Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய தமிழ் இளம் தலைமுறையினர் விவாதிக்கிறார்கள்--தலைமுறை இடைவெளி பற்றி-video

Featured Replies

நினைத்தால் முடியாதது என்று ஒண்டும் இல்லை. positive ஆக நினைச்சுக் கொண்டிருந்தால் எல்லாம் நல்லா இருக்கும். :o

"எத்தனை தமிழ் இணையங்கள் இருக்கு" எண்டு என்ன கோணத்தில கேக்கிறியள்? வழமைபோல் தமிழ்செல்வன் என்ன சொல்லவாறார் எண்டு எனக்கு விளங்கவில்லை. :o

தமிழ் மொழியில் இணையங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கு எண்டா?

இல்லை தமிழர் விடையங்களை பற்றி அறிய உலகப் பிரசித்தி பெற்ற இணையங்கள் எத்தனை எண்டா?

அல்லது தரமான content ஓடு தமிழ் இணையங்கள் இல்லை என்ற ஆதங்கமா?

இல்லாவிட்டால் தமிழ் நெற் அண்மையில் அறிமுகப்படுத்திய transcription, know the etyomology சேவைகளை வைத்து கேக்கிறியளா?

உங்களோடு வாதாட நான் விரும்பவில்லை .

நீங்கள் திறமையாக வாதாடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

நான் சொல்வது நமது தேவைகள் என்ன

யதார்த்தம் என்ன என்பது குறித்து மட்டுமே!

இது எனது தாழ்மையான கருத்து!

உங்களுடன் முரண்படுவது எனது நோக்கமல்ல.

உங்களை பொறுத்த வரை நீங்கள் சரி!

நன்றி .

Edited by AJeevan

இங்க போட்டதுக்கு நன்றி சின்னப்பு..இனித்தான் பார்க்கணும்.

சிநேகிதி

பார்த்து விட்டு

உங்கள் கருத்தை முன் வையுங்கள்.

நீங்கள் கனடாவில் இருப்பதால்

உங்கள் கருத்து அனைவருக்கும் பிரயோசனப்படும்!

அது சரி எல்லோரும் "தலைமுறை இடைவெளி" பற்றியா கதைக்கிறியள்? அப்படியெண்டால் என்ன எண்டும் எங்களை மாதிரியான ஆக்களுக்கு சொல்லிப்போட்டு விவாதியுங்கோவன்...ஒரு பணிவான வேண்டுகோள்!!!

சரி உங்கடை கேள்விக்கே வாறன். நமது (புலம்பெயர்ந்தவர்கள்) தேவை என்ன?

குடும்பம் வேலை பிள்ளைகளிற்கான கல்வி வசதி எதிர்கால வேலை வாய்ப்புகள் சுகாதாரம் வீடு வசதியான வாழ்வு என்பன.

இதுகளுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம். வெள்ளையள் கேட்டவங்களோ தமிழ் படியுங்கோ கொடி பிடியுங்கோ எண்டு. பேசாமல் கிடைச்ச சந்தர்ப்பத்தை வைச்சு முன்னுக்கு வாற வழியப்பாக்காமல் எப்ப பாத்தாலும் தமிழ் தமிழ் தேசியம் தேசியம் எண்டு கூக்குரல் போடுறியள்.

அவங்கள் தங்களுக்கு இருக்கிற வேலையாட்கள் தட்டுப்பாடு வரி செலுத்துனர்கள் பற்றாக்குறை குறைந்துவரும் சனத்தொகை போன்றவற்றையும் ஈடு செய்யத்தான் உங்களை ஏற்றுக் கொள்ளுறாங்கள் எண்டு நன்றி கெட்டதனமா சொல்லாதேங்கோ.

அதுக்கு அடுத்தாக இன்றய யதார்த்தம் என்ன? நாங்கள் வெளிநாட்டுக்கு வந்திட்டம் செட்டில் ஆயிட்டம். பிறகேன் டமில் டமில் டேசியம் டேசியம் என்றியள்?

இதுகளுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம். வெள்ளையள் கேட்டவங்களோ தமிழ் படியுங்கோ கொடி பிடியுங்கோ எண்டு. பேசாமல் கிடைச்ச சந்தர்ப்பத்தை வைச்சு முன்னுக்கு வாற வழியப்பாக்காமல் எப்ப பாத்தாலும் தமிழ் தமிழ் தேசியம் தேசியம் எண்டு கூக்குரல் போடுறியள்.

அதுக்கேன் ஆதங்கப்படுறியள் அண்ணை!!! சில பேருக்கு சில விஷயம் முக்கியம் சில பேருக்கு அது அது பெரிசு இல்லை...பல பேருக்கு அதுதான் எல்லாமே "தேசியம் என்பது பல்தேசியம் ஆனாலும் உணர்வுகளோடு கலந்த ஒன்று...பல்தேசியம்..தாராளவாதம்

..பேசுபவர்களும் இதில் தோற்றுப்போனவர்கள்தான்!!! இது ஒரு மனித வர்ககத்தின் ஆழ் உணர்வுத்தேவை!!!!இலகுவில் பறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல!!!!என்ன சொல்லுறியள்?

ங்கு வந்து கருத்து எழுதும் எலோரும் என்னிலும் விட வயதும் அனுபவமும் கூடியவர்கள், ஆனாலும் நானும் என்னுடைய கருத்தை கூறிவிட மனம் அடம் பிடிப்பதால் கூறுகின்றேன்.... தவறு என்றால் மன்னிக்க வேண்டுகிறேன்.

அதில் கூறிய நபர் போல் யாரும் தொலைக்காட்சியை நிப்பாட்டிவிட்டு போயிருப்பார்கள் என்றால் அவர்கள் நல்லதோர் நிகழ்ச்சியை பார்க்க தவறி இருப்பார்கள்....

நிச்சயமாக ஆங்கிலம் இல்லை பிற மொழி தெரிந்திருக்க வேண்டும்.... இல்லை நாம் நினைப்பதை நம்மால் அடைந்து விட முடியாது. ஆனால் அவசியம் இல்லாத இடத்தில் ஏன் அவற்றை உபயோகிப்பான்??? இந்த நிகழ்ச்சியை தமிழில் செய்து இருந்தால் இளம் சமுதாயத்தினர் பார்த்திருக்க மாட்டார்களா?? இதுவே தமிழ் கற்றுக்கொள்ளாமல் விடுவதர்க்கு ஒரு காரணம் ஆகிவிடாதா???

தமிழ் முழுமையாக தெரியா விட்டாலும் இதனை தமிழில் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதே எனது கருத்து... பிழைகளை சுட்டி காட்டினால் மட்டுமே நம்மால் திருந்த முடியும்.... அதேபோல் இவர்களும் தமிழில் உரையாடினால் மட்டுமே இவர்கள் தமிழை வளர்க்கமுடியும்.

இவர்கள் தங்களை தமிழ்ர்கள் என்று சொல்வதில் சந்தோஷப்பட்டாலும்.... தமிழில் பேசாதவர்கள் தமிழர்கள் என்பதில் தமிழருக்கு ஏதும் சந்தோஷம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை...

இவர்கள் தங்களை தமிழ்ர்கள் என்று சொல்வதில் சந்தோஷப்பட்டாலும்....

தமிழில் பேசாதவர்கள் தமிழர்கள் என்பதில் தமிழருக்கு ஏதும் சந்தோஷம் இருக்கும் என்று

நான் நினைக்கவில்லை...

கவரிமானின் கருத்துகளில் ஒருவகை உடன்பாடு உண்டு.

தமிழ் பேசுறதுல சந்தோசம் வருமென்றால்

வெள்ளைக்காரன் தமிழ் பேசுவான் என்று நினைச்சா

கப்பல் ஏறினோம்?

இல்லைதானே?

இருந்தாலும் உங்களுக்கு நான்

இப்போது சொல்ல வருவது குறித்து

நீங்கள் தெரிந்தும் இருக்கலாம்

தெரியாமலும் இருக்கலாம்.

அல்லது

சிலருக்கு இது ஒரு புதிய தகவலாகக் கூட இருக்கலாம்.

அதனால் சொல்கிறேன்.

இதை தயவு செய்து விவாதமாக எடுக்காதீர்கள்!

nattandiya_map.gifkarte-5-94.gif

இலங்கையில்

புத்தளம் தொடக்கம் நீர் கொழும்பு வரை வாழும் மக்களில்

பெரும்பாலனவர்கள் தமிழர்கள்.

இவர்கள் இன்று பெரும்பாலும் தமிழ் பேசுபவர்கள் அல்ல.

இவர்கள் சிங்களம் பேசத் தொடங்கியதால்

நாம் சிங்களவர்கள் என ஒதுக்கி விட்டோம்.

ஆனால் சிங்களவர்கள்

அவர்களை அரவணைத்துக் கொண்டார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர்

முக்குவர் (முக்குலத்தோர்)

பரவர் (பரவியர்)

வெள்ளாளர்

கொழும்புச் செட்டி

மற்றும்

கரையார் ஆவார்கள்.

பெரும்பாலும்

புத்தளம் - கல்பிட்டி - நுரைச்சோலை மதுரங்குளி மற்றும் விருதோடை

ஆகிய இடங்களில் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.

அதைத்தவிர்த்து

பாலாவி (குருவிக்குளம்) முதல் கல்பிட்டி வரையிலான

பாதையில் தளுவ எனும் இடம் தவிர்ந்து ஏனைய அனைத்து

பகுதிகளிலும் வாழ்வோர் தமிழர்கள்.

அடுத்து

புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு வரை உள்ள

பகுதிகளில் வாழ்வோர் உண்மையிலேயே தமிழர்களே!

இங்கே சிங்கள பாடசாலைகள் உருவானதால்

தமிழர்கள் சிங்களம் கற்றனர்.

ஒதுக்குவதில் நாம் மன்னர்கள் ஆச்சே!

நமது சமுதாயத்தை ஒதுக்கினோம்.

தமிழர் மட்டுமல்ல தமிழர் பகுதிகளும் சிங்களமாயின.

இடங்கள் மொழி பேசாது!

மனிதர்கள்தானே மொழி பேசுகிறார்கள்!

எமது எல்லைகள் என்று கோடு போட்டால் மட்டும்

வரை படத்தில் கோடு வரைந்தால் மட்டும்

அவை தமிழர் பகுதியாகாது.

கோடு மட்டும்தான் நம்மால் போட முடிகிறது

ஆனால்

அங்கே வாழ்வோர் சிங்களம் பேசுகிறார்கள்

அவர்களை

தமிழர் என்று சொல்ல நம்மால் முடிய வேண்டும்.

சொல்வில்லை.

ஒதுக்கினோம்.

அவர்கள் சிங்களவர்களாகி விட்டார்கள்!

அங்கே காலம் கடந்து விட்டது.

இன்றும்

சிங்களம் பேசும் பகுதிகளான

நீர் கொழும்பு - நீர் கொழும்பு கொச்சிக்கடை - ஏத்துக்கால் - குடாபாடு - சின்னப்பாடு

முந்தல் - கட்டைக்காடு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு

சென்று பாருங்கள்

இவர்கள்

தமது வீட்டில் தமிழ் பேசுகிறார்கள்.

யார் செய்த தவறு?

நம் மூதாதையர்!

நாம் ஒதுக்கினோம்?

மரம் நழுவினால் புல்லை பிடித்தாவது

உயிர் வாழ முனைவது மனித இயல்பு.

அது போல

அவர்களை அரவணைத்தவர்களோடு

அவர்கள் ஐக்கியமாகிப் போனார்கள்!

தமிழ் பேசாதவர்கள் தமிழனல்ல என்றால்

புலம் பெயர்ந்து வாழும் எதிர்கால சந்ததியினர்

அந்தந்த நாட்டவராக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.

மலைநாட்டு தமிழனுக்கு குடியுரிமை கிடைக்காமல்

பண்ணியதும் நாம்தான்.

எமது தேவைகளுக்காக தொப்புள் கொடி உறவு என்று சொல்வதும்

நாம்தான்.

இப்போது கூட என்ன

நாங்கள் சுவிஸ் - லண்டன் - கனடா - அமெரிக்கா

என்றுதானே நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்

நம்மில் யார் சொந்த நாட்டுக்கு போய்

நம்மை நம் நாட்டின் பேரால் அடையாளப்படுத்திக் கொள்கிறோம்?

விமான நிலையத்தில் என்ன சொல்கிறீர்கள்?

I am british.

I am Canadian.

I am Swiss.

நான் சொல்வது உறுத்தவே செய்யும்?

உறுதியாக ஒன்று மட்டும் சொல்வேன்.

நாம் நம்மை மாற்றிக் கொள்வில்லை என்றால்

நம் எதிர்கால புலம் பெயர் குழந்தைகள்

நிச்சயம் தம்மை தமிழர் என்று சொல்லச் சொன்னாலும்

நிச்சயம் சொல்லாது.

புத்தளம் தொடக்கம் நீர் கொழும்பு வரை வாழும்

தமிழர் தம்மை எப்படி சிங்களவர் என்று

அடையாளப்படுத்த எம்மால் தள்ளப்பட்டார்களோ

அது போல

இதுவும் நடக்கும்................!

அவர்களை

அவர்கள் வாழும்

இந்த நாடுகள் நிச்சயம் துரத்தாது.

வேலையே இல்லாது போனாலும்

அரசு பராமரிக்கும் : பார்க்கும்.

நம்மை விட

இந்த நாடுகள் எவ்வளவோ மேல்தான்.

இது இன்று அவர்களது நாடு!

அதை நாம் மறக்கவே கூடாது!

சம்மா கேட்கிறேன்

கலர் கலரா பொய் சொல்லக் கூடாது

வீடு வாங்கியாச்சு

கடை போட்டாச்சு

நிலம் வாங்கியாச்சு

சும்மா இருந்து சாப்பிட தண்டப்பணம்

வேற கிடைக்குது!

இதையெல்லாம் விட்டுட்டு

இப்போ

நம்மில் எத்தனை பேர்

திரும்பி போவீர்கள் என்று சொல்லுங்கள்? :o

தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது! :o

Edited by AJeevan

தீட்டுப்படாமல் ஒழுக்கமாக இருக்கும் போது ஒதுக்கப்பட்டதுகளுக்கு உவர் அஜீவன் ஏன் குதர்க்கமா விளக்கம் கொடுக்கிறார் எண்டு விளங்கவில்லை. அப்ப எங்களுக்கு வயதுக்கு மூத்தாக்கள் செய்தது பிழை எண்ணுறாரோ? :o

கவரிமானின் கருத்துகளில் ஒருவகை உடன்பாடு உண்டு.

தமிழ் பேசுறதுல சந்தோசம் வருமென்றால்

வெள்ளைக்காரன் தமிழ் பேசுவான் என்று நினைச்சா

கப்பல் ஏறினோம்?

இல்லைதானே?

நான் மற்ற இனத்தவர் பற்றி கதைக்கவில்லயே அண்ணா, எத்தனை மொழிகள் தெரிந்தாலும் தங்களது சொந்த மொழியில் பேச முடியாவிட்டால் அது அவர்களிற்கே அவமானம் இல்லையா??? தமிழ்ர் (மற்ற இனத்தவர் இல்லை) என்று சொல்பவர்கள் தமிழ் அறிந்திருக்கவேண்டும் என்ற கருத்தில் தான் அதை கூறி இருந்தேன்..... இந்த விடயத்தை கூட நீங்கள் புரிந்து கொள்ள வில்லை என்பது தான் வியப்பாக இருக்கின்றது...

நீங்கள் இலங்கை பற்றி கூறிய விடயம் எனக்கு புதிதே.... நன்றி.

இதனை நான் விவாதமாக எடுத்து கொள்ளவில்லை.... நான் சொல்வதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதர்க்காகவே இதனை எழுதினேன்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயமா இருக்குது. தாய் மொழியைக் கற்கக் கூடாது என்றோ பேசக் கூடாது என்றோ.. பேசினால் பயன்பாட்டு மொழி அறிவு வளராது என்றோ உலகில் எங்கும் விளக்கம் கொடுக்கல்ல.

சிறுபிள்ளைகளுக்கே வீட்டில் தாய் மொழி ( தமிழ் தாய்க்கு பிறந்த பிள்ளைக்கு தமிழ் தானே தாய் மொழியா இருக்கும்) கற்றுக் கொடுங்கள். அது வளர்ந்து பாடசாலைக்குச் செல்லும் போது தானா ஆங்கிலத்தை அல்லது பிற பாவனை மொழிகளைக் கற்றுக் கொள்ளும்.

புகலிடத்தில் மட்டுமல்ல... தாயகத்திலும் இதுதானே ஐயா நிலை. ஏதோ புதிசா புதினம் காட்டுறீங்க.

தாயகத்தில் பல்கலைக்கழகம் போய் படிக்கனும் என்றால் ஆங்கிலத்தைப் பாவனை மொழியா படிச்சேதான் ஆகனும். இல்ல படிக்க முடியாது. தமிழும் படிச்சே தான் ஆகனும்.

கனடாவிலும் சரி பிற ஆங்கில முதலாம் மொழியாகக் கொண்ட நாடுகளிலும் சரி.. மற்றும் பிற மொழிகளை முதலாம் மொழியாகக் கொண்ட நாடுகளிலும் சரி.. தமிழை தாய் மொழியாத்தான் படிக்க வேண்டாம்.. பாவனை மொழியாப் படிக்கலாம் தானே.

பிரித்தானியா போன்ற நாடுகளில் தமிழ் பெற்றோரின் பிள்ளைகள் ஆங்கிலத்தை முதலாம் மொழியாக தேர்ந்தெடுக்கும் அதேவேளை பிரஷ் படிக்கப் போகுதுகள்.. ஜேர்மன் படிக்குதுகள்.. ஸ்பானிஸ் படிக்கினம்.. அதைப் பெருமையாச் சொல்லினம்.. ஆனால் தமிழ் படிக்கிறது மட்டும்.. அவமானமா தேவையற்றதா இருக்குதாம்.

இருந்தாலும் சைவ ஆலயங்கள் பிரித்தானியா உட்பட புலம்பெயர்ந்த நாடுகளில் சிறுவர்கள் மத்தியில் தமிழ் மொழிக்கல்வியை ஊட்டி வருவதையும் அதற்கு பெற்றோர் வழங்கும் ஆதரவையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். அது தொடரவும் வேண்டும்.

தமிழுக்கு உள்ள சந்தை முக்கியத்துவம் புரியல்ல போல. மொழிபெயர்ப்புத்துறைக்குள் நுழைய விரும்புபவர்கள்.. இப்படி பல மொழிகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதை தாயகத்திலும் சரி.. புகலிட நாடுகளிலும் காணலாம்.

ஆனால் பெற்றோரோ தமிழ் படிப்பிக்க உள்ள சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்க.. பிள்ளைகளால் படிக்க முடியாதுன்னா.. அதற்கு முயற்சியின்மையும் அலட்சியப் போக்கும்...தான் காரணமே அன்றி வேறில்லை. இதை இந்த இளையவர்களும் பெற்றோர்களும் புரிஞ்சுக்கனும்.

மூளை ஒரு மொழியைக் கற்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டால் பிறமொழிகளையும் அது உள்வாங்க காலம் எடுக்காது. ஆனால் முயற்சி வேண்டும். முயற்சி செய்யாமல் மொழித்திறன் வராது வளராது. நாங்க முயற்சி செய்யாததற்கு நொண்டிச் சாட்டுச் சொல்லி.. அதற்கு நியாயம் கற்பிக்கிறது மகா தவறு. அதை தலைமுறை இடைவெளி என்று காட்டிறது.. அதைவிட மோசமானது. :lol::lol:

Edited by nedukkalapoovan

நே. போ அண்ணா நீங்கள் கூறிய கருத்து தான் எனது கருத்தும் கூட... ஆனால் யாருக்கும் என்னுடைய தமிழ்/கருத்து புரியவில்லையோ என்னமோ... :lol::lol::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கனடாவில்தான் இருக்கின்ரேன். இந்தநிகழ்ச்சியை நேரடி ஒலிபரப்பின்போதே பார்த்தேன். என் 16வயது மகனையும் பார்க்கும்படி கூறினேன். பார்த்தான். நான் மிகவும் உன்னிப்பாகப் பார்த்தேன். நல்ல ஒரு நிகழ்ச்சி. அதில் பங்கு கொண்ட நால்வரும் மிகவும் நன்ராகத்தமிழ் பேசுவார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் நடத்தியதின் காரணம் தமிழ்முழுதாகப் புரியாத இளையவர்களுக்கும் கட்டாயம் போகவேண்டும் என்பதர்க்காகவேதான். நாளை 10 மணிக்கு இருக்குது பாருங்கள்

Edited by kuloth

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன எல்லோரும் இந்த நிகழ்ச்சியை தமிழில் செய்தால் நல்லம் ந்ல்லம் எண்டுறியள்???

என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஆங்கலத்தில் செய்ததே சரி ஏனெனில் புலம்பெயர்நாடுகளில்

வசிக்கும் சிறார்களுக்கு மொழி ஒரு பிரச்சினை அவர்களால் புரியக் கூடியதாக இருக்காது

இந்த நிகழ்வின் நோக்கமே இளம் தலை முறை அவர்கள் கூறிய கருத்துக்கள் சென்றடைய வேண்டும்

அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதே. அதனால் தான் அவர்கள் அந்நிகழ்ச்சியை ஆங்கிலத்தில்

ஒளிபரப்பியுள்ளார்கள்.

Edited by iniyaval

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.