Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

palani-murugan-temple-arupadai-veedu-tam

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம்.

பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டில்  உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது.பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுமார் 1 இலட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பழனியில், உலக அளவில் முருகன் மாநாடு நடப்பதால் பழனியே விழாக்கோலம் பூண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1396958

  • கருத்துக்கள உறவுகள்

முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம்

உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருளாளர் பலர் உண்டு. முருகனைப் பற்றிய பலதிற கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதன்முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 பழனியில் 24.08.2024 மற்றும் 25.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

மாநாட்டின் குறிக்கோள்கள்

  • முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல்.
  • முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல் .
  • மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல்.
  • முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து  ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல்.

அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல்.

மாநாடு நடைபெறும் பழனி திருத்தலத்தின்சிறப்புகள் :

  • மாநாடு நடைபெறும் மேன்மைத்தலம் பழனி, இதன் சிறப்புகளில் சிந்தனைக்குரிய சில:
  • முத்தமிழ்க் கடவுள் என்னும் முருகப் பெருமானின் மூன்றாவது படை வீடு திருவாவினன்குடி.
  • முருகனைக் கனவிலும் நனவிலும் கண்டு “அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை” என்று ஏத்துவதுடன் மிக அதிகமான பாடல்களைப் பழனிக்கு அருளியுள்ளார் அருணகிரிநாதர்.
  • நாடோறும் அருவமாக இருமுறை அருந்தமிழால் அகத்தியர் வழிபடுவதாகவும் அருளுகிறார் அருணகிரிநாதர்.
  • ‘தமிழில் பாடல் கேட்டருள் பெருமாளே’ என்கிறது பழனித் திருப்புகழ்.
  • ஏகராகிய முருகப்பெருமானை போகர் கோயில் கட்டி தமிழில் வழிபட்ட இடம் பழனி மலை. அங்கு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது மிகமிகப் பொருத்தம்!
  • https://muthamizhmuruganmaanadu2024.com/objective-tamil/
  • கருத்துக்கள உறவுகள்


பழனியில் இருக்கும் தண்டாயுதபாணி முருகன் சிலை நவபாசாணத்தினால் போகரால் (சித்தர் போகர்) என்றே நம்பப்படுகிறது.

போகர் சீனாவிலும் வாழ்ந்ததாக கதை உள்ளது. tao இசத்தை உருவாக்கியதாகவும், பரப்பியதாகவும் , மரணத்தை தடுக்கும் பாசணத்தை உருவாக்கியதாகவும் , சீன குறிப்பு சொல்கிறது. இது விடவும் குறிப்புகள் இருக்கிறது.

அனால், இருவரும் (சீனாவில் இருந்தவரும், இப்போதைய தமிழ்நாடு இருந்தவரும்) ஒருவரா என்பது தெளிவில்லாமல் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:


பழனியில் இருக்கும் தண்டாயுதபாணி முருகன் சிலை நவபாசாணத்தினால் போகரால் (சித்தர் போகர்) என்றே நம்பப்படுகிறது.

போகர் சீனாவிலும் வாழ்ந்ததாக கதை உள்ளது. tao இசத்தை உருவாக்கியதாகவும், பரப்பியதாகவும் , மரணத்தை தடுக்கும் பாசணத்தை உருவாக்கியதாகவும் , சீன குறிப்பு சொல்கிறது. இது விடவும் குறிப்புகள் இருக்கிறது.

அனால், இருவரும் (சீனாவில் இருந்தவரும், இப்போதைய தமிழ்நாடு இருந்தவரும்) ஒருவரா என்பது தெளிவில்லாமல் உள்ளது. 

ஏ ஆர் முருகதாஸின் 'ஏழாம் அறிவு' படத்தின் கதையும் இப்படி ஒருவர் பற்றிய கதை தான். போதிசத்துவர் என்று போகும். 

ஒன்று கிமு, இன்னொன்று கிபி என்று இவருக்கு இரண்டு வரலாறுகள், தொன்மங்கள் உண்டு. வேலை இடத்தில் சில சீன நண்பர்களைக் கேட்டேன், சிரித்து விட்டார்கள்................  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஏ ஆர் முருகதாஸின் 'ஏழாம் அறிவு' படத்தின் கதையும் இப்படி ஒருவர் பற்றிய கதை தான். போதிசத்துவர் என்று போகும். 

ஒன்று கிமு, இன்னொன்று கிபி என்று இவருக்கு இரண்டு வரலாறுகள், தொன்மங்கள் உண்டு. வேலை இடத்தில் சில சீன நண்பர்களைக் கேட்டேன், சிரித்து விட்டார்கள்................  

நீங்கள் சொல்வது போதிதர்மா (தர்மன்). அவர் சமாதி அடைந்தது சீனாவில் என்றும், அதன் பின் பலகாலத்துக்கு பின் சமாதி அடைந்த இடத்தை சேர்ந்த வணிகர் போதிதர்மனை வடக்கு சீனாவில் ஒரு பாதணியுடன் கண்டதாகவும், வியப்படைந்த வணிகர் அவரை சோதிக்க (போதிதர்மன் தானா என்று) மற்றைய பாதணி பற்றி  கேட்க போதிதர்மன் அவரின் சமாதியை தோண்டி பார்க்க சொன்னதாகவும், பின் வணிகர் சமாதியை அடைந்து தோண்டி பார்த்த போது மற்றைய பாதணி சமாதிக்குள் இருந்ததாகவும், அனால் எந்தவொரு மனித எச்சங்களோ இருக்கவில்லை என்றும்.  


போதிதர்மன் சீனாவில் தொடங்கியதே இப்பொது shaolin temple என்றும் நம்பப்படுகிறது (பொதுவாக ஏற்றுக்கொள்ளபடுவது)  

அங்கிருக்கும் மலையில் இருக்கும் போதி தர்மா குகையை (இதில் போதி தர்மா தவம் இருந்ததாக), youtube இல் இருக்கிறது.

இணைப்பை பார்க்கவும், வேறு youtube விடீயோக்களும் இருக்கலாம்.

மற்றது, போதி தர்மன் பரப்பியது chan பௌத்தம் என்பது பொதுவாக நம்பப்படுவது 

மற்றது போதிதர்மன் உடல்வலுவை  தற்கப்பு ஆயுதமாக பாவிக்க கற்று கொடுத்த்த கலையே இப்பொது kung fu ஆக உருவெடுத்து இருப்பது என்று நம்பப்படுவதும், shaolin temple ஆல் ஏற்றுக்கொள்ளப்படுவதும்.

மற்றது போதிதர்மன் பல்லவ அரச பரம்பரை (தமிழில்)

போதிதர்மா காலம் , சீனாவில் கி.பி 400 - 550 களுக்கு இடையில்.

போதி தர்மா  இப்போதைய ஜப்பான் இலும் பௌத்தத்தை பரப்பியதாக, அது zen பௌத்தம் என்ற பெயரில். 


அனால், போகர் சமாதி அடைந்தது பழனியில். இதில் மிகவும் தெளிவு

போகர் தமிழில் இயற்றிய நூல்கள் உள்ளன.

போகாரின் சீடர் புலிப்பாணி சித்தர்.

போகரின் காலம் கி.மு. சீனாவிலும் போகரை (ஒத்தவரின் ) காலம் கி.மு.

போகரின் பரம்பரை அரச பரம்பரை இல்லை.

இப்படி பல வேறுபாடுகள் 

இவர்களை சொல்லும் சீன குறிப்புகளின் காலமும் வேறு. 
 

 

1 hour ago, ரசோதரன் said:

வேலை இடத்தில் சில சீன நண்பர்களைக் கேட்டேன், சிரித்து விட்டார்கள்................  

(இப்போதைய) சீனர்களுக்கு தெரியாது, ஏனெனில் cpc (குறிப்பாக mao) படித்தவர்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லி அழிப்பும், cpc ஐ பொறுத்தவரை தெரிந்தெடுக்கப்பட்ட வரலாறை படிப்பிப்பதும்.

 
அனால், இப்பொது சீனா திறந்து இருக்கிறது அதன பழைய வரலாற்று குறிப்புகளை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு | முதலாம் நாள்.

 

அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு 2024.  இரண்டாம்  நாள்.

  • கருத்துக்கள உறவுகள்

முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்களை விமர்சிக்கும் தி.க, கம்யூனிஸ்ட் - இது பாஜகவை எதிர்க்கும் உத்தியா? பின்னணி என்ன?

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

பட மூலாதாரம்,@PKSEKARBABU

படக்குறிப்பு, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்த வாரம் நடைபெற்றது கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 31 நிமிடங்களுக்கு முன்னர்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்த வாரம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை நடத்திய இரண்டு நாள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை போன்றவை திமுகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக உள்ளன. அவ்வாறு இருக்க, திமுக அரசு முருகன் மாநாட்டை நடத்துவது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் அந்த விமர்சனங்களை கடுமையாக்கியுள்ளன.

திமுகவின் தாய்கழகமான திராவிட கழகம் மற்றும் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவின் முயற்சியை வரவேற்றுள்ளார்.

தீர்மானங்கள் என்ன?

முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில், ‘முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி’ இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்தவும், அந்த கல்வி நிலையங்களில் ‘சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகள்’ அறிமுகப்படுத்தவும் அரசுக்கு பரிந்துரைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மாணவர்களைக் கொண்டு முருகன் கோயில்களில், ‘கந்தசஷ்டி பாராயணம்’ செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

‘முருகன் மாநாடு - தமிழர் பண்பாட்டு மாநாடு’ - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,DIPR

படக்குறிப்பு, அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியின் போதுதான் என்று கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும், அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருக்காது. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறினார்.

மாநாட்டை வாழ்த்தி பேசிய, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியின் போதுதான் என்று கூறினார்.

“நீதிக்கட்சி ஆட்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசிக் கொண்டவர் தந்தை பெரியார். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர். இந்த மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமில்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாக நடைபெறுகிறது” என்று காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

 

தோழமை இயக்கங்கள் விமர்சனம்

தமிழக முதல்வர் ஸ்டாலின்

பட மூலாதாரம்,DIPR

படக்குறிப்பு, இந்து சமய அறநிலையத்துறை நடத்திய இரண்டு நாள் மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்

திமுகவின் முருகன் மாநாட்டை அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மத அடிப்படையிலான விழாக்களை அரசு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

“இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது” என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாதுகாப்பு, நிதி வரவு - செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத பிரசாரத்திற்கானதல்ல” என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திமுக அரசை சாடியுள்ளார்.

தனது அறிக்கையில் மாணவர்களை கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யவும், சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தவும் பரிந்துரைக்கும் தீர்மானத்தை விமர்சித்த கி.வீரமணி, “இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? இந்து அறநிலையத் துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்புடையது அல்ல, தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் சேகர்பாபு மீதான விமர்சனம்

அமைச்சர் சேகர்பாபு மீதான விமர்சனம்

பட மூலாதாரம்,@PKSEKARBABU

படக்குறிப்பு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (நடுவில் இருப்பவர்)

‘‘கோவில் துறையைப் பாதுகாக்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் இப்போது கோவிலிலேயே குடியிருக்கிறார்” என்று மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவைப் பாராட்டி பேசியிருந்தார்.

அதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய கி.வீரமணி, “அவர் (அமைச்சர் சேகர் பாபு) தனது துறைப் பணிகளில் தேவையானவற்றைத் தாண்டிச் செய்கிறார். அதீத ஆர்வத்துடன் அவர் இருக்க வேண்டாம், இருக்கவும் கூடாது.”

“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தடை இன்னும் நீங்காது தொடரும் நிலை மாறவேண்டும், அதற்குரிய சட்ட நடவடிக்கைகள், நியமனங்கள், புதிய மாணவர் சேர்க்கைகள் போன்ற பணிகளில் அவர் தீவிரம் காட்டவேண்டும்” என்றும் விமர்சித்திருந்தார்.

 

பாஜகவின் வேல் யாத்திரை

2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகன், முருகன் வழிபாட்டுத் தலங்களில் வேல் யாத்திரை நடத்தினார்.

இந்துக்களின் நலன்களை பாதுகாக்க அந்த யாத்திரை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் ஆ.ராசா இந்து மதம் குறித்தும், உதயநிதி ஸ்டாலின் சனதான தர்மம் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானதை அடுத்து, திமுகவை இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று தொடர்ந்து விமர்சித்து வந்தது பாஜக.

முத்தமிழ் முருகன் மாநாட்டை விமர்சித்து பேசிய பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, “சனாதன தர்மம் வேண்டாம், வெட்டி வீழ்த்த வேண்டும் என்று கூறியவர்கள், பழநியில் பால் காவடி தூக்குவதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்கிறார்கள். தமிழ் பண்பாடு என்றால் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகியோர்தான். "

"பெரியாரின் மாடல் தான் திராவிட மாடல் என்று கூறும் திமுக இன்று தமிழ் பண்பாடு என்ற வார்த்தையை உச்சரிக்கிறார்கள், ஒரு நாடகத்தை பழநி மண்ணில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று மற்றொரு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

பாஜகவை எதிர்க்கும் உத்தியா?

பட மூலாதாரம்,DIPR

பாஜகவை எதிர்க்கும் உத்தியா?

தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “தமிழ்நாட்டில், பாஜக தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், சமீப காலங்களில், மாநிலத்தில் குறிப்பிட்டத்தக்க கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டின் இந்து வாக்குகளை பெறுவதற்கு பாஜக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே இப்போது நிலவும் அரசியல் சூழலில் இந்த மாநாடு அவசியமானது” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவின் முயற்சியை வரவேற்றுள்ளார்

“பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வடஇந்தியாவில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் கடவுளையும் மதத்தையும் பயன்படுத்தி மக்களை அரசியல் வாக்கு வங்கியாக மாற்ற முயன்று வருகிறது. அதற்கு இடமளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தும் நோக்கில் அறநிலையத்துறை செயல்பட்டால் அதை வரவேற்கிறோம்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

வரலாற்று பேராசிரியர் கருணானந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முருகனுக்கு மாநாடு நடத்துவது ராமருக்கும் கிருஷ்ணருக்கும் மாற்றான அரசியல் உத்தியாக இருக்கலாம். ஆனால் திமுகவின் வளர்ச்சி என்பது திமுகவுக்கு மதத்துக்குமான உறவைப் பொருத்து அமையவில்லை. மத பிடிப்பு இல்லாததால், மதம் என்ற பெயரில் நடைபெற்ற கொள்ளைகளை, மூடநம்பிக்கைகளை எடுத்துரைத்ததால், நேர்மையானவர்கள் என்று மக்கள் நம்பினர்.” என்கிறார்.

மேலும், “சமூக எழுச்சி இயக்கங்கள் பெரிதாக நடைபெறாத வட இந்தியாவில் மதத்தைக் கொண்டு அரசியல் செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலைமை கிடையாது. கல்லூரிகளில் ஆன்மீக பாடம் நடத்தலாம் என்று கூறுவது மதச்சார்பற்ற அரசுக்கு அழகல்ல, மதத்தை மறுக்கவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” என்றார்.

மேலும் முருகனை தமிழ் கடவுள் என்று கூறுவதைக் குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

“யேசுவை யூத கடவுள் என்று கூற முடியுமா? அல்லாவை அரபிக் கடவுள் என்று கூறலாமா? மதம் அனைவருக்குமானது, மொழியின் பெயரால் பிரிக்கக் கூடாது”, என்கிறார்.

 

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டம் என்ன சொல்கிறது

பட மூலாதாரம்,K. CHANDRU

படக்குறிப்பு, இந்திய அரசியல் சாசன சட்டப்படி மதத்தை பரப்புவது தனி நபரின் உரிமை அதை அரசு செய்ய வேண்டாம் என்கிறார் ஓய்வெற்ற நீதிபதி கே. சந்துரு

இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் இந்து ஆன்மிக நூல்களை பாடமாகச் சேர்க்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்ததை ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு சுட்டிக்காட்டினார்

பிபிசி தமிழிடம் பேசிய சந்துரு “மத நிறுவனம் அல்லது அமைப்பு நடத்தும் கல்வி நிலையத்தில் மதச்சார்பற்ற பாடங்கள் கற்றுக் கொடுத்தால் அதை பாராட்ட வேண்டும் என்று 1963ம் ஆண்டு ‘சித்தாஜ்பாய் எதிர் பாம்பே அரசு’ என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே மதம் சார்ந்த பாடங்கள் இந்தக் கல்லூரிகளில் கட்டாயமில்லை.” என்றார்.

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் நடைபெறும் மத நடவடிக்கைகளை தடுக்கக் கூடாது என்று கூறிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டப்படி மதத்தை பரப்புவது தனி நபரின் உரிமை, அதை அரசு செய்ய வேண்டாம் என்று சுட்டிக்காட்டினார்.

“2026ம் ஆண்டு தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு எதையும் செய்யக் கூடாது. இப்படி செய்வது மிகவும் பிற்போக்குத்தனமானது” என்று சந்துரு தெரிவித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.