Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்கு சின்னமும் அரசியலில் அறமும்!

October 11, 2024
 

சங்கு சின்னத்தை முன்வைத்து பொதுச் சபையினர் ஆங்காங்கே அறம் பற்றி பேச முற்படுவதாகத் தெரிகின்றது. அவர்கள் அவ்வாறு பேசுவது சரியானதா – அதற்கான தார்மீக தகுதி அவர்களுக்கு உண்டா? சங்கு சின்னத்தை ஒரு தேர்தல் தந்திரமாகவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எடுத்திருக்கின்றனர். தேர்தல் என்றால் ஒவ்வொரு கட்சியும் தங்களது வெற்றி பற்றியே சிந்திக்கும். இதில், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சங்கு சின்னத்தை எடுத்திருக்கும் அரசியல் கட்சிகள் தங்களின் நியாயத்தை கூறுகின்றனர்.

குறிப்பாக, பொதுச் சபையின் சார்பில் பங்கு கொண்டவர்கள் ஒற்றைச் சொல்லில் அதனை எடுக்க வேண்டாம் – கைவிடுங்கள் என்று அழுத்தமாகக் கூறவில்லை என்கின்றனர். மறுபுறம் பொதுச் சபையின் சார்பில் பொதுவெளிகளில் பேசுகின்றவர்களில் சிலர் தாங்கள் அவ்வாறு கூறவில்லை என்கின்றனர். இதில் எவர் கூறுவது சரி – எவர் கூறுவது தவறு என்பதற்கு அப்பால் சங்கு சின்னத்தை பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சியொன்று எடுத்ததை அறம் சார்ந்து விவாதிக்க முடியுமா? முதலாவது விடயம், பொதுச் சபைக்கும் ஏழு அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாட்டில் பொது வேட்பாளராக நிறுத்தப்படும் குறிப்பிட்ட நபருடன் பொருத்தமான உடன்பாடு செய்யப்படுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அந்த உடன்பாடு எங்கே? இதற்கு பொதுச் சபையினரால் பதிலளிக்க முடியாது. ஏனெனில், அவ்வாறானதோர் உடன்பாடு செய்யப்படவில்லை. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் பொதுச் சபையின் உடன்பாட்டை பொதுச் சபையே முறையாகக் கைக்கொள்ளவில்லை. பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பா. அரியநேத்திரன் இப்போது, கொள்கைரீதியாக பொதுவேட்பாளரை எதிர்ப்பதாகவும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதே சரியென்று முடிவெடுத்த தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றார். அறம் பற்றிப் பேசுவதாயின், அரியநேத்திரனின் தீர்மானம் அறம் சார்ந்ததா? எந்தக் கட்சிகள் அவருடன் பொது வேட்பாளர் விடயத்தில் உடன்பட்டு கைகோத்து பயணித்தனவோ அவர்களுக்கு எதிராகவே அரியநேத்திரன் பிரசாரம் செய்யப்போகின்றார்.

மட்டக்களப்பில் சங்கு சின்னத்தில் ஓர் அணியும் வீட்டுச் சின்னத்தில் இன்னொரு தரப்பும் மோதவுள்ள நிலையில், சங்குக்கு சங்கு ஊதப்போவதாக சூளுரைத்து அரியநேத்திரனுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்த சாணக்கியன் அணிக்கு ஆதரவாகவே அரியநேத்திரன் பிரசாரங்களை செய்யவுள்ளார். இந்த விடயத்தில் அறம் சார்ந்து அரிய நேத்திரனை பொதுச் சபையால் கட்டுப்படுத்த முடியுமா? அது முடியாது என்றால் மற்றவர்களின் அறம் பற்றிப் பேசுவதற்கு பொதுச் சபைக்கு என்ன தகுதியுண்டு? அவர் தனிப்பட்ட காரணங்களை கூறினாலும் இறுதியில் அவர் சாணக்கியன் அணியை பலப்படுத்தும் பணியையே செய்யப்போகின்றார்.

இந்தப் பின்புலத்தில் சங்குச் சின்னம் தொடர்பில் அறம் பற்றிப் பேசும் தகுதிநிலையை பொதுச் சபை முற்றிலும் இழந்துவிட்டது. பொதுச் சபையின் தவறு எங்கு ஆரம்பிக்கின்றது என்றால், பொதுச் சபை அரசியலை கையாளுவது தொடர்பில் அரைகுறையான பார்வையையே கொண்டிருந்திருக்கின்றது. மேலும் – விடயங்களின் பக்க விளைவுகளை ஆராயாமல் சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்திருக்கின்றது. பொதுச் சபையை வழிநடத்தியவர்களில் சிலர் கருத்துருவாக்கிகள் – புத்திஜீவிகளாக தங்களை அடையாளப்படுத்தியிருந்த போதிலும்கூட, ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும்போது அதன் பக்கவிளைவுகள் குறித்துத் தெளிவாக ஆராய்ந்தே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் பொதுச் சபையின் அணுகுமுறை சிறுபிள்ளை வேளாண்மை போன்றே காணப்படுகின்றது. தூரநோக்கின்றி முன்னெடுக்கப்படும் பக்க விளைவுகளை ஆராயாமல் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அனைத்தும் இப்படித்தான் முடிவுறும். அரசியலை கையாளும் விடயத்தில் பொதுச் சபை தோல்வியடைந்துவிட்டது என்பதே உண்மை.

 

https://eelanadu.lk/சங்கு-சின்னமும்-அரசியலில/

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

சங்கு சின்னத்தை ஒரு தேர்தல் தந்திரமாகவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எடுத்திருக்கின்றனர்.

large.IMG_7194.jpeg.4bb5cacc0286f02e3b31

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

large.IMG_7194.jpeg.4bb5cacc0286f02e3b31

இந்தப் பாரத்தை எப்படி பின் ரயர் தாங்குகிறது?  கொஞ்சமாவது ரயர் நசிந்திருக்க வேண்டாமா? எனவே ...இது றலி சைக்கிளுக்கான விளம்பரமே,....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப் குழுமம் ஒன்றில் எனது தாயக நண்பனுக்கும் அரியத்தாருக்கும் நடந்த உரையாடலில் இருந்து..

அரியம் வீட்டுக்கு புள்ளடி இடு என்று போட்ட பதிவு..

large.7cfa931f-37c4-4527-9c29-8faff9b78c3b.jpeg.c90f8241cb8b4eb7cc9cd589d3491c12.jpeg

 

நண்பன்:

*வீட்டுக்கு புள்ளடி இடு* என்று வந்திருக்க வேண்டுமா *வீட்டுக்கு புள்ளடி இடாதே*  என்று வந்திருக்க வேண்டுமா. தயவுசெய்து சரியாக சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் சங்கு சின்னத்துக்கு ஊதினோம்.

இப்ப சங்குக்கு ஊதுறதா வீட்டுக்கு ஊதுறதா?

 

அரியம்:

சங்கு சின்னம் ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளருக்காக நான் எடுத்த சின்னம்..
அதை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாவிப்பதற்கு நான் கொடுக்கவும் இல்லை..
என்னிடம் இருந்து அவர்கள் பெறவும் இல்லை..

சின்னத்தை கொடுத்தது தேர்தல் ஆணைக்குழு..

எனவே நான் ஜனாதிபதி தேர்தலுக்காக சுயேட்சை சின்னமாக பாவித்ததை அரசியல் கட்சி ஒன்று தன்னிச்சையாக பெற்றதால் அதை நான் ஆதரிக்கவேண்டும் என்று இல்லை..
அதனை பற்றி எனக்கு விரல் நீட்ட எவருக்கும் உரிமை இல்லை..!

புரிந்தால் நல்லது ஐயா.. !

 

நண்பன்:

நன்றி. நல்லது. ஆனால் பாரம்பரியமாக தமிழரசு கட்சியிலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலோ  இருந்தீர்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்பது நியாயமானதா?. பொது சின்னத்தில் போட்டியிட்ட நீங்கள் ஏன் எல்லோரும் ஒன்று படுத்துவதற்கு ஒரு முயற்சியை  செய்யக்கூடாது?

 

அரியம்:

இதை கேட்கவேண்டியது பொதுகட்டமைப்பு என்ற அமைப்பு பிரமுகர்களிடமே..
நான் பொதுக்கட்டமைப்பு உறுப்பினரும் இல்லை, அந்த ஏழுகட்சி அங்கத்தவனும் இல்லை.
நான் தமிழரசுகட்சி உறுப்பினர் மட்டுமே..
ஒரு கொள்கையின் அடிப்படையில் பலருடைய அன்பு கட்டளைகளை மதித்து ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கி அந்த தேர்தல் முடிவு அறிவித்ததன் (22/09/2024) பின்னர் எனது பணி நிறைவடைந்துவிட்டது..

அந்த 83, சமூக அமைப்புகள் 07, தமிழ்தேசிய கட்சிகள் செய்த ஒப்பந்தம், பேசிய விடயங்கள் என்பன தொடர்பாக எனக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை..

 

இன்னொரு நண்பன்:

இது ஒரு நிறைவான பதிலாகத்தெரியவில்லை.

 

பின்னர் அரியம் தனது நம்பரைக் கொடுத்து அதற்கு கோல் எடுத்தால் நிறைவான பதிலைத் தருவதாகச் சொன்னார்!

 

எனது அப்பாவின் பேச்சுவழக்கில் அரியம் ஒரு உலக்கை அல்லது ஒரு போடுதடி (அது என்ன சாமான் என்று அப்பா விளக்கம் தரவில்லை! அவர் இருக்கும்போது நான் கேட்கவும் இல்லை)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2024 at 07:24, கிருபன் said:

சங்கு சின்னமும் அரசியலில் அறமும்

large.IMG_7202.jpeg.4a9267e2fee52a0c9c1a

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2024 at 11:15, Kapithan said:

இது றலி சைக்கிளுக்கான விளம்பரமே,....🤣

றலி கொம்பனி விளம்பரத்திற்காக அவருக்கு பெரிய  பெட்டி கொடுத்திருக்கும் தானே😃

Ridley FALCN RS - Ultegra Di2 - Carbon Rennrad - 2024 - black / red / orange

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

றலி கொம்பனி விளம்பரத்திற்காக அவருக்கு பெரிய  பெட்டி கொடுத்திருக்கும் தானே😃

Ridley FALCN RS - Ultegra Di2 - Carbon Rennrad - 2024 - black / red / orange

தலைவர் கப்சிப். 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.