Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் !

kugenOctober 4, 2024
 
IMG-20241003-WA0228.jpg

(வி.ரி.சகாதேவராஜா)

 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (4) வியாழக்கிழமை இரவு
காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.

ஆசன ஒதுக்கீடு சின்னம் பற்றி ஓரிரு நாளில் தெரியவரும்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள் , அம்பாறை மாவட்ட நிலைமையில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்தனர் .

கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாக கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கொள்கை அளவில் இணங்கிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் தொடரந்து ஒரு மணி நேரம் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இ.விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் கண.வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

இன்றைய கலந்துரையாடல் முதற்கட்ட வெற்றியாகும் . அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தமிழ் ஆசனத்தை காப்பாற்றும் வகையில் தமிழ் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசி வருகின்றோம். இன்றைய அம்பாறைக்கான கலந்துரையாடலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள். முதற் கட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது . அடுத்து சின்னம், ஆசன பங்கீடு தொடர்பாக விரைந்து ஒரு கலந்துரையாடல் மூலம் ஒரு இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியில் எமது சிவில் சமூக கட்டமைப்பும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதால் மாவட்டத்தில் ஆசனம் இழக்கபடும் என்பதால் தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் காரைதீவில் இடம் பெற்றது என்றனர்.

இங்கு பங்குபற்றிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தல் கூட்டில் தமிழ் தேசிய பரப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைக்க வேண்டாம் என தங்கள் கருத்தை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுத்தும் கலந்து கொள்ளவில்லை என்று இணைப்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்.

எமக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கிடைத்தது. அதாவது சங்கு சின்னத்தில் பொது வேட்பாளருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானதாகும். நாம் தமிழர்கள் ஒன்றாகவே இருக்கிறோம் என்பதை உலகிற்கு சொல்லியிருக்கிறோம்.

அதே ஒற்றுமையை இந்த பாராளுமன்ற தேர்தலிலும் ஒன்றாக பயணிப்போம் என்பதை கூறவேண்டும். திருகோணமலையிலும் இதே ஒற்றுமை ஆயர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆரம்பம் வெற்றி. இனி பொதுச் சின்னம் மற்றும் ஆசன பங்கீடு தொடர்பில் ஓரிரு நாட்களில் கலந்து பேசி முடிவுக்கு வரவுள்ளோம். என்றார்.
 

https://www.battinews.com/2024/10/blog-post_64.html

  • கருத்துக்கள உறவுகள்

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்; ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

04 OCT, 2024 | 09:41 AM
image

அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்  நேற்று  வியாழக்கிழமை (03) இடம் பெற்றது.  

காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.  

இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட நிலைமையில் ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்ததுடன், இன்றைய கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்தனர். 

கொள்கை அளவில் இணங்கிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.  

இன்றைய கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ் மக்கள் பொதுச்சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இ.விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் கண.வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,   

இன்றைய கலந்துரையாடல் முதற்கட்ட வெற்றியாகும் . அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தமிழ் ஆசனத்தை காப்பாற்றும் வகையில் தமிழ் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.  

தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசி வருகின்றோம். இன்றை அம்பாறைக்கான கலந்துரையாடலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள். முதற் கட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது.  

அடுத்து சின்னம், ஆசன பங்கீடு தொடர்பாக விரைந்து ஒரு கலந்துரையாடல் மூலம் ஒரு இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியில் எமது சிவில் சமூக கட்டமைப்பும், தமிழ் மக்கள் பொதுச்சபையும் செயற்பட்டுக்கொண்டிருக்டகின்றது. 

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதால் மாவட்டத்தில் ஆசனம் இழக்கபடும் என்பதால் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் காரைதீவில் இடம் பெற்றது என்றனர். 

இங்கு பங்குபற்றிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தல் கூட்டில் தமிழ் தேசிய பரப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைக்க வேண்டாம் என தங்கள் கருத்தை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

1__5_.jpg

1__7_.jpg

1__10_.jpg

1__15_.jpg

1__13_.jpg

https://www.virakesari.lk/article/195441

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம். தொடரட்டும்.

(இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் மீண்டும் இழக்கப்படும் ஆபத்து!!!

October 5, 2024
IMG-20241004-WA0026-696x524.jpg

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் மீண்டும் இழக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

1994 மற்றும் 2020 களில் அம்பாறை மாவட்டத்தில் ஒற்றுமை இன்மையால் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமை தெரிந்ததே.

இம் முறையும் அதே போன்றதொரு துர்ப்பாக்கிய நிலை உருவாகக் கூடிய களநிலவரம் ஒன்று தென்படுகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது சமூகமாகவுள்ள தமிழர்கள் ஒரு குடையின் கீழ் போட்டியிட வேண்டும். இன்றேல் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பிரதிநிதித்தும் இழக்கப்படும் என்று பொதுக் கட்டமைப்பு உட்பட பல சமூக ஆர்வலர்களும் உரத்த குரலில் கருத்தை தெரிவித்துள்ளார் வைத்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஆறு தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஓரணியில் போட்டியிடுவதென வியாழக்கிழமை இரவு காரைதீவில் இடம் பெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் 24 மணிநேரத்துள் இலங்கை தமிழரசுக் கட்சி தனிவழி போக தீர்மானித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தங்கள் தலைமையில் ஓரணியில் ஒன்றுசேருமாறு கோரி வேட்புமனு விண்ணப்ப படிவத்தை பெற்றுள்ளது.

இந் நிலையில் ஏனைய கட்சிகளும் தனிவழி போனால் சுமார் எட்டு அணிகள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நிச்சயமாக பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும் என்பதை அனைவரும் அறிவர்.
பிரதிநிதித்துவம் தான் குறிக்கோள் என்றால் அனைவரும் இதயசுத்தியுடன் ஒரு அணியில் போட்டியிடுமாறு அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் இறுதி நேர கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG-20241004-WA0038-300x226.jpg

https://www.supeedsam.com/206392/IMG-20241004-WA0035-300x226.jpg

IMG-20241004-WA0025-300x226.jpg

IMG-20241004-WA0032-300x226.jpg

IMG-20241004-WA0034-1-300x226.jpg

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.