Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனிக்குளத்திலிருந்து (Vavuni) நேற்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட சட்டவைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் நேற்று (30.07.2024) வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (29) இரவு சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளம் சென்ற குறித்த இளைஞனை காணவில்லை என உறவுகள் தேடிய நிலையில் நேற்று (30) அதிகாலை வவுனிக்குளம் குளத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.

உடற்கூற்று பரிசோதனை

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் ஏச் மக்ரூஸ் உடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

வவுனியாக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Vavunikulam Murder Youth Strangled Police Investig

இந்நிலையில் இன்று (31) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

https://ibctamil.com/article/vavunikulam-murder-youth-strangled-police-investig-1722427603

  • கருத்துக்கள உறவுகள்

20 லட்ச ரூபாய்க்காக ஒரு இளைஞன் கொலை.
பெரும் தொகை பணத்துடன் செல்லும் போது இரகசியமாக கொண்டு செல்லலாமே.
அது... மூன்றாம் ஆளுக்கு எப்படி தெரிய வந்தது. 
யாரோ... நன்கு அறிந்தவர்கள்தான் இதனை செய்து இருக்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

20 லட்ச ரூபாய்க்காக ஒரு இளைஞன் கொலை.
பெரும் தொகை பணத்துடன் செல்லும் போது இரகசியமாக கொண்டு செல்லலாமே.
அது... மூன்றாம் ஆளுக்கு எப்படி தெரிய வந்தது. 
யாரோ... நன்கு அறிந்தவர்கள்தான் இதனை செய்து இருக்கின்றார்கள். 

உண்மை ..அநியாய உயிரிழப்பு..மறுநாள் கனடாபயணம்..இந்த பெரும் சலசலப்பு எற்படுத்திய..கொலை...20 இலட்சம் எடுத்தவன்...அதே ஏஜன்சியிடம் பணம் கொடுத்து கனடா வருவார்...மனிதாபிமானம் அற்ற இனமாகிவிட்டதா நம்மினம்...நண்பர்களிடம் தொடர்ந்து உரையாடி இருக்கிறார்...என்பதுதான் கைலைட்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

20 லட்ச ரூபாய்க்காக ஒரு இளைஞன் கொலை.
பெரும் தொகை பணத்துடன் செல்லும் போது இரகசியமாக கொண்டு செல்லலாமே.
அது... மூன்றாம் ஆளுக்கு எப்படி தெரிய வந்தது. 
யாரோ... நன்கு அறிந்தவர்கள்தான் இதனை செய்து இருக்கின்றார்கள். 

நம்பிக்கை துரோகம் என்பது நமது சமூகத்திற்கு கைவந்த கலை அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நம்பிக்கை துரோகம் என்பது நமது சமூகத்திற்கு கைவந்த கலை அல்லவா?

பாவம். வயது 27. வாழ்க்கையின் முக்கிய பகுதியில் காலடி எடுத்து வைக்கும் நேரம் மரணம். அடுத்த நாள் கனடா போக இருந்தவராம். அவரை நம்பி இருந்த குடும்பம் வாழ்க்கை முழுக்க சோகத்தில் வாழப் போகின்றார்கள்.  🥲

11 minutes ago, alvayan said:

உண்மை ..அநியாய உயிரிழப்பு..மறுநாள் கனடாபயணம்..இந்த பெரும் சலசலப்பு எற்படுத்திய..கொலை...20 இலட்சம் எடுத்தவன்...அதே ஏஜன்சியிடம் பணம் கொடுத்து கனடா வருவார்...மனிதாபிமானம் அற்ற இனமாகிவிட்டதா நம்மினம்...நண்பர்களிடம் தொடர்ந்து உரையாடி இருக்கிறார்...என்பதுதான் கைலைட்..

 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கஸ்ரப்பட்டு கடன்பட்டு குடும்பத்தை கரைசேர்க்க வேண்டும் என்ற கனவுடன் இருந்திருப்பார்.இவர் பணத்தோடு போகிறார் என்று தெரிந்தவ்கள்தான் இந்தக் கொடுமையைச் செய்திருக்கிறார்கள்..இவர்களைக் கடவுள்தான் தண்டிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளீன்படி பார்க்கையில் இவர் ஏஜன்ட் மூலம்தான் ..பணம் கொடுத்து கனடாவர முயற்சி துள்ளார் போலுள்ளது...மறுநாள் பயணத்துக்கு பணம் கொடுக்க  போயுள்ளார் ..போலி எஜென்ட்...தன் முகத்தை காட்டிவிட்டார்...அதாவது தன்னுடைய காசை இலகுவழியில் பெற்றுவிட்டார்...உயிர் ...மாற்றான் வீட்டுப்பிள்ளைதானே...ஆத்மா சந்தியடையட்டும்..

Edited by alvayan

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Published By: DIGITAL DESK 3   16 AUG, 2024 | 05:23 PM

image

இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை (16) காலை மேற்கொண்டிருந்தன.

கனடா செல்ல தயாரான மல்லாவி யோகபுரம் பகுதியினைச் சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞன் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார்.

19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் மரணத்திற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும், துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இன்றையதினம் குறித்த போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்தது.

மல்லாவி மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி போலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடி,

"சசீவன் மரணத்திற்கு நீதி வேண்டும்"

"கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து"

"விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா"

"எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும்"

"வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா"

"எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் "

போன்ற எதிர்ப்பு சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கோஷமிட்டனர்.

இதேவேளை, குறித்த போராட்த்திற்கு ஆதரவாக இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களிடம் தெரிவித்திருந்தார்.

குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை தாம் மேற்கொள்வோம் என்றும், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து, பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும், வருகை தந்திருந்த பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

454181502_959581129272656_54007265925632

454525497_8268889866466026_1755903036307

453646276_1017556466421443_2622112662688

https://www.virakesari.lk/article/191246

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனிக்குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் மரணத்துக்கு நீதி கோரி முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம் 

14 MAR, 2025 | 04:51 PM

image

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து கடந்த ஆண்டு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கொலைக்கு நீதி கோரி இன்று (14) கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

வெளிநாடு  செல்வதற்கான பயன ஏற்பாடுகளைச் செய்த 27 வயதுடைய  மல்லாவியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 29-07-2024 அன்று முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். 

IMG_20250314_091429.jpg

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டு குளத்துக்குள் போடப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில்  தெரிய வந்தபோதும் அதனுடன் தொடர்புபட்ட  கொலையாளிகளை இதுவரை கைது செய்யவில்லை என தெரிவித்து இன்றைய தினம் பிரதேச பொது அமைப்புகள், வர்த்தக சங்கம், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மல்லாவி பேருந்து நிலையத்திலிருந்து மல்லாவி பொலிஸ் நிலையம் வரை சென்ற போராட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடி பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு மாங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். 

IMG_20250314_094940.jpg

அத்துடன் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதாகவும்  இந்த விசாரணைகளுக்காக விசேட குழு ஒன்றை நியமிப்பதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளித்தனர். 

பின்னர், சம்பந்தப்பட்ட  பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர், உறவினர்களுடன் கலந்துரையாடினர். 

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் மல்லாவி பொலிஸாரால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

IMG_20250314_095830.jpg

https://www.virakesari.lk/article/209204

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் படுகொலைக்கு நீதி கோரி மல்லாவியில் ஆர்ப்பாட்டம் ; குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்படும் - ரவிகரன் எச்சரிக்கை

29 JUL, 2025 | 03:56 PM

image

முல்லைத்தீவு - மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்தராசா சஜீவனின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக, ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மல்லாவி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தபப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மல்லாவி பொலிஸாரை எச்சரித்துள்ளார்.

அதேவேளை சஜீவனின் படுகொலை விவகாரம் தொடர்பில் தம்மால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதுடன், இந்த விவகாரத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு தம்மால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மல்லாவியில் இன்று (29) சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி, மல்லாவி பொது அமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தக சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் பங்கேற்றபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

IMG-20250729-WA0006.jpg

மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞன் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலருக்கெதிராக சஜீவனின் குடும்பத்தினரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முறைப்பாடு அளிக்கப்பட்டும் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பொலிஸாரால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த வகையில் சஜீவனின் படுகொலை இடம்பெற்று பத்தொன்பதாம் நாளன்று கடந்த 16.08.2024 அன்றும், அதன் பிற்பாடு ஏழு மாதங்கள் கடந்து, 14.03.2025 அன்றும் படுகொலைக்கான  நீதி கோரி, மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் மல்லாவி பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.

அதன் தொடர்ச்சியாக சஜீவனின் படுகொலை இடம்பெற்று ஒரு வருடமாகியுள்ள நிலையிலும், கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இன்று (29) சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள், பொதுமக்கள், ரவிகரன் ஆகியோர் இணைத்து ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

IMG-20250729-WA0032.jpg

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது மல்லாவி பேருந்து நிலைய வளாகத்திலிருந்து மல்லாவிப் பொலிஸ் நிலையம் வரை சென்றது. 

சஜீவனுக்கு நீதி கிடைக்கவேண்டும், கொலைக் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியும், பதாதைகளைத் தாங்கியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இதன்போது பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  

அவ்வேளை, ரவிகரன் தெரிவிக்கையில்,

ஒரு வருடகாலமாக சஜீவனின் கொலைக்கு நீதி கோரி இந்த மக்கள் போராடிவருகின்றனர். இருப்பினும் இந்தப் படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.

இந்தப் படுகொலைக்கான நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் இந்த கொலைக்கான நீதி கிடைக்கவில்லை எனில், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு, பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இந்தப் படுகொலை விவகாரத்தில் மல்லாவிப் பொலிஸாரின் அசமந்தப்போக்கு பற்றி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிற்கு தெரியப்படுத்துவதுடன், இந்த படுகொலைக்கான நீதியை உடனடியாக வழங்குமாறும் கோரவுள்ளேன் என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது இந்தப் படுகொலை விவகாரம் குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த படுகொலைக்கு விரைந்து உரிய நீதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது சஜீவனின் படுகொலைக்கு விரைந்து நீதி வழங்குமாறு கோரி மல்லாவி பொது அமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் மல்லாவி பொதுமக்கள் சார்பாக துரைராசா ரவிகரனால் மகஜர் ஒன்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. 

IMG-20250729-WA0091.jpg

IMG-20250729-WA0095.jpg

IMG-20250729-WA0054.jpg

IMG-20250729-WA0022.jpg

IMG-20250729-WA0016.jpg

IMG-20250729-WA0012.jpg

https://www.virakesari.lk/article/221285

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.