Jump to content

கல்கத்தா பிசாசுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
455326217_7884573391590766_1123398618337
 
 
 
கிழித்தெறியப்படும் கவிதைகள்
 
இந்தக் கவிதைகளை எங்கள்
பண்பாடென ஒருகாலத்தில்
நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்
 
புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட
நெறி தவறாமல் நாம்
எம் கவிதைகள் படித்தோம்
 
காலம் உருண்டோடி
இச்சைக் கருவிக்குச் சண்டை போட்டபோது
கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள்
 
சாத்தான்களின் இவ்வுலகில்
இங்கு
யார்மீதும் புகார்களுக்கு இடமில்லை
 
ஆதலால்
 
எங்கள் கவிதைத் தாள்களை
அடிக்கடி இங்கே
பேய்கள் கூடிக் கிழித்தெறிகின்றன
 
அந்தர வெளியில் மிதந்து
காட்சிகள் மட்டுமே வாழ்வென நம்பும்
தலைகீழ் பட்சிகளாய்
எக்கணமும் அவிழ்க்கத் துடிக்கும் வன்மத்துடன்
ஒவ்வொரு தெருவின் ஓரத்தையும்
முகர்ந்து பார்த்தபடி நகரும் நிர்வாண நாய்கள்
 
களியாட்டச் சுகம் தேடும் வேட்கையில்
புணர்வதை மட்டுமே குறியாகக் கொண்டு
குறிகள் நிமிர்த்தி நகக் குறிகள் பதித்து
குரல்வளை நசுக்கும் கொடூர ஓநாய்கள்
 
இரண்டகப் பிண்டங்கள் உலவும்
பெருநகரில்
கவிதைகள் பற்றிய தேடலில்
பிசாசுகள் பேதங்கள் பார்ப்பதில்லை
 
பிண்டம் ஒன்றே குறியெனக் கொண்டு
எங்கள் கவிதைகளை
அவை
எப்போது வேண்டுமானாலும்
நொடிப் பொழுதில் கிழித்தெறிகின்றன.
 
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--- கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’.....!

--- உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!

இவைபோன்ற வன்புணர்வுக் கொலை செய்திகள் வரும் போதெல்லாம் உங்களின் கவிதை மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது ..........!  😢

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2024 at 11:48, suvy said:

மிக்க நன்றி 

இவைபோன்ற வன்புணர்வுக் கொலை செய்திகள் வரும் போதெல்லாம் உங்களின் கவிதை மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது ..........!  😢

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.