Jump to content

ஒரே நாளில் 1, 000 தடவை அழைப்பை ஏற்படுத்திய காதலிக்கு சிறை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அதிகரிக்கப்பட்டன தொலைபேசி கட்டணங்கள்!

ஒரே நாளில் 1, 000 தடவை அழைப்பை ஏற்படுத்திய காதலிக்கு சிறை!

பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற நபர் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் குறித்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.  காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் டேவிட் அவருடைய  அழைப்பைத் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார்.

சோபியின் இந்த செயற்பாடுகளால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சோபிக்கு 1 வருடச் சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

https://athavannews.com/2024/1399493

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணைந்த காதலின் தீபத்தை ஏற்ற அந்தப் பெண் 1000 முறை போன் செய்தும் அந்த கல்நெஞ்சம் கொண்ட காதலன் ஒருமுறை கூட எடுக்காததற்கு, அவரையும் அந்தப் பெண்ணுடன் சேர்த்து ஒரே அறையில் அடைத்திருக்க வேண்டும் . ........!  😎

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அணைந்த காதலின் தீபத்தை ஏற்ற அந்தப் பெண் 1000 முறை போன் செய்தும் அந்த கல்நெஞ்சம் கொண்ட காதலன் ஒருமுறை கூட எடுக்காததற்கு, அவரையும் அந்தப் பெண்ணுடன் சேர்த்து ஒரே அறையில் அடைத்திருக்க வேண்டும் . ........!  😎

வெளியில வரேக்க வாயும் வயிறுமாய் வந்திருப்பாள் பாவி 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி சுமா. பூட்டினின் கதையை விழுந்தடித்து பார்த்தவர்கள் இந்தக் கதையை கேட்க தயாராக இல்லையோ?
    • ""சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎 அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁"" 👆இதற்கு இன்னும் பதிலைக் காணோம்…பிசியா  😁
    • North America வில் விற்கப்படும் electronic உபகரணங்கள் மட்டும்தான் இனிப் பாதுகாப்பானவையாக இருக்கும்.   
    • ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க வைக்க நாங்கள் போராடும் வாழ்வாதார விடயங்களையே வரிசைப்படுத்தியிருந்தேன். இவை யாரால் - சிங்கள மக்கள், இஸ்லாமிய மக்கள், தமிழக மீனவர்கள்/முதலாளிகள் - எங்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து எம்மக்கள் எதிர்ப்பு காட்டுவதோ அல்லது தவிர்ப்பதோ என்றில்லை. இவை மிக அடிப்படையானவை, இவை எல்லாவற்றுக்கும் ஒரே விதமான எதிர்ப்பே எங்களால் காட்டப்படுகின்றது. கடலில் மட்டும் அவர்களின் சுயநன்மை கருதி இலங்கை கடற்படை செய்யும் செயல்கள் இன்று எங்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது. ஆனால், எங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் எங்களின் நிலைப்பாடு என்றும் மாறப்போவதும் இல்லை. தமிழக மீனவர்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம் என்று தான் நான் எழுதியிருந்தேன். மற்றவர்கள் கூட செம்புள்ளி, கரும்புள்ளி என்று எழுதியது ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடே தவிர உண்மையான, மனமொத்த நிலைப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன். ஆதவன் செய்திகளுக்கு இருக்கும் அதிகூடிய வரவேற்பை பாருங்கள். அப்படி பொதுவெளியில் செய்திகளையும், கருத்துகளையும் எழுதுவது தான் இன்றைய எழுத்து முறை. பலதும் பொருளற்ற அல்லது பொருள் கொள்ளாத சொலவடைகள். செம்புள்ளி கரும்புள்ளியும் அப்படியே.         
    • இதை மட்டும் தான்  தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவர்கள் செய்கிறார்கள்  அடிபடுங்கள்.  மொட்டையுமடியுங்கள.  சிங்களவருடன். சேர்த்து  ஒற்றை ஆட்சி உறுதியானது   தமிழ் ஈழத்தை கைவிடுங்கள். வடக்கு கிழக்கு இலும். கடலிலும். இலங்கை படையணிக்கள். நிலைகொண்டிருக்கட்டும். 🙏   இவை சிங்களவர்கள். செய்வது   எனவே பிரச்சனை இல்லை   இலங்கை தமிழருக்கு புலிகள் காலத்தில் ஒரு. கொள்கை அதாவது  தமிழ் நாட்டையும்  தமிழக மீனவர்களையும். நன்கு பயன்படுத்தி கொண்டார்கள்    2009 பிற்பாடு. அவர்கள் தேவையில்லை   ஒற்றை ஆட்சியை நடைமுறையில்  ஏற்றுக்கொண்டார்கள்   ஆகவே  அத்து மீறும் ஒவ்வொரு தமிழக மீனவர்களையும். பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பி வைக்கவும்.  குறிப்பு,.....கருணாநிதி உண்ணாவிரதத்தின் போது நடந்து கொண்ட முறை சரி தான்   ஏனெனில் அது அவரது வாழ்க்கை 🙏🙏🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.