Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்

தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே தற்போது வன்னி வேட்பாளரெனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan) குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (12) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது ஆனால் இன்று சுயநலவாதிகளின் டம்மி விளையாட்டால் ஒரு ஆசனம் பெறுவதே பெரும் போராட்டமாக மாறியுள்ளது.

தேர்தல் நியமனக் குழு

எமது கட்சியின் தேர்தல் நியமனக் குழுவானது கடந்த 2018 இல் தேர்வுசெய்யப்பட்டது அதில் சட்டத்தரணி தவராசா (K.V Thavarasha), சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan), ஈ.சரவணபவன் (E. Saravanapavan), நான் உட்பட நான்கு பேர் அந்த குழுவில் இருந்தோம்.

இந்தநிலையில், திடீர் என நிகழ்ச்சி நிரல் இல்லாமல் எமது நான்கு பேரின் பெயர்களையும் வெட்டிவிட்டு புதிதாக சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), சேயோன் (Seyon) மற்றும் ரஞ்சினி (Ranjini) ஆகியோர் சேர்க்கப்பட்டனர் இதனாலேயே இந்த மோசமான நிலை கட்சிக்கு ஏற்பட்டது.

வன்னியில் வெல்ல வேண்டும் என்ற டம்மி விளையாட்டே இது எனவே பதில் பொதுச்செயலாளருக்கு நான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளேன்.

இவர்களை இப்படியே விட்டால் கட்சிக்கு இன்னும் பல கேடுகளை செய்வார்கள் இவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் அத்தோடு தோல்வியடைந்தவர்களை வேட்பாளராக போடுவதில்லை என்று கட்சி ஒரு போதும் முடிவெடுக்கவில்லை. 

அப்படி ஒரு தீர்மானம் பொதுக்குழுவிலும், மத்தியகுழுவிலும் இல்லை அத்தோடு கட்சியை வெட்டிவிட்டு ஒரு சிலர் வெல்லலாம் என்பது மிகவும் மோசமான செயல் எப்படி இந்த சதிவேலையினை திட்டமிட்டுள்ளார்கள் என்று பாருங்கள் 

தலைவராக இருந்தும் நியாயமான முறையில் வேட்பாளர் நியமனங்களை செய்ய முடியவில்லை என்பதாலும் மற்றும் நியமனக்குழுவில் இருந்த ஏனையவர்களை இணைக்க முடியாமல் போனதாலும் மாவை சேனாதிராஜா (Mawai Senadhiraja) பதவி விலகினார்.

வேட்பாளர்கள் டம்மிகள்

நீ இங்கு வென்றால் மட்டும் காணும் நானும் யாழ்பாணத்தில் வென்றால் காணும் என்று சத்தியலிங்கமும் (Sathyalingam) மற்றும் சுமந்திரனும் (M. A. Sumanthiran) கருதுகிறார்கள். 

தமிழரசுக்கட்சி அதுவல்ல இவர்களால் இன்று ஒரு அணியே பிரிந்து சென்றுள்ளது ஒருவரை தவிர இவர்கள் போட்ட அனைத்து வேட்பாளர்களுமே டம்மிகள் இவர்களால் எப்படி வெல்ல முடியும்.

செயலாளர் பதவி தரம் தாழ்ந்தது இன்று வன்னியில் புதிதாக போடப்பட்ட வேட்பாளரான ரவீந்திரகுமார் மாவட்டக் குழுவில் விண்ணப்பம் தராதவர் மற்றும் அவுஸ்ரேலியாவில் நிரந்தர வதிவுரிமை கொண்டவர்.

டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர் | Sivamohan Allegation Regarding Post Secretary Itak

வேட்பாளராக என்னை தெரிவு செய்யுமாறு நான் ஒரு போதும் கோரவில்லை எனக்கு பதிலாக புதுக்குடியிருப்பு பிரதேச கிளையின் செயலாளரான விமலதாசையே (Vimaladas) நான் பரிந்துரை செய்தேன்.

கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி இவர்கள் செயற்ப்பட்ட விதமானது தமிழரசுக் கட்சியினை இன்று கீழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

பொதுச்செயலாளர் பதவி என்பது விட்டுக்கொடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி தமிழரசுக்கட்சியின் தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் போன்றோர் இந்தப்பதவியினூடாக தங்களுக்குள்ளேயே விட்டுக் கொடுத்து செயற்ப்பட்டிருந்தனர்.

நியமனக்குழுவின் வேலை

ஆனால் அந்த பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளதுடன் தேசியபட்டியல் வழங்க விடோம் தேர்தலில் போட்டியிட வரமாட்டேன் என்று சொல்பவர்களை வாருங்கள் தேசியப்பட்டியல் தருகிறோம் என்று அழைக்கிறார்கள்.

இதுவா தேர்தல் நியமனக்குழுவின் வேலை உங்களுக்குள்ளேயே பிரித்துக் கொள்ளவா இந்தக்குழுவை போட்டோம்  தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் நியமனக்குழுவில் இருந்து விலத்தியிருக்க வேண்டும் என்று கேட்டோம். 

அது நடக்கவில்லை ஆனால் தேசியப்பட்டியல் ஆசனம் எக்காரணம் கொண்டும் தோற்றவர்களுக்கு கொடுக்க கூடாது தோற்றவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாவிட்டால் அதனைமட்டும் எப்படி கொடுக்க முடியும்.

டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர் | Sivamohan Allegation Regarding Post Secretary Itak

யாழ்ப்பாணத்தில் தான் தோற்றால் தனக்கு ஒரு தேசியபட்டியலாம் என்று அங்கு ஒருவர் இங்கால ஒருவர் அது தனக்காம் என்கிறார் கட்சி என்ன றோட்டில் விக்கிற அப்பமா நீங்கள் பிய்த்துக் கொண்டு போறதுக்கு. 

பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கே தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்படவேண்டும் மாகாணசபையில் ஊழல் செய்தார் ஊழல்வாதிகளை அகற்றுவேன் என்றே அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) ஆட்சிக்கு வந்தார்.

தமிழரசுக் கட்சி தெரிவு செய்தவர்கள் ஊழல் மோசடிக்காரர்கள் மாகாண சபையில் ஊழல் என்று சொல்லி நிரூபிக்கப்பட்டு முதலமைச்சரால் இடைநிறுத்தப்பட்டவர்.

ஊழல் மோசடி

பின்னர் நீதிமன்றிற்கு சென்று தாங்கள் நியாயவாதிகள் என்று இன்று வரை நியாயப்படுத்த முடியாதவர் இவர்கள் தான் ஊழல்வாதிகள் அவர் வன்னியில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

முல்லை மாவட்டத்தில் போடப்பட்ட மூவரும் ஏதோ ஒரு விதத்தில் அப்படியானவர்கள் ஒருவர் தேர்தல் கேட்பதற்கே பொருத்தமில்லாதவர் இரட்டை பிரஜா உரிமை கொண்டவர் நாடாளுமன்றுக்கு செல்லமுடியுமா. 

அடுத்தவர் புலிகள் காலத்தில் ஊழல் மோசடிக்காக அடைத்து வைக்கப்பட்டவர் இன்னொருவர் பகிரங்கமாகவே ஊழல் மோசடியில் சிக்கியவர் இன்று அவர்கள் எல்லாம் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள்.

டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர் | Sivamohan Allegation Regarding Post Secretary Itak

நல்லதே நடக்கட்டும் நிச்சயமாக நான் குற்றப்பத்திரிகையினை தனித்தனியாக தாக்கல் செய்வேன் செயலாளரால் நீதிமன்றுக்கு சென்ற கட்சி இன்று கட்சியானது சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் வழக்கில் சிக்கியுள்ளது எதனால் அது ? கட்சியின் மாநாடு நடப்பதற்கு முன்னர் அல்லது பொதுக்குழு கூடுவதற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடாத்தப்பட வேண்டும்.

அந்த கூட்டத்தில் தான் பிரச்சனைகள் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி வழிநடத்துவது என்று தீர்மானிப்பது பதவிகளில் யாரை போடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதும் அந்த கூட்டதிலேயே.

அதுவே ஆலோசனைக் குழுவின் பணி அந்தக்கூட்டம் வாக்கெடுப்பிற்கு முதள்நாள் திருகோணமலையில் (Trincomalee) நடப்பதாக இருந்தது நாங்கள் அதற்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

பதில்செயலாளர் சுகவீனம்

அந்தக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது சத்தியலிங்கம் ஐயா நிமோனியாவாலோ கொரோனாவாலோ படுத்துக்கிடக்கிறார் என்றார்கள்  அதனால் கூட்டம் ரத்தாகியது அந்த பதில் செயலாளர் உண்மையில் சுகவீனமுற்றுத்தான் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் விபரங்களை தரவேண்டும்.

ஊடகங்களுக்குப் பொறுப்பு உள்ளது நீங்கள் போய் அவரிடம் கேட்டுபாருங்கள் மக்களுக்கு அதனை வெளிப்படுத்த வேண்டும் அப்படி இல்லாது விடில் இது நடத்தப்பட்ட சூழ்ச்சி.

டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர் | Sivamohan Allegation Regarding Post Secretary Itak

அந்த சூழ்ச்சியினாலேயே அந்த தெரிவுகள் போட்டிக்கு சென்றது பின்னர் நிர்மூலமாக்கப்பட்டது செயலாளரும் மற்றும் பேச்சாளரும் விலகினால்தான் விடிவு எனவே பதில்செயலாளர் சகல பொறுப்புக்களையும் ஏற்று கட்சியினை உருக்குலைத்ததையும் ஏற்றுக்கொண்டு பதவி விலக செய்யவேண்டும். 

அடுத்தது ஊடகப்பேச்சாளராக ஒருவர் இருப்பதாக இருந்தால் கட்சி எழுதிக்கொடுப்பதை மாத்திரமே சொல்லவேண்டும் தனிப்பட்ட கருத்தை அவர் சொல்லமுடியாது. 

ஊடகப்பேச்சாளர் அந்த தர்மத்தை மீறியபடியால் அவரும் நீக்கப்பட வேண்டும் நாம் பயந்தவர்கள் அல்ல கடைசிவரை தமிழரசுக்கட்சிக்கு உள்ளே இருந்து குரல் கொடுப்போம் உயிர் இருக்கும்வரை தமிழரசுக்கட்சியோடு தான் பயணிப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

https://ibctamil.com/article/sivamohan-allegation-regarding-post-secretary-itak-1728730477

 

  • கருத்துக்கள உறவுகள்

சிவமோகன் போன்றவர்களை தமிழரசுக் கட்சி வெட்டி எறிவது நாட்டுக்கும் தமிழர்களுக்கும் நல்லது. 

சத்தியலிங்கம் செய்தது சரியே 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இருவர் சொன்னால் விட்டுத்தள்ளலாம், அவர்களை களையலாம் கட்சியை விட்டு, பலர் சொல்வதை யோசிக்க,ஏற்றுக்கொள்ள, திருந்த  மறுக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு, யாரை வெட்டி எறிய வேண்டுமென்று ஒட்டுமொத்தமாக சொல்லப்படும் நாள் வெகு தொலைவிலில்லை.  நானல்ல அவர்கள். என்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் மக்களுக்கு? மக்கள் வெட்டி எறியப்படவேண்டியவர்கள், எங்கள் தனி மனித அரசியலுக்காக என்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியில்,  இந்திய சார்பு நிலை எடுக்கும் அனைவரும் துரத்தப்பட வேண்டும் அதற்காக கட்சி சேதத்தை சந்தித்தாலும் தைரியமாக அதனை செய்யும் சுமந்திரன் நீண்ட கால நோக்கில் இலங்கைத்தமிழர்களுக்கு நன்மையையே செய்கின்றார். 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பகிடி said:

தமிழரசுக் கட்சியில்,  இந்திய சார்பு நிலை எடுக்கும் அனைவரும் துரத்தப்பட வேண்டும் அதற்காக கட்சி சேதத்தை சந்தித்தாலும் தைரியமாக அதனை செய்யும் சுமந்திரன் நீண்ட கால நோக்கில் இலங்கைத்தமிழர்களுக்கு நன்மையையே செய்கின்றார். 

அப்படியா? இதற்கான ஆதாரங்கள் உங்கள் வசம் உள்ளன என நம்புகிறேன்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இதற்கான ஆதாரங்கள் உங்கள் வசம் உள்ளன என நம்புகிறேன்

கைவசம் எப்படி இருக்கும்? அவரின் நடவடிக்கைகளை கவனிக்கும் பொழுது தீவிர தமிழ் தேசியம் பேசி  விரும்பியோ விரும்பாமலோ  இந்தியாவின் இலங்கை மீதான அரசியலுக்கு கூலிகளாக பயன்படுத்தபடும் நபர்களை அவர் கழற்றி விடுகின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பகிடி said:

கைவசம் எப்படி இருக்கும்? அவரின் நடவடிக்கைகளை கவனிக்கும் பொழுது தீவிர தமிழ் தேசியம் பேசி  விரும்பியோ விரும்பாமலோ  இந்தியாவின் இலங்கை மீதான அரசியலுக்கு கூலிகளாக பயன்படுத்தபடும் நபர்களை அவர் கழற்றி விடுகின்றார். 

இவர் கழற்றி விடவும்   பூட்டி விடவும்  தமிழரசுகட்சி   இவரது சொந்த வண்டில் இல்லை    கட்சியிலுள்ள   முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன்.  கலந்துரையாடித். தான் அவர்களின்   ஒப்புதலுடன் கழற்றவும். பூட்டவும். வேண்டும் 

தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுபவர்கள் போராடுபவர்கள். தமிழ் மக்களின் உரிமையை மதிக்கவேண்டும். 

தமிழ் மக்களை மதிக்க வேண்டும் 

ஒவ்வொரு தமிழனையும். மதிக்க வேண்டும் 

ஊழல்வாதிகளும்.  கட்சிக்கு ஒற்றுமையாக ஒரு தலைவரை தெரிவு செய்ய முடியாதவர்களும். 

கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்களும் 

எப்படி தேர்தலில் போட்டியிடலாம். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இவர் கழற்றி விடவும்   பூட்டி விடவும்  தமிழரசுகட்சி   இவரது சொந்த வண்டில் இல்லை    கட்சியிலுள்ள   முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன்.  கலந்துரையாடித். தான் அவர்களின்   ஒப்புதலுடன் கழற்றவும். பூட்டவும். வேண்டும் 

தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுபவர்கள் போராடுபவர்கள். தமிழ் மக்களின் உரிமையை மதிக்கவேண்டும். 

தமிழ் மக்களை மதிக்க வேண்டும் 

ஒவ்வொரு தமிழனையும். மதிக்க வேண்டும் 

ஊழல்வாதிகளும்.  கட்சிக்கு ஒற்றுமையாக ஒரு தலைவரை தெரிவு செய்ய முடியாதவர்களும். 

கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்களும் 

எப்படி தேர்தலில் போட்டியிடலாம். 🙏

ஒண்ட வந்த பிடாரி…. ஊர் பிடாரியை விரட்டி அடித்ததாம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.