Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால்

11 Oct, 2024 | 02:06 PM
image

 

யாருக்கும்  மதுபானசாலைஅனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் சவால் விடுத்துள்ளார். 

இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நான் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

அத்துடன் நான்; எனக்கோ என்னுடைய குடும்பத்துக்கோ, உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அல்லது எனக்குத் தெரிந்த யாருக்கோ மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தைக் கோரவோ அல்லது மத்தியஸ்தம் பண்ணவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி வெளிப்படையாக ஒரு வாக்குமூலத்தை வழங்குகிறேன்.

 மாவட்டத்தின் என் சக வேட்பாளர்கள் குறிப்பாக பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதையே செய்ய வேண்டும் என நான் சவால் விடுக்கிறேன்.

அண்மைய மாதங்களில் வடக்கில் பல மதுபானக்கடைகள் தோன்றியதன் காரணமாக நாளாந்தக் கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மது இல்லாத மனித சமுதாயம் என்று ஒன்று உண்டா? கசிப்பு போன்ற கள்ள தரமற்ற சாராயம் வளங்காமல் எம் தமிழ் மக்களுக்கு நல்ல பேச்சுத் தொடர்புக்கும், களிப்புறவும், தரமான மது முக்கியம். 

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்லி மக்களை நல்ல சரக்கு குடிக்க விடாமல் வைத்திருக்கும் ஆட்கள் தான் உண்மையான தமிழ் இனத் துரோகிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பிழம்பு said:

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் சவால் விடுத்துள்ளார். 

ம்....ம்...  

11 hours ago, பிழம்பு said:

அத்துடன் நான்; எனக்கோ என்னுடைய குடும்பத்துக்கோ, உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அல்லது எனக்குத் தெரிந்த யாருக்கோ மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தைக் கோரவோ அல்லது மத்தியஸ்தம் பண்ணவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி வெளிப்படையாக ஒரு வாக்குமூலத்தை வழங்குகிறேன்.

அத்தோடு, தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன, இனிமேல் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதையும் சொல்லி சவால் விட்டால், உங்களை நாங்கள் மனமார வாழ்த்தவும், மற்றைய வேட்பாளர்கள் உங்களை பின்பற்ற உதவியாகவும் முன்மாதிரியாகவும் இருக்கும். யாரும் சவால் விடலாம் செய்வது யார்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேவிபியினரும் மதுபானசாலை அனுமதிகளை பெற்றுள்ளார்களா?; கீத்நாத் காசிலிங்கம் கேள்வி

image

மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றவர்களின் பெயர் பட்டியலை இதுவரை வெளியிடாது இருப்பதால்,  ஜே.வி.பி யினரும் மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை பெற்றுள்ளனரா என நாங்கள் சந்தேகிக்கிறோம் என சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.  

யாழ். ஊடக அமையத்தில்  நேற்று புதன்கிழமை (16)  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  

மேலும் தெரிவிக்கையில்,  

பெரமுன கட்சியில் இருந்த பலர் தற்போது கட்சியில் இல்லை. அவர்கள் கட்சியை விட்டு போய்விட்டார்கள். கட்சியில் இருந்த இனவாதிகள், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் என எல்லோரும் கட்சியை விட்டு போய்விட்டார்கள். தற்போது பெரமுன தூய கட்சியாக காணப்படுகிறது.  

கட்சியில் பல பிரச்சனைகள் இருந்தன. நாம் அவற்றில் இருந்து புதிய பாதையில் பயணிப்போம், தற்போது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நாமல் ராஜபக்சே கட்சியின் தேசிய அமைப்பாளராக உள்ளார்.  நாங்கள் அவரின் தலைமையில் பயணிப்போம். 

எமது கட்சி யாழில் பல பின்னடைவுகள் சந்தித்து இருந்தன. இனிவரும் காலங்களில் மக்களோடு மக்களாக இருந்து வேலை செய்வோம். இப்ப உள்ள அரசாங்கம் பல பொய்களை சொல்லி. ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அதன் உண்மைகளை மக்களுக்கு  தெளிவூட்டுவோம். 

தென்னிலங்கையை பொறுத்த வரைக்கும் அரசியலில் 15 தொடக்கம் 30 வருட காலங்கள் இருந்தவர்கள், அரசியலில் ஓய்வு பெற்று விலகி இருக்கிறார்கள். அவர்கள் இளையோருக்கு வழி விட்டுள்ளனர். ஆனால் வடக்கில் யாரும் இளையோருக்கு வழி விட்டுக்கொடுக்க தயார் இல்லை. தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் வடக்கிலும் வர வேண்டும்.  

கடந்த காலங்களில் என்னை நேரடி அரசியலுக்கு வருமாறு பல்வேறு அழைப்புக்கள் வந்தன. நாமல் தேசிய அமைப்பாளரான பின்னரே நானும் நேரடி அரசியலுக்குள் வந்துள்ளேன்.  

13ஆம் திருத்தம் தொடர்பாக நாமல் வெளியிட்ட கருத்து கட்சியின் கருத்து. அதாவது காணி பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என்பது. ஆனால் நான் உள்ளிட்ட பலர் அதனை ஏற்கவில்லை. அதனை அவர்களுக்கு நாங்கள் புரிய வைப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.  

ஜேவிபி யினர் முன்னர் 13 க்கு எதிராக போராடியவர்கள். பின்னர்  ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 13 ஐ முழுமையாக தருவோம் என்றார்கள். இன்று 13ஐ தரவே மாட்டோம் என சொல்கின்றனர். 

அன்று 13ஐ தர முடியாது என கூறிய நாமலை இனவாதிகள் என கூறியவர்கள் இன்று ஜனாதிபதி அநுராவிற்கு என்ன கூற போகிறார்கள்.  

அதேபோன்று தேர்தல் காலத்தில், முன்னைய அரசாங்கத்திடம் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றுக்கொண்டவர்களின் விபரங்கள் தம் வசம் உண்டு எனவும் அதனை வெளியிடுவோம் என கூறியவர்கள் ஏன் இன்னமும் அதனை வெளியிடவில்லை ? 

அவர்கள் பெயர் பட்டியலை வெளியிடாது இருப்பதனை பார்க்கும் போது, மதுபான சாலைக்கான அனுமதிகளை ஜேவிபியினரும்  பெற்று இருக்கலாம். என நாம் சந்தேகிக்கிறோம். அல்லது பெரிய டீலை முடித்துள்ளதால் தான் பட்டியலை வெளியிடாது உள்ளனரா எனும் சந்தேகமும் உண்டு.  

தேர்தலுக்கு முன்னர் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்ற்வர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு, அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.  

அதேவேளை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் தாம் யாரும் மதுபான சாலைக்கான அனுமதியை பெறவில்லை என சத்திய கடதாசி முடித்து தர சொல்லுகிறோம்.  

நான் யாருக்கும் மதுபான சாலைகளை பெற்றுக்கொடுக்கவோ, எனது பெயரில் பெறவோ இல்லை என சத்திய கடதாசி முடித்துள்ளேன். அதனை போல ஏனையவர்களும் சத்திய கடதாசி முடித்து தரட்டும்.  

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை பெரியளவிலான பிரச்சனை என்பதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். எமது கட்சியின் ஆட்சி காலத்தில் அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தோம். முடியவில்லை.  

தற்போதுள்ள அரசாங்கம் அந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கு எமது கட்சியும் நிச்சயம் ஆதரவு வழங்குவோம்.  

கடந்த காலங்களில் வடக்கில் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் போதாது என்பதனை ஏற்றுக்கொள்கிறேன். அதனால் தான் நான் இம்முறை வடக்கிற்கு வந்துள்ளேன். மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்போம்.  

நாமல் ராஜபக்சேயும் இனிவரும் காலங்களில் வடக்கிற்கு நேரடியாக விஜயம் செய்து இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சிகளை முன்னெடுப்பார்.  

மாதத்தில் ஒன்று, இரண்டு தடவைகள் வருகை தந்து இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதனை தீர்க்க முயற்சிகளை முன்னெடுப்பார் என்றார். 

https://www.virakesari.lk/article/196478

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, ஏராளன் said:

ஜேவிபியினரும் மதுபானசாலை அனுமதிகளை பெற்றுள்ளார்களா?; கீத்நாத் காசிலிங்கம் கேள்வி

கீத்நாத் காசிலிங்கம் சொல்லுறதை பார்த்தால்... மகிந்த கட்சிதான் திறம் போலை இருக்கு.
இவர் 15 வருடமாக ஆளும் கட்சியில் ஒட்டிக் கொண்டு இருந்து தன்னை சார்ந்த மக்களுக்கு என்ன செய்தவர். ஒரு வாசிகசாலை கூட கட்டிக் கொடுக்க வக்கில்லாத ஆட்கள் எல்லாம் தேர்தல் என்றவுடன், தாங்களும் ஒரு ஆட்கள் என்று கிளம்பி வந்து விடுவார்கள். வெட்கம் கெட்டதுகள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.