Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வரும் “காலத்தை” வரவேற்போம்!

****************************

எழுபது ஆண்டுகளாக

இருள் மூடிக்கிடந்த

எம் தேசத்தில்-ஒரு

சிவப்புச் சூரியனின்

வெண்மைக் கதிர்களின்

வருகையின் வேகம்.

இது..

பழமைகள் பொசுக்கி

புதுமைகளின்

பொற்கால விடிவின்

ஆரம்பக்காலம்.

 

விலை மதிப்பில்லாத

உயிகளை விழுங்கிய

இராட்சத முதளைகளின்

முடிவுக்காலம்.

 

மக்களின் உதிரத்தை உறிஞ்சி

அவர்களின் வரி பணத்தில்

கோட்டை கட்டி கொடி

உயர்த்திய கோமான்கள்

குடிசை வாழ்வுக்கு

திரும்பப் போகும்

எதிர் காலம்.

 

பழய..

ஆட்சியாளர்களின்

வயல்கள் எல்லாம்

மறைத்து விதைக்கப்பட்ட

தங்க மூட்டைகளும்

கறுப்பு பணப் பெட்டிகளும்

அறுவடை செய்யப்போகும்

காலல போகம்.

 

இதுவரையும்

புற்றுநோயாக..

புரையோடிக் கிடந்த

லஞ்சம் ஊளலெனும்

அரக்கர்களை கொழுத்தி

அழிக்கும்

கோடை காலம்.

 

இனத்துவேஷமென்னும்

கொடிய நோயை பரப்பிய

பழய பா.உ

ஜந்துக்களை

அறுவைச் சிகிச்சை செய்து

அகற்றும்

இலையுதிர் காலம்.

 

தமிழினம்

முள்ளி வாய்க்கால் தொட்டு

முழு உலகமும் வரை

இரத்த.

கண்ணீராயோடிய

மாரிகாலம்.

 

எல்லாவற்றுக்கும்-விரைவில்

ஒரு வசந்த காலம்

வருமென நம்புவோம்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லோருடைய நம்பிக்கையும் அதுவே . நன்றி 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, நிலாமதி said:

எல்லோருடைய நம்பிக்கையும் அதுவே . நன்றி 

 

அன்புடன் நன்றி நிலாமதி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/10/2024 at 08:11, பசுவூர்க்கோபி said:

எல்லாவற்றுக்கும்-விரைவில்

ஒரு வசந்த காலம்

வருமென நம்புவோம்.

வசந்த காலம் என்ன நிறத்தில் வரப் போகுது கோபி?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

 

 

On 13/10/2024 at 16:40, ஈழப்பிரியன் said:

வசந்த காலம் என்ன நிறத்தில் வரப் போகுது கோபி?

சிவப்பு பீற்றூட்டில் பச்சை இலைகளும் வரும் என கனவுகாண்கிறேன் அன்பு இசைப்பிரியன் அவர்களே!

உளமார்ந்த நன்றிகள்.

Edited by பசுவூர்க்கோபி


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.