Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நேசக்கர அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் கள வாசகர்களே.

nesakaram4ft0.gif

யாழ் இணையத்தளம் கடந்த 9 வருட காலமாக பல இன்னல்களை தாண்டி பல திக்குகளில் இருக்கும் உறவுகளை இணைத்து தனது சேவையை செய்து வருகின்றது. இந்த கருத்துக்களத்தை பொறுத்தவரை ஏனைய கருத்துக்களத்தை போலன்றி பல கருத்தாளர்கள் நீண்ட நாட்களாக கருத்துக்களை எழுதி யாழுடனே இணைந்து உறவுகள் என்று ஒரு வட்டம் போட்டு கருத்துக்களை எழுதி வருகிறார்கள்.

இங்கு அதிகமாக இருக்கும் கள உறவுகள் ஈழத்திலே இந்திய / இலங்கை படைகளின் வீரமான கேவலமான தாக்குதல்களை நேரடியாக சந்தித்தவர்கள், கண்டவர்கள். பலர் குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள். அதனால்த்தான் சுதந்திர தமிழீழத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் புலத்தில் இயந்திர வாழ்க்கையின் மத்தியிலும் யாழ் இணையத்தளத்திற்கு வந்து தங்களின் மனதில் இருப்பவற்றை பிறருடன் கருத்து ரீதியாக பகிர்ந்து வருகின்றதை காண்கூடாக கண்டு வருகிறீர்கள்.

2,3 வருடங்களிற்கு மேலாக கருத்து ரீதியாக உறவுகள் என்ற வட்டத்திற்குள் இருந்த யாழ் கள உறவுகள் சிலர் தங்கள் கரம் யாழ்.களம் ஊடாக கருத்துக்களாக மட்டுமன்றி நேசக்கரமாகவும் மாற வேண்டும் என்று திட்டத்தை முன் மொழிந்தனர்.

திட்டம் பரிசிலிக்கப்பட்டது............... :icon_mrgreen:

தொடரும்.

Edited by Danklas

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சி....

ஒருவரை ஒருவர் பாராது, புனைப்பெயரில் நாள்/கிழமை/மாதம் என்று கருத்து எழுதும் உறவுகளிடம் இத்திட்டம் பற்றி வினாவப்பட்ட பொழுது அவர்களின் பதில் கருத்துக்கள் சாதகமானவையாக இருந்ததுடன் இத்திட்டம் தனிய ஒருதடவை மட்டும் செய்ய கூடிய திட்டமாக மட்டும் இல்லாமல் தொடர்ந்து செய்யப்படும் ஒரு திட்டமா கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்.

அவர்களின் கருத்துக்கள் இதோ....

யோசணை நல்லா இருக்கு.............அதோட எனக்கு ஒரு டவுட் அண்ணே அதாவது ஒவ்வொரு நாட்டிலும் உள்ளவர்களிற்கு ஒருவர் தலைமை தாங்கி இதை நடத்தினா நல்லது தானே அது உங்கள் விருப்பம் எனக்குபட்டதை சொன்னேன்................

என்னால் இயன்றதை நிச்சயம் செய்கிறேன்.............

நன்றி.......... :lol:

*

*

இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன்.

*

*

நல்ல முயற்சி என்னால் முடிந்ததை செய்வேன்'

*

*

நான் எனது பங்களிப்பை கட்டாயம் செய்கிறேன்.... இதை ஒரு நண்ண்பர்கள் ஒரு" கிளப் "பாக விவரித்து விடுங்கள்...

*

*

வணக்கம்

நல்லதொரு முயற்சி வரவேற்கின்றேன்.

என்னால் முடிந்த உதவியினை கட்டாயம் செய்வேன். ஈழம்தான் என் மூச்சாகவும் கனவாகவும் இருக்கின்றது. அம்மாவை பார்க்கவேண்டும் என்ற அவா எப்படியோ அவ்வாறே தாய் மண்ணையும் அந்த மண்ணில் உருண்டு விளையாடவேண்டும். அதற்கு என்னாலான உதவிகள் கட்டாயம் கிடைக்கும்

*

*

திட்டம் வரவேற்கத்தக்கது..!

*

*

அபிவிருத்தித் தேரை இழுக்க நானும் வருகிறேன்.

*

*

நல்லதோர் முயற்சி. மாதாமாதம் பணம் சிறுதொகையாக பங்களிப்பதில் பிரச்சினையில்லை.

நிதியம் ஆரம்பித்து பணம் சேர்த்து அதை எப்படி செலவழிப்பது, என்னென்ன திட்டங்களுக்குப் பயன்படுத்துவது, எப்போது பயன்படுத்துவது, ஒப்புதல் அளிப்பது யார், கணக்கு வழக்குகளை யார் கையாள்வது, எப்படிக் கையாள்வது என்றெல்லாம் பல கேள்விகள் உள்ளன. இவற்றையெல்லாம் சரியான முறையில் ஆவணப்படுத்தினால் பிரச்சினைகள் வராது.

*

*

நல்ல ஒரு முயற்சி.

என்னால் முடிந்த உதவி நிச்சயம் செய்வேன்.

*

*

நான் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன்.என்னால் மாதாந்தம் 50யூறோக்களை பங்களிப்பு செய்ய முடியும்.

*

*

என்னாலும் கேட்கப்பட்ட தொகையில் ஆதரவு தரமுடியாது. ஆனால் ஒரு சிறுதொகையில் இருந்துதான் ஆரம்பிக்க முடியும். நான் வேறு வழியிலும் மாதாமாதம் பணம் செலுத்துகின்றேன். மேலும், மாணவன்...

ஆனாலும் மாதாமாதம் சிறியதொகை தரமுடியும். முதலில் சேமிப்பை எங்கு போடுவது எப்படி போடுவது என்று முடிவெடுத்தால் மாதாமாதம் சிறுதொகை பங்களிப்பு வழங்குவது பிரச்சனை இல்லை.

*

*

யோசனை நல்லதுதான், அதே நேரம் பொதுவாகஉதவி செய்யிறம் எண்டு செய்யாமல்உதாரணமாக தங்கள் பிள்ளைகளை மாவீரர்களாக்கி விட்டு வறுமையில் வாழும் குடும்பங்கள்தாயகத்திற்காக அங்கு நடக்கும் உண்மைகளை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதால் படுகொலை செய்யப்பட்ட நிமலராயன் மற்றும் நடேசன் போன்றவர்களின் குடும்பங்கள் இன்று பொருளாதார ரீதியாக சிரம படுகிறார்கள் அவர்களிற்கும் யாழ் களத்தினூடான திட்டத்தில் உதவிகளை செய்யலாம். அதற்கான உதவிகளை தொடர்புகளை எற்படுத்துதல் என்பன என்னால் கட்டாயம் செய்ய முடியும்மற்றபடி.

*

*

ஆதியை மறந்திட்டாப்போல ஆதியின் ஆதரவும் இவ்விடயத்தில் உண்டு.

*

*

நல்ல விடயம்.

*

*

நல்லமுயற்சி எனது பங்களிப்பி கட்டாயம் இருக்கும், சாத்திரியார் சொன்னது போண்று அவசர அவசிய உதவிதேவைப்படுபவருக்கு, அதாவது உதவி நிறுவனங்களின் பார்வையில் படாத, தாயகத்துக்காக தம்மை ஈர்ந்தவர்களுக்கு இது பயன் பட்டால் மனநிறைவாக இருக்கும்.

*

*

எனது ஆதரவும் உண்டு.

*

*

எனது ஆதரவும் உண்டு (சட்டச்சிக்கல்களை கருத்தில் கொண்டு செயற்படுங்கள்)

*

*

என்னுடைய முழு ஆதரவும் உண்டு....சாத்திரி அண்ணா சொன்ன மாதிரி முதலில் உயிர் நீத்த இன்னும் கஷ்டப்பட்ட கொண்டு இருக்கின்ற ஊடக வியாளர்களுக்கு உதவுவதில் இருந்து எமது நடவடிக்கையை ஆரம்பிக்கலாம்...

*

*

நல்ல முயற்சி. எல்லருடைய கருத்துக்களையும் வாசிக்க இல்லை. 2 வாரமாக யாழ் களத்தை வாசிக்க இல்லையாதலால் யாழில் என்ன என்ன நடந்தது, எதை பற்றி விவாதம் நடந்தது என இப்போ தான் ஒவ்வொன்றாக பார்த்துவருகிறேன். மாதம் மாதம் எவ்வளவு பணம் இடுவது என்பது பற்றி தான் யோசிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை இன்னும் மாணவன் தான். ஆனால் சிறுதொகை உதவி செய்வது கடினமாக இருக்காது என்று தான் நினைக்கிறேன். தொகை எவ்வளவு என்பதை உறுப்பினர்கள் அவரவர் தீர்மானிக்க விடுவதே நல்லது என நினைக்கிறேன்.

*

*

சும்மா அலட்டிக்கொண்டிருக்காமல் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யவேண்டும்.யாழ் நிர்வாகம் ஏதாவது செய்ய வேண்டும்.இப்படியே பயந்து பயந்து வாழ்வது தமிழர்களின் விதியா?

*

*

தொடரும்.... :icon_mrgreen:

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்ளஸ் அங்கிள் கனகாலமாக நான் தளத்திற்கு வரவில்லை ஆதலால்தான் உங்கள் அமைப்பைப்பற்றி அறியல்லை...இந்தமாதம் நான் பங்களிப்பு செய்யவுள்ளேன், விபரத்தை அறித்தாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சி....

நல்லதொரு திட்டம். என்னால் முடிந்த பங்களிப்பை (பணம்) செய்வேன்.

மற்றைய நண்பர்களும் யாழ் நிர்வாகமும் சொல்கிற கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளுறது நல்லது. கருத்துக்கள நிர்வாகம் சொல்வதைப்போல் நீண்டகாலத் திட்டமாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் எனக்கு ஓரளவு தெரியும். குறிப்பா சொல்லவேணும் என்றால் இணையத்தில் அப்படியொன்றை நடைமுறைப்படுத்துவதில் என்னென்ன சிக்கல்கள் வருமென்று எனக்கும் ஓரளவு அனுபவம் உண்டு. நீண்டகாலத் திட்டங்கள் தொடங்கப்பட்டு இடைநடுவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகாரணமாக விலகிச்சென்ற நிலைதான் ஏற்பட்டது. முக்கியமா பண விடயத்தில் அதிகூடிய அக்கறை வேணும். நிதியம் ஒன்று தொடங்கி அதில பணத்தை சேமித்து வைக்கிறது, தேவையான சமயங்களில அதனை பயன்படுத்துறது என்றதெல்லாம் நல்ல விடயம் தான். அதுக்கு மோகன் அண்ணா பொறுப்பேற்கிறதும் நல்ல விடயம் தான். இது நீண்டகாலத்திட்டமாக இருக்கும். ஆனா ஒரு உதாரணத்துக்கு வைப்பம், நாங்கள் இந்தத் திட்டத்த நாளைக்கே தொடங்கிறம். எல்லாரும் பணத்தை அனுப்பி சேமிக்கிறம். அடுத்த மாதம் யாழ் களத்தை மோகன் அண்ணாவால நிர்வாகிக்க முடியாமல் நின்றுபோகுது. என்ன செய்யமுடியும்?

நீங்கள் சொல்கிற மாதிரி ஒரு நீண்டகால நோக்கத்தில ஒரு சங்கத்தை அமைக்கிறதாக இருந்தால் அதை சட்டரீதியாக பதிவு செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது நீங்கள் சங்கம் என்று சொல்வது யாழில் ஒரு குழுவை உருவாக்குவதையா? அப்படியென்றால் அந்தக் குழுவைத் தொடங்குவதற்கு முதல் குழுவின் நோக்கம், செயற்திட்டங்கள் போன்ற விடயங்களை வரையறுப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

ஆனால் வலைஞன் அண்ணா, தயா அண்ணா, மணிவாசகன் அண்ணா, நெடுக்காலபோவான் அண்ணா எல்லாரும் சொன்னதுபோல சின்ன சின்ன திட்டங்களை தேர்ந்தெடுப்பம் முதலில. அதற்கு தேவையான பணத்தை யாழில இருக்கிற நண்பர்கள் எல்லாரும் கொடுப்பம். பணம் மிச்சம் வந்தால், அடுத்து வாற திட்டத்துக்கு அதை பயன்படுத்தலாம். மோகன் அண்ணாவால பொறுப்பேற்க ஏலாட்டி, இதில அனுபவம் இருக்கிற நம்பிக்கைக்குரிய வேற ஒராளிட்ட பொறுப்பை கொடுக்கலாம். நீண்டகாலத் திட்டமாக இல்லாதபடியால் அவருக்கும் சுமை குறைவு. அந்தத் திட்டம் முடிந்தபிறகு அவர் விரும்பினால் விலகிக்கொள்ளலாம். அடுத்தவர் பொறுப்பேற்கலாம். இப்படி மாறி மாறி செய்கிறபோது, ஒவ்வொரு கருத்துக்கள நண்பர்களுக்கும் பொறுப்புணர்வு கூடும். புது அனுபவமும் அதனால் ஏற்படும். கணக்கு வழக்குகளை களத்தில் பொதுவில் வைப்போம். அப்படி செய்தால் எந்த தவறான புரிந்துணர்வும் ஏற்படாது என்று நினைக்கிறேன்.

யாழ் கருத்துக்களத்தில புதுப் பிரிவுகள பிரிக்காமல் (ஏற்கனவே மேல இருந்து கீழ வரைக்கும் உருட்ட வேண்டியிருக்கு) யாழ் செயல் அரங்கத்தையே இதற்கு பயன்படுத்தலாம் அல்லவா?ஏற்கனவே பல செயற்திட்டங்கள் அதற்குள் இருக்கின்றது தானே. அதோட wiki tool ஐயும் நிறுவலாம். அதற்குள் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு தலைப்பைத் தொடங்கி திட்ட வரைபுகளை எழுதிவைக்கலாம். கருத்துக்கள உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு, இத்திட்டத்தில் பங்களிப்பு செய்ய விரும்புபவர்களுக்கு அனுமதி கொடுக்கலாம். யாழ் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் இதற்கு பங்களிப்பு செய்ய விரும்பினால் அதற்கும் ஏதாவது வழி செய்யலாம்.

நாம் இங்கு பெரும்பாலும் இளைஞர்களாக, மாணவர்களாக இருப்பதால் கல்வி, பள்ளிக்கூடம், மாணவர்கள் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழீழத் தாயகம் அங்கீகரிக்கப்பட்டதன் பின் மாணவர்களின் பங்கு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காக அமையும்.

அடுத்த முக்கியமாக விசயம் பணத்தை எப்படி சேர்ப்பது என்பது தொடர்பானது. நான் என்னால் முடிந்த 10யூரோவைத் தருகிறேன். இன்னொருவர் 50யூரோ தருகிறார். இப்படி ஒவ்வொருவரும் தமது பங்களிப்பைச் செய்வார்கள். இந்தப் பணம் என்பது அவர்களின் உழைப்பிலிருந்து ஒரு சிறு தொகையாக இருக்கும். அந்த உழைப்பு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான உழைப்பாக இருக்கும். உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தை எடுப்போம்: ஒரு தந்தை உழைக்கிறார். அவர் உதவி அமைப்பொன்றுக்கு மாதம் ஒருமுறை பணம் கொடுக்கிறார். ஊரில் இருக்கும் தனது உறவுகளுக்கு பணம் அனுப்புகிறார். தனது பிள்ளைகளின் தேவைகளுக்கு பணம் செலவிடுகிறார். தனது வீட்டு + குடும்பத் தேவைகளுக்கு பணத்தை செலவிடுகிறார். இப்படி பல இருக்கும். இவற்றையும் தாண்டி தாயகத்துக்கு தான் இன்னும் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வில்தான் இந்தப் பணத்தையும் தரப்போகிறார். நான் சொல்வது யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒரு தந்தை பற்றி. அதைப்போலத்தான் யாழ் கருத்தக்களத்தில் மாணவர்களாக இருக்கக்கூடியவர்களுக்கு இன்னொரு சூழல். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சூழல். எல்லோருக்கும் எமது தாயகத்துக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்யவேண்டும், அது எமது கடமை என்கிற உணர்வு + பாசம். இந்த மேலதிக பணத்தை எப்படி அவர்கள் சேமிக்கப் போகிறார்கள் அல்லது தரப்போகிறார்கள் (அது 5யூரோவாக இருக்கட்டும் அல்லது 10யூரோவாக இருக்கட்டும்)?

1. தங்களுடைய அன்றாட செலவுகளில் ஏதாவது ஒன்றை மிச்சம்பிடிக்கலாம். இந்த மிச்சம்பிடித்தலை நாம் இந்தத் திட்டத்தோடு தொடர்பு படுத்துவது முதலாவது வழிமுறையாகக் கடைப்பிடிக்கலாம். எப்படி?புகைப்பிடிப்பவர்கள் கருத்துக்களத்தில் இருப்பார்கள். மது அருந்துபவர்கள் இருப்பார்கள். திரையரங்குக்கு போய்த் தென்னிந்தியத் திரைப்படங்கள் பார்ப்பவர்கள் இருப்பார்கள். இதுபோன்றவற்றை குறிப்பிட்ட காலத்துக்கு தவிர்த்து அதனை மிச்சம்பிடித்து ஒரு உதவித் திட்டத்துக்கு உதவலாம். இதன் மூலம் இரண்டுவிடயங்களை நாம் சாதிக்க முடியும்.

2. யாழில் இருக்கும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சில செயற்திட்டங்களைத் தொடங்கி, செயற்படுத்தி, அவற்றை வியாபாரமயப்படுது்துவதன் மூலம் குறிப்பிட்டளவு இலாபத்தை அடையமுடியும். அந்த இலாபத்தை உதவித் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். எப்படி?

* உதாரணமாக பரணி அண்ணா தொடங்கிய சஞ்சிகை விடயம்.

* அதேபோல புலம்பெயர் நாடுகளில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் ஏதாவது ஒரு தயாரிப்பை விற்பதன் மூலம்.

* இணையம் தொடர்பான தமிழில் எழுதுவது சம்மந்தமான மென்பொருட்களை இறுவட்டில் தொகுத்து அதனை தமிழர்களுக்கு விற்பதன் மூலம்.

வெறுமனே பணம் கொடுப்பதோடு நிற்காமல் பயனுள்ளதான விடயங்களையும் இதன் மூலம் செய்யமுடியும். இணையம் என்றால் அரட்டை அடிப்பதற்கும், படம் தரவிறக்குவதற்கும், பாட்டுக் கேட்பதற்கும் என்று நினைப்பவர்களுக்கு இணையம் மூலம் என்னவெல்லாம் பயனுள்ளதாய் செய்யமுடியும் என்பதை யாழ் இணைய நண்பர்கள் ஒருங்கிணைந்து செய்து காட்டலாம்.

வேறு யோசனைகள் தோன்றினால் பிறகு எழுதுகிறேன். :lol:

*

*

களத்தில் இப்போதே குதிக்க நான் றெடி நீங்க றெடியா?

*

*

வணக்கம் உங்கள் திட்டத்தை நான் வரவேற்கின்றேன்...பங்களிப்பு செய்யவும் தயாராகவுள்ளேன்.

என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவியுங்கள்..

இணைவோம் தமிழராய்....வளர்ப்போம் எமது தேசியத்தை..

*

*

நிச்சயமாக! இது எம் கடமை!

கலைஞா, எனக்கும் அள்ளி அள்ளிக்கொடுக்க ஆசைதான்! ஆனால் நீங்கள் சொன்ன மாதாந்த சம்பளம் வாங்க எனக்கு இன்னும் வயசு போக வேண்டும்! :lol: ! இப்பத்தானவேலை தொடங்கி இருக்கிறேன். !

*

*

தல இருக்க வால் ஆடக்கூடாதெல்லோ ..அதான் பேசாம இருந்தேன்..

நானும் பங்களிப்பு செய்யிறேன்..

தயவு செய்து..உறுதியா..பின்வாங்காம இருங்கோ..

*

*

ஒரு மாதிரி ஒரு தீர்மானத்துக்கு வந்ததுபோல தெரிகிறது. அதனால் தற்போது எனது கருத்தையும் தெரிவிக்கலாம் என நினைக்கிறேன். மாதாந்தம் தொடர்ந்து என்னால் பங்களிக்க இயலுமா என்பது எனது தேக ஆரோக்கியத்தைப் பொறுத்தது. எனவே, தாங்கள் முதலில் முன்னெடுக்கும் திட்டத்துக்கு எனது பங்களிப்பை நிச்சயமாகச் செய்வேன்

*

*

நான் இப்போதுதான் இதைப் பார்க்கின்றேன். நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்! தொடரட்டும். நானும் முடிந்தளவு உங்களின் பின்னால் வருகின்றேன். :lol::lol:

*

*

வணக்கம் எல்லோருக்கும் நல்ல திட்டம். நானும் முடிந்ததை செய்கிறேன். சிலகாலம் நாட்டில் இல்லாததும் பெரும்பாலும் செய்திபகுதிகளிற்கு மட்டும் வந்து விட்டு போவதால் இந்த பகுதியை நான் கவனிக்கவில்லை.

*

*

என்னுடைய பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும். என் தம்பி மூலம் என்னுடைய சிறு பங்களிப்பும் இருக்கும். உங்கள் முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். இப்படி ஒரு முயற்சியை நடை முறைப்படுத்தும் போது எத்தனை கஸ்டம் வரும் என எனக்கு தெரியும். என்னுடைய குடும்பத்திலும் உங்களை போன்ற நல்லவர்கள் இருக்கின்றார்கள், அவர்களுடைய அனுபவத்தில் கண்டேன். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.

*

மேலும் ராகவா, சினேகிதி, வல்வைசகாரா உட்பட பல உறுப்பினர்கள் ஆதரவை கருத்தில் மட்டும் சொன்னது மட்டுமன்றி செயலிலும் நிறைவேற்றினார்கள்.

பலர் ஒத்துழைப்பு வழங்கிவிட்டார்கள், இதன் பொறுப்பை நிர்வாகம் ஏற்க வேண்டும் என்று பல உறவுகள் அழைப்பு விடுத்தார்கள், ஆனால் சில காரணங்களை கூறிய நிர்வாகம் இந்த திட்டத்துக்கு ஆதரவு இருக்கும் ஆனால் பொறுப்பு ஏற்கமுடியாது என்று கூறிவிட்டது.

இருந்தாலும் இத்திட்டம் ஈழத்திலே கஸ்ரப்படும் எம் மக்களுக்கு என்பதால் பல வழிகளால் சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு திட்டத்தை திடமாக செயற்படுத்த உறுதி பூண்டார் கருத்தாளர்கள்.

தொடரும்.... :icon_mrgreen:

Edited by Danklas

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்திட்டம் பற்றிய முதல் கருத்தை கள உறவு ஒருவர் 16.ஆகஸ்ட்.2007 அன்று தெரிவித்தார். இத்திட்டத்தை பற்றி கதைக்க ஆரம்பித்த 2 வாரங்களுக்குள் ஒரு முடிவெடுக்கப்பட்ட முதலாவது திட்டம் தீட்டப்பட்டது. அதற்கு கிட்டத்தட்ட 25 உறுப்பினர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கினார்கள்.

திட்டம் 1

மட்டக்களப்பில் வைத்து தமிழின தூரோகிகள்/இலங்கை புலனாய்வு படைகளால் படுகொலை செய்யப்பட்ட அமரர் நடேசன் அவர்களின் குடும்பத்துக்கு சிறிய உதவிகளை செய்வதே திட்டம் 1.

அமரர் நடேசனின் வருமானத்தை நம்பி இருந்த அவரின் குடும்பம் நிர்க்கதியற்று நடுத்தெருவில் நிற்கின்றது என்ற செய்தி யாழ்களத்தில் பலருக்கு தெரிந்து இருந்தது. தமிழ் தேசியத்துக்கு ஆதரவா இருந்து துணிந்து செய்திகளை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தமையால் தமிழின துரோகிகள்/இலங்கை அரசாங்கத்தினால் வழமையாக வழங்கப்படும் பரிசை நடேசன் அவர்களும் பெற்றுக்கொண்டார், அவரின் பெயரை பயன் படுத்தி புலம் பெயர் நாடுகளில் இயங்கும் ஒரு சில வானொலிகள் நிதி வசூல் செய்து தங்கள் வானொலியையும் தங்களில் பைகளையும் நிரப்பிகொண்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்றின் மூலம் கிடைக்கப்பெற்றது.

அதனால்த்தான் சிறிய உதவியை யாழ்கள உறுப்பினர்கள் மூலம் நடேசன் குடும்பத்திற்கு நேசரக்கரம் ஊடாக வழங்கினோம். இத்திட்டம் திட்டமிட்டது போல எதுவித சிரமமுமின்றி வெற்றியில் முடிந்தது கள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவரை புரிந்துகொண்டதன் காரணம் தான்.

தற்பொழுது திட்டம் 2 ஆரம்பித்து இருக்கிறோம். அன்புச்சோலை எங்கிற முதியோர் காப்பகத்துக்கு இவ் திட்டத்தை அர்ப்பணிக்க முடிவெடுத்துள்ளோம். இத்திட்டம் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்..........

நன்றி வணக்கம். :icon_mrgreen:

மேலும் நேசக்கர அமைப்பு பற்றிய பிற கருத்துக்களை அறிய http://www.yarl.com/forum3/index.php?showtopic=27323

Edited by Danklas

ஓ வெற்றிகரமா முடிஞ்சிட்டுதா முதலாவது பங்களிப்பு நல்ல விசயம்.

தொடர்ந்து செய்வோம் இந்த திட்டத்தை முன் மொழிந்த டண் திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்ட சாத்திரி மற்றும் திட்டத்துக்கு பங்களிப்பு செய்த குழுத்தலைவர்கள் பங்களிப்பு செய்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் வந்தோம் கருத்தெழுதினோம் அரட்டை அடித்தோம் என இல்லாமல் அண்மைகாலமாக களம் கட்டுகோப்போடு இயங்குவதோடு மட்டுமல்ல நல்ல திட்டங்களையும் செயற்படுத்தும் எமது சமூகத்தின் அபிவிருத்திக்கு பாடுபடும் இணையமாக எம்மவரை ஒருங்கிணைக்கும் இணையமாக இருக்கும் யாழில் நானும் உறுப்பினன் என்ற ரீதியில் பெருமை அடைகின்றேன் தொடர்ந்து செய்வோம் வாசகர்களாக இருக்கும் உறவுகளும் மற்றய உறவுகளும் முடிந்தளவு உதவி செய்ய வேண்டுகின்றேன் வாசகர்களாக இருக்கும் உறவுகள் உதவும் எண்ணம் இருக்கும் அவர்களை இணைக்க மோகன் அண்ணாவிடம் கேட்டு எமது அமைப்புக்கு என ஒரு மின்னஞ்சல் ஒன்றினை திறந்து இங்கு பிரசுரித்தால் வாசகர்களும் எம்முடன் இணைந்து கொள்வார்கள் டண் இதனை பரிசீலணை செய்யுங்கள்

ஒருவர் இருவர் செய்வதிலும் பலராக ஒரு அமைப்பாக செய்யும் போது எம்மால் முடிந்த மிகப்பெரிய உதவியினை செய்யலாம் மாவீரர் குடும்பங்களுக்கு நாம் உதவ வேண்டியது எமது வாழ் நாள் கடன் அதனை எப்படியும் ஈடு செய்ய முடியாதது என்றாலும் ஒரு பெரிய உதவியை செய்வதே சாலச்சிறந்தது அதற்கு சக கள உறவுகளும் வாசகர்களும் கைகொடுப்பார்கள் என நினைகின்றோம்

உண்மையில் சந்தோசமாக உள்ளது...தொடர்ந்து வரும் திட்டங்கள் வெற்றியடைய வாழ்த்துக்களும், எங்களாலான பங்களிப்பும் :icon_mrgreen:

**********

Edited by harikalan

முதலாவது திட்டம் வெற்றிகரமாக முடிந்ததை இட்டு மகிழ்ச்சி அதற்காகபாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள் :lol: ...........குறிப்பாக இப்படி ஒரு அமைப்பை உருவாக்கிய சேர்.பொன்.டங்கு மாமா(பிறகு வந்து பப்பாவில ஏத்திறன் என்று சொன்னா பிச்சு போடுவேன் பிச்சு :icon_mrgreen: ) மற்றும் முதலாவது திட்டத்தை வெற்றியாக செயற்படுத்திய சாத்திரி அங்கிள் மற்றும் அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள்!!இன்னும் பல செயற்பாடுகளை இந்த நேசகர அமைப்பின் மூலம் செயற்படுத்துவோம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.