-
Tell a friend
-
Topics
-
Posts
-
By விசுகு · பதியப்பட்டது
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: ஒரு ஏரி. அதன் ஆழத்தில் இரண்டு தனித்துவமான மீன் வகைகள் வெவ்வேறு சமூகங்களாக வாழ்ந்து வந்தன. ஒவ்வொன்றும் அவற்றுக்குச் சொந்தமான பிரதேசங்களுக்குள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. இந்த மீன்கள் ஒவ்வொரு வகையிலும் வித்தியாசமாக இருந்தன - அளவு தோற்றம் மற்றும் நடத்தை. ஒரு சமூகம் குறிப்பாக பெரிய மீன்களைக் கொண்டிருந்தது மற்றொன்று மிகச் சிறிய மீன்களால் ஆனது. எண்ணிக்கையில் பெரிய மீன்கள் அதிகமாகவும் சிறிய மீன்கள் குறைவாகவும் இருந்தன. இரண்டு மீன் குழுக்களும் ஒரே ஏரியில் வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறாக இருந்தது. திடீரென்று அருகிலிருந்த கடல் பெருகியபோது அங்கிருந்த வெள்ளைச் சுறாக்கள் ஏரிக்குள் வந்தன. அவை ஏரியைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. சுறாக்கள் இரண்டு மீன் சமுதாயங்களது வாழிடங்களையும் ஒன்றாக்கின. இடையிலிருந்த தடைகளை அகற்றின. காலம் செல்லச்செல்ல சுறாக்களுக்கு இந்தச் சிறிய ஏரியை வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை எனத் தோன்றவே மீண்டும் தமது கடலுக்கே சென்றுவிடலாம் என அவை முடிவெடுத்தன. இப்போது ஏரி ஒரே ஏரி ஆகிவிட்டது. எண்ணிக்கையிலும் அளவிலும் பெரிய மீன்கள் ஏரியில் சுறாக்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆளத் தொடங்கின. பெரிய மீன்கள் அடிக்கடி சிறிய மீன்களின் இடத்திற்குள் நுழைந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிய மீன்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறிய தடுப்பு வேலியை உருவாக்க முயன்றன. அது சிறிய மீன்களின் பிரதேசத்தை பெரிய மீன்களிடமிருந்து ஓரளவு பாதுகாத்தது. ஆனால் இந்த தடையை அடிக்கடி உடைத்து பெரிய மீன்கள் சுதந்திரமாக நீந்தி வந்து சிறிய மீன் சமூகத்தினரில் அதிகளவானோரை விழுங்கி வந்தது. சிறிய மீன்களுக்கோ வேறு வழிகள் இருக்கவில்லை. காலப்போக்கில் சிறிய மீன்கள் நியாயத்தை கோர ஆரம்பித்தன. தங்கள் பகுதியில் பயமின்றி வாழ்வதற்கான உரிமை மற்றும் சம உரிமை எனப் பேசத் தொடங்கின. பெரிய மீன்களுக்கு தமது கோரிக்கையை முன்வைத்தன. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பெரிய மீன்கள் எதிர்பாராத மற்றும் தைரியமான முன்மொழிவு ஒன்றைச் சொன்னது. "உங்கள் துயரை நாங்கள் உணர்கின்றோம். உங்களுக்கு நீதி வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்று பெரிய மீன்கள் கூறின. "இன்று முதல் நாம் அனைவரும் சமம். யாரும் மற்றவரை விட உயர்ந்தவர்கள் இல்லை இனிமேல் சிறிய மீன்களும் பெரிய மீனாகிய நம்மைப் போலவே உரிமைகளைப் பெறுவர். இனி நாம் இருவரும் சமமாக இருப்பதால் ஏரியில் தனித்தனி பிரதேசங்களோ தடுப்பு வேலிகளோ தேவையில்லை. நாங்கள் இனி ஒரு பெரிய இணக்கமான சமூகமாக வாழலாம்” எனக் கூறின. “முழு ஏரியிலும் இரு பகுதியினரும் சுற்றித் திரியலாம்" என்றெல்லாம் கூறின. முத்தாய்ப்பாக பெரிய மீன்கள் "இவ்வளவு நாளும் பசி வந்தால் நாங்கள் மட்டும்தான் உங்களைச் விழுங்கினோம். இனி உங்களுக்குப் பசித்தால் நீங்களும் எங்களை விழுங்கலாம். அந்த உரிமை இனி உங்களுக்கும் உள்ளது. ஆகவே இனி அனைவருக்கும் சம உரிமை." என கூறின. சிறிய மீன்கள் அப்பாவியாகவும் நம்பிக்கையுடனும் பெரிய மீன்கள் மாறிவிட்டன. அவர்கள் முன்னம்போல் இல்லை என ஏனைய சிறிய மீன்களிடம் கூறின. இறுதியாக நீதி கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் நம்பின. ஆம் கடைசியாக சம உரிமை கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் கருதின. புதிதாகக் கிடைத்த வாக்குறுதிகளுக்காக பெரிய மீன்களைத் தடுக்கும் இயற்கையான தடுப்புகளை சிறிய மீன்கள் அகற்றின. தடைகள் நீங்கியதும் பெரிய மற்றும் சிறிய மீன்கள் இரண்டும் சுதந்திரமாக ஏனையவர்களது பிரதேசங்களுக்குள்ளும் நீந்திச் சென்றன. ஆனால் யதார்த்தம் பயங்கரமாக இருந்தது. பெரிய மீன் எந்தத் தடையும் இன்றி சிறிய மீன்களின் வீட்டு வாசல்களில் வந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் தமக்குக் கிடைத்த சம உரிமைக்கு அமைய பெரிய மீன்களை விழுங்க முயன்றன. ஆனால் அவற்றின் சின்னஞ்சிறிய வாய்களால் பெரிய மீன்களை விழுங்கவே முடியவில்லை. சமத்துவம் பற்றிய வாக்குறுதி ஒரு மாயையே தவிர வேறொன்றுமில்லை என்பதும் பெரிய மீன்கள் எதையும் மாற்றாமல் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு புத்திசாலித்தனமான சூழ்ச்சியைச் செய்து அனைவருக்கும் சம உரிமை என்று பேசி தங்களை ஏமாற்றி விட்டதாக காலஞ்செல்லச் செல்ல சிறிய மீன்கள் புரிந்து கொண்டன. எனவே ஏரியின் வரலாறு முன்பு போலவே தொடர்ந்தது. ஆனால் இப்போது சிறிய மீன்களால் எதுவும் செய்ய முடியவில்லை.😢 https://www.facebook.com/share/p/128h6yV5HDH/ -
எத்தகைய பாத்திரங்களும் புகுந்து விளையாடக் கூடிய அற்புதமான நடிகர். அவரின் இழப்பு திரையுலகுக்கு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
தனித்திரியாக கேளுங்கள். பலர் பதில் அளிப்பார்கள். நான் இலங்கையில் இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டேன்.
-
அவர் இலங்கைப் பல்கலைக்கழகம் போய், பின்னர் சட்டக் கல்லூரி பரீட்சை எழுதினார் என்று தான் விபரங்கள் இருக்கின்றது, கோஷான். நீங்கள் சொல்வது சரியானதே, இலங்கையில் பல்கலைக்கழகம் போவதென்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இன்றாவது ஓரளவு பரவாயில்லை, பல வருடங்களின் முன்னர் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இலங்கையில் நான்கு வருட பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் ஒரு சில மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதியும், காமன்வெல்த் நிதியுதவியும் கிடைக்கும். உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் பொறியியல் பீடத்தில் இருந்து ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். பேராசிரியர் துரைராஜா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோர் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் மேற்படிப்பை படித்தவர்கள். இந்த வகையில் வருடத்தில் ஒரே ஒருவர் என்னும் போது அதற்கு தகுதியடைபவர் மிகச் சிறப்பானவர் என்று இலங்கையில் கருதப்படுகின்றது. ரணிலையும் இந்த வகைக்குள் கொண்டுவர முயற்சிப்பதையே நான் மேலே சொல்லியிருந்தேன்...............
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts