Jump to content

கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

போனவருடம், உள்ளூராட்சி தேர்தல் நடைபெறப்போகிறதென்று ரணில் அறிவித்தவுடன் ,தமிழ் தேசிய கூட்டமைப்பை கழட்டி  விட்டு தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதாக இந்த சட்டாம்பி முடிவெடுத்தார். ஆனால் அந்த முடிவை அங்கத்துவ கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை. அவர்கள் வழமைபோல தங்கள் செயற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் பத்திரிகைகளில் இதை அறிவித்துள்ளார் இந்த மேதை. இதையறிந்த கட்சிகள் இதுபற்றி இவரிடம் வினவியபோது; இந்த அரிச்சந்திரன் சொன்னார், கூட்டமைப்பு தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு, ஆகவே தனித்து போட்டியிடும் தீர்மானம் இல்லை என்று சமாளித்தார். அவர்களும் உண்மையென நம்பி இருக்கும்போது, இந்த ஒரு மனநிலை இல்லாதவர் சொன்னார், வேறு கட்சிகளுக்கு போகும் வாக்குகளை தடுப்பதற்காக நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம், பின் மீண்டும் ஒன்று சேருவோம். என்று விட்டார் பாருங்கோ ஒரு விடுகை. அவர் அப்பவே  போட்ட திட்டம் தமிழரசுக்கட்சியை பிரித்து மற்றவர்களை விரட்டுவதென்று. காரணம் சரியென்றால் ஏன் அதை அவர்களுக்கு விளக்கி கூறியிருக்கலாமே? மனதில் நெல்லெண்ணம் இல்லை, எப்போ, யாரை எப்படி விரட்டுவேன், எதை கைப்பற்றுவேன் என்பதே அவர் சிந்தனை. வாக்களித்த மக்களின் கோரிக்கை என்ன, தனது பணி என்ன என்று யோசிப்பதில்லை. ஏனெனில் அவர் செயல் வீரரல்ல, ஆட்களை சேறடித்து விரட்டி அதை சாகசம் எனக்காட்டி எப்படியோ நுழைந்து விடுவார். இதற்கெல்லாம் வைப்பார் ஆப்பு அநுர.  இப்போ சேர்ந்திருப்பவர்களுக்கு எப்போ பிரியாவிடை கொடுப்பாரோ தெரியவில்லையே. சரி.... யாரின் கட்சியையும் சின்னத்தையும் யார் திருடினார்களாம்? அவையும் அவர் சொத்துக்களா? அவர்கள் கட்சி, அவர்கள் சின்னம், இவர் ஏன் அந்தரப்படுகிறார்? எல்லாம் வேண்டுமாமோ தெரியவில்லை. 

பிரித்தாழும் தந்திரத்துக்கு ரணில் போட்ட முதல் வலையிலேயே வீழ்ந்து விட்டார்கள்.

நிரந்தர பிரிவுக்காக தேர்தலை ரத்துப்பண்ணினார்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.