Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன்,  இந்த வீடியோவில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

Edited by Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

ஏராளன்,  இந்த வீடியோவில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

கவி ஐயா, 26ஆவது நிமிடத்தின் பின் கீழே தொப்பி அணிந்து சிவப்பு முச்சக்கர வாகனத்தில் இருப்பவர் தான்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிராம சேவகர் நல்ல விடயங்களை  செய்கின்றார்...பாராட்ட பட வேண்டிய நபர்...வீடுகளில் மக்கள் மரங்களை நட ஊக்கப்படுத்த வேண்டும் ஆனால் இது ஒர் கடினமான விடயம்....

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உதவி 29/11/2024

சந்ததியார் அறக்கட்டளையூடாக சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் குடும்பத்தினர் இயலாமையுடைய பிள்ளைகளின் 10 குடும்பங்களிற்கு அரிசி, பருப்பு, சோயாமீற், சீனி என்பவற்றை வழங்கி உதவியுள்ளனர்.

கதிர்காமநாதன் குடும்பத்தினருக்கு எமது புலர் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாகவும் இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் அண்மையில்(26/12/2024) காலமான செல்வி கஜீபனாவின் அம்மாவிடம் 30000 ரூபா புலர் அறக்கட்டளையின் வங்கி நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் செயலாளர் திரு இ.பரணீதரன், பொருளாளர் சி.தேவகுமாரன், உபசெயலாளர் இ.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான நேரத்தில் செய்யும் உதவி மிகவும் பாராடட   படத்தக்கது .உதவி செய்ய பணம் அனுப்பி  உதவி செய்த்தவர்களுக்கும் தொண்டு நிறுவனத்துக்கும் மிக்க   நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

உங்க‌ட‌ நிறுவ‌ண‌த்துக்கு என‌து பாராட்டுக்க‌ள் ஏராள‌ன் அண்ணா...................மெல் மேலும் இப்ப‌டியான‌ உத‌விக‌ள் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போய் சேர‌னும்

உத‌விய‌ ந‌ல் உள்ள‌ங்க‌ளுக்கும் ந‌ன்றி.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலர் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2024 பகுதி 1

 

"சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள்" நிகழ்வை சிறப்பாகச் செயல்படுத்த உதவி செய்த அனைவருக்கும் எனது  இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அரங்கத்தைப் பொருள் படுத்திய சிறப்பான பேச்சாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள், அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது.
முக்கியமாக, இன்று வருகை தந்த மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கும், அவர்களை ஆதரித்து வந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றியை உரத்து சொல்கிறேன்.

இத்தகைய நாள் வழக்கமாக நினைவில் கொள்ளப்பட்டு, பலருக்கும் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டு வரத் தகுந்த நிகழ்வாக அமைய வேண்டும்.

எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து சிறப்பித்து சிறப்புரையாற்றிய வட்டு இந்துக் கல்லூரி உப அதிபர் திரு கோகிலராஜன் அவர்களுக்கும்
NIST கல்வி நிறுவன நிர்வாகிகள் திரு சிவராஜா(பொறியியலாளர்), நல்ல பல கருத்துகளை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். திருமதி சி.சுகுணதேவி அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இயற்கைப் பண்ணையாளர் திரு ரவிசங்கர் அவர்களுக்கும்
தாதிய உத்தியோகத்தர் திரு கிருஸ்ணகுமரன்(கிரி) அவர்களுக்கும் உளமார நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சிவறூபன்(விசேட தேவைப் பிரிவு), சிறப்புரையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜீவானந்தம், சுழிபுரம் கிழக்கு கிராமசேவகர் திரு ராஜ்கண்ணா, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சிறப்புரையாற்றிய எமது புலர் அறக்கட்டளை நிர்வாகி கிராமசேவகர் திரு சிவறூபன், வரவேற்புரை நிகழ்த்திய தலைவர் கு.பாலமுருகன் அவர்களுக்கும் நன்றியுரையாற்றிய உபசெயலாளர் திரு சிறிதரன் அவர்களுக்கும் எமது நிர்வாக உறுப்பினரும் யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகருமான திரு இந்திரகுமார் அவர்களுக்கும் நிர்வாக உறுப்பினர் திருமதி அபிராமி அவர்களுக்கும் நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய செயலாளர் திரு பரணீதரனுக்கு சிறப்பு நன்றிகள். 

வருகை தந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நான்காவது ஆண்டாகவும் இலவசமாக மண்டபம், ஒலிபெருக்கி மற்றும் தளபாடங்களைத் தந்துதவிய வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள்.
இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்த நிர்வாகிகளுக்கும் தோள் கொடுத்த உறவுகள், நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நாள் சாத்தியமாகியிருக்காது.

பரிசுப் பொருட்கள் வாங்க  உதவிய திரு பரணீதரன் அவர்களுக்கும் உளமார நன்றி கூறிக்கொள்கிறோம். வீடியோ பதிவில் உதவிய செல்வன் ப.பிவிசன், திரு கண்ணன், திருமதி வனஜா அவர்களுக்கும் மேலும் யாராவது தவறவிடப்பட்டிருந்தால் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் (பணிச்சுமை காரணமாக) தன்னுடைய மனப்பூர்வ ஆதரவை வழங்கிய வர்களான, 
வடமாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களுக்கும்,
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் Dr. R.சுரேந்திரகுமாரன் அவர்களுக்கும்,
வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களுக்கும்,
வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு பாலறூபன் அவர்களுக்கும்,
பல்மேரா றிசோட் நிறுவனர் திரு சுகந்தன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இன்று வரை எமக்கு உறுதுணையாக இருக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வசிக்கும் 110 கருணை  உள்ளங் கொண்ட நன்கொடையாளர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய  நன்கொடைகள் மூலமாகவே எமது அமைப்பு தொடர்ந்து இயங்கிவருகிறது. உங்கள் எல்லோரினதும் ஆதரவினால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள்(5kg அரிசி, 1kg பருப்பு, 1kg சீனி, 2சோயாமீற் அடங்கிய முப்பது பொதிகள்), போர்வைகள் மற்றும் சிற்றுண்டிகள், தேநீர் ஆகியவற்றை இன்று வழங்கியுள்ளோம்.

சிற்றுண்டி வழங்கல் தேநீர் வழங்கல் மற்றும் பொதிகள் வழங்கலில் ஈடுபட்ட திரு கோபிக்குமரன், திரு அறிவுக்குமரன், செல்வன் ரேனுஜன், செல்வன் பிவிசன் ஆகியோருக்கும் தேநீர் தயாரித்து வழங்கிய திரு கிருபா அண்ணா, திரு மோகன், திரு சீலன் ஆகியோருக்கும் பெயர் தெரியாது உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.

எஞ்சியிருந்த மரக்கன்றுகள் மேலும் சிலருக்கு பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆதரவை வெளிப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

viber_image_2024-12-03_21-59-27-440.jpg

viber_image_2024-12-03_21-59-30-664.jpg

viber_image_2024-12-03_21-59-27-809.jpg

viber_image_2024-12-03_21-59-28-234.jpg

viber_image_2024-12-03_21-59-28-707.jpg

viber_image_2024-12-03_21-59-29-085.jpg

viber_image_2024-12-03_21-59-29-465.jpg

viber_image_2024-12-03_21-59-29-900.jpg

viber_image_2024-12-03_21-59-30-284.jpg

நிகழ்வின் சில படங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சேவை தொடரட்டும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலர் அறக்கட்டளையால் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/24 பகுதி2

PULAR TRUST Contact +94777775448 (whatsapp, viber, telegram, signal)

தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்வில் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இருந்து பலர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

ஒளிப்பதிவு உதவி செல்வன் ப.பிவிசன், திரு கண்ணன், சகோதரி வனஜா.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் ஆண்டில் கற்கவுள்ள 31 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டது 25/01/2025

அவுஸ்திரேலியா சிட்னி நகரத்தில் வசிக்கும் சுழிபுரம் மத்தி ராசாப்பா மகன் தவவரதராஜலிங்கம் அவர்களின் பேர்த்தியான செல்வி ஆரியா கண்ணன் முதன் முதல் பாடசாலைக்கு இவ்வருடம் செல்கின்றார், அதனை முன்னிட்டு தாயகத்தில் முதல் முதல் பாடசாலை செல்லும்  31 மாணவர்களுக்கு புத்தக பைகளை இன்று வழங்கி  உள்ளார்கள்.

செல்வி ஆரியா கண்ணன் குடும்பத்தினருக்கு 31 பிள்ளைகளின் பெற்றோர் சார்பாக உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இங்கே வருகை தந்த மாணவச் செல்வங்களிற்கும் அவர்களை அழைத்து வந்த பெற்றோருக்கும் எமது நன்றிகள்.

இந்த நிகழ்விற்கான நன்கொடையை பெற்றுத் தந்த விக்ரோறியன் செந்தில் அண்ணாவிற்கும் புத்தகப் பைகளை தைத்துப் பெற வழிகாட்டிய சின்னையா அன் சன்ஸ் கெனத் ஜீவகுமார் அண்ணாவிற்கும் நியாய விலையில் தைத்து வழங்கிய சகோதரி ஜெனிலா குமரன் அவர்களிற்கும் புத்தகப் பைகளை சரியான நேரத்தில் எடுத்து வந்து தந்த வினோதரன் அவர்களுக்கும் இந்த நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்த நிர்வாகிகளுக்கும் புத்தகப் பைகளை வழங்கி வைத்த விருந்தினர்களுக்கும் உளமார நன்றி கூறுகின்றோம்.

தம்பிமார் கஜறூபன், மகிந்தன், விஜயறூபன், சிறிசுபாஸ்
ஆகியோருக்கும் எமது நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

ஆலோசனைகள் மற்றும் உதவிகளுக்கு தொடர்புகொள்ள +94777775448(WhatsApp, Viber)

 

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025

மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள +94 77 777 5448,

+94 77 959 1047 (WhatsApp, Viber)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 22:24, ஏராளன் said:

வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025

மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள +94 77 777 5448,

+94 77 959 1047 (WhatsApp, Viber)

1) இன்றைய தினம் 05/07/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் (கனடா (யாழ்ப்பாணம்) அவர்கள் 50000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.

திரு செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2) வீட்டுத்திட்ட பணிகளுக்கு உதவுவதற்காக திரு @ஈழப்பிரியன்(அமெரிக்கா (இருபாலை) அவர்கள் 29970 ரூபாவை (100$) திரு லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 08/07/2025 அன்று வைப்புச் செய்துள்ளார்.

ஈழப்பிரியன் அண்ணாவிற்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3) வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவுவதற்காக திரு கந்தையா சிவராசா (சுழிபுரம் கிழக்கு) பிரான்ஸ்) குடும்பத்தினர் 25000 ரூபாவை திரு லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக 104970 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது 21/07/2025

டென்மார்க்கைச் சேர்ந்த ஐங்கரன் சிவகுமார் மற்றும் லண்டனைச் சேர்ந்த அருணேஸ் கணேஸ்குமார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள், பிஸ்கற் வழங்கப்பட்டது.

இருவரும் பல்கலையும் கற்று பல்லாண்டுகள் வளத்துடன் வாழ வாழ்த்துகிறோம்.

இந்நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்து நடத்திய செயலாளர் திரு த.மோகன்றூபன் (PHI) முன்னாள் உபசெயலாளர் திரு இ.சிறிதரன் (அதிபர்) ஆகியோருக்கு எமது நன்றிகள்.

மேலும் இந்நிழவுக்கு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருக்கும் திரு இ.சிவகுமார் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

மேலும் இது போல உதவிகள் வழங்க விரும்பின் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

T.P : +94 77 777 5448.

ஒளிப்பதிவு திரு த.மோகன்றூபன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 22:24, ஏராளன் said:

வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025

மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள +94 77 777 5448,

+94 77 959 1047 (WhatsApp, Viber)

4) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர் பூலோகதேவி ஆண்டியப்பன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள "சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளை" ஊடாக பேரன் அபிஷேக் அசோக் (சென்னை, அமெரிக்கா) குடும்பத்தினர் வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் வகையில் திரு லக்சன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 35000 ரூபாவை வைப்பிட்டுள்ளனர்.

23/07/2025 இன்றுவரை மொத்தமாக 139970 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 22:24, ஏராளன் said:

வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025

மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள +94 77 777 5448,

+94 77 959 1047 (WhatsApp, Viber)

5) இன்றைய தினம் 28/07/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் (கனடா (யாழ்ப்பாணம்) அவர்கள் இரண்டாவது தரம் 60100 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.

28/07/2025 இன்றுவரை மொத்தமாக 200070 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

31 ஆம் நாள் நினைவாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது 31/07/2025

சுழிபுரம் கிழக்கை பிறப்பிடமாகவும் சுதுமலை மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி இராசாத்தி மகாதேவா (மாம்பழம்) அம்மையாரின் 31 ஆம் நாள் 30/07/2025 ஞாபகார்த்தமாக விசேடதேவையுடைய 10 பிள்ளைகளுக்கு அங்கர், நெஸ்ரமோல்ட் என்பவற்றை பிரான்சில் வசிக்கும் திரு திருமதி சங்கரவேல் இராசாராணி(மகள்) குடும்பபம் வழங்கி உதவியுள்ளனர்.

திரு திருமதி சங்கரவேல் இராசாராணி(மகள்) குடும்பத்தினருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

மேலும் இது போல உதவ விரும்புவோர் எமது +94 77 777 5448 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.

9 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்கு பகிர்ந்து வழக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து பொருட்களை வழங்கி உதவிய நிர்வாகி அதிபர் திருமதி அபிராமி சிவபவன் அவர்களுக்கும் நிர்வாகி சிறைச்சாலை அத்தியட்சகர் திரு சீ.இந்திரகுமார் அவர்களுக்கும் செயலாளர் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு த.மோகனறூபன் அவர்களுக்கும் நிர்வாகி கிராமசேவகர் திரு ந.சிவறூபன் அவர்களுக்கும் அங்கர், நெஸ்ரமோல்ற் என்பவற்றை கொள்வனவு செய்து உதவிய திரு ப.மதிகிருஸ்ணா அவர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள்.

ஒளிப்பதிவு திரு த.மோகனறூபன்.

Edited by ஏராளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழாவது(July) மாதச் செலவுகள்

மூன்றாவது மாதத்தில் இருந்து புதிதாக காரைநகரைச் சேர்ந்த இரண்டு விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்த உதவி வழங்க தொடங்கி உள்ளோம்

மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுவோரின் விபரங்கள்

1) செல்வி இரட்சகன் நிவேதா (வயது 25)

(காளுவன், சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா

இவருடைய தாயார் திருமதி இ.சுதாரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது.

2) திரு ஏரம்பு கண்ணதாசன் (வயது 34)

3) திரு ஏரம்பு கரிதாசன் (வயது 33)

(பொன்னாலை மேற்கு, (ஒரே குடும்பம்) 10000 ரூபா

இவர்களுடைய தாயார் திருமதி ஏ.பராசக்தி அவர்களுடைய தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது.

4) செல்வன் மங்களேஸ்வரன் டினுசாந்த் (வயது 13)

(பொன்னாலை மேற்கு) 5000 ரூபா

செல்வன் ம.டினுசாந்த் அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது.

5) செல்வன் பாலசுப்ரமணியம் சுலக்சன் (வயது 20)

(சுழிபுரம் மேற்கு) 5000 ரூபா

இவர்களுடைய தாயார் திருமதி பா.சந்திரகலா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது.

6) செல்வி ஜசிந்தன் பவன்யா (வயது 16)

(சுழிபுரம் மத்தி) 5000 ரூபா

இவர்களுடைய தாயார் திருமதி ஜ.சுபாஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது.

7) செல்வி மகாலிங்கம் நிரோஜினி (வயது 25)

(தொல்புரம் மேற்கு) 5000 ரூபா

இவர்களுடைய தாயார் திருமதி ம.சரோஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது.

8) செல்வி சாந்தகுமார் கோபிசா (வயது 10)

(பாண்டவெட்டை

சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா

இவர்களுடைய தாயார் திருமதி சா.ரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது.

9) செல்வி ஐங்கரன் கருண்யா (வயது 8)

(விக்காவில், காரைநகர்) 5000 ரூபா

இவர்களுடைய தாயார் திருமதி ஐ.ரதிலேகா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது.

10) செல்வி நாகராசா சசிகலா (வயது 36)

(அல்வின் வீதி, காரைநகர்) 5000 ரூபா

இவர்களுடைய சகோதரி செல்வி நா.மஞ்சுளாதேவி அவர்களின் இலங்கை வங்கிக் கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது.

மாதாந்தக் கொடுப்பனவிற்காக 50000 ரூபா 22/07/2025 அன்று மீளப்பெறப்பட்டு அன்றே தபாலக சேமிப்புக் கணக்குகளில் 9 பேருக்கு வைப்புச் செய்யப்பட்டது. ஒருவருக்கு 23/07/2025 இலங்கை வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டது.

எமது புலர் அறக்கட்டளைக்கு உதவ விரும்பும் கருணை உள்ளம் கொண்ட உறவுகள்

+94 77 777 5448 அல்லது +94 77 959 1047 என்ற இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம்.

மூவர் இணைந்த வங்கி விபரம்

K BALAMURUGAN

R PARANEETHARAN

S THEVAKUMARAN

A/C NO: 107250178888

National Savings Bank

Chankanai

Jaffna

Sri Lanka

SWIFT CODE - NSBALKLX

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள் அமைப்பினரால் காரைநகரில் அத்தியாவசியப் பணி நிறைவேற்றப்பட்டது

கடந்த 04/07/2025 வெள்ளிக்கிழமை அல்வின் வீதி, காரைநகரைச் சேர்ந்த திரு வே.நாகராசா (3பேர் விசேட தேவை உடையவர்கள்) ஐயாவின் வீட்டிற்கு குடிநீருக்காக புதிய தண்ணீர்தாங்கி பொருத்தி, பழுதடைந்திருந்த மலசலகூடத்தினை மீளப்புனரமைப்பு செய்துள்ளோம். இப்பணிகளுக்காக 44110 ரூபா செலவு செய்துள்ளோம்.

இந்த அத்தியாவசியப் பணியை செய்ய நிதி உதவி அளித்த பே்மிங்காம் (2016) உதவும் கரங்கள் அமைப்பினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விசேடமாக இவ்அமைப்பின் செயற்பாட்டாளர்களான திரு கதிர் அண்ணா, திரு இராசகுமார் அண்ணா, திரு ஜெயசசி அண்ணா ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இப்பணிகளை பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முயன்று செய்வித்த புலர் அறக்கட்டளையின் பொருளாளர் திரு கு.பாலகிருஸ்ணாவிற்கும் கணக்காய்வாளர் திரு சி.சிறீரங்கன் அவர்களிற்கும் J/46 கிராம சேவகராக உள்ள திருமதி ப.சிவப்பிரியா அவர்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி குயிலினி ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிகிறோம்.

உதவிகள் செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் கீழுள்ள எமது WhatsApp இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

+94 77 777 5448

+94 77 959 1047

ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் & நண்பர்களின் தன்னலமற்ற சேவைகள் தொடர வாழ்த்துகள்

தம்பியை சந்தித்தேன் உங்களை சந்திக்க முடியவில்லை, அடுத்த முறை சந்திப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 22:24, ஏராளன் said:

வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025

மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள +94 77 777 5448,

+94 77 959 1047 (WhatsApp, Viber)

6) இன்றைய தினம் 14/08/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக

நவரத்தினம் சிவரஞ்சன் குடும்பம் (சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்) 20000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர்.

14/08/2025 இன்றுவரை மொத்தமாக 220070 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

பேசமுடியாத தந்தையும் மூத்த மகனும் உள்ள இந்த குடும்பத்திற்கு பலதடவைகள் அரசின் நிதி உதவியுடனான வீட்டுத்திட்டம் தவறிப்போனது. இம்முறை இதனை பூரணப்படுத்தி அவ்வீட்டில் குடியேற நல்லுள்ளங்களே உங்களால் இயன்ற பங்களிப்பை செய்து உதவுமாறு தாழ்மையோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள

+94 77 777 5448

+94 77 959 1047

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாளை முன்னிட்டு அத்தியாவசிய பால்மா வகைகள் வழங்கி வைக்கப்பட்டது 26/08/2025

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.