 

https://aramonline.in/18566/dravidian-model-stalin/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாடல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

-சுப. உதயகுமாரன்

 

download-1-3.jpg
 

திராவிட மாடலைப் புரிந்துகொள்வோம் – 4

சாதாரண மக்களை முன்னிறுத்தி சிந்தித்து செயல்பட்ட கேரளா மாடல்!கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க, சராசரி மக்களை சக்கையாக பிழிந்த குஜராத் மாடல்! கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அனைவருக்குமாக்கிய கியூபா மாடல்..போன்றவற்றை பார்க்கையில் திராவிட மாடல் எந்த ரகம் எனப் பார்ப்போமா..?

‘மாடல்’ என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? 

இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்பதற்கென முன்னிறுத்தப்படும் அழகுப் பதுமைகளை, கட்டுமஸ்தான இளைஞர்களை மாடல் என்றழைக்கிறோம். ஓர் ஓவியருக்கு அல்லது புகைப்பட நிபுணருக்கு மாதிரியாக இயங்குபவரும் மாடல் தான். ஒருவரை மாடல் என்றழைப்பதன் மூலம் ஒரு நல்ல முன்னுதாரணத்தை உருவாக்குபவர் என்றும் கொள்ளலாம். உங்களின் கனவு வீடு ஒன்றைக் கட்டுவதற்கு முன், சிறிய நகல் ஒன்றை உருவாக்கிப் பார்க்கிறீர்களே, அதன் பெயரும் மாடல் தான். சமூக-பொருளாதார – அரசியல் தளத்தைப் பொறுத்தவரை, சில அடிப்படை விழுமியங்களை ஏற்றுக் கொண்டு, குறித்த நகர்வுகளை அமைத்துக் கொண்டு, விரும்பிய விளைவுகளை வென்றெடுத்து, முன்னுதாரணமாய் நின்று முனைந்து செயல்படுவதே மாடல் என்றாகலாம்.

கேரளாவின் இடதுசாரி மாடல்;

கடந்த 1970-களிலிருந்து ‘கேரளா மாடல்’ குறித்த உலகளாவிய விவாதம் ஒன்று நடந்தது. அதாவது, மிகக் குறைந்த வருமானமே ஈட்டினாலும், கேரள மாநில மக்கள் எழுத்தறிவு அதிகம் பெற்றிருந்தார்கள். அவர்களின் உடல் நலம் உன்னதமாக இருந்தது. அரசியல் ரீதியாக தன்முனைப்புடன் செயல்பட்டார்கள். கேரளத்தின் பொதுவான மனித மேம்பாட்டுக் குறியீடுகள் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடப்படும் அளவுக்குச் சிறந்தவையாக இருந்தன… என்றெல்லாம் பொருளாதார வல்லுனர்கள் பாராட்டினார்கள்.

கேரளா 1956-ஆம் ஆண்டு தனி மாநிலம் ஆனதிலிருந்து, உடல் நலம், கல்வி எனுமிரண்டையும் முதன்மை விடயங்களாகப் பார்த்தது. இவை தவிர, கேரளம் பெற்றிருந்த உயர்ந்த அடிப்படை ஊதியம், நிலச் சீர்திருத்தம், சாலைகள் விரிவாக்கம், வலுவானத் தொழிற்சங்கங்கள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்கள்தான் கேரளத்தை உலகுக்கு உயர்த்திக் காட்டின.

இறப்பு விகிதம் குறைந்து போனதால், கேரள மாநிலத்தின் மக்கள் தொகை உயர்ந்து நின்றது. நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசிகள் வழங்குவது, தொற்று நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறைகள், பேறு காலத்துக்கு முந்தைய மற்றும் பிந்தையச் சேவைகள் போன்றவை அம்மக்களுக்கு எளிதாகக் கிடைத்தன. உலகச் சுகாதார நிறுவனத்தின் உதவியோடு இந்தியாவெங்கும் தடுப்பூசிகள் போடப்படுவதற்கு முன்னரே, 1970-களில் கேரள மாநிலம் அங்கே வாழ்ந்த கர்ப்பிணிகளுக்கும், கைக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட்டு முடித்திருந்தது.

1587283125467.jpg

இன்னோரன்ன நடவடிக்கைகளால், கேரள மக்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பு உயர்ந்திருந்தது. அவர்கள் குறைந்த அளவிலான தனிமனித வருமானமே ஈட்டிக் கொண்டிருந்தாலும், உயர்ந்த நல்வாழ்வுக் குறியீடுகளைப் பெற்றிருந்ததால், ‘கேரளா மாடல்’ பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது. கடந்த 1980 மற்றும் 1990-களில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் கேரளா மாடல் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அது மூன்றாம் உலக நாடுகளுக்கு உற்றதோர் எடுத்துக்காட்டாக முன்வைக்கப்பட்டது.

‘வளர்ச்சி’ என்பது மக்கள் தாங்கள் வாழ விரும்புகிற வழியில் வாழ்க்கையை வாழச் செய்யும் திறன்களை வழங்க வேண்டும் என்கிறார் அமர்த்யா சென். அவர் அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்கிறார். அவர்கள் சீனர்களை விட, கேரளாக்காரர்களை விட செல்வந்தர்கள்; ஆனால் இவர்கள் இருவரையும் விட கருப்பினத்தவர்களின் ஆயுட்காலம் குறுகலானது. ஏழ்மை என்பது குறைந்த வருமானம் கொண்டிருப்பது அல்ல; மாறாக, திறன் இழப்பு தான் ஏழ்மை என்கிறார் சென்.

அதே போல, ”பஞ்சம் என்பதை உணவுப் பற்றாக் குறை என்று புரிந்து கொள்வதை விட, உணவை வாங்கிக் கொள்ளும் பொருளாதாரச் சக்தி மற்றும் நிலையானச் சுதந்திரம் ஆகியவற்றை இழப்பது தான் பஞ்சம் எனக் கொள்ள வேண்டும்” என்கிறார். பொருளாதார மாற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஊதியத்தையும், உரிமைகளையும் வளர்த்தெடுப்பது தான் சிறந்த வழி என்கிறார் சென்.

‘உலகமயமாதல் செல்வச் செழிப்பை உருவாக்கித் தருவதாகவும், பலரை பணக்காரர்கள் ஆக்குவதாகவும்’ அதன் ஆதரவாளர்கள் பூரிப்படைகிறார்கள். ஆனால், எதிர்ப்பாளர்களோ ”உலகமயமாக்கல் என்பது ஏழை நாடுகளின் வளங்களைச் சுரண்டி, சூழியல் நலத்தைச் சீரழித்து, உலகின் மீது வணிகத் தன்மையையும், போட்டி மனப்பான்மையையும், முதலாளித்துவச் சுரண்டலையும், நுகர்வுக் கலாச்சாரத்தையும் சுமத்துகிறது” என்கின்றனர்.

மூன்றாம் பார்வையாக, அமர்த்யா சென் கல்வி, உடல் நலம் போன்றவற்றுக்கான சமூகச் செலவுகளை அதிகப்படுத்தி அதையே நவீன உலகின் பொருளாதார வெற்றியின் அடிப்படையாகப் பார்க்க வேண்டும் என்று வாதிடுகிறார். மக்களின் வருமானம், அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு, மொத்த தேசிய உற்பத்தி (ஜி.என்.பி.) போன்றவற்றை விட, மக்களின் அன்றாட வாழ்வில் வளர்ச்சி ஏற்படுத்தும் நல்ல  விளைவுகளையே பொருளாதார நலத்தின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறார் சென். இதைத் தான் அன்றே செய்தது கேரளா மாடல்.

kerala-story-new.jpg

அதனை அடியொற்றித் தான் கேரளம் இப்போதும் சிந்திக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் வரை கேரளத்தின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய தாமஸ் ஐசக் இப்படிக் கூறுகிறார்: “கேரளாவைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு ஒரு தகவல், குடிமக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்பான அனைத்து சமூகக் குறியீடுகளிலும் கேரளா இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல, அது தேசிய சராசரியை விட வேகமாக வளர்ந்து வருகிறது. கேரளாவில் தனிநபர் வருமானம் 60% அதிகம். சம பங்கு வளர்ச்சியுடன் முன்னேறுவதற்கு எடுத்துக்காட்டு கேரளா” (தீக்கதிர், 18.07.2024).

அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய கியூபா மாடல்;

கேரளா மாடல் மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட அதே நேரத்தில், கியூபா என்கிற ஒரு சிறிய நாடு, உலக வல்லரசான அமெரிக்காவின் எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி திறம்பட இயங்கிக் கொண்டிருந்ததும் உலகெங்கும் உற்று நோக்கப்பட்டது. கியூபா 1970 முதல் 1985 வரை கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெருமளவு வெற்றி கண்டது. இல்லாமையை இல்லாமலாக்கிய அந்நாடு, தொழிலாளர் கூட்டுறவு அமைப்புக்களைத் தோற்றுவித்து, தமக்கான வேலைகளை உருவாக்கி உன்னதமாக இயங்கியது.

அமெரிக்க–சோவியத் பனிப் போரின் போது கியூபா சோவியத் ஒன்றியத்தின் உதவியோடு தான் நிலை நிற்க முடிந்தது. அதே போல, கியூபாவின் அடிப்படை பொருளாதார அமைப்பில் பெரிய மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. சோவியத் ஒன்றியம் தகர்ந்தபோது, அவர்கள் வழங்கிய மானியங்கள் மறைந்து, உள்நாட்டு உற்பத்திப் பொருளான சர்க்கரையின் விலையும் குறைந்து. கியூபாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 33 விழுக்காடு சரிந்தது.

ஆனாலும், இன்றளவும் வீட்டு வசதி, போக்குவரத்து போன்றவை கியூபாவில் மலிவாக இருக்கின்றன. அரசு மானியத்தோடு கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள் மக்களுக்கு தேவையான அளவு கிடைக்கின்றன. கடந்த 2010-களில் தனியார் சொத்துக்களும், அந்நிய முதலீடுகளும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2021-ஆம் ஆண்டு மனித வளர்ச்சிக் குறியீட்டில் 191 நாடுகள் கொண்ட பட்டியலில் கியூபா 83-வது இடத்தைப் பெற்றது.

111956069_epa-1.jpg

சாதாரண மக்களை முன்னிறுத்திச் சிந்தித்த, செயல்பட்ட கேரளா மாடல், கியூபா மாடலைப் போலல்லாமல், இந்தியாவில் இன்னொரு மாடல் ஏகத்திற்கும் புகழ்ந்துரைக்கப்படுகிறது. அது நரேந்திர மோடி முதல்வராகப் பணியாற்றி முன்னின்று நடத்திய குஜராத் மாடல்.

மேற்குறிப்பிட்ட இடதுசாரி மாடல்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட இந்த இந்துத்துவா வலதுசாரி மாடல் தனியார் மயத்தைப் போற்றியது. மோடியின் கீழ் குஜராத் உலக வங்கியின் ‘எளிதாக வியாபாரம் செய்யும்” (“ease of doing business”) தரப் பட்டியலில் முதன்மை வகித்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களும், வரிச் சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன. முதலீடுகளைக் கவர்வதற்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவீனப்படுத்தப்பட்டன.

மோடி அரசுக்கு எதிராக மதவாதக் குற்றச்சாட்டுகள் எழுந்த போதெல்லாம், மேற்படி குஜராத் மாடல் கொடி உயர்த்திக் காட்டப்பட்டது. உண்மையில், கல்வி, ஊட்டச்சத்து, தனிமனித முன்னேற்றம், ஏழ்மை ஒழிப்பு போன்றவற்றில் குஜராத் பின்தங்கியிருந்தது. ஐந்து வயதுக்கும் குறைவானக் குழந்தைகளில் சற்றொப்ப 45 விழுக்காடு பேர் குறைந்த உடல் எடை கொண்டவர்களாகவும், 23 விழுக்காடு பேர் ஊட்டச்சத்து இல்லாதவர்களாகவும் துன்புற்றதாக மாநில பட்டினிக் குறியீடு கணக்கெடுப்பு தெரிவித்தது. இந்திய அரசும், யுனிசெப் அமைப்பும் சேர்ந்து நடத்தியக் கணக்கெடுப்பின்படி, மோடி அரசு குஜராத் குழந்தைகளுக்கு போதுமான அளவு தடுப்பூசி வழங்கத் தவறிவிட்டது என்று கண்டறியப்பட்டது.

poverty-621x414-1.jpg

கடந்த 2001 முதல் 2011 வரையிலானக் காலக்கட்டத்தில் ஏழ்மை ஒழிப்பு, பெண்கள் எழுத்தறிவு போன்ற பல்வேறு விடயங்களில் குஜராத் மாநிலம் தேக்க நிலையில் தத்தளித்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு, அம்மாநிலம் ஒட்டுமொத்த இந்தியாவில் ஏழ்மையில் 13-வது இடத்தையும், கல்வியில் 21-வது இடத்தையும் பெற்றிருந்தது. அதே ஆண்டுக்கான மனித வளர்ச்சிக் குறியீட்டில், 21 இந்திய மாநிலங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தையேப் பிடித்தது குஜராத்.

குஜராத் மாநில அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் பிற மாநிலங்களைவிட மோசமாகவே இருந்தது. குஜராத் அரசின் சமூக நலக் கொள்கைகள் இசுலாமியர்களை, தலித் மக்களை, ஆதிவாசிகளை உள்ளடக்காமல், பெரும் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியது. முன்னேற்றம் என்பது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்துக்கு மட்டுமானதாகவே இருந்தது. கிராமப்புற மக்களும், ஒடுக்கப்பட்டச் சாதிகளைச் சார்ந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டனர்.

மோடி அரசு தேசிய சராசரியைவிடக் குறைவாகவே கல்விக்கும், சுகாதாரத்துக்கும் செலவிட்டது. பனிரெண்டு ஆண்டுகளாக குஜராத்தின் முதல்வராகப் பணியாற்றி முன்னெடுத்த இந்த குஜராத் மாடலின் படுதோல்விகளை மறைப்பதற்காக, 2020-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அகமதாபாத் நகருக்கு வந்தபோது பிரதமர் மோடி ஏழைகளையும், அவர்களின் குடியிருப்புக்களையும் அகற்றினார். அந்நகரைச் சுற்றி சுவர்கள் எழுப்பியும், திரைச்சீலைகள் கட்டியும் குஜராத் மாடலை மறைக்கப் போராடினார்.

வறுமைக் கோடு தொடர்பாக இந்தியாவிலுள்ள 21 மாநிலங்களில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 44 விழுக்காடு மக்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கவில்லை. மோடியின் சொந்த மாநிலமான குஜராத் கடைசி இடத்தில் உள்ளது. அங்கே வெறும் 33 விழுக்காடு ஏழைகளுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கிறது. அதேபோல, உணவு பாதுகாப்பிலும் அம்மாநிலத்தின் 69 விழுக்காடு பேர் போதிய உணவில்லாமல் தவிக்கின்றனர் என்று கண்டுபிடித்திருக்கின்றனர் (தீக்கதிர், 20.07.2024).

வட மாநிலங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் ‘சண்டிபுரா’ வைரஸால் போதுமான அளவு மருத்துவக் கட்டமைப்பு இல்லாத குஜராத் மாநிலம் உருக்குலைந்துள்ளது. ஆனால் கேரளா கடந்த இரண்டு ஆண்டுகளாக நிபா, குரங்கு காய்ச்சல் உள்ளிட்ட புதியவகை வைரஸ்களை அதிரடி முடிவுகளுடன் தங்கள் மாநிலத்தை விட்டு துரத்தியது மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்குப் பரவாமலும் பார்த்துக் கொண்டது. “இதனால் சமூக வலைத்தளங்களில் புதிய வைரஸ்[சைக்] கட்டுப்படுத்த கேரள மாடலில் இருந்து குஜராத் மாடல் பாடம் கற்க வேண்டும் என்ற கருத்துக்கள் கிளம்பியுள்ளன” (தீக்கதிர், 21.07.2024).

“தாழக் கிடப்பாரை தற்காக்கும்” இடதுசாரி மாடல்களும், உச்சத்தில் இருப்பாரை உயர்த்திப் பிடிக்கும் வலதுசாரி மாடல்களும் கோலோச்சும் இன்றைய உலகில், எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க விரும்பும் திராவிட மாடலை எப்படிப் புரிந்து கொள்வது? என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

கட்டுரையாளர் சுப. உதயகுமாரன்

 

அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர்.
 

https://aramonline.in/18644/different-model-governments/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திக்குத்தெரியாத மாடலா திராவிட மாடல்..?

-சுப. உதயகுமாரன்
ssssss.jpg

திராவிட மாடலைப் புரிந்துகொள்வோம் -5

திராவிட மாடல் என்பது என்ன..?  அற நிலையத் துறைக்கு தரும் அதிக முக்கியத்துவமா? வாக்கு வங்கியை மையப்படுத்திய திட்டங்களா? மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களையே தமிழில் மாற்றி புகுத்தும் ராஜதந்திரமா.? டாஸ்மாக் கலாச்சாரமா.? என்ன தான் திராவிட மாடல் என பார்த்து விடுவோமா?

‘திராவிட மாடல்’ எனும் பெயரில் தங்களுக்கென ஓர் ஆட்சி மாதிரியை, சித்தாந்தத் திசைகாட்டியை வைத்திருப்பதற்கும், அதை அன்றாடச் செயல்பாடுகளோடு பொருத்திப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் முதல்வர் ஸ்டாலினை நிச்சயமாகப் பாராட்டலாம்.

ஆனால், அந்த திராவிட மாடல் அவருடைய அமைச்சர்களுக்கேப் புரியாமலிருப்பதும், தெரியாமலிருப்பதும் அந்த மாடலின் ஆழமற்றத் தன்மையை எடுத்துரைக்கிறது.

“கலைஞர், மு.க.ஸ்டாலினுக்கு முன்னால் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து சென்றிருக்கின்ற, சமூகநீதியின் காவலர் ராமன். சமத்துவம், சமூகநீதி இவற்றையெல்லாம் உலகத்திற்கு எடுத்துச் சொல்லி, எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம் தான் ராமர் காவியம்”  என்று தமிழக சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி அண்மையில் திராவிட மாடலுக்கு விளக்கமளித்தார். திராவிட இயக்கம் பெரிதும் பெருமை கொள்ளும் ‘பெரியார் மண்’ எப்போது, எப்படி ஆரியக் கூடாரத்தின் ‘இராமராஜ்யம்’ ஆயிற்று? என்பதெல்லாம் இன்னும் யாருக்கும் விளங்கவில்லை.

hqdefault.jpg

திராவிடம், திராவிடம் என்று முதல்வர் ஸ்டாலின் அனுதினமும் பேசிக்கொண்டிருக்க, அவரின் துணைவியாரோ வீட்டிலும், வெளியிலும் ஆரியப் பார்ப்பனர்களை வைத்து பூசை புனஸ்காரங்கள், யாகங்கள், வேள்விச் சடங்குகள்.. செய்து கொண்டிருக்கிறார்.

சாதியையும், தீண்டாமையையும் எதிர்ப்பதற்காகவே சனாதன தரும மாநாட்டில் கலந்து கொண்டதாகச் சொன்ன அமைச்சர் சேகர் பாபு, பசுமாட்டுப் பகுத்தறிவையும், மனுஸ்மிருதி சுயமரியாதையையும் சமமாகக் கலந்து விரவி, திராவிட மாடலுக்குள் ஓர் ஆரிய மாடலை அனாயசமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,355 கோவில்களில் திருப்பணி முடிக்கப்பட்டு, குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டிருக்கின்றனவாம். ரூ.3,776 கோடியில் 8,436 கோவில்களில் 18,841 திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 5,775 பணிகள் முடிக்கப்பட்டுள்ளனவாம். இங்கு கோவில் குட முழுக்குகளை தமிழ்,சமஸ்கிருதம் இரண்டிற்கும் சம வாய்ப்பு தந்து நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற ஆணையை மீறி சமஸ்கிருத சனாதன வழியில் மட்டுமே நடத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

128558933_pks.jpg

அதேபோல, 756 கோவில்களில் அன்னதானத் திட்டம் நடைபெறுகிறதாம்..! (இந்து தமிழ் திசை, 29.07.2024). பல முக்கியத் துறைகளில் போதிய நிதி இல்லாமல் ஏழைகள் வாடி வதங்கிக் கொண்டிருக்க, மற்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு போட்டியாக அறநிலையத்துறை அமைச்சர் ரூ.3,776 கோடி செலவு செய்து, பார்ப்பனீயத்துக்கு பால் வார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒருபுறம், திராவிட மாடல் என்பது “எனது தத்துவம்” என்று சொந்தம் கொண்டாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்னொரு புறம், “’திராவிடவியல் ஆட்சிமுறை’தான் எனது கோட்பாடு” என்று பேசுகிறார். மற்றொரு புறம், “பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும்” என்று பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கண்ட வளர்ச்சிக் கனவு தான் “திராவிட மாடல் வளர்ச்சி” என்று விவரிக்கிறார். மொத்தத்தில், திராவிட மாடலின் தத்துவார்த்தப் பின்புலம், அதன் தொடக்கம், தொடர்ச்சி, காலக்கட்டம் போன்றவை தெளிவின்றியே அமைகின்றன.

08-03-2023-durga-performs-bimaratha-saha

இவை மட்டுமல்ல, இன்னும் ஏராளமானக் குழப்பங்கள் திராவிட மாடலில் அடங்கியுள்ளன. இடது பக்கம் திரும்பப் போவதாக சுட்டு விளக்குப் போட்டுக் கொண்டே, வலதுபக்கமாக ஓட்டிச் செல்லப்படும் வாகனம் போலத் தான் இயங்குகிறது திராவிட மாடல். இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், திராவிட மாடல் என்பது புலித்தோல் போர்த்திய பசு போன்றது. வெளியே சமத்துவம், சமூக நீதி, சமூக மாற்றம் என்றெல்லாம் புரட்சிகரமாக உறுமினாலும், உள்ளுக்குள் அடிப்படையான சமூக-பொருளாதார-அரசியல் மாற்றங்கள் எவற்றையும் கொண்டுவராத ஒரு பழமைவாத உருட்டலாகத் தான் இருக்கிறது அது.

சமூக இயக்கமாக இருந்து, தேர்தல் கட்சியாக மாறி, பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த ’திராவிடவியல் ஆட்சிமுறை’ அடிப்படை மாற்றத்தை விரும்பும் ஒன்றல்ல.

“ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்,”

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,”

“இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்,”

“மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி”

என்பன போன்ற திமுகவின் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார-அரசியல் கட்டமைப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் புரட்சிகரக் கோட்பாடுகள் அல்ல.

மேற்குலகின் நவீனம், அறிவியல், தொழிற்நுட்பம், முன்னேற்றம், வளர்ச்சி போன்றவற்றை அசல் தன்மையோ, ஆக்கத் திறனோ ஏதுமின்றி, உள்ளூர் சாதக பாதகங்கள் எவற்றையும் ஆய்ந்தறியாமல், கண்களை மூடிக் கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்கிறது திமுக.

இதன் பிதாமகன் பெரியார் கூட தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார-அரசியல் யதார்த்தத்தை கருப்பு-வெள்ளையாகவேப் புரிந்துகொண்டார். முழுக்க முழுக்கத் தீதானப் பாரம்பரியத்தில் எந்தவிதமான நன்மையும் இல்லை; அதேபோல, முற்றிலும் நன்றான நவீனத்தில் எந்த விதமானத் தீமையும் இல்லை என்பதுதான் அவரது பரந்துபட்டப் புரிதலாக இருந்தது. பாரம்பரியம் என்பது பார்ப்பனீயம், சாதீயம், கடவுள் நம்பிக்கை, மூடப் பழக்கவழக்கங்கள், பெண்ணடிமைத்தனம், பிற்போக்குத்தனம் போன்றவற்றை மட்டுமே உள்ளடக்கி இருந்தது என்று கருதிய பெரியார், நவீனம் என்பது மேற்கத்திய வளர்ச்சி, மேம்பட்ட வாழ்க்கை, முற்போக்குச் சிந்தனைகள், பெண் விடுதலை, ஆங்கில மொழிப் பாண்டித்தியம் என்றெல்லாம் மிளிர்வதாகவே எண்ணினார்.

திராவிடச் சித்தாந்தம், கோட்பாடுகள் எல்லாவற்றையும் காற்றிலே பறக்க விட்டுவிட்டு, வேட்பு மனுக்களை கோவில்களில் வைத்துக் கும்பிட்டு தாக்கல் செய்யும் உடன்பிறப்புக்களை உள்ளடக்கிய திமுக, அனைத்து தரப்பினரின் வாக்குகளைக் கவர்வதற்காக நடத்தும் வார்த்தை ஜால தகிடுதத்தங்களாகவே திராவிடவியல் ஆட்சிமுறை, திராவிட மாடல் போன்றவை அமைகின்றன.

அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக நிர்வாகிகள், “மூன்றாண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அந்தத் திட்டங்களின் பயன்களை நேரடியாகப் பெற்றுள்ள மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்கள்” என்று முதல்வர் குறிப்பிட்டிருப்பது உற்றுநோக்கத்தக்கது (தினகரன், 15.07.2024).

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%

மேம்போக்கான வாழ்வியல் ஒத்தடங்களையும், குறைந்த பணப் பரிசில்களையும் ஒன்றாகச் சேர்த்து பொட்டலங்கள் கட்டி, அவற்றின்மீது கவர்ச்சிகரமானப் பெயர்களை ஒட்டி, கிளை, வட்ட, மாவட்ட, மாநிலக் கழக விற்பனையாளர்களின் சந்தைப்படுத்துதலுக்காகவே பலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக,

விடியல் பேருந்து திட்டம்,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (ஒரு கோடியே பதினைந்து லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000),

புதுமைப்பெண் திட்டம் (2.73 லட்சம் மாணவியருக்கு மாதம் ரூ.1,000),

தமிழ்ப் புதல்வன் திட்டம் (3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000),

மகளிர் திருமண நிதியுதவித் திட்டம் (69,000 பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், 58,000 பெண்களுக்கு நிதியுதவி),

திருநங்கைகள் நலன் (1,482 பேருக்கு மாதம் ரூ.1,500),

மீனவர் நலன் (10,20,839 மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000,

மீன்பிடிக் குறைவு கால உதவித் தொகை ரூ.6,000)

என்றெல்லாம் பல்வேறு திட்டங்கள் திராவிட மாடல் அரசால் அமல்படுத்தப்படுகின்றன. (தினகரன், 15.07.2024, 26.07.2024).

கிராமப் புறங்களில் வாழும் பஞ்சப் பராரிகளுக்கு, பரம ஏழைகளுக்கு, இத்திட்டங்கள் கொஞ்சம் உதவலாம். அதேபோல, ஏழை மாணவ மாணவியர் அரசுப் பள்ளிகளில் படிப்பதற்கும், தமிழ்வழிக் கல்வியைப் பெறுவதற்கும் மேற்குறிப்பிட்ட சிலத் திட்டங்கள் ஊக்கமளிக்கலாம். ஆனால் பொதுவாகவே, பணக்கொடைகள் தொலை நோக்குப் பார்வை கொண்டவை அல்ல. அவை எந்தப் பிரச்சினையையும் நிரந்தரமாக தீர்க்க வல்லன அல்ல. மக்களை விடுவிப்பதற்குப் பதிலாக இப்பணக்கொடைகள் அவர்களைக் கட்டிப்போட்டு, ஒரு சார்பு நிலையை உருவாக்குகின்றன என்பதுதான் உண்மை. ஒரு ‘நலன்புரி அரசு’ (Welfare State) என்பது வெறுமனே பணப்பட்டுவாடா செய்வதாக அமையக் கூடாது; நீண்டகாலத் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஏழ்மைக்கோ, உணவின்மைக்கோ, வேலையின்மைக்கோ வழங்கப்படும் உதவிகள்கூட தற்காலிகமான இடைக்கால ஏற்பாடுகளாகத் தான் பார்க்கப்படவேண்டும், பாவிக்கப்பட வேண்டுமே தவிர, அவை நிரந்தரமான தொடர் நடவடிக்கைகளாக இருத்தலாகாது.

நம் நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் தங்களுக்கான ‘கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்’ பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு இயங்குவதால், ஏற்கனவே புரையோடிக் கிடக்கும் இலஞ்சக் கலாச்சாரம் இன்னோரன்ன பணப் பட்டுவாடாக்களால் மேலும் மோசமாகிறது. இம்மாதிரி பணப் பரிசில்கள் தேர்தலையும், வாக்குகளையும் மட்டுமே குறிவைத்து இயங்கி, ஒட்டுமொத்தச் சமூகத்தின் நலன்களையும், ஈடுபாடுகளையும் உருக்குலைக்கின்றன.

ஆயிரம் ஆயிரமாய்க் கொடுக்கிறோம் என்று புளகாங்கிதமடைவதில் அர்த்தமே இல்லை. தமிழ்நாட்டில் ஓர் இடைநிலை அரசியல்வாதியின் அன்றாடச் செலவுகளுக்கு ஆயிரம் ரூபாய் போதாது. ஒரு நகர்ப்புற நோயாளி ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள ஆயிரம் ரூபாய் போதாது என்பதுதான் யதார்த்தம்.

55127.jpg

அதேபோல, மேற்குறிப்பிட்டத் திட்டங்களின் ஆண் பயனாளிகளும், பெண் பயனாளிகளின் ஆண் உறவுகளும் (தந்தையர், கணவர்கள், சகோதரர்கள், மகன்கள் போன்றோர்) கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் 4,829 டாஸ்மாக் கடைகள், மற்றும் 2,919 பார்களின் மூலமாக ரூ.45,855.67 கோடிக்கு மது அருந்தி தமிழ்நாடு அரசுக்கு நிதியை வாரி வழங்கியிருக்கின்றனர். சாராயக் கடைகளை மூடி, மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டாலே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பல ஆயிரங்கள் மிஞ்சுமே?

திராவிட மாடல், ‘கேரளா மாடல்’ போல கல்வி, உடல்நலம் எனும் குறிப்பிட்ட அடிப்படை விடயங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தவில்லை. உண்மையில், தமிழ்நாட்டின் கல்வித்தரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி பயிலும் ஆகப் பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு எந்தவொரு பொருள் குறித்தும் பத்து வாக்கியங்கள் கோர்வையாகப் பேசவோ, எழுதவோத் தெரியாது என்பதுதான் ஐம்பதாண்டு கால திராவிட அரசுகள் செய்திருக்கும் அவலமான கல்விப் பணி. போதாக்குறைக்கு தற்போது தேசியக் கல்விக் கொள்கைகள் இங்கு திவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல்கால ஒத்துழைப்புக்காக, உதவிகளுக்காக ஆசிரியர் நலன்களை கவனமாகப் பேணிக் கொள்ளும் இவ்வரசுகள், தமிழக இளைஞர்களின் கல்வியில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தில் நாட்டம் கொள்ளவில்லை.

குறைந்தபட்சம் தமிழ் மொழிதான் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி, நிர்வாக மொழி, கல்வி மொழி, கலை மொழி, இசை மொழி, தொழில் மொழி, நீதி மொழி, இறைவழிபாட்டு மொழி, எனும் நிலைமையைக் கூட அரை நூற்றாண்டு காலமாக இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. தொன்மையும், தொலையாச் சிறப்புக்களும் கொண்ட தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆனால், ஐம்பதாண்டு கால திராவிட ஆட்சிகள் அப்படி ஒரு முயற்சியே எடுக்கவில்லை. ஆனால், தற்போது அதற்கென ஒரு குழுவை அமைத்ததில் அதில் ஒருங்கிணைப்பாளராக இருந்த சிறந்த கல்வியாளர் ஜவகர் நேசன் விலக நேர்ந்ததும், தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கத்தில் இருந்தே விலகி அந்தக் குழு ஒரு அறிக்கை தந்ததும் சமகால வரலாறு!

மக்கள் தற்காலிகமாக பசி தீர்த்துக் கொள்வதற்காக ஒரு மீனை வழங்கி, காலத்தைக் கடத்துவது எப்படி ஒரு ‘மாடல்’ ஆக இருக்க முடியும்? மக்கள் சொந்தக் காலில் நின்று அவர்களாகவே நிரந்தரமாக பசியாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதைத்தானே ஒரு ‘மாடல்’ என்று போற்ற முடியும்?

கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன்
 

https://aramonline.in/18698/diravida-model-stalin-dmk-govt/

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

“”மக்கள் தற்காலிகமாக பசி தீர்த்துக் கொள்வதற்காக ஒரு மீனை வழங்கி, காலத்தைக் கடத்துவது எப்படி ஒரு ‘மாடல்’ ஆக இருக்க முடியும்? மக்கள் சொந்தக் காலில் நின்று அவர்களாகவே நிரந்தரமாக பசியாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதைத்தானே ஒரு ‘மாடல்’ என்று போற்ற முடியும்?“”

கட்டுரையாளர் உதயகுமாரன் நாம் தமிழர் கட்சி உறுப்பினராக சேர்த்துவிட்டாரோ ? 

🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

கட்டுரையாளர் உதயகுமாரன் நாம் தமிழர் கட்சி உறுப்பினராக சேர்த்துவிட்டாரோ ? 

தமிழனுக்கு ஏதாவது நன்மை ஆகினால் அது நாம் தமிழர் கட்சி தானா?

நாம் தமிழருக்கும்  எனக்கும் நிறைய பஞ்சாயத்து இருக்கு அது வேறை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

தமிழனுக்கு ஏதாவது நன்மை ஆகினால் அது நாம் தமிழர் கட்சி தானா?

நாம் தமிழருக்கும்  எனக்கும் நிறைய பஞ்சாயத்து இருக்கு அது வேறை 

தமிழகத்திற்கு நன்மை நடக்க வேண்டும் என்று விரும்பும் ஆட்கள் நாதக வில் மட்டும்தானே இருக்கிறார்கள்,.? 

😁



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.