Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பிறவிப் பெருங்கடல்

விடிய எழும்ப Google calendar இல வந்த alert ஐப் பாத்து, முதல் வேலையா fb இல தேடி ஒரு photo ஐ எடுத்து what’s app குறூப்பில birthday day wish போட்டிட்டு status இல “ HBD to ……..” எண்டு முழுசாக்கூட எழுதாமல் சுருக்கிப் போட்டிட்டு தன்டை admin வேலையையும் காலைக் கடமையை வடிவாச் செய்திட்டன் என்ற திருப்பதியோட நாளை ஆரம்பித்தார் நம்பி. 

அவுஸ்திரேலியாவில விடிஞ்சாலும் அல்பேட்டாக்காரன், இரவுக் குளிருக்க ரெண்டு பெக்கைப் போட்டுக்கொண்டிருந்தவன், உடனயே தன்டை பங்குக்கு ஒரு பலூன் படத்தைப் போட்டான். மூத்திரம் போக வேளைக்கு எழும்பி நித்திரை வராமப் போஃனைப் பாத்திட்டு ஆரா இருக்கும் எண்டு யோசிச்சிட்டு , ஏன் பிரச்சினை எதுக்கும் ஒரு வாழ்த்துத் தானே எண்டு தன்டை பங்குக்கு கண்டிக்காரன் வாழ்த்து ஒண்டைப் போட்டான். இரவு 12.00 மணிக்கு பத்துபேர் தடதடவெண்டு வந்து வெட்டின கேக் வாயை கழுவாமலே படுத்தவன், எழும்பின கையோட எந்தெந்த குறூப்பில ஆரார் wish பண்ணினவை எண்டதைப் பாத்திட்டு, wish பண்ணாதவனை ஞாபகாமா வைச்ச படி குளிக்கப் போனான் அம்பி. 

கொழும்பில விடிகாலை late ஆ எழும்பி கண்ணாடி போடாமலே updated news எல்லாத்தையும் பாத்திட்டு போனகிழமை தன்டை birthdayக்குப் படத்தைப் போடேல்லை இண்டைக்குப் போட்டிருக்கிறார் adminஐத் தூக்கு , எண்டு போர்க்கொடி தூக்கினான் அப்பன். அதுக்குப் பிறகும் வாழ்க்கை வெறுத்து விட்டிட்டுப் போகாமல் அப்பன்டை friend சுப்பனைப் பிடிச்சிச் அப்பனை அடக்கிச் சமாளிச்சுக் கொண்டு குறூப்பை ஓட்டிக்கொண்டிருந்தார் நம்பி. 

காலமை எழும்பி ஏதாவது நல்ல விசியம் இருக்குமா எண்டு WhatsApp பாக்க ஒரு புது குறூப்பில add பண்ணி இருந்தாங்கள். விசாரிச்சா, “மச்சான் சுசிக்கு birthday வாற மாசம், மனிசி கேட்டது ஒரு video செய்ய வேணுமாம் எண்டு குசும்பர் குறூப்பி்ல நீயும் அவனும் இருக்கிறதைப் பாத்து add பண்ணினான், ஒரு wishing video message அனுப்பி விடு” எண்டான் சிங்கன். 

கேட்டதை மறந்திருக்க, காசைக் கட்டுங்கோ கெதியா எண்டு ஒரு மாசத்துக்கு முதலே தொடங்கி, ஒவ்வொரு நாளும் தொல்லை தாற insurance காரன் அனுப்பிற reminder இலும் பாக்க reminder கூட வர, கடைசீல சரி எண்டு போட்டு நாலு தரம் எடுத்தும் சரியா வராத வீடியோ message இல என்னை வடிவாத் தெரியிற ஒண்டை upload பண்ணி விட சுசியின்டை குடும்பம் சார்பா சிங்கன் 🙏 போட்டான். 

முந்தின நாட்களில வீட்டுக்காரர் ஞாபகப் படுத்தினாக்கூட வீண் செலவு எண்டு தெரிஞ்சே மறந்து போன birthday தான் நிறைய, ஆனால் இப்ப அப்பிடியில்லை. எப்ப இந்த birthday கொண்டாட்டம் பெரிசா வந்திச்சுது எண்டே தெரியேல்லை தொற்றுநோய் மாதிரி எல்லாருக்கும் பரவீட்டுது . நல்லதோ கெட்டதோ நடந்தா அதை அறியத்தாறம் எண்ட செய்தியை எங்காயாவது போட்டால் அதை வாசிச்சு அறிஞ்சதோட நிப்பாட்டாமல். வாழ்த்தில இருந்து அஞ்சலி வரை எழுத்தில தொடங்கி, சுருக்கெழுத்தா மாறி கடைசீல கைக்கு நோகும் எண்டு போட்டு Emoji இல வந்து நிக்குது. குறூப்பிலயே இல்லாதவனுக்கும் வாழ்த்துகளும் செத்தவனுக்கு RIP யும் அவங்கள் ஆவியா வந்து பாத்தாலும் எண்டோ தெரியேல்லை நிறையவே கிடைக்கும்.

அந்தக் காலத்தில கொஞ்சம் வசதியான வீடுகளில மட்டும் பள்ளிக்கூட friends ஐ கூப்பிட்டு பின்னேரம் வீட்டை ஒரு tea party நடக்கும் . ஒருக்கா படிக்கேக்க அப்பிடி ஆக்கள் என்னையும் கூப்பிட போறவீடு பெரிய வீடு, என்னத்தைக் கொண்டுபோற எண்டு தெரியாம முழிச்சன். அவன் “English teacherன்டை favourite student ” எண்டு போட்டு போன மாசம் புத்தகம் விக்க வந்த கப்பலில என்டை அறிவை வளக்க எண்டுஅப்பா மலிவா வாங்கித் தந்த பிரிச்சே பாக்காத பேர் தெரியாத ladybird புத்தகத்தை brown paper bag இல போட்டுக் கொண்டு போய்க்குடுத்தன். ஏனோ தெரியேல்லை அடுத்த முறை என்னை அவன் கூப்பிடவேயில்லை. 

பொதுவா அந்தக்காலத்தில birthday எண்டால் toffee bag தான் அதுகும் கொஞ்சம் வசதி இருந்தாத்தான். நூறு toffee உள்ள bag வாங்கி வகுப்பில எத்தினை பேர் , ரீச்சர் எத்தினை பேர் எண்டு எண்ணி, ஐஞ்சு மட்டும் கூடப் போட்டு வீட்டில குடுத்து விடுவினம். வாங்கித்தாற delta இல்லாட்டி star toffee bag ஓட பள்ளிக்கூடம் போய் தனக்கு இண்டைக்கு birthday எண்டு வகுப்ப ரீச்சரிட்டை toffee பையை நீட்ட அவ அள்ளி எடுத்திட்டு பிள்ளைகளே birthday பாட்டு பாடீட்டு ஒராள் ஒண்டு தான் எடுக்கோணும் எண்டா. 

 “ happy birthday” வாழ்த்தோட வகுப்பைச் சுத்தி வந்திட்டு பிறகு ஒட்டிக்கொண்டு வாற ஒரு friend ஓட ஒவ்வொரு வகுப்பா ஏறி எல்லா ரீச்சர் மாருக்கும் குடுத்திட்டு வந்திருக்க மிஞ்சிற toffeeஐ பங்கிடிறதுக்கு (பறிக்கிறதுக்கு) இன்டேர்வலில ஒரு குறூப் வரும். இவ்வளவு நாளும் கொம்பாஸால குத்தினவன் இண்டைக்கு திடீர் friend ஆவான். 

Birthday அண்டு கிடைக்கிற ஒரே ஒரு நன்மை எண்டால் , அண்டைக்கு மாத்திரம் குளப்படி செய்தாலும் அடி விழாது . செய் குழப்படிக்கு வாத்தி பிரம்பைத் தூக்கிக்கொண்டு முன்னால வா எண்டு கூப்பிட , “சேர் இண்டைக்கு இவருக்கு பேத் டே” எண்டு chorus ஆ நாலு பேர் கத்த ,”சரி போய் இரு இண்டைக்கு விடுறன்” எண்டு பதில் வரும். முந்தி birthday எண்டால் கலர்ச்சட்டை போடலாம் எண்டிருந்தது, பிறகு அதுகும் இல்லாமல் போட்டுது.

என்டை கஸ்ட காலம் எனக்குப் பிறந்த நாள் பள்ளிக்கூட விடுமுறையில தான் வாறது ஆனபடியால் அந்தக் கொடுப்பனவும் இல்லை. அதோட வருசம் கழிச்சு வாறதால கூடவாச் செய்யிற பயத்தம் பணியாரமும் , முறுக்கும் தான் treat. கொஞ்சம் வளர பெடியளோட போய் ரொட்டியும் கறியும் எண்டு தொடங்கி பிறகு extra ரொட்டி போட்டு ஒரு கொத்து மூண்டு plate எண்டு கேட்டு வாங்கிப் சாப்பிடுறது தான் treat. அதுகும் வீட்டை ஆடு எண்டு சொல்லீட்டு கொண்டு போற காசுக்கு மாடுதான் வாங்கிறது. 

இப்ப அதுக்கெண்டு தனி budget முதலே ஒதுக்க வேணும். அதோட வெள்ளைக்காரனே வீண் செலவு எண்டு மறந்து போன கனக்கத்தை எங்கடை சனம் மட்டும் தான் பின்பற்றிற மாதிரி இருக்கு. 

வரியாவரியம் வாற திருவிழாவைத் தவிர double digit ஆம் எண்டு 10, teen தொடங்குதாம் எண்டு 13, adult ஆகீட்டாராம் எண்டு 18, துறப்புக் கொழுவலாமாம் எண்டு 21, golden birthday எண்டு 50, பிறகு60 எண்டு விசேச திருவிழாவும் இருக்கும். கலியாண வீடு மாதிரி hall எடுத்து , invitation card அடிச்சு, Theme colour, 3D cake, cartoon character , photo shooting face painting எண்டு அது birthday பெரிய விழாவா இப்ப வந்திட்டுது. 

Birthday க்கு cake எப்ப வந்தது எண்டு தெரியாது. முதலில cake இல தொடங்கி, பிறகு சும்மா ஒரு மெழுகுதிரிவந்து, அது பிறகு அது கலராகி, சின்னனாகி, நம்பரா மாறி, பிறகு மத்தாப்பு மாதிரி வந்து, இப்ப birthday song க்கு music போடிற மாதிரி எண்டு கூர்ப்படைஞ்சு வந்து கொண்டிருக்கு. மெழுகுதிரி மாதிரி பத்தாததுக்கு வெட்டிற கத்தியும் மாறிக்கொண்டு போகுது. பாண் வெட்டிற கத்தீல தொடங்கிப் பிறகு butter பூசிற கத்திக்கு ribbon கட்டி இப்ப அதுக்கும் எண்டு special கத்தி கலரில வருது. 

கலியாணத்தில தாலி கட்டேக்கயே பின்னால ரெண்டு மூண்டு பேர் தான் நிப்பினம் விளக்கோட ஆனால் birthday இல “பொப்” வெடிச்சுப் பூப்போட ரெண்டு பேர், பனிமழை பொழியப்பண்ணக் கொஞ்சப்பேர், chorus பாடக் கொஞ்சப் பேர் எண்டு இளையராஜான்டை stage show மாதிரி ஆக்கள் நிப்பினம். சில நேரத்தில popம் sprayம் கேக் எல்லாத்தையும் மூட சாப்பிட வேற கேக் தேவைப்படும். “அடேய் நாங்கள் அவங்களை மாதிரி இல்லை விளக்கை ஏத்தித்தான் கொண்டாட வேண்டும்” எண்டு நண்பன் நவாஸ் புது வியாக்கியானத்தோட கேக்கை வெட்டி ஆனால் விளக்கை ஏத்திக் கொண்டாடினான். பிறந்த நாள் காரனுக்குத்தான் கேக் தீத்திறது மாறி எங்கயோ படத்தில அரைகுறையாப் பாத்திட்டி இப்ப கேக் வெட்டிறவன் தான் மற்ற எல்லாருக்கும் தீத்த வெளிக்கிட்டான். 

பழைய காலத்தில நாள் நச்சத்திரம் பாக்கிறது நல்லது கெட்டதுக்கு மட்டுமில்லை பிறந்த நாளுக்கும் தான். பிறந்த நாளண்டு இருந்த நச்சத்த்திரம் பிறகு நாள் மாறி வரும். முந்தின காலத்தில நட்சத்திரதுக்கு கோயிலில ஒரு அருச்சனை தான் பிறந்த நாள் விசேசமா இருந்திச்சுது. இப்ப பிறந்த நாளுக்கு party வைக்கிறது வளரக் கோயிலுக்கு போறது தேய்பிறையாக மாறி நச்சத்திரம் சாத்திரத்துக்கு மட்டும் எண்டு ஆகீட்டுது. 

அதுகும் ஏதாவது special birthday எண்டால் Scarborough இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு கனடாவில தொடங்கி, பிறகு கொஞ்சப்பேரோட போய் கியூபாவில நிண்டு படம் போட்டிட்டு, வாற வழீல லண்டனிலேம் கொண்டாடி பிறகு ஊரில வந்து பெரிசாக் கொண்டாடி எண்டு ஒரு வருசமா அந்தப் படம் ஓடும். 

படிக்கேக்க இழந்தும், இடம்பெயர்ந்தும், எண்ணிக்கை சுருங்க எல்லாப் பள்ளிக்கூடத்தையும் சேத்து இவ்வளவு தான் எண்டு batchயிலேயே ஒரு இருநூறு பேர் தான் இருந்தம். அப்ப பள்ளிக்கூடம் தாண்டி உறவும் நட்பும் இருந்ததால partyயும் இருக்கிறதைக் கொண்டு பிரிச்சு உறவைப் பெருக்கி நடந்தது. ஆனாலும் பெடியள் மட்டும் தான் அப்பிடியாவது செய்தது எண்டு நெக்குறன். 

இப்ப ஆம்பிளையும் பொம்பிளையுமா ஆயிரம் பேர் இருக்கிற குறூப்பில ஆளே தெரியாத ஒருத்தனுக்கு birthday wish பண்ணிற காலம். அதோட இப்ப இது ஒரு நாள் திருவிழா இல்லை. முதல்ல தனி்யக் குடும்பமா birthdayகொண்டாடிப் பிறகு, வேலை குறூப், gym group, படிச்ச பள்ளிக்கூடம், ரியூசன் சென்டர், பிறந்த ஊர் எண்டு தொடங்கி சர்வதேச levelல ஒரே வருசத்தில பிறந்தது எண்டு உலகளாவிய birthday கொண்டாட்டத்தை ஊர்ஊராப் போய் வைக்கிறது தான் fashion ஆப் போட்டுது. அதோட இப்ப ஒரு புதுசா surprise party எண்டு வேற ஒண்டு தொடங்கி இருக்கு. எல்லாம் தெரிஞ்சும் எதுகும் தெரியாத மாதிரி party நட(டி)க்கிறது தான் அது. எல்லாக் கொண்டாட்டமும் முடிஞ்சு எல்லாருக்கும் நன்றி உரை சொல்லி முடியமுதலே அடுத்த birthday வந்திடும்.

பிறவிப் பெருங்கடல் எண்டதை சரியா? விளங்கிக் கடல் தாண்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நாங்கள் அடுத்தது விண்ணைத் தாண்டி விண்வெளியில் தான் கொண்டாடுவம் எண்டு நெக்கிறன் . 

 

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

குறூப்பிலயே இல்லாதவனுக்கும் வாழ்த்துகளும் செத்தவனுக்கு RIP யும் அவங்கள் ஆவியா வந்து பாத்தாலும் எண்டோ தெரியேல்லை நிறையவே கிடைக்கும்.

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

யதார்த்தம்!

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல, கலியாண, சாமத்திய வீட்டு விழா அளவுக்கு அல்லது அதுக்கும் மேலேயே பிறந்தநாள் விழாக்கள் நடக்குது . ........போகாட்டிலும் குறை ........!  😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.