Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பலர் கடனாளிகளாக்கப்பட்டனர் – வியாழேந்திரன்

வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1403789

Posted

கவலையான செய்தி,

தேர்தலில் நின்று கட்டுக்காசும் இழந்து போவதைப் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டதே...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, நிழலி said:

கவலையான செய்தி,

தேர்தலில் நின்று கட்டுக்காசும் இழந்து போவதைப் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டதே...

அவர் நன்றாக உழைத்து விட்டதாக சொல்கிறார்கள்.
இனி தேர்தலில் நின்று வெல்லும் சந்தர்ப்பமும் இல்லை.
அதனால்... பயந்து ஒதுங்கியது மாதிரி இல்லாமல், வேட்பு மனு தாக்கல் செய்த மாதிரி இருக்கட்டுமே என்று ஒரு நாடகம் ஆடி உள்ளார் என்றே நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜபக்சா குடும்பமே தேர்தலில் நிற்காத பொழுது நான் எப்படி நிற்பது என நினைத்திருக்க்லாம்...தலைவர் விசுவாசம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

அவர் நன்றாக உழைத்து விட்டதாக சொல்கிறார்கள்.

முன்னர் புளொட்டிலிருந்து கட்சி தாவும் போது அபிவிருத்தி அபிவிருத்தி என ஆவேசம் கொண்டதின் அர்த்தம் இதுதானா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

முன்னர் புளொட்டிலிருந்து கட்சி தாவும் போது அபிவிருத்தி அபிவிருத்தி என ஆவேசம் கொண்டதின் அர்த்தம் இதுதானா? 😂

ஆள்…. ஆசைக்கு  இராஜாங்க  அமைச்சராகவும் இருந்திட்டார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, தமிழ் சிறி said:

ஆள்…. ஆசைக்கு  இராஜாங்க  அமைச்சராகவும் இருந்திட்டார். 😁

இனி  பெஞ்சன் கிஞ்சன்,பட்டா கிட்டா எண்டு எக்கச்சக்கமாய் எக்கவுண்டிலை வந்துகொண்டே இருக்கும்.

இன்றைய அன்றைய  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரத்தியேக சட்டங்களும் வசதிகளும் இருக்க பயமேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

ஆள்…. ஆசைக்கு  இராஜாங்க  அமைச்சராகவும் இருந்திட்டார். 😁

தமிழரசு கட்சியை விட்டு விலகி, சிங்களத்திற்கு முட்டுக்கொடுக்கும்போது மஹிந்தரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுவிட்டார் வியாழேந்திரன். அபிவிருத்தி அரசியல் செய்யப்போறேன் என்று சவால் விட்டார், அபிவிருத்தியுமில்லை, அரசியலுமில்லை. தமிழ் கோசம் போட்டு வெல்லலாம் என்று நினைப்பவர்கள் அதை விட்டு விலக மாட்டார்கள், சாதிப்போம் என்று விலகியவர்கள் தொடர்வது மிகக்குறைவு. தேசியத்தை வைத்து வயிறு வளர்த்தவர்கள், புகழ் சேர்த்தவர்கள் இனி வீட்டோடு  இருக்க அனுப்பப்படப்போகிறார்கள். பெரும்பான்மை கட்சிகளைவீட்டுக்கு அனுப்ப சிங்களமக்கள் முடிவெடுத்தார்கள், தமிழ் மக்களும் தங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதிலும் இவர்கள் கோட்டை விட்டால் தங்கள் மேல் தாங்களே மண்ணை அள்ளிக்கொட்டுகிறார்கள்.

தமிழ் அரசியல் வாதிகளுக்கு கப்பம்கொடுத்து நாட்டை குட்டிசுவராக்குவதை விட்டு, தமிழரின் உரிமையை கொடுத்து நாட்டை கட்டியெழுப்ப எந்த முட்டாள் சிங்கள அரசியல், இனவாதிகளுக்கு தெரிவதில்லை, ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒரு முட்டாள் செய்வதை, வரும் முட்டாள்களும் தொடர்ந்து நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள், அதில் பெருமை வேறு. தமிழரை அழிப்பதாக கூறி, நமது  நாட்டை எமது தலைமையிலேயே அழித்தோமென கொண்டாட்டங்கள் வேறு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, satan said:

ஒருமுறை  மகிந்தவிற்கு…. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைமை வந்த போது, இவர் போன்ற சிலரை விலைக்கு வாங்க வேண்டி வந்தது. அந்த நேரம் பல கோடிகளில் நல்ல விலைக்குப் போனவர்தான் இவர். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதோடு மூட்டை  கட்டியவர்தான் மஹிந்தர், இவர் அரசியல் அனாதையாக்கப்பட்டுவிட்டார், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட மாதிரி. மீண்டும் தமிழ் உணர்வுள்ள கட்சியிற்தான் சேருவேன் என ஏலம் விட்டுக்கொண்டு திரிந்தார், யாரும் ஏற்கவில்லை. இவர் வெளியேறிய வீட்டுக்குள் வேறொருவர் குடியேறி விட்டார். சுமந்திரன் அவரை தட்டு வைத்து கூட்டி வந்து குடியேற்றினார்.  
          
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, satan said:

இம்முறை  வியாழேந்திரன் மட்டுமல்ல….
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியில் இருந்த அங்கஜனும் அரசியல் அனாதை ஆகி… இப்போ கேள்விப்படாத ஒரு கட்சியில் தேர்தலில் நிற்கிறார்.
மக்கள் என்ன தீர்ப்பு வழங்கப் போகின்றார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போ..... மக்கள்தான் இவர்களுக்கு  தீர்ப்பு வழங்கும் கடவுள்! இவர்கள், அவர்களை மன்றாடவேண்டியுள்ளது வாக்குக்காக. மக்களால் அந்தஸ்து பெற்றவர்கள், அந்த மக்களை ஏமாற்றுவது எவ்வளவு துரோகத்தனம்.  இவர்கள் யாராவது, அதை நினைத்து மனவருத்தப்பட்டிருப்பார்களா? தாங்கள் தோற்றவுடன், மக்களை குறை கூறுவார்கள். தாங்கள் செய்யாத வேலைக்கு மக்கள் கூலி தர மறுத்து விட்டார்களென.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.