Jump to content

வாழை படத்தின் நிஜ ஹீரோயின் எப்படி இருக்கிறார்? இரண்டு கால்களையும் இழந்த பனிமாதாவின் கண்ணீர் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி . ..........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக மேலும் ஒரு வீடியோ பார்த்தேன் :

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பாட வைத்து ஏமாற்றிய இயக்குநர்! | 'வாழை' படத்தில் பேசாததை பேசுவோம் | சித்தன் ஜெயமூர்த்தி

 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,சோமசுந்தரம் இணைப்புகளுக்கு நன்றி.

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்காவில் டிரம்ப், புஷ் இருவரும் மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றும் அதிபரானது எப்படி? படக்குறிப்பு, அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. 15 செப்டெம்பர் 2024, 07:02 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்ற வேட்பாளர், வெற்றியாளராக முடியாது. ஏனென்றால், வாக்காளர்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேர்ந்தெடுப்பது எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுதான். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அமெரிக்க மக்கள் யாருக்கு வாக்களிக்கின்றனர்? நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் அல்லது குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கே மக்கள் தங்களது வாக்கைச் செலுத்துவர். ஆனால் உண்மையில் இந்த வாக்குகள் அனைத்தும் வாக்காளர் குழுவில் கமலா ஹாரிஸ் அல்லது டொனால்ட் டிரம்ப் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர் குழுவின் உறுப்பினர்களை நோக்கியே செலுத்தப்படுகிறது. 'காலேஜ்' என்பது கூட்டுப் பணி செய்யும் ஒரு குழுவைக் குறிக்கிறது. இந்த வாக்காளர் குழுவின் பணி என்பது அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்ந்தெடுப்பதாகும். தேர்தல் நடைபெற்ற ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, இந்தப் பணியைச் செய்வதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர் குழு கூடுகின்றது. வாக்காளர் குழு எவ்வாறு செயல்படுகிறது? ஒவ்வோரு மாகாணத்தின் மக்கள் தொகை அளவைப் பொறுத்தே வாக்காளர் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அமைகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் எவ்வளவு அமெரிக்க காங்கிரஸ் (சபை மற்றும் செனட்) சட்டமியற்றுபவர்களின் எண்ணிக்கை உள்ளதோ அதே அளவில் வாக்காளர் குழுவில் உறுப்பினர்கள் இருப்பார்கள். கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்துதான் வாக்காளர் குழுவில் அதிகமாக உறுப்பினர்கள் (54 ) உள்ளனர். வயோமிங், அலாஸ்கா மற்றும் வடக்கு டகோட்டா (மற்றும் வாஷிங்டன் DC) போன்ற குறைந்த மக்கள்தொகை கொண்ட சில மாகாணங்களில் குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களே உள்ளனர். வாக்காளர் குழுவில் மொத்தமாக 538 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு உறுப்பினருக்கும் தேர்தலில் ஒரு வாக்கு இருக்கிறது. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால் அதிபர் தேர்தலில் வெற்றி பெறலாம். அதிபர் தேர்தலில் ஒரு மாகாணத்தைச் சேர்ந்த எந்த வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறாரோ, அவர்களுக்கே வாக்காளர் குழு உறுப்பினர்கள் சார்பில் அனைத்து வாக்குகளும் செலுத்தப்படுகிறது. உதாரணமாக, டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளைப் பெற்றால், அவர்களுக்கு அந்த மாகாணத்தின் தேர்தல் குழுவின் அனைத்து 40 வாக்குகளும் வழங்கப்படும். அதேபோல, ஒரு வேட்பாளர் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றாலும் அவர் அனைத்து வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளையும் பெறுவார். நாடு முழுவதும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், சில மாகாணங்களில் கடுமையான போட்டிகளின் மூலம் வெற்றி பெறுவதால் ஒரு வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.   வாக்காளர் குழுவின் நிறை, குறைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2000ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ், அல் கோரேவைவிட 5 லட்சம் வாக்குகள் பின்னடைவில் இருந்தாலும் அவர் அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்தார். நிறைகள்: சிறிய மாகாணங்கள் வேட்பாளர்களுக்கு முக்கியமானதாக இருக்கின்றன. வேட்பாளர்கள் நாடு முழுவதும் பயணம் செய்யத் தேவையில்லை ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்படும் பிரச்னை என்பதைக் குறிப்பாகக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண முடியும். குறைகள்: பல வாக்காளர்கள் தங்கள் வாக்குகளுக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதுகிறார்கள் ஸ்விங் மாகாணங்களுக்கே அதிக வலிமை உள்ளது (விளக்கம் கீழே உள்ளது) மக்கள் வாக்குகளை வென்றவர், எலக்டோரல் காலேஜ் தேர்தலில் தோல்வியடையலாம் போலி வாக்காளர்களின் ஆபத்து உள்ளது. இவை குறித்த விளக்கங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்விங் மாகாணம் என்றால் என்ன? பெரும்பாலான மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே கட்சிக்கே தொடர்ந்து வாக்களிக்கின்றன. இதனால்தான் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள், குறிபிட்ட "ஸ்விங் மாகாணங்களை" மட்டும் குறிவைக்கின்றனர். இதுபோன்ற ஸ்விங் மாகாணங்களில் எந்தக் கட்சி வேட்பாளருக்கு வேண்டுமானாலும் மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தக்கூடும். இதனால் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதைவிட இந்த 'ஸ்விங்' மாகாணங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. வரும் நவம்பரில் நடைபெறவுள்ள 2024 அதிபர் தேர்தலில், அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை சிறந்த ஸ்விங் மாகாணங்களாக இருக்கின்றன.   பொது மக்கள் வாக்குகளை இழந்த ஒரு வேட்பாளர் அதிபராகி உள்ளாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆம், கடந்த ஆறு தேர்தல்களில் இரண்டில் பொது மக்களிடமிருந்து குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களே வெற்றி பெற்று அதிபராகி உள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனைவிட சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார். கடந்த 2000ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வென்ற ஜார்ஜ் புஷ் தனது போட்டியாளரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரை விட 5 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார். இதுபோல, 19ஆம் நூற்றாண்டில் மூன்று முறை மக்கள் செலுத்திய வாக்குகளைக் குறைவாகப் பெற்ற வேட்பாளர்கள் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எலக்டோரல் காலேஜ் முறை ஏன்? கடந்த 1787ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்துவதில் அப்போது நிலவிய, நாட்டின் பரப்பளவு மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சாத்தியமற்றதாக இருந்தது. எனவே, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் எலெக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுவை உருவாக்கினார்கள். அதிபரைத் தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் மக்கள் வாக்களிப்பதைவிட, வாக்காளர் குழு மூலம் அவர்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதற்காக, சிறிய மாகாணங்கள் இந்த முறையை ஆதரித்தனர். அடிமைகளை மக்கள் தொகையில் பெரும்பான்மையாகக் கொண்ட தென் மாகாணங்களிலும் இந்த வாக்காளர் குழு முறை ஆதரிக்கப்பட்டது. அடிமைகள் வாக்களிக்கவில்லை என்றாலும், அவர்கள் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்பட்டனர். வாக்காளர் குழுக்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு மாகாணத்தின் மக்கள்தொகை அளவைப் பொறுத்தே அமைவதால், அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் நேரடி பொதுமக்கள் நேரடியாக வாக்களிப்பதைக் காட்டிலும் வாக்காளர் குழு தேர்தலில் தென் மாகாணங்கள் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்தன.   பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தான் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES சில மாகாணங்களில், உறுப்பினர்கள் அவர்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். ஆனால் தற்போது, தங்கள் மாகாணத்தில் மக்கள் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளருக்கே வாக்காளர் குழு உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். ஒரு உறுப்பினர், தங்கள் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால், அவர்கள் "நம்பிக்கையற்றவர்கள்" என்று அழைக்கப்படுவார்கள். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில், ஏழு வாக்காளர் குழு உறுப்பினர்கள் இவ்வாறு வாக்களித்தனர். ஆனால் நம்பிக்கையற்றவர் என்று கூறப்படும் உறுப்பினர்களால் எந்த முடிவும் மாற்றியமைக்கப்படவில்லை. சில மாகாணங்களில், "நம்பிக்கையற்ற" உறுப்பினர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவர்கள் வாக்களிக்காமல் இருந்தாலோ அல்லது மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்தாலோ அவர் மீது வழக்கு தொடரலாம். போலி வாக்காளர் என்றால் என்ன? "போலி வாக்காளர்கள்" 2020ஆம் ஆண்டின் போதுதான் என்ற கருத்து பரவலானது. ஏழு அமெரிக்க மாகாணங்களில் டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினர் சிலர், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் முயற்சியில் அவர்களுக்குச் சாதகமான தேர்தல் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்தனர். அவர்கள் அதிகாரப்பூர்வமாக உள்ள ஆவணங்களைப் போலியாக உருவாக்கி அதில் கையொப்பமிட்டு, நாடு முழுவதும் உள்ள தேர்தல் குழு உறுப்பினர்கள் வாக்களிக்க இருந்த நாளான டிசம்பர் 14ஆம் தேதி அன்று மாகாணத் தலைநகரங்களுக்கு வந்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட சிலரின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கான விசாரணைகள் இன்றுவரை நடந்து வருகின்றன. மக்கள் தேர்தல் வாக்கெடுப்பும் தேர்தல் குழு வாக்கெடுப்பும் இணையாக இருந்தால் என்ன ஆகும்? தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெறவில்லை என்றால், அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபை, அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும். இதுபோல ஒருமுறை மட்டுமே 1824ஆம் ஆண்டின்போது நடைபெற்றுள்ளது. அப்போது நான்கு வேட்பாளர்களுக்குள் வாக்குகள் பிரிந்து எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. அமெரிக்க அமைப்பில் இரண்டு கட்சிகள் மட்டும் தற்போது ஆதிக்கம் செலுத்துவதால், இதுபோல நடக்க வாய்ப்பில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce9zlyn317lo
    • ச் வராது அண்ணை! நமசிவாய---சிவாயநம
    • என்ன ஆத்திரமோ கட்டிப்பிடிச்சு கடிக்குது! நடைப்பயிற்சியின் நன்மை எல்லாம் வீணாப்போச்சே!
    • தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதானது மக்கள் தங்கள் ஜீவிய உரித்தான வாக்கை அவர்களே குழி தோண்டி புதைக்கின்ற ஒரு செயல் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் (15) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பரப்புரையில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஜனநாயகத்திலே ஒவ்வோரு தருணத்திலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வரும் போது, ஒரு பிரஜைக்கு தான் அளிக்கின்ற அந்த புள்ளடி நாட்டிலே மாற்றத்தையும், விருப்பமான ஆட்சியாளனை தேர்ந்தடுக்கின்ற உரித்தை வழங்குகிறது. அவ்வாறானதொரு உரித்தை வீணடிப்பதற்கான பல விதமான மோசடிகளிலே ஒன்று தான் இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம்”   தொடர்ந்தும் அவர் கூறுகையில், https://ibctamil.com/article/tamil-candidate-presidential-election-sumanthiran-1726410417
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.