Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி

adminSeptember 18, 2024
IMG-20240918-WA0015.jpg

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த 15 விரிவுரையாளர்களை விமர்சித்து யாழ் பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
 
https://globaltamilnews.net/2024/206845/

  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, கிருபன் said:

 பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது

"யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி" என்றால் என்ன அர்த்தம்?

தேர்தல் பற்றிய சங்கத்தின் நிலைப்பாடு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பொது வெளியில் இவ்வாறு தனி நபர்களின்  புகைப்படங்களை வெளியிட்டு,  அவர்களை துரோகிகள் என்று  வசைமாரி பொழிவதும், அதை ஒரு இணையத்தளம் எந்த வெட்கமும் இன்றி பிரசுரிப்பதும் எந்த வகையில் நியாயம்.  இது பக்கா காட்டுமிராண்டித்தனம் இல்லையா?  

இத்தனைக்கும் இவர்கள் செய்த குற்றம் என்ன?  தாம் விரும்பிய வேட்பாளரை ஆதரிப்பது குற்றமா?

 தேர்தலில் தனக்கு விரும்பிய வேட்பாளரை ஆதரித்தற்காக  அவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி பொதுவெளியில் அவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களை அச்சுறுத்துவது தான் தேசியமா?  இதற்கான உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்?  

இது அவர்களது தனியுரிமையை மீறும் செயல் அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முகநூல் பதிவு (தாயகத்தில் இருந்து)

விடுதலைப்போராட்ட காலத்தில் மாணவர்கள் ஆசிரியர் சங்கங்கள் ஆதரவாக நிற்க அதிலிருந்து பிரிஞ்சு பத்துபதினைஞ்சு பேர் தனியா ஒளிச்சிருந்து அரசுக்காக அறிக்கை விட்டுக்கொண்டிருந்தனர் அதனை இலங்கை அரச ஊடகங்கள் பெரிது படுத்தி ஒலிபரப்பி வந்தன. 

அது போலவே தற்போதும் பல்கலைக்கழக சமூகம் மாணவர் ஒன்றியங்கள் தமிழ்ப்பொது வேட்பாளருக்குரிய நிலைப்பாட்டை எடுத்திருக்க சுமந்திரனை சந்தித்த சில பிரகிருதிகளின் ஏற்பாட்டில் 15 விரிவுரையாளர்கள் இணைந்து அறிக்கை விட்டிருக்கின்றனர் . தமிழ்மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அவர்களுக்கான அநீதிகளின் போது ஒருபோதும் இவர்கள் ஒரு சிறு துரும்பையேனும் எடுத்து போட்டிருந்ததில்லை. அப்படியிருக்க மக்களின் திரட்சியை கண்டு பொறுக்காமல் தங்களின் நலனுக்காக இவ்வாறு அறிக்கையிட்டுள்ளனர். இது பற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. 

இவர்கள் பொது வெளியில் மக்கள் பணியாற்றியதை அல்லது இந்த தேசத்திற்கான ஏதாவது ஆக்கபூர்வமாக ஒருவிடயம் குறித்து ஆய்வினை இது வரை செய்தாக நாமறியோம் இதுவும் கடந்து போகும் .

இவர்களுக்கு தமிழ்மக்களை கோருவதற்கு என்ன அருகதையிருக்கின்றது என புரியவில்லை வெறுமனே கலாநிதிபட்டமும் பேராசிரியர் பட்டமும் போதும் என்று கருதுகின்றார்களா ?:

அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள் 15 பேரும் இவர்கள் தான் . யாருக்காவது தெரியுமா?

Dr. A. Antonyrajan, Department of Geography

Dr. S. Arivalzahan, Department of Mathematics & Statistics

Prof. P. Iyngaran, Department of Chemistry

Dr. S. Jeevasuthan, Department of Sociology

Dr. A. Kadirgamar, Department of Sociology

Prof. R. Kapilan, Department of Botany

Dr. N. Ramaruban, Department of Mathematics & Statistics

Dr. M. Sarvananthan, Department of Economics

Mr. N. Sivakaran, Department of Philosophy

Prof. R. Srikaran, Department of Chemistry

Dr. R. Tharshan, Department of Mathematics & Statistics

Dr. M. Thiruvarangan, Department of Linguistics & English

Dr. N. Varathan, Department of Mathematics & Statistics

Prof. K. Vignarooban, Department of Physics

Mr. S. Wimal, Department of Linguistics & English

https://www.facebook.com/share/p/6dyWwNizuKPNHtWy/

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

முதலில் இந்த பதிவை எழுதிய பேஸ்புக் வித்துவான் யார் என்றும், அவர் வெட்டி புடுங்கியவை எவை எனவும் கூறுங்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்று ஒரு அறிக்கை சமீபத்தில் வந்திருந்தது. அதன் பின்னர், இதற்கு மாறாக, சில பேராசிரியர்களும், கலாநிதிகளும் தனியே அவர்களின் சொந்த வழியில் சென்று விட்டார்கள் போல. அதற்காக இப்படி அந்த தனிநபர்களை தரம் தாழ்ந்து தாக்க வேண்டுமா............. பொதுவான இன்னொரு அறிக்கை ஒன்றை அதே பல்கலைக்கழக சமூகம் வெளியிட்டு விட்டு, முன்னோக்கி போயிருக்கலாம்.

அந்த நாட்களில் பேராசிரியர் கூல் தலைமையில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற பெயரில் கொழும்பிலும், வெளியிலும் இருந்து கொண்டு மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கின்றோம் என்று அறிக்கைகள் விடுவார்கள். ரஜினி திரணகம மரணத்தின் பின். அவர்களின் பல அறிக்கைகள் இலங்கை அரசை விட இயக்கங்களை அதிகம் குறை கூறுவது போன்றும் இருந்தது. ஆனாலும் பாதிப்பு என்று சொல்லத்தக்க வகையில் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இன்னொரு மாற்றுக்கருத்து என்ற அளவில் இருந்தார்கள். அதே போலவே இதுவும். எல்லாவற்றையும் விட, பொது மக்களில் கூட ஒரு பங்கு வாக்குகள் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கும் போகத்தான் போகின்றது. அந்த பொதுமக்களையும் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்று சொல்ல முடியுமா............😌.

எங்களின் ஒரு பல்கலையை தாங்குவதே எங்களுக்கு பெரும்பாடாக இருக்கின்றது............... அநுரகுமாரவிடம் எத்தனை பல்கலைகள் இருக்கின்றன. 'தெற்கு மக்கள் ஒரு மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள். வடக்கு மக்களும் தயாராக வேண்டும். இல்லையேல் விளைவைச் சந்திக்க வேண்டும்........' என்று அவர் சொன்னதும் இந்த நேரத்தில் நினைவில் வருகின்றது..........🫢.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

ஒரு முகநூல் பதிவு (தாயகத்தில் இருந்து)

விடுதலைப்போராட்ட காலத்தில் மாணவர்கள் ஆசிரியர் சங்கங்கள் ஆதரவாக நிற்க அதிலிருந்து பிரிஞ்சு பத்துபதினைஞ்சு பேர் தனியா ஒளிச்சிருந்து அரசுக்காக அறிக்கை விட்டுக்கொண்டிருந்தனர் அதனை இலங்கை அரச ஊடகங்கள் பெரிது படுத்தி ஒலிபரப்பி வந்தன. 

அது போலவே தற்போதும் பல்கலைக்கழக சமூகம் மாணவர் ஒன்றியங்கள் தமிழ்ப்பொது வேட்பாளருக்குரிய நிலைப்பாட்டை எடுத்திருக்க சுமந்திரனை சந்தித்த சில பிரகிருதிகளின் ஏற்பாட்டில் 15 விரிவுரையாளர்கள் இணைந்து அறிக்கை விட்டிருக்கின்றனர் . தமிழ்மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அவர்களுக்கான அநீதிகளின் போது ஒருபோதும் இவர்கள் ஒரு சிறு துரும்பையேனும் எடுத்து போட்டிருந்ததில்லை. அப்படியிருக்க மக்களின் திரட்சியை கண்டு பொறுக்காமல் தங்களின் நலனுக்காக இவ்வாறு அறிக்கையிட்டுள்ளனர். இது பற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. 

இவர்கள் பொது வெளியில் மக்கள் பணியாற்றியதை அல்லது இந்த தேசத்திற்கான ஏதாவது ஆக்கபூர்வமாக ஒருவிடயம் குறித்து ஆய்வினை இது வரை செய்தாக நாமறியோம் இதுவும் கடந்து போகும் .

இவர்களுக்கு தமிழ்மக்களை கோருவதற்கு என்ன அருகதையிருக்கின்றது என புரியவில்லை வெறுமனே கலாநிதிபட்டமும் பேராசிரியர் பட்டமும் போதும் என்று கருதுகின்றார்களா ?:

அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள் 15 பேரும் இவர்கள் தான் . யாருக்காவது தெரியுமா?

Dr. A. Antonyrajan, Department of Geography

Dr. S. Arivalzahan, Department of Mathematics & Statistics

Prof. P. Iyngaran, Department of Chemistry

Dr. S. Jeevasuthan, Department of Sociology

Dr. A. Kadirgamar, Department of Sociology

Prof. R. Kapilan, Department of Botany

Dr. N. Ramaruban, Department of Mathematics & Statistics

Dr. M. Sarvananthan, Department of Economics

Mr. N. Sivakaran, Department of Philosophy

Prof. R. Srikaran, Department of Chemistry

Dr. R. Tharshan, Department of Mathematics & Statistics

Dr. M. Thiruvarangan, Department of Linguistics & English

Dr. N. Varathan, Department of Mathematics & Statistics

Prof. K. Vignarooban, Department of Physics

Mr. S. Wimal, Department of Linguistics & English

https://www.facebook.com/share/p/6dyWwNizuKPNHtWy/

மேல் முகநூல் பதிவுக்கு வந்த பின்னூட்டமொன்று, பலரின் அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது, எனவே இணைத்திருக்கிறேன்.
 
"...உங்கள் பிரச்சனையே இதுதான் நாலு இளசுகள் மைக்கு முன்னுக்கு பேசின விடையம் உங்களுக்கு இனிச்சுது...
ஆனால் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அது அவர்களது கருத்து... (பல்கலையிலேயே பலர் அதை ஏற்கப்போவதில்லை அது வேறு கதை)
இப்போது சில விரிவுரையாளர்கள் மைக்குக்கு முன் பேசிய விடையம் கசக்குது... உடனே அருகதை பற்றிப் பேசுகிறீர்கள்...
நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாட்டில் சொகுசாக இருந்து கருத்துவிடும் பலரைவிட...படித்துவிட்டு புலம்பெயராமல் சொந்த நாட்டில் சேவையாற்றும் இந்த கல்வியாளர்களுக்கு அருகதை இருக்கிறது
பிடிக்காவிட்டால் பாசிசவாத அவயங்களை மூடிக்கொள்ளுங்கள்
குறிப்பு - அவையள் என்ன சொன்னாலும் நாங்க 🧭"
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

முதலில் இந்த பதிவை எழுதிய பேஸ்புக் வித்துவான் யார் என்றும், அவர் வெட்டி புடுங்கியவை எவை எனவும் கூறுங்கள். 😁

அவர் எதையும் வெட்டி புடுங்கி இருக்க மாட்டார். அடுத்தவர் தனியுரிமையிலும் அவர்களின் ஜனநாயக உரிமையில் தலையிடும் காட்டுதர்பார் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து அதன் காரணமாக  மூளை கறள் கட்டிய ஒருவராக இருப்பார்.   

புலம்பெயர் நாடுகளில் தமது அல்லது தமது குடும்பத்தின்   பிரைவேசிக்கு, தனிநபர் உரிமைக்கு ஒரு  ஒரு சிறிய பங்கம் வந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கும்  அளவுக்கு ஜனநாயகத்தின் நலன்களை  அனுபவித்து கொண்டிருக்கும் புலம் பெயர் தேசியர்கள் தாயகத்தில் மட்டும் இவ்வாறான காட்டு தர்பாரை ஊக்குவிப்பார்களாம். 

தமக்கு சுதந்திரம்  இல்லை என்று மூக்கால் அழுது புலம்பி தஞ்சம் பெற்று  மேற்கு நாடுகளில் சுக போக வாழ்ககை வாழ்ந்து கொண்டு  அடுத்தவர் தனியுரிமையை ஒடுக்குவதை ஊக்குவிக்கும் பக்கா சுயநலமிகளே இதனை ஆதரிப்போர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

முதலில் இந்த பதிவை எழுதிய பேஸ்புக் வித்துவான் யார் என்றும், அவர் வெட்டி புடுங்கியவை எவை எனவும் கூறுங்கள். 😁

வரலாற்று ரீதியாக யாழ் பல்கலைக்கழக சமூகம் மிகச்சிறந்த பணிகளை ஆற்றி வருகிறது. அதன் போதும் இவ்வாறான ஓரிரு குழுவினர் அறிக்கைகளை மட்டுமே விட்டு குழப்பங்களை உருவாக்குவது வழமை. அது சார்ந்த பதிவு என்பதால் இங்கே பதித்தேன். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

வரலாற்று ரீதியாக யாழ் பல்கலைக்கழக சமூகம் மிகச்சிறந்த பணிகளை ஆற்றி வருகிறது. அதன் போதும் இவ்வாறான ஓரிரு குழுவினர் அறிக்கைகளை மட்டுமே விட்டு குழப்பங்களை உருவாக்குவது வழமை. அது சார்ந்த பதிவு என்பதால் இங்கே பதித்தேன். நன்றி. 

பொது வேட்பாளருக்கு யாழ் கருத்துக்களத்திலேயே ஏகோபித்த வரவேற்பு இல்லை.

யாழ் பல்கலைக்கழகத்து விரிவுரையாளர்கள்/ஆசான்கள்/பேராசிரியர்களை ஒரு காவாலிக்கூட்டம் நக்கிகள்/துரோகிகள் என வளாகத்தில் சுவரொட்டி அடிப்பது பற்றி பப்பாவில்ஏற்றப்பட்டுள்ள மேன்மை பொருந்திய பொது வேட்பாளர்  அரியேந்திரன் என்ன கருத்து கூறுகின்றார் என அறிய ஆவல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.