Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டது

அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்
  • பதவி, உடல்நலம் மற்றும் அறிவியல் நிருபர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2024 ஆம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ RNA (ஆர்என்ஏ) கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் கண்டுபிடிப்புகள் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதையும், மனித உடல் எவ்வாறு பல்வேறு வகையான திசுக்களால் ஆனது என்பதையும் விளக்க உதவுகிறது. மரபணுக்களில், மைக்ரோ RNA எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி இவர்களின் ஆராய்ச்சி இருந்தது.

அவர்கள் இருவருக்கும் சேர்த்து 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா (£810,000) பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.

 

என்ன ஆராய்ச்சி?

மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள DNA-வில் நமது மரபணு சார்ந்த தகவல்கள் இருக்கின்றது.

எலும்பில் உள்ள உயிரணுக்கள், நரம்பில் உள்ள உயிரணுக்கள், தோலில் உள்ள உயிரணுக்கள், இதயத்தில் உள்ள உயிரணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் இந்த மரபணு தகவல்களை வெவ்வேறு சிறப்பு வழிகளில் பயன்படுத்துகின்றன.

அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி இது எவ்வாறு நடக்கிறது என்பதை விளக்க உதவுகிறது.

உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்கள் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

"இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறையின் முற்றிலும் புதிய முறையை வெளிப்படுத்தியது, இது மனிதர்கள் உட்பட பல உயிரணுக்களால் உருவான உயிரினங்களுக்கு இன்றியமையாததாக மாறியது", என்று இந்த சபை கூறியது.

மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும், எனவே மைக்ரோ RNA உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.

வழக்கத்திற்கு மாறான மைக்ரோ RNA-களின் ஒழுங்குமுறை புற்றுநோய், பிறவி காது கேளாமை மற்றும் எலும்பு கோளாறுகள் போன்ற உடலில் பிரச்னைகள் ஏற்படலாம்.

70 வயதான பேராசிரியர் அம்ப்ரோஸ் மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரியிலும், 72 வயதான பேராசிரியர் ருவ்குன ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியிலும் பணிபுரிகின்றனர்.

 
உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்களை ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்களை ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முந்தைய நோபல் பரிசு வெற்றியாளர்கள்

2023 - கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் (mRNA கோவிட் தடுப்பூசிகளுக்கு வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக)

2022 - ஸ்வாண்டே பாபோ (மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிக்காக)

2021 - டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் (நமது உடல் தொடுதல் உணர்வு மற்றும் வெப்பநிலையை எவ்வாறு உணர்கிறது என்பதற்கான ஆராய்ச்சிக்காக)

2020 - மைக்கேல் ஹூட்டன், ஹார்வி ஆல்டர் மற்றும் சார்லஸ் ரைஸ் (ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக)

2019 - சர் பீட்டர் ராட்க்ளிஃப், வில்லியம் கெய்லின் மற்றும் கிரெக் செமென்சா (செல்கள் ஆக்ஸிஜன் அளவை எவ்வாறு உணர்கின்றன மேலும் அதற்கேற்றபடி எவ்வாறு அவற்றை மாற்றிக்கொள்கின்றன என்பதை கண்டறிந்ததற்காக)

2018 - ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் தசுகு ஹோன்ஜோ (உடலின் நோயெதிர்ப்பு சக்தி மூலம் புற்றுநோயை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதைக் கண்டுபிடித்ததற்காக)

2017- ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் (நமது உடல் எப்படி சிர்க்காடியன் ரிதம் அல்லது கடிகாரத்தை வைத்தது போல செயல்படுகின்றது என்பதைக் கண்டுபிடித்ததற்காக)

2016 - யோஷினோரி ஓசுமி (கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் செல்கள் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்!

ஸ்டாக்ஹோம்: மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் கமிட்டி செயலாளர் இன்று அறிவித்தார். மரபணு செல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றும் மைக்ரோ ஆர்என்ஏ என்ற சிறிய மூலக்கூறினைக் கண்டுபிடித்தற்காக விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அமெரிக்க உயிரியியலாளர்கள் இவர்கள் இருவரும் மைக்ரோ ஆர்என்ஏ மற்றும் படியெடுத்தலுக்கு ( transcription) பின்பு மரபணு வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதில் அதன் பங்களிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தற்காக கூட்டாக உயரிய இந்த விருதினை பெறுகின்றனர். நோபல் கமிட்டி, இவர்களின் கண்டுபிடிப்பு, உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கான அடிப்படை முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன" என்று தெரிவித்துள்ளது.

நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒரே மரபணு மூலக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், தசைகள் மற்றும் நரம்புகள் போன்ற பல்வேறு வகையான செல்கள் பல்வேறு வகையான செயல்களைச் செய்கின்றன. மரபணு ஒழுங்குமுறை செயல்படுகள் மூலம் இது சாத்தியமாகிறது. அப்போது இந்த செல்கள் அவற்றுக்குத் தேவையான மரபணுவை மட்டும் செல்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. அம்ரோஸ் மற்றும் ருக்குன் ஆகியோரது மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்பு, இந்த செயல்பாட்டின் போது புதிய வழியை வெளிப்படுத்தியது. அவர்களது கண்டுபிடிப்புகள் உயிர்கள், குறிப்பாக மனித உயிர்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள முக்கிய பங்காற்றுகின்றன என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க அவரது நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும் (செவ்வாய்க்கிழமை) வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை மறுநாள் (புதன்கிழமை), இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.14-ம் தேதி திங்கள்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளன. நோபல் வெற்றியாளர்களுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.

மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்! | Nobel Prize in Medicine 2024: Victor Ambros, Gary Ruvkun win for microRNA - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
Posted

New-Project-15.jpg?resize=750,375&ssl=1

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு!

2024 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசானது அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மரபணு ஒழுங்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய RNA மூலக்கூறுகளின் புதிய வகுப்பைக் கண்டுபிடித்தமைக்காக அவர்கள் இந்த பரிசினை கூட்டாக வென்றனர்.

வெற்றியாளர்கள் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் £810,000) பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான விருது 1901 முதல் உடலியல் அல்லது மருத்துவத்தில் வழங்கப்படும் 115 ஆவது நோபல் பரிசு ஆகும்.

2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும், அதைத் தொடர்ந்து வேதியியலுக்கான பரிசு புதன்கிழமையும் அறிவிக்கப்படும்.

https://athavannews.com/2024/1402922

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகம் முழுவதும் எத்தனையோ சண்டைகள் நடந்து ஆட்களை ஆட்கள் கொன்று அழித்தாலும், இதைப் போன்ற செய்திகளை வாசிக்கும் போது ஒரு நம்பிக்கையின் கீற்று தெரியும்.

உலகில் பல பல்கலைகளும், சில ஆராய்ச்சி நிறுவனங்களும் பாராட்டுக்குரியவை............👍.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024

nobel-prize-in-physiology-or-medicine-aw

நம் உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லிலும் ஒரே மாதிரியான மரபணு வழிமுறைகள் அல்லது டிஎன்ஏ உள்ளது. இந்த மரபணுக்களில் சில மட்டுமே ஒவ்வொரு ‘செல்’லிலும் வெளிப்படுத்தப்படுகின்றன, இது ‘செல்’லின் தனித்துவமான செயல்பாடுகளைச் செய்யும் புரதங்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

2024ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் (இயற்கை அறிவியல் பேராசிரியர், Massachusetts medical school) மற்றும் கேரி ருவ்குன் (மரபியல் பேராசிரியர், Massachusetts General Hospital & Harvard medical school) ஆகியோருக்கு இந்த முக்கியமான ஒழுங்குமுறை செயல்முறையைச் செய்யும் மைக்ரோஆர்என்ஏ (miRNS அல்லது சிறிய எம்ஆர்என்ஏ துண்டு) என்ற மூலக்கூறைக் கண்டுபிடித்ததற்காகவும், டிரான்ஸ்கிரிப்ஷனலுக்குப் பிந்தைய மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கிற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

2024-Nobel-Prize-in-Physiology-or-Medici

புரதங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள் உயிரணுக்களின் கருவில் உள்ள டிஎன்ஏவில் சேமிக்கப்படுகின்றன. மெசஞ்சர் ஆர்என்ஏக்கள் (mRNA) இந்த வழிமுறைகளை கருவில் இருந்து கருவுக்கு வெளியே உள்ள புரதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றன. மைஆர்என்ஏக்கள் (மைக்ரோஆர்என்ஏக்கள்) குறுகிய குறியீட்டு அல்லாத ஆர்என்ஏக்கள் ஆகும், இவை மரபணு வெளிப்பாட்டிற்கு பிந்தைய டிரான்ஸ்கிரிப்ஷனலை கட்டுப்படுத்துகின்றன.

ஒரு மைக்ரோஆர்என்ஏ பலவிதமான மரபணுக்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் ஒரு  மரபணுவை பல மைக்ரோஆர்என்ஏக்களால் கட்டுப்படுத்த முடியும். மைக்ரோஆர்என்ஏக்களின் ஆரம்ப கால கண்டுபிடிப்பு (எண்பதுகளில்) மரபணு ஒழுங்குமுறையின் புதிய மற்றும் எதிர்பாராத பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களின் ஆரம்பகால‌ ஆராய்ச்சிகள் சிறிய புழுவான C. elegans இல் நடத்தப்பட்டது. பிறகு மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களில் இந்த வழிமுறை கண்டறியப்பட்டது.

Regulation-of-cell-type-specific-functio

மைக்ரோஆர்என்ஏ வின் கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறையில் (gene regulation) ஒரு புதிய துறையை உருவாக்கி இருக்கிறது. டிஎன்ஏவில் உள்ள பல மரபணு வழிமுறைகளில் சில மட்டுமே உடலில் உள்ள பல்வேறு உயிரணுக்களில் செயல்படும் புரதங்களை எவ்வாறு விளைவிக்கிறது என்பதை விளக்குகிறது.

கரு வளர்ச்சி, இயல்பான உடலியல் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் பற்றிய நமது புரிதலுக்கு இவை முக்கியம் என கருதப்படுகிறது.

Complementary-sequence-elements-in-lin-4

மேலும்: Scientific background 2024 – For the discovery of microRNA and its role in post-transcriptional (nobelprize.org)

Evolutionary-conservation-of-the-let-7-R

 

https://solvanam.com/2024/10/07/உடலியல்-அல்லது-மருத்துவத/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

nobel.jpg?resize=750,375&ssl=1

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2024ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசினை பேராசிரியர்களான ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகியோர் தட்டிச்சென்றுள்ளனர்.

செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காகவே அவர்களுக்கு குறித்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில் உள்ள பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கனடாவில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் கெஃப்ரே இ. கிளிண்டனும் பேராசிரியர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1403194

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ChatGPT உருவாக வழிவகுத்த கண்டுபிடிப்புக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

இயற்பியலுக்கான நோபல் பரிசு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜாஃப்ரி ஹிண்டன்
8 அக்டோபர் 2024, 12:46 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியமான கட்டமைப்பான செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள் (artificial neural networks) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், மற்றும் பிரிட்டனில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜாஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு இந்தப் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 😎 அன்று அறிவித்தது.

“இந்த இரு ஆராய்ச்சியளர்களும், இன்றைய இயந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பத்துக்கு அடித்தளமாக இருக்கும் முறைகளை உருவாக்க இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்,” என்று சுவீடனின் அரச அறிவியல் கழகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடி பரிசுத் தொகையை இவர்கள் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ChatGPT-க்கு வழிவகுத்த கண்டுபிடிப்பு

செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்களில் ஜாஃப்ரி ஹின்டனின் முன்னோடி ஆராய்ச்சி ‘ChatGPT’ போன்ற தற்போதைய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் உருவாக்கப்பட வழிவகுத்தது.

செயற்கை நுண்ணறிவில், நரம்பியல் வலைப்பின்னல்கள் என்பவை மனித மூளையைப் போலவே தகவல்களைக் கற்றுக்கொள்வது மற்றும் செயலாக்குவது போன்ற அமைப்புகளாகும்.

ஒரு மனிதரைப் போலவே, அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள இந்த நரம்பியல் வலைப்பின்னல், செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு உதவுகின்றன. இது ‘ஆழ்ந்த கற்றல்’ (deep learning) என்று அழைக்கப்படுகிறது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

செயற்கை நினைவுக் கட்டமைப்பு

தரவுகள், படங்கள் அகியவற்றைச் சேமித்து வைத்து, அவறைத் தேவைக்கேற்ப மறுகட்டமைப்பு செய்யும் ஒரு ‘நினைவுக் கட்டமைப்பை’ ஜான் ஹாப்ஃபீல்ட் உருவாக்கினார்.

ஜாஃப்ரி ஹின்டன், இந்தத் தரவுகள், படங்கள் ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை அடையாளம் காணும் முறையைக் கண்டுபிடித்தார்.

ஜாஃப்ரி ஹிண்டன் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்றழைக்கப்படுகிறார். அவர் 2023-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து தனது பணியை ராஜினாமா செய்தார்.

“இந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இவர்கள் இயற்பியலைப் பயன்படுத்தினர். அதைத் தொடர்ந்து இந்தக் கண்டுபிடிப்புகள் இயற்பியல் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன,” என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸின் உறுப்பினர் ஆண்டர்ஸ் இர்பாக் தெரிவித்தார்.

இந்தக் கண்டுபிடிப்புகள் அணு இயற்பியல், விண்ணியல், காலநிலை மாற்றம், சோலார் செல்கள், மருத்துவ ஸ்கேன்கள் எனப் பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

பரிசு வென்ற ஜாஃப்ரி ஹின்டன், தொழில் புரட்சி எப்படி மனிதர்களின் உடல் வலிமையை மீறிச் சென்றதோ, அதேபோல் தங்கள் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் அறிவு வலிமையை மீறிச் செல்ல உதவின என்றார்.

ஆனால் இந்தக் கட்டமைப்புகள் மனிதர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் அபாயமும் உள்ளது என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தொலைபேசி மூலமாகக் கூறினார்.

"நான் கணிப்பது என்னவென்றால் 5 முதல் 20 ஆண்டுகளுக்குள், AI முழு கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் என்ற சிக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்", என்று ஜாஃப்ரி ஹின்டன் கூறினார்.

கடந்த ஆண்டின் இயற்பியல் பரிசு

கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒளியில் மிகக் குறுகிய, கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.

அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து நாம் புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்தது. பியர் அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன் லூயே ஆகிய 3 விஞ்ஞானிகள் அந்தப் பரிசை பகிர்ந்து கொண்டானர்.

அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பதிவு செய்யவும், புரிந்து கொள்ளவும் உதவக் கூடிய மிகமிகக் குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்குவது எப்படி என்பதை அவர்களது ஆய்வு செய்து காட்டியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'கூகுள் டீப் மைண்ட்' இணை நிறுவனருக்கு வேதியியல் நோபல் பரிசு - எதற்காக?

டெமிஸ் ஹசாபிஸ், புரதம், வேதியியல், நோபல் பரிசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கூகிள் டீப் மைண்ட் இணை நிறுவனர் டெமிஸ் ஹசாபிஸ் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜார்ஜீனா ரன்னார்டு
  • பதவி, அறிவியல் நிருபர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த வருடம் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டெமிஸ் ஹசாபிஸ், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனவனமான ‘கூகுள் டீப் மைண்ட்’-இன் இணை நிறுவனராவார்.

புரதங்கள் என்பன மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாகும். அவை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் காணப்படுகின்றன.

புரதங்களை நன்கு புரிந்துகொள்வது மருத்துவத்தில் பெரும் முன்னேற்றங்களை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரான டேவிட் பேக்கர் அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி புதிய வகை புரதத்தை வடிவமைத்துள்ளார். இந்த முறை மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பல அறிவியல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய புரதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.

புரதம், வேதியியல், நோபல் பரிசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புரதங்கள் என்பன மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை

வேதியியல் துறையில் 'முழுமையான புரட்சி'

"இந்த பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சியாகவும், மிகவும் கௌரவமாகவும்" இருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் டேவிட் பேக்கர் கூறினார்.

லண்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ள ஜான் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இணைந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஏற்கனவே அறிந்த புரதங்களின் வடிவமைப்புகளை கணித்து, 'ஆல்பாஃபோல்ட்2' என்ற கருவியை உருவாக்கினர்.

இந்த கருவி வேதியியல் துறையில் 'முழுமையான புரட்சி' செய்ததாகத் தேர்வு குழு குறிப்பிட்டது. இது தற்போது உலகம் முழுவதும் 20 கோடி புரதங்களை ஆராய பயன்படுத்தப்படுகிறது.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் புதன்கிழமை (அக்டோபர் 9) அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.

வெற்றியாளர்கள் 1.1 கோடி ஸ்வீடிஷ் க்ரோனர், இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் பரிசுத் தொகையை சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

 
டெமிஸ் ஹசாபிஸ், புரதம், வேதியியல், நோபல் பரிசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும், டெமிஸ் ஹசாபிஸ் கணினி வீடியோ கேம் வடிவமைப்பில் பணியாற்றினார்

யார் இந்த டெமிஸ் ஹசாபிஸ்?

பேராசிரியர் ஹசாபிஸ், லண்டனில், கிரேக்கஂ மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தனது பெற்றோருடன் வளர்ந்தார்.

சிறுவயதிலேயே அவர் சதுரங்கத்தில் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்தார். 13 வயதில் ‘மாஸ்டர்’ தரநிலையை அடைந்தார்.

கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும், அவர் கணினி வீடியோ கேம் வடிவமைப்பில் பணியாற்றினார், அதற்காகப் பல விருதுகளை வென்றார்.

பின்னர், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் முனைவர் பட்டத்தை முடித்து, பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார்.

2010-இல் அவர் இணைந்து நிறுவிய இயந்திர கற்றல் நிறுவனமான ‘DeepMind’-ஐ 2014-இல் கூகுள் வாங்கப்பட்டது.

இது, பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த வழிமுறைகளை உருவாக்க, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்துடன் நரம்பியல் அறிவியலைப் பயன்படுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளருக்கு

இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார்.

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 7ம் திகதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேனிற்கு அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 8ம் திகதி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அதேபோல் நேற்று 9ம் திகதி வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் இறந்த நாளான டிசம்பர் 10 ஆம் திகதி, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுடன் நோபல் பரிசு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310548

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/10/2024 at 07:54, கிருபன் said:

 

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024

nobel-prize-in-physiology-or-medicine-aw

நம் உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லிலும் ஒரே மாதிரியான மரபணு வழிமுறைகள் அல்லது டிஎன்ஏ உள்ளது. இந்த மரபணுக்களில் சில மட்டுமே ஒவ்வொரு ‘செல்’லிலும் வெளிப்படுத்தப்படுகின்றன, இது ‘செல்’லின் தனித்துவமான செயல்பாடுகளைச் செய்யும் புரதங்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

2024ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் (இயற்கை அறிவியல் பேராசிரியர், Massachusetts medical school) மற்றும் கேரி ருவ்குன் (மரபியல் பேராசிரியர், Massachusetts General Hospital & Harvard medical school) ஆகியோருக்கு இந்த முக்கியமான ஒழுங்குமுறை செயல்முறையைச் செய்யும் மைக்ரோஆர்என்ஏ (miRNS அல்லது சிறிய எம்ஆர்என்ஏ துண்டு) என்ற மூலக்கூறைக் கண்டுபிடித்ததற்காகவும், டிரான்ஸ்கிரிப்ஷனலுக்குப் பிந்தைய மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கிற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

2024-Nobel-Prize-in-Physiology-or-Medici

புரதங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள் உயிரணுக்களின் கருவில் உள்ள டிஎன்ஏவில் சேமிக்கப்படுகின்றன. மெசஞ்சர் ஆர்என்ஏக்கள் (mRNA) இந்த வழிமுறைகளை கருவில் இருந்து கருவுக்கு வெளியே உள்ள புரதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றன. மைஆர்என்ஏக்கள் (மைக்ரோஆர்என்ஏக்கள்) குறுகிய குறியீட்டு அல்லாத ஆர்என்ஏக்கள் ஆகும், இவை மரபணு வெளிப்பாட்டிற்கு பிந்தைய டிரான்ஸ்கிரிப்ஷனலை கட்டுப்படுத்துகின்றன.

ஒரு மைக்ரோஆர்என்ஏ பலவிதமான மரபணுக்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் ஒரு  மரபணுவை பல மைக்ரோஆர்என்ஏக்களால் கட்டுப்படுத்த முடியும். மைக்ரோஆர்என்ஏக்களின் ஆரம்ப கால கண்டுபிடிப்பு (எண்பதுகளில்) மரபணு ஒழுங்குமுறையின் புதிய மற்றும் எதிர்பாராத பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களின் ஆரம்பகால‌ ஆராய்ச்சிகள் சிறிய புழுவான C. elegans இல் நடத்தப்பட்டது. பிறகு மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களில் இந்த வழிமுறை கண்டறியப்பட்டது.

Regulation-of-cell-type-specific-functio

மைக்ரோஆர்என்ஏ வின் கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறையில் (gene regulation) ஒரு புதிய துறையை உருவாக்கி இருக்கிறது. டிஎன்ஏவில் உள்ள பல மரபணு வழிமுறைகளில் சில மட்டுமே உடலில் உள்ள பல்வேறு உயிரணுக்களில் செயல்படும் புரதங்களை எவ்வாறு விளைவிக்கிறது என்பதை விளக்குகிறது.

கரு வளர்ச்சி, இயல்பான உடலியல் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் பற்றிய நமது புரிதலுக்கு இவை முக்கியம் என கருதப்படுகிறது.

Complementary-sequence-elements-in-lin-4

மேலும்: Scientific background 2024 – For the discovery of microRNA and its role in post-transcriptional (nobelprize.org)

Evolutionary-conservation-of-the-let-7-R

 

https://solvanam.com/2024/10/07/உடலியல்-அல்லது-மருத்துவத/

 

எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறியள். இந்த தசைச்சிதைவுநோய்க்கு (muscular dystrophy) ஒரு மருந்தைக் கண்டுபிடியுங்கோ

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, வாதவூரான் said:

எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறியள். இந்த தசைச்சிதைவுநோய்க்கு (muscular dystrophy) ஒரு மருந்தைக் கண்டுபிடியுங்கோ

நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Nihon-Hidankyo-2-769921.jpg?resize=750,3

ஜப்பானைச் சேர்ந்த பிரபல அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு கடந்த  2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது.

இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டதில் உயிர் தப்பியவர்களின் சமூகமாகும்.

nobal-2.jpg?resize=524%2C343&ssl=1

இவர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றியமைக்காக  இந்தப்  பரிசை பெற்றுள்ளனர்.

ஹிபாகுஷா என அழைக்கப்படும் குறித்த அமைப்பினர், அணு ஆயுதங்கள் உலகில் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1403766

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜப்பானில் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பு
படக்குறிப்பு, நிஹான் ஹிடான்கியோ அமைப்பின் இணைத் தலைவர் தோஷியுகி மிமாக்கி
2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜப்பானில் நடந்த அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களின் குழுவான நிஹான் ஹிடான்கியோ அமைப்பிற்கு, 2024 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வெடிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களை கொண்ட இந்த அமைப்பு, அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. அதை அங்கீகரிக்கும் விதமாக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

அவர்களுக்கு 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா (£810,000) பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

"மோதல்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற ஒருமித்த கருத்து உருவானதில் இந்த அமைப்பு பெரும்பங்கு வகித்தது", என்று நோபல் கமிட்டியின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ் கூறினார்.

அந்த உறுதிப்பாடு தொடர்வதே தற்போது நெருக்கடியில் இருப்பதாக ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ் கூறினார். அணு ஆயுதங்கள் இனி ஒருபோதும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த குழுவின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

 

இந்த அமைப்பு 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நிஹான் ஹிடான்கியோ அமைப்பின் இணையதளத்தின் படி, அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களை உலகெங்கும் அனுப்பி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான சேதங்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய கதைகளை இந்த அமைப்பு பகிர்ந்து கொள்கிறது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பேரழிவிற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து இந்த அமைப்பு அதன் பணிகளை தொடங்கியது.

ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் பல முறை இந்த அமைப்பு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அதன் இணையதளம் கூறுகிறது. மேலும் 2005 ஆம் ஆண்டு நோபல் கமிட்டியின் சிறப்பு பாராட்டையும் பெற்றது.

"சுமார் 80 ஆண்டுகளாக போரில் எந்த ஒரு அணு ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை. நிஹான் ஹிடான்கியோ அமைப்பும் அதன் உறுப்பினர்களும் இதற்கு முக்கிய பங்காற்றி உள்ளன", என்று நோர்வே நோபல் கமிட்டி அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதில் 1,40,000 மக்கள் உயிரிழந்தனர்.

இது நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு நாகசாகி மீது இரண்டாவது அணு குண்டை அமெரிக்கா வீசியது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜப்பான் சரணடைந்ததும் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் ஜப்பானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இணைத் தலைவர் தோஷியுகி மிமாக்கி, "இது கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை" என்று கூறியதாக AFP செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

 
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1945 ஆம் ஆண்டு முதல் அணுகுண்டு வீசப்பட்ட பிறகு, ஹிரோஷிமா அமைதி நினைவு கட்டடம் மட்டுமே அப்பகுதியில் எஞ்சியிருந்தது.

நோபல் பரிசு தேர்வில் எழுந்த சர்ச்சை

நிஹான் ஹிடான்கியோ அமைப்பை அங்கீகரிப்பது என்பது நோபல் கமிட்டி அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட சர்ச்சைக்குரியவர்களிடமிருந்து விலகி இருப்பதை குறிக்கிறது.

பாலத்தீனர்களை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான UNWRA, இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிசீலிக்கப்படுகிறது என்று பரவலான ஊகங்கள் இருந்தன.

இந்த அமைப்பு காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் முக்கிய நிறுவனமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையால் அதன் உறுப்பினர்கள் ஒன்பது பேர் நீக்கப்பட்டனர்.

12,000-க்கும் மேற்பட்டோர் UNWRA- க்கு நோபல் பரிசு வழங்கக் கூடாது என்று தேர்வு குழுவை வலியுறுத்தி ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

ஆனால் நிஹான் ஹிடான்கியோ அமைப்பிற்கு நோபல் பரிசை வழங்குவது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட தேர்வாக இருக்கிறது. மேலும் யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் நீடிக்கும் மோதல்கள் மீதான உலகின் கவனத்தை அணு ஆயுத பயன்பாடு குறித்த அச்சுறுத்தலின் மீது திருப்புவதாக இந்த முடிவு இருக்கிறது.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக 197 தனிநபர்கள் மற்றும் 89 அமைப்புக்கள் என, 286 பரிந்துரைகள் இருந்தன.

இரானிய மனித உரிமை ஆர்வலர் நர்கேஸ் முகமதி 2023 ஆம் ஆண்டு இந்த நோபல் பரிசை வென்றார். அவர் இரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக அவர் இந்த பரிசு பெற்றார்.

2014 ஆம் ஆண்டு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலாவுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.

2024ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த டெரன் அசோமோக்லு, சைமன் ஜோன்சன், ஜேம்ஸ் ஏ.ரொபின்சன் ஆகியோருக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டமைக்காகவே அவர்களுக்கு  நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1404080

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு

2024ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். மருத்துவம், இயற்பியல், வேதியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் கொடுக்கப்படும்.

டெரன் அசோமோக்லு, சைமன் ஜோன்சன், ஜேம்ஸ் ஏ.ரொபின்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது.

ஒரு அமைப்பு எப்படி உருவாகின்றன.. அவை எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணமாக இருக்கிறது.. நிலையான வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் ஆகிவை குறித்து இவர்கள் விரிவான ஆய்வுகளை செய்துள்ளனர்.

https://thinakkural.lk/article/310708

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2024 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளர்கள் முழு விபரம்

image

உலகளாவிய ரீதியில் மருத்துவம், பௌதிகவியல், இராசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டது. 

மருத்துவத்திற்கான நோபல் பரிசு

kl.kl_.jpg

மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோ RNA-களின் ஒழுங்குமுறையால் புற்றுநோய், பிறவி காது கேளாமை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிய முயலும் முயற்சியாக `மைக்ரோ RNA' தொடர்பில் ஆராயச்சியில் ஈடுபட்ட இவர்கள், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மைக்ரோ RNA தொடர்பில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர் .

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு

hjmj.jpg

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கிய கட்டமைப்பான artificial neural networks என்று சொல்லப்படும் (செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள்) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் பிரிட்டனில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜாஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு

jnm_.jpg

புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்கள்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

jbm.jpg

இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர், ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. "வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக" இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு

k._lk_o.jpg

26.jpg

2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை அந்த அமைப்பு மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

1200x800.jpg

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது.

https://www.virakesari.lk/article/196338

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகப் புகழ் அடையக்கூடியவர்களை முன்பே அறிந்து தன்னுள் உள்வாங்கிக்கொள்வதில் அமெரிக்காவை விடவும் வேறுநாடுகள் உலகில் இல்லை.🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, Paanch said:

உலகப் புகழ் அடையக்கூடியவர்களை முன்பே அறிந்து தன்னுள் உள்வாங்கிக்கொள்வதில் அமெரிக்காவை விடவும் வேறுநாடுகள் உலகில் இல்லை.🤔

உண்மைதான் பாஞ்ச் அண்ணை.
சீனாக்காரன் நோபல் பரிசு வென்றதாக நினைவு இல்லை. சில வேளை அவர்களின் வெளிப்படைத் தன்மையற்ற செயல்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த நோபல் பரிசு கொடுப்பதிலும்… முகமன் பார்த்து கொடுக்கின்றார்கள் என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. ஏனென்றால்…. பராக் ஒபாமா பதவிக்கு வந்து மூன்று மாதத்திற்குள்  ஒன்றும் சாதிக்க முதலே, அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை கொடுத்து இருந்தார்கள்.

Edited by தமிழ் சிறி


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.