Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"உண்மையில் கிருஷ்ணா ஒரு கடவுளா ? அல்லது அவர் மிகவும் தீய மற்றும் ஏமாற்றும் நபரா?" / "Was Krishna really a god or he was a very evil and deceiving person?"
 
 
கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன.
 
கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர்,  துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
 
உதாரணமாக, பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை வீழ்த்த, சிகண்டியை முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்புகளை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதே போல, துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன். அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார். ஆனால் துரோணர் தனது மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர் தன் கை போர்க் கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் தேரில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்து விட்டார். அப்பொழுது துரோணரின் தலையை திருட்டத்துயும்னன் தன வாளால் வெட்டினான்.
 
எங்கே கிருஷ்ணன்?, எங்கே தருமன்?, எங்கே தருமம்?
 
அப்படியே, கர்ணனை பல சூழ்ச்சிகளால் கொன்றான் கிருஷ்ணன்! உதாரணமாக, எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், சேற்றில் மாட்டிக் கொண்ட தன் தேர் சக்கரங்களை தூக்கி எடுக்க கர்ணன் முயற்சித்த போது, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது என்ற காரணத்தினால், அவரை கொல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆலோசனை கூறினார் . அதன் படி தேர்ச்சக்கரம் தரையில் அழுந்தியதை, கர்ணன் மீண்டும் தூக்கி நிலை நிறுத்தும் நேரத்திற்குள், அருச்சுனன் கர்ணனின் மீது கனைகளை ஏவிக் கொன்றான்!!
 
தன் இலக்குகளை அடைய ஒன்றுக்கு பல முறை, இப்படி கிருஷ்ணன் விதிமுறைகளை மீறியுள்ளார். மகாபாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக படித்தவர்களும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள். அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் கிருஷ்ணர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டு கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
 
பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போதுதான் வதைக்கப்பட்டனர். இவை எல்லாம் பகவத் கீதையில் தர்மத்தை பாதுகாப்பதற்காக தான் அவதாரம் செய்தான், அதை ஒரு புறத்தை தள்ளி வைக்க அல்ல என்ற கிருஷ்ணனின் கூற்றிற்கு முற்றிலும் வேறுபட்டே காணப்படுகிறது
 
 
People consider Krishna as their philosopher, guide, teacher, friend and protector and by no means i am all against Krishna but when it comes to his role in Mahabharat, the feelings are not the same.You may think Krishna as a hero / God who supported the “good” Pandavas in the battle against the so called “evil” Kauravas .But if you dig a little deep you will realize that Krishna's antics were actually evil and deceiving
 
For example ,We find,,Krishna regularly secures victory for the Pandavas side through purely devious means which stand in direct violation of dharma.Though Kunti advice to Krishna that :“Do whatever is good for them in whatever way you see fit, without hurting the Law (dharma) and without deception, instead of safeguarding the law, Krishna instructs the Pandavas to do precisely the opposite. “Casting aside virtue, ye sons of Pandu, adopt now some contrivance for gaining the victory.” This bold statement stands in sharp contrast to Krishna’s familiar statement in the Bhagavad Gita, where he asserts that he has been incarnated in order to safeguard dharma, not to cast it aside.
 
How can a reader of the Mahabharata make sense of a God who encourages atrocious ethical misbehavior among his followers? When Arjuna had unlawfully cut off Bhurisravas’ arm, for instance, Bhurisravas rails against him, “Who indeed would commit such a crime who was not a friend of Krishna?” Here, Bhurisravas’ insight is unambiguous; as he understands it, deception and evil invariably characterize Krishna and afflict those associated with him.
 
Since Krishna couldn’t get Karnan to his side by revealing his true identity , he tried to use the way from the back door by playing with his generous nature. He suggested Lord Indra to meet him in disguise and ask for his golden armor and ear-ring; fearing that it would make him victorious. Karna, knew the man in disguise was Lord Indra, still he obliges him and gives up his armour. Impressed, Lord Indra offers him with “Brahmashtra" in return.
 
Krishna is now worried what Karna would do with the Brahmashtra therefore he sends Kunti as his aid to Karna. Karna in turn gives Kunti his words that he would use the Ashtra only once and never harm Pandavas. Karna did not harm any of the Pandavas and remained true to his words. However, Krishna again played a dirty trick when he met Arjuna in the war. He cunningly brought the chariot down to save Arjuna. Karna had aimed at Arjuna’s neck and not on his waist. Krishna was well aware that Karna would never use the Brahmashastra again. Watching Karna struggle with his chariot, Krishna orders Arjun to attack him but Karna’s dharma for others saved him every time. Krishna knew killing Karna was a difficult task and so he ordered Arjuna to kill him while he was busy struggling with the chariot.
 
So , By killing Karna on the battleground, Krishna actually became a murderer of humanity and a villain by eradicating the potential dharma from the masses ,who used all the wrongful means to justify his cause and claim the victory
 
42872946_10212734879509632_4678408017543168000_n.jpg?stp=dst-jpg_s843x403&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=MDLx_CUFcTQQ7kNvgG_My5z&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AZUBnn5MVDpPf2dnbQfa908&oh=00_AYCf0WK4pIPXpOcyTphzmj2q7A0C-LGIGKg596l-ZzKDog&oe=6725EC06 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு இதிகாச கதைதானே, கதைகளில் கூறப்படும் கதாநாயக விம்பங்களுக்காக சில மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை, மகா பாரதத்தில் பல நாயகர்கள், அனைவரையும் கவர்வதற்காக அமைக்கப்பட்ட பாத்திரங்கள் (இது யாழில் இரு நிலைகள் எடுக்கும் தரப்புகள் தனது தரப்பினை நியாயப்படுத்துவது போல ஒன்று😁) . கண்ணன் பாத்திரம் கொஞ்சம் அங்க இங்கை என அடிபட்டு நெழிஞ்சு போன குடமாக மகா பாரத கதாபாத்திரமாக வந்துள்ளது.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.