Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார்.

இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

பதவிப் பிரமாணம்

இந்நிலையில் திட்டமிட்ட வகையில் அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் - அநுர தரப்பு வெளியிட்ட தகவல் | President Election 2024 Anura Won The Race

கட்சியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் தோல்வி

காலிமுகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் - அநுர தரப்பு வெளியிட்ட தகவல் | President Election 2024 Anura Won The Race

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தேர்தலில் போட்டியில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சஜித் பிரேமதாஸவும் தோல்வி அடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/president-election-2024-anura-won-the-race-1726975591#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழுவின் கைகளில் அநுர குமாரவின் பதவியேற்பு

2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார் என கணிக்கப்படும் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிப் பிரமாண நிகழ்வு குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake), தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பதவியேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில்

பதவியேற்பு விழாவை ஜனாதிபதி செயலகத்தில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கைகளில் அநுர குமாரவின் பதவியேற்பு | Bimal Rathnayake Speaks Akd S Swearing In Plans

நிகழ்விற்கான திகதி மற்றும் நேரத்தை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சிக்கு இல்லை என தெரிவித்த ரத்நாயக்க, தேர்தல்களின் இறுதி முடிவுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறுமா அல்லது நாளை நடைபெறுமா என்பது தேசிய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக இறுதி முடிவுகளை அறிவித்த பிறகே முடிவு செய்யப்படும். 

பதவியேற்பு நேரம் தேசத்திற்கு மங்களகரமான நேரமாக இருக்கும்,'' என்றார்.

இறுதி முடிவு வெளிவந்த பின்னரே முடிவு

வாக்கு எண்ணிக்கையின் வெளிப்படைத்தன்மை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கைகளில் அநுர குமாரவின் பதவியேற்பு | Bimal Rathnayake Speaks Akd S Swearing In Plans

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகத் தெரிவித்த ரத்நாயக்க, தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுவது, இது வழக்கமான நடைமுறை என்பதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

https://ibctamil.com/article/bimal-rathnayake-speaks-akd-s-swearing-in-plans-1726991747

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதியின் செய்தி..


பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பின் விளைவு அல்ல, ஆனால் மில்லியன் கணக்கான உங்களின் கூட்டு முயற்சி!

 

  • கருத்துக்கள உறவுகள்

// நான் இல்லை என்றாலும் இந்தத் தேசத்தில் அரசியல் என்றாலே கசப்பாக இருக்கும் ஒரு தருணத்தில், எனது ஜே.வி.பி. சகோதரர் ஒருவர் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவார். 

அவர் பிறப்பில் செல்வந்தராகவோ, பணக்காரராகவோ இருக்க மாட்டார். //

- ரோஹன விஜேவீர.-

எப்படிப் பட்ட ஒரு தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று நிஜமாகி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

“இது எம்மனைவரதும் வெற்றியாகும்“

Oruvan

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. 

அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். இது எம்மனைவரதும் வெற்றியாகும்.

நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம். 

எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன. இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. 

கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். 

சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம்!

 

https://oruvan.com/sri-lanka/2024/09/22/its-a-win-for-all-of-us

அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்

அனுரவின்  நம்பிக்கை தரும் அருமையான நன்றி உரை. அதற்கான காலம் கனிந்துள்ளது. எவ்வளவு  தூரம் கைகூடும் என இனி வரும் காலங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

அனுரவின்  நம்பிக்கை தரும் அருமையான நன்றி உரை. அதற்கான காலம் கனிந்துள்ளது. எவ்வளவு  தூரம் கைகூடும் என இனி வரும் காலங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

நீங்கள் கூறுவதுபோல் நன்றியுரை புல்லரிப்பதுபோல் உள்ளது. ஆனால் அரசியல் சட்டமாக்கப்பட்டுள்ள பௌத்திற்கான முன்னுரிமை, பிராந்திய அரசியல், அனைத்துலக அரசியல், பொருளாதார நெருக்கடி, மதவாத பௌத்த பீடங்கள் என்பவற்றைக் கடந்து இனவாதத்தைக் களைந்து சமாதானத்தை உருவாக்கி ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவாரா? கட்டியெழுப்புவார் என்று நம்புகின்றீர்களா? தேர்தல் ஆணையாளர் முடிவுகளை அறித்து வெற்றிக்கான ஆவணத்தைக் கையளிக்குமுன் கட்சியரசியலுக்கப்பாலான அனைத்து இலங்கையருக்குமான சனாதிபதியாக இருக்கு வாழ்த்துகின்றேன் என்று கூறிவிட்டே கையளித்தார். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     

 

21 minutes ago, கிருபன் said:

நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம். 

மேற்குறித்த வார்த்தைகளில் பொதிந்துள்ள கருத்துகள் அவதானிப்பிற்குரியனவாகும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, நாளை காலை இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நாளை நடைபெறவுள்ளது.

அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம் | Anurakumara As President Tomorrow Morning 

நிதியமைச்சர் நியமனம்

இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். அதற்கு மேலதிகமாக புதிய ஜனாதிபதியின் கீழ் 15 அமைச்சுப் பொறுப்புகளும் கொண்டுவரப்படவுள்ளன.

சில அமைச்சுகளின் பொறுப்புகள் ஹரிணி மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

அதனையடுத்து இரண்டொரு நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அமைச்சுகளின் நிர்வாகம் அமைச்சு செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

https://tamilwin.com/article/anurakumara-as-president-tomorrow-morning-1727013782

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.