Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

24-66c72d6c8f839.jpeg?resize=600,375&ssl

மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட  நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1397031

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் மனைவி அன்று!

மனைவி இறந்தால் உயிரை மாய்க்கும் கணவன் இன்று!!

குழந்தைகள்??????.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Paanch said:

கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் மனைவி அன்று!

மனைவி இறந்தால் உயிரை மாய்க்கும் கணவன் இன்று!!

குழந்தைகள்??????.

அதிக பட்ச மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது..அரளிக்காய் உட்கொண்டு இருக்கிறார்.பிறந்த பிள்ளை தான் பாவம்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, யாயினி said:

அதிக பட்ச மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது..அரளிக்காய் உட்கொண்டு இருக்கிறார்.பிறந்த பிள்ளை தான் பாவம்.

இதற்கெல்லாம் காரணமானவர்கள், நாங்களும் எங்கள் சமூகமுமே, வைத்தியர்களும் மனிதர்கள்தான் என்று எண்ணாமல், கடவுள்களாகப் போற்றி வணங்கியமைதான்.😩

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த விடயத்தில் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் . இந்த சாபம் அந்த வைத்தியர்களையும் சம்பந்த பட்டவர்களையும் வாழ விடாது. மிக கொடுமையான நிகழ்வு .
குறுகிய காலத்திற்குள் பணம் படைக்கவேண்டும் என்று அலையும் வைத்தியர்களை என்ன செய்வது .
சமுதாயம் இப்ப பிழையான பாதையில் செல்கின்றது ....பணம் பணம் ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Dr முரளி வல்லிபுரநாதன் வாட்ஸப்பில் இருந்து..

 

மருத்துவ அலட்சியத்தால் நேரிடும் மரணங்களும் ஊடகங்களது சமூகப் பொறுப்பும்.

மருத்துவ அலட்சியத்தால் மன்னாரில் இறந்த இளம் தாயின் கணவர் நீதி தாமதிக்கப்பட்ட நிலையில் தவறான முடிவினை எடுத்த தகவலானது மனதைப் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது.

தவறான முடிவுகள் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பதுடன் ஊடகங்கள், மருத்துவர் ஒருவர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகிய தரப்பினர் மேலும்  பொறுப்புடன் செயல்பட்டு இருந்தால் இந்த அநாவசிய இறப்புத் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 2014 இல் முதன் முதலில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு 2017இல் மேம்படுத்தப்பட்ட தற்கொலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் பாரிய பொறுப்பை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

குறிப்பாக தற்கொலையை நியாயப்படுத்துவது, தற்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட முறைகளை வெளிப்படுத்துவது, மற்றும் தற்கொலை செய்தவரின் பெயர் விபரங்களை வெளியிடுவது ஆகியவற்றால் சமூகத்தில் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணரும் ஏனையவர்களையும் தற்கொலை செய்யத் தூண்டும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மன்னாரில் இளம் தாயின்  சாவைத் தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகர்கள், வலையொளி (Youtube) ஊடகர்கள் எனப் பலரும் ஊடக ஒழுக்க நெறியினைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக மீறியுள்ளனர். முக்கியமாக இறந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து "யார் குற்றவாளி" என்று கருத்து வெளியிடும் நீதிபதிகளாக ஊடகவியலாளர்கள் குறிப்பாக Youtube பதிவாளர்கள் செயல்படுவது ஏற்கனவே குடும்ப உறுப்பினரின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள உறவினர்களின் மனவேதனையை அதிகரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி அவர்களை மோசமான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது.

இதனாலேயே பல சந்தர்ப்பங்களில் பொறுப்புடன் செயல்படும் ஒரு சிலரைத்தவிர ஏனைய Youtube பதிவாளர்களையும் சமூக ஊடகர்களையும் பொறுப்பற்ற- தமது இலாபத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்படும்- பிணந்தின்னிக் கழுகுகளாக கருத வேண்டியுள்ளது.  

அத்தோடு இவ்விடயத்தில் நேரடியாகத் தன்னார்வ அடிப்படையில் தலையிட்ட ஒரு வைத்தியர் வைத்தியத்துறையின் மீதான தனது நம்பிக்கையீனங்களை சமூகமயப்படுத்தியதால்- அதாவது 'வைத்தியர்களைத் தான் குறைகூறியதால் அவர்கள் தமக்குப் பாதகம் செய்துவிடுவார்கள்' என்ற கருத்தைக் கூறி, 'தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்வதாகவும் தொடர்ச்சியாகக் கூறி வருவதால்'- சமூகத்தில் வைத்தியத்துறையின் தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களும் அச்சத்தால் வைத்திய சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கும் நிலைப்பாட்டினை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். இதன் காரணமாக 'வைத்தியருக்கே ஆபத்து வருமானால் நாம் எல்லாம் எம்மாத்திரம்' என்று அஞ்சி உரிய சிகிச்சைகளைப் பெறாது மக்கள் மரணிக்கும் ஆபத்து அதிகரித்திருக்கிறது.

குறித்த கணவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட பயம் காரணமாக, மருத்துவ உளவளத்துணை எதனையும் நாடாது மரணித்திருக்கக் கூடும். ஆகவே, தாமே குறித்த பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரைப் பாதுகாப்பதாக பகிரங்கமாகக் கூறித்திரியும் அதே வைத்தியர் உண்மையாகவே அக்குடும்பத்தின் நலன்களில் அக்கறை காட்டியிருந்தால் தகுந்த உளவள ஆற்றுகைககள் ஊடாக இந்த மரணத்தினைத் தவிர்த்திருக்கலாம்.

 
மறுபுறம் இளம் தாயின் இறப்பு தொடர்பான விசாரணையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் பெயர்களை ஊடகங்கள் எந்தவித சுய கட்டுப்பாடும் இன்றி வெளிப்படுத்தி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். பணி இடைநீக்கம் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சந்தேகத்துக்குரிய ஊழியர்கள் மீது எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கை ஆகும். இரண்டு மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் அதன்பின் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்பவம் நடந்து 6 மாதங்களுக்குள் விசாரணை பூர்த்தி செய்யப்பட்டு .குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பலர் பின்னர் முறையான விசாரணையில் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான சம்பளத்துடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதை நான் அவதானித்து இருக்கிறேன். எனவே ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவரின் பெயர் விபரங்களை அவர் இன்னமும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நிலையில் ஊடகங்கள் வெளிப்படுத்தி சமூகத்தில் குற்றவாளியாக வெளியே நடமாட முடியாதவாறு செய்வது ஊடகங்களின் ஒழுக்க நெறியை மீறிய அராஜக செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இவரது மரணத்திற்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய கடமை இன்னொரு தரப்பினருக்கும் சம அளவில் உண்டு. கர்ப்பகாலத் தாயார் ஒருவரது இழப்பு எவராலும் ஈடுகட்டமுடியாத இழப்பு. அதனால் குறித்த தாயாரது குடும்பத்தவர்கள் நெருங்கியவர்கள் என அனைவரும் சுகாதாரத்துறையினரது உளவள மருத்துவப் பிரிவினர் மற்றும் தாய்சேய் நலப்பிரிவினர் ஆகியோரால் நெருக்கமான அரவணைப்பு மற்றும் ஆற்றுப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாறு உள ஆற்றுப்படுத்துகைக்குச் சென்ற உளவளத்துணையாளர்கள் சம்பந்தப்பட்ட  குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், சுகாதாரதுறையினர் தொடர்பில் வழங்கப்படும் எதிர்மறையான தகவல்களால் சுகாதாரப் பணியாளர்களை எட்ட வைத்திருக்கவே அக்குடும்பத்தினர் விரும்பினர் என்றும் தெரியவருகிறது.

குறித்த செயற்பாட்டால் சுகாதாரப் பணியாளர்கள் மனச்சோர்வடைந்தும், பொறுப்பற்ற ஊடக வசைச் சொற்களால் அச்சமடைந்தும் போனதால் அக்குடும்பத்தைத் தமது அரவணைப்பில் வைத்திருக்காது விலகியிருக்கலாம்.
 
அதேபோல் ஒரு இணையத் தளத்தில் மன்னார் இறப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்தியர் செந்தூரனின் குடும்பப் புகைப்படங்களுடன் பாலியல் ரீதியாகக் கொச்சைப் படுத்தும் கட்டுரைகளை வெளியிடுவது ஊடக தர்மத்துக்கு ஒவ்வாத ஒட்டுண்ணிகளால் இயக்கப்படும் ஊடக மாபியாவின் செயல்பாடாகவே கருதவேண்டியுள்ளது. இது போலவே GMOA மாபியா குழு உறுப்பினர்களினால் இயக்கப்படும் அநாமதேய முகநூல் பதிவுகள், கருத்துக்களைப் பதில் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் தனிநபர்களையும் அவர்களது குடும்பங்களையும் தனிப்பட்ட ரீதியாகத் தாக்கும் கேவலமான செயலாக எடுத்துக்கொள்ளலாம்.

இவை ஒருபுறம் இருக்க, மன்னார் இளம் தாயின் அநியாயச் சாவுக்காக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாதது அனைவரின் மனதிலும் பெரும் கிலேசத்தினை எழுப்பியுள்ளது. ஏனைய இடங்களில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்ற வேளையில் மருத்துவ அலட்சியத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் பலரும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தனர். உண்மையில் மன்னாரைச் சேர்ந்த சட்டவாளர்களும் ஏனைய மன்னார் சமூக செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் ஏழைகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்காத இந்தக் கேவலமான நிலையை எண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும் [Justice delayed is justice denied] என்பது ஒரு சட்ட அறம் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் மனத்தில் இருத்தி விரைவான நீதியைப் பெற முற்படுவதே இழந்த உயிர்களுக்கும் பிஞ்சுக் குழந்தைக்கும் செய்யும் கைமாறாக இருக்கும்.


வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்மையான மருத்துவர்கள், கட்சி அரசியல் செய்யாத சட்டத்தரணிகள், சமூக நீதிக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊறுபடும் நிலையில் உள்ள பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு தன்னார்வ சுயாதீனக் கட்டமைப்பினை மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தி வைத்தியசாலைகளில் இடம்பெறும் ஒவ்வொரு உயிரிழப்பிலும் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.. மருத்துவ அற நெறியை [medical ethics] கற்பிக்கும் ஆசிரியர் என்ற வகையில் நான் எப்போதும் எனது பக்கச்சார்பற்ற ஆலோசனைகளை வழங்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான எழுச்சி பாதிக்கப்படும் பிராந்தியங்களில் இருந்து உருவாக வேண்டும். அதன் மூலமாகவே வவுனியா உட்பட வட பகுதியில் தொடர்ச்சியாக கவனக்குறைவு காரணமாக இடம் பெறும் தாய் மற்றும் சிசு மரணங்கள் தவிர்க்கப்படலாம்.

நன்றி 

Dr முரளி வல்லிபுரநாதன் 
சமுதாய மருத்துவ நிபுணர் 
25.8.2024

 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்மையான மருத்துவர்கள், கட்சி அரசியல் செய்யாத சட்டத்தரணிகள், சமூக நீதிக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊறுபடும் நிலையில் உள்ள பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு தன்னார்வ சுயாதீனக் கட்டமைப்பினை மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தி வைத்தியசாலைகளில் இடம்பெறும் ஒவ்வொரு உயிரிழப்பிலும் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முன்வரவேண்டும்..

சமுதாய மருத்துவ நிபுணர் Dr. வல்லிபுரநாதன் அழகாகச் சொல்லி இருக்கின்றார்.

வைத்திய சிகிச்சையில் தவறு நடந்தால் கேட்கப்படல் வேண்டும்.கண்டிக்கப்பட வேண்டும். இனி அதுபோல் தவறுகள் நிகழாத நிலை வரவேண்டும். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இங்கே எங்களிடம், பாதிக்கப்பட்டவர், அவர் உறவுகள் பற்றிய அக்கறைகள் பின் தள்ளப்பட்டு விடுகிறது. பிரச்சினையை மட்டும் தூக்கிப் பிடித்து  ஊதிப் பெரிதாக்கி சமூகமாக நாங்கள் செய்ய வேண்டிய மற்றவைகளை மறந்து போகிறோம்.

உலகமெங்கும் வைத்தியத்துறையில் பல தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் வாழும் யேர்மனியில் கூட கடந்த வருடம், 2679  தவறான முறையில் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் அதனால் 75 உயரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பதியப்பட்டிருக்கிறது

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Kavi arunasalam said:

உலகமெங்கும் வைத்தியத்துறையில் பல தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் வாழும் யேர்மனியில் கூட கடந்த வருடம், 2679  தவறான முறையில் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் அதனால் 75 உயரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பதியப்பட்டிருக்கிறது

எனது சுவிஸ் உறவுடன் சிந்துஜா கணவர் பற்றி பேசிய போது அவரும் அங்கே நடைபெறுகின்ற மோசமான மருத்துவ தவறுகளை குறிப்பிட்டார். மற்றும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களே தங்களுக்கு மருத்துவ தவறுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.