Jump to content

மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை நடத்துமாறு ஐசிசி விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது

15 AUG, 2024 | 02:38 PM
image

(நெவில் அன்தனி)

மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னின்று நடத்துமாறு ஐசிசி விடுத்த  கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷில் அக்டோபர் மாதம் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற அரச விரோத வன்முறைகளாலும் அதனால் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களாலும் இப் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஐசிசி எண்ணியுள்ளது. இது தொடர்பாக இந்த மாதம் 20ஆம் திகதி முடிவெடுக்கவுள்ளது.

இப் போட்டியை நடத்துவதற்கு இந்தியா மறுத்துள்ளதால் பெரும்பாலும் இலங்கையில் அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில்  இப்போட்டிகள் நடத்தப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.

'உலகக் கிண்ணத்தை நடத்த முடியுமா என அவர்கள் (ICC) எம்மிடம் கேட்டது. நான் முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டேன்' என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

'இப்போது பருவமழைக் காலத்தில் இருக்கிறோம். அதனைவிட அடுத்த வருடம் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியை நடத்தவுள்ளோம். தொடர்ச்சியாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவேண்டும் என்ற ஒப்புதலைக் கொடுக்க நான் விரும்பவில்லை' என்றார் அவர்.

இதேவேளை, பங்காதேஷின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அனைத்து விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

'பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினர், அவர்களது பாதுகாப்பு முகவர்கள், எமது சுயாதீன பாதுபாப்பு ஆலோசர்கள் ஆகியோருடன் இணைந்து பங்களாதேஷின்  முன்னேற்றங்களை ஐசிசி உன்னிப்பாக அவதானித்துவருகிறது' என ஐசிசி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'போட்டியில் பங்குபற்றும் அனைவரினதும் உயிர் பாதுகாப்பு மற்றும் நலன்களே எம் முன் உள்ளே இருக்கும் பிரதான விடயமாகும்' என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியை நடத்தவேண்டும் என்பதில் பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கம் இறுதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

எவ்வாறாயினும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகியன விடுத்துள்ள கடுமையான பயண பாதுகாப்பு ஆலோசனைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு உள்ள பிரதான சவாலாகும்.

பாதுகாப்பு சவால்கள் ஒருபுறமிருக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பெரும் நெருக்கடியில் உள்ளது. அவாமி லீக் அரசாங்கம் கடந்த 5ஆம் திகதி கவிழ்க்கப்பட்டதை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான நஸ்முல் ஹசன் பதவியிலிருந்து விலகினார். அத்துடன் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய பல சபைத் தலைவர்களுக்கு இடையிலான தொடர்புகளும் அற்றுப்போயுள்ளது.

இந் நிலையில், 'இப்போதைக்கு அவர்களுடன் (பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள்) நாங்கள் எதுவும் பேசவில்லை' எனக் குறிப்பிட்ட ஷா, 'ஒரு புதிய அரசு அங்கு பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் எங்களை அணுகக்கூடும். அல்லது நான் அவர்களை அணுகுவேன். இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான தொடர் எங்களுக்கு முக்கியமானது' என்றார்

பங்களாதேஷ் ஆடவர் அணி தற்போது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ளதுடன் அங்கு 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப்பில் விளையாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு விஜயம  செய்யவுள்ளது.

https://www.virakesari.lk/article/191152

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வீரப் பையன்26

அன்மைக் கால‌மாய் உட‌ல் நிலை ச‌ரி இல்லை ஓய்வு எடுக்கிறேன் கூட‌ தூக்க‌ம்  காலையில் எழுந்த‌தும் இஸ்கோர் பார்ப்பேன்  ஆம் நீங்க‌ள் சொல்லும் அணி நேற்று ப‌டு தோல்வி....................NFL ச‌ம‌ ப‌ல‌

ரசோதரன்

🤣............ பையன் சார், ஒன்றுக்கு இரண்டு தடவை மனசுக்ககுள் சொல்லிப் பார்த்துப் போட்டுத்தான், இதை எழுதுகின்றேன். 'இந்த வயசில என்னத்தையாம் ரசிக்கப் போகிறாய்............' என்று யாராவது வம்புக்கு வந

வீரப் பையன்26

இங்கை பார‌டா இவ‌ருக்கு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌ தெரியாது😁 ச‌சிக‌லா அன்ரின்ட‌ அழ‌கை ர‌சிக்க‌ தெரியுது😁   நான் அழ‌கை ர‌சித்தால் ந‌க்க‌ல் அடிக்கிறார் ளொள்😁😛..............

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பையை அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி வெல்வின‌ம்......................விளையாட்டை பார்க்க‌ பொழுது போகும்.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கையில் ந‌ட‌த்த‌ கூடும் சில‌து....................

போட்டிக்கு இன்னும் இர‌ண்டு மாத‌ம் இருக்கு தானே அத‌ற்க்குள் வ‌ங்கிளாதேஸ்சில் அமைதி நில‌வி ப‌ழைய‌ நிலைக்கு வ‌ந்தால் அங்கையே போட்டிய‌ ந‌ட‌த்த‌லாம்...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை பங்களாதேஷிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றியது ஐசிசி

Published By: VISHNU   20 AUG, 2024 | 10:05 PM

image

(நெவில் அன்தனி)

ரி20 மகளிர்  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பங்களதேஷில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஜூலை மாதத்திலும் ஆகஸ்ட் மாத முற்பகுதியிலும் இடம்பெற்றதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) போட்டி நடைபெறும் இடத்தை மாற்றியுள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் ஷெய்க் ஹசினா இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு சென்று விட்டார்.

அதன் பின்னர் இராணுவத்தினால் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது.

ஆனால்,  பரவலாக  பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகவும் கொள்ளையிடப்பட்டதாகவும் வன்முறைகள்   இடம்பெற்றதாக பங்களாதேஷிலிருந்து செய்திகள் வெளியாகின.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு பங்களாதேஷின் இடைக்கால அரசு கடைசி முயற்சியில் ஈடுபட்டது.

ஆனால், தங்களது நாட்டு பிரஜைகள் பங்களாதேஷுக்கு பயணிக்கக்கூடாது என அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து) ஆகிய நாடுகள் உட்பட மற்றும் சில நாடுகள் பயண ஆலோசனைகள் விடுத்ததால் ஐசிசி இந்த முடிவுக்கு வந்துள்ளது.

'மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷ் நடத்தாதது வெட்கத்துக்குரியதாகும். ஏனேனில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மிகச்சிறப்பாக இந்தப் போட்டியை நடத்தும் என்பதை நாங்கள் அறிவோம்' என ஐசிசி பிரதம நிறைவேற்ற அதிகாரி ஜெவ் ஆல்ரிஜ் தெரிவித்தார்.

'பங்களாதேஷில் போட்டியை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எடுத்துக்கொண்ட சகல முயற்சிகளுக்காகவும் நன்றி கூறுகிறேன். ஆனால் சில நாடுகள் பயண ஆலோசனைகளை விடுத்ததால் அது  சாத்தியப்படவில்லை. எனினும் போட்டிகளை முன்னின்று நடத்தும் பொறுப்பு பங்களாதேஷுக்கே உரித்தாகும். பங்களாதேஷில் விரைவில் ஒரு ஐசிசி உலக கிரிக்கெட் போட்டியை நடத்த எண்ணியுள்ளோம்.

'பங்களாதேஷ் சார்பாக போட்டியை நடத்த முன்வந்த எமிரேட்ஸ் கிரிக்கெட் சபைக்கும் ஆதரவு வழங்க முன்வந்த இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் நன்றி கூற விரும்புகிறேன். இந்த இரண்டு நாடுகளில் 2026இல் ஐசிசி உலக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை பார்க்க விரும்புகிறோம்' என ஆல்ரிஜ் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/191571

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய அரபு மைதான‌ங்க‌ளில் ஏற்க‌ன‌வே ஜ‌பிஎல் போட்டிக‌ள் 
19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பை போட்டிக‌ள் ந‌ட‌ந்த‌து

மூன்று மைதான‌ங்க‌ள் அந்த‌ நாட்டிட‌ம் இருக்கு........................கூட‌ சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌ங்க‌ள்

ஆசிய‌ கோப்பையை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஐக்கிய அரபு  நாட்டில் தான் ந‌ட‌த்தின‌வை பாக்கிஸ்தானை வீழ்த்தி இல‌ங்கை க‌ப்பை வென்றார்க‌ள்.............................

என்ன‌ மைதான‌த்தில் பெரிசா பார்வையாள‌ர்க‌ள் இருக்க‌ மாட்டின‌ம் ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் 

வ‌ங்கிளாதேஸ்சில் என்றால் ர‌சிக‌ர்க‌ள் கூட்ட‌ம் அதிக‌ம்

பாப்போம் எப்ப‌டி ந‌ட‌ந்து முடியுது என்று இந்த‌ உல‌க‌ கோப்பை.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கான‌ பாட‌ல்க‌ள் வெளியிட்டு இருந்தின‌ம்

 

உல‌க‌ கோப்பையில் க‌ல‌ந்து கொள்ளும் ம‌க‌ளிர்க‌ள் சிறு ந‌ட‌ன‌ம் ஆடினார்க‌ள் பார்க்க‌ ந‌ல்லா இருந்திச்சு......................தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் க‌ப் தூக்குவ‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை

 

இந்தியா அல்ல‌து இங்லாந் ம‌க‌ளிர் தூக்கினால் ந‌ல்ல‌ம்

 

இந்தியா ம‌க‌ளிர் க‌ப்ட‌னுக்கு அணிய‌ ஒழுங்காய் வ‌ழி ந‌ட‌த்த‌வும் தெரியாது சில‌ ச‌மைய‌ம் சூழ் நிலைக்கு ஏற்ற‌ போல் கூட‌ விளையாட‌ தெரியாது

 

ப‌ழைய‌ இந்திய‌ ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் த‌மிழ‌ச்சி.....................அவா அணிய‌ ந‌ல்லா வ‌ழி ந‌ட‌த்தின‌வா என்ன‌ அவான்ட‌ த‌ல‌மையில் இந்தியா எந்த‌ உல‌க‌ கோப்பையும் தூக்க‌ வில்லை ம‌ற்ற‌ம் ப‌டி விளையாட்டில் திற‌மை மிக்க‌வா...................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் புதிய அட்டவணை!

27 AUG, 2024 | 12:19 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 9ஆவது மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடம் மாற்றப்பட்டதை அடுத்து புதிய போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

பங்களாதேஷில் இடம்பெற்ற அரசியல் கொந்தளிப்பு காரணமாக அங்கு நடைபெறவிருந்த ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றுவதற்கு ஐசிசி கடந்த 20ஆம் திகதி தீர்மானித்து அதற்கான அறிவிப்பையும் விடுத்திருந்தது. 

பத்து நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றும் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிகள் துபாய சர்வதேச விளையாட்டரங்கிலும் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கிலும் நடைபெறும்.

ஆறு தடவைகள் உலக சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. 

2009இல் நடைபெற்ற அங்குராரப்பண ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இங்கிலாந்து, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா, 2016 உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் பி குழுவில் இடம்பெறுகின்றன. 

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அக்டோபர் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானை ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் அக்டோபர் 3ஆம் திகதி சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும். 

தொடர்ந்து 5ஆம் திகதி இரவு நடைபெறவுள்ள போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாயை இலங்கை எதிர்த்தாடும். 

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் அக்டோபர் 9ஆம் திகதி இரவு நடைபெறும். 

இலங்கை தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தை ஷார்ஜா விளையாட்டரங்கில் சந்திக்கும். இப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். 

18 தினங்கள் நீடிக்கும் ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறும். 

ஏ, பி ஆகிய இரண்டு குழுக்களில் தலா 10 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு அந்த இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். 

இரண்டு குழுக்களிலும் முதலாம் இடங்களைப் பெறும் அணிகள், இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகளை அரை இறுதுகளில் சந்திக்கும். 

அக்டோபர் 3ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை லீக் போட்டிகளும் அக்டோபர் 17ஆம், 18ஆம் திகதிகளில் அரை இறுதிப் போட்டிகளும் அக்டோபர் 20ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறும். 

முதலாவது அரை இறுதிப் போட்டியும் ஐசிசி மகளிர் ரி20 உலக கிண்ண சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியும் துபாய் சர்வதேச விளையாட்டரங்கிலும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கிலும் நடைபெறும். 

இந்தியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றால் அவ்வணி முதலாவது அரை இறுதியில் விளையாடும்.

10 நாடுகள் சம்பந்தப்பட்ட 10 பயிற்சிப் போட்டிகள் செவன்ஸ் விளையாட்டரங்கிலும் ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக மைதானத்திலும் செப்டெம்பர் 28ஆம் திகதியிலிருந்து அக்டோபர் 1ஆம் திகதிவரை நடைபெறும். 

இப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள போதிலும் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையுடன் பங்காளியாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையே ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் உரிமைத்துவத்தைக் கொண்டிருக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

ICC_Women_s_T20WC_Full_Fixture.png

https://www.virakesari.lk/article/192110

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந் ம‌க‌ளிர் அணி 

க‌ட‌சி இட‌த்தை பிடிப்பின‌ம் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஹா ஹா.........................

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும்  ஐ.சி.சி. மகளிர் ரி20  உலகக் கிண்ண திருவிழா இன்று ஆரம்பம்

03 OCT, 2024 | 10:51 AM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்  திருவிழா ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (3) ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு முறை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் உலக சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா உட்பட 10 நாடுகள் பங்குபற்றும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி பிரசித்திபெற்ற ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலும் துபாய் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

all_captains_..jpg

இப் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுகின்றபோதிலும் வரவேற்பு நாடு என்ற அந்தஸ்தை பங்களாதேஷ் கொண்டுள்ளது.

ஷார்ஜாவில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து அணிகள் விளையாடவுள்ளன.

இப் போட்டியைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

கடந்த ஒன்றரை வருடங்களாக மிகவும் பலம்வாய்ந்த அணிகளை வெற்றிகொண்டு மகளிர் கிரிக்கெட் அரங்கில் பல திருப்பங்களை ஏற்படுத்திய சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை, ஆசிய கிண்ண சம்பியன் என்ற அந்தஸ்துடன் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

'ஒவ்வொரு முறையும் நாங்கள் மிகக் குறைந்த வாய்ப்பைக் கொண்டவர்கள் (Underdogs) என்ற முத்திரையுடனேயே பங்குபற்றுகிறோம். அதனால் எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. அதிகமான அழுத்தத்தை நானும் எனது சக வீராங்கனைகளும் எங்கள் தோள்களில் சுமக்க விரும்பவில்லை. நாங்கள் மிகவும் எளிமையாக வைத்துக்கொள்ளவுள்ளோம். சில சிரேஷ்ட வீராங்கனைகளுடன் இளம் வீராங்கனைகளும் அணியில் இடம்பெறுகின்றனர். கடந்த பல மாதங்களாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளதால் எமது அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். இது மாறுபட்ட கிரிக்கெட் வடிவமாகும். அத்துடன் நிலைமைகளும் மாறுபட்டே இருக்கிறது. எனவே நாங்கள் புதிய நாட்களை மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு போட்டியையும் ஒவ்வொன்றாக திட்டமிட்டு விளையாடவுள்ளோம்' என நேற்றைய தினம் சமரி அத்தபத்து தெரிவித்தார்.

chamari_attapattu..jpg

மேலும், இந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை முதல் தடவையாக வெற்றிகொண்ட அணி என்ற வகையில்  உலகக் கிண்ணத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் நடைபெற்ற 3 போட்டிகளில் இரண்டில் (குழு நிலை) இலங்கையும் நிரல்படுத்தல் போட்டி ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றிபெற்றன.

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட 20 போட்டிகளில் பாகிஸ்தான் 10 - 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

ஆசிய கிண்ண அரை இறுதி உட்பட கடைசியாக விளையாடப்பட்ட 3 போட்டிகளிலும் பாகிஸ்தானை இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

wg.jpg

10 அணிகள், 150 வீராங்கனைகள், 23 போட்டிகள், ஒரு உலக சம்பியன்

பத்து  அணிகளைச் சேர்ந்த 150 வீராங்கனைகள் 23 போட்டிகளில் தங்களது அதி உச்ச ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருப்பதுடன் அக்டோபர் 20ஆம் திகதி 70 கோடி ரூபா (2.34 அமெரிக்க டொலர்கள்) பணப்பரிசுடன் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை சுமக்கப்போகும் சம்பியன் அணி தீர்மானிக்கப்படும். இறுதிப் போட்டிக்கான இருப்பு நாளாக அக்டோபர் 21ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியன ஏ குழுவிலும் அங்குரார்ப்பண உலக சம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா ஆகியன பி குழுவிலும் போட்டியிடுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் தலா 10 லீக் போட்டிகள் நடைபெறும். லீக் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிகளில் அக்டோபர் 17ஆம், 18ஆம் திகதிகளில் விளையாட தகுதிபெறும், அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் (அக். 20) பங்குபற்றும்.

இலங்கை பங்கபற்றும் போட்டிகள் (பி குழு)

அக்டோபர் 3 (இன்று) எதிர் பங்களாதேஷ் (ஷார்ஜா பி.ப. 3.30 மணி)

அக்டொபர் 5 எதிர் அவுஸ்திரேலியா (ஷார்ஜா பி.ப. 3.30 மணி)

அக்டோபர் 9 எதிர இந்தியா (துபாய் இரவு 7.30 மணி)

மகளிர் ரி20 உலக சம்பியன்கள்

இங்கிலாந்து (2009),

அவுஸ்திரேலியா (2010, 2012, 2014, 2018, 2020, 2023),

மேற்கிந்தியத் தீவுகள் (2016)

https://www.virakesari.lk/article/195366

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந் ம‌க‌ளிர் அணிய‌ வ‌ங்கிளாதேஸ் ம‌க‌ளிர் அணி 16 ர‌ன்ஸ்சில் வென்ற‌து..................

 

வெற்றி பெற்ற‌ வ‌ங்கிளாதேஸ் ம‌க‌ளிர் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி தோக்க‌ போகுது....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றையான் வெற்றிய‌ பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் அணி பெருமை ப‌ட்ட‌வை அவ‌ர்க‌ளின் சிரிப்பே காட்டிய‌து அவ‌ர்க‌ளின் ம‌கிழ்ச்சிய‌ ச‌ந்தோஷ‌த்த‌............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் 10 வருட வெற்றி தாகத்தைத் தீர்த்துக்கொண்டது பங்களாதேஷ்

Published By: VISHNU   03 OCT, 2024 | 11:07 PM

image

(நெவில் அன்தனி)

ஸ்கொட்லாந்துக்கு எதிராக ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (03) பிற்பகல் நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் 16 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றியீட்டியது.

0309_ritu_moni_bang_vs_scot.png

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் அறிமுகமான 2014இல்  இருந்து 16 போட்டிகளில் தோல்வி அடைந்துவந்த பங்களாதேஷ் இந்த வெற்றி மூலம் 10 வருட வெற்றி தாகத்தைத் தீர்த்துக்கொண்டது.

0310_player_of_the_match_ritu_moni.jpg

அத்துடன் 'நிழல் சொந்த மண்ணில்' இந்த வெற்றி பங்களாதேஷுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

'எமது சொந்த நாட்டில் விளையாடாமல் இருப்பது இதயத்தை நோக வைக்கிறது. ஆனால், நாங்கள் பாதுகாப்பாக இருந்தவாறு சொந்த நாட்டிற்காக விளையாடுகிறோம். நல்ல எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் முன்னிலையில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளோம். இது எமது சொந்த நாட்டில் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது' என தனது 100ஆவது மகளிர் சர்வதேச ரி20 போட்டியில் வெற்றியை சுவைத்த அணித் தலைவி நிகார் சுல்தானா தெரிவித்தார்.

0310__bang_beat_scot.jpg

தகுதிகாண் சுற்றின் மூலம் முதல் தடவையாக மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஸ்கொட்லாந்துக்கு இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம்.

0309__sara_bryce_scot_vs_bang.png

இந்தப் போட்டியில் இரண்டு தரப்பினரும் களத்தடுப்பில் கோட்டை விட்டதால் ஆட்டம் பெரியளவில் சுவாரஸ்யத்தை தோற்றுவிக்கவில்லை. முழுப் போட்டியிலும் துடுப்பாட்டத்தில் இருவரே 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

0309__sobana_mosthari_bang_vs_scot.png

பங்களாதேஷில் நடைபெறவிருந்த ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம், அந் நாட்டில் இடம்பெற்ற அரசியல் கொந்தளிப்பு காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டது. எனினும் வரவேற்பு நாடு என்று உரிமைத்துவம் பங்களாதேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பங்களாதேஷுக்கு 'சொந்த மண்' போன்ற உணர்வை கொடுத்துள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சோபனா மோஸ்தரி 36 ஓட்டங்களையும் ஷாதி ராணி 29 ஓட்டங்களையும் நிகார் சுல்தானா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சஸ்கியா ஹோர்லி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

120 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகள் விக்கெட்களை தாரைவார்த்ததால் ஸ்கொட்லாந்து தோல்வியைத் தழுவியது.

ஆரம்ப வீராங்கனை சாரா ப்றைஸ் மாத்திரம் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

சாராவின் சகோதரியான அணித் தலைவி கெத்தரின் ப்றைஸ் மற்றும் அலிசா லிஸ்டர் ஆகியோர் தலா 11 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ரிட்டு மோனி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

ஆட்டநாயகி: ரிட்டு மோனி

https://www.virakesari.lk/article/195432

 

 

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு பலத்த அடி; பாகிஸ்தானிடம் 31 ஓட்டங்களால் தோல்வி 

Published By: VISHNU   04 OCT, 2024 | 01:43 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (03) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் 31 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

0310__chamari_celebrate_a_wicket_sl_vs_p

பாகிஸ்தானின் கடைசி 2 விக்கெட்களை விரைவாக வீழ்த்த முடியாமல் 32 ஓட்டங்களை கடைசி 5 ஓவர்களில் இலங்கை விட்டுக்கொடுத்ததே அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் பாகிஸ்தான் அணித் தலைவி பாத்திமா சானா வேகமாகப் பெற்ற 30 ஓட்டங்களும் பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுகளும் பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

0310_nilakshika_silva_sl_vs_pak.png

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 117 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

0310_pak_celebrate_vs_sl_...jpg

இந்தத் தோல்வி இலங்கைக்கு பலத்த அடியாக வீழ்ந்துள்ளதுடன் தொடரும் போட்டிகளில் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிவரும்.

0310_fathima_sana_player_of_the_match_pa

இலங்கையின் ஆரம்பம் எந்தவகையிலும் சிறப்பாக அமையவில்லை.

சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் இலங்கை வீராங்ககைளின் மோசமான அடி தெரிவுகள், பொறுப்பற்ற துடுப்பாட்டம் காரணமாக விக்கெட்களை சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன. 

அத்துடன் இலங்கை அணியின் ஒட்ட வேகம் மிகவும் குறைவாக இருந்தது.

முன்வரிசையில் இளம் வீராங்கனை விஷ்மி குணரட்ன மாத்திரமே ஒரளவு சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓட்டங்களைப் பெற்றார்.

சமரி அத்தப்பத்து (6), ஹர்ஷிதா சமரவிக்ரம (7), ஹாசினி பெரேரா (8), கவிஷா தில்ஹாரி (3) ஆகியொர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.

இதன் காரணமாக 15 ஓவர்கள் நிறைவில் இலங்கை 5 விக்டெக்ளை இழந்து 61 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்று பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா 22 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் ஏனையவர்களிடமிருந்து போதிய பங்களிப்பு கிடைக்கவில்லை.

பந்துவீச்சில் சாடியா இக்பால் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பாத்திமா சானா 10  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஷ்ரா சாந்து 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஒமய்மா சொஹெய்ல் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.

15 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த பாகிஸ்தான், கடைசி 2 விக்கெட்களில் 32 ஓட்டங்களை மேலதிகமாக பெற்று ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

பாகிஸ்தானின் 8ஆவது விக்கெட் வீழ்ந்தபோது 6 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்றிருந்த அணித் தலைவி பாத்திமா சானா அடுத்த 14 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்று 30 ஓட்டங்களுடன் 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.

அவரைவிட முன்னாள் அணித் தலைவி நிதா தார் 23  ஓட்டங்களையும் ஒமய்மா சொஹெய்ல் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சமரி அத்தபத்து 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 19  ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உதேஷிகா ப்ரபோதனி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: பாத்திமா சானா.

https://www.virakesari.lk/article/195433

Edited by ஏராளன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்துவீச்சில் மிலாபா, துடுப்பாட்டத்தில் லோரா, தஸ்மின் அபாரம்; மெற்கிந்தியத் தீவுகளை துவம்சம் செய்தது தென் ஆபிரிக்கா

Published By: VISHNU   04 OCT, 2024 | 07:02 PM

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 10 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா மிக இலகுவாக வெற்றிகொண்டது.

0410_staffani_taylor_wi_vs_sa.png

ஒருபக்க சார்பாக அமைந்த அப் போட்டியில் நொன்குலுலேக்கோ மிலாபாவின் துல்லியமான பந்துவீச்சும் அணித் தலைவி லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் தென் ஆபிரிக்காவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

0410_laura_wolvaardt_sa_v_wi.png

மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 119 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 119 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

லோரா வுல்வாட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 119 ஓட்டங்கள் ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அதிசிறந்த இணைப்பாட்டமாக இப்பொதைக்கு பதிவாகியுள்ளது.

அத்துடன் இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் அரைச் சதங்கள் குவித்த முதலாவது வீராங்கனைகள் என்ற பெருமையை அவர்கள் இருவரும் பெற்றுக்கொண்டனர்.

லோரா வுல்வார்ட் 55 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள் உட்பட 59 ஓட்டங்களுடனும் தஸ்மின் 52 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள் உட்பட 57 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.            அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.

இவ் வருட உலகக் கிண்ணத்தில் முதல் 3 ஆட்டங்களில் இதுவரை முதலில் துடுப்பெடுத்தாடிய 3 அணிகளும் 120 ஓட்டங்களுக்கு குறைவாகவே எடுத்துள்ளன.

மேற்கிந்திய தீவுகளின் வீராங்கனைகள் ஓட்டங்களை வேகமாக பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.

துடுப்பெடுத்தாடிய அனைவரும் பெரும்பாலும் ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் என்ற ரீதியில் ஓட்டங்களைப் பெற்றனர்.

ஸ்டெபானி டெய்லர், ஸய்டா ஜேம்ஸ் ஆகிய இருவரும பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 35 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது.

ஸ்டெபானி  டெய்லர் 44 ஓட்டங்களுடனும் ஸய்டா ஜேம்ஸ் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஷெமெய்ன் கெம்ப்பெல் 17 ஓட்டங்களையும் டியேந்த்ரா டொட்டின் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

அபாரமாக பந்துவீசிய நொன்குலுலேக்கோ மிலாபா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/195508

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ம‌க‌ளிர் அணி

நியுசிலாந் ம‌க‌ளிர் அணியிட‌ம் தோல்வி அடைய‌ போகின‌ம்

இன்னும் இர‌ண்டு விக்கேட் நியுசிலாந் எடுத்தால் விளையாட்டை ரென்ச‌ல் இல்லாம‌ வெல்ல‌லாம்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் மைச்சில‌ இல‌ங்கையும்
இந்தியாவும் ப‌டு தோல்வி

இந்தியா ம‌க‌ளிர் அணி மீண்டு வ‌ந்து விடுவின‌ம்

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி சொந்த‌ நாட்டில் ந‌ல்லா விளையாடுவின‌ம் அய‌ல் நாடுக‌ளில் அவ‌ர்க‌ளின் விளையாட்டு பெரிசா எடுப‌டாது.........................

@ரசோதரன் 

நீங்க‌ள் ம‌க‌ளிர் கிரிக்கேட் பாப்பிங்க‌ளா....................என‌க்கு ம‌க‌ளிர் கிரிக்கேட் அதிக‌ம் பிடிக்கும்

 

தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் தான் உல‌க‌ கோப்பைய‌ வெல்லுகின‌ம்.......................இந்த‌ முறை இந்தியா ம‌க‌ளிர் அணி திற‌மைய‌ வெளிப்ப‌டுத்தினால் கோப்பை இந்தியாவுக்கு தான்....................

ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் என‌க்கு இரண்டு வ‌கை பிடிக்கும் ஒன்று விளையாட்டு ம‌ற்ற‌து ம‌க‌ளிரீன் அழ‌கை பார்த்து ர‌சிப்ப‌து லொள்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

@ரசோதரன் 

நீங்க‌ள் ம‌க‌ளிர் கிரிக்கேட் பாப்பிங்க‌ளா....................என‌க்கு ம‌க‌ளிர் கிரிக்கேட் அதிக‌ம் பிடிக்கும்

ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் என‌க்கு இரண்டு வ‌கை பிடிக்கும் ஒன்று விளையாட்டு ம‌ற்ற‌து ம‌க‌ளிரீன் அழ‌கை பார்த்து ர‌சிப்ப‌து லொள்............................

🤣............

பையன் சார், ஒன்றுக்கு இரண்டு தடவை மனசுக்ககுள் சொல்லிப் பார்த்துப் போட்டுத்தான், இதை எழுதுகின்றேன். 'இந்த வயசில என்னத்தையாம் ரசிக்கப் போகிறாய்............' என்று யாராவது வம்புக்கு வந்தால் என்ன செய்வது..........😜.

இதுவரை மகளிர் கிரிக்கெட் பார்த்ததில்லை, பையன் சார். அதனால் அவர்கள் கிரிக்கெட் விளையாடும் அழகையும் பார்க்கும் பேறு இதுவரை கிட்டவில்லை.

கிருபன் களத்தில் ஒரு போட்டி வைத்திருந்தார் என்றால், இரண்டையும் ஒன்றாகப் பார்த்திருக்கலாம்.

நீங்கள் விளையாட்டு பார்க்கின்றேன், விளையாட்டு பார்க்கின்றேன் என்று படு விசயமாகவும் இருக்கின்றீர்கள்..........

நான் அமெரிக்கன் புட்பால், ரக்பி என்று கடுவன்களின் கடுமையான விளையாட்டுகளை தேவையில்லாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் போல........... 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

🤣............

பையன் சார், ஒன்றுக்கு இரண்டு தடவை மனசுக்ககுள் சொல்லிப் பார்த்துப் போட்டுத்தான், இதை எழுதுகின்றேன். 'இந்த வயசில என்னத்தையாம் ரசிக்கப் போகிறாய்............' என்று யாராவது வம்புக்கு வந்தால் என்ன செய்வது..........😜.

இதுவரை மகளிர் கிரிக்கெட் பார்த்ததில்லை, பையன் சார். அதனால் அவர்கள் கிரிக்கெட் விளையாடும் அழகையும் பார்க்கும் பேறு இதுவரை கிட்டவில்லை.

கிருபன் களத்தில் ஒரு போட்டி வைத்திருந்தார் என்றால், இரண்டையும் ஒன்றாகப் பார்த்திருக்கலாம்.

நீங்கள் விளையாட்டு பார்க்கின்றேன், விளையாட்டு பார்க்கின்றேன் என்று படு விசயமாகவும் இருக்கின்றீர்கள்..........

நான் அமெரிக்கன் புட்பால், ரக்பி என்று கடுவன்களின் கடுமையான விளையாட்டுகளை தேவையில்லாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் போல........... 

இங்கை பார‌டா இவ‌ருக்கு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌ தெரியாது😁

ச‌சிக‌லா அன்ரின்ட‌ அழ‌கை ர‌சிக்க‌ தெரியுது😁

 

நான் அழ‌கை ர‌சித்தால் ந‌க்க‌ல் அடிக்கிறார் ளொள்😁😛.................

 

ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை போட்டி யாழில் ந‌ட‌ப்ப‌தில்லை அண்ணா..............ஜ‌பிஎல் போட்டியும் ஆண்க‌ளின் உல‌க‌ கிண்ண‌ போட்டியும் தான் ந‌ட‌ப்ப‌து கிரிக்கேட்டில்👍.....................

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தின் ரன் குவிப்பால் திணறிய இந்திய அணி - நெருக்கடியில் இருந்து மீள முடியுமா?

மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

துபாயில் நேற்று நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பையின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியடைந்து இந்திய அணி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

நியூசிலாந்து அணி 2024ஆம் ஆண்டில் 11 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று 10 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்தது. தற்போது அந்தத் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இரு பயிற்சி ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி நேற்று பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பலாக ஆடினர். அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் பெரும்பாலான பேட்டர்கள் 22 யார்ட் வட்டத்தைக் கடந்து பந்தை அடிக்காமல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. 161 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்து 58 ரன்களில் மோசமாகத் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் ரன் குவிப்புக்கும், வெற்றிக்கும் காரணமாக இருந்த கேப்டன் சோபி டிவைன்(57ரன்கள்) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணிக்கு நெருக்கடி

அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியால் ஏ பிரிவில் இந்திய அணி கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு நிகர ரன்ரேட்டில் மைனஸ் -2.900 என்று புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது.

இந்திய அணி அடுத்து மோதக்கூடிய பாகிஸ்தான்(நாளை), ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளை வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

ஏனென்றால், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வெல்வது எளிதானது அல்ல, பாகிஸ்தான் அணி நேற்று நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியை வென்று கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பதால் நாளை கடினமான போராட்டத்தை இந்திய அணிக்கு எதிராக வெளிப்படுத்தலாம்.

ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதால் அதற்கு கணக்குத் தீர்க்க இலங்கையை வெல்ல வேண்டும். இந்திய அணிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் சவாலாக இருந்தாலும் வென்றுவிடும் என்று கூறலாம்.

ஆனால், 6 முறை சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வெல்வதுதான் மிகக் கடினமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் நிகர ரன்ரேட்டில் இந்திய அணி மைனஸில் இருப்பதால், இந்திய அணி பெறும் வெற்றி அதை உயர்த்து வகையிலும் அமைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

 

ஆட்டநாயகி டிவைன்

மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் சோஃபி டிவைன். கடைசி நேரத்தில் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இறுதிவரை டிவைன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் 15வது ஓவரில்தான் நியூசாலந்து அணி 100 ரன்களை எட்டியது. இதனால் 130 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து சேர்க்கலாம் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், இந்திய மகளிர் அணி வீசிய 5 ஓவர்களை டிவைன் வெளுத்து வாங்கி 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்குத் துணையாக ஜார்ஜியா பில்மர்(34), சூசி பேட்ஸ்(27) ஆகியோரும் ரன்கள் சேர்த்ததால் நியூசிலாந்து பெரிய ஸ்கோரை எட்டியது.

அடுத்துவரும் போட்டிகள் முக்கியம்

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறுகையில் “எங்களின் சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. அடுத்து வரும் ஆட்டம் ஒவ்வொன்றும் முக்கியம் என்பதை அறிந்து முன்னேறுவோம். வாய்ப்புகளை உருவாக்கியும் அதை நாங்கள் பயன்படுத்த முடியவில்லை," என்று தெரிவித்தார்.

தங்களைவிட நியூசிலாந்து வீராங்கனைகள் சிறப்பாக ஆடியதாகக் குறிப்பிட்ட ஹர்மன்ப்ரீத், "ஃபீல்டிங்கிலும் நாங்கள் பல தவறுகளைச் செய்தோம். 160 ரன்களை பலமுறை சேஸ் செய்துள்ளோம், ஆனால், இப்போது முடியாதது குறித்து ஆலோசிப்போம்.

நல்ல தொடக்கம் அமையவில்லை, சீராக விக்கெட்டை இழந்தது, ஒரு பேட்டர்கூட நிலைத்து ஆடாதது தோல்விக்கான காரணமாக அமைந்தது,” எனத் தெரிவித்தார்.

 

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியினர் சிறப்பாகப் பந்து வீசவில்லை. பவர்ப்ளே ஓவர்களுக்குள் நியூசிலாந்து அணியை 55 ரன்கள் சேர்க்கவிட்டனர்.

முதல் இரு விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இந்திய அணி வீழ்த்தினாலும் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். அது மட்டுமல்லாமல், முக்கிய விக்கெட்டுகளை எடுக்காமல் விட்டதும் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தது.

குறிப்பாக, கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியினர் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ரன்களை வாரி வழங்கியதுதான் தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.

தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கினார். தீப்திக்கு இரு ஓவர்களை குறைத்துவிட்டு பூஜாவுக்கு வழங்கியிருக்கலாம்.

பேட்டிங்கிலும் இந்திய மகளிர் அணியினர் போதுமான போராட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நியூசாலந்து அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சையும், பந்துவீச்சில் துல்லியத்தையும் இந்திய மகளிர் அணியினரால் சமாளிக்க முடியவில்லை.

 
மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் ரோஸ்மேரி 4 விக்கெட்டுகளையும், லீ தஹுகு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர், லெக் ஸ்பின்னர் ஈடன் கார்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் வலிமையான பேட்டர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கார்ஸன் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

ஷஃபாலியும், ஸ்மிருதியும் ஆட்டமிழந்தபின் இந்திய அணியினர் நம்பிக்கையிழந்து, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய மகளிர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 15 ரன்கள்தான், உதரி ரன்களான 13 ரன்கள் அதற்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சேர்த்த 15 ரன்கள்தான் அதிகபட்சம். மற்ற வகையில் ஷஃபாலி(2), ஸ்மிருதி(12), ரோட்ரிக்ஸ்(13), ரிச்சா கோஸ்(12) எனச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்த 18 மாதங்களில் முதல்முறையாக இப்போது 3வது வரிசையில் பேட் செய்து அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. நடுவரிசையில் களமிறங்கி வந்த ஹர்மன்ப்ரீத்தை 3வது வரிசைக்கு உயர்த்தியது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணியினர் தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளே ஓவருகுள் 43 ரன்கள் எடுப்பதற்கு உள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

பத்து ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்தது. ஆனால், அடுத்த 12 ரன்கள் சேர்ப்பதற்குள் கூடுதலாக 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இப்படி 75 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. 11 முதல் 19 ஓவர்களில் இந்திய அணியால் 39 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, அதோடு மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

 

சவாலான டிவைன்

மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு சவாலாக விளங்கியது நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் பேட்டிங். இதற்கு முந்தைய உலகக் கோப்பைகளில் டிவைன் டாப் ஆர்டரில் களமிறங்கி ஆடிய நிலையில் இந்த உலகக்கோப்பையில் நடுவரிசையில் களமிறங்கி அணிக்கு நங்கூரம் பாய்ச்சினார்.

இந்த ஆண்டில் 11 டி20 போட்டிகளில் டிவைன் ஆடியிருந்தாலும், இவரின் சராசரி 21 ரன்கள் என சுமாராகவே இருக்கிறது, இரு அரைசதங்கள் மட்டுமே அடித்திருந்தார். அதிலும் கடைசி 5 போட்டிகளில் டிவைன் 5, 12, 4, 5 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.

ஆனால், டிவைனின் ஆட்டம் நேற்றைய போட்டியில் கடந்த காலப் போட்டிகளைப் போல் இருக்கும் என நினைத்த இந்திய அணிக்குப் பெரிய அதிர்ச்சியையும், சவாலையும் அவர் அளித்தார்.

ஏழு ஓவர்களாக நியூசிலாந்து அணி பவுண்டரி அடிக்காமல் திணறிய நிலையில் இந்திய அணியின் ஆஷா ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து டிவைன் ஃபார்முக்கு திரும்பினார்.

ரேனுகா சிங் வீசிய 15வது ஓவரிலும் டிவைன் அடுத்தடுத்து பவுண்டரி விளாசி ரன்களை சேர்த்து, 21வது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். அது மட்டுமல்லாமல் ஃப்ரூக் ஹாலிடேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டிவைன் 26 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு சவாலாக இருந்தார்.

 

எடுபடாத இந்திய அணியின் உத்தி

மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆண்டில் டி20 போட்டியில் முதல் முறையாக இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. மொத்தம் 6 பந்துவீச்சாளர்கள் என்ற உத்தியைக் கையில் எடுத்து சுட்டுக்கொண்டது.

வஸ்த்ராக்கர், ரேணுகா, அருந்ததி ரெட்டி ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களைச் சேர்க்க, இந்த ஆண்டின் 2வது சிறந்த பந்துவீச்சாளர் எனப் பெயரெடுத்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ராதா யாதவை களமிறக்கவில்லை.

ஆறு பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் என்பதால், பேட்டிங்கில் பலம் குறைந்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3வது வரிசையிலும், ரோட்ரிக்ஸ் 4வது இடத்திலும், கோஸ் 5வது இடத்திலும் களமிறக்கப்பட்டனர்.

ஆனால், கீழ் வரிசையில் எந்த பேட்டரும் இல்லாமல் போனதால் கடைசி நேரத்தில் இந்திய அணியால் ரன் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. துபாய் ஆடுகளத்தில் 161 ரன்களை சேஸ் செய்வது கடினமானது. அதிலும் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தபோதே ஏறக்குறைய தோல்வியின் பிடிக்குள் சிக்கிவிட்டது.

ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்குக்கூட போராடி ரன்களை சேர்த்திருக்கலாம். ஆனால், கடைசி வரிசையில் பேட்டர்கள் இல்லாததால் அதையும் செய்ய முடியவில்லை.

 

சர்ச்சைக்குரிய ரன்-அவுட்

மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வீராங்கனைகள் டிவைன், கெர் இருவரும் 2வது ரன்னுக்கு முயலும்போது இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரால் ரன்-அவுட் செய்யப்பட்டனர்.

ஆனால், அதை நடுவர்கள் அன்னா ஹாரிஸ், ஜேக்குலின் வில்லியம்ஸ் இருவரும் டெட்பால் என அறிவித்தனர். இதனால் நடுவர்களுடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதாவது, தீப்தி ஷர்மா 14வது ஓவரின் கடைசிப் பந்தை வீசினார். அந்தப் பந்தைத் தட்டிவிட்டு டிவைன், கெர் இருவரும் ஒரு ரன் ஓடினர். ஓவரும் முடிந்துவிட்டதால், நடுவரும் தீப்தியிடம் தொப்பியை வழங்கினார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை ஃபீல்டிங் செய்து கையில் வைத்திருந்தார். அப்போது திடீரென டிவைன், கெர் இருவரும் 2வது ரன்னுக்கு முயற்சி செய்து ஓடினர். இதைப் பார்த்த ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை எடுத்து ஸ்டெம்பை நோக்கி எறிய அதைப் பிடித்த ரிச்சா கோஸ் கெர் க்ரீஸுக்குள் வருவதற்குள் ரன்-அவுட் செய்தார்.

ஆனால், நடுவர்கள் இது ரன்அவுட் இல்லை, ஓவர் முடிந்து பந்துவீச்சாளரும் தொப்பியைப் பெற்றுக்கொண்டதால் இது டெட்பால் என அறிவித்தனர். ஆனால், நடுவர்களுடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாக்குவாதம் செய்ததால் 7 நிமிடங்கள் வரை ஆட்டம் நின்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா ம‌க‌ளிர் அணி

நியுசிலாந் ம‌க‌ளிர் அணியிட‌ம் தோல்வி அடைய‌ போகின‌ம்

இன்னும் இர‌ண்டு விக்கேட் நியுசிலாந் எடுத்தால் விளையாட்டை ரென்ச‌ல் இல்லாம‌ வெல்ல‌லாம்............................

ஒரு விளையாட்டையும் மிச்சம் வைக்கிறேல்ல போல....நான் பொம்புளையளின்ர விளையாட்ட பாக்கிறேல்ல 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

ஒரு விளையாட்டையும் மிச்சம் வைக்கிறேல்ல போல....நான் பொம்புளையளின்ர விளையாட்ட பாக்கிறேல்ல 🤣

தாத்தா போராண்டி அனைத்து விளையாட்டை ப‌ற்றியும் ந‌ங்கு தெரிந்து வைச்சு இருக்கிறேன்

விளையாட்டை ப‌ற்றி ஏதூம் ட‌வுட் இருந்தால் என்னை கேலுங்கோ நான் கிளிய‌ர் ப‌ண்ணுறேன்...............நான் ஒரு விளையாட்டு பையித்திய‌ம்😁............................

 

நீங்க‌ள் தான் என் அர‌சிய‌ல் குரு👍........................

Link to comment
Share on other sites

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

1728099518-1194.png&w=&h=&outtype=webp
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டியில், இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து, 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி விளையாடிய நிலையில் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன்கள் எடுத்தார் என்பதும், மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், இந்திய அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி நாடு திரும்ப‌ ச‌ரி................அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணியிட‌ம் தோல்வி அடைய‌ போகின‌ம்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி நாடு திரும்ப‌ ச‌ரி................அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணியிட‌ம் தோல்வி அடைய‌ போகின‌ம்.......................

 

ஆண்கள் அணி மோசமாக விளையாடியபோது பெண்கள் அணி சிறப்பாக விளையாடியது. இப்போது ஆண்கள் சிறப்பாக விளையாட தொடங்க பெண்கள் அணி சோர்ந்து விட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

ஆண்கள் அணி மோசமாக விளையாடியபோது பெண்கள் அணி சிறப்பாக விளையாடியது. இப்போது ஆண்கள் சிறப்பாக விளையாட தொடங்க பெண்கள் அணி சோர்ந்து விட்டது.

இல்லை அண்ணா ந‌ட‌ந்து முடிந்த‌ ஆசியா கோப்பையில் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ந‌ல்லா விளையாடினவ‌

 

வ‌ய‌து போன‌ பெண்க‌ளை அணியில் சேர்த்து ஆசிய‌ கோப்பையில் விளையாடின‌ ம‌க‌ளிருக்கு வாய்ப்பு கொடுக்க‌ வில்லை அதோட‌ இல‌ங்கை ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் ஒழுங்காக‌ விளையாட‌ வில்லை ஆசிய‌ கோப்பைக்கு பிற‌க்கு இது தான் அவேன்ட‌ தோல்விக்கு கார‌ன‌ம் என்று என்னால் உனர‌ முடியுது.................................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.